Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. நிசியின் இருவரும், இணைப்பாட்டமாக, இதுவரை 463 ஓட்டங்கள் மொத்தமாக அடித்துவிட்டார்கள். இன்று இரண்டாவது 100 ஓட்ட இணைப்பாட்டம். எல்லா உலகக் கோப்பையிலும, இதுதான் அதிகூடிய இணைப்பாட்டமும்.
  3. அண்ணை, அப்ப இலங்கைக் கடற்படை மறுத்தான் விட்டது ஏன்?
  4. சிலரை தூக்குவது…. சிலரை போடுவது…. இன்னும் சிலரை மோஸ்கோ வரை விரட்டுவது…. இவர்களுக்கு எல்லாம் அபயம் அழிப்பதாக சொன்னவரை, ஒரு காலத்தில் சிரியாவில், மாலியில் ஒரு நவ காலனியை நடத்தியவரை, இதையெல்லாம் பார்க்க வைத்து விரக்தியாகி தற்கொலைக்கு தூண்டுவது😂. அல்லது கடாபி போல் அவர் மக்களே அவருக்கு தர்ம அடி கொடுத்து அனுப்பி வைப்பது. இதுதான் மொசாட்டின் பிளான்😂. ஆனால் இவரிடம், அவரின் பிடி இருப்பதால் இன்னும் மூன்றரை வருடம் பொறுக்க வேண்டும்.
  5. இரான் மதம் (வெறி) என்றால் ( அப்படி உண்மையில் இல்லை), அது ஒவ்வொரு தனிமனிதனும் அல்லாஹ்விடம் அல்லது அவர்கள் கருதும் சொர்க்கத்துக்கு போவது. ஜிகாதில் கூட தனிமனிதனின் (ஆன்மிக) விடுதலையை எப்படி அடைவது என்பது. அனால், இந்த சுனி இஸ்லாமே , அதை (இராணுவ) தற்கொலை தாக்குதலுக்கு உசுப்பேற்ற பாவிக்கும் பயிற்சி முறையை கொண்டு வந்தது. (ண்மையில், ஈரான் ஷியா முஸ்லிம்கள் வரலாறு அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள், அழிக்கப்பட்டவர்கள்) ஆனால் இந்த விவிலிய பிரளய கிருமிகள் சொல்வது, (இயேசு திருப்பி பூமியில் வர ) கூண்டோடு முழு மனித குலமுமும் அழிய, சொற்ப்பமானவர்கள், அவர்களை பொறுத்தவரை புண்ணியம் செய்தவர்கள், இயேசுவை காணும், யேசுவுடன் பூமியில் வாழும் பாக்கியத்தை பெற்றவர்களே எஞ்சி இருப்பார்கள் என்று. (எது மிகுந்த ஆபத்தானது? அத்துடன் இந்த விவிலிய பிரளய கிருமிகள் இடம் அணுஆயுதங்களும் உள்ளன) டிரம்ப் மாற்ற்ம் குழாம், இஸ்ரரேல் இப்பொது ஈரானை அடிப்பதில் அடிப்பதில். இதுவம் ஒரு பங்கு. அதாவது இந்த விவிலிய பிரளய நம்பிக்கை. அல்லது அதை போன்ற, இப்படியான வேறு பிரளய கருத்துருவாக்கமும் Genesis இருக்கிறது என்றே நினைக்கிறன். இதனால் தான், டிரம்ப் க்க இப்போதும் என் இரான் மீது யுத்தம் அமெரிக்காவால் தொடுக்கபட்டதுக்கான காரணத்தை சொல்ல முடியாது இருப்பது. டிரம்ப் வெளியில் சொன்னது எல்லாமே பொய் (அடிப்பதற்கு முதல் நாள் ஒமானின் பேச்சுவார்த்தை மதியஸ்தர் / வசதிப்படுத்தும் அதிகாரி ஸ்டீவ் விட்கப், ஜாரெட் கிருஷ்னர் ஐ நம்பாது, பகிரங்கமாக சர்வதேச தொலைக்காட்சி ஊடகங்களை பாவ்வித்து சொல்லி இருந்தார், இரான் இணக்கப்பாட்டுக்கு வந்து இருப்பதாக. ஓமான் அமெரிக்காவையே குற்றம் சாட்கிறத்து, பேச்சவார்த்தையை இரானை ஏய்க்காட்டியதாக, அப்படியான கருத்து பட) இரானை அடுத்து எந்த நாடுகள் என்று இஸ்ரேல் வெளியில் சொல்லி விட்டது, துருக்கி, பாகிஸ்தான் என்று. (இது டிரம்ப் இன் நேட்டோ இல் இருந்து விலத்தவது என்பதுடன் ஒத்து போகிறது) (ஈரான் இஸ்லாமிய குடிஅரசு என்றாலும், இரானின் எந்த அரச படைகளும் இப்படியான மத பிரளயங்களை பாவித்து படைகளை உசுப்பேற்றுவது இல்லை, இரானின் தேசியவாதத்தையே பாவிக்கிறது )
