அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு, சூரியனை பார்க்க சன் கிளாஸ் அணிவதைப் போன்றதோர் அணுகுமுறையை ப்ரோபா-3 மேற்கொள்கிறது. இதன்மூலம் சூரியனை தெளிவாக ஆய்வு செய்ய ஐரோப்பிய விஞ்ஞானிகள் முயல்கின்றனர். ப்ரோபா-3 திட்டத்தின் மூலம், சூரியனுக்கு அருகில் இரண்டு செயற்கைக் கோள்களைச் செலுத்தி, செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவதன் மூலம், அதன் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா படலத்தை ஐரோப்பிய விண்வெளி நிலையம் ஆய்வு செய்யவுள்ளது. ப்ரோபா-3 (PROBA-3) செயற்கைக் கோள்கள் இந்திய விண்வெளி நிலையத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவியுள்ளது. பட மூலாதாரம்,ISRO இதற்காக ஏவப்படும் இரண்டு செயற்கைக் கோள்களின் மூலம், ஓர் ஆண்டில் 50 முறை செயற்கையாக…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
கார்களில் ஏற்படும் நம்மால் சரி செய்யப்படக்கூடிய கோளாறுகளை இவர் விளக்குகிறார். இதனை ஏற்பதும் விடுவதும் நமது இஷ்டமே. ஆனால் ஒன்று மெக்கானிக்கிட்ட போனால் உங்களுக்கு 3000 டொலர் செலவாகியிருக்கும் என்று அடிச்சு விடுறார் அதுதான் நெருடல். ஏனென்றால் நம்மவர்களில் சிலர் வைத்திருக்கும் காரே 3000 டொலர்தான் வரும். .................................................................. இயந்திரம் குலுங்குவது ஏன் அதை எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார் கார் கதவு , Fan belt எழுப்பும் சத்தங்களை சவர்க்காரத்தின் உதவியுடன் எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார். எஞ்சின் லைட் எரிந்தால் அதனை சரி செய்வதுபற்றி உருளைக்…
-
-
- 7 replies
- 845 views
-
-
பட மூலாதாரம்,TU VIENNA, O. DIEKMANN படக்குறிப்பு, அணுக்கரு கடிகாரங்கள், அணுக் கடிகாரங்களைக் காட்டிலும் துல்லியமானதாக இருக்கும் (சித்தரிப்பு படம்) எழுதியவர், அலெஹாண்ட்ரா மார்டின்ஸ் பதவி, பிபிசி நியூஸ் “கோடிக்கணக்கான ஆண்டுகள் ஓடினாலும் ஒரு நொடியைக்கூட தவறவிடாத கைக்கடிகாரத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.” “இன்னும் நாங்கள் அந்த அளவுக்குத் துல்லியமான ஒன்றைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் இந்த ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் அதை நெருங்கிவிட்டோம்,” என்று அமெரிக்காவிலுள்ள தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIST) ஆராய்ச்சியாளரும், போல்டரில் உள்ள கொலராடோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான இயற்பியலாளர் ஜன் யே தெரிவித்துள்…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கூடிய சக்கர நாற்காலி, பெருமூளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் புதிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது. பெருமூளைவாதத்தால் பாதிக்கப்பட்ட பலரால், சக்கர நாற்காலியை தாங்களாகவே இயக்க முடியாது. இந்த ஏஐ சக்கர நாற்காலி, அவர்கள் தலை அசைவை கொண்டே அவர்கள் செல்லும் திசையை அறிந்துக்கொள்ளும். முழு விவரம் காணொளியில்... https://www.facebook.com/bbcworldservice/videos/this-new-powered-wheelchair-uses-ai-and-is-helping-people-with-cerebral-palsy-ge/875565824602179/ https://www.bbc.com/tamil/articles/c5yr1l14empo
-
- 0 replies
- 318 views
- 1 follower
-
-
பெங்களூரு: விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலத்துக்கான கவுன்ட்டவுன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட்டுள்ளது. நாளை (செப். 2-ம் தேதி) விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1, சனிக்கிழமை (செப்.2) 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 குறித்த ஆர்வம் நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. நிலவில் கால் பதித்த கையுடன் சூரியனை ஆராய இஸ்ரோ விண்கலத்தை அனுப்புகிறது என்றதும், நெருப்புக் கோளமாக இருக்கும் சூரியனில் விண்கலம் எப்ப…
