செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
தேனிலவுக்கு வெளிநாட்டுக்கு செல்லாமல் ஒட்டகங்களுடன் கணவர் வசிக்கிறார் - சவூதி அரேபிய பெண் விவாகரத்து கோருகிறார் சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னை தனது கணவர் தேனிலவுக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறி விவாகரத்து கோரியுள்ளார். தனது கணவர் ஒட்டகங்களை கவனித்துக்கொள்ளவே விரும்புவதால் அவற்றை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் செல்ல அவர் விரும்பவில்லை என மேற்படி பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இப் பெண் 30 வயதுக்குட்பட்டவர் எனவும் அவரின் கணவர் 70 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. திருமணத்தின் பின்னர் தேனிலவுக்காக துருக்கிக்கு தன்னை…
-
- 0 replies
- 371 views
-
-
வீதியில் டெக்ஸி சாரதியை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட டாக்டர் இடைநிறுத்தம் அமெரிக்காவில் டெக்ஸி சாரதியொருவரைத் தாக்கிய பெண் மருத்துவர் ஒருவரை வைத்தியசாலை நிர்வாகம் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது. புளோரிடா மாநிலத்தின் மியாமி நகரைச் சேர்ந்த அஞ்சலி ராம்கிஷ்சூன் என்பவரே இவ்வாறு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இவர் அண்மையில், டெக்ஸி ஒன்றில் முன்பதிவு செய்யாமல் ஏறிக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்குமாறு சாரதியிடம் கூறினார். ஆனால், முன்பதிவு செய்யாததால் அவரை டெக்ஸியில் இருந்து இறங்குமாறு சாரதி அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரம டைந்த அஞ்சலி, டெக்ஸ…
-
- 3 replies
- 467 views
-
-
உகண்டாவில் பொதுமக்களைக் கொன்று சமைத்து உண்ண உத்தரவிட்ட டொமினிக் உகண்டாவைச் சேர்ந்த முன்னாள் கிளர்ச்சிக் குழுவின் கட்டளைத் தளபதியான டொமினிக் உங்வென், பொதுமக்களைக் கொன்று சமைத்து உண்ண தனது கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாக சர்வதேச விசாரணையாளர் கள் வியாழக்கிழமை தெரி வித்தனர். அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எல்.ஆர்.ஏ. (லோர்ட் ரெஸிஸ்ரன்ஸ் ஆர்மி) கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த முதலாவது உறுப்பினர் என்ற பெயரை பெறுகிறார். அவர் மீது சிறுவர்க ளைப் பாலி யல் அடி மைகளாக வும் படைவீரர்களாகவும் மாற்ற பாலியல் பலாத்காரத்தை ஆயுதமாகப் பயன்படுத்…
-
- 0 replies
- 256 views
-
-
சுற்றுலா பயணியாக இலங்கை வந்த பிரித்தானிய யுவதி ஆட்டோவில் நாடு முழுவதிலும் வலம் வருகிறார் (ஆர்.கிறிஷ்ணகாந்) பிரித்தானிய யுவதி முச்சக்கர வண்டியொன்றை செலுத்திக் கொண்டு இலங்கையில் பல இடங்களுக்கும் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். கெஸீ ட்ரேவிஸ் எனும் இந்த யுவதி முச்சக்கர வாகனங்கள் மீது அதீத ஆசையை கொண்டவராக் காணப்படுகிறார். சுற்றுலா பயணியாக இலங்கைக்கு வந்த இவர், இங்குள்ள ஆட்டோ எனும் முச்சக்கரவாகனங்களை பார்த்ததன் பின்னர் அவற்றின் மீதிருந்த அளவு கடந்த ஆசையினால் தனக்கென ஒரு முச்சக்கர வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாராம். அதையடுத்து, முச்சக்கர வாகனம் …
-
- 12 replies
- 564 views
-
-
பாலியல் தாக்குதல்களுக்கு பெண்கள் பூசியிருந்த நறுமணத் தைலங்களே காரணம் ஜேர்மனிய கோலொன் பிராந்தியத்தில் கடந்த புது வருட தினத்தில் குழுவொன்றால் பெண்கள் பாலியல் ரீதியில் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அந்தப் பெண்கள் நறுமணத்தைலங்களை பூசியிருந்தமையே காரணம் எனத் தெரிவித்து அந்தப் பிராந்திய இமாம் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த புது வருட தினத்தில் கோலொன் நகரில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தனர். அன்றைய தினம் மட்டும் அந்நகரில் 3 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் உட்பட 521 பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து…
-
- 0 replies
- 247 views
-
-
#இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான வழக்கொன்றை சந்தித்தது. வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார். வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார். #நான்_களவாடியது_உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால்வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார். இதை கேட்டதும் நீதிபதி.. "என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாயா (100 அமெரிக்க டொலர்) அபராதமாக விதிக்கின்றேன்…
-
- 1 reply
- 441 views
-
-
வேலை வேண்டாம் என நீதிபதியிடம் கெஞ்சிய பிச்சைக்காரர் பிரித்தானிய நாட்டில் அலுவலக வேலையில் கிடைக்கும் வருமானத்தை விட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம் கிடைப்பதால் தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என பிச்சைக்காரர் ஒரு நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ழேவவiபொயஅ நகரில் ஊசயபை யுவமiளெழn (36) என்ற வீடு இல்லாத நபர் அங்குள்ளவர்களிடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஆனால், இந்த பகுதியில் பிச்சை எடுப்பது பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளதால், நகர நிர்வாகம் பிச்சை எடுப்பவர்களை கைது செய்து வந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களிடம் பிச்சை எடுத்த கிரெய்க்கை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். இந்த …
-
- 2 replies
- 450 views
-
-
தனது கற்புக் கவசத்தை திறப்பதற்கு தீயணைப்புத் துறையினரிடம் உதவி கோரிய இத்தாலிய பெண் இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கற்புக் கவசத்தை திறப்பதற்கு உதவுமாறு தீயணைப்புத் துறையினரை கோரியதன் மூலம் அதிர்ச்சியடையச் செய்துள்ளார். இத்தாலியின் பதுவா எனும் நகரைச் சேர்ந்த நடுத்தர வயதான பெண்ணொருவரே அந்நாட்டு தீயணைப்புத் துறையினரிடம் இக்கோரிக்கையை விடுத்தார். தீயணைப்புத்துறை நிலையத்துக்குச் சென்ற மேற்படி பெண், தனது கற்புக் கவசப் பட்டியின் (chastity belt) சாவிகளை தான் தொலைத்துவிட்டதாகவும் அதனால் மேற்படி கவசத்தை தன்னால் திறக்க முடியாமல் திணறுவதாகவும் தெரிவித்தாராம். அப்பெண் கூறுவதை தீயணைப்புத்…
-
- 9 replies
- 457 views
-
-
சவப்பெட்டிகளில் அமர்ந்து விநோத பிரார்த்தனை தாய்லாந்தில் பாங்கொக் நகருக்கு வெளியிலுள்ள நொன்தாபுரி எனும் இடத்திலுள்ள வட் தா கியன் பௌத்த ஆலயத்தில் இடம்பெற்ற மீள உயிர்ப்பித்தல் தொடர்பான வைபத்தின் போது மக்கள் சவப்பெட்டிகளில் படுத்திருந்தவாறு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். மேற்படி பிரார்த்தனையில் ஈடுபட்ட மக்கள் இறந்து பின்னர் மீள உயிர்த்தெழுவதை அடையாளப்படுத்தும் வகையில் அவர்கள் படுத்திருந்த சவப்பெட்டிகள் மீது மதகுருமார் போர்வையைப் போர்த்தி அகற்றும் சடங்கொன்றை மேற்கொள்கின்றனர். இந்த பிரார்தனை மக்கள் தமது தீய கர்ம வினைகள் அகன்று பரிசுத்தவான்களாக மீள வாழ்க்கையை ஆரம்பிக்க வழிசெய்யும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். மேற்ப…
-
- 3 replies
- 605 views
-
-
-
- 0 replies
- 353 views
-
-
பிரேசில் அரசு ஊழியர் ஒருவர் உலகிலேயே அதிக வயதுடன் வாழும் மனிதரை உயிருடன் கண்டு பிடித்து உள்ளார். அவரது வயது 131 அவர் தனது 69 வயது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். அவரது பெயர் ஜோவா கொயிலோவை டி சூசா அவர எஸ்டிரோ டு அல்சாண்ட்ரா என்ற ஒரு தொலை கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் அவருடன் அவரது 69 வயது மனைவியும் 16 வயது பேத்தியும் உள்ளனர். தெற்கு பிரேசிலின் சமூக பாதுகாப்பு ஊழியர் இவரை கண்டு பிடித்து உள்ளார். அவரது பிறந்த நாள் சான்றிதழை வைத்து அவர் 1884 ஆம் ஆண்டு மார்ச் 10 ந்தேதி பிறந்ததாக கண்டறியபட்டு உள்ளது. அவரது வயது உறுதிபடுத்தப்பட்டு உள்ளதை அடுத்து உலகிலேயே அதிக வயதுடன் வாழும் நபர் அவர்தான் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. உலகிலேயே உயிருடன் வாழும் அதிக வயதான நபர் ஜப…
