All Activity
- Past hour
-
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
2nd Hand Nobel Prize. 😂
- Today
-
யாழில். முதியவர் படுகொலை – இருவருக்கு மரண தண்டனை.
யாழில். முதியவர் படுகொலை – இருவருக்கு மரண தண்டனை. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ் . மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் ,இன்றைய தினம் வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. தீர்ப்புக்காக வழக்கு மன்றில் நீதிபதி டி.எஸ் சூசைதாஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிரிகளான இருவரையும் மன்று நியாமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்றவாளிக்காக கண்டு இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் நிர்ணயிக்கப்படும் இடத்தில் குற்றவாளியின் உயிர் பிரியும்வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கிறது” என்று நீதிபதி தீர்ப்பளித்தார். https://athavannews.com/2026/1460747
-
கதை - 196 / கண்மணி டீச்சர் [ஆறு பகுதிகள் ]
கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 04 ஒரு நாள், இரவு அவர்கள் மீண்டும் ஆன்லைனில் இணைந்தனர் . அவளுடைய மகள் தூங்கிக் கொண்டிருந்தாள். இருவரின் வீடும் அமைதியாக இருந்தது. அதிகாரி: “உனக்குத் தெரியும்... சில சமயங்களில் நீயே உன் மகிழ்ச்சியை மறுக்கிறாய் என்று எனக்குத் தோன்றுகிறது.” கண்மணி உடனடியாக பதிலளிக்கவில்லை. அந்த வாக்கியத்தை அவள் முன்பே கேட்டிருந்தாள் - உறவினர்கள், அண்டை வீட்டார், அவளுடைய வாழ்க்கையைப் புரிந்து கொண்டதாக நம்பிய நண்பர்களிடமிருந்து கூட. கண்மணி: “நான் மகிழ்ச்சியை மறுக்கவில்லை. நான் மீண்டும் மீண்டும் சொல்வதை மறுக்கிறேன்.” அதிகாரி: “மீண்டும் மீண்டும் சொல்வது எது ?” கண்மணி: “மௌனமாக இருக்கச் சொல்வது, நான் ஒருவாறு சரிப்பண்ண வேண்டும் என்று சொல்வது.” அதன் பின் இருவரும் கொஞ்சம் பேசுவதை ஒரு சில நிமிடம் இடைநிறுத்தினர், அதிகாரி: “ஆனால் திருமணம் அப்படி, முன்பு போல் இருக்க வேண்டியதில்லை. அது வித்தியாசமாக நன்றாக அமையலாம்.” கண்மணி: “ஆம். அது வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் அது இல்லாதபோது, அதன் தாக்கம் சமமாகப் பகிரப்படுவதில்லை.” அதிகாரி: “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” கண்மணி: “ஒரு திருமணம் முறிந்துவிட்டால், அந்தப் பெண் என்ன தவறு செய்தாள் என்று மக்கள் கேட்கிறார்கள். அவள் போதுமான அளவு பொறுமையாக இருந்தாளா என்று கேட்கிறார்கள். அவள் போதுமான அளவு புரிந்துகொண்டாளா என்று கேட்கிறார்கள். அவள் போதுமான அளவு முயற்சி செய்தாளா என்று கேட்கிறார்கள்.” அவள் தொடர்ந்தாள் “அவர்கள் ஆண்களிடம் ஒரே மாதிரியான இப்படியான கேள்விகளைக் கேட்பதில்லை.” அதிகாரி: “அது சரி, ஆனால் எல்லா ஆண்களும் அப்படி இல்லை.” கண்மணி: “எனக்குத் தெரியும். ஆனால் எல்லாப் பெண்களையும் மீண்டும் ரிஸ்க் எடுக்கச் சொல்கிறார்கள். [I know. But all women are asked to take the risk again.]” அதிகாரி: “மீண்டும் ஒரு காதலுக்கு பயப்படுகிறீர்களா?” அவள் லேசாகச் சிரித்தாள், ஆனால் அவரால் அதைப் பார்க்க முடியவில்லை. அது ஆடியோ [audio] அழைப்பு என்பதால். கண்மணி: “இல்லை. நான் காதலை ரசிக்கிறேன். நான் பாசத்தை ரசிக்கிறேன். நான் ஆசையைக் கூட ரசிக்கிறேன்.” அதிகாரி: “அப்புறம் ஏன் ஒருவருடன் வாழ்க்கையை மறுக்க வேண்டும்?” கண்மணி: “ஏனென்றால் காதல் என்பது சரணடைதல் போன்றது அல்ல. மேலும் திருமணம் பெரும்பாலும் பெண்களிடமிருந்து முதலில் சரணடைதலைக் கோருகிறது.” அதன் பின் இன்னொரு மௌனம் சில நிமிடம் நீண்டது அதிகாரி: “நான் உன்னைத் தனிமையிலிருந்து காப்பாற்ற முடியும் என்று நினைத்தேன்.” அவள் பதில் மெதுவாக வந்தது. கண்மணி: “நான் தனிமையாக இல்லை. நான் என்னுடன் வாழ்கிறேன். என் குழந்தையுடன் வாழ்கிறேன்.” அதிகாரி: “அது... முழுமையடையவில்லையே?” கண்மணி: “இல்லை. முழுமையடையாதது நான் காணாமல் போன முன்னைய வாழ்க்கை .” அவர் குறுக்கிடவில்லை. கண்மணி: “நான் ஏற்கனவே என் குரல் சிறியதாக மாறிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். [I have already lived a life where my voice became small], என் தேவைகள் கூட இரண்டாம் பட்சமாக அமைந்த இடத்தில் [Where my needs were secondary.]" அவள் நிறுத்தி, பின்னர் மேலும் சொன்னாள்: “நான் அதில் இருந்து இப்ப தப்பித்து விட்டேன். நான் மீண்டும் என்னை இழக்கத் தயார் இல்லை.” நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் துளி/DROP: 2005 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/33375172355464649/?
-
தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு!
தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு! 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.கே. நதீகா வத்தலியத்த தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்தச் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திருத்தச் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் போது, இடைத்தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் மூலம் ஏதேனும் கைத்தொழில் அல்லது சேவையில் ஈடுபடுத்தப்படும் ஊழியர் தொடர்பில், அண்மைய தொழில் வழங்குநர் மற்றும் இறுதித் தொழில் வழங்குநர் உட்பட அனைத்துத் தொழில் வழங்குநர்களும் அச்சட்டத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுள்ளதாகத் தொழில் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருத்தச் சட்டத்தின் 4 ஆவது பிரிவின் படி, வரவு செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவுகளைச் சேர்ப்பதைத் தவிர, ஊழியர் ஒருவரால் 2025.03.31 ஆம் திகதியாகும் போது பெற்றுக்கொண்டிருந்த வேறு எந்தக் கொடுப்பனவையும் குறைந்தபட்ச சம்பளத்திற்காக ஈடுசெய்ய பயன்படுத்தக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பள அதிகரிப்பிற்கு அமைய ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF), மேலதிக நேரம் (Overtime), பணிக்கொடை (Gratuity), மகப்பேற்று நன்மைகள் மற்றும் விடுமுறைத் தினக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்துச் சட்டப்பூர்வ கொடுப்பனவுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கும் பொறுப்பு தொழில் வழங்குநர்களுக்கு உரித்தாகும். ஏதேனும் ஒரு வகையில், உரிய முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளாத தொழில் வழங்குநர்கள் இருப்பின், அது தொடர்பான முறைப்பாடுகளை cms.labourdept.gov.lk ஊடாக தொழில் திணைக்களத்தின் முறைப்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பில் பதிவிடலாம் அல்லது அருகில் உள்ள தொழில் அலுவலகத்தில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க முடியும். https://athavannews.com/2026/1460688
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
ஆகா.... நல்லாய் கதறுங்க. 😂 உங்கள் குரங்கு சேட்டைகளை அறுவடை செய்யும் நேரம் இது. இதைத்தான் பலரும் எதிர்பார்த்தார்கள். தமிழரசு கட்சியால் மக்களை திரட்டி, யாழ்ப்பாணத்தில் ஒரு பொங்கல் விழா வைக்க வக்கில்லை. தலைவர்களிடத்தில் ஒற்றுமை என்பது அறவே இல்லை. தினமும்... உங்களின் குழிபறிப்பு செய்திகளை பார்த்து மக்கள் வெறுத்து விட்டார்கள் என்பதைக் கூட... புரியாமல் இருக்கும் நீங்கள் எல்லாம் அரசியலுக்கே லாயக்கு அற்றவர்கள். தமிழரசு கட்சியை கலைத்து விட்டு, உங்கள் சொந்தத் தொழிலை பார்க்கவும். மக்கள்... உங்களை விட்டு பிரிந்து, வெகுதூரம் சென்று விட்டார்கள். அதற்கு முழுக் காரணமும் நீங்களும், சுமந்திரனும்தான்.
