Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. பாகிஸ்தான் தெரிவாகிவிட்டது என்றே நினைகிறேன். ஜி, உங்கினிக்கயும் 2 மிசை விழுந்ததாமே? பத்திரமா இருங்கோ.
  3. Today
  4. குறைந்தது 64 ஓட்டவித்தியாசங்களுக்குல் இலங்கையை பாகிஸ்தான் அணியை வென்றால் பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவாகிவிடும்
  5. விஜை-திரிஷா திருமணத்துக்கு அப்பாலான உறவின் டைம்லைன் இதுதானாம்.
  6. 150-0 எவ்வளவு அடிப்பினம். ஒரு 230 அடிப்பினமா. இன்னும் 36 பந்து இருக்கு..
  7. இன்னும் விக்கட் இழப்பின்றி 120 தாண்டிட்டினம். பெரிய ஓட்டம் அடிக்கப் போகினம் போல. ஒரு தாக்குதலோடதான் வந்திருக்கினம்.
  8. நீங்கள் போட்ட படத்தில் வகுப்பில் தனுசும், எஸ்கே யும் இருக்கிறார்கள். ஆனால் எஸ்கே டிவோர்ஸ் ஆகவில்லை. இமானின் டிவோசை ஆக்கிவைத்தார் என்பதே இமானின் குற்றச்சாட்டு. பிகு தனுசும், சிவாவும் கூட தெலுங்கர் என்கிறனர் மூ.பரிசோதனை தம்பிகள். எதற்கும் வடிவா விசாரிக்கவும்😂 பிள்ளைகள் 18 வயதுக்கு மேல் என்றால் அவர்களுக்கு வாழ்க்கை செலவை வழங்க தேவையில்லை. ஆனால் மனைவிக்கான ஜீவனாம்சம் என்பது பிள்ளைகளின் தற்போதைய வயதை விட, திருமண உறவின் காலம், இருவரின் பங்கு, தியாகம், விட்டு கொடுப்பு என்பது சம்பாஅனது. யூனிவசிட்டீ ஓப் இலண்டன் கல்லூரி ஒன்றின் பயோமெடிக்கல் பட்டதாரி, 27 வருடமாக ஏன் வேலை ஏதும் இல்லாமல் சென்னையில் வாழ்ந்தார் என்ற கேள்விக்கான பதில் முதன்மையானது. சங்கீதா இந்த டிவோர்சை இலண்டனில் போட்டிருக்க வேண்டும். பிழை விட்டுவிட்டார். என் கடன் பணி செய்து கிடப்பதே😂
  9. 91/0 பாகிஸ்தான் நல்ல ஆரம்பம், ஃபரான் ஆட்டம் சிறப்பு
  10. சரி. தான். ஆனால். பிள்ளைகளுக்கு. 18. வயதுக்கு. மேலேயும். மனைவி. உழைக்க. குடியவராகவும். இருந்தால். பணம். கொடுக்கத். தேவையில்லை. என்ற. தீர்ப்பை. வாசித்த. நினைவு. உண்டு. இந்தியா. நீதிமன்றமா. தெரியவில்லை. வாங்க. வாங்க. இந்த. திரியை. பத்து. பக்கத்துக்கு. மேல். ஒட. விட. வேண்டும். கோஷசானை. கேட்கிறேன். கேள்விகள். அவர். சுடச் சுடப பதில். தருவர். நீங்குளும் வந்தது. நன்றாக் உள்ளது.
  11. பெற்றோல் தட்டுப்பாட்டால்... மிகவும் சிரமப் பட்ட மக்கள், யாழ்ப்பாணத்தில் தான் உள்ளார்கள். 🙂
  12. செய்யலாம்தான் தான் தோழர். ஆனால்... ஊரில் உள்ளவர்களிடம் சொல்லப் போனால், பிய்ந்த செருப்பால் அடிப்பார்கள். 😂
  13. தனுசும்... இந்த வகுப்பில் இல்லை. 😃 டிவோஸ் எடுத்த தமிழர்களின் பெயரை, இதில் சேர்க்கவில்லைப் போலுள்ளது. 😂 இந்த வகுப்பு... அயல் மாநிலத்தவர்களுக்கானது. 🤣 நீங்கள்... மேலே உள்ளதை, சீரியஸாக வாசித்துள்ளீர்கள் போலுள்ளது. 😂
  14. என்ன பகிடி விடுகிறீர்கள். நீங்கள்தான் வெல்லப் போகிறீர்கள்
  15. இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் ! 28 Feb, 2026 | 02:09 PM இஸ்ரேல் இன்று (28) அதிகாலை ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தற்போது இஸ்ரேல் மீது எதிர்த் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து, இஸ்ரேலில் பாதுகாப்பு நிலைமை பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, பொதுமக்கள் பாதுகாப்பாக பதுங்கு குழிகளில் தஞ்சமடையுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஈரானில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று இஸ்ரேலிய ஹைபா பகுதியில் விழுந்து வெடித்துள்ளதாகவும் ஈரான் மீது அமெரிக்க மற்றுமொரு சுற்று தாக்குதலை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, அமெரிக்க இராணுவமும் ஈரான் மீது “பாரிய போர் நடவடிக்கைகளை” ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் !
