Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. ஓம் 1983 ஜன் 1 க்கு முதல் இதை Citizen of UK and Colonies என்பார்கள். உதாரணமாக மலேயா, கென்யா, அவுஸ் நாட்டில் பிறந்தோர் எல்லாரும்CUKC ஸ் நேரடியாகவே. அதேபோல் 1948 இன் பின் குடியரசாகி விட்ட சகல கொமன்வெல்த் நாட்டு பிரசைகளுக்கும் (இந்தியா, இலங்கை) 01-01-1983 வரை பிரித்தானியாவில் வந்து எந்த அனுமதியும் இன்றி வாழ முடிந்தது. அனைவரும் British Subjects. ஆனால் 1960, 70 களில் வந்த வவுச்சர் நடைமுறை இந்த உரிமையை மழுங்கடித்தது. வெள்ளை நிறத்தோருக்கு சார்பாக மாற்றியது. இதை விட பகிடி….1948 க்கு முன் பிரித்தானியா சாம்ராஜ்யத்தின் பிரசைகள் அனைவரும் அது இலண்டனில் பிறந்த வெள்ளை எண்டாலும், இத்தாவிலில் பிறந்த மண்நிறம் எண்டாலும் ஒரே தகுதிதான் - British Subject.
  3. Today
  4. எனது தந்தையாரின் தாயாரிற்கு இலங்கை குடியுரிமை இருந்தது, அவரது தந்தைக்கு இங்கிலாந்து குடியுரிமை இருந்தது, எனது தந்தைக்கு இலங்கை குடியுரிமை நீண்டகாலமாக கிடைக்கவில்லை அதனால் அரச வேலைகளை இலங்கையில் பெறமுடியாது என கேள்விப்பட்ட நினைவுள்ளது.
  5. குவைத் 3 அமெரிக்க போர் விமானங்களை தவறுதலாக? சுட்டு வீழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது போரிற்கான ஏற்பாடு 4 வாரங்களிற்கானது என கூறப்படுகிறது (செய்திகளில் கூரப்படுபவை இந்த போர் 4 வாரங்களுக்கு மேலாகவும் நீடிக்கலாம்).
  6. ஓ… அப்படியா …. ஒரே ஆட்களை பற்றித்தான் கதைகிறமோ?
  7. எனது தந்தையார் பிறந்தது பர்மாவிலே, இது போன்ற கதையினை கேள்விப்பட்டுள்ளேன்.
  8. சங்கீதா போட்ட வெடியிலை... திரிசாவுக்கு, லக் அடித்த மாதிரி... நமக்கும்... நல்ல காலம் பிறக்கும் தானே. 😂
  9. அண்ணை மார்ச் மாதம் சனி மாற்றம் கொஞ்சம் அப்பிடி இப்பிடிதான் போல? தேவையில்லாத சச்சரவில் மாட்டி அவஸ்தைபடுவீர்கள் எண்டு வாசிச்ச நியாபகம் 😂
  10. ஏன் என்றால் நீங்கள் இணைப்பது முழுக்க யூடியூப் குப்பை, அல்லது முகபுத்தகத்தில் வெட்டி ஒட்டுவது. அதுவும் பச்சை பொய்களை அல்லது பிரச்சார வீடியோக்களை. ஒழுங்கா இரெண்டு பந்தி சொந்தமா கருத்து எழுத பஞ்சி - இதுகுள்ள நிர்வாகம் மேல முறைப்பாடு வேற 😂 அவரால் ஓடுதோ இல்லையோ… கிரிகெட் திரிக்கு மட்டும் வந்துவிட்டு போவபர்களால் ஓடவில்லை என்பது நிசம்😂. முன்பே எழுதியுள்ளேன் நீங்களும், பேர்த்தில் இருந்து வருபவரும் இப்ப ஒரு 5 வருசமா யாழுக்கு வாறதே நிர்வாகத்தை குறை சொல்லத்தான்😂.
  11. இன்று எனது நண்பன் செய்த வேலை. 😂
  12. இது எகிப்தின் லக்சோர் பிரமிட்டு கல்லறைகளில் சிகை கொற்றன் எழுதிய காலத்து தமிழ் என நினைக்கிறேன்.
