செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
இந்த தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்தால் அழகிய காதலி கிடைப்பார்! ஐரோப்பிய கண்டத்தின் ஏதோவொரு நாட்டில் வசித்துவரும் ஒரு பெண் இந்த நவீன யுகத்தில், தனக்கேற்ற துணையை தேடும் முயற்சியில் சாலையோர மரமொன்றில் ஒரு அறிவிப்பை வைத்துள்ளார். இவர் தனது அறிவிப்பில் ஒரு கணிதத்தின் மூலமாக தனது மொபைல் நம்பரை குறிப்பிட்டுள்ளார். இந்தக் கணக்குக்கு சரியான தீர்வைக் கண்டுபிடித்து தனது மொபைல் எண்ணைக் கண்டறியும் அதிபுத்திசாலியிடம் பேச ஆவலாக உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்புப் பலகை, நேற்று டுவிட்டர் பயனாளர் ஒருவரின் கண்ணில்பட்டது. பிறகென்ன, அந்தப் பெண்ணின் மொபைல் எண்ணை அறிவதற்கு பல கணிதவியலாளர்களும் தற்போது தீவிரமாக போராடி வருகின்றனர். http