  6. ஈரானுடனான போரினால் இஸ்ரேலுக்கு வாராந்தம் 2.9 பில்லியன் டொலர் இழப்பு Mar 4, 2026 - 08:05 PM ஈரானுடனான போர் நிலைமை காரணமாக இஸ்ரேலிய பொருளாதாரத்திற்கு ஏற்படும் இழப்பு வாரத்திற்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, போரினால் நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் முடங்கியமை, அதிகரித்துள்ள பாதுகாப்புச் செலவுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் ஆகியனவற்றைக் கருத்திற் கொண்டே இந்தப் பாரிய நிதி இழப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மோதல் நீண்ட காலம் தொடருமானால், இஸ்ரேலின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் நிதி ஸ்திரத்தன்மைக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளும் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmmc4ydbp000f356plfnsd6sa
  7. குழு நிலைப் போட்டிகளில், நியுசிலாந்து 175 அடிக்க தெ.ஆ 17 பந்துப் பரிமாற்றங்களிலேயே துரத்திப் பிடிச்சவை. இப்போ நிசி, அதைத் திருப்பிச் செய்யினம்
  8. எனக்கு புள்ளிகளை கணக்குப் பார்க்கும் வேலை இன்று இல்லை!
  9. பவர் பிளேயில, 84 ஓட்டங்கள். அலன் ஆறாவது பந்துப் பரிமாற்றத்தில் ஐந்து பந்துகளை எல்லைக்கு அனுப்பி விட்டார்.
  10. ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. கடும் கண்டனம் Mar 4, 2026 - 07:26 PM போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக் குழு, அந்நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஈரானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன சர்வதேச உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்தத் தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு முரணானது எனத் தெரிவித்துள்ளது. "இந்தத் தாக்குதல்கள்... எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராகப் பலத்தைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு முரணானவையாகும்," என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச சட்டங்களை மதித்துச் செயற்படுவது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பு என இந்த விசாரணைக் குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. கடும் கண்டனம்
  11. விபத்தல்ல. நீர்மூழ்கியில் இருந்து டோர்பிடோவால் தாக்கியுள்ளனர். அண்மையில் விசாகபட்டினத்தில் நடந்த கடல் படை கண்காட்சியில் பங்கெடுத்து விட்டு, நாடும் திரும்பும் போது தாக்கப்பட்டுள்ளது.
  12. தென்னாபிரிக்காவும் பிடிகளை எல்லாம் விடினம்.