-
இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள்
இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள் (பகுதி III) 11 Jan 2026, 6:00 PM முரண்படும் மாநிலங்கள் ருக்மிணி எஸ். பகுதி -2 உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் உலகை ஆழமாகப் பாதிக்கின்றன. ஆயினும், இந்த முக்கியமான மாற்றங்கள் இந்தியாவுக்குள்ளும் உலக அளவிலும் போதுமான அளவு ஆவணப்படுத்தப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை. ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data For India) என்னும் தளத்தில் உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவு மூலங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்: மூன்று பகுதிகள் கொண்ட இந்தத் தொடரின் மூலம் மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த இன்றியமையாத இந்தியத் தரவுகளைத் தொகுத்து, இந்தியாவில் நடைபெறும் இதர சமூக-பொருளாதார மாற்றங்களின் பின்னணியில் வைத்து, உலகளாவிய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கிறோம். இதன் மூலம், புதிய ஆராய்ச்சிக்கான பகுதிகளையும், கொள்கை, விவாதங்களுக்கான திசைகளையும் அடையாளம் காண்கிறோம். முதலாம் பகுதியில், தற்போதைய தருணத்தை விவரிக்கவும், ஒப்பீட்டளவில் கவனிக்கப்படாமல்போன அண்மைக்காலத்து முக்கியத் தரவுகளையும் தொகுத்து அளித்தோம். இரண்டாம் பகுதியில், பிறப்பு விகிதங்கள் குறைவது தொடர்பான தரவுகளை ஆராய்ந்தோம். இந்தியா உலகளாவிய போக்குக்குள் இருக்கும் அதே நேரத்தில் விதிவிலக்காவும் உள்ளது என்று சுட்டிக்காட்டும் ஆய்வுகளையும் பகிர்ந்துகொண்டோம். மூன்றாம் பகுதியில், இந்திய மாநிலங்களுக்கிடையே உள்ள மக்கள்தொகைப் புள்ளிவிவர வேறுபாடுகளையும் அவை தற்போதுள்ள சமூக-பொருளாதார, அரசியல் பதற்றங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றன என்பதையும் பார்ப்போம். இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள் பல வழிகளில் நாட்டிற்கான பொதுவான சவால்களாக உள்ளன. உழைக்கும் மக்களால் கிடைக்கும் பலன் உச்சத்தைத் தொடுதல், தொற்றுநோயியல் மாற்றத்தில் ஏற்படும் முன்னேற்றம், பிறப்பு விகிதங்களின் சீரான சரிவு, முதியோர் எண்ணிக்கை அதிகமாவது குறித்த கவலை ஆகியவையே அந்தச் சவால்கள். உயர்தரத் தரவுகளின் துல்லியமான வாசிப்பின் அடிப்படையில், கொள்கையும் அரசியலும் ஒன்றிணைந்து இந்தச் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனினும், பல முக்கியப் பிரச்சினைகளில் நாட்டின் மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள் ஆழமான பிளவுகளைக் கொண்டுள்ளன. இது, மக்கள்தொகை விஷயத்தில் பிளவுபட்ட அரசியல் எதிர்வினைகளை எதிர்கொள்ளும் அபாயத்தில் இந்தியா உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்தப் பகுதியில், இந்தப் பிளவுகளையும் அவற்றின் தாக்கங்களையும் ஆராய்வோம். 1. மாற்றத்தின் காரணிகள் பிறப்புகள், இறப்புகள், இடப்பெயர்வு ஆகிய மூன்று பரந்த அளவிலான செயல்முறைகள் மக்கள்தொகை மாற்றங்களைத் தூண்டுகின்றன. இந்திய மாநிலங்களின் மக்கள்தொகையில் அவற்றின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள, இந்த மூன்று காரணிகளை முதலில் பார்ப்போம். கடந்த ஆண்டுகளுக்கான உலகளாவிய தரவுகளுக்கும், 2100ஆம் ஆண்டு வரையிலான கணிப்புகளுக்கும், நாங்கள் 2024ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் உலக மக்கள்தொகைக் கண்ணோட்டங்களின் திருத்தப்பட்ட ஆவணத்தைப் (United Nations World Population Prospects, 2024 Revision) பயன்படுத்துகிறோம். இந்திய மாநிலங்களின் 2023ஆம் ஆண்டு வரையிலான தரவுகளுக்கு, இந்தியாவின் மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System), தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (National Family Health Survey) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். 2023ஆம் ஆண்டிற்குப் பிந்தைய தரவுகளுக்கும், 2036ஆம் ஆண்டுவரையிலான இந்திய மாநிலங்களுக்கான கணிப்புகளுக்கும், 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் (Registrar General of India) செய்த மக்கள்தொகைக் கணிப்புகளைப் பயன்படுத்துகிறோம். இந்தியா 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பத்தாண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தவில்லை என்பதை இங்கு முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். i) கருவுறுதலில் வேறுபாடு கருவுறுதல் (Fertility) – ஒரு பகுதியில் ஒரு பெண் சராசரியாகப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை – தொடர்ந்து சரிவைக் கொண்டிருந்தாலும், இந்தக் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் நாம் பார்த்ததுபோல, இந்தியாவின் பணக்கார, ஏழை மாநிலங்களுக்கிடையே இந்த விஷயத்தில் வேறுபட்ட விகிதங்கள் நிலவுகின்றன. வரலாற்று ரீதியாக, இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்கள் வசதி படைத்தவை. இவை பெண்கள் கல்வி, பெண்கள் ஆரோக்கியம் உள்ளிட்ட பலவற்றில் சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இதன் விளைவாக, இந்த மாநிலங்களில், வளர்ச்சியில் பின்தங்கியுள்ள, ஏழ்மையான கிழக்கு, வடக்கு மாநிலங்களைவிட, கருவுறுதல் விகிதங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. மேலும், “பதிலீட்டுக் கருவுறுதல் விகிதத்தை” (Replacement Fertility) இந்த மாநிலங்கள் மிக விரைவாக அடைந்தன. மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate – TFR) என்பது ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாகப் பெற்றெடுக்கக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை. நாடுகளின் வளமை அதிகரிக்கும்போதும், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி ஆகியவை பெண்களுக்குச் சிறந்த முறையில் கிடைக்கும்போதும் கருவுறுதல் விகிதங்கள் குறையத் தொடங்குகின்றன. இது உலகம் முழுவதும் காணப்படும் நடைமுறை. ஒரு நாட்டின் TFR 2.1ஆகக் குறையும்போது, அதாவது பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றிருந்தால், அந்த நாடு “பதிலீட்டுக் கருவுறுதல்” நிலையை அடைந்துவிட்டதாக மக்கள்தொகையியலாளர்கள் கூறுகிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், இரண்டு பெரியவர்களுக்குச் சுமார் 2.1 குழந்தைகள் பிறக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தைகளில் சில குழந்தைப் பருவத்தில் அல்லது இளமைப் பருவத்தில் இறப்பதற்கான நிகழ்தகவுகளைக் கணக்கிட்டால், அந்தத் தம்பதியினர் தங்கள் வழ்நாளில் இரண்டு பெரியவர்களை உருவாக்குவார்கள். இரண்டுக்கு இரண்டு என்ற முறையில் மக்கள்தொகையின் அளவு மாறாமல் இருக்கும். இது ஒரு நாட்டின் மக்கள்தொகைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல். கருவுறுதல் இந்த நிலைக்குக் கீழே குறைந்தால், மக்கள்தொகை அதன் மொத்த எண்ணிக்கையில் குறையத் தொடங்கும். இந்திய மாநிலங்கள் அனைத்திலும் கருவுறுதல் குறைந்திருந்தாலும், அவற்றின் போக்குகள் பல பதிற்றாண்டுகளாக