All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @கந்தப்பு க்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் சொல்ல வந்தது, சூப்பர் எட்டில். பாகிஸ்தானின் நிலைமை இலங்கை கையில். ஜனாதிபதி கதைத்துத் தான் பாகிஸ்தான் விளையாட வந்தது என்ற தகவலை தெரிவித்துக் கொண்டு.....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூஸிலாந்து அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறி ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ஓட்டங்களுடனுன் இருந்தபோதும் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெரின் புயல்வேக 47 (26 பந்துகள்), கோல் மக்கொஞ்சியின் ஆட்டமிழக்காத 31 (23 பந்துகள்) ஓட்டங்கள், மற்றும் ரச்சின் ரவீந்திராவின் வேகமான 32 (22 பந்துகள்) ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பினர். நியூஸிலாந்து அணியின் 17 சுழல்பந்து ஓவர்களுக்கு அடித்தாடமுடியாமல் தடுமாறி, கமிண்டு மெண்டிஸின் 31 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், டுனித் வெல்லலகேயின் 29 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களுடன் சுருண்டனர். ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: நியூஸிலாந்து அணி 61 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: இன்று சுமைதாங்கிக் கல்லுக்கு @வாதவூரான் நகர்ந்துள்ளார். @Ahasthiyan இரண்டாம் இடத்திற்கும் முன்நகர்ந்துள்ளார்!
-
ஆடுகளம்
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று திரு மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இதற்கு 3 நாட்களுக்குப் பின்னர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே எங்களை ஹபரணவுக்கு வரச் சொன்னார். மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே அவர்கள் என்னிடமும் பிள்ளையானிடமும் அரசாங்கம் மாறி விட்டது. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். ஆயுதங்களை ஒளியுங்கள். தன்னையும் இடம் மாற்றலாம். இராணுவ சம்பளம் சில வேளை தொகையாகக் கொடுக்க விட மாட்டார்கள். ஆட்களுக்கு நேரடியாகத் தான் கொடுக்க வேண்டி வரும் என பல விடயங்களை சொன்னார். எதற்கும் 15 போலி பெயர்களை எழுதித் தருங்கள். அந்த பெயர்களை இராணுவ சம்பள பட்டியலில் சேர்த்து விடுகிறேன் என நம்பிக்கை தந்தார். போலி பெயர்களை எங்களுக்கு பொறுப்பான புலனாய்வு அதிகாரி மொகமட்டுக்கு அனுப்பி வைத்தேன். எங்களுக்கு ரூபா 3.5 மில்லியன் மாத இராணுவ சம்பளம் தொடர்ச்சியாக மாதாந்தம் வழங்கப்பட்டு வந்தது. 2015 பொதுத்தேர்தலிற்கு பின்னர் பிள்ளையானை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். 5 மாத காலம் 4 ஆம் மாடியில் தடுத்து வைத்திருந்தார்கள். நான் பிள்ளையானை ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுமதி பெற்று சந்தித்தேன். 5 மாதங்களுக்குப் பிறகு பிள்ளையானை மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றினர். பிள்ளையானுக்கு வழக்காடச் சட்டத்தரணியை ஏற்பாடு செய்ய பசில் ராஜபக்சே மூலம் உதவி பெறும்படி சுரேஸ் சாலே அறிவுறுத்தியிருந்தார். இதற்கிடையில் சுரேஸ் சாலே மலேசியா தூதரகத்துக்கு பாதுகாப்பு பிரதானியாக இடம் மாற்றப்பட்டார். ஜனாதிபதி சட்டத்தரணி திரு அனில் சில்வாவை பசில் ராஜபக்சே ஏற்பாடு செய்து வழங்கினார். பிள்ளையான் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை முன்கூட்டியே முடிக்க ஒத்துழைக்க வேண்டாம் என சுரேஸ் சாலே அறிவுறுத்தியிருந்தார். வழக்கு தவணையின் போது நேரம் கேட்டு ஒத்திவையுங்கள் எனவும் சொல்லி இருந்தார். நாங்கள் சட்டத்தரணியோடு கதைத்து அந்தத் தந்திரோபாயத்தை கடைப்பிடித்தோம். நான் ஒவ்வொரு வாரமும் அனுமதி பெற்று பிள்ளையனைச் சந்தித்தேன். மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையனுக்கு தனியான ஒரு பெரிய அறை கொடுத்திருந்தார்கள். பிள்ளையான் சிறைக்குள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தினார். அந்தத் தொலைபேசி சிறைக்காவலர் ஒருவர் ஊடாக நான்தான் அனுப்பி வைத்தேன். அந்தத் தொலைபேசியில் இரவில் என்னோடு கதைத்தார். 