  13. “மரணத்திற்குப் பின்னரான பாலியல் வன்முறை” நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் March 4, 2026 டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இறந்த பெண்ணின் சடலத்தை அங்கு வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் எனக் கூறி டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தியசாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 25 ஆம் திகதி ஹட்டன் ஏபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் 23 வயதுடைய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சடலத்தை கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் மூன்று சிற்றூழியர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற காரணம் என்ன என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது. மரணமடைந்த உடலுடன் பாலியல் செயல் செய்வது மனநல மருத்துவத்தில் “நெக்ரோபிலியா” (Necrophilia) என அழைக்கப்படுகிறது. இது ஒரு அரிதான மற்றும் கடுமையான பாராபிலிக் குறைபாடாக கருதப்படுகிறது. காரணம், மரணமடைந்த நபர் ஒப்புதல் (consent) வழங்க முடியாது என்பதே ஆகும். மனநல மருத்துவ வரையறைகளின்படி, ஒப்புதல் அளிக்க முடியாத நபரை மையமாகக் கொண்ட பாலியல் ஈர்ப்பு ஒரு குறைபாடாக வகைப்படுத்தப்படுகிறது. அடிப்படை உளவியல் காரணிகள் நெக்ரோபிலியாவிற்கு ஒரே காரணம் இல்லை. பல உளவியல் காரணிகள் இணைந்து செயல்படலாம். (A) முழுமையான கட்டுப்பாட்டு உந்துதல் சிலருக்கு உறவு சார்ந்த அச்சங்கள் அதிகமாக இருக்கலாம் உதாரணமாக நிராகரிப்பு பயம், நெருக்க உறவு உருவாக்க இயலாமை, பாலியல் செயல்திறன் குறித்த பதட்டம் போன்றவை. ஆனால் மரணமடைந்த உடல் எதிர்ப்பு காட்டாது, தீர்ப்பளிக்காது, மறுக்காது. இதனால் “முழு கட்டுப்பாடு” என்ற உணர்வு உருவாகலாம். இது உறவு சார்ந்த உளவியல் குறைபாடுகளின் பிரதிபலிப்பாக இருக்கலாம். (B) இணைப்பு (Attachment) கோளாறு சிறுவயதில் பாசக்குறைவு, பாதுகாப்பற்ற இணைப்பு, உணர்ச்சி புறக்கணிப்பு இவற்றால், நபர் உண்மையான மனித உறவுகளைத் தவிர்த்து, பாதுகாப்பான (ஆனால் அசாதாரணமான) கற்பனை உலகில் ஈடுபடலாம். (C) Conditioning (பழக்கமாதல்) பாலியல் தூண்டுதல் சில சமயங்களில் குறிப்பிட்ட சூழல்களுடன் இணைக்கப்பட்டு பழக்கமாக மாறலாம். உதாரணமாக மரணம் தொடர்பான அனுபவங்கள், மோர்ச்சரி வேலை சூழல் போன்றவை. (D) ஆளுமைக் கோளாறுகள் சில சந்தர்ப்பங்களில் சமூக விரோத ஆளுமைக் கோளாறு, சாடிசம் (Sadism), மனச்சாட்சி குறைவு போன்ற ஆளுமைக்குறைபாடுகள் இவ்வாறான நடத்தைகளில் ஈடுபடுபவர்களிடத்தில் காணப்படலாம் . இருப்பினும், எல்லா நெக்ரோபிலிக் நடத்தைகளும் ஆளுமைக் கோளாறுடன் தொடர்புடையவை அல்ல. (E) மனவெறுக்கோளாறு (Psychosis) மிக அரிதாக கடுமையான மனவெறுக்கோளாறு, மாயநம்பிக்கைகள் போன்ற நோய் நிலைமைகளினால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறலாம் நரம்பியல் (Neurobiological) காரணிகள் நரம்பியல் பார்வையில், பாலியல் உந்துதல் மூளையின் சில முக்கிய பகுதிகளுடன் தொடர்புடையது: Hypothalamus – பாலியல் உந்துதல் கட்டுப்பாடு Limbic system – உணர்ச்சி செயலாக்கம் Prefrontal cortex – தீர்மானம் மற்றும் சமூக கட்டுப்பாடு சில ஆய்வுகள், தன்னாட்சி கட்டுப்பாட்டின் குறைவு (impulse control deficit) மற்றும் உணர்ச்சி செயலாக்க கோளாறுகள் அசாதாரண பாலியல் நடத்தைக்கு காரணமாக இருக்கலாம் என முன்வைக்கின்றன. வகைப்பாடு சில உளவியல் ஆராய்ச்சியாளர்கள் நெக்ரோபிலியாவை பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர் முதன்மை நெக்ரோபிலியா – பிரதான பாலியல் விருப்பம் வாய்ப்புச் சூழ்நிலை – கொலைக்குப் பிறகு திடீர் உந்துதல் கற்பனை மட்டுமே சட்டப் பார்வை மரணமடைந்த உடலுடன் பாலியல் செயல் (post-mortem sexual act) என்பது சட்டரீதியாக மிகவும் கடுமையான விஷயம். இலங்கையில் இது குறித்து தனித்துப் “necrophilia” என்ற பெயரில் பிரிவு இல்லாவிட்டாலும், பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையின் தண்டனை சட்டத்தின் பிரகாரம் (a) Section 365 – “Unnatural offences” பழமையான பிரிவாக இருந்தாலும், மனித உடலுடன் இயற்கைக்கு மாறான பாலியல் செயல் மேற்கொண்டால் குற்றமாகப் பார்க்கப்படும். மரணமடைந்த நபருடன் நடந்த பாலியல் செயலும் இப்பிரிவின் பரப்பளவுக்குள் வரலாம். (b) Section 292 – Trespassing on burial places கல்லறை அல்லது அடக்கம் செய்யப்பட்ட இடங்களை அவமதிக்கும், கல்லறையை சேதப்படுத்தும் அல்லது சடலத்தை அசட்டையாக கையாளும் செயல்கள் குற்றமாகும். (c) Section 346 – Causing disappearance of evidence மரணத்திற்குப் பிந்தைய பாலியல் செயல், முன் நடந்த குற்றத்தை மறைக்க மேற்கொள்ளப்பட்டதாக இருந்தால், ஆதாரங்களை மறைத்தல்/மாற்றுதல் குற்றமும் சேர்க்கப்படும். சட்டரீதியான நிலைப்பாடு மரணமடைந்த நபர் ஒப்புதல் வழங்க முடியாததால், இது “ஒப்புதல் இல்லாத செயல்” என கருதப்படும். மனித மரியாதை (human dignity) மரணத்திற்குப் பின்பும் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது நெக்ரோபிலியா என்பது மிகவும் அரிதான, கடுமையான மற்றும் சட்ட ரீதியாக தண்டனைக்குரிய பாராபிலிக் குறைபாடாகும். இது இயல்பான மனித பாலியல் நடத்தை அல்ல. இதன் பின்னணி உளவியல், நரம்பியல் மற்றும் சமூக காரணிகளின் சிக்கலான ஒருங்கிணைப்பாகும். இந்நிலையைப் புரிந்து கொள்ளும் போது மருத்துவ அறிவு, நீதிமுறை உணர்வு மற்றும் சமூக பொறுப்பு ஆகியவை ஒன்றிணைந்த அணுகுமுறையாக இருக்க வேண்டும். Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine) “மரணத்திற்குப் பின்னரான பாலியல் வன்முறை”
  14. தென்னாபிரிக்காவின் துடுப்பாட்டத்தின் படி 170 ஒரு நல்ல இலக்கு. நியுசிலாந்து ஆரம்ப துடுப்பர்கள் நல்ல தொடக்கம் குடுக்காட்டி, கஸ்டம்.
  15. இலங்கை தெற்கு கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல் மீது தாக்குதல் ? - 101 பேர் மாயம், 78 பேர் காயம் Published By: Digital Desk 3 04 Mar, 2026 | 05:40 PM இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் வைத்து, ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பல் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில், குறைந்தது 101 பேர் மாயமாகியுள்ளதுடன், 78 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 180 பேருடன் பயணித்த இந்த 'மௌஜ்' (Moudge) ரக போர்க்கப்பல், இன்று விடியற்காலை காலி துறைமுகத்திலிருந்து சுமார் 25 மைல் தொலைவில் வைத்து அபாய சமிக்ஞையை விடுத்துள்ளது. வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பலொன்றிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை அல்லது தாக்குதல் காரணமாக கப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியிருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. ஈரானியக் கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட அவசர உதவி அழைப்பை (Distress Call) தொடர்ந்து, இலங்கை கடற்படை உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளிநாட்டு செய்திச்சேவையொன்றுக்கு தெரிவித்துள்ளார். கப்பல் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் உரையாற்றும் போது, மூழ்கிக் கொண்டிருந்த போர்க்கப்பலில் இருந்து குறைந்தது 30 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும், சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை. இலங்கை தனது கடற்பரப்பு பாதுகாப்பு மற்றும் சர்வதேச கடல் சட்டங்களுக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தாக்குதலுக்குள்ளான போர்க்கப்பல், ஈரானின் தெற்கு கடற்படைக்குச் சொந்தமான ‘மௌட்ஜ்-கிளாஸ்’ (Moudge-class) ரகத்தைச் சேர்ந்த ‘IRIS Dena’ என அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்கப்பல் தெற்கு கடலோர நகரமான காலிக்கு அருகில் இருந்து அவசர உதவி சமிக்ஞையை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலின் பின்னணி குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், அண்மைக் காலங்களில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலை அதிகரித்துள்ளன. இந்த வாரத்தின் தொடக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கப் படைகள் 10 ஈரானியக் கப்பல்களை மூழ்கடித்ததாக தெரிவித்திருந்தார். ஆனால், அவை எந்த கடற்பரப்பில் இடம்பெற்றன என்பது குறித்து அவர் விவரம் வழங்கவில்லை. இந்நிலையில், இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் கவலைக்குரியதாகக் கருதப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கை செய்திகள் இதேவேளை, “இலங்கை கடற்படையாகிய நாம் தாக்குதல் தொடர்பான செய்திகளை முழுமையாக நிராகரிக்கிறோம். இச்சம்பவம் தற்போதைக்கு விபத்தாகவே கருதப்படுகிறது,” என இலங்கை கடற்படையின் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தெற்கு கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல் மீது தாக்குதல் ? - 101 பேர் மாயம், 78 பேர் காயம்
  16. யாழ். ஏழாலை பகுதியில் 800 லீட்டர் டீசல் பதுக்கல்: இருவர் கைது ! 04 Mar, 2026 | 04:59 PM யாழ்ப்பாணத்தில் 800 லீட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஏழாலை பகுதியில் பாரிய கொள்கலன்களில் டீசல் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் , அவற்றை சேமித்து வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரிடம் இருந்தும் சுமார் 800 லீட்டர் டீசலை பொலிஸார் மீட்டுள்ளனர். டீசலை பதுக்கி வைத்து கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டிலையே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ். ஏழாலை பகுதியில் 800 லீட்டர் டீசல் பதுக்கல்: இருவர் கைது!