வேறுபடுகின்றன. பதிலீட்டுக் கருவுறும் விகிதத்தை இன்னும் அடையாத நான்கு மாநிலங்களும் இந்தியாவின் பின்தங்கிய பகுதிகளான இந்தியாவின் மையத்திலும் வடக்கிலும் உள்ளன. உத்தரப் பிரதேசம் 2025இலும் மத்தியப் பிரதேசம் 2028இலும் இந்த மைல்கல்லை அடைந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பதிலீட்டுக் கருவுறுதலை அடைய 2039வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரே மாநிலம் பிகார் மட்டுமே. (தரவு கிடைத்த மிகச் சமீபத்திய ஆண்டான 2023இற்குள் சத்தீஸ்கர் மாநிலத்திற்கான கணிப்புகள் 2022இல் அம்மாநிலம் இந்த மைல்கல்லை எட்டும் என்று மதிப்பிட்டிருந்தாலும், அது இன்னும் எட்டவில்லை). வடக்கு, கிழக்கு மாநிலங்களில் அதிக பிறப்பு விகிதங்கள் அதிக ஆண்டுகளுக்கு நீடிப்பதுதான் இந்தக் கருவுறுதல் வேறுபாட்டின் உடனடித் தாக்கம். இந்தியாவில் உள்ள மூன்று குழந்தைகளில் ஒருவர் (14 வயதுக்குட்பட்டவர்கள்) பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் வாழ்கிறார்கள். பிகாரின் குழந்தைகளின் முழுமையான எண்ணிக்கை 2036வரை (நமக்குக் கிடைத்ததிலேயே மிகத் தொலைதூரக் கணிப்பு ஆண்டு) குறைய வாய்ப்பில்லை. அதேசமயம், அனைத்துத் தெற்கு மாநிலங்களிலும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது. கருவுறுதலில் உள்ள இந்த வேறுபாடும் இந்த மாநிலங்களில் இது ஏற்படுத்தும் மக்கள்தொகைப் பெருக்கத்தின் தாக்கமும் இந்தியாவின் பணக்கார, ஏழை மாநிலங்களுக்கிடையே வளர்ந்துவரும் மோதலுக்குக் காரணமாக இருக்கிறது. ii) இறப்பு விகிதங்களில் மாற்றங்கள் இந்தியாவின் பணக்கார மாநிலங்கள் ஏழை மாநிலங்களைவிடச் சுகாதாரக் குறியீடுகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், இந்த மாநிலங்களில் பிறப்பு விகிதங்கள் குறைவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வயதின் அமைப்பு காரணமாக அதிக இறப்பு விகிதங்களும் காணப்படுகின்றன. தொற்றும் நோய்கள், பிரசவத்தின்போதும் குழந்தைப் பருவத்திலும் உள்ள சூழ்நிலைகள் ஆகியவை இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் மரணங்கள் குறைவாக இருப்பதற்குக் காரணமாக உள்ளன. உதாரணமாக, கேரளத்தில், குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate – IMR) இப்போது 5ஆகக் குறைந்துள்ளது (அதாவது, ஓர் ஆண்டில் உயிருடன் பிறந்த ஒவ்வொரு 1,000 குழந்தைகளுக்கும் 5 குழந்தைகள் இறப்பது). இது வடக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க நிலை. அதே சமயம், ஒப்பீட்டளவில் ஏழ்மையான மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவற்றில் IMR 37 ஆக உள்ளது. இது சூடானுக்குச் சமமான நிலை. இருப்பினும், இந்த ஏழை மாநிலங்களின் மக்கள்தொகையில் முதியவர்களின் பங்கு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், அவற்றின் ஒட்டுமொத்த இறப்பு விகிதங்கள் குறைவாகவே உள்ளன. வளர்ச்சியடைந்த மாநிலமான கேரளத்தில் உள்ள கச்சா இறப்பு விகிதம் (Crude Death Rate) — ஒவ்வொரு 1,000 பேருக்கும் நிகழும் இறப்புகளின் எண்ணிக்கை — மத்தியப் பிரதேசத்தை விஞ்சிவிட்டது. அதற்குக் காரணம், அதன் மக்கள்தொகையில் முதியவர்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதுதான். ஒப்பீட்டளவிலான அதிக இறப்பு விகிதங்களும் குறைந்த பிறப்பு விகிதங்களும் இணைந்து, இந்தியாவின் வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் மக்கள்தொகையைக் குறைக்க உதவுகின்றன. iii) மாநிலங்களுக்கிடையில் குறைந்த இடப்பெயர்வு கருவுறுதல் விகிதம், இறப்பு விகிதம் ஆகியவற்றுடன், மக்களின் நடமாட்டமும் மக்கள்தொகையின் அளவைப் பாதிக்கும் காரணியாகும். வளர்ச்சியடைந்த இடங்களில் பிறப்பு விகிதங்கள் குறையும்போது, அங்கே உழைக்கும் வயதுடையவர்கள் குடியேறுகிறார்கள். வயதானவர்களால் பொருளாதாரத்திற்குப் பங்களிக்க இயலாது; இந்த இழப்பும், அவர்களைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவும் ஏற்படுத்தும் பொருளாதாரத் தாக்கத்தை ஈடுசெய்ய உதவும் முக்கியக் காரணியாக உழைக்கும் மக்களின் இடப்பெயர்வு உள்ளது. இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் சர்வதேச இடம்பெயர்வு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இது மக்கள்தொகையைப் பாதிக்காது. உலக வங்கியின் கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒவ்வொரு 1,000 பேரில் ஒருவரைவிடவும் குறைவானவர்களே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதேசமயம் அண்டை நாடான இலங்கையில் ஒவ்வொரு 1,000 பேரில் மூன்றுக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர். இந்தியாவுக்குள் நடக்கும் உள்நாட்டு இடப்பெயர்வு பெரிய அளவு அதிகரித்துள்ளது. பத்து இந்தியர்களில் மூன்று பேர், தாங்கள் வசித்த இடத்திலிருந்து வெளியேறிக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வெவ்வேறு இடங்களில் வசிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் தரவு, இந்தியாவின் தேசிய மாதிரி ஆய்வின் 78ஆவது சுற்று “பன்முகக் குறிகாட்டிகள் கணக்கெடுப்பு” (Multi Indicator Survey – 2020-21) என்னும் ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்டது. எனினும், அதிக அளவிலான இந்த இடப்பெயர்வு, உழைப்பாளர்களை ஈர்க்கும் இந்தியாவின் வளமான மாநிலங்களின் மக்கள்தொகையையோ மக்கள்தொகையின் அமைப்பையோ கணிசமாக மாற்றும் அளவு தாக்கத்தைச் செலுத்தவில்லை. இந்தியாவிற்குள் இடம்பெயர்வோரில் பெரும்பாலோர் தாங்கள் முன்பு இருந்த இடத்திலிருந்து வெகு தொலைவிற்குச் செல்லவில்லை. அவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்குள் செல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது (இடம்பெயர்ந்தவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் இத்தகையவர்கள்). இடம்பெயர்ந்தவர்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் அதே மாநிலத்தில் உள்ள மற்றொரு மாவட்டத்திற்குச் செல்பவர்கள். இடம்பெயர்ந்தவர்களில் மற்றொரு மாநிலத்திற்குச் செல்பவர்கள் 10 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளனர். இந்த மாவட்டங்களுக்கு இடையேயான இடப்பெயர்வுகளுக்குப் பெண்களே முக்கியக் காரணமாக உள்ளனர். இந்தியாவில் பெண்களின் பிறந்த இடங்களுக்கு வெளியே அவர்களுக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. திருமணமான பெண்கள் கணவரின் குடும்பத்துடன் வாழச் செல்வது போன்ற சமூக விதிமுறைகளின் விளைவாகப் பெண்களே இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலோராக இருக்கிறார்கள். பத்து சதவீதத்துக்குச் சற்று அதிகமாக ஆண்கள் இடம்பெயர்கிறார்கள். இந்தியப் பெண்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் இடம்பெயர்கிறார்கள். பெண்கள் இடப்பெயர்வுக்கு மிகவும் பொதுவான காரணம் திருமணம். ஆண்களுக்கு வேலை தேடுவது. இந்த வகையிலான இடப்பெயர்வு, தரவுகள் கிடைத்த கடந்த 15 ஆண்டுகளில் மிகக் குறைவாகவே வளர்ந்துள்ளது. 2007-08இல் 28.5 சதவிகித இந்தியர்கள் இடம்பெயர்ந்தார்கள். இது 2020-21இல் 29.1 சதவிகிதமாக மட்டுமே உயர்ந்தது. 