2017 ஆவணி மாதம் சந்திக்கப் போன போது பிள்ளையான் சிறையில் தங்க வைக்கப்பட்டு இருந்த காத்தான்குடி முஸ்லிம் நபர்களை என்னை சந்திக்கும் படி சொன்னார். 2017 ஆவணி மாதம் 2வது கிழமை சிறைச்சாலைச் அத்தியட்சர் அக்பரின் அனுமதியுடன் ஒரு சிறைக்காவலர் அவர்களில் ஒருவரை என்னுடன் பேச அழைத்து வந்தார். நானும் பிள்ளையனும் அவரும் சந்தித்தோம். அவர் தன் பேர் சைனி மௌலவி என்று சொன்னார் (தற்*கொ*லை கு*ண்டுத் தா*க்குதாரர்களின் தலைவர் சஹரான் மௌலவியின் சகோதரர்). சில சம்பாஷணைகளுக்கு பிறகு அவர் போய்விட்டார். சந்திப்புக்கு பின்னர் பிள்ளையான் சொன்னார்: “இவர்கள் கடும் விஷயமான ஆக்கள். வழக்கு முடிந்து வெளியில் வருவார்கள். கஷ்டத்தில் இருக்கிறார்கள. அவர்களுக்கு உதவி செய்வோம். அவர்கள் பின்பு எங்களுக்கு உதவி செய்வார்கள்.” குறிப்பாக சைனி மௌலவியின் மனைவியின் தம்பியிடம் ரூபா 50,000 கொடுக்க சொன்னார். அடுத்தநாள் சைனி மௌலவியின் மச்சான் தொலைபேசி எடுத்தார். நான் எங்கள் காரியாலயம் மட்டக்கிளப்பு லேக் ரோட்டில் இருக்கிறது. அங்கு வரச் சொன்னேன். அங்கு அவர் வந்து ரூபா 50,000 கொடுத்தேன். சம நேரத்தில் பிள்ளையான் சுரேஸ் சாலேயோடு 2 முறை தொலைபேசியில் கதைத்தார். 2017 புரட்டாதி முதல் கிழமை சுரேஸ் சாலே பிள்ளையானை சந்திப்பதற்கு சில்வா என்கிற ஒருவரை அனுப்பி இருந்தார். அந்த நபர் எங்கள் காரியாலயத்திற்கு வந்தார். நானும் அவரும் என்னுடைய வாகனத்தில் சிறைச்சாலைக்குப் போனோம். சில்வா தமிழ் நன்றாகக் கதைத்தார். சிறைச்சாலைக்குள் போவதற்கு என்னுடைய பேரில் பதிந்து கூட்டிக் கொண்டு போனேன். 20 நிமிடம் கதைக்க அனுமதி தந்தார்கள். ஆனால் 20 நிமிடம் கதைக்கப் போனவர் 2 மணித்தியாலம் கதையை நிறுத்தவில்லை. சிறைக்காவலர் தனக்குப் பிரச்சனை வரப்போகுதென்று பயப்படத் தொடங்கினார். நான் பிள்ளையானும் சில்வாவும் கதைத்து கொண்டுவிருந்த சிறை அறைக்குள் புகுந்த பிறகு, அவர்கள் கதைப்பதை நிறுத்தினார்கள். அதன் பிறகு அவரை நான் சந்திக்கவில்லை. சில்வா வந்து போன பிறகு மேற்குறிப்பிட்ட முஸ்லிம் ஆட்களைப் பிணை எடுக்க வேண்டும் என பிள்ளையான் கூறினார். காசு கொஞ்சம் ஒழுங்கு பண்ண பிள்ளையான் சொன்னார். ரூபா இரண்டரை இலட்சம் அளவில் வேண்டும். சுரேஸ் சாலேயிடம் கேட்க வேண்டும் என பிள்ளையான் கூறினார். நான் சுரேஸ் சாலேயிடம் பிணை எடுப்பதற்கு காசு இரண்டரை லட்சம் தரும்படி கேட்டேன். சுரேஸ் சாலே தான் மொகமட் அவர்களிடம் சொல்லி ஒழுங்குபண்ணுவதாக கூறினார். எங்கள் செப்டம்பர் மாத சம்பளத்தோடு சேர்த்து இரண்டரை லட்சம் மேலதிமாகத் தரப்பட்டது. நான் அந்தக் காசை சைனி மௌலவியின் மச்சானிடம் கொடுத்தேன். பின்பு பிணை எடுப்பதற்கு ஓட்டமாவடி சட்டத் தரணி ராசிக் ஐ ஒழுங்குபடுத்திக் கொடுத்தேன். அவர்கள் 24.10.2017 யன்று பிணையில் வெளியில் வந்தார்கள். 2018 ஜனவரி மாத கடைசியில் மேற்படி பிணையில் வந்தவர்களை சுரேஸ் சாலே சந்திக்க விரும்பினார் என்று பிள்ளையான் சொன்னார். அந்தக் கலந்துரையாடலை ஒழுங்குபடுத்திக் கொடுக்கச் சொன்னார். அந்தக் கலந்துரையாடலுக்கு என்னையும் போகச் சொன்னார், இராணுவ வாகனத்தில் போக அறிவுறுத்தினார். நான் சைனி மௌலவிக்குப் முதல்நாளே போன் பண்ணி, “எனக்கு இப்படிக் கூட்டம் இருக்கிறது. அவர்களின் ஆட்களைக் கூட்டிக் கொண்டு வருங்கள்” என சொல்லி வைத்தேன். பிள்ளையான் தொலைபேசியில் ஏற்கனவே கூறியதாகச் சொன்னார். சுரேஸ் சாலே தொலைபேசி எடுத்தார். “தானும் வந்து கொண்டிருக்கிறேன்” என உறுதிப்படுத்தினார். புத்தளம் வனாத்துமுல்லையில் தென்னமரங்கள் சோலை போல் வளர்ந்திருந்த இடத்தில கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது. அங்கு எனக்கு சைனி மௌலவி ஒருத்தரை மட்டும்தான் தெரியும். சைனி மௌலவி தான் எனக்கு தனது சகோதரரை அறிமுகப்படுத்தினார். அவர் தனது பெயர் சஹ்ரான் என்று சொன்னார். சுரேஸ் சாலே அவர்களிடம், “சஹ்ரான் மௌலவியை நான் தான் அறிமுகப்படுத்தினேன்” என்று கூறினார். சஹ்ரான் சொன்னார், “இவரைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன்.” உடனே அவர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளே நுழைந்தனர். நான் வெளியில் நின்றிருந்தேன். கூட்டம் 3 மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு சுரேஸ் சாலே தனியாக என்னைக் கூப்பிட்டு, “பிள்ளையான் சிறையிலும் வழக்கிலும் வெளியிலை வருவதென்றால், கோத்தபாயா ஜனாதிபதியாக வந்தால் மாத்திரமே முடியும். இல்லையெனில் பிள்ளையான் மட்டுமல்ல எல்லோரும் உள்ளே போக வேண்டியிருக்கும்” என எச்சரித்தார். அடுத்தநாள் பிள்ளையானைச் சந்தித்து நடந்த விபரங்களை எல்லாவற்றையும் சொன்னேன். பிள்ளையான் கோத்தபாயாவை வெல்ல வைக்க சுரேஸ் சாலே பெரிய பிளானில் வேலை செய்கிறார். “நாங்கள் அதற்கு உதவி செய்யவேண்டும். அப்போதான் நான் வெளியிலே வரலாம்” என்று கூறினார். 11.2.2018 அன்று செப்டம்பரில், நாங்கள் (நான், பிரசாந்தன், தேவராஜ், இனியபாரதி) கோத்தபாயாவை சந்தித்தோம். அங்கு ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண இருந்தார். கோத்தபாயா, “நான் ஜனாதிபதி தேர்தலில் வென்றால் பிள்ளையனை விடுவிக்க முடியும். முழுமையாக வேலை செய்யுங்கள்” எனக் கூறினார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2019 அன்று, சுரேஷ் சாலே காலை 7 மணியளவில் என்னைத் தொடர்பு கொண்டார் கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு உடனடியாகச் சென்று, அங்கு காத்திருக்கும் ஒருவரை அழைத்து வருமாறு சொன்னார் நான் தற்போது மட்டக்களப்பில் இருக்கிறேன், கொழும்பில் இல்லை என்று சுரேஷ் சாலே அவர்களுக்கு பதிலளித்தேன் இந்த உரையாடலுக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தா*க்குதல்கள் நடந்தன. தாக்குதல்களுக்குப் பிறகு உடனடியாக பிள்ளையான் ஒரு சிறைக் காவலர் மூலம்எனக்கு ஒரு செய்தியை அனுப்பி, தன்னை அவசரமாகச் சந்திக்கச் சொன்னார். பிள்ளையானைச் காலை 11 மணிக்கு சந்தித்தேன் யாருக்கும் ஒன்றும் தெரியாத நேரத்தில் பிள்ளையான், “நீ வாயை மூடிக் கொண்டு எதுவும் தெரியாதது போல் இரு. இது எங்களுடைய கூட்டாளிகளின் வேலையாகும். சுரேஸ் சாலே கூட்டாளிகளின் வேலையாகவே இருக்கிறார். இது நமக்கு நல்லது. அரசாங்கம் எப்படியும் மாறும்” என கூறினார். பின்னர் சைனி மௌலவியை அழைத்து நிலைமைகளை விசாரிக்க சொன்னார் இருப்பினும், சைனி மௌலவியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மாலையில் ஊடகங்களில் வந்த செய்திகளின் ஊடக பிள்ளையானின் வேண்டுகோளின் பேரில் வனாத்துமுல்லையில் நான் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சுரேஸ் சாலே அவர்களை சந்தித்தவர்கள் தான் ஈஸ்டர் தா*க்குதலில் ஈடுபட்ட கு*ண்டுதாரிகள் என அறிந்தேன் அதே போல சுரேஷ் சலே என்னை தாஜ் சமுத்ரா ஹோட்டலிலிருந்து அழைத்து வர சொன்ன நபர் ஜமீல் என்பதையும், தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்*கொ*லைத் தா*க்குதலை நடத்த பணிக்கப்பட்ட கு*ண்டுதாரி என்றும், பின்னர், கடைசி நிமிடத்தில் திட்டங்களை மாற்றியமைத்து, தாஜை விட்டு வெளியேறி, தெஹிவளையில் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் தன்னைத்தானே வெ*டிக்கச் செய்தார் என்பதையும் பின்னர் தெரிந்து கொண்டேன் ஐப்பசி 15, 2021 அன்று சுரேஸ் சாலே கோத்தபாயா அதிகாரத்திற்கு வந்த பின்னர் சுரேஸ் சாலே அவர்களை மீண்டும் சந்தித்தேன். தனது அறைக்குள் வைத்துத் தனது கணனியில் பாராளமன்றத்தில் ஹரின் பெர்னாண்டோ பேசிய வீடியோவை பார்க்கும்படி சொன்னார். அதே போல ஆயர் சிறில் காமினி அவர்கள் பேசிய வீடியோவும், பாராளமன்ற உறுப்பினர் நளின் பண்டார அவர்களின் வீடியோவும் பார்க்க சொன்னார். “இவர்கள் சஹரான் குழுவுக்கும் இராணுவப்புலனாய்வுப் பிரிவுக்கும் தொடர்பு இருக்கிறது என சொல்லுவது பற்றி தெரியுமா?” என கேட்டார். நான் சஹ்ரானைச் சந்தித்தது எனக்கும், பிள்ளையானுக்கும் தான் தெரியும். நீ தான் சொல்லியிருக்க வேண்டும் என சொன்னார் அதற்குப்பிறகு என்னைக் கடுமையாக விசாரித்தார். நான் யாரோடும் இதைப் பகிரவில்லை. கைத்தொலைபேசியைச் சோதனை செய்தார். 2007 இல் இருந்து அவரை அறிந்தேன். அன்று தான் மிகக் கடுமையாக இருந்தார். 