All Activity
- Past hour
-
முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
ஒரு பக்கத்தால் பச்சைக் கொடி காட்டிக் கொண்டு மறுபக்கத்தால் காலாட்படைகளை உள்ளே அனுப்பப் போகிறார்கள்.
-
162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு - உயிர்நீத்த வீரர்களுக்கு கௌரவம்!
162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு - உயிர்நீத்த வீரர்களுக்கு கௌரவம்! Published By: Digital Desk 1 21 Mar, 2026 | 02:41 PM நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த பொலிஸ் அதிகாரிகளை நினைவுகூரும் 162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு இன்று சனிக்கிழமை (21) காலை கொழும்பில் நடைபெற்றது. பம்பலப்பிட்டி பொலிஸ் களத் தலைமையகத்தில் அமைந்துள்ள பொலிஸ் நினைவுத் தூபிக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கடமையின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் மரியாதையுடன் கௌரவம் அளிக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இதுவரை 5,789 பொலிஸ் அதிகாரிகள் உயிர்நீத்துள்ளனர். இதில் கடந்த மூன்று தசாப்த கால பயங்கரவாத யுத்தத்தின் போது மாத்திரம் 2,598 அதிகாரிகள் வீரமரணமடைந்துள்ளனர். அதேநேரம், யுத்த காலப்பகுதியில் மற்றும் கடமையின் போது காயமடைந்து ஊனமுற்ற நிலையில் 2,575 அதிகாரிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வின் போது பொலிஸ் மா அதிபரால் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களும் தமது உறவுகளுக்கு கண்ணீர் மல்க மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த உள்ளிட்ட உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241565
-
-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
வாசிக்கவே தலையை சுத்துது. எப்படி இதையெல்லாம் தயாரிப்பது? பாராட்டுக்கள்.
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
இனி வேற பெயரில வித்தால் வாங்குவார்கள் என நினைக்கிறேன்!
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
அதே மாதிரி ரம்புக்கும் நான் நண்பேன்டா.
-
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜி எரிவாயுவுடன் வரும் கப்பல்கள் - மத்திய அரசு அளித்த புதிய தகவல்
இந்தியா ஈரானுக்கு முதுகில் குத்தியும் ஈரான் நியாயமாக நடந்து கொள்கிறது.
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
F35 இன் விலை வீழ்ச்சியடையப் போகுது.
-
இரானுக்குள் தரைப்படை நடவடிக்கை?!
இந்த பயங்கரவாத அமெரிக்கனுக்கு ஈரானில் தான் இறுதி சடங்கு 😇
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
மற்றவர்களை மட்டந்தட்ட இது ஒரு மனோவியல் தாக்குதல், நிர்வாகம் நல்ல உடந்தை 🤣
-
இரானுக்குள் தரைப்படை நடவடிக்கை?!
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்! - “ட்ரம்புக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது” - ஈரான் இராணுவம் எச்சரிக்கை 21 Mar, 2026 | 04:36 PM ஈரான் மீது வான்வழியாக தாக்குதல் நடத்திவந்த நிலையில், தரை வழித் தாக்குதல் நடத்தவும் சாத்தியமுண்டு என அமெரிக்கா மறைமுகமாக தெரிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக “ட்ரம்புக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது” என ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது. தஸ்னிம் செய்தி நிறுவனம் இன்று சனிக்கிழமை (21) ஈரான் வழங்கிய செய்தியினை வெளியிட்டுள்ளது. ஈரான் மண்ணில் தரைவழித் தாக்குதல் நடத்துவதென்பது எமது சிவப்பு கோட்டினை மீறுவதாக அமையும். அவ்வாறு மீறித் தாக்குதல் நடத்தினால், ஒவ்வொரு தாக்குதலுக்கும் நாங்கள் ஆச்சரியமான பதிலடி கொடுப்பது போல, இந்த விஷயத்திலும் அதேபோன்ற ஆச்சரியங்களை மீண்டும் காட்டுவோம்” என ஈரான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எங்களுடைய எரிசக்தி உட்கட்டமைப்பை தாக்கினால், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து எரிசக்தி உட்கட்டமைப்புகளும் செயலிழந்து போகும். இந்த முறை நாங்கள் தயாராக உள்ளோம். பயங்கரவாதி ட்ரம்ப், இந்த விஷயத்தில் ஏதேனும் தவறு செய்தால், அவருக்கு ஆச்சரியம் ஒன்றை நாங்கள் காட்டுவோம் என்றும் ஈரான் இராணுவம் அதன் அறிக்கையின் ஊடாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எச்சரித்துள்ளது. https://www.virakesari.lk/article/241583
-
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை!