  16. சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா : 13 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கை, இந்திய பக்தர்கள் பங்கேற்பு 28 Feb, 2026 | 03:11 PM வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. இவ்வாண்டு நடைபெற்ற திருவிழாவில் சுமார் 13,000 பக்தர்கள் கலந்து கொண்டு தீவினை நிரப்பினர். இவர்களில் சுமார் 4,000 பக்தர்கள் இந்தியாவிலிருந்தும், ஏறத்தாழ 9,000 பக்தர்கள் இலங்கையிலிருந்தும் வருகை தந்தனர். முதல் முறையாக 13ஆயிரத்து 364 ற்கு மேற்பட்ட பக்தர்களின் பங்குபற்றலுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளாரால் ஆலயக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கொடியேற்றத்தைத் தொடர்ந்து, சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றிருந்ததுடன் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தையர்களின் பங்குபற்றலுடன் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. தொடர்ந்து இன்றைய தினம் சனிக்கிழமை (28) காலை திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தையர்கள் இணைந்து, திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர். இலங்கை இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த ஆண்டு 13ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா : 13 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கை, இந்திய பக்தர்கள் பங்கேற்பு
  17. கமேனியின் அலுவலகங்களுக்கு தொடர் தாக்குதல்! இஸ்ரேலின் விசேட அறிக்கை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ள பின்னணியில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை நீக்குவதற்காகவே இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக காட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டு இராணுவ நடவடிக்கையாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னணியில் குறித்த கருத்து இஸ்ரேல் தரப்பிடம் இருந்து வெளியாகியுள்ளது. அணுசக்தி திட்டம் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதற்காக இப்பகுதியில் ஏராளமான போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை ஒன்று திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி ஈரான் தலைநகரில் நடந்த இந்த தொடர் தாக்குதல் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு, சைரன்கள் ஒலித்தவுடன், இஸ்ரேலிய இராணுவம், "இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு பொதுமக்களை தயார்படுத்துவதற்காக ஒரு முன்னெச்சரிக்கை எச்சரிக்கையை" வெளியிட்டதாகக் கூறியது. மேலும், இஸ்ரேலின் விமான நிலைய ஆணையம் அனைத்து பொது விமானங்களுக்கும் வான்வெளி மூடப்பட்டுள்ளதாக அறிவித்து. இதற்கிடையில், கட்டாரில் உள்ள அமெரிக்க தூதரகம் அனைத்து பணியாளர்களுக்கும் தங்குமிடம் வசதியை செயல்படுத்தியுள்ளது. மேலும் அறிவிப்பு வரும் வரை அதன் அனைத்து குடிமக்களும் இதைச் செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது. கமேனியின் அலுவலகங்களுக்கு தொடர் தாக்குதல்! இஸ்ரேலின் விசேட அறிக்கை
  18. பொலிஸ் கண்காணிப்பு பிரிவிற்கு நவீன தொழில்நுட்ப கெமரா வாகனங்கள்! Published By: Digital Desk 1 28 Feb, 2026 | 10:33 AM பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவிற்கு அமைவாக, நவீன தொழில்நுட்ப கெமரா அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட 02 வேன்களை பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவிற்கு கையளிக்கும் நிகழ்வு, பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் கடந்த 02ஆம் திகதி பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவு 2010.12.02ஆம் திகதியன்று நிறுவப்பட்டதுடன், அந்த காலப்பகுதியில் அதன் கடமைகளுக்காக கெமராக்கள் பொருத்தப்பட்ட 02 வேன்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த வாகனங்களின் செயல்பாடுகளை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுப்பதற்காக, 'பிரிமா' நிறுவனத்தின் பங்களிப்புடன் ஒரு வேன் நவீன தொழில்நுட்ப கெமராக்களுடன் மேம்படுத்தப்பட்டு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில்நுட்ப கெமரா அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட இரண்டு வேன்களுக்காக சுமார் 9,794,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை அவதானித்து வழக்கு தொடர்தல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கடமைகள் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிகழ்வில் பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் துஷார கம்லத், பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் பெரேரா, குறித்த பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஐ.எம்.என்.எல்.பீ. ஏநாயக்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொலிஸ் கண்காணிப்பு பிரிவிற்கு நவீன தொழில்நுட்ப கெமரா வாகனங்கள்!