10 மணிக்கு போனேன், 1 மணிக்குத் தான் வெளியே விட்டார். இவர் என்னைக் கடுமையாக சந்தேகிக்கிறார் என்று விளங்கியது. வெளியே வந்து பிள்ளையானுக்கு தொலைபேசி எடுத்தேன். சுரேஸ் சாலே என்னைக் கூப்பிட்டு கடுமையாக விசாரித்தார். சந்தேகப்படுகிறார். எனக்குப் பயமாக இருக்கின்றது என சொன்னேன் ஓக்டோபர் 16 ஆம் தேதி, பிள்ளையான் தனியே சுரேஸ் சாலேவை சந்தித்தது அமலன் (சாரதி) மூலம் எனக்கு தெரியவந்தது. பிள்ளையான் என்னிடமும் சொல்லவில்லை. பிள்ளையனும் சுரேஸ் சாலே போல என்னை சந்தேகிக்க தொடங்கி விட்டார் போல இருந்தது. நான் இராணுவத்தை காட்டி கொடுத்ததாக அவர்கள் நினைக்கத் தொடங்கி விட்டதால் கடுமையாக அஞ்சத் தொடங்கினேன். இலங்கையிலிருந்து தப்பி சென்று இருக்கும் பிள்ளையான் கூட்டாளி அசாத் மௌலானா ஈஸ்டர் தாக்குதல் சதி முயற்சிகள் தொடர்பாகவும், சுரேஸ் சாலே மற்றும் பிள்ளையான் தொடர்புகள் குறித்த மிக நீண்ட வாக்குமூலத்தின் ஒரு பகுதியே இது. உண்மையில் ஈஸ்டர் தாக்குதலின் Mastermind அடையாளம் காணப்படும் சுரேஷ் சாலே யாழ்ப்பாணத்தில் அருண் சித்தார்த் தலைமையில் ஆவா குழு, கிரீஸ் மனிதன் உட்பட்ட கொடூரங்களை செய்வித்த நபர் ஆவர் அதே போல இறுதி யுத்தத்தில் கைது செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாண போதனசாலை பணிப்பாளர் வைத்தியர் திரு சத்தியமூர்த்தி உட்பட வைத்தியர்களை அச்சுறுத்தி பத்திரிகையாளர் மாநாட்டில் பொய் சொல்ல தூண்டிய சூத்திரதாரியாகவும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அடையாளம் காணப்பட்டு இருந்தார் இது தவிர கோட்டாபய ராஜபக்சே பாதுகாப்பு செயலாளாராகவிருந்த போது நடைபெற்ற பல்வேறு அரசியல் கொ*லைகளிலும் இவருக்கு தொடர்பிருப்பதாக சொல்லப்படுகின்றது ஒரு நியாயமான நேர்மையான விசாரணை மூலம் கடந்த காலங்களில் நடைபெற்ற ஈஸ்டர் தா*க்குதல் முதல் பல்வேறு இருண்ட கொடூர பக்கங்களுக்கு விடைகளை கண்டறிய முடியும் ஆனால் பொது நிர்வாகம் முதல் சகல விடயங்களையும் வெறும் அரசியலாக அணுகும் ஜேவிபி இந்த விவகாரத்தை எப்படி அணுகும் என்பது வெறும் 3 நாட்களில் ஊகிக்க கூடியதாக இருக்கும் விசேடமாக 11 மில்லியன் ரூபா பொது நிதியில் அரசியல் மாநாடு வைத்து போதை பொருளை ஒழிக்க முடியும் என கதை சொல்லும் ஜேவிபி ரூபா 7.6 பில்லியன் இழப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலக்கரி மோசடி விவகாரத்தில் சொல்லிவருவது போல எதாவது புனை கதை சொல்லவும் வாய்ப்பிருக்கின்றது. இனமொன்றின் குரல்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏற்கனவே மூன்றாவது தடவையும் தோத்தாச்சு (சிம்பாவேயுடனானதும் சேர்த்து). தோற்கிறதுக்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்கும் இலங்கையணி
- அறிவித்தல்: யாழ் இணையம் 28 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
-
ஜெனிவா அமர்வின் பக்க நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்வு
ஜெனிவா அமர்வின் பக்க நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்வு 25 Feb, 2026 | 06:35 PM (நா.தனுஜா)Geographic Reference தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் எவையும் இல்லாத நிலையில், பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் Jeunesse Etudiante Tamoule எனும் அரச சார்பற்ற அமைப்பினால் நாளை மறுதினம் (27) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பக்க நிகழ்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி, எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தீர்மானத்தை மேலும் இரு வருடகாலத்துக்கு நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன்பிரகாரம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 63 ஆவது கூட்டத்தொடரிலும், விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 66 ஆவது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படும். ஆகவே இம்முறை நடைபெற்றுவரும் 61 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் அறிக்கைகள் எவையும் சமர்ப்பிக்கப்படமாட்டாது என்பதுடன் விவாதங்களும் இடம்பெறாது. இருப்பினும் இப்பேரவை அமர்வில் இலங்கை சார்பில் பங்கேற்கும் ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுமித் தஸநாயக்க தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், ஏனைய நாடுகளின் விவகாரங்கள் தொடர்பான விவாதங்களின்போது இலங்கை சார்பில் கருத்துரைப்பர். அதேவேளை இக்கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் துநரநௌளந நுவரனயைவெந வுயஅழரடந எனும் அரச சார்பற்ற அமைப்பினால் நாளை மறுதினம் (27) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/239580