-
-
- 13 replies
- 1.7k views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், மிச்செல் ராபர்ட்ஸ் பதவி, பிபிசி நியூஸ் டெங்கு, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க விஞ்ஞானிகள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். ஆண் கொசுக்களின் கேட்கும் திறனை மட்டுப்படுத்தினால் அவை இனச்சேர்க்கையில் ஈடுபட முடியாது என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. பெண் கொசுக்கள் சிறகடிக்கும் ஓசையைக் கேட்டே ஆண் கொசுக்கள் ஈர்க்கப்படும். அவையிரண்டும் காற்றில் பறந்து கொண்டிருக்கும் போதே உடலுறவில் ஈடுபடும். கொசுக்களின் செவித்திறன் மரபணுவை மாற்றிய ஆராய்ச்சியாளர்கள், இந்த மாற்றத்திற்கு பிறகு ஆண் கொசுக்கள் ஒரே கூண்டில் இருந்தும் கூட மூன்று நாட்கள் ஆகியும் எந்த பெ…
-
-
- 5 replies
- 833 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது. எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி செய்திகள், டெல்லி சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது. நிலவுப் பயணத்தை தொடர்ந்து இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, வெள்ளி (venus) கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்புதல், நாட்டின் முதல் விண்வெளி நிலையத்திற்கான முதல்கட்ட பணிகளை தொடங்குதல் மற்றும் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான புதிய மறுபயன்பாட்டு கனரக ராக்கெட்டை உருவாக்குதல் போன்…
-
- 0 replies
- 502 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, காலநிலை மற்றும் அறிவியல் நிருபர் 2014-ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய விண்கல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். டைனோசரை அழித்த விண்கல்லைக் காட்டிலும் 200 மடங்கு பெரிய விண்கல் சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியை தாக்கியது. இதை பற்றி தெரிந்து கொள்வதற்காக, தென்னாப்பிரிக்காவில் இந்த விண்கல் விழுந்த பகுதிக்கு விஞ்ஞானிகள் சென்றனர். அங்கு அவர்கள் ஸ்லெட்ஜ் சுத்தியல்களை கொண்டு அந்த விண்கல்லின் சில பாறை துண்டுகளை எடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். மிகப்பெரிய…
-
- 0 replies
- 481 views
- 1 follower
-
-
மு.தவக்குமார் ஊடகக் கற்கைகள் துறை, யாழ். பல்கலைக்கழகம். ஒக்டோபர் 14, 1968 அன்று அப்பல்லோ 7 பயணத்தின் போது, நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து முதல் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்தினர். அப்பல்லோ 1 இன் பேரழிவைத் தொடர்ந்து அப்பல்லோ திட்டத்தில் முதல் ஆளுடன் அனுப்பப்பட்ட பணி அப்பல்லோ 7 பணியாகும். இந்த நேரடி ஒளிபரப்பு, தான் விண்வெளி ஆய்வு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் ஒரு முக்கிய மைல்கல்லைத் தொட்டன எனலாம். முதல் முறையாக விண்வெளி வீரர்களை விண்வெளியில் இருந்து நேரலையில் பார்க்கவும் கேட்கவும் உலகெங்கிலும் உள்ள மக்களை அது அனுமதித்தது. இந்த நிகழ்வு விண்வெளியில் இருந்து எதிர்கால ஒளிபரப்புகளுக…
-
- 0 replies
- 637 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NASA GODDARD கட்டுரை தகவல் எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகான் பதவி, பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளியில் உள்ள நட்சத்திர மண்டலங்களுக்கு நடுவே மிகப்பெரிய கருந்துளைகள் உள்ளன. ஆனால், இப்போது அவை அனைத்தையும் சிறிதாகத் தோன்றவைக்கும் அளவுக்கு இன்னும் பெரிய கருந்துளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை போன்ற மிகப் பிரமாண்டமான கருந்துளைகள் இருண்ட வானில் இன்னும் இருக்கக் கூடுமா? நம்முடைய நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை உள்ளது. அது நமது சூரியன் அளவுக்கு அகலமானது. ஆனால் அதிக கனம் கொண்டது. இதன் பாரிய ஈர்ப்பு விசை அதனைச் சுற்றியுள்ள விண்மீன் தூசிகளையும், வாய…