காணாமல் போன யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு Mar 21, 2026 - 04:50 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் ஒருவர் தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த வைத்தியர் தயாளினி திலீபன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த விரிவுரையாளரின் மகன், தனது தாயையும் சகோதரியையும் காணவில்லை என யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், காணாமல் போன விரிவுரையாளரின் மகளும் இளைஞன் ஒருவரும் திருகோணமலை பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த பொலிஸார் இருவரையும் மீட்டு யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்தனர். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த இளைஞனிடம் நடாத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. விரிவுரையாளரைத் தான் கொலை செய்து, அவரது சடலத்தைத் தனங்கிளப்பு பகுதியில் உள்ள காட்டுக்குள் வீசியதாக அந்த இளைஞன் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, சந்தேகநபர் அடையாளப்படுத்திய இடத்திற்கு விரைந்த பொலிஸார், விரிவுரையாளரின் சடலத்தை மீட்டுள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmn087ds3000k356pyhmb962t
-
ஈரான் எச்சரிக்கை : “உலகின் எந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்காது”
இரானுக்கு முழு உரிமை இருக்கிறது, எங்கும் எதிரியை தாக்க. பொது இடம் எனும் பொது, அங்கு எதிரியின் நிலை (உ.ம். 1 படைச்சிப்பாய் கூட) இருந்தால் தாக்கலாம். இதை மேற்கும் செய்வது. இஸ்ரேல் செய்கிறது. முன்பு மேற்கிற்கு இருந்த நிலையான எவரையும் தாக்கும் போது, அந்த இடத்தில் மட்டுமே எதிர்ப்பு வரும், வரவேண்டும் என்ற தன்தகுதி (entitled) எதிர்பார்ப்பு இப்போதும் மேற்கிடம் இருக்கிறது. இதனால் தான், Diego Garcia ஐ இரான் தாக்கியதை UK கண்டித்து இருப்பது.
-
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜி எரிவாயுவுடன் வரும் கப்பல்கள் - மத்திய அரசு அளித்த புதிய தகவல்
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து இந்தியாவின் 22 கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற வழித்தடம் டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த ஒரு கப்பலும் சிக்கியது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வர வேண்டிய 24 ஆயில் டேங்கர் மற்றும் காஸ் டேங்கர் கப்பல்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கி யானுடன் பிரதமர் மோடி கடந்த 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்தது. இந்தியாவுக்கு சமையல் காஸ் ஏற்றி வந்த கப்பல் வழக்கமான பாதையில் வராமல் ஈரானின் லார்க் தீவைச் சுற்றி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது. இந்த வழியாக வந்தால் ஈரான் கடற்படை இந்திய கப்பலின் அடையாளத்தை நேரடியாக பார்த்து உறுதி செய்ய முடியும். இந்த பாதுகாப்பான வழித்தடத்தில் இந்தியாவின் 22 எரிபொருள் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வரவுள்ளதாக கடல்சார் தரவு மற்றும் உளவு நிறுவனம் லாய்ட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் (எல்எல்ஐ) தெரிவித்துள்ளது. இது மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து இந்தியாவின் 22 கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற வழித்தடம்
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
5´000 அமெரிக்க வீரர்களும் ஈரானில் இருந்து திரும்பிப் போகும் போது, ⚰️ பெரிய சூட்கேசில் போகிறார்கள். 😂 🤣
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
ஐபிஎல் 2026இலிருந்து கரன், எலிஸ் விலகினர் ; ஆரம்பப் போட்டிகளில் ஸ்டாக், ஹேஸ்ல்வூட் பேர்கசன் இல்லை Published By: Digital Desk 3 20 Mar, 2026 | 04:22 PM (நெவில் அன்தனி) கிரிக்கெட் உலகில் 'மினி ரி20 உலகக் கிண்ணம்' என கருதப்படும் இண்டியன் பிறீமியர் லீக் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் பல வீரர்கள் உபாதைகளால் அவதிபடுகின்றனர். இந்நிலையில் உபாதைக்குள்ளான இரண்டு வீரர்கள் முழுமையாக விளையாடமாட்டார்கள் எனவும் இன்னும் சிலர் பணிச் சுமை ஆரம்பப் போட்டிகளில் விளையாட்டுவது சந்தேகம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சகலதுறை வீரர் சாம் கரனின் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளார். இந்த வருடம் அவர் தனது புதிய அணியான ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடவிருந்தார். மும்பையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ரி20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியிலேயே கடைசியாக கரன் விளையாடி இருந்தார். அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நேதன் ஸும் ஐபிஎல் இல் விளையாடமாட்டார் என அறிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது நேதன் எலிஸ் உபாதைக்குள்ளானார். அவரது தொடைப்பகுதியில் ஏற்கனவே இருந்துவந்த உபாதை மேலும் மோசம் அடைந்துள்ளதால் அவர் தொடரிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இவ்வாறிருக்க, அடுத்துவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைக் கவனத்தில் கொண்டு தங்களது முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களின் பணிச் சுமையை குறைப்பது குறித்து கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா கண்காணித்து வருகிறது. இதன் காரணமாக மிச்செல் ஸ்டாக் (டெல்ஹி கெப்பிட்டல்ஸ்), ஜொஷ் ஹேஸ்ல்வூட் (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு)ஆகிய இருவரும் பெரும்பாலும் ஆரம்ப ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என கருதப்படுகிறது. நியூஸிலாந்து வீரர் லொக்கி பேர்கசனும் ஆரம்பப் போட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெறுகிறார். https://www.virakesari.lk/article/241482