-
ஏராளன் started following உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் ஆண்டுவிழா நவம்பர் 28 ஆரம்பம்! - விழா ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை , ஜெனிவா அமர்வின் பக்க நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்வு , குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு and 1 other
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
காட்டினாப் போல. ஓடாத மணிக்கூடு ஓடாதுதான் என்று நகைச்சுவையாகச் சொல்லிக் கொண்டு உ.பி.சி இருதடவை தோத்த இலங்கை. மூன்றாவது தடவையாகவும் தோக்குமா. தோத்தாலும் இவ்வளவு மோசமாகத் தோக்குமா.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்துநியூசிலாந்தை 20 ஓட்டங்களால் வென்றால் பாகிஸ்தான் இலங்கையை 50 ஓட்டங்களால் வெல்ல வேண்டும். முதலாவதுநடந்தால் இரண்டாவதுநடக்க 200 வீதம் சந்தர்ப்பம் இருக்கு
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
சுரேஷ் சலே கைதானது எப்படி? Feb 25, 2026 - 09:34 PM உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்டார். அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான மிலேச்சத்தனமான தீவிரவாதிகள் குழுவினால் நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட 10 தற்கொலைத் தாக்குதல்களில் 273 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அனைத்து விசாரணைகளின் அடிப்படையில் வெளிவந்த தகவல்களுக்கு அமைய, தாக்குதல் நடத்திய குழுக்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணிய நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. இத்தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் பின்னணி இருப்பதாகப் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. இதன் ஒரு கட்டமாக, ராஜபக்ஷவினரை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு நடைபெற்றதாகப் பிரித்தானியாவின் 'சனல் 4' ஊடகம் ஒரு ஆவணப்படத்தின் மூலம் குற்றச்சாட்டை முன்வைத்தது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் ஊடகப் பேச்சாளராக இருந்து, தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ரகசிய விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், அவ்வப்போது கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை 8.10 மணியளவில் பேலியகொடை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்காகச் சென்று கொண்டிருந்த போதே சுரேஷ் சலே சி.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், அவர் பயன்படுத்திய கணினிகள், அவரது வீடு, வங்கிக் கணக்குகள் மற்றும் மின்னஞ்சல் தகவல்களைச் சோதனையிடவும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சுரேஷ் சலே முன்கூட்டியே சில தகவல்களைத் தெரிந்திருந்தும், அதனை உரிய தரப்பினருக்குத் தெரிவிக்காமல் மறைத்தாரா என்பது குறித்தும் விசாரணை அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். இதேவேளை, இத்தாக்குதலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் சில முக்கிய நபர்கள் குறித்தும் சி.ஐ.டி விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmm283hp8000r356poz882xg5
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இப்போது பாகிஸ்தான் நிலைமை. நியுசிலாந்தின் பாரிய வெற்றி ஓட்ட விகிதத்தை மிக அதிகமாக உயர்த்தியுள்ளது. பாகிஸ்தான் வீட்ட போக தயார் படுத்த வேண்டியதுதான்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உடைந்த மணிக்கூடும் நாளுக்கு இரெண்டுதரம் சரியான நேரம் காட்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை முதலாவது அணியாக அரை இறுதிக்கான வாய்ப்பை இழந்தது.