-
- 2 replies
- 332 views
-
-
கனடாவில் எந்த நேரத்திலும் பூகம்பம் ஏற்படும் என்றும் பூகம்பத்தை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்கும்படியும் கனடாவின் அவசரகால மேலாண்மை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கனடாவின் அவசரகால மேலாண்மை அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், வான்கூவர் மாகாணத்தில் எந்த நேரத்திலும் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதனை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபகால ஆய்வின் படி, வான்கூவர் மாகாணத்தில் 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், இந்த பேரிடரில் 11,000 பேர் வரை இறக்கவும், 1,28,000 பேர் வரை காயமடையும் வாய்ப்பு உள்ளது.இது தொடர்பாக பேசிய கனடாவின் புவியியல் ஆய்வு மைய அதிகாரியான ஹோன் கவோ, பூகம்பம் ஏற்படுவதற்கு முன்ன…
-
- 2 replies
- 671 views
-
-
50 கிலோ மீற்றர் நீளமான வீதி “திருடப்பட்டது” - ரஷ்ய சிறைச்சாலை சேவை உயர் அதிகாரி கைது! ரஷ்யாவில் ஐம்பது கிலோமீற்றர் (31 மைல்) நீளமான வீதியை திருடிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அலெக்ஸாண்டர் புரோடோபொபோவ் எனும் இந்த அதிகாரி, கொங்கிறீட்டினால் நிர்மாணிக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலையொன்றின் கொங்கிறீட் பாலங்களை அகழ்ந்து விற்பனை செய்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் வடக்கிலுள்ள கோமி பிராந்தியத்தில் இக்குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 முதல் 2015 வரையான ஒரு வருட காலப்பகுதியில் சுமார் 7,000 கொங்கிறீட் பாலங்களை த…
-
- 1 reply
- 840 views
-
-
அநுராதபுரத்திலிருந்து வத்தளைக்கு கடிதம் கொண்டு சேர்த்த புறா புறா ஒன்று தனது காலில் தூதுக் கடிதம் ஒன்றை சுமந்து கொண்டு அநுராதபுரத்திலிருந்து வத்தளைக்கு 2 மணித்தியாலம் 14 நிமிடங்களில் வந்தடைந்த சம்பவம் நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது. புராதன காலத்தில் பறவைகள் மூலம் தூதனுப்பும் நடைமுறை பற்றி பாடசாலை மாணவர்களுக்குத் தெளிவூட்டும் வேலைத்திட்டம் ஒன்றை அநுராதபுரம் டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலயம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் வந்தளை ‑ ஹெந்தல சந்தியில் உள்ள புறா வளர்ப்பு நிலையத்தை நடத்திச் செல்லும் எம்.லெனரோல் கலந்துகொண்டிருந்ததோடு 12 புறாக்களையும் இதில் ஈடுபடுத்தினா…
-
- 0 replies
- 595 views
-
-
அமெரிக்காவில் உள்ள காட்டில் கிடந்த பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளார் பெண் போலீஸ் ஒருவர். அமெரிக்காவின் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லா மரினாவில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் லூயிசா பெர்ணான்டா உர்ரியா. அண்மையில் தான் அவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் காட்டுப்பகுதியில் பிறந்து சில மணிநேரமே ஆன பெண் குழந்தையை எடினோரா ஜிமெனெஸ்(59) என்பவர் கண்டுபிடித்தார். உடனே அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த லூயிசா குழந்தை பசியாலும், காட்டில் கிடந்ததால் உடல் சூடு வெகுவாக குறைந்தும் இருப்பதை உணர்ந்தார். குழந்தையை தனது மார்போடு அணைத்து அதற்கு தாய்ப்பால் கொடுத்தார். பின்னர்…
-
- 2 replies
- 408 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான யுவதியொருவர் பிக் அப் வாகனமொன்றை தனியாக தூக்கி, அதன் அடியில் சிக்கியிருந்த தனது தந்தையை காப்பாற்றியதுடன் 3 சக்கரங்களை மாத்திரம் கொண்டிருந்த வாகனத்தை செலுத்திச் சென்று பெரும் தீ விபத்தையும் தவிர்த்தமைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். வேர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்த சார்லட் ஹஃபெல்மீர் எனும் இந்த யுவதி கடந்த நவம்பர் 28 ஆம் திகதி இந்த சாகசத்தைப் புரிந்தார். அன்றைய தினம் சார்லட்டின் தந்தையான எரிச் ஹஃபெல்மீர் தனது வீட்டிலுள்ள கராஜில் பிக் அப் ட்ரக் ஒன்றை பழுதுபார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வாகனம் திடீரென ஒரு புறமாக சரிந்தது. எரிபொருள் கசிந்துகொண்டிருந்ததால் கராஜில் தீ பரவ ஆரம்…