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின் மாஸ்கோ: ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ரஷ்யா விசுவாசமான நண்பராகவும், நம்பகமான கூட்டாளியாகவும் தொடர்கிறது என்று விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஈரானின் புத்தாண்டை முன்னிட்டு அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி, அதிபர் மசூத் பெஷெஷ்கியான் ஆகியோருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஈரானிய மக்கள் கடுமையான சோதனைகளை கண்ணியத்துடன் கடந்துவர வேண்டும் என விளாடிமிர் புதின் வாழ்த்தினார். மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் ஈரானின் விசுவாசமான நண்பனாகவும், நம்பகமான கூட்டாளியாகவும் ரஷ்யா தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஈரானுக்கான ரஷ்ய உதவிகள் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை. முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்கள், ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் படுகுழியில் தள்ளி, ஒரு பெரிய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக புதின் குற்றம்சாட்டி இருந்தார். ஈரானின் உச்சத் தலைவர் வஞ்சகமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். ஈரானில் ஆட்சியில் இருந்த அமெரிக்க ஆதரவு பெற்ற ஷா, பதவியில் இருந்து 1979-ல் அகற்றப்பட்டார். அது முதல் ரஷ்யா, ஈரானின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. எனினும், தற்போதைய போர் நெருக்கடியில் சிக்கியுள்ள ஈரானுக்கு ரஷ்யா எவ்வித உதவியும் வழங்கவில்லை என ஈரானிய வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன. ஈரான் போர் காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்தப் போர் ரஷ்யாவுக்கு சாதகமானதாகவும் அமைந்தது கவனிக்கத்தக்கது. “ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
-
ஈரான் எச்சரிக்கை : “உலகின் எந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்காது”
ஏதிர் பார்த்த ஓன்று பகிரங்கமாக சாவால் விட்டுள்ளார்கள்😇.
-
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர், மருமகனால் அடித்து கொலை!
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் ஒருவர் அவரது மருமகனால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொ*லை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளியாகியுள்ளது. இக்கொ*லைச் சடலம் யாழ்ப்பாணம் – தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில் உள்ள புதருக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அரியாலை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய திலீபன் தயாளினி என்ற விரிவுரையாளரே இவ்வாறு படுகொ*லை செய்யப்பட்டுள்ளார். கொ*லை செய்யப்பட்ட விரிவுரையாளரின் மகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தனது தாயையும் (விரிவுரையாளர்) தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றுள்ளதாக விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்று சோதனையிட்டனர். இதன்போது வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் யாரோ வெளியேறியதற்கான தடயங்களும், வெட்டப்பட்ட தலைமுடிகளும் கண்டறியப்பட்டன. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சந்தேகநபர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் (ATM) இயந்திரத்தில் பணம் எடுத்தமையும், திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பியமையும் QR குறியீடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சி.சி.ரி.வி (CCTV) காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளைத் தீவிரப்படுத்திய பொலிஸார், நேற்று திருகோணமலையில் வைத்து 21 வயதுடைய கணவனையும் (மருமகன்), 19 வயதுடைய அவரது மனைவியையும் (விரிவுரையாளரின் மகள்) கைது செய்தனர். யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், தனது மாமியாரான விரிவுரையாளரைத் தான் கழுத்து நெரித்துக் கொ*லை செய்ததாக மருமகன் வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன், சடலத்தைத் தனங்கிளப்பு – அறுகுவெளிப் பகுதியில் உள்ள புதருக்குள் வீசியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நீண்ட தேடுதலின் பின்னர் விரிவுரையாளரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது. குறித்த பகுதி சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குள் அமைந்துள்ளதால், பதில் நீதவான் சடலத்தைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இக்கொ*லைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1469515
- Today
-
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர், மருமகனால் அடித்து கொலை!