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
சுரேஷ் சலேயின் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது - திலித் ஜயவீர Feb 25, 2026 - 05:46 PM முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை, சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர இன்று (13) வன்மையாகக் கண்டித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் போர்வையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமது எக்ஸ் கணக்கில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து திலித் ஜயவீர தெரிவித்துள்ளதாவது, மேஜர் ஜெனரல் சலே இலங்கையில் மூன்று தசாப்த கால கொடிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஒரு சிறந்த மற்றும் திறமையான இராணுவ அதிகாரி ஆவார். இவ்வாறானதொரு அதிகாரியை அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலுக்கு உட்படுத்துவது, அதன் நேர்மை, நோக்கம் மற்றும் அரச அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது குறித்த கடுமையான கவலைகளை ஏற்படுத்துகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நம்பகமான சாட்சியங்களுக்குப் பதிலாக, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது நீதியைச் சீர்குலைப்பது மட்டுமன்றி, இலங்கை ஆயுதப் படைகளின் மன உறுதியையும் கடுமையாகப் பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். நாட்டைப் பாதுகாக்கத் தமது உயிரைப் பணயம் வைக்கும் வீரர்கள், அரசியல் தேவைகளுக்கான இலக்குகளாக மாற்றப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீதி என்பது வெளிப்படையானதாகவும், பக்கச்சார்பற்றதாகவும், எவ்வித தலையீடுகளும் அற்றதாக இருக்க வேண்டும். அதற்கு மாறாகச் செய்யப்படும் எச் செயலும், அதனைச் செய்பவர்கள் மீது நீங்காத கறையை ஏற்படுத்தும் என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர மேலும் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmm1zzqt5000l356pcdx1ejei
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நூறடித்து தங்கள் மானத்தைத் தாங்களே காத்துக் கொண்டார்கள்.
-
குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு
குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு Feb 25, 2026 - 07:16 PM உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் போது தெமட்டகொட மஹவில கார்டன்ஸ் வீட்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய இரண்டாவது சந்தேகநபரான இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்பவரது வீட்டிலிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் இரத்தினக்கற்கள் உள்ளிட்ட சொத்துக்களை, அவரது சகோதரரான இஃப்லால் அஹமட்டிடம் ஒரு வாரத்திற்குள் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (25) உத்தரவிட்டார். முன்னைய நீதவான் இந்தச் சொத்துக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய சி.ஐ.டி-க்கு போதுமான அவகாசம் வழங்கியிருந்தும், அவர்கள் அதனைச் செய்யத் தவறியுள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டினார். இந்த உத்தரவை ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தாவிடில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதவான் எச்சரித்தார். ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் மற்றும் தெமட்டகொட வீட்டில் குண்டு வெடித்ததில் உயிரிழந்த இன்ஷாப் அஹமட் ஆகியோரின் சகோதரரான இஃப்லால் அஹமட், குறித்த சொத்துக்கள் தனக்குச் சொந்தமானவை எனக் கூறி அவற்றை விடுவிக்குமாறு சட்டத்தரணி ஊடாகக் கோரியிருந்தார். தற்போது அந்தப் பொருட்கள் மத்திய வங்கியின் பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அவற்றை விடுவிக்க மேலதிக அவகாசம் கோரியதுடன், இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டனர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடுவது தவறான செயலாகும் என நீதவான் வலியுறுத்தினார். நீதிமன்ற உத்தரவுகளை அமுல்படுத்தத் தவறுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் பாரதூரமான குற்றமாகும் எனத் தெரிவித்த அவர், எக்காரணம் கொண்டும் ஒரு வாரத்திற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், ஏ.எச்.எம். ரிஃபாஸ் மற்றும் மொஹமட் நிலாம் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmm2351h6000o356pt6q7cyo5
-
புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக மன்னாரில் கையெழுத்துப் போராட்டம் 25 Feb, 2026 | 06:34 PM பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் (25) மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது. இதில் மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது “PTAஐ நீக்கு! PSTA சட்ட வரைவை மீள பெறுக”, “ஊடக சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்”, “நீதித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்”, “மனித மாண்பு பேணப்பட வேண்டும்”, “உயிர் வாழ்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்”, “அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணான மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் சட்டங்களுக்கு எதிராக எமது குரலை வலுப்படுத்துவோம்”, “மக்கள் நலன் கருதி ஒருமைப்பாட்டுடன் செயற்படுவோம்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/239583
-
மக்களின் காணிகளை விடுவிக்க வனவள திணைக்களம் மறுப்பதை ஏற்க முடியாது - வடக்கு ஆளுநர்