  19. சக ஆசிரியைகள் பாலியல் புகார் - 9 ஆண்டுக்கு பிறகு நிரபராதி என நிரூபித்த ஆசிரியர் படக்குறிப்பு,ஆசிரியர் கோகில பாண்டியன் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 28 பிப்ரவரி 2026, 08:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'தவறான பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஓர் ஆசிரியர், மாணவர்களையும் சமூகத்தையும் எதிர்கொள்வது என்பது கற்பனை செய்ய முடியாத ஒன்று' என, பிப்ரவரி 19-ஆம் தேதியன்று ஆண்டிப்பட்டி நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது. முன்விரோதம் காரணமாக தன் மீது சக ஆசிரியைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியதாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில், இரு ஆசிரியைகள் உள்பட 5 கல்வி அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தண்டனைக்கு ஆளான அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தேனியில் உள்ள ஓர் அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்த கோகில பாண்டியன் மீது 2016-ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. "பாலியல்ரீதியாக தொல்லை தரும் வகையில் செயல்பட்டதாக சக ஆசிரியைகள் மற்றும் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி இடையூறு செய்வதாக பள்ளியின் சத்துணவு அமைப்பாளரும் புகார் அளித்ததாக செய்திகள் வெளிவந்தன" என பிபிசி தமிழிடம் கோகில பாண்டியன் தெரிவித்தார். புகார்களின் அடிப்படையில் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோகில பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் 'போலி கடிதம் தயாரித்த ஆசிரியைகள்' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் சத்துணவு பெண் அமைப்பாளரின் பெயரில் சக ஆசிரியைகள் போலியான கடிதத்தை தயார் செய்தது தெரியவந்ததாக கோகில பாண்டியன் தெரிவித்தார். "கடிதத்தை தான் எழுதவில்லை என மாவட்ட ஆட்சியரிடமும் சத்துணவு அமைப்பாளர் புகார் அளித்திருந்தார்'' என்கிறார், கோகில பாண்டியன். தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பான புகார் மனுக்களை அளிப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கோகில பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். "குற்றச்சாட்டு தொடர்பான புகார் மனுக்களைத் தருவதற்கு தொடக்கக் கல்வி அலுவலர் தொடர்ந்து மறுத்து வந்ததால் வழக்கு தொடர்ந்தேன்" என்கிறார் அவர். "ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகளிடம் இருந்து மனுக்களைப் பெற முடியவில்லை. 'ஆவணங்களைக் கேட்டு இடையூறு செய்வதால் தர முடியாது' என அதிகாரிகள் கூறிவிட்டனர்" என கோகில பாண்டியன் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடந்து கொள்வதாகக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் அவர் தொடர்ந்துள்ளார். "இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2019-ஆம் ஆண்டு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி முன்பாக ஆஜரான சத்துணவு பெண் அமைப்பாளர், 'நான் புகார் கடிதமே தரவில்லை' எனக் கூறிவிட்டார்" என்கிறார், கோகில பாண்டியன். பாலியல் புகார் சுமத்தியது ஏன்? "உங்கள் மீது பாலியல் புகார் சுமத்த வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது?" என, அவரிடம் பிபிசி தமிழ் கேட்டது. "என் மனைவியின் சொந்த ஊர் தேனி என்பதால் 2012 ஆம் ஆண்டு அங்குள்ள பள்ளியில் பணியில் சேர்ந்தேன்" எனக் கூறும் அவர், பள்ளியில் அங்கு சக ஆசிரியை ஒருவர், மாணவிகளிடம் தனிப்பட்ட வேலைகளைச் செய்வதற்கு கட்டாயப்படுத்தி வந்ததாகக் கூறுகிறார். "இதனை தலைமை ஆசிரியர் கண்டுபிடித்து ஆசிரியைக்கு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுத்தார். இதற்கு நான் சாட்சிக் கையெழுத்து போட்டதால் என் மீது அவர் கோபத்தில் இருந்தார்" என்கிறார். ''2015- ஆம் ஆண்டு வேறு பள்ளிக்கு அந்த ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருடன் நட்பில் இருந்த அறிவியல் ஆசிரியை ஒருவர் நான் பணியாற்றிய பள்ளிக்கு பணிமாறுதல் பெற்று வந்தார்'' "பணிமாறுதல் பெற்று வந்த ஆசிரியை, கழிவறைக்குச் செல்லும்போது நான்கு மாணவிகளை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதுகுறித்து தலைமை ஆசிரியை விசாரித்தபோது, கழிவறையில் தண்ணீர் ஊற்றுவதற்காக அழைத்துச் செல்வது தெரியவந்தது" என்கிறார் கோகில பாண்டியன். 