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அட்ரியன் முர்ரே பதவி, பிபிசிக்காக வடகிழக்கு ஐஸ்லாந்தில் இருந்து 5 மணி நேரங்களுக்கு முன்னர் நான் உலகின் எரிமலை ஹாட்ஸ்பாட்களில் ஒன்றான, வடகிழக்கு ஐஸ்லாந்தின், `கிராஃப்லா’ எரிமலைக்கு அருகில் இருக்கிறேன். சிறிது தூரம் தள்ளி என்னால் எரிமலையின் விளிம்பை பார்க்க முடிகிறது. கடந்த 1,000 ஆண்டுகளில் கிராஃப்லா சுமார் 30 முறை வெடித்துள்ளது, கடைசியாக 1980 களின் நடுப்பகுதியில் வெடித்தது. ஜார்ன் குமுண்ட்சன்(Bjorn Guðmundsson) என்னை ஒரு புல்வெளி மலைக்கு அழைத்துச் சென்றார். அவர் கிராஃப்லாவின் மாக்மாவில் (magma) துளையிடத் திட்டமிட்டுள்ள சர்வதேச விஞ்ஞானிக…
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மரியன் கோஹன் பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை. இரவு பகலை பற்றி பேசுகையில், வேற்றுக்கிரகவாசிகள் தூங்குவார்களா என்னும் கேள்வியும் எழுகிறது. உயிர்களை உருவாக்கக் கூடிய தன்மை கொண்ட பல கிரகங்களில் பகல்-இரவு சுழற்சி இல்லை என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதே சமயம், பூமியிலும் ஆழமான நிலத்தடி அல்லது கடலின் அடிப்பகுதியில் வாழும் உயிரினங்கள் ஒளியற்ற வாழ்வி…
-
- 0 replies
- 406 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெப்பக் காற்று தொடர்ந்து கிடைக்காவிட்டால் புயல் வலுவிழந்துவிடும் கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் புயல் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. அதைப்பற்றித் தெரிந்துகொள்வோம். கடலில் உள்ள வெப்பக் காற்று தான் புயலாக மாறுகிறது என்பது புயலுக்கான ஒற்றை வரி விளக்கமாகும். கடலில் உள்ள வெப்பமான ஈரப்பதம் கொண்ட காற்று கடல் பரப்புக்கு மேல் எழும்பும். அப்படி வெப்பக் காற்று மேல் எழும்பும் போது, அதன் கீழே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். சுற்றியுள்ள அதிக காற்றழுத்தம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்குள் நகரு…
-
- 0 replies
- 394 views
- 1 follower
-
-
பூமிக்கு வந்த ராக்கெட் பாகத்தை 'கேட்ச்' பிடித்த ஏவுதளம்: ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் சாதனை பட மூலாதாரம்,SPACEX கட்டுரை தகவல் எழுதியவர், எஸ்மி ஸ்டாலார்ட் பதவி, காலநிலை மற்றும் அறிவியல் நிருபர், பிபிசி நியூஸ் 14 அக்டோபர் 2024, 09:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் பூஸ்டர் பூமியில் அது ஏவப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பிய நிலையில், அதன் ஒரு பகுதியை லான்ச்பேட் 'கேட்ச்’ பிடிப்பது போல கைப்பற்றியது. உலகளவில் நடத்தப்படும் விண்வெளி ஆராய்ச்சிகளில் இப்படி …
-
- 1 reply
- 494 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ISRO கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனப்படும் இந்திய விண்வெளி மையத்தை இஸ்ரோ 2035ஆம் ஆண்டு நிறுவத் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போதே நடைபெற்று வருகின்றன. இந்த மையத்தின் முதல் பாகம் 2028ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் தெரிவித்திருந்தார். இதற்காக அமைச்சரவையின் அதிகாரபூர்வ ஒப்புதல் கடந்த மாதம் வழங்கப்பட்டது. முதல் பாகம் விண்ணில் செலுத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் கழித்து இந்தியா தனது விண்வெளி மையத்தை முழுமையாக இயக்கத் தயாராக இருக்கும். கடந்த 1984ஆம் ஆண்டு சோவியத் நாட்…
-
- 0 replies