2. இந்த நடை முறைகளின் தாக்கம் மக்கள்தொகையில் காணப்படும் இந்த மூன்று போக்குகளின் விளைவாக, இந்தியாவின் மாநிலங்கள் சற்றே மாறுபட்ட திசைகளில் நகர்கின்றன. இது வள ஒதுக்கீடு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை தொடர்பான மோதல்களைத் தூண்டுகிறது. இது, மக்கள்தொகையின் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் அளவுகள், இந்த மாநிலங்களின் மக்கள்தொகையில் உள்ள வயதின் விகிதங்கள் ஆகிய இரண்டு அம்சங்களைக் குறிப்பாகப் பாதிக்கிறது. i) மாநில மக்கள்தொகைகள் 1970கள்வரை இந்திய மாநிலங்கள் முழுவதும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தன. 1980கள்முதல் இந்தியாவின் தெற்கு மாநிலங்களின் மக்கள்தொகை மத்திய, வடக்கு, கிழக்கு மாநிலங்களைவிட மிக மெதுவாக வளர்ந்துவருகின்றன. இதன் விளைவாக, 2011க்கும் 2036க்கும் இடைப்பட்ட இந்தியாவின் மொத்த மக்கள்தொகைப் பெருக்கத்தின் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய இரண்டு மாநிலங்களிலிருந்து மட்டுமே வந்திருக்கும். இதே காலகட்டத்தில் நாட்டின் மக்கள்தொகையில் அனைத்துத் தென்னிந்திய மாநிலங்களின் பங்கு குறைந்திருக்கும். ராஜஸ்தான் 2017இலும், பிகார் 2023இலும் மகாராஷ்டிரத்தை விஞ்சி, உத்தரப் பிரதேசத்திற்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக மாறிவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தென்னிந்தியவில் அதிக மக்கள்தொகை கொண்ட நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை உத்தரப் பிரதேசத்தைவிடக் குறைவாக இருக்கும். தெற்கு, மேற்கு மாநிலங்களின் மக்கள்தொகை வடக்கு, கிழக்கு மாநிலங்களைவிட மெதுவாக வளர்கிறது. அது மட்டுமல்ல; சில மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சி முழுவதுமாக நின்றுவிடும். இந்தியாவின் மக்கள்தொகை 2060வரை தொடர்ந்து வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடுத்த பத்தாண்டுகளில் மொத்த எண்ணிக்கையில் குறையத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ii) இந்தியாவுக்குள் தலைமுறை இடைவெளி தெற்கு, மேற்கு மாநிலங்கள் மெதுவாக வளர்வது மட்டுமின்றி அவற்றுக்கு மிக விரைவாக வயதாகவும் செய்யும். ஒவ்வோர் ஆண்டும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதுடன், பாதுகாப்பான வாழ்வும் கிடைக்கும் நிலையில் ஒரு நாட்டிற்கு வயதாகத் தொடங்குகிறது. சராசரி இந்தியரின் வயது 28க்கும் அதிகமாக உள்ளது. உலகின் சராசரி வயது 30க்கும் அதிகமாக உள்ளது. 2050க்குள் சராசரி இந்தியரின் வயது 38க்கும் அதிகமாக இருக்கும். இந்தியாவுக்குள் வடக்கிலும் தெற்கிலும் உள்ள சில மாநிலங்களுக்கிடையே பத்தாண்டுக் கால வேறுபாடு உள்ளது. இதில் கேரளம், தமிழ்நாடு ஆகியவை இந்தியாவின் மிகவும் வயது முதிர்ந்த மாநிலங்களாகவும், பிகார் மிக இளைய மாநிலமாகவும் உள்ளன. கேரளத்தில் உள்ள மக்கள்தொகையில் முதியவர்களின் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) பங்கு, பிகார் அல்லது உத்தரப் பிரதேசத்தில் இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகம். 2030களின் நடுப்பகுதியில் தமிழ்நாடு இந்தியாவின் மிக வயது முதிர்ந்த மாநிலமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விதமான மாநிலங்களிலும் பிறப்பு விகிதங்களிலும் இறப்பு விகிதங்களிலும் உள்ள வேறுபாடுகள் காரணமாக இந்த இடைவெளி மேலும் அதிகரிக்கும். விரைவில் சராசரித் தமிழ் ஆண் சராசரி பிகாரி ஆணைவிட 12 வயதுக்கும் கூடுதலாக வயதானவராக இருப்பார். கருவுறுதல், இறப்பு, இடப்பெயர்வு, நகரமயமாக்கல் ஆகியவை குறித்த தரவுகளைப் பயன்படுத்தி, 2011-2036 காலப்பகுதிக்கான மக்கள்தொகை மதிப்பீடுகளை வழங்குவதற்காக, இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட மக்கள்தொகைக் கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழுவின் அடிப்படையில் அமைந்த தரவுகள் இவை. நாடுகள் அல்லது மாநிலங்கள் குழந்தைகள் அல்லது முதியவர்களை அதிகமாகக் கொண்டிருக்கும்போது — அதாவது அவை மிக இளமையாகவோ அல்லது மிக வயதானவையாகவோ இருக்கும்போது —அது அவற்றின் பொருளாதாரம் கட்டமைக்கப்படும் விதத்தைப் பாதிக்கிறது. பொருளாதார ரீதியாகப் பார்க்கும்போது, மக்கள்தொகையில் உழைக்கும் வயதில் உள்ளவர்கள் உற்பத்திக்குப் பங்களிப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதேசமயம், பிறரைச் சார்ந்திருப்பவர்களுக்கு — குழந்தைகளும் முதியவர்களும் — அவரவர் வீட்டிலிருந்தும் மாநிலத்திடமிருந்தும் ஆதரவு தேவைப்படுகிறது. 2031ஆம் ஆண்டுக்குள், பிறரைச் சார்ந்திருக்கும் முதியோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டு மக்கள்தொகையில் கால் பங்கிற்கும் அதிகமாகவும் கேரளத்தில் மூன்றில் ஒரு பங்காகவும் இருக்கும். இந்த இரண்டு மாநிலங்களிலும் உழைக்கும் வயதுடையவர்களின் மொத்த எண்ணிக்கையும் குறையத் தொடங்கியிருக்கும். வடக்கு, கிழக்கு மாநிலங்களிலோ, உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை (15-59 வயது) இன்னும் வளர்ந்துவருகிறது. அடுத்த பத்தாண்டுகளில் தெற்கு மாநிலங்களின் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை சுருங்கும். அதேசமயம், மத்திய-வடக்கு மாநிலங்களில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை வளரும். மக்கள்தொகையியலாளர்களும் பொருளாதார வல்லுநர்களும் குறிப்பிட்ட இடத்தின் மக்கள்தொகையில் சார்பு விகிதம் என்னும் முக்கியக் காரணியைக் கண்காணித்துவருகிறார்கள். பிறரைச் சார்ந்திருப்பவர்களுக்கும் (குழந்தைகள் அல்லது முதியவர்கள்) உழைக்கும் வயதுடைய மக்கள்தொகைக்கும் உள்ள விகிதம்தான் சார்பு விகிதம். அதிக சார்பு விகிதம் கொண்ட மாநிலங்கள் அல்லது நாடுகளில், உழைக்கும் வயதுடைய மக்களின் மீதும் மாநில நிர்வாகத்தின் மீதும் நிதிச் சுமை அதிகமாக இருக்கும். வடக்கு, கிழக்கு மாநிலங்களின் பிறப்பு விகிதங்கள் இப்போது குறைந்துவருவதால் இவற்றில் வயதானோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அவற்றின் சார்பு விகிதங்கள் இறங்குமுகத்தில் உள்ளன. உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை வளர்ந்துவருவதால், சார்புடையவர்களை ஆதரிப்பதில் இம்மாநிலங்களின் திறன் அதிகரிக்கும். இருப்பினும், தெற்கு, மேற்கு மாநிலங்களில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, உழைப்பவர்கள் எண்ணிக்கை சுருங்குவதால், அவற்றின் சார்பு விகிதங்கள் சீராக உயர்ந்துவரும். 