மக்களின் காணிகளை விடுவிக்க வனவள திணைக்களம் மறுப்பதை ஏற்க முடியாது - வடக்கு ஆளுநர் 25 Feb, 2026 | 05:30 PM மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லை என்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாவட்டச் செயலகத்தால் பரிந்துரைக்கப்படும் காணிகளை வனவளத் திணைக்களம் முழுமையாக விடுவிக்கவேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இ.சந்திரசேகர் மற்றும் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று புதன்கிழமை (25) காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத் திறன் அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரை ஆற்றிய கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மணல் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார். கல்மடுக் குளத்திலிருந்து பெறப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்ட மணல், தற்போது கரைச்சிப் பிரதேச சபையின் ஊடாக மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், கடந்த 'டித்வா' பேரிடரின் பின்னர் இரணைமடுக் குளத்தின் மேலதிக நீர் வெளியேறிய ஆற்றுப் பகுதிகள், அக்கராயன் மற்றும் கல்லாறு ஆகிய ஆற்றுப் பகுதிகளில் குவிந்துள்ள மணலை பிரதேச சபைகள் ஊடாகச் சேகரித்து மக்களுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, கிளிநொச்சியில் உள்ள 5 குளங்களில் மண்ணைக் கழுவுவதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 15,000 கியூப் மணல் பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனூடாக இரு மாவட்டங்களினதும் எதிர்கால மணல் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன்போது உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், நடப்பு ஆண்டில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காகப் பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ள நிலையில், அவற்றை வினைத்திறனுடன் செலவிடுவதற்கான போதிய கால அவகாசம் காணப்படுவதால், அபிவிருத்திப் பணிகளை மிகச் சிறப்பாகவும் துரிதமாகவும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கான பல்வேறு விடயங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி, மீள்குடியேற்ற அமைச்சின் ஊடான வீட்டுத் திட்டங்கள், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள், புனரமைக்கப்பட வேண்டிய பாலங்களின் முன்னுரிமைப் பட்டியல், இடர் முகாமைத்துவத் திட்டம் மற்றும் சமூக சக்தி வறுமை ஒழிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கான அனுமதிகள் கோரப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா, பொ.கஜேந்திரகுமார் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோர் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அதேவேளை, வன்னேரிக்குளம் சுற்றுலா அபிவிருத்தி, கௌதாரிமுனையில் காணி வழங்கல் மற்றும் பொருளாதார மத்திய நிலையக் கடைகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களுக்குக் குழுவினால் அனுமதி வழங்கி வைக்கப்பட்டது. வனவளத் திணைக்களத்திடமிருந்து 10,821 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், வெறுமனே 1,088 ஏக்கர் காணியை மாத்திரமே விடுவிக்க வனவளத் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பில் சுட்டிக்காட்டிய மாவட்டச் செயலாளர், கோரப்பட்ட முழுமையான 10,821 ஏக்கர் காணியையும் விடுவிக்கவேண்டும் என வலியுறுத்திய நிலையில், அக்கோரிக்கைக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக அனுமதி வழங்கியது. வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான முழுமையான விபரங்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுச் சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் இதன்போது குறிப்பிட்டார். அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்காலக் குடிநீர்த் தேவையைக் கருத்தில்கொண்டு, இரணைமடுக் குளத்திலிருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியும் ஒருங்கிணைப்புக் குழுவால் வழங்கப்பட்டது. அத்துடன், கிளிநொச்சி நகர்ப்புறக் குளங்களின் ஒதுக்கீட்டுக் காணிகளை ஆக்கிரமித்துள்ளவர்களைச் சட்டபூர்வமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவை இரண்டாகப் பிரிப்பதற்கும், சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைப் பிரித்து மீளமைப்பதற்கும் ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்கியது. மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், ஆணையாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/239579
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Lowest score record ஐ திரும்பவும் சிறிலங்கா முறியடிக்குமா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கோஷானின் சுமை இன்றைக்கு அகலும் போலிருக்கிறதே! Sri Lanka vs New Zealand, 46th Match, Super Eights, Group 2 at Colombo, T20 World Cup, Feb 25 2026 - Live Cricket Score Live 46th Match, Super Eights, Group 2 (N), Colombo (RPS), February 25, 2026, ICC Men's T20 World Cup PrevNext New Zealand 168/7 Sri Lanka (14.6/20 ov, T:169) 77/7 Sri Lanka need 92 runs in 30 balls.Stats view Current RR: 5.13 • Required RR: 18.40 • Last 5 ov (RR): 33/3 (6.60) Win Probability SL 0.18%NZ 99.82%
-
தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!