  17. இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சி! Mar 4, 2026 - 05:21 PM இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக சிறுவர் நோய் நிபுணர்கள் சங்கம் தெரிவிக்கிறது. லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுனில் விஜேசிங்க இது குறித்துக் கூறுகையில், மூன்றரை இலட்சமாகக் காணப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை தற்போது இரண்டரை இலட்சமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அச் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் பூஜித விக்கிரமசிங்க தெரிவிக்கையில், குழந்தை பிறப்பை எதிர்பார்க்கும் தாய் தனது உயரத்திற்கு ஏற்ற எடையை முறையாகப் பேணுவது மிகவும் முக்கியமானது என்றார். "ஆரோக்கியமான பெண் குழந்தையிலிருந்தே ஆரோக்கியமான தாய் உருவாகிறாள். ஏனெனில், 12-14 வயது முதல், பூப்படைந்த நாள் தொடக்கம் அந்தப் பிள்ளை ஆரோக்கியமான நிலையில் இருப்பது மிகவும் முக்கியமாகும். நீரிழிவு நோய் அல்லது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள கர்ப்பிணித் தாய்க்குப் பல்வேறு சிக்கல்களுடன் குழந்தைகள் பிறக்கின்றன. சரியான எடை மற்றும் அந்த எடைக்கு ஏற்ற உயரத்தைக் கொண்ட ஒரு பெண் கர்ப்பமடைவதே இதற்கான அடிப்படை அடித்தளமாக இருக்க வேண்டும்." "போலிக் அமிலம் (Folic acid) குறைந்தால் முதுகெலும்பில் குறைபாடுகள் ஏற்படலாம். தண்டுவடம் மற்றும் நரம்பு மண்டலத்தில் சில பலவீனங்கள் ஏற்படலாம். ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறியும் போதே, குழந்தையின் நரம்பு மண்டலம் வளர்ச்சியடைந்து முடிந்துவிடும். அந்த நேரத்தில் போலிக் அமிலத்தை உட்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. குறிப்பாகத் திருமணமாகி குழந்தையை எதிர்பார்க்கும் தம்பதியினர் அந்தப் போலிக் அமிலத்தை முறையாகப் பெற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் ஆரம்பம் அங்கிருந்துதான் தொடங்க வேண்டும்" எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சி!