3. இந்திய ஒன்றியத்திற்கான தாக்கங்கள் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் வளர்ந்துவரும் இந்தப் பிளவு, இந்தியாவில் கொள்கை, அரசியல் ஆகியவற்றின் இரண்டு முக்கியப் பகுதிகளில் மோதலை ஏற்படுத்தியுள்ளது. வளங்களைப் பகிர்ந்தளித்தல், பிரதிநிதித்துவம் ஆகியவையே அந்த இரு பகுதிகள். தெற்கு மாநிலங்களில் மக்கள்தொகை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. பொருளாதார முன்னேற்றம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. தெற்கு மாநிலங்களிலிருந்து ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் வருவாயை எவ்வாறு மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிப்பது என்பது குறித்த மோதலுக்கு இது வழிவகுத்துள்ளது. இந்தக் கொள்கையின்படி அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கும் ஏழ்மையான நிலையில் உள்ள வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசின் வருமானத்தில் அதிகமாகப் பங்குகள் கிடைக்கும். ஒன்றிய அரசு திரட்டும் வரி வருமானம் மாநிலங்களுக்கு எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதை இந்தியாவின் நிதி ஆணையம் தீர்மானிக்கிறது. இது வளப் பகிர்வுக்கான சூத்திரம் (devolution formula) எனப்படுகிறது. தாங்கள் முக்கிய வருவாய் பங்களிப்பாளர்களாக இருந்தபோதிலும் நிதி ஆணையத்தின் வளப் பகிர்வுக்கான சூத்திரம் தங்களுக்குத் தண்டனை அளிக்கும் வகையில் இருப்பதாகத் தெற்கு மாநிலங்கள் வாதிடுகின்றன. குறிப்பாக 15ஆவது நிதி ஆணையத்தின் (2020-26) கீழ் தாங்கள் பாதிக்கப்படுவதாக அவை கூறுகின்றன. அதிக மக்கள்தொகையும் குறைந்த தனிநபர் வருமானமும் கொண்ட மாநிலங்கள் அதிகப் பங்கைப் பெறுவதால் தெற்கு மாநிலங்கள் குறைவான பங்கைப் பெறுகின்றன என்பது முக்கியமான புகார். 14ஆவது ஆணையத்தின் கீழ் ஐந்து தெற்கு மாநிலங்களுக்கான ஒருங்கிணைந்த பங்கு 18.6 சதவிகிதமாக இருந்தது. இது 15ஆவது நிதி ஆணையத்தின் கீழ் 15.8 சதவிகிதமாகக் குறைந்தது. மத்திய வரி வருவாயில் செஸ், சர்சார்ஜ் (cesses and surcharges) ஆகிய கூடுதல் வரிகளின் பங்கு வளர்ந்துவருகிறது. இது பிரச்சினைக்குரிய மற்றொரு புள்ளியாக அமைகிறது. ஒன்றிய அரசாங்கம் இந்தக் கட்டணங்களை (இது மொத்த வரி வசூல்களில் 10-15 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கலாம்) மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்வதில்லை. தெற்கு மாநிலங்களின் தலைவர்கள், சரக்கு மற்றும் சேவை வரிக்கும் (ஜிஎஸ்டி) நேரடி வரிகளுக்கும் தாங்கள் பெரிய அளவில் பங்களித்தாலும், அதற்கு ஈடான மறுபகிர்வு நிதியைப் பெறுவதில்லை என்றும் இது தங்களுக்குப் பாதகமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினையும் உள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பின் பிரிவு 81இன்படி, ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள்தொகைக்கு ஏற்ப விகிதாசாரமாக மக்களவையில் இடங்களைப் பெற வேண்டும்; மக்களவைத் தொகுதிகள் கிட்டத்தட்ட சம அளவில் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையையும் அரசியலமைப்பு ஒழுங்குபடுத்துகிறது. இது தற்போது 545ஆக உள்ளது. இந்த இடங்களை மாநிலங்களுக்கிடையில் விகிதாசாரமாகப் பிரிக்க வேண்டும். அரசியலமைப்பின் பிரிவு 82இன்படி, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகும் புதுப்பிக்கப்பட்ட மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இடங்களை மறுஒதுக்கீடு செய்ய வேண்டும். 1976இல் இந்தியாவில் அவசரகால நிலைமையின்போது குடிமைச் சுதந்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது 42ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புவரை இடங்களை மாற்றியமைப்பது நிறுத்திவைக்கப்பட்டது. 2002இல் நாடாளுமன்றம் 84ஆவது திருத்தத்தை நிறைவேற்றி, இந்த முடக்கத்தை 2026ஆம் ஆண்டுக்குப் பிந்தைய அடுத்த பத்தாண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை நீட்டித்தது. அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பிப்ரவரி 2027இல் நடத்தப்பட உள்ளது. அந்தக் கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுவரையறை (delimitation) நடக்கும்போது வடக்கு மாநிலங்களின் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அவற்றுக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டியிருக்கும். தெற்கு மாநிலங்களுக்கான இடங்கள் அவற்றின் மக்கள்தொகைக்கு ஏற்ப அமையும்போது அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க அளவில் குறையக்கூடும். இந்த வகையான மறுசீரமைப்பிற்கான வலுவான எதிர்ப்புக் குரல்களைத் தென் மாநிலங்கள் எழுப்பத் தொடங்கியுள்ளன. இது தங்கள் வளர்ச்சிக்கும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்கும் அளிக்கும் தண்டனை என்று அம்மாநிலங்கள் கூறிவருகின்றன. இந்திய ஒன்றியத்திற்கான இந்தச் சவால்களைத் தவிர, தெற்கு மாநிலங்கள் வளர்ந்துவரும் சார்பு விகிதங்களையும் இதனால் மாநில நிதி நிலைமையில் ஏற்படும் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக, எதிர்காலத்தில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை தெற்கைக் காட்டிலும் வடக்கிலிருந்து அதிகமாக வர அதிக வாய்ப்புள்ளது என்பதால், தெற்கு மாநிலங்கள் மாநிலங்களுக்கு இடையே இடம்பெயர்ந்தவர்கள் குறித்த தங்கள் கடுமையான விமர்சனங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். அதேசமயம், இந்தியாவின் வடக்கு மாநிலங்களின் தற்போதைய தொழிலாளர்களுக்கும் வருங்காலத் தொழிலாளர்களுக்கும் எதிர்கால வேலைத்தளங்களுக்குத் தேவையான திறன்களைச் சிறப்பாக வழங்குவதன் அவசியம் முன்னெப்போதையும்விட முக்கியமானதாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகைச் சிக்கல்கள் முக்கியமான நேரத்தில் வந்துள்ளன. இனப்பெருக்க உரிமைகள், பெண்களின் உரிமைகள், எதிர்காலத் தொழிலாளர் சந்தைகள் குறித்த அடிப்படையான சிந்தனைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இவை வழங்கக்கூடும். இவை நாடு முழுவதும் உள்ள குடிமக்களை உசுப்பிவிடக்கூடிய பொதுவான சவால்களாகும். ஆனால் இந்த மாபெரும் வேறுபாடுகளை அரசியல் லாபத்திற்காக இனரீதியான பிளவுகளை உருவாக்கவும் பயன்படுத்த முடியும். இந்தப் பிளவுகள் மேலும் அதிகரித்து, நீடித்த சேதத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அபாயகரமான அளவில் வெளிப்படையாக உள்ளது. இந்தியாவும் இந்தியர்களும் இந்த மக்கள்தொகைச் சிக்கல்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பது இந்திய ஜனநாயகத்தின் போக்கையும் தீர்மானிக்கும். கட்டுரையாளர்: ருக்மிணி எஸ். ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data for India) நிறுவனத்தின் நிறுவனர். CASIஇன் தொலைதூர ஆய்வாளர். மக்கள்தொகையியல், சுகாதாரம், வீட்டுக் குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இவர் முக்கியமாகக் கவனம் செலுத்தும் பகுதிகள். இதற்கு முன்பு இந்தியச் செய்தி ஊடகங்களில் தரவுசார் இதழியல் பிரிவுக்குத் தலைமை தாங்கியுள்ளார் Whole Numbers Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India (Westland, 2021) என்ற புத்தகத்தின் ஆசிரியர். தமிழில்: டி.ஐ. அரவிந்தன் நன்றி: பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இணையதளம் இந்தக் கட்டுரை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ‘இந்தியாவைப் பற்றிய மேம்பட்ட ஆய்வுக்கான மையம்’ என்னும் (Center for the Advanced Study of India, University of Pennsylvania) அமைப்பு நடத்தும் இணையதளத்தில் வெளியானது. https://minnambalam.com/indias-demographic-dilemmas-part-3/
-