  13. சொன்னான் எல்லே எல்லாமும் 2,3ம் தடவையில்தான் சரி வரும். டிசைன் அப்படி😂
  14. மன்னிக்கவும் பிராமணர் அல்லாத தமிழர் என எழுதி இருக்க வேண்டும். ரெட்டி, பதானி தமிழ்நாட்டுக்கு விளையாடிவர்கள். பாலாஜி, வாஷிங்டன் பிராமணர் என நினைக்கிறேன். நட்டு தமிழ் ஆனால் டெஸ்ட் விளையாடினாரா? இனத்தூய்மைவாதம் பேசவில்லை, ஆனால் தமிழ் நாட்டு கிரிகெட் சபையில் பிராமணர் ஆதிக்கம் மிக அதிகம். அதை அரிதாக தெலுங்கர் உடைப்பார்கள். ஏனையோருக்கு சான்ஸ் இல்லை. 2ம் உலக யுத்தகாலத்தில் எனது உறவினர் குடும்பம் ஒண்டு பர்மாவில் இருந்து கால் நடையாக இந்தியா வந்து பின் இலங்கை வந்தார்கள். ரங்கூனில் குதிரை அது இது எண்டு வசதியாய் இருந்த ஆட்களை கொண்டு வந்து யாழில் விட்டு விட்டார்கள். அப்போ அவர்கள் பாடுவார்களாம்…. வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே… நாடி நிற்குதே அநேக தீமையே… சோப்பும் இல்லை சீப்பும் இல்லை யாழ்ப்பாணத்திலே😂
  15. படிக்கல்ல, படிக்கல்ல என்று 100 எடுத்து விட்டார் அவர்....................🤣.
  16. நியாயமான கேள்வி. ஆனால், இந்தியாவுக்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையே போர்கள் இவ்விரு நாடுகளும் அணுவாயுதத்தினை வைத்திருக்கின்றன என்று தெரிந்தபின்னரும் ஆரம்பிக்கப்படவில்லையா? ரஸ்ஸியா இரண்டாவது மிகப்பெரிய அணுவாயுத வல்லரசு என்று தெரிந்த பின்னரும் பனிப்போரோ அல்லது நேரடியான போர்களை அந்நாடு முகங்கொடுக்கவில்லையா? இரு அணுவாயுத வல்லரசுகளான இந்தியாவும் சீனாவும் எல்லைகளில் இன்றுவரை மோதியே வருகின்றன. அணுவாயுதம் வைத்திருக்கும் நாடொன்றின்மீது தாக்குதல் நடத்துமுன்னர் ஒன்றிற்கு இருமுறை சிந்திப்பது அவசியம்தான். ஆனால் அதுவே போரினைத் தடுக்குமா என்பது கேள்விக்குறியே.
  17. சுமந்திரன் மைண்ட் வாய்ஸ்... சிற்றுவேஷன் சாங்க். என்னை மதுரையில கேட்டாக… மன்னார்குடியிலும் கேட்டாக… அந்த மாயவரத்தில கேட்டாக.... அனுரா மாத்தையாவும் கேட்டாக.....
  18. கோசான் எல்லோ உங்கள விட மேல போட்டார். அதுதான்......😁
  19. சுத்துமாத்து சுமந்திரனுக்கு.... தேர்தலில் வென்று பாராளுமன்ற உறுப்பினராகக் கூட முடியவில்லை. இதற்குள் நீதி அமைச்சர் ஆகின்ற ஆசையும்... எட்டிப் பார்க்குது. 😂 பேசாமல்... ஜனாதிபதி கதிரையில் போய் உட்க்கார வேண்டியதுதான். அப்பதான்... இந்த நோய், குணமாகும். 🤣 கேட்கிறவன் கேனையன் என்றால்.... எருமை, ஏரோப்பிளேன் ஓட்டுமாம். 😂 🤣
  20. கந்தப்புவ பிடிக்கேலாது என்று நினைத்தேன். அப்பிடியே மேல வந்திட்டியல்.