  18. South Africa vs New Zealand, 1st Semi-Final at Kolkata, T20 World Cup, Mar 04 2026 - Live Cricket Score Innings break 1st Semi-Final (N), Eden Gardens, March 04, 2026, ICC Men's T20 World Cup PrevNext South Africa (20 ov) 169/8 New Zealand New Zealand chose to field.Stats view Current RR: 8.45 • Last 5 ov (RR): 61/3 (12.20)
  19. Today
  20. இலுப்பைக் கடவையில் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரைக்கும் ஆலை புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு 04 Mar, 2026 | 04:33 PM இலுப்பைக் கடவையில் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரைக்கும் ஆலை புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக மாகாண கூட்டுறவு ஆணையாளர் செல்வி அகல்யா ஆகியோர் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர் உட்பட பல அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் . குறித்த அரைக்கும் ஆலை யில் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்வதற்குரிய வசதிகளுடன் கூடிய வகையில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலுப்பைக் கடவையில் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரைக்கும் ஆலை புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு
  21. யாழில் 4 நாட்களில் ஏழரை இலட்சம் லீற்றர் பெற்றோல் விற்று தீர்ந்தது 04 Mar, 2026 | 04:36 PM யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களில் சுமார் ஏழரை இலட்சம் லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெற்றோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து பெற்றோலை பெற்று சென்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெற்றோலை பெற்று கொள்ளும் இந்நிலைமை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் நீடித்து வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் 7 இலட்சத்து 45 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 4 நாட்களில் சுமார் 5 இலட்சம் லீற்றர் பெற்றோல் கொள்வனவு செய்யப்படும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற பயத்தின் காரணமாக தேவைக்கு அதிகமான நுகர்வு செய்யப்படுவதனால், 4 நாட்களில் சுமார் இரண்டரை இலட்சம் லீற்றர் பெற்றோல் நுகரப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய தினமும் யாழ்ப்பாணத்திற்கு, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 36 எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக விநியோகிக்க 3 இலட்சத்து 10 ஆயிரத்து 200 லீற்றர் பெற்றோல் கொலன்னவளையில் இருந்து பவுசர்களில் கொண்டு வரப்பட்டு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இன்றைய தினம் புதன்கிழமையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. யாழில் 4 நாட்களில் ஏழரை இலட்சம் லீற்றர் பெற்றோல் விற்று தீர்ந்தது
  22. "ஸ்பெயினுடன் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துகிறோம்" - டிரம்பின் அச்சுறுத்தலுக்கான எதிர்வினை என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் டேனியல் கேய் வணிக செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரான் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதன் ராணுவ தளங்களைப் பயன்படுத்துவதை அமெரிக்காவுக்கு தடை செய்ததை அடுத்து, ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இதனிடையே, அமெரிக்க தாக்குதலுக்கு எதிரான தன் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், டிரம்பின் அச்சுறுத்தல் "சர்வதேச சட்டத்தை முறிப்பதாகும்" என்று தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் டிரம்ப் இது குறித்து தெரிவிக்கையில், ஸ்பெயின் "மிகவும் மோசமாக" இருந்தது என்றும் "நாங்கள் ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்கப் போகிறோம்" என்றும் கூறினார். "ஸ்பெயினுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த அச்சுறுத்தலை டிரம்ப் நிர்வாகம் பின்பற்றுமா அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடனான வர்த்தகத்தைத் தடுக்க அதிகாரிகள் எவ்வாறு நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நேட்டோ நட்பு நாடுகள் தங்கள் பாதுகாப்புக்கான செலவினங்களை உயர்த்த வேண்டும் என்ற டிரம்பின் வலியுறுத்தலுக்கு ஸ்பெயின் அரசு எதிர்ப்பு தெரிவிப்பது உட்பட, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றங்களை டிரம்பின் கருத்துக்கள் மேலும் அதிகரிக்கின்றன. "இன்று அல்லது நாளை, ஸ்பெயினுடனான அனைத்து வணிகங்களையும் எங்களால் நிறுத்த முடியும்" என்று டிரம்ப் செவ்வாய்கிழமை ( பிப்ரவரி 3) கூறினார். ஸ்பெயினிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் அமெரிக்கா சட்டப்பூர்வமாக தடை விதிக்க முடியும் என்று டிரம்ப் மற்றும் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் இருவரும் கூறினர். ஆனால் இந்தத் திட்டம் குறித்து அதிபர் கருத்து கேட்டபோது, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரேர் உறுதியான பதிலை வழங்கவில்லை. "நாங்கள் அதைப் பற்றி