பேரிழப்பு! 😭 கடந்த 18ம் திகதி தனது மருமகனால் கொ*லை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தயாளினி திலீபன் அவர்கள் பற்றி யாழ் பல்கலைக்கழக இணையத்தளத்தில் இருந்து அவரின் கல்வித்தகைமைகள் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பார்த்தபோது மிகவும் கவலையாகவிருந்தது. 1999 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத் துறையில் சகல பாடங்களிலும் சிறப்புச் சித்தி (distinction) பெற்று 1st class இல் பட்டம் பெற்றுள்ளார். பின்பு 2005 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழத்தில் முதுமானி பட்டமும், அதன் பின்பு 2016 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளார். 2001 ஆம் ஆண்டு உதவி விரிவுரையாளராக ஆரம்பித்து தற்போது வரை சிரேஸ்ட விரிவுரையாளர் தரம்-1 இல் கடமையாற்றி வந்துள்ளார். நான்கு நூல்கள், 16 peer-reviewed journal publications, 55 மாநாட்டு ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றை அவர் வெளியிட்டுள்ளார் என்று அவரின் இணையப்பக்கத்தில் இருந்து தெரியவருகின்றது. அவரின் இழப்பு தமிழ்க் கல்விச்சமூகத்திற்கு ஒரு பேரிழப்பென்றால் மிகையாகாது. அன்னாரின் பிரிவால் துயருறும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! Kumar Ganesh
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
விடயத்தை திருப்ப திட்டுவதாக பொய் சொல்வது. எனவே, இப்பொது தமிழிலும் அரைகுறை எனும் பூனைக்குட்டி வெளியில் மெல்ல மெல்ல முகத்தை காட்டுகிறது.
-
சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை [மூன்று பகுதிகள்]
சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 3 விமானத்தின் சாப்பாடு இடைவேளையின் பின், அவள் இன்னுமொரு சிவப்பு ஒயின் எடுத்துக்கொண்டு, மீண்டும் அவரை நோக்கித் திரும்பினாள். " நீங்கள் ஒயின் ஒன்றும் குடிப்பதில்லையா ?" மெதுவாக அவரிடம் கேட்டாள். அவர், " இப்போது இல்லை " சுருக்கமாக பதில் அளித்தார். அவள் தொடர்ந்தாள்: “அப்போதும் ஒரே பாலின காதல் இருந்தது,” என்று அவள் சொன்னாள். “எல்லா இடங்களிலும். ஆனால் அது கவிதையில் வாழ்ந்தது, சட்டத்தில் அல்ல. கோயில்களில், நீதிமன்ற அறைகளில் அல்ல. அமைதியில், கொண்டாட்டத்தில் அல்ல.” பழைய உலகம் அதை மறுக்கவில்லை. ஆனால், அது வெறுமனே அதை பெயரிட மறுத்துவிட்டது.” என்று அவள் சொன்னாள். “உன் காதலிக்கு என்ன ஆனது?” என்று அவர் அமைதியாகக் கேட்டார். அவள் சிரித்தாள் - "அது சோகமானது அல்ல, என்றாலும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதும் அல்ல. அவள் இறக்கவில்லை, அவள் இன்னும் இருக்கிறாள், ஆனால் .... " என்று அவள் இடைநிறுத்தி, பெருமூச்சு விட்டாள். அவர் அவளின் முகத்தை கூர்ந்து பார்த்தர். "அவள் திருமணம் செய்து கொண்டாள்," என்று அவள் தொடர்ந்தாள். not to me, not even to the one she loved most. She married someone who could give her a sense of stability in life." [" என்னை அல்ல. அவள் காதலித்த ஆளையும் அல்ல. அவள் தன் வாழ்வுக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கக்கூடிய ஒருவனை மணந்தாள்."] அப்பொழுது விமானம் சீராக ரீங்காரமிட்டபடி, சீரான வேகத்தில் பறந்து கொண்டு இருந்தது. அவர், "ஒரு பால் உறவு ஒன்றும் புதிது அல்ல. என்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் முன்னைய காலத்தில் சந்ததிகளை உற்பத்தி செய்ய இயலாமை காரணமாக, இதை ஒரு திருமண பந்தத்தில் ஏற்கப் படவில்லை. ஏனென்றால், திருமணம் என்பது தன்னிச்சையான கட்டுமானம் அல்ல; அது ஒரு “கெளரவமான அமைப்பு", அதைத்தான் அவள் செய்தாள் என்று அவளுக்கு ஒரு விளக்கம் கொடுத்தார். அவள் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் வடிந்துகொண்டு இருந்தது. அவர் தொடர்ந்தார்: கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக அவளுக்கு பாடிக் காட்டினார். “Let your belly be full, your clothes clean, your