'இவ்வாறு செல்லக் கூடாது' என மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை அறிவுறுத்தியதாகக் கூறும் அவர், "இந்த விவகாரம் தொடர்பாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராஜமுருகன் விசாரணை நடத்தினார். இதனை ஏற்காமல் அதிகாரியுடன் அந்த ஆசிரியை வாக்குவாதம் செய்தார்" எனக் கூறுகிறார். இதுதொடர்பாக மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் கல்வித்துறை நடத்திய விசாரணையில் ஆசிரியை தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். காவல்துறை நடத்திய விசாரணை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் தன்னை ஆசிரியர் கோகில பாண்டியன் உள்பட ஐந்து பேர் அவமதித்துவிட்டதாக காவல்நிலையத்தில் ஆசிரியை தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. "நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், விசாரணையில் பொய்ப் புகார் எனக் காவல்துறை அறிக்கை அளித்தது. இதன் தொடர்ச்சியாக ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டார்" என்கிறார் கோகில பாண்டியன். "இவரும் இதற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை ஆகியோர் இணைந்து தனக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட்டனர். இதற்காக சத்துணவு பெண் அமைப்பாளர் எழுதியதாக போலி கடிதம் ஒன்றை தயார் செய்துள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு உடந்தையாக மாவட்ட கல்வி அதிகாரிகள் இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "சத்துணவு அமைப்பாளர் என் மீது புகாரே கூறாத நிலையில் ஐந்தரை மாதங்களாக பணியிடை நீக்க நடவடிக்கைக்கு ஆளானேன்" எனக் கூறும் கோகில பாண்டியன், " வேறு பள்ளிக்கு என்னை இடமாறுதல் செய்தனர்" என்கிறார். பணியிடை நீக்கத்தை ரத்து செய்வதற்கு அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தற்காலிக பணியிடை நீக்க காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, தன் மீது தவறான பாலியல் குற்றச்சாட்டு கூறிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆண்டிப்பட்டி நடுவர் நீதிமன்றத்தில் கோகில பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். 'கற்பனை செய்ய முடியாதது' - நீதிபதி கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதியன்று வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஃபாசில் முகமது, ஆவணங்களை உருவாக்குதல், பதவியைத் தவறாகப் பயன்படுத்துதல், குற்றவியல் சதி ஆகியவை சான்றுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு ஆசிரியைகளும் தன்னை தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிக்க வைப்பதற்கான நோக்கத்தை மனுதாரர் தெளிவாக நிறுவியுள்ளதாக தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், 'தவறான பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறுவதன் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் நற்பெயர், சமூகம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார் ஊடகங்களில் வெளியானதை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதி ஃபாசில் முகமது, "தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே நடத்தப்படும் ஊடக விசாரணைகள் பெரும்பாலும் குற்றம் சுமத்தப்பட்ட நபரை குற்றவாளியாக சித்தரிக்கின்றன" என்கிறார். 'வழக்கின் மனுதாரர் பள்ளி ஆசிரியராக இருப்பதால் தவறான பாலியல் குற்றச்சாட்டுகளின் நிழலின்கீழ் மாணவர்களையும் சமூகத்தையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இது பரிதாபகரமானது மட்டுமல்ல, கற்பனை செய்ய முடியாதது' எனத் தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார். 'தன்னுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும் மனைவியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகும் ஒருவர், தனது குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என நினைக்கும் ஒருவரால் இதையெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியுமா?' எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தனி நபரின் கண்ணியம், குடும்ப வாழ்க்கை மற்றும் சமூக அந்தஸ்தையே பாதிப்பதாகக் கூறியுள்ள நீதிமன்றம், பாதிக்கப்படும் நபருக்கு ஆழ்ந்த மனவேதனையும் சரிசெய்ய முடியாத தீங்கும் ஏற்படுவதாகக் கூறியுள்ளது. 6 மாதம் முதல் 1 வருட சிறைத் தண்டனை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 'இதனை வெறும் நிர்வாகக் குறைபாடாக மட்டும் கருத முடியாது' எனத் தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதி ஃபாசில் முகமது, 'மனுதாரருக்கு எதிராக ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கையை தக்கவைத்துக் கொள்வதற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதைப் பார்க்க முடிகிறது' என்கிறார். "இந்த வழக்கில் 134 ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். வழக்கின் முடிவில் என் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது" எனக் கூறுகிறார் கோகில பாண்டியன். கூட்டுச்சதி, போலி ஆவணம் தயாரித்தல், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல், சட்டத்துக்குக் கீழ்படியாமல் தீங்கு