- 438 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, டார்ட் விண்வெளி திட்டத்தின் மாதிரிப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர் 8 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 அக்டோபர் 2024 அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா, 2022-ல் ஏவிய 'டார்ட்' விண்கலம் விண்ணில் உள்ள ஒரு சிறுகோளில் மோதியது அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது அந்த சிறுகோளைப் பார்வையிட ஒரு விண்கலம் சென்று கொண்டிருக்கிறது. ஆம், திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி 10:52 மணிக்கு (15:52 BST) புளோரிடாவில் உள்ள கேப் கேனவரலில் இருந்து `ஹெரா கிராஃப்ட்’ ( Hera craft) ஏவப்பட்டது. பூமியைத் தாக்கும் ஆபத்தான சிறுகோள…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
ஈயின் மூளையில் என்ன இருக்கிறது? அதை கொல்வது ஏன் கடினமாக உள்ளது? பட மூலாதாரம்,MRC/NATURE படக்குறிப்பு, ஈயின் மூளை எந்தளவுக்கு சிக்கலானதாக உள்ளதோ அந்தளவுக்கு அழகாகவும் உள்ளது. அதன் மூளையில் 1,30,000 செல்களும் 5 கோடி இணைப்புகளும் உள்ளன கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஈக்களால் நடக்க முடியும், வட்டமிட முடியும், ஆண் இனம் தன் இணையை ஈர்க்க காதல் பாடல்களை கூட பாட முடியும் - இவை அனைத்தையும் ஊசி முனையைவிட சிறிய மூளையின் உதவியால் செய்கின்றன. 'ஈ'யின் மூளையின் வடிவம் மற்றும் அதன் 1,30,000 செல்கள் மற்றும் 5 கோடி இணைப்புகள் குறித்து முதன்மு…
-
- 0 replies
- 502 views
- 1 follower
-
-
ஒரு சிறு துகள் கல்லானது: பிளாட்டின மோதிரத்தில் மாணிக்க கல்லை இவர் வளர்த்தது எப்படி? பட மூலாதாரம்,UNIVERSITY OF THE WEST OF ENGLAND படக்குறிப்பு, இந்த மாணிக்கம் வேதியியல் செயல்முறை மூலம் உருவாக்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், கேத்தி அலெக்சாண்டர் பதவி, பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2024, 10:20 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை வைரம் (Synthetic diamond) பல இடங்களில் தொழில்நுட்ப முறையில் செயற்கையாக தயாரிக்கப்படுகிறது. ஆனால் மாணிக்கம் (Ruby) செயற்கையாக தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாக மாணிக்க கற்கள் இயற்கையான சூழலில் உருவாக நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் அதே…
-
- 0 replies
- 619 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த புதிய நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால் வெறும் கண்களால் தெளிவாக பார்க்க முடியாது. கட்டுரை தகவல் எழுதியவர், மேடி மோலோய் பதவி, பிபிசி காலநிலை & அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு வானியல் ஆச்சரியத்தைக் காணத் தயாராகுங்கள். பூமியில் இரண்டு நிலாக்கள் தோன்றும் ஒரு வானியல் அற்புதம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியின் ஈர்ப்பு விசையால் ஒரு சிறுகோள் (Asteroid) ஈர்க்கப்பட்டு, பூமியைச் சுற்றும் ஒரு தற்காலிகமாக ‘சிறிய-நிலா’ ஆகப் பிரகாசிக்கப் போகிறது. இந்தத் தற்காலிக விண்வெளிச் சுற்றுலாவாசி எதிர்வரும் ச…
-
- 0 replies
- 458 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 1972-இல் சதீஷ் தவன் பொறுப்பேற்றுக் கொண்டார் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "ராக்கெட் உள்பட எவ்வளவு அதிநவீன தொழில்நுட்பமாக இருந்தாலும், அதன் தாக்கம் அடித்தட்டு மக்களின் வாழ்வில் எதிரொலிக்கவில்லை என்றால், அந்த தொழில்நுட்பத்தால் எந்தப் பயனும் இல்லை எனக் கருதியவர் சதிஷ் தவன்” என தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 1972-இல் சதீஷ் தவன் பொறுப்பேற்றுக் கொண்டார். அது மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டம் என்று தான் சொல…
-
