Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வெலிஓயா – நிக்கவெவ தெற்கு பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவிலிலிருந்த, பிள்ளையார் சிலையொன்று, காணாமல் போயுள்ளதென, வெலிஓயா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திலுள்ள பெரும்பான்மையின மக்களால், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட, மிகவும் பெறுமதியான பிள்ளையார் சிலையே காணாமல் போயுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது. வெலிஓயா பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நெல் அருவடையின் பின்னர், பெறப்படும் முதலாது அரிசியை குறித்த பிள்ளையார் சிலைக்கே படைத்து பூஜை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன பிள்ளையார் சிலையை கண்டுபிடிப்பதற்கான, விசாரணைகளை வெலிஓயா பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்…

    • 0 replies
    • 306 views
  2. நடுவானில் மயங்கிய விமானி – விடுமுறையிலிருந்த விமானியின் உதவியால் தரையிறங்கிய விமானம்! பிரித்தானியாவின் மன்செஸ்டரிலிருந்து மடைரா என்னும் தீவு நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்றின் விமானி திடீரென மயக்கமடைந்த நிலையில், அதே விமானத்தில் பயணம் செய்த விடுமுறையிலிருந்த மற்றொரு விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார். மான்செஸ்டரிலிருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் நிலைதடுமாறி பறப்பதை உணர்ந்த பயணிகளும், விமான ஊழியர்களும் திடீரென பரபரப்படைந்தனர். விமான ஊழியர்கள் அனைவரும் தங்கள் அறைக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் குளிர்பானங்கள் முதலானவை வழங்குவது நிறுத்தப்பட்டு, அனைத்து ஊழியர்களும் அறையில் முடங்கினர். விமானத்திற்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் அனை…

    • 1 reply
    • 524 views
  3. இணையத்தில் வைரலாகும் மெலனியா ட்ரூடோ புகைப்படம் ஜி 7 உச்சிமாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மெலனியா டிரம்ப் ஆசையோடு உற்றுநோக்கிய புகைப்படம் மிகவும் வைரலாகியுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான G7 உச்சிமாநாடு பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் சனிக்கிழமை (24.08.2019) குறித்த மாநாடு நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரிட்டன், கனடா, இத்தாலி ஆகிய நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ள கொண்டனர். கடந்த ஞாயிற்றுகிழமை மாலை உச்சிமாநாட்டில் ஐரோப்பிய பத்திரிகை ஏஜென்சி புகைப்படக் கலைஞரால் உலகத் தலைவர்களும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களும் “குடும்ப புகைப்படம்” எடுக்க வந்தனர். அப்போது தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில்…

  4. வாஷிங்டன்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் சாவ்லா. இவர் அமெரிக்காவின் கிளைவ்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். அதிபர் டிரம்ப் நடத்தி வரும் 4 ஓட்டல்களில் இவர் வர்த்தக கூட்டாளியாக இருந்தார். இந்த ஓட்டலின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தினேஷ் சாவ்லா இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கொடுத்த நெருக்கடியின் காரணமாக, இவருடன் இருந்த வர்த்தக உறவை டிரம்ப் முறித்து கொண்டார். கடந்த 18ம் தேதி அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தில் செல்வதற்காக தினேஷ் சாவ்லா சென்றார். அப்போது, அங்கு சோதனையிடப்பட்ட வேறு நபரின் சூட்கேசை எடுத்த அவர், அதை தான் வந்திருந்த காரில் வைத்துவிட்டு மீண்டும் வந்து விமானத்தில் பயணம் செய்தார். பயணத்தை …

    • 1 reply
    • 331 views
  5. என் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. ரைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி.! புஜைரா: புருஷன் சரியில்லை, டைவர்ஸ் குடுங்க என்று சொன்னால்கூட பரவாயில்லை.. ரொம்ப சரியாக இருக்கிறார், ஒரு சண்டையும் இல்லை.. சச்சரவும் இல்லை.. அதனால் டைவர்ஸ் குடுங்க என்று கேட்டு கோர்ட்டையே அதிர வைத்துள்ளார் பெண் ஒருவர். வரதட்சணை கொடுமை, கள்ளக்காதல் கொடூரங்கள் தாங்க முடியாமல் எத்தனையோ பெண்கள் விவகாரத்து கேட்டு கோர்ட் வாசலை மிதித்துள்ளனர். ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெண் படு வித்தியாசமாக இருக்கிறார்.புஜைரா நகரைச் சேர்ந்த பெண் இவர்.. டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போயுள்ளார். ஏன் விவகாரத்து செய்யறீங்க என்று கோர்ட்டில் வக்கீல் கேட்கவும், லிஸ்ட் போட்டு சொன்னார். …

  6. வாஷிங்டன்: தனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் மீது புகார் எழுந்துள்ளது. விண்ணில் நடந்ததாக கூறப்படும் இந்த முதல் குற்றச்சாட்டு குறித்து நாசா விசாரணை நடத்தி வருகிறது. ஒரு பாலின ஜோடியான மெக்லைன் மற்றும் அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் இருவரும் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2018 ல் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில், சம்மர் வொர்டன், அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையத்திடம் அளித்த புகாரில், மெக்லைன், விண்வெளியில் இருந்து, வங்கி கணக்கை இயக்கியதாக புகார் அளித்துள்ளார். தற்போது பூமிக்கு திரும்பியுள்ள மெக்லைன், விண்ணில் இருந்து வங்கிக்கணக்கை…

    • 0 replies
    • 594 views
  7. இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்! இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர் என்று துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தற்போது ஆர்பிஐ இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். அரசியல் ஆலோசகராக இருக்கும் இவர் பாஜக கட்சித் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமானவர். தமிழகத்திலும் அதிமுக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்க கூடியவர். சமீபத்தில் துணை குடியரசுத் தலைவர் சென்னையில் வெளியிட்ட புத்தக விழாவிலும் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருந்த அதே மேடையில் இவரும் காணப்பட்டார்.இந்த நிலையில் நேற்று சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் 10…

  8. ஜெர்மனியில் பெற்றோருக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு ஓர் எட்டு வயது சிறுவன் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்று அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டோர்முன்ட் எனும் நகரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் அந்தச் சிறுவன் காரை நிறுத்தி வைத்திருந்தபோது உள்ளூர் நேரப்படி, இன்று, புதன்கிழமை, அதிகாலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகளைப் பார்த்ததும் அந்தச் சிறுவன் கண்ணீர் விட்டு அழுதுள்ளான். காரை ஓட்டும்போது காரின் அபாய எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டதுடன், காரின் பின்புறம் ஒரு சிறிய எச்சரிக்கை முக்கோணம் ஒன்றையும் அச்சிறுவன் மாட்டியுள்ளான். காவல் துறையினரிடம் தா…

  9. அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையில் இருந்து மிகப்பெரும் தேன் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 50 கிலோகிராம் தேன் பெறப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் தேனீ வளர்பாளரான போல் வூட் என்பவர் பிறிஸ்பேன் நகரின் சுபுர்பன் எனும் இடத்தில் அமைந்துள்ள பெண்ணொருவரின் வீட்டுக் கூரையில் இருந்து குறித்த மிகப்பெரும் தேன் கூட்டைக் கண்டு பிடித்துள்ளார். ஏறக்குறைய 10 மாதங்கள் அக்கூடு அங்கு இருந்ததாகவும், அதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீக்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. குறித்த தேன் கூட்டில் இருந்து 50 கிலோ கிராம் தேன் பெறப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக் கூரையில் இருந்து கூட்ட…

  10. சுற்றுலா நினைவுப் பொருளாக கடற்கரை மணலை சேகரித்த இருவருக்கு 6 வருட சிறை! இத்தாலிக்கு சுற்றுலா சென்றதற்கான நினைவுப் பொருளாக கடற்கரை மணலை எடுத்துச் சென்றதாக குற்றம்சுமத்தப்பட்ட பிரான்ஸை சேர்ந்த இருவருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) 6 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தெற்கு ஐரோப்பாவின் இத்தாலி, மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா தீவுப்பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிஸ்லாந்து, ஒஸ்ட்ரியா, சிலோவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. எனவே, அங்கு உல்லாசச் சுற்றுலாவுக்கு செல்லும் பயணிகளுக்கு பஞ்சமில்லை. ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பொது மக்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் அந்…

  11. ஐஸ்கிறீம் கேட்டு வாங்கித் தர மறுத்த காதலரை குத்திக்கொலை செய்த இளம்பெண்! சீனாவில் ஐஸ்கிறீமிற்காக இளம்பெண்ணொருவர் காதலரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடியொன்று, ஜூமாடியன் நகரில் உள்ள சந்தைத் தொகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஐஸ்கிறீம் வாங்கித் தருமாறு குறித்த இளம் பெண் கோரியுள்ளார். ஆனால் பெண்ணின் காதலரோ “நீ ஏற்கனவே உடல் பருமனாக இருக்கிறாய். இன்னும் ஐஸ்கிறீம் வாங்கி உண்ண விரும்புகிறாயா?” என கூறி மறுப்பு தெரிவித்தார். ஐஸ்கிறீம் வாங்கி தர மறுத்ததோடு தனது உடல் பருமன் குறித்து கேலி செய்ததால் அந்த பெண் ஆத்திரம் அடைந்தார். எனினும் அவர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முன்னோக்…

  12. ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்த 9 தாதிகளுக்கு குழந்தைகள் பிறந்தன – அமெரிக்காவில் அபூர்வ நிகழ்வு! அமெரிக்காவில் தனியார் மருத்துவமனையொன்றில் பணிபுரிந்து வந்த 9 தாதியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்து ஒரே காலகட்டத்தில் குழந்தைகளை பிரசவித்துள்ள அபூர்வ நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகரில் ‘மைன் மெடிக்கல் சென்டர்’ என்ற தனியார் மருத்துவமனையில் இந்த அபூர்வ நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அங்கு பணியாற்றும் தாதியர்கள் 9 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்து மகப்பேற்றுக்காக எதிர்பார்த்திருந்தனர். இதையடுத்து கர்ப்பிணி தாதியர்கள் 9 பேரும் ஒன்றாக இருக்கும் ஔிப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு “எங்கள்…

  13. மிக அரிதான நாசி ஜெர்மனி காலத்தில் வடிவமைக்கப்பட்ட 'போர்ஸ்சா' மோட்டார் வாகன ஏல விற்பனையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதனது ஏலம் தடைப்பட்டது கோரப்பட்ட தொகை 17 மில்லியன்கள் திரையில் 70 மில்லியன்கள் என காட்டப்பட்ட பொழுது அந்த தவறு உணரப்பட்டு ஏலம் நிறுத்தப்பட்டது.

  14. நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஐரோப்பாவில் முற்கால மனிதர்களின் வருகையும், குகைக் கரடிகளின் அழிவும் சம காலத்தில் நடைபெற்றுள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கரடியை வேட்டையாடிய மனிதர்கள், குகைளில் இருந்து அவற்றை விரட்டி, அந்த இனம் அழிந்துபோக வழிவகுத்த வகையில் திறந்தவெளியில் விட்டுவிட்டதை புதிய சான்றுகள் சுட்டுகின்றன. பனிக் காலத்தின் கடைசி பகுதியின் தொடக்கம், உணவு ஆதாரங்கள் குறைதல் போன்ற பிற காரணங்களாலும் இந்த உயிரினங்களின் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது. 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், குகைக் கரடி இனம் படிப்படியாக அழிந்தது. "40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, குகைக் கரடியின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்து வந்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். இத…

    • 0 replies
    • 514 views
  15. 554 ஆண்டுகள் பழமையான இசைக்குழுவிற்கு எதிராக வழக்கு தாக்கல்! ஜேர்மனியில் 554 ஆண்டுகள் பழமையான இசைக்குழுவிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, ஜேர்மனி தலைநகர் பெர்லினில் புகழ்பெற்ற கதீட்ரல் இசைக்குழு இயங்கி வருகிறது. தேவாலயத்தில் பாடும் இந்த இசைக்குழு 554 ஆண்டுகள் பழமையானது. 1465-ம் ஆண்டு இரண்டாம் பிரடெரிக் என்ற ரோமய மன்னரால் இந்த இசைக்குழு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை, இந்த இசைக்குழுவில் சிறுமிகள் இடம்பெற்றதில்லை. சிறுவர்கள் மட்டுமே இந்த இசைக்குழுவில் பாடி வருகிறார்கள். இந்நிலையில் பெர்லினை சேர்ந்த 9 வயது சிறுமி, இந்த இசைக்குழுவில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளார்.…

  16. ரஷ்யா தலைகர் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் என்ஜீன்கள் பழுதானதால் சாமர்த்தியமாக அருகில் உள்ள காட்டில் தரையிறக்கி 226 உயிர்களை காப்பாற்றிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் என்ற நகருக்கு 226 பயணிகளுடன் யுரல் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் 321 விமானம் புறப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் மீது பறவை மோதியது.இதனால் இரண்டு என்ஜீன்களும் பழுதானது. அத்துடன் லேண்டிங் கியரும் வேலை செய்யவில்லை. இதனால், விமானத்தை உடனடியாக, மாஸ்கோ புறநகரில் உள்ள சோளம் பயிரிடப்பட்ட நிலத்தில் விமானி தரையிறக்கினார். இதில், 23 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந…

  17. சத்திரசிகிச்சையின் போது தொண்டையில் சிக்கிய செயற்கை பல் – மறதியால் நேர்ந்த அவலம்! சத்திரசிகிச்சை ஒன்றுக்கு முகம் கொடுத்த 72 வயதான பிரித்தானியர் ஒருவர் தான் செயற்கை பல் அணிந்திருந்ததை மருத்துவர்களிடம் தெரிவிக்க மறந்தமையால் மீண்டும் ஒருமுறை சத்திரசிகிச்சை மேற்கொள்ள நேர்ந்துள்ளது. வயிற்றில் கட்டி ஒன்றை அகற்றுவதற்காக சந்திர சிகிச்சை செய்துகொண்ட குறித்த முதியவருக்கு ஆறு நாள்களுக்குப் பின்னர் மீண்டும் மருத்துவமனைக்குச் செல்லவேண்டி ஏற்பட்டது. வாயில் ரத்தம் வருவதாகவும், உணவை விழுங்கும்போது வலி ஏற்படுவதாகவும் உணவு உண்ண முடியாமல் அவதியுற்றதாகவும் தனக்கு சந்திரசிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் ஒருவரிடம் கூறியுள்ளார். சுவாசப் பாதையில் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடுமென நம்ப…

  18. இளம் வயதிலேயே முதுமையின் சாயலைச் சுமக்கும் இன்றைய தலைமுறைக்கு, வியப்பூட்டும்வகையில் தன் முதுமைக் காலத்தை ஆரோக்கியமாக எதிர்கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் துறையூர் வடிவேல் தாத்தா. முதுமை, வாழ்வில் வரமா, சாபமா என்ற கேள்வி எப்போதும் இருக்கிறது. முதுமையடைந்தவர்கள் அன்றாட வாழ்வை நகர்த்தத் திண்டாடுவதுகண்டு நடுத்தரவயதில் இருப்பவர்களுக்கு உள்ளூர ஒரு பயம் எழுகிறது. ஆனால், வாழ்க்கையையும் அதில் வரும் முதுமையையும் எதிர்கொள்வதென்பது தனிப்பட்ட பார்வையிலேயே இருக்கிறது. பார்வைக்கு எழுபது வயது மதிப்பிடத்தக்கவராக இருந்த வடிவேல் தாத்தாவை நெருங்கிப் பேசினோம். "தம்பி, என் பெயர் வடிவேல், வயசு எண்பத்து ஏழு" என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். மேலும் அவர் கு…

    • 0 replies
    • 697 views
  19. இன்று, இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் குர்பான் என்னும் பலி கொடுக்கும் கடமையை நிறைவேற்றுவதற்காக பல இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை விலைக்கு வாங்குவதில் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில், இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் வசிக்கும் முஹம்மது நிஜாமுதீன் என்பவர் உடல் ரோமத்தில் ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துடன் 95 கிலோ எடை மதிக்கத்தக்க தனது ஆட்டுக்கு 8 லட்சம் ரூபாயை விலையாக நிர்ணயித்துள்ளார். ’சல்மான்’ என்று நாங்கள் பெயரிட்டு செல்லமாக வளர்த்த இந்த ஆட்டின் உணவுக்காக நாங்கள் தினந்தோறும் 85 ரூபாய் வரை செலவு செய்து வந்திருகிறோம். மேலும், அதன் ரோமத்தில் உள்ள ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத…

  20. கலிஃபோர்னிய பேய் நகரமான செரோ கோர்டோவில் ராபர்ட் லூயிஸ் டெஸ்மரைஸ் மட்டுமே வசிக்கிறார். அங்கு அவர் கடந்த 22 ஆண்டுகளாக வெள்ளிப் புதையலை தேடி வருகிறார். 70 வயதாகும் முன்னாள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான டெஸ்மரைஸ், பள்ளியில் பணிபுரிந்துக் கொண்டிருந்த காலத்தில், விடுமுறையின்போது யாருமில்லா இடங்களுக்கு சென்று உலோகத்தாதுக்களை தேடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், ஒருகட்டத்தில் பரபரப்பு நிறைந்த நகர வாழ்க்கையை விடுத்து, அதையே தனது முழுநேர வேலையாக மாற்றிக்கொண்டு, "மலைப்பகுதியில் நட்சத்திரங்களுக்கு கீழே வாழத் தொடங்கினார்." அமெரிக்காவின் கலிஃபோர்னியா வட்டாரத்தில் வெள்ளி அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களில் ஒன்றாக ஒருகாலத்தில் செர்ரோ கோர்டோ விளங்கியது. "இங்கு கிடைத்த …

    • 0 replies
    • 651 views
  21. அமெரிக்காவில், போட்டோவுக்கு போஸ் கொடுத்த பெண்ணின் முகத்தை ஆக்டோபஸ் ஒன்று கடித்து குதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் வொஷிங்டன் நகரைச் சேர்ந்தவர் ஜேமீ பிஸ்செக்லியா. சமீபத்தில் இவர், டக்கோமோ நேரோஸ் பாலத்தின் அருகே நடந்த மீன்பிடிக்கும் போட்டியில் கலந்துகொண்டார். அப்போது, அருகில் இருந்த ஆண் போட்டியாளரின் வலையில் ஆக்டோபஸ் மீன் ஒன்று சிக்கியதை பார்த்தார். உடனே அவருக்கு, அந்த ஆக்டோபஸுடன் போட்டோ எடுக்க வேண்டும் என ஆசை வந்தது. இதையடுத்து, அந்த நபரிடமிருந்த ஆக்டோபஸை வாங்கி தனது முகத்தின் மீது படரவிட்டு, இரு கைகளையும் விரித்தபடி புன்சிரிப்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். முதலில், ஆக்டோபஸ் அவருடன் விளையாடுவதுபோல் உணர்ந்தார். எனவே, ஆக்டோபஸ…

  22. துடிப்பான இளைஞரை போல் காட்டுக்குள் சிரித்தபடியே சாகசம்.. நானே அசந்துட்டேன்.. மோடிக்கு கிரில்ஸ் பாராட்டு.! லண்டன்: காட்டில் ஒரு துடிப்பான இளைஞரை போல் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டதாக சாகச நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார். காடுகளில் வனஉயிரினங்களின் தன்மை குறித்து இவர் விளக்கி வருகிறார்.மேலும் காட்டுக்குள் யாரேனும் சிக்கிக் கொண்டால் தப்பிப்பது என்பது குறித்து கிரில்ஸ் விளக்கம் அளித்துள்ளார். ஆகஸ்ட் 12-ஆம் தேதி பிரபலமானவர்களை சாகச பயணத்துக்கு அழைத்து செல்லும் இவர் பராக் ஒபாமாவை அழைத்து சென்றுள்ளார்…

  23. ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் 79 ஆயிரம் ரூபா அபராதம் இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்தால் 79 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோமானிய கட்டடக்கலையின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இத்தாலி தலைநகர் ரோமின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் மிக முக்கியமானது ‘ஸ்பானிஷ் படிகள்’. இந்தப் படிகள் 1723 மற்றும் 1726ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ப்ரான் செஸ்கோ டி சாங்டிஸ் எனும் கட்டடக்கலை வல்லுனரால் வடிவமைக்கப்பட்டன. 174 படிகளுடன் நீண்டு செல்லும் ஸ்பானிஷ் படிகளின் உச்சிப்பகுதியில் ட்ரினிடா டி மாண்டி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த நிலையில் அண்மைகாலம…

  24. நான் பேங்க் மேனேஜர் பேசறேன்.. கொஞ்சம் ஏடிஎம் டீடெய்ல்ஸ் தாங்க.. "கேப்டன்" மனைவியிடம் 23 லட்சம் அபேஸ் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியிடம் செல்போன் மூலம் 23 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது மனைவி பிரனீத் கவுர், பாட்டியாலா தொகுதியின் எம்பியாக உள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்தார். அப்போது வங்கி மேலாளர் என கூறி ஒருவர் இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். கவுரின் ஊதியத்தை செலுத்துவதற்காக வங்கிக் கணக்கு, ஏடிஎம் கார்டு எண், சிவிசி எண், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட…

    • 1 reply
    • 1.2k views
  25. இப்போதைய நியூசிலாந்து பகுதியில் 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிளியின் உயரம் மனிதனின் உயரத்தில் பாதி இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. அந்த காலக்கட்டத்தில் கிளி ஒரு மீட்டர் உயரத்தில் இருந்திருக்கிறது. அதாவது மூன்று அடி மூன்று அங்குலம் உயரத்தில் இருந்திருக்கிறது. நியூசிலாந்தின் தெற்கு ஒடாகோ பகுதியில், பல மில்லியன் ஆண்டுளுக்கு முன்பு வாழ்ந்த அந்தக் கிளியின் சிதிலங்கள் கிடைத்துள்ளன. இந்தக் கிளியின் எடையை கருத்தில் கொண்டால், இந்த கிளி மாமிச உண்ணியாகவும், பறக்கும் திறனற்றதாகவும் இருந்திருக்கிறது. இந்தப் பறவை குறித்த ஆய்வின் முடிவானது பயாலஜி லெட்டர்ஸ் எனும் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமாகி உள்ளது. ஏழு கிலோ எடைக்கு …

    • 1 reply
    • 853 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.