விளைவிக்கும் நோக்கில் செயல்படுவது என தண்டனைக்குரிய செயல்களில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் ஈடுபட்டுள்ளதாக, நீதிபதி தெரிவித்துள்ளார். இதில், ஒவ்வொரு சட்டப் பிரிவுக்கும் 6 மாதம் முதல் 1 வருட சிறைத் தண்டனையும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 'அபராதம் செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 'மொத்த அபராதத் தொகையான 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயில் மனுதாரருக்கு ஏற்பட்ட வேதனைக்காக 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக தர வேண்டும்' எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். "வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. ஒவ்வொரு பிரிவுக்கும் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் பிணை பெற்றுவிட்டனர். சிலர் அபராதமும் செலுத்திவிட்டனர்" எனக் கூறுகிறார் ஆசிரியர் கோகில பாண்டியன். 'பாலியல் குற்றவாளியாக பார்த்தனர்' "என் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டபோது நான் வசிக்கும் கிராமத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. 'பள்ளியில் ஆசிரியருக்கு இது தான் வேலை' என்றெல்லாம் கேலி பேசினர். சக ஆசிரியர்கள் என்னை பாலியல் குற்றவாளியாக பார்த்தனர்" என்கிறார் அவர். "உறவினர்கள் வீட்டு நிகழ்வுக்கு சென்றால் பாலியல் புகாரைக் கூறி விசாரிப்பார்கள். அவர்களிடம், 'உண்மை என்றால் வருத்தப்படலாம்' என்று மட்டும் பதில் அளிப்பேன்" என கோகில பாண்டியன் தெரிவித்தார். குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிப்பதற்கு சுமார் பத்து ஆண்டுகளாக போராடியதாகக் கூறும் அவர், "ஆசிரியைகளுக்கு உடந்தையாக இருந்த ஒரு கல்வி அலுவலர் ஓய்வுபெற்றுவிட்டார்." எனக் கூறினார். "சட்டப் போராட்டம் நடத்தி வந்ததால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆசிரியர் பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும் என்னைப் பழிவாங்கியிருப்பார்கள். அனைத்தையும் எதிர்கொண்டு தான் வழக்கை நடத்தினேன்" எனவும் அவர் குறிப்பிட்டார். தண்டனை பெற்ற கல்வி அதிகாரி கூறுவது என்ன? வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களில் தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக இருந்த பி.என்.கணேஷ் தற்போது திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அவரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். இந்த விவகாரத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" எனக் கூறினார். நீதிமன்றத்தில் தங்கள் தரப்பில் சரியான வாதங்கள் முன்வைக்கப்படவில்லை எனக் கூறும் பி.என்.கணேஷ், "ஆவணங்கள் போலியானவை என தற்போது தான் நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் இருந்து துறைரீதியாக எனக்கு எந்தவித தண்டனையும் வரவில்லை" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "என்னுடைய நன்னடத்தையைப் பார்த்து மாவட்ட கல்வி அலுவலராக இருந்த என்னை திருநெல்வேலிக்கு முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்தனர்" எனக் கூறுகிறார். கோகில பாண்டியன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, "அதைப் பற்றி எதுவும் தெரியாது. என்னுடைய காலகட்டத்தில் இந்தச் சம்பவம் நடக்கவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷிடம் இந்த விவகாரம் தொடர்பாக பேசியபோது, "தவறு செய்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார். "சுமார் 100 பக்கங்களுக்கு மேல் தீர்ப்பு வெளிவந்துள்ளதாக அறிகிறேன். அதனை முழுமையாக படித்துப் பார்த்த பிறகு தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு சக ஆசிரியைகள் பாலியல் புகார் - 9 ஆண்டுக்கு பிறகு நிரபராதி என நிரூபித்த ஆசிரியர்
  20. கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல் புதிய இணைப்பு துபாய் மற்றும் அபுதாபியில் வெடிப்புகள் நடப்பதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி பின்வரும் நாடுகளின் விமான தளங்களை இலக்கு வைத்து ஈரான் தனது தாக்குதவை ஆரம்பித்துள்ளது. கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளம் குவைத்தில் உள்ள அல்-சேலம் விமானத் தளம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல்-தஃப்ரா விமானத் தளம் பஹ்ரைனில் ஐந்தாவது அமெரிக்கத் தளம் மேலும், சவுதி அரேபியாவின் ரியாத்திலும் குண்டுவெடிப்புகள் நடந்ததாக AFP செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில், ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. "இந்த தாக்குதல் தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்" என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறுகிறது. "இந்த