body and head washed; enjoy yourself day and night, dance, sing and have fun; look upon the child who holds your hand, and let your wife delight in your lap! This is the destiny of mortals.” [“உங்கள் வயிறு நிரம்பட்டும் , உங்கள் உடைகள் சுத்தமாகட்டும் , உங்கள் உடல், தலை கழுவட்டும்; இரவும் பகலும் மகிழுங்கள், ஆடி பாடி மகிழுங்கள்; உங்கள் கைபிடிக்கும் குழந்தையை பாருங்கள், உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழட்டும் ! இதுதான் மனிதர்களின் விதி”] அவள் முகம்சுளித்தாள். “இன்று உலகம் நவீனமென்று சொல்கிறது, சட்டங்கள் உண்டு. கொடிகள் உண்டு. அறிவிப்புகள் உண்டு. ஆனால் ஏற்றுக்கொள்ளுதல் எப்போதும் இன்னும் தாமதமாகத்தான் வருகிறது — சேதத்துக்குப் பிறகே.” என்று சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் சாளரத்தின் ஊடாக வெளியே மேகங்களைப் பார்த்தாள். விமானம் மேகங்களுக்கு மேலே பறந்து கொண்டு இருந்தது. அவள் தொடர்ந்தாள்: சில நாடுகளில் ஒருபாலினத் திருமணம் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் பொறுத்துக் கொள்ளப்படுகிறது. பல இடங்களில் இன்னும் தண்டிக்கப்படுகிறது— சட்டத்தால், குடும்பத்தால், மௌனத்தால். நவீன உலகம் சுதந்திரத்தைப் பற்றி சத்தமாகப் பேசுகிறது, ஆனால் பொதுவான காதல் அடையாளங்களை மறுக்கும்போது கிசுகிசுக்கிறது" என்றாள். பின் "நான் இப்ப தனிமையில் இல்லை, காலத்தின் ஓட்டத்தை உணர்ந்தவளாக, வரலாற்று விழிப்புணர்வுடன் இருக்கிறேன்," என்று அவள் இறுதியாகச் சொன்னாள். அவர் தலையசைத்தார். "சில காதல்கள், காலத்தினால் (காலத்தின் நீளத்தினால்) தோற்கடிக்கப்படுவதில்லை. அவை ஒவ்வொரு சகாப்தத்தாலும் (காலகட்டத்தின் சூழ்நிலைகளால்) தோற்கடிக்கப்படுகின்றன," என்று அவர் பழைய உண்மையை எதிரொலிப்பாரைப் போலக் கூறினார். அவள் மீண்டும் ஜன்னலுக்கு வெளியே விமானம் தரையிறங்குவதைப் பார்த்தாள். அங்கே அவள் மேகங்களுக்கு ஒரு எல்லையையும் காணவில்லை. ஒட்டாவா விமான நிலையத்தில், அவர்கள் ஒன்றாக விமானத்தில் இருந்து கீழே இறங்கினர். “நாம் நண்பர்களாக இருப்போமா?” என்று அவள் கேட்டாள். அவர் சிரித்தார். "நட்பு என்பது, உலகத்தோடு போராடி, தப்பிப்பிழைக்க கற்றுக்கொண்ட அன்பு" என்று அவர் கூறினார். அவர்கள் தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொள்ளவில்லை. ஒருவருக்கு ஒருவர் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை. பண்டைய கவிதைகள் போன்ற சில தொடர்புகள் நினைவில் கொள்ளப்பட வேண்டுமே ஒழிய தொடரக்கூடாது. என்றாலும் எதிர் எதிர்திசைகளில் நடந்து அவர்கள் இருவரும் பிரியும் தருணத்தில், அவர்களுக்கு இடையே ஒரு நிசப்தமான (quiet) அல்லது உணர்ச்சிப்பூர்வமான தருணம் இருந்தது. ஆனால், அவர்கள் பிரிந்து சென்றவுடன், அந்தத் தனிப்பட்ட உணர்வை உலகம் பொருட்படுத்தாமல், வழக்கம் போலத் தன் பரபரப்பையும் சத்தத்தையும் தொடங்கியது. ஆனால் ஹீத்ரோவிற்கும் ஒட்டாவாவிற்கும் இடையில் எங்கோ, ஒரு உண்மை பாதுகாப்பாகப் பயணித்தது: ஒருபால் காதல் புதிதல்ல; அதை வெளிச்சத்தில் நிறுத்தி பெயரிடும் தைரியம்தான் ஒவ்வொரு காலத்திலும் புதிதாகப் பிறக்கிறது. நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் முற்றிற்று துளி/DROP: 2103 [சிறு கதை - 204 / ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஒட்டாவா விமான நிலையம் வரை / பகுதி 3 https://www.facebook.com/groups/978753388866632/posts/34406040362377838/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 138 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 138 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?" 