உங்களுடன் (டிரம்பிடம்) பேசுகிறோம்," என்று கூறினார். "உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திய வலுவான அதிகாரம் உங்களிடம் உள்ளது. நீங்கள் அதைப் பயன்படுத்த முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். மேலும், தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய நீங்கள் அதைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், நாங்கள் அதைச் செய்வோம்." என்றார் அவர். வர்த்தக அச்சுறுத்தல் குறித்து கருத்து கேட்டபோது வெள்ளை மாளிகை உடனடியாக பதிலளிக்கவில்லை. பட மூலாதாரம்,La Moncloa Handout படக்குறிப்பு,ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் செவ்வாய்கிழமையன்று , ஸ்பெயின் அரசாங்கம் தனது பாதுகாப்பு செலவினங்களை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக அதிகரிக்க மறுத்ததற்காக, டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது பல ஐரோப்பிய நாடுகள் மேல் விதிக்கப்பட்ட வரி போல இல்லாமல், ஸ்பெயின் பொருளாதார தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம், பொருளாதாரக் குழுவில் உள்ள 27 நாடுகளுக்கு இடையே பொருட்களை சுதந்திரமாக நகர்த்த அனுமதிக்கிறது, இது ஒரு தனி உறுப்பு நாட்டின் மீது வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கும் எந்தவொரு முயற்சியையும் சிக்கலாக்கும். அமெரிக்க நிர்வாகம் ஸ்பெயினுடனான அதன் வர்த்தக உறவை மறுபரிசீலனை செய்ய விரும்பினால், அது தனியார் நிறுவனங்களின் சுயாட்சி, சர்வதேச சட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும் என்று ஸ்பெயின் அரசாங்கம் கூறியது. செவ்வாய்கிழமை (பிப்ரவரி 03) டிரம்பைச் சந்தித்த ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ், ஸ்பெயின் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதி என்றும், அந்த ஒன்றியத்துடனான எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்திலும் ஸ்பெயினும் இருக்க வேண்டும் என்றும் அதிபரிடம் கூறியதாக தெரிவித்தார். 2025-ஆம் ஆண்டில், அமெரிக்கா ஸ்பெயினுக்கு சுமார் 26 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது, மேலும் அந்த நாட்டிலிருந்து சுமார் 21 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டது என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவுக்கு ஸ்பெயினின் சிறந்த ஏற்றுமதிகளில் மருந்துப் பொருட்கள் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை அடங்கும். ஐரோப்பாவின் இடதுசாரி சார்பு கொண்ட சில தலைவர்களில் ஒருவரான ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ஞாயிற்றுக்கிழமை, இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை சர்வதேச சட்டத்தை மீறும் "நியாயமற்ற, ஆபத்தான ராணுவத் தலையீடு" என்று விமர்சித்தார். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தெற்கு ஸ்பெயினில் உள்ள ராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதைத் தடுப்பதாக மாட்ரிட்டில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர், அவ்வாறு செய்வது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும் என்று வாதிட்டனர். இரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ தளங்களைப் பயன்படுத்துவதற்கான தனது முயற்சியில் பிரிட்டன் "ஒத்துழைக்கவில்லை" என்றும் டிரம்ப் விமர்சித்தார். ஆனால், அந்நாட்டின் மீது வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக அவர் வெளிப்படையான அச்சுறுத்தலை விடுக்கவில்லை. ஸ்பெயின் பிரதமர் கூறியது என்ன? ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், 10 நிமிட தொலைக்காட்சி உரையில், யுக்ரேன் மற்றும் காஸா போர்கள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இராக் போர் பற்றி பேசினார். மேலும் "போர் வேண்டாம்" என்பதுதான் ஸ்பெயின் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று கூறினார். ஸ்பெயின் மக்கள் மீது டிரம்பின் அச்சுறுத்தல் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான பொருளாதார நடவடிக்கைகளை தன் அரசு ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தார். "நாம் ஆயதுல்லாக்களின் பக்கம் இருக்கிறோமா என்பது கேள்வி அல்ல. நாம் அமைதி மற்றும் சர்வதேச சட்டங்களை ஆதரிக்கிறோமா என்பதுதான் கேள்வி." அரசாங்கத்தின் நிலைப்பாடு யுக்ரேன் மற்றும் காஸா மீதான அதன் நிலைப்பாட்டுக்கு ஒப்பானது என்று அவர் விளக்கினார். 2023-இல் ஹமாஸ் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் ராணுவ பதிலை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். காஸா விவகாரம் குறித்து ஐரோப்பாவில் மிகவும் வெளிப்படையாகப் பேசும் அரசாங்கங்களில் ஸ்பெயினும் ஒன்றாகும். இஸ்ரேலின் நடவடிக்கைகளை "இனப்படுகொலை" என்று வர்ணித்து, பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் செய்வதற்கு முன்பே பாலத்தீன அரசை ஸ்பெயின் அங்கீகரித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு "ஸ்பெயினுடன் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துகிறோம்" - டிரம்பின் அச்சுறுத்தலுக்கான எதிர்வினை என்ன?