அதிகரிப்பிற்கு பதிலளிக்கும் முழு உரிமையும் அதற்கு உள்ளது" என்று கூறுகிறது. முதலாம் இணைப்பு ஈரானிய ஏவுகணை ஒன்று கட்டாரின் வான்பரப்புக்குள் பாய்ந்த நிலையில் அதை தடுத்து வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி , குறித்த ஈரானிய ஏவுகணை Patriot வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் தடுக்கப்பட்டது என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் இருந்து ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பஹ்ரைனில் வெடிப்புகள் அத்தோடு குவைத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடந்ததாக தற்போது சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன. அமெரிக்க கடற்படையின் 5வது கடற்படையின் சேவை மையம் "ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது" என்று பஹ்ரைனின் தேசிய தொடர்பு மையம் தெரிவித்துள்ளது. இது அரசு நடத்தும் பஹ்ரைன் செய்தி நிறுவனம் (BNA) மேற்கோள் காட்டிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா, செங்கடல், அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளை உள்ளடக்கிய 5வது கடற்படையின் தலைமையகம் பஹ்ரைனில் உள்ளது. பஹ்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வீசப்படும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்க தூதரகம் குடிமக்கள் தஞ்சம் அடையுமாறு எச்சரித்திருந்தாலும், அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. Advertisement இந்தலையில் வளைகுடா நாடுகள் தங்களது வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளன. இதன்படி கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
  21. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போர்: கவலை வெளியிட்ட சீனா 28 Feb, 2026 | 12:25 PM பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள இராணுவ மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அண்டை நாடான சீனா கவலை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, பாகிஸ்தான் வெளிப்படையாக போர் பிரகடனம் செய்து ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் Mao Ning இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், “பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் சீனாவின் நெருங்கிய அண்டை நாடுகளும் நண்பர்களும் ஆகும். தற்போதைய மோதல் நிலைமை எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது,” என தெரிவித்துள்ளார். மேலும், இந்த மோதலால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் கவலைக்குரியவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். “பயங்கரவாதத்திற்கு எதிராக சீனா எப்போதும் உறுதியாக நிற்கிறது. இரு நாடுகளும் அமைதி மற்றும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகள் மூலம் வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், மேலதிக சேதங்களைத் தவிர்க்க உடனடி போர் நிறுத்த உடன்பாட்டை எட்ட வேண்டும்,” என்றும் மாயோ நிங் வலியுறுத்தினார். பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றம் பிராந்திய பாதுகாப்பு நிலைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போர்: கவலை வெளியிட்ட சீனா
  22. ஈரானிய இராணுவத்தின் முக்கிய தலையை வீழ்த்தியது இஸ்ரேல்!! இஸ்ரேல் நடத்திய தொடர் வான் தாக்குதல்களில், ஈரான் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அமீர் ஹடாமி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், குறித்த செய்தி தொடர்பில் ஈரானிய தரப்பில் இருந்து இதுவரை எந்த உத்தியோகபூர்வ பதிலும் வழங்கப்படவில்லை. இன்றையதினம் ஈரான் மீது தொடங்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையில், ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல இடங்கள் குறிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெடிப்பு சத்தங்கள் நகரம் முழுவதும் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும், நாட்டின் பிற பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில், “ஈரான் ஆட்சி ஏற்படுத்தும் உடனடி அச்சுறுத்தல்களை நீக்கி, அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்கள் குறிக்கோள்,” என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடுமையான பதிலடி அதன்போது, மேற்படி தாக்குதல்கள் ஈரானின் ஏவுகணை தொழில் மற்றும் கடற்படை திறன்களை தகர்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதற்கு பதிலளித்த ஈரான் அதிகாரிகள், விரைவில் கடுமையான பதிலடி வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரானிய இராணுவத்தின் முக்கிய தலையை வீழ்த்தியது இஸ்ரேல்!!