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' என்ற மேஜர் ஃபோர்ப்ஸ் எழுதிய நூலின் பக்கம் 176 இன் படி, ஆதாமின் சிகரத்தில் / ஸ்ரீ பாதத்தில் உள்ள புத்தரின் இடது பாதத்தின் அளவு ஐந்து அடி ஏழு அங்குல நீளமும் இரண்டு அடி ஏழு அங்குல அகலமும் கொண்டது ஆகும் [five feet seven inches in length and two feet seven inches in breadth]. புத்தர் ஒரு மனிதர், அவரது பாதங்கள் இவ்வளவு பெரியதாக இருக்க முடியாது. இது புத்தரின் இடது பாதத்தின் அளவை ஆதாமின் சிகரத்தில் உள்ள பள்ளமான பகுதியின் முழு அளவையும் கருத்தில் எடுத்தது போல் தெரிகிறது? 'நயன்ஜோத் லஹிரி எழுதிய 'Ashoka in Ancient India by Nayanjot Lahiri' என்ற நூலின் 44 முதல் 45 பக்கங்கள் வரை பார்க்கவும். அதில்: பின்னர் புத்தர் நடந்து சென்ற ஒரு கல் இருந்தது [பாடலிபுத்திரத்தில் உள்ள ஒரு கல்லில் புத்தரின் கால்தடத்தை சுவான்சாங் இங்கு பதிவு செய்கிறார்.], அதில் அவரது இரண்டு கால்களின் அடையாளமும் இருந்தது. இது ஒரு புனித அம்சம் என்பதால், மன்னன் அதை ஒரு அடைப்புக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தார். நவீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சீனப் பயணி சுவான்சாங்கின் (யுவான் சுவாங் / Xuanzang) இந்த விவரங்களைப் பற்றிய விளக்கத்தை ஒப்புதலுடன் படித்தனர். தொல்பொருளியல் துறையின் முக்கியத்துவமான துல்லியமான அளவீட்டுத் திறன்களை சுவான்சாங் அங்கு காட்டினார். அதாவது அவர் அந்த புனித பாதச் சுவடுகளின் பரிமாணங்களைக் "18 அங்குல நீளம் மற்றும் 6 அங்குல அகலம்" என்று பதிவிடுகிறார். இது கூட ஒரு மனிதனுக்கு ஒப்பீட்டளவில் பெரியது. வழக்கமான அளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம் போல் தெரிகிறது. ஆனால் மேஜர் ஃபோர்ப்ஸின் 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' என்ற நூலில் கொடுக்கப்பட்டுள்ளபடி, அதில் ஒருவர் அதன் மீது தூங்கலாம். உண்மையில் அது தூங்கும் நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்? சமண மதமும் புத்த மதமும் தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ் நாடுகளுக்கு, பொது சகாப்தம் தொடங்குவதற்கு முன்பே வந்தன. கிமு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சமண மதம் தமிழ் நாடுகளுக்கு வந்தது, சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு புத்த மதம் தமிழ் நாடுகளுக்கு வந்தது. மன்னர்களும் மற்றும் அங்கு வாழும் பணக்காரர்களும் சமண துறவிகளுக்கு உறங்குவதற்காக பாறை மேற்பரப்புகளை தயார் செய்து வந்தனர். மகாவம்சம், 10-97 மற்றும் தீபவம்சம், 7-35 இல் சமணர்கள் நிகந்தர்கள் அல்லது நிகண்டர்கள் - பற்றற்றவர்கள் [Niganthas] என்று குறிப்பிடப்படுகிறார்கள். "Jain" (சைனர்) தமிழில் சமணர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். பௌத்த இதிகாசமான மணிமேகலையின் நாயகியான மணிமேகலை, இந்த சமண மலைக்கு [Sammana Malai] வருகை தந்தார் என்று குறிக்கப்பட்டுள்ளது. சமண மலை என்றால் இந்த மலை சமணர்களுக்குச் சொந்தமானது என்பதாகும். இலங்கையில் பௌத்தம் வருவதற்கு முன்பு, யாரோ ஒருவர் சமணர்களுக்கு, மலையின் உச்சியில் ஒரு படுக்கையை அமைத்தார் போலும்? அதனால்தான் சமணக் குட்டை [Sammana kutta] என்று பெயர் வந்தது என்று எண்ணுகிறேன். உதாரணமாக, 'பூலாவுடையார் சமணர் படுகை' என்று அழைக்கப்படும் சமணர் படுகை ஒன்று திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியிலுள்ளது. இப்படுகையில் சமண முனிவர்கள் படுப்பதற்கேற்ப கல்லில் படுக்கை செய்யப்பட்டுளது. மேலும் இதில் தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. அதில் 'வெண் காசிபன் கொடுபித கல் கஞ்சனம்' என்று தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுளது. இதன் எழுத்துக்களைக் கொண்டு இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என நிறுவியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. புத்தரின் பாதங்களை வணங்குவதற்காக மணிமேகலை கூட சமண மலைக்கு வந்தார் என்று காவியம் கூறுகிறது. சமணர்கள் அவமானம் உட்பட, எல்லாவற்றையும் துறந்தவர்கள். எதையும் அணிய மாட்டார்கள். குளிக்க மாட்டார்கள், பல் துலக்க மாட்டார்கள். வேறு எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் அவர்கள் செய்வதில்லை. அவர்கள் வாழும் இடங்களிலிருந்து விலகி வாழ்ந்தனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற கல் படுக்கைகள் பல உள்ளன. சமணர்கள் தமிழ் இலக்கியத்திற்கு நிறைய பங்களித்தனர். இருப்பினும், கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஒரு அற்பமான விவாதத்தில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திருஞானசம்பந்தமூர்த்தி துறவி ஒரு இளம் பிராமணர். அவர் சுத்தமாகவும் நன்றாகவும் உடையணிந்தவராகவும் இருந்திருக்க வேண்டும்; சைவ மதத்தின் சிறப்புகள் மற்றும் சமண மதத்தின் தீமைகள் குறித்து அவர் சமணர்களுடன் விவாதித்தார். அங்கு மன்னனே நடுவராக இருந்திருக்க வேண்டும். நிர்வாணமாக துர்நாற்றம் வீசும் வயதான சமண துறவிகளுக்கு எதிராக, அவர்களின் விவாதத்தின் தகுதி அல்லது தீமையைப் பொருட்படுத்தாமல், நல்ல மனநிலையில் இருந்த இளம் திருஞானசம்பந்தமூர்த்திக்கு ஆதரவாக மன்னன் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். விவாதத்தில் தோல்வியடைந்ததால், சமணர்கள், சுமார் எட்டாயிரம் பேர் உயிருடன் கழுவேற்றப் பட்டனர் என்பது வரலாறாகும். Part: 138 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?" As per the page 176 of the Reference 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' , the size of the Buddha’s left foot on Adam’s Peak / Sri Pada is five feet seven inches in length and two feet seven inches in breadth. The Buddha was a human, and his footsteps cannot be this big. From the pages 44 to 45 of the Reference 'Ashoka in Ancient India by Nayanjot Lahiri' says: Quote “Then there was a stone on which the Buddha had apparently walked, marked by the impression of both his feet, a sacred feature which the king had surrounded within an enclosure. Modern archaeologists read the Chinese traveller’s description of these details with approval, Xuanzang having shown the sorts of precise measuring skills that are staple of the discipline of archaeology: he mentions the dimensions of the sacred foot prints (18 inches long and 6 inches broad” Unquote. Even this is a comparatively big for a human being. Reference 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' gives the size of the Buddha’s left foot as on the Adam’s Peak. Even the size mentioned in the Reference 'Ashoka in Ancient India by Nayanjot Lahiri' is somewhat excessive; almost double the usual size, but the size of the Buddha’s foot print as given on the Reference 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994' is ridiculously excessive; one can sleep on it. In fact it must have been prepared for the sleeping purpose. Jainism and Buddhism came to southern India, especially to Tamil countries, before the dawn of the Common Era. Jainism came to Tamil countries about three hundred year B.C., and Buddhism came to Tamil countries about one hundred years after. Kings and rich people used to prepare rock surfaces for Jain monks. Jains are referred as Niganthas in the Mahavamsa, 10-97, and the Dipavamsa, 7-35. Jains are referred to as Samannar in Tamil. Mannimeghalai, the heroine of the Tamil Epic Mannimeghalai which is a Buddhist epic, visited this Sammana Malai. Sammana Malai means the hill belongs to Sammanars; to Jains. Someone prepared a bed on top of the hill to Sammannars, to Jains, prior to the advent of Buddhism in Lanka. That is why the name Sammana kutta. Even