அக்குரேகொட இரட்டைக் கொலை: நான்கு வாகனங்கள் மீட்பு ! 25 Feb, 2026 | 04:37 PM அக்குரேகொட பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், தலைமறைவாக இருந்த இரண்டாவது துப்பாக்கிதாரியும் மொனராகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இக்கொலைச் சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட நான்கு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதில் ஒரு வாகனம் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், எரிக்கப்பட்ட வாகனத்தைச் செலுத்திய சாரதியைத் தவிர ஏனைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும், இந்த முழுச் சம்பவத்தையும் பின்னணியிலிருந்து இயக்கிய பிரதான சூத்திரதாரியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இன்று புதன்கிழமை (25) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த இது குறித்த மேலதிக விபரங்களை வெளியிட்டார். "இந்தக் கொலைச் சம்பவம் ஒரு பாதாள உலகக் குழுவினால் மிகவும் நுணுக்கமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகும். ஆரம்பத்தில் பொலிஸாரிடம் 'கார் ஒன்றில் வந்தவர்கள் சுட்டுவிட்டுத் தப்பினர்' என்ற மிகக் குறைந்த தகவலே இருந்தது. எனினும், சிறிய தகவல்களைக் கூட ஆதாரங்களாக மாற்றி முன்னெடுத்த விசாரணைகளில் தற்போது 80 சதவீத முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது" என சஜீவ மெதவத்த தெரிவித்தார். இரண்டாவது துப்பாக்கிதாரியைப் பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியிருந்த நிலையில், பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்று மொனராகலை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனுடன் இக்கொலையில் சம்பந்தப்பட்ட இரண்டு துப்பாக்கிதாரிகளும் தற்போது பொலிஸ் வசம் உள்ளனர். இவர்களுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மொனராகலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/239566
-
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் ஆண்டுவிழா நவம்பர் 28 ஆரம்பம்! - விழா ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் ஆண்டுவிழா நவம்பர் 28 ஆரம்பம்! - விழா ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 25 Feb, 2026 | 04:10 PM உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council - WBSC) 60ஆவது ஆண்டு விழா மற்றும் 11ஆவது பொதுச் சபையின் 2ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம், எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி முதல் டிசம்பர் 2ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளன. அதன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. உள்நாட்டு, வெளிநாட்டுத் தேரர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவுக்கு தேவையான அரச அனுசரணை வழங்க புத்த சாசன அமைச்சர், ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதிநிதி, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். 1966ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலில் நிறுவப்பட்ட இந்த சர்வதேச பௌத்த அமைப்பின் விழாவை, அது நிறுவப்பட்ட நாட்டில் நடத்துவது ஒரு தனித்துவமான மைல்கல் என்று ஏற்பாட்டுக் குழு சுட்டிக்காட்டியது. தேரவாதம், மகாயானம் மற்றும் வஜ்ராயனம் ஆகிய அனைத்து பௌத்த மரபுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 பிரதிநிதிகள், இந்த நிகழ்வுக்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன், மூன்று நிகாயாக்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உட்பட 500 இந்நாட்டுத் தேரர்களின் பங்கேற்புடன் இந்த விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு பூட்டான் மன்னர் உட்பட பௌத்த நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு அழைப்பு விடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப நிகழ்வு, நவம்பர் 28ஆம் திகதி கொழும்பு, நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்தில் நடைபெறும். நிறைவேற்றுக் குழுக் கூட்டம் மற்றும் கல்வி மாநாடு (Academic Conference) நவம்பர் 29ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. உலக அமைதிக்காக அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நவம்பர் 30ஆம் திகதி மாலை நடைபெறும். டிசம்பர் 1ஆம் திகதி ருவன்வெளி சேய மற்றும் கண்டி தலதா மாளிகையை மையமாகக் கொண்டு சமய அனுஷ்டானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. “வஸ்” காலம் முடிந்த பிறகு நடைபெறும் இந்த விழா, இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சி குறித்து உலகிற்கு சிறந்த செய்தியை வழங்கும் என்றும், நாட்டின் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்கு பெரிதும் பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நிறைவு நிகழ்வை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக ஏற்பாடு செய்வதன் அவசியத்தை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அரசாங்கம் முழு ஆதரவையும் வழங்கும் என்றும் தெரிவித்தார். மேலும், நியமிக்கப்படும் விசேட குழுவினால் அரசாங்கத் தரப்பு மற்றும் ஏற்பாட்டுக் குழு நிறைவேற்றவேண்டிய பணிகளை உடனடியாக அடையாளம் கண்டு, எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன் மூலம் இலங்கையின் விருந்தோம்பல் குறித்து மிகவும் சிறந்த செய்தியை முழு உலகிற்கும் எடுத்துக்காட்ட முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். வெளிநாட்டுத் தேரர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்நாட்டிற்கு வருகை தரும்போதும், புறப்பட்டுச் செல்லும்போதும் விமான நிலையத்தில் சிறப்பு நுழைவாயில்களை (VIP facilities / Counter) நிறுவுதல் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்திற்குச் சென்று, அதன் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, உலகின் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்பை உறுதி செய்வதற்காக முறையான இராஜதந்திர அழைப்புகளைச் செய்வதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சியை உலகிற்கு மீண்டும் உறுதிப்படுத்தவும், நாட்டின் கௌரவத்தை அதிகரிக்கவும் இந்த நிகழ்வு வழங்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் உப தலைவர், கலாநிதி வண, அக்குரெட்டியே நந்த நாயக்க தேரர், நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாக் குழுவின் தலைவர் கலாநிதி வண, போதாகம சந்திம நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உட்பட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/239559
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆரோ தலகுளி + பச்ச தண்ணிய ஒண்டா குடுத்துட்டானுகள் 😂 நியூசீ நிண்ட நிலையில்தான் இவையும் நிக்கினம். ஆனால் scoreboard pressure மடக்கி போடும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரச்சினின் உருட்டலில் உளலும் இலங்கை