  21. இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலில் பிரித்தானியா இணையவில்லை Mar 2, 2026 - 09:43 PM - அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களில் பிரித்தானியா இணையவில்லை என பிரித்தானிய பிரதமர் கீயர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். ஈரானின் அதி உயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டமையானது, அந்தப் பிராந்தியத்தில் உள்ள இராணுவ மற்றும் பொருளாதார இலக்குகள் மீது ஈரான் மிகவும் துணிகரமான முறையில் தாக்குதல்களை நடத்த வழிவகுத்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றில் இன்று (2) உரையாற்றிய ஸ்டார்மர் இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது, கமேனியின் மரணம் இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதிலிருந்து ஈரானை நிறுத்தாது என குறிப்பிட்டுள்ளார். உண்மையில், அவர்களின் அணுகுமுறை முன்னரை விட மிகவும் துணிகரமானதாகவும், பொதுமக்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும் மாறி வருகின்றது எனவும் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலில் பிரித்தானியா இணையவில்லை
  22. ஜனாதிபதி வெறும் கண்காட்சியை விடுத்து செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் - மனோகணேசன் 02 Mar, 2026 | 06:50 PM (நா.தனுஜா) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி செய்கிறார். மலையகத்துக்குச்சென்று பெருந்தோட்டத்தொழிலாளர்களின் கைகளைப்பிடித்துப் பார்க்கிறார். ஆனால் பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், அரசியல்கைதிகள் விடுதலை, மலையக மக்களுக்கான காணி உரித்து என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே ஜனாதிபதி வெறும் 'கண்காட்சியை' விடுத்து, ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் என தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது : ஊடகத்துறையில் எனது நல்ல நண்பரான பாரதியும் நானும் இணைந்து எவ்வளவோ விடயங்களைச் செய்திருக்கிறோம். அவரது மிகப்பெரிய பலம் அவரது மௌனம் தான். நாமனைவரும் இணைந்து பேசிக்கொண்டிருக்கும்போது, பாரதி மாத்திரம் மௌனமாக இருப்பார். ஆனால் பேசி முடித்த பின்னர் தான், நாம் பேசிய சகல விடயங்கள் தொடர்பிலும் முகத்திலேயே பாவனைகளை வெளிப்படுத்தி அவர் தான் அதிகம் பேசியிருக்கிறார் என்று எண்ணத்தோன்றும். தமிழ்த்தேசியக்கட்சிகளின் ஒற்றுமை என்பது பாரதிக்கு எப்போதுமே இருந்த கனவாகும். அவர் எத்தகைய கனவு, நம்பிக்கை மற்றும் இலக்கில் விடாப்பிடியாக இருந்தார் என்று நினைத்துப்பார்க்கையில், இன்று வட, கிழக்கு தமிழ்த்தேசியக்கட்சிகள் மத்தியில் நிலவும் முரண்பாடுகள் கவலையளிக்கின்றன. மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று கட்சிகளை உள்ளடக்கிப் பதிவுசெய்து சுமார் 12 வருடங்களாக தமிழ் முற்போக்குக்கூட்டணியாக இயங்கிவரும் நாம் இந்த ஒற்றுமை விடயத்தில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறோம். அந்த ஐக்கியம் வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படும் கட்சிகள் மத்தியிலும் ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. மறுபுறம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி செய்கிறார். மலையகத்துக்குச்சென்று பெருந்தோட்டத்தொழிலாளர்களின் கைகளைப்பிடித்துப் பார்க்கிறார். ஆனால் பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், காணி விடுவிப்பு, அரசியல்கைதிகள் விடுதலை, மலையக மக்களுக்கான காணி உரித்து என்பன உள்ளடங்கலாக தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இப்போது வெறுமனே காண்பிக்கப்படும் கண்காட்சியை விடுத்து, ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் காண்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார். ஜனாதிபதி வெறும் கண்காட்சியை விடுத்து செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் - மனோகணேசன்
  23. பிறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டோம் போல...................🤣. 'வீடு நோக்கி ஓடி வந்த என்னையே நாடி நிற்குதே அநேக நன்மையே..........................'