🌿 மூன்றாம் ஆண்டு நினைவில் கந்தையா இராசலிங்கம் (25.01.2023)
🌿 மூன்றாம் ஆண்டு நினைவில் கந்தையா இராசலிங்கம் (25.01.2023) அத்தியடியின் மண்ணில் பிறந்து அடியெடுத்து வைத்தான் உலகம் நோக்கி, இடைக்காட்டின் காற்றில் வாழ்க்கை கட்டி டொராண்டோ வரை கடமையைச் சுமந்தான். எட்டு பிள்ளைகளில் மூன்றாவன் என்றாலும் எட்டுத்திக்கும் உறவுகளைச் சேர்த்தவன், சத்தமில்லா சேவையாய் சிறுமை இல்லா மனிதனாய் வாழ்ந்தவன். தொலைத்தொடர்பின் கம்பிகளில் நாட்டை இணைத்த கைகள் அவை, ஸ்ரீலங்கா தொலைத்தொடர்புத் துறையில் நேர்மை பேசும் உழைப்பின் அடையாளம். ஓய்வு வந்தபோதும் உறவுகளிலிருந்து ஓயவில்லை, பேரக்குழந்தைகளின் சிரிப்பில் தன்னை மீண்டும் கண்டுகொண்டான். இன்று மூன்றாம் ஆண்டு— காலம் உன்னைத் தொலைக்கவில்லை, நினைவுகளின் நடுவே நீ இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறாய். அண்ணா, உன் சிரிப்பு எங்களின் உற்சாகம், உன் நேர்மை எங்களின் வழிகாட்டி, உன் இல்லாமை— எங்களின் அமைதியான வலி. நீ சென்ற இடம் தூரமில்லை, நீ இருந்த இடம்—எங்கள் இதயம். ..................................................... Kandiah Rasalingam (25.01.2023) Three years have passed, yet you have not faded into time. You live on—in values, in laughter, and in the quiet strength you left behind. Forever remembered. Forever our elder brother. ................................................... கந்தையா இராசலிங்கம் (25.01.2023) அத்தியடியின் மண்ணில் பிறந்து உலகம் தழுவி வாழ்ந்தவன். உழைப்பில் நேர்மை, உறவுகளில் பாசம். சேவையாய் வாழ்ந்து சாந்தியாய் சேர்ந்தாய். நினைவுகளில் என்றும் நீ! ....................................................... 🌿 மூன்றாம் ஆண்டு நினைவில் கந்தையா இராசலிங்கம் (25.01.2023) https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid02RyPejZvLBab3pL6phRdNFMKj1C8A78UEbgmN3ZZEFRFbYk6ZFk3x4Gk3MwgoMRGol?
-
கருத்து படங்கள்
- வாகனங்களை இறக்குமதி மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது
வாகனங்களை இறக்குமதி மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது. நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாவை எதிர்பார்த்த போதிலும், இதன் மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர இதனைத் தெரிவித்தார். 90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு 3% வரி சேர்க்கப்படுவதாகவும், 5 மாத காலப்பகுதிக்குள் இது சுமார் 45% வரை அதிகரிப்பதாகவும், இதனால் நுகர்வோரே அந்த மேலதிக பணத்தைச் செலுத்த வேண்டி ஏற்படுவதாகவும் ரோஹித அபேகுணவர்தன இதன்போது கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரதியமைச்சர், வாகன இறக்குமதியின் போது இறக்குமதியாளர்கள் மீது இந்த மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளமையானது, நாட்டிற்குள் அந்நிய செலாவணியைத் தக்கவைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். https://athavannews.com/2026/1460686- தரம் 6 ஆங்கில பாடப்புத்தக விவகாரம்: பல கல்வி அதிகாரிகள் இடைநீக்கம்!
தரம் 6 ஆங்கில பாடப்புத்தக விவகாரம்: பல கல்வி அதிகாரிகள் இடைநீக்கம்! தரம் 6 ஆங்கில மொழி பாடத்திட்டம் குறித்த சர்ச்சை தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இதே பிரச்சினை தொடர்பாக மேலும் இரண்டு தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் ஜெனரல் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண, உள் விசாரணையின் முடிவு வரும் வரை தனது பதவியில் இருந்து விலகினார். பொருத்தமற்ற வலைத்தளத்தைப் பற்றிய குறிப்பை உள்ளடக்கிய உள்ளடக்கம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, புதிதாக அச்சிடப்பட்ட 6 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தின் விநியோகத்தை கல்வி அமைச்சு நிறுத்தி வைத்தது. தேசிய கல்வி நிறுவகம் தயாரித்து ஏற்கனவே அச்சிடப்பட்ட இந்தப் பாடப்புத்தகம் குறித்த முறையான புகாரைத் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460621- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
தேசிய மக்கள் சக்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். அந்த கூட்டங்கள் தொடர்பில் எமது கட்சிக்கோ ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுக்கோ மக்கள் பிரதிநிதிகளுக்கோ உரிய முறையில் அழைப்புக்களும் விடப்படவில்லை. அதேநேரம் அழைத்த சில கூட்டங்களுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. வெறுமனே அரச நிதியில் என்பிபி அல்லது ஜேவிபி கட்சியினர் மட்டுமே அந்த நிகழ்வுகளில் பங்கெடுத்து சோ காட்டி இருக்கின்றனர். எனவே அரச நிதியில் தேசிய மக்கள் சக்தியினர் சோ காட்டுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் என்பிபியினர் வடக்கிற்கு வந்து சோ அதாவது படம் காட்டுவதை நிறுத்த வேண்டும். இந்த விடயங்களை ஜனாதிபதி கவனத்தில் எடுத்து எதிர்காலத்திலெடுத்து செயற்பட வேண்டும். இந்த அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன் சுமந்திரன் தொடர்பில் விமர்சிப்பதோ கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியமோ இல்லை. அதேபோன்று இந்த விவகாரத்தில் அனுர தரப்பு குத்தி முறியவும் தேவையில்லை. மக்கள் மத்தியில் தமிழ் அரசுக் கட்சியை மலினப்படுத்தும் அவர்களின் கனவும் ஒருபோதும் பலிக்காது – என்றார். https://athavannews.com/2026/1460642- ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது!
ஜிந்துபிட்டி துப்பாக்கி சூடு; பெண்ணொருவர் உட்பட ஐவர் கைது! கடந்த ஜனவரி 16 அன்று கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் இரண்டு சிறு குழந்தைகள் காயமடைந்தனர். நேற்று (19) மற்றும் அதற்கு முந்தைய நாள் (18) ஆகிய இரு தினங்களிலும், ஜிந்துபிட்டிய மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் கடலோர பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சிறப்பு சோதனையின் போது இந்தக் குழு கைது செய்யப்பட்டது. அதன்படி, துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவியதற்காக 04 கிராம் 800 மில்லி கிராம் ஹெராயினுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் மேலும் மூன்று ஆண் சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபர்கள் 18, 33, 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என்பதுடன் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்கள் நேற்று (19) புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது ஒரு சந்தேக நபரை ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் மீதமுள்ளவர்களை ஜனவரி 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடலோர காவல்துறையினரும், கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. https://athavannews.com/2026/1460655- நோபல் பரிசு வழங்காத நோர்வே: பழிவாங்க கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்!