-
- 2 replies
- 626 views
-
-
84 வயதில் 4வது முறையாக மாடல் அழகியை மணந்த இங்கிலாந்து பத்திரிகை அதிபர் இங்கிலாந்து பத்திரிகை அதிபர் 84 வயது முர் டோக் தன்னை விட 30 வயது குறைந்த நடிகையை 4-வது திருமணம் செய்கிறார். இங்கிலாந்தின் பிரபல மான ஒரு பத்திரிகையின் அதிபர் ரூபெர்ட் முர்டோக். இவருக்கு வயது 84. இவருக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது. அவர்கள் மூலம் 6 குழந்தைகள் உள்ளனர். இவரது 3-வது மனைவி வெண்டி டெங் (46). இவர் மூலம் கிரேஸ் (14), சொலோக் (12) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவரை கடந்த 2013-ம் ஆண்டு முர்டோக் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் முர்டோக் ஜெர்ரி ஹால் என்ற 59 வயது நடிகையும், முன்னாள் மாடல் அழகியின் காதல் வலையில் விழுந்தார். ஜெர்ரியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன…
-
- 4 replies
- 562 views
-
-
அடிமட்டத்திலிருந்து புறப்பட்டு இமாலய வெற்றி பெற்ற ஒரு தமிழன் வேறு யாருமல்ல? அவுஸ்ரேலியாவின் முன்னோடி பணக்காரர்களில் ஒருவரான மகே சின்னத்தம்பி! அவர்கூட யாழ் வடமராட்சியை சேர்ந்தவரே. இவரது தாய் தகப்பன் புலோலி, பருத்தித்துறையை சேர்ந்தவர்கள். மலேசியாவில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் கல்வி கற்று, அங்கேயே தொழில் தொடங்கி, தனது ஒரே கனவான மாபெரும் நகரைத் தனிமனிதனாக உருவாக்கி வரும் அந்த அதிசய மனிதர்.. உலகில் தனிநபர் ஒருவரால் உருவாகிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் மாபெரும் நகரங்களில் ஒன்றான Greater Springfield (www.greaterspringfield.com.au) என்னும் நகரை உருவாக்கி வரும் ஒரு தமிழரின் வாழ்க்கை…
-
- 0 replies
- 619 views
- 1 follower
-
-
உலகின் மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி பிரிட்டனிலுள்ள ஒட்டகச்சிவிங்கியொன்று உலகின் மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒட்டகச் சிவிங்கியின் உயரம் 19 அடியாகும். பெம்புரோக் ஷயர் பிராந்தியத்திலுள்ள சோன்டர்ஸ்பூட் மிருகக் காட்சிச்சாலையில் வசிக்கும் இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு ஸுளு என பெயரிடப்பட்டுள்ளது. ஒட்டகச்சிவிங்கிகளின் பாதம் முதல் தலைவரையான சராசரி உயரம் 15 அடியாகும். ஆனால், ஸுளு அவற்றைவிட பல அடி உயரமானதாக காணப்படுகிறது. தனது தலையை நிமிர்த்தி நிற்பது ஒட்டகத்தைப் பொறுத்த விடயமாகையால் அதன் உயரத்தை மி…
-
- 0 replies
- 604 views
-
-
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த 113 வயது பாட்டி ஒருவர் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகளில் அவரது 100 பேரப்பிள்ளைகள் கலந்து கொண்டனர். இது குறித்து பாட்டியின் 65 வயது பேரன் வெங்கடாசலம் (வயது 65) ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கூறியதாவது:- 113 வயது பாட்டியின் பெயர் கிருஷ்ணாம்மாள் சேலம் மாவட்டம் சவூரியூரில் மே 26, 1902, ஆண்டு பிறந்தவர் பின்னர் சின்னமாட்லாம்பட்டியை சேர்ந்த தாத்தா முனுசாமியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளின் மகள் தான் சரஸ்வதி இவரில் இருந்து தான் எங்கள் தலைமுறை தொடங்குகிறது. கிருஷ்ணம்மாள் பாட்டி வாழும் காலம் முழுவதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்.அதற்கு காரணம் அவரது உணவு மற்று வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள்தான்.அவ்ர்ஒரு காய…
-
- 0 replies
- 233 views
-
-