  24. ஈரான் மசூதியில் பறக்கும் சிவப்புக் கொடி!; காரணம் என்ன? 02 Mar, 2026 | 06:17 PM ஈரானின் காம் நகரில் உள்ள ஜம்கரன் மசூதியின் உச்சிப் பகுதியில் சிவப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை திருப்பியுள்ளது. ஈரானின் முக்கியமான மத வழிபாட்டுத் தளமான இந்த மசூதியில் சிவப்பு நிறக் கொடி பறக்கவிடப்பட்டதற்கு ஒரு காரணமும் உண்டென கூறப்படுகிறது. மசூதியில் ஏற்றப்பட்ட சிவப்புக் கொடியானது கோபம், பழி தீர்க்கும் நோக்கத்தை குறிக்கிறது என்கின்றனர். அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் ஈரான் முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, ஈரான் மீதான தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. ஈரானின் உயர் தலைவரின் கொலைக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் தாக்குதலுக்கு உரிய தரப்பினர் பதில் சொல்லவேண்டும் என்பதை கோபத்துடன் ஈரான் வலியுறுத்துவதையும் பழிவாங்கத் துடிப்பதையும் வெளிப்படுத்தும் விதமாகவே இந்த சிவப்புக் கொடி மசூதியில் பறக்கவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (1) ஈரான் உயர் தலைவர் உயிரிழந்த செய்தியை அந்நாட்டு அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலி காமேனியின் இறப்பை அறிவித்து தமது வெற்றிக்களிப்பை வெளிப்படுத்தினர். இவ்வாறான போர்ச்சூழலில் அலி காமேனியின் ஆதரவாளர்களின் கோபத்தையும் பழிவாங்கும் உணர்வையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த சிவப்பு நிறக் கொடி மசூதியின் உச்சியில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஈரான் தாக்கப்பட்டதையடுத்து, அமெரிக்காவின் இராணுவ தளங்கள் காணப்படும் இடங்களிலும் அமெரிக்க ஆதரவு மத்திய கிழக்கு நாடுகளிலும் ஈரான் ட்ரோன், ஏவுகணை மூலம் பதில் தாக்குதல் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239990
  25. குவைத்தில் மூன்று F-15 அமெரிக்க போர் விமானங்களை வீழ்த்தியது யார்? நேரலை பட மூலாதாரம்,Fatemeh BahramiAnadolu via Getty Images 2 மார்ச் 2026, 01:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் சௌதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இரானின் புதிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ தற்போது "கட்டுப்பாட்டுக்குள்" கொண்டுவரப்பட்டுள்ளது. இரானின் "பாகுபாடற்ற மற்றும் பொறுப்பற்ற ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை" வளைகுடா நாடுகளும் அமெரிக்காவும் ஒரு கூட்டு அறிக்கையின் மூலம் கண்டித்துள்ளன. சனிக்கிழமையன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது இரான் மீது கூடுதல் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. போராட்டம் நடத்துவதற்காக மக்கள் வீதிக்கு வர வேண்டாம் என்று இரான் அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பிபிசி பாரசீக செய்தியாளர் தெரிவிக்கிறார். அதேசமயம், குவைத்தில் பல அமெரிக்கப் போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. இது குறித்து அமெரிக்க ராணுவம் ஓர் அறிக்கையில், "அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள் குவைத் வான் பாதுகாப்பு அமைப்பால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டன" என்று கூறியது. சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய கடல் வழியான ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக கூறியுள்ள இரான், அமெரிக்கா, பிரிட்டனுக்குச் சொந்தமான 3 எண்ணெய் கப்பல்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பட மூலாதாரம்,Majid SaeediGetty Images குவைத்தில் அமெரிக்க போர் விமானங்கள் விழுந்து நொறுங்கின "பல" அமெரிக்கப் போர் விமானங்கள் குவைத்தில் விழுந்து நொறுங்கியுள்ளதாகவும், இச்சம்பவத்திற்கான சூழல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குவைத் ராணுவம் தெரிவித்திருந்தது. தற்போது அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இரானுக்கு எதிரான அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கைக்கு ஆதரவாகப் பறந்து கொண்டிருந்த மூன்று F-15 போர் விமானங்கள், "தவறுதலாக குவைத் வான் பாதுகாப்பு அமைப்பால் வீழ்த்தப்பட்டது'' விமானங்களில் இருந்த ஆறு வீரர்களும் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுந்து நொறுங்கிய போர் விமானம் எப்படிப்பட்டது? கிறிஸ் பார்ட்ரிட்ஜ், பிபிசி