Mannimeghalai came to Sammana Malai to worship Buddha’s feet. Jains forsook everything, even shame, and do not wear anything. Do not bathe, do not brush teeth etc. They do not do anything which may harm any other living being. They used to live away from the living quarters. There are many such stone beds in Tamil Nadu. Samannar contributed a lot to Tamil literature. They were, however, massacred in the seventh century A.D. on a frivolous debate. Thirugnanasampanthamoorthy Saint was a young Brahmin. He must have been clean and well dressed; He debated Jains on the merits of Saivism and the demerits of Jainism. The king must have been the sole arbitrator. The king must have given the verdict in favour of the well poised pleasing young Thirugnanasampanthamoorthy against the naked foul smelling old jain monks irrespective of the merit or demerit of their debate. Jains were impaled alive because they failed in the debate, about eight thousand in numbers. This is very sad and shameful on the part of Saiva Saint Thirugnanasampanthamoorthy. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 139 தொடரும் / Will follow துளி/DROP: 2104 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 138 https://www.facebook.com/groups/978753388866632/posts/34406209025694305/?
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
கருத்து எழுதும் போதுதான் புதிய மொழியில் எழுதுகிறீர்கள் … அட்லீஸ்ட்…திட்டும் போதாவது தமிழில் திட்ட கூடாதா? மேலே தமிழ் சொற்களை இடியப்ப கொத்து போல் பிச்சு போட்டிருக்கிறிர்கள் என்பது புரிகிறது. ஆனால் வசனமா வாசித்தால் இது தமிழ் அல்ல என்றே படுகிறது. இது 6 வது தென்னிந்திய மொழி அல்லது அந்தமானில் பேசும் மொழி வகை ஏதேனுமா?
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
என்ன அரைத்த மாவை .... அறிந்தது காலத்துக்கு, நிலைமைக்கு பொருந்துகிறதா என்பதை கூட சிந்திக்காது ஒப்புவித்தது. இதுக்கு விடய விபரங்களில் பரீட்சயம் தேவை இல்லை. அப்படி விடய விபர அறிவு தேவை அற்றதுக்கே பிறழும் போது ... வேறு ஏதும் ஒப்புவிக்க கிடைக்கமல், மொத்தத்தில் வெளிக்காட்டிய அரைகுறையும் இல்லை என்று முக்குவது.
-
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை!
யாழில். விரிவுரையாளர் படுகொலை - தீவிர விசாரணைகளில் தடயவியல் பொலிஸார் சனி, 21 மார்ச் 2026 11:12 AM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீட மூத்த விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அரியாலை பகுதியை சேர்ந்த மருத்துவர் தயாளினி திலீபன் (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்ட பகுதி சாவகச்சேரி நீதிமன்ற ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதால், சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்து செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளரின் மகன், விரிவுரையாளரான தனது தாயையும், சகோதரியையும் காணவில்லை என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், காணாமல் போன யுவதியும் இளைஞன் ஒருவரும் திருகோணமலை பகுதியில் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் அவர்களை மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். யாழ்ப்பாணத்தில் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில் விரிவுரையாளரின் மகளின் காதலன் என கூறப்படும் இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் விரிவுரையாளரை கொலை செய்து , சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள காட்டுக்குள் வீசியதாக கூறியுள்ளார். அதனடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். https://jaffnazone.com/news/55737