நோபல் பரிசு வழங்காத நோர்வே: பழிவாங்க கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்! 20 January 2026 கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது முயற்சிக்கும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகப்போர் மீண்டும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தமக்கு வழங்கப்படும் என்று ட்ரம்ப் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் பரிசு வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருக்கு டிரம்ப் அனுப்பிய குறுஞ்செய்தியில், "எட்டுக்கும் மேற்பட்ட போர்களை நிறுத்திய பிறகும் உங்கள் நாடு எனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை. எனவே இனி 'அமைதி' பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்போது அமெரிக்காவின் நலனுக்கு எது சரியானதோ அதைப்பற்றி மட்டுமே சிந்திப்பேன்," என்று குறிப்பிட்டுள்ளார். டென்மார்க் நாட்டின் சுயாட்சி அதிகாரத்திற்குட்பட்ட கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைக்கு வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில்,கிரீன்லாந்தின் நுக் (Nuuk) நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிரீன்லாந்தை விற்க சம்மதிக்காவிட்டால், பெப்ரவரி 1ஆம் திகதி முதல் டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது ஜூன் மாதம் முதல் 25% ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. "2026-இல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பொருட்களையும் வணிகத்தையும் பரிமாறிக்கொள்ளலாமே தவிர, மக்களை வியாபாரம் செய்ய முடியாது" என்று டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் லார்ஸ் லோக் ராஸ்முசென் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ள வியாழக்கிழமை அன்று அவசர உச்சி மாநாட்டை ஐரோப்பிய ஒன்றியம் கூட்டுகிறது. ட்ரம்பின் வர்த்தகப் போருக்குப் பதிலடியாக 93 பில்லியன் யூரோ மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிகள் மீது வரி விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, யுக்ரைன் போர் மற்றும் பாதுகாப்புச் செலவுகள் தொடர்பாக ஏற்கனவே நேட்டோ (NATO) அமைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கின் நிலப்பகுதியை மற்றொரு உறுப்பு நாடான அமெரிக்கா பலவந்தமாக உரிமை கோருவது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. https://hirunews.lk/tm/441611/denmark-not-awarding-nobel-prize-trump-is-eager-to-take-over-greenland-as-revenge- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
நீங்களும், சுத்துமாத்து சுமந்திரனும் காட்டுற "சோ" வை விட, இது பரவாயில்லை. போய்... நித்திரை குளிசைசையை போட்டுட்டு, குப்புற படுங்கோ.- ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்!
ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்! செய்திகள் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியதுடன், அதற்கு எதிர்க்கட்சி தயாராக இல்லாவிடில், கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்த முடியும் எனவும் தெரிவித்தார். எனினும் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியது ஆளும் கட்சி அல்ல எனவும் அது எதிர்க்கட்சியே எனவும் கூறியதுடன், அரசாங்கம் கூறுவதற்கமைய அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள எதிர்க்கட்சி தயாரில்லை எனவும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkm7z2jt0464o29ny1pimdpv- அலுவலகத்தில் பெண்களுடன் நெருங்கிய தொடர்பு; மூத்த இந்திய பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம்!
அலுவலகத்தில் பெண்களுடன் நெருங்கிய தொடர்பு; மூத்த இந்திய பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம்! தனது அலுவலகத்தில் பெண்கள் சிலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து காவல் துறை தலைமை பணிப்பாளர் (DGP) அந்தஸ்துள்ள மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரை கர்நாடக அரசு இன்று (20) பதவி நீக்கம் செய்தது. இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டவர் டிஜிபி ராமச்சந்திர ராவ் ஆவார். பொது அலுவலகத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் நடத்தை குறித்து அதிகரித்து வரும் சர்ச்சைகள் மற்றும் பொதுமக்களின் சீற்றத்திற்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த சர்ச்சை கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அலுவலகத்தை எட்டியதும், அவர் திங்களன்று சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து ஒரு அறிக்கையைப் பெற்றார். ஒரு நாள் கழித்து, அதாவது இன்று மாநில நிர்வாகம் மூத்த காவல்துறை அதிகாரியை இடைநீக்கம் செய்ய முடிவு செய்தது. சர்ச்சைக்கு மத்தியில், இந்த விடயத்தைப் பற்றி விவாதிக்க ராமச்சந்திர ராவ் இந்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்தார். எனினும், அந்த சந்திப்பு அவரது இடைநீக்கத்தைத் தடுக்க முடியவில்லை. https://athavannews.com/2026/1460632- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே – adminJanuary 20, 2026 தைப்பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்ற நிகழ்வுகளில், தமிழ்க் கட்சிகள் குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஓரங்கட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான சி.வி.கே. சிவஞானம் இக்கருத்தை முன்வைத்தார். வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி சபைகளையும் கொண்டுள்ள தமிழ் அரசுக் கட்சியோ அல்லது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளோ ஜனாதிபதி நிகழ்வுகளில் மேடைகளில் காணப்படவில்லை. அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டனர். “எங்களை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது, அந்த நிகழ்வுகள் JVP மற்றும் NPP யின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது. அதை அரசாங்க நிகழ்வாகப் பார்க்க முடியாது,” என சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். தன்னை ஒரு மாகாண சபை அவைத்தலைவராக அழைப்பதுமில்லை, அறிவிப்பதுமில்லை எனவும், மக்கள் வாக்குப் பெற்று வந்த பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கத்திற்கு நல்லெண்ண சமிக்கைகளை வழங்கிய போதிலும், வடக்கில் ஒருமித்த பயணம் சாத்தியமில்லை எனவும் சிவஞானம் சுட்டிக்காட்டினார். மேலும் “வடக்கு கிழக்கில் எமது பிரதிநிதிகளை ஓரம்கட்டி ஜனநாயக விரோத செயலை செய்வது ஆரோக்கியம் அல்ல. ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டவர்களை உரிய முறையில் ஏற்று செயற்படுங்கள்,” என ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்தார். தமது பிரச்சினைகள் தொடர்ந்தால் நாடாளுமன்றத்திலும், சர்வதேச ரீதியாகவும், ஊடகங்களுக்கும் செல்வோம் எனவும் அவா் எச்சரித்தார். https://globaltamilnews.net/2026/226891/- செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு
⚖️ செம்மணி புதைகுழியின் நிலத்தோற்றத்தை மாற்றக்கூடாது – நீதிமன்றம் உத்தரவு adminJanuary 20, 2026 யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் நடைபெற்று வரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, அந்த இடத்தின் தற்போதைய நில அமைப்பில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதைகுழி அமைந்துள்ள பகுதியில் ஏற்கனவே இருந்த வீதியை, நல்லூர் பிரதேச சபையினர் அண்மையில் செப்பனிட்டுள்ளனர். இது அகழ்வுப் பணிகளுக்கும் சாட்சியங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவடையும் வரை இப்பகுதியில் எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளோ அல்லது கட்டுமானங்களோ மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது எனவும் சட்டத்தரணிகள் கடுமையாக வலியுறுத்தினர். சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், நீதிமன்ற அனுமதியின்றி நிலத்தோற்றத்தில் எவ்வித மாற்றத்தையும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் மூலம், புதைகுழியில் மறைந்துள்ள உண்மைகளும் சாட்சியங்களும் சிதைக்கப்படாமல் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/226891/- சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் ; சரத் வீரசேகர
சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் ; சரத் வீரசேகர 19 Jan, 2026 | 09:40 PM (இராஜதுரை ஹஷான்) பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட ஒன்பது பேர் திங்கட்கிழமை (19) திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது கஸ்ஸப்ப தேரருக்கு சார்பாக சரத் வீரசேகர உட்பட பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும், போசிக்கப்பட வேண்டும் எந்நிலையிலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வெண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்காமல் அரசியலமைப்புக்கு முரணாக செயற்படுகிறது. திருகோணமலை பகுதியின் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்ட பகுதியில் புத்தர் சிலை வைத்ததற்கு எதிராக கரையோர பாதுகாப்பு அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அவ்வாறாயின் கடற்கரையோரங்களில் உள்ள சகல புத்தர்சிலைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அநுராதபுரத்துக்கு பௌத்த வழிபாடுகளுக்கு வருபவர்கள் மனதில் குரோதத்துடன் வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், தமிழ் அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்காகவும் பௌத்த தேரர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும், இல்லையேல் விளைவுகள் பாரதூரமானதாக அமையும் என்றார். https://www.virakesari.lk/article/236460- ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