ஒரு F-15E ஸ்டிரைக் ஈகிள் அல்லது அதன் ஒரு வகை போர் விமானம் எனத் தோற்றமளிக்கும் ஒரு வீடியோ காட்சியில், அந்த விமானம் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பக் கோளாறுக்குப் பிறகு, கட்டுப்பாட்டை இழந்து சுழன்று கொண்டு கீழே விழுவது தெரிகிறது. இதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இப்பகுதியில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் (US Central Command) இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், இரான் நடத்திய தீவிரத் தாக்குதலின் போது, குவைத்தில் பல அமெரிக்கப் போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியதாகவும், அந்த விமானங்களில் இருந்த வீரர்கள் பாராசூட் மூலம் குதித்து தப்பியதாகவும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. F-15E ஸ்டிரைக் ஈகிள் ரக விமானங்கள், வான் தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதல் ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படும் பன்முகத்தன்மை கொண்ட போர் விமானங்களாகும். இந்த மோதலில் அவை தற்போது எந்த மாதிரியான பணிகளில் ஈடுபட்டுள்ளன என்பது சரியாகத் தெரியவில்லை. இருப்பினும், இரானிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வழிமறித்து அழிக்கும் தற்காப்பு நடவடிக்கைகளில் இவை ஈடுபடுத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். இப்பணிக்காக இவை விமானத்தில் உள்ள வெப்பத்தை உணர்ந்து இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் (heat-seeking missiles), நீண்ட தூர ஏவுகணைகள் அல்லது இலக்கிற்கு மிக அருகில் இருந்தால் விமானத்திலுள்ள துப்பாக்கிகளைக் கூடப் பயன்படுத்தலாம். இவை தவிர லேசர் மூலம் வழிநடத்தப்படும் ராக்கெட்டுகள் போன்ற பிற ஆயுதங்களும் இவற்றில் உள்ளன. முதல் 24 மணி நேரத்தில் 1,000 இலக்குகள் மீது தாக்குதல் - அமெரிக்கா ஆபரேஷன் எபிக் ஃப்யூரியின் முதல் 24 மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட இரானிய இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட குண்டுவீச்சு விமானம், டிரோன்கள், போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அது பட்டியலிட்டிருந்தது. கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் மற்றும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கூட்டுத் தலைமையகம் உள்ளிட்ட தாக்குதலுக்குள்ளான இரானிய இலக்குகளையும் இது பட்டியலிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் (IDF) கருத்துகளை இது எதிரொலிக்கிறது, நடவடிக்கையின் முதல் நாள் "மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளை" செய்ததாக இஸ்ரேல் ராணுவம் முன்னதாக கூறியிருந்தது. பட மூலாதாரம்,ATTA KENARE AFP via Getty Images 'நோக்கம் நிறைவேறும் வரை தாக்குதல் தொடரும்' டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், "போர் நடவடிக்கைகள் முழு பலத்துடன் தொடரும். எங்கள் அனைத்து நோக்கங்களும் அடையப்படும் வரை தொடரும்." என்று கூறியுள்ளார். "துரதிர்ஷ்டவசமாக இன்னும் அதிகமான அமெரிக்க உயிரிழப்புகள் இருக்கும். அதை தவிர்க்க இயலாது. அவர்களின் மரணத்திற்கு அமெரிக்கா பழிவாங்கும். நாகரிகத்திற்கு எதிராகப் போரை நடத்திய பயங்கரவாதிகளுக்கு மிகவும் தண்டனைக்குரிய அடியை வழங்கும்" என்று அவர் தெரிவித்தார். "இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர், போலீசார் ஆயுதங்களை கீழே போட்டால் உயிர் தப்பலாம் அல்லது நிச்சயம் மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அது நிச்சய மரணம்" என்றார் அவர். "அணு ஆயுதங்களுடன் கூடிய இரத்தவெறி கொண்ட பயங்கரவாத ஆட்சியை" ஒழிக்க இரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் "சரியானவை" மற்றும் "அவசியமானவை" என்று அவர் குறிப்பிட்டார். "இந்த சகிக்க முடியாத அச்சுறுத்தல்கள் இனி தொடராது" என்று டிரம்ப் தெரிவித்தார். "சுதந்திரத்திற்காக ஏங்கும் அனைத்து இரானிய தேசபக்தர்களும் இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், தைரியமாக இருக்கவும் நான் அழைப்பு விடுக்கிறேன்," என்று டிரம்ப் கூறினார். "தைரியமாக இருங்கள், வீரத்துடன் இருங்கள், உங்கள் நாட்டைத் திரும்பப் பெறுங்கள். அமெரிக்கா உங்களுடன் உள்ளது." என்று அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,Donald Trump/Truth Social 