  23. இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் - கத்தார், பஹ்ரைனுக்கும் மோதல் பரவுகிறதா? நேரலை பட மூலாதாரம்,Getty Images 28 பிப்ரவரி 2026, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன, 'பெரிய அளவிலான போர் நடவடிக்கைகள்' நடைபெற்று வருவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இரான் மீது தங்களது நாடு முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகிறார். தலைநகர் தெஹ்ரான் உட்பட இரானின் இஸ்ஃபஹான், கோம், கரஜ் மற்றும் கெர்மான்ஷா ஆகிய ஐந்து நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன - அங்கிருந்து புகை மூட்டம் எழுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இரான் ஏவுகணைகளை வீசியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவிக்கிறது. படக்குறிப்பு,தெஹ்ரானின் ஜோம்ஹோரி சதுக்கம் தங்கள் மீதான ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக கத்தார் தகவல் டேவிட் கிரிட்டன் பிபிசி நியூஸ் மத்திய கிழக்கு கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிப்புச் சத்தங்கள் மற்றும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் கேட்டன. "நாட்டின் எல்லையை குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக" கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, எதிரி ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் பேட்ரியாட் அமைப்பு, இரானிய ஏவுகணையை இடைமறித்ததாக கத்தார் அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படை தளமான அல் உதெய்த் விமான தளம் கத்தாரில் உள்ளது. பஹ்ரைனுக்கும் மோதல் பரவுகிறதா? டேவிட் கிரிட்டன் பிபிசி நியூஸ் மத்திய கிழக்கு அமெரிக்க கடற்படையின் 5வது பிரிவின் தாயகமான பஹ்ரைன் தலைநகரில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன அவசர கால எச்சரிக்கை ஒலி அடுத்தடுத்து எழுந்ததைத் தொடர்ந்து, பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து தொடர்ச்சியாக பதிவிட்டுளள்து. மக்கள் அமைதி காப்பதுடன் அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அது கேட்டுக் கொண்டுள்ளது. படக்குறிப்பு,பஹ்ரைனில் எழும் புகை பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை சேவை மையம் 'ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானது' என்று பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பஹ்ரைனின் தேசிய தொடர்பு மையத்தை மேற்கோள் காட்டி அந்த ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தாக்குதலுக்கு எந்த நாட்டையும் காரணம் கூறாமல், "கூடுதல் விவரங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படும்," என்று அந்த செய்தி மேலும் கூறுகிறது. "சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும், அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகளில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்றும் அது கூறுகிறது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை பிரிவின் தலைமையகத்தின் பொறுப்பில் வளைகுடா, செங்கடல், அரபி கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகள் உள்ளன. பஹ்ரைனுக்கு ஏவுகணை மற்றும் டிரோன் அச்சுறுத்தல்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அமெரிக்க தூதரகம் தங்களது குடிமக்களை பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடையுமாறு ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனாலும், இந்த தாக்குதல் செய்தி குறித்து அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை. டிரம்ப் கூறியது என்ன? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட காணொளியில், அமெரிக்கா இரானில் 'பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை' தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். "நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க பலமுறை முயன்றோம். நாங்கள் அவர்களின் ஏவுகணைகளை அழித்து, அவர்களின் ஏவுகணைத் துறையை தரைமட்டமாக்கப் போகிறோம். அது முற்றிலுமாக…அழிக்கப்படும்" என்று டிரம்ப் கூறுகிறார். பெஞ்சமின் நெதன்யாகு கூறியது என்ன? பட மூலாதாரம்,EPA/Shutterstock இரான் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேல் குடிமக்களே, சிறிது நேரத்திற்கு முன்பு, இரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அகற்றுவதற்கான நடவடிக்கையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இறங்கியுள்ளன" என கூறியுள்ளார். மேலும், "எமது சிறந்த நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக நான் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 47 ஆண்டுகளாக, ஆயத்துல்லா ஆட்சி 'இஸ்ரேலுக்கு அழிவு', 'அமெரிக்காவிற்கு அழிவு' என்று கூச்சலிட்டு வருகிறது." "அது எங்களது ரத்தத்தைச் சிந்த வைத்துள்ளது, பல அமெரிக்கர்களைக் கொலை செய்துள்ளது மற்றும் தனது சொந்த மக்களையே படுகொலை செய்துள்ளது. இந்த பயங்கரவாத ஆட்சி, ஒட்டுமொத்த மனிதகுலத்தையே அச்சுறுத்த அனுமதிக்கும் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கக் கூடாது. எங்களது கூட்டு நடவடிக்கை, தைரியமான இரானிய மக்கள் தங்கள் விதியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான சூழலை உருவாக்கும்." "இஸ்ரேல் குடிமக்களாகிய உங்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், ஹோம் ஃபிரண்ட் கமாண்டின் (Home Front Command) உத்தரவுகளைக் கவனமாகக் கேளுங்கள். வரும் நாட்களில், 'சிங்கத்தின் கர்ஜனை' (The Roar of the Lion) என்ற இந்த நடவடிக்கையில், நாம் அனைவரும் சகிப்புத்தன்மையுடனும் மன உறுதியுடனும் இருக்க வேண்டியது அவசியமாகும்." என அவர் தெரிவித்துள்ளார். படக்குறிப்பு,இரானின் இஸ்ஃபஹான், கோம், கராஜ் மற்றும் கெர்மன்ஷா நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. 