  23. இலங்கை ஒருபோதும் இரையாகவோ, இடைத்தரகராகவோ மாறக்கூடாது Mar 4, 2026 - 04:24 PM எம்மைப் போன்ற ஒரு நாடு எக்காரணம் கொண்டும் இவ்வாறானதொரு போரில் ஒரு இடைத்தரகராகவோ அல்லது இரையாகவோ மாறக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (04) முற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், ஒரு நாடாகத் தலையிடக்கூடிய எந்தவொரு வகையிலும், அதாவது ஒரு கோரிக்கையாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ தலையிட்டு, இந்தப் போர் மோதல்களை நிறுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். "போரினால் உயிர்களை இழந்த அனைவருக்காகவும் நாங்கள் வருந்துகிறோம். அரச தலைவர்கள், இராஜதந்திரிகள், சாதாரண மக்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் என எந்தத் தரப்பிலாவது பாதிக்கப்பட்டவர்களாக மாறி அவர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்காகவும் நாங்கள் கவலையைத் தெரிவிக்கிறோம். இந்த போர் மோதல்கள் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வார்கள் என நாங்கள் நம்புகிறோம்." "இரண்டாம் உலகப் போரின் பின்னர் இவ்வாறான போர் மோதல்களை நிறுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நாங்கள் அந்த சர்வதேச நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ளோம். அந்த நிறுவனங்களுக்கும் தங்களது அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்தி இந்தப் போர் மோதல்களை நிறுத்துவதற்கான பொறுப்பு உள்ளது. புதிய தொழில்நுட்பம் மற்றும் இந்த அனைத்து விடயங்களுடனும், இது ஒரு புவியியல் எல்லைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது. அது எப்போது, எங்கு விரிவடையும் என்பதை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஒரு நாடாக நாங்கள் தலையிடக்கூடிய எந்தவொரு வகையிலும், கோரிக்கையாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ தலையிட்டு இந்த மோதல்களை நிறுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்." பெருமளவான இலங்கையர்கள் ஆபத்துக்குள்ளாகியுள்ளனர். உலகப் பொருளாதாரமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதை யார் ஆரம்பித்திருந்தாலும், இது இப்போது எந்தளவுக்கு விரிவடைந்திருந்தாலும், இது விரைவில் முடிவடையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். கேள்வி: ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அமெரிக்காவைக் கண்டு பயமா? ஈரான் தூதுவரும் இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு கோரியிருந்தார்....? மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகள் மாறிவிட்டனவா? அமைச்சரின் பதில்: "போர் ஒருபோதும் உலகிற்கு முன்னேற்றத்தைக் கொண்டுவரவில்லை. அரசியல் தேவைகளுக்கு மத்தியில் சாதாரண மக்களே பாதிக்கப்பட்டவர்களாக மாறினர். போரில் ஒரு பக்கத்தை ஆதரிக்க எவரும் முயற்சிக்கவில்லை. அது மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நிலைப்பாடு உங்களுடைய நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகாமல் இருக்கலாம். அது அரசாங்கத்தின் பிரச்சினை அல்ல. ஒரு நாடாக நாங்கள் இருக்கிறோம், அதாவது எங்களைப் போன்ற ஒரு நாடு இந்தப் போரில் இடைத்தரகர்களாகவோ அல்லது போரின் இரையாகவோ மாறக்கூடாது. எனவே, இந்தப் போர் மோதல்களைத் தவிர்ப்பதற்காக எங்கள் தரப்பில் சொல்லாலும் செயலாலும் செய்யக்கூடிய அனைத்தையும் செய்து வருகிறோம்." இலங்கை ஒருபோதும் இரையாகவோ, இடைத்தரகராகவோ மாறக்கூடாது
  24. போற போக்கில 160 அடிச்சாலே பெரிய விடயம் போல.
  25. அநியாயமான கொலை. FeTNA என்ற தமிழ் சங்கப் பேரவையில் சுறு சுறுப்பாக இயங்கும் ஒரு அருமையான குழந்தை. போன வருடம் வட கரோலினாவில் இவரைச் சந்தித்திருக்கக் கூடும் பெயர் அறியாமலே. ஆனால், ஈழத்தமிழ் பெண் அல்ல என நினைக்கிறேன். தமிழ் நாட்டவர். ஆனால், இவையெல்லாம் பொருட்டல்ல! அஞ்சலிகள்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.