'எங்கள் இராணுவத் திறனில் எதுவும் மாறவில்லை' ஏபிசி நியூஸிடம் பேசிய இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இரான் "சில தளபதிகளை இழந்திருந்தாலும்... எங்கள் இராணுவத் திறனில் எதுவும் மாறவில்லை" என்று கூறியுள்ளார். "கடந்த முறை இதுதான் நடந்தது," என்று அவர் கூறுகிறார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தாக்குதல்களை அவர் குறிப்பிடுகிறார். "எங்கள் உயர் தளபதிகளில் சிலரை அவர்கள் கொன்றனர், ஆனால் அவர்கள் மிக விரைவில் மாற்றப்பட்டனர். அடுத்த 12 மணி நேரத்திற்குள், எங்களால் பதிலடி கொடுக்கத் தொடங்க முடிந்தது," என்றார் அவர். "இந்த முறை, அது இன்னும் வேகமாக இருந்தது." அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது இன்னும் சாத்தியமா என்று கேட்கப்பட்டது. "நீங்கள் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவும்." என்று கூறிவிட்டு தொடர்ந்த அராக்சி, கடந்த வியாழக்கிழமை இரானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் "ஜெனீவாவில் மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளை" மேற்கொண்டனர், பின்னர் திங்களன்று வியன்னாவில் மீண்டும் ஒரு சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் "சமாதானத்தை எதிர்ப்பவர்கள் அதைக் கெடுக்க முடிவு செய்தனர்" என்றார். பட மூலாதாரம்,Getty Images மூன்று எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக இரான் தகவல் அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் "ஏவுகணைகளால் தாக்கப்பட்டு எரிந்து கொண்டிருக்கின்றன" என்று இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கூறியதாக இரான் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் பிரிட்டனும் இதனை உறுதிப்படுத்தவில்லை. UK கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தனது தினசரி அறிவிக்கையில், அந்தப் பகுதியில் "பல கடல்சார் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன" என்று கூறுகிறது. இரண்டு கப்பல்கள் "எறிகணைகளால்" தாக்கப்பட்டதாக அது கூறுகிறது, இதனால் தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் கப்பல்கள் எங்கிருந்து வந்தன அல்லது அவை எங்கு பதிவு செய்யப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை. வளைகுடா மற்றும் தற்போது மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்த நீரிணை உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தக பாதைகளில் ஒன்றாகவும், எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழியாகவும் பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு பட மூலாதாரம்,Getty Images வார இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆசியாவில் திங்கள்கிழமை காலை எரிசக்தி சந்தைகள் திறந்தபோது பிரெண்ட் கச்சா எண்ணெய் மற்றும் நைமெக்ஸ் லைட் ஸ்வீட் எண்ணெய் இரண்டும் 10% க்கும் அதிகமாக உயர்ந்தன. ஒரு கட்டத்தில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 9% உயர்ந்து $79.30 ஆக இருந்தது, அதே நேரத்தில் நைமெக்ஸ் சுமார் 8.5% அதிகரித்து $72.70 ஆக இருந்தது. இரானுக்கு வளைகுடா கவுன்சில் எச்சரிக்கை பட மூலாதாரம்,StringerAnadolu via Getty Images படக்குறிப்பு,இரான் தாக்குதலுக்கு இலக்கான பஹ்ரைனின் மனாமாவில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது பிரிவு தலைமையகம். இரானிய தாக்குதல்களால் ஏற்பட்ட பெரும் சேதம் குறித்து விவாதிக்க வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சௌதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் குவைத் ஆகியவற்றைக் கொண்ட இந்த அமைப்பு இரானின் தாக்குதல்களைக் கண்டித்தது. தங்கள் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை இரான் மீறுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாக்குதல்களை நிறுத்துமாறு இரானை கேட்டுக் கொண்டுள்ள அந்த அமைப்பு, பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த "தேவையான அனைத்து நடவடிக்கைகளும்" எடுக்கப்படும் என்றும் இரானை வளைகுடா கவுன்சில் எச்சரித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குவைத்தில் மூன்று F-15 அமெரிக்க போர் விமானங்களை வீழ்த்தியது யார்?
  26. நன்றி @கிருபன் தற்காலிக நாற்காலிதான் இறுதி முடிவுகள் எல்லாவற்றையும் மாற்றலாம். நன்றி @ஈழப்பிரியன் அண்ணா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.