- 0 replies
- 520 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களின் காட்சியை பிரதிபலிக்கும் கலைப்படைப்பு கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஈலோன் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள், பிரபஞ்சத்தை உற்றுநோக்கும் ஆய்வுகளுக்கு இடையூறாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஈலோன் மஸ்கின் செயற்கைக்கோள் வலையமைப்பில் இருந்து வரும் ரேடியோ அலைகள், விஞ்ஞானிகளின் பிரபஞ்சத்தை உற்றுநோக்கும் செயல்முறைக்கு தடங்கலை ஏற்படுத்துகிறது. மஸ்க்கின் புதிய தலைமுறை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள், உலகம் முழ…
-
- 0 replies
- 784 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, கடந்த ஆண்டு சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு முக்கியமான கட்டத்துக்கு நகர்கிறது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரயான் -4 திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மும்முரமாக இறங்கியுள்ளது. நிலவுக்கு சென்று அதன் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் கற்களை எடுத்து வருவதற்கான திட்டமே சந்திரயான் -4 ஆகும். இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. …
-
- 0 replies
- 461 views
- 1 follower
-
-
நாசாவின் முயற்சியால் விலகி சென்ற விண்கல் – 3035 இல் மீண்டும் மோதும் என எச்சரிக்கை. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் (ஜே.பி.எல்.) மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கிகளை பயன்படுத்தி ‘2024-ஓன்’ என்ற சிறுகோளை முதன்முதலில் கண்டறிந்துள்ளது. இதனுடைய அளவு, வடிவம் மற்றும் நகர்வு பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சிறுகோள் 720 அடி விட்டம் கொண்டது. பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது. 60 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டிருப்பதுடன், இதன் வேகம் மணிக்கு சுமார் 25 ஆயிரம் மைல்கள் (சுமார் 48 ஆயிரம் கிலோ மீட்டர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறுகோளின் அளவு மற்றும் வேகம் குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 462 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஜோ அகாபாவுடன் ஜப்பான் வீரர் அகி ஹஷிடே கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னர்ட் பதவி, அறிவியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் இரண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெறும் எட்டு நாட்கள் தங்குவதற்காக பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) சென்றனர். ஆனால் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமிக்கு திரும்பி வருவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த நாசா, அங்கே சென்ற ஆராய்ச்சியாளர்களான சுனிதா வில்லியம்ஸ், வில்மோரின் வருகையை 2025-ஆம் …
-
- 0 replies
- 742 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,POLARIS/X கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, பிபிசி செய்தியாளர் 13 செப்டெம்பர் 2024, 07:20 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டில் முதல் தனியார் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இது தனியார் நிதியுதவியுடன் இயங்கும் முதல் விண்வெளிப் பயணம் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் பெயர் போலரிஸ் டான் (Polaris Dawn). கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், அன்னா மேனன், ஸ்காட் போட்டீட், சாரா கில்லிஸ் ஆகியோர் போலரிஸ் டான் திட்டத்தின் குழுவில் உள்ளனர். இந்த நான்கு பேரும் நேற்று (செப்டம்பர் 12) விண்வெளிக்குச் சென்ற…
-
- 0 replies
- 390 views
- 1 follower
-