அயர்லாந்தை வெற்றிகொண்ட இலங்கை உலகக் கிண்ண சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது Published By: Vishnu 19 Jan, 2026 | 11:35 PM (நெவில் அன்தனி) விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் அயர்லாந்தை 106 ஓட்டங்களால் மிக இலகுவாக இலங்கை வெற்றிகொண்டது. ஏற்கனவே ஜப்பானை வெற்றிகொண்ட இலங்கை 3.090 என்ற நிகர ஓட்ட வித்தியாசத்துடன் ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்று தனது சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது. இக் குழுவில் இடம்பெறும் அவுஸ்திரேலியா நாளைய போட்டியில் ஜப்பானை வெற்றிகொண்டால் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை விளையாடுவது உறுதிசெய்யப்படும். இன்றைய போட்டியில் விமத் தின்சார, சாமிக்க ஹீனட்டிகல ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் துல்னித் சிகேரா, ரசித் நிம்சார ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. அயர்லாந்துடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது. எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஜப்பானுக்கு எதிரான முதல் போட்டியில் சதங்கள் குவித்து உலகக் கிண்ண சாதனை நிலைநாட்டிய திமன்த மஹாவின்ச, விரான் சமுதித்த ஆகிய இருவரும் ஒற்றை இலக்கை எண்ணிக்கைகளுடனும் துல்னித் சிகேரா 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (59 - 3 விக்.) எனினும், அணித் தலைவர் விமத் தின்சார நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் கவிஜ கமகேயுடன் 80 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் சாமிக்க ஹீனட்டிகலவுடன் 100 ஓட்டங்களையும் பகிர்ந்து இலங்கையை பலமான நிலையில் இட்டார். விரான் சமுதித்த துரதிர்ஷ்டவசமாக 5 ஓட்டங்களால் சதத்தைப் பெறத் தவறினார். 102 பந்துகளை எதிர்கொண்ட விமத் தின்சார 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 95 ஓட்டங்களையும் கவிஜ கமகே 49 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகல ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஒலிவர் ரைலி 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 40.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் கெலம் ஆம்ஸ்ட்ரோங் (39), ரூபன் வில்சன் (32), அணித் தலைவர் ஒலிவர் ரைலி (31 ஆ.இ.) ஆகிய மூவரும் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் துல்னித் சிகேரா 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரசித் நிம்சார 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குகதாஸ் மாதுளன் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: விமத் தின்சார https://www.virakesari.lk/article/236471- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ணத்துக்கான பங்களாதேஷின் நிலைப்பாடு குறித்து ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது 19 Jan, 2026 | 06:00 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு சென்று ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க பங்களாதேஷுக்கு ஜனவரி 21வரை (நாளைமறுதினம்) ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது. டாக்காவில் கடந்த சனிக்கிழமை (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போது பங்களாதேஷுக்கு ஐசிசி இந்த காலக்கெடுவை விதித்தது என அறியக்கிடைத்ததாக கிரிக்இன்போ செய்தி வெளியிட்டுள்ளது. ஐசிசிக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் இடையில் ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தின்போது, தனது ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளை விளையாடத் தயார் எனவும் ஆனால் அவை இந்தியாவுக்கு வெளியே விளையாடப்படவேண்டும் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மீண்டும் தெரிவித்திருந்தது. ரி10 உலகக் கிண்ணத்தை இணை வரவேற்பு நாடாக நடத்தும் இலங்கை அவர்களது மாற்று இடமாகும். இந்தியாவுக்கு பயணிப்பதிலும் அங்கு விளையாடுவதிலும் பாதுகாப்பு கரிசனைகள் இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் சி குழுவில் இடம்பெறும் பங்களாதேஷின் போட்டி அட்டவணை மாற்றப்படமாட்டாது என ஐசிசி உறுதிபடத் தெரிவித்துள்ளது. தங்களது கரிசனை குறித்து ஜனவரி 4ஆம் திகதி பங்களாதேஷ் முதல் தடவையாக ஐசிசியுடன் தொடர்பாடலில் ஈடுபட்டதிலிருந்து இந்த பிணக்கு கடந்த 3 வாரங்களாகத் தொடர்கிறது. பங்களாதேஷ் தனது ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை கொல்கத்தாவில் பெப்ரவரி 7ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது. அதே மைதானத்தில்தான் இத்தாலியை பெப்ரவரி 9ஆம் திகதியும் இங்கிலாந்தை பெப்ரவரி 14ஆம் திகதியும் பங்களாதேஷ் சந்திக்கவுள்ளது. நேபாளத்துக்கு எதிரான பங்களாதேஷின் கடைசி போட்டி மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஒருவேளை, ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற இந்தியா செல்வதை பங்களாதேஷ் முற்றாக மறுத்தால் 1996இல் அவுஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் நடந்த கதியை பங்களாதேஷ் எதிர்கொள்ள நெரிடும் என கருதப்படுகிறது. அவுஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி 1996 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இலங்கைக்கு செல்ல முடியாது என விடாப்பிடியாக இருந்தன. இதனை அடுத்து அவுஸ்திரேலியா, மேற்கிற்தியத் தீவுகள் ஆகியவற்றுடனான இலங்கையின் போட்டிகளுக்கு போட்டியின்றி தலா 3 வெற்றிப் புள்ளிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அடுத்து 1996 உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே இலங்கை 6 வெற்றிப் புள்ளிகளை சம்பாதித்துக்கொண்டது. அந்த வருடம் தோல்வி அடையாத அணியாக இலங்கை உலக சம்பியனாகி இருந்தது. https://www.virakesari.lk/article/236459- ரஷ்யாவின் கம்சட்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு; 02 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவின் கம்சட்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு ; 02 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 3 20 Jan, 2026 | 11:44 AM ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) கடந்த ஜனவரி 12 ஆம் திகதி முதல் பெய்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு, அந்தப் பிராந்தியத்தையே உறைய வைத்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளை முறியடித்துள்ள இந்தப் பனிப்பொழிவை உள்ளூர் மக்கள் "பனி அபோகாலிப்ஸ்" (Snow Apocalypse) என அழைக்கின்றனர். பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி (Petropavlovsk-Kamchatsky) நகரில் 2 மீட்டருக்கும் அதிகமான பனி கொட்டியுள்ளது. சில இடங்களில் பனிச்சரிவுகள் 5 மீட்டர் (16 அடி) உயரம் வரை குவிந்துள்ளன. கட்டிடங்களின் கூரைகளில் இருந்து திடீரென சரிந்த பனிக் கட்டிகளில் சிக்கி இரண்டு முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நகரில் அவசரநிலை (State of Emergency) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பனி வீடுகளின் வாசல்களை மறைத்ததால், மக்கள் சுரங்கங்கள் தோண்டி வெளியே வர வேண்டிய நிலை ஏற்பட்டது. பல அடுக்குமாடி குடியிருப்புகளின் இரண்டாவது மாடி வரை பனி மூடியுள்ளது. பாடசாலைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு, பொது போக்குவரத்து முற்றிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி முதல் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, வீதிகளைச் சீரமைக்க மேலதிக இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டனர். போக்குவரத்து முடங்கியதால் கடைகளில் பால், ரொட்டி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது வீதிகள் மெதுவாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 21 ஆம் திகதிக்குள் முக்கிய வீதிகளை முழுமையாகச் சீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குளிர் காற்று வீசுவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236502- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
- யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
ஓம் சித்தி, பெரியம்மா எவருமே அசாதாரணமானோராக இருக்க வேண்டியதில்லை.- கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.
இது வெஸ்ட்பாங்க் இஸ்ரேல் பகுதி உடன்பாடு போன்ற ஒன்றிற்கு வரலாம் (வெஸ்ர்பாங்க் பலஸ்தீனம் ஆனாலும் நிர்வாக அலகால் இணைக்கப்பட்ட). - வாகனங்களை இறக்குமதி மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது
Important Information
By using this site, you agree to our Terms of Use.