'இரானின் பதிலடி தாக்குதல்' "சிறிது நேரத்திற்கு முன்பு, இரானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் எல்லையை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் அடையாளம் கண்டுள்ளது" என்று இஸ்ரேல் ராணுவம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவ அறிக்கையில், "இரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல பகுதிகளில் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. ஹோம் ஃப்ரண்ட் கமாண்டின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." "இந்த நேரத்தில், இஸ்ரேலிய விமானப்படை அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்தவும், தேவையான இடங்களில் தாக்குதல் நடத்தவும் செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு என்பது காற்று புகாத அமைப்பு அல்ல, எனவே பொதுமக்கள் ஹோம் ஃப்ரண்ட் கமாண்டின் வழிகாட்டுதல்களை தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Fars படக்குறிப்பு,தெஹ்ரானில் இரண்டு இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக இஸ்லாமிய குடியரசு செய்தி முகமை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் முழுவதும் ஒலித்த சைரன் ஹ்யூகோ பச்சேகா பிபிசி செய்தியாளர், மத்திய கிழக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இன்று (பிப்ரவரி 28) காலை வெளியிட்ட அறிக்கையில், "இஸ்ரேல் முழுவதும் ஒரு சிறப்பு மற்றும் நிரந்தர அவசரநிலையை" அறிவித்துள்ளார். உள்ளூர் நேரப்படி சுமார் 08:15 மணிக்கு இஸ்ரேல் முழுவதும் சைரன் ஒலிகள் கேட்டன, இது சாத்தியமான ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தவும், போரைத் தவிர்க்கவும் அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தத்திற்கான ராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் இந்த இஸ்ரேலியத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் இரான் சில சலுகைகளை அளித்திருந்தது, இருப்பினும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்குமாறு அதன் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முன்னதாக இரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "பேச்சுவார்த்தைகள் நடக்கும் விதம் குறித்து நேற்று தான் 'மகிழ்ச்சியடைவில்லை'" என்று கூறினார். 2003-இல் அமெரிக்கா தலைமையிலான இராக் மீதான படையெடுப்பிற்குப் பிறகு மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க ராணுவக் குவிப்பிற்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார், ஆனால் இப்போது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்படக்கூடும் என்பதை விளக்க அவர் அதிகம் எதையும் செய்யவில்லை. இதற்கிடையில், அத்தகைய தாக்குதலுக்கு முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் என இரான் கூறியுள்ளது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,வெடிப்புச் சத்தங்கள் கேட்டதால், தெஹ்ரானில் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "இந்த 'முன்னெச்சரிக்கை தாக்குதல்' (pre-emptive strike) இஸ்ரேல் நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக" என்று கூறினார். கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தியது, இது 12 நாள் போருக்கு வழிவகுத்தது. அமெரிக்காவும் இறுதியில் மோதலில் இஸ்ரேலுடன் இணைந்து கொண்டு, இரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்தது. சமீபத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தனது நாட்டிற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து எச்சரித்திருந்தார், மேலும் இரானின் அணுசக்தித் திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒப்பந்தத்திற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். இரான் தனது ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிப்பதையும், காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்பொலா, இராக்கின் போராளிகள் மற்றும் ஏமனில் ஹூத்திகள் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள அமைப்புகளுக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதையும் நிராகரித்தது, அந்தக் கோரிக்கைகள் அதன் இறையாண்மையை மீறுவதாகக் கூறியது. பட மூலாதாரம்,Ehsan / Middle East Images / AFP via Getty படக்குறிப்பு,இரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறும், தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல் அவிவ் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் இது தொடர்பான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. "இப்பகுதியில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்," எனத் தெரிவித்தது. இத்துடன், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் ஹோம் ஃபிரண்ட் கமாண்ட் (Home Front Command) மூலம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றுமாறு குடிமக்களைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்துக் குடிமக்களும் பாதுகாப்புப் புகலிடங்களுக்கு அருகிலேயே இருக்குமாறும், தங்களது வீடுகள் அல்லது அலுவலகங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான இடங்கள் குறித்துத் தெரிந்து வைத்திருக்குமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. "மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலுக்குள் அவசியமற்ற அனைத்துப் பயணங்களையும் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்," என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இத்துடன், இந்தியத் தூதரகம் குடிமக்களுக்காக 24x7 உதவி எண் மற்றும் மின்னஞ்சலை வெளியிட்டுள்ளதுடன், அவசர காலங்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. உதவி எண்: +972-54-7520711 மின்னஞ்சல்: cons1.telaviv@mea.gov.in படக்குறிப்பு,இரானின் ஹசன் அபாத் சதுக்கம் வான் பரப்பை மூடிய இரான், இஸ்ரேல் சனிக்கிழமை காலை இரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது வான்வெளியை பொதுமக்களுக்கான விமானங்களுக்கு மூடியுள்ளது என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி முகமை, இரானின் வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் - கத்தார், பஹ்ரைனுக்கும் மோதல் பரவுகிறதா? நேரலை
  24. இந்த தாக்குதல் ஆரம்பித்ததின் பின்னர் யாழ்ப்பாண மக்கள் பெற்ரோலுக்கு வரிசைக்கு நிக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.