22 கோடி ரூபாவை நிறுவன ஊழியர்களுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்த தொழிலதிபர் இத்தாலியிலுள்ள நிறுவனமொன்றின் உரிமையாளர் ஒருவர், தனது சொத்தில் சுமார் 22 கோடி ரூபாவை தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு வழங்குவதாக உயில் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். இதனால் அத்தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு 3 இலட்சம் ரூபா முதல் 15 இலட்சம் ரூபா வரை விசேட அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியின் எனோபிளாஸ்டிக் எனும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கே இந்த அன்பளிப்பு கிடைத்துள்ளது. போத்தல் தக்கைகள், லேபல்கள், ஸ்குரூ ஆணிகளுக்கான மூடிகள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனம் இது. பியரோ மாச்சி என்பவர் 1957 ஆம்…
-
- 0 replies
- 247 views
-
-
தாய்க்கு சிறுநீரக தானம் அளிக்க மகன் கூறிய சாமர்த்திய பொய்: லண்டனில் நெகிழ்ச்சி சம்பவம் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட தன் தாய்க்கு, சிறுநீரகத்தை தானம் அளிப்பதற்காக மகன் சாமர்த்தியமாக கூறிய பொய் நெகிழ்ச்சிச் சம்பவமாக பேசப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இம்ரான் நஜீப் (34) என்பவர், தன் ஆறு குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினருடன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். இவரது தாய் ஜைனப் பேகத்துக்கு, திடீரென சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து நாள்தோறும் அவருக்கு டயாலசிஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறுநீரகத்தின் இயக்கம் 25 சதவீதமாக குறைந்ததால், உடனடியாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்…
-
- 0 replies
- 547 views
-
-
ஐரோப்பா செல்ல பணத்திற்கு பதில் மனைவியை பலாத்காரம் செய்ய அனுமதித்த சிரியா நபர் தங்களது குடும்பத்தாரை ஐரோப்புவுக்கு அழைத்துச் செல்ல சிரியாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை பலாத்காரம் செய்ய ஒருவரை அனுமதித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு பிரச்சனை வலுத்து வருவதால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பாவில் குடியேறி வருகிறார்கள். அவர்களை கள்ளத்தனமாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்பவர்கள் அதிக அளவில் பணம் வாங்குகிறார்கள். இந்நிலையில் எப்படியாவது ஐரோப்பாவுக்கு சென்றால் போதும் என்ற நினைப்பில் சிரியாவைச் சேர்ந்த ஒருவர் செய்யக் கூடாத ஒன்றை துணிந்து செய்துள்ளார். சிரியாவைச் சேர்ந்த அந்த நபர் தனது 30 வயது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் பல்கேரிய…
-
- 8 replies
- 477 views
-
-
மருத்துவரால் தாக்கப்பட்டு உயிரிழந்த நோயாளி மருத்துவர் ஒருவரால் தாக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவொன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் பெல்குரோட் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த டிசெம்பர் 29 ஆம் திகதி இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எனினும், மேற்படி நோயாளியே முதலில் வன்முறையாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாதி ஒருவரை அந்நோயாளி காலால் தாக்கியதாகவும் அதையடுத்தே அவரை மருத்துவர் தாக்கியதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 2 replies
- 349 views
-
-
ஜப்பான் நாட்டில் ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக அங்குள்ள ஒரு ரயில் நிலையம் செயல்பட்டு வருவதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அந்நாட்டு ரயில்வே துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஜப்பான் நாட்டிற்கு மேற்கு திசையில் Hokkaido என்ற தீவுப்பகுதி அமைந்துள்ளது. இங்கு Kami-Shirataki என்ற ரயில் நிலையமும் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் நகரை விட்டு தொலைவில் அமைந்துள்ளதால் அதனை நிரந்தரமாக மூடிவிட 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பள்ளி மாணவி ஒருவர்,ரயிலில் ஏறி பள்ளிக்கு சென்று விட்டு இதே ரயிலில் வீடு திரும்புவது ரயில் நிலையத்திற்கு தெரியவர அதனை மூடிவிடும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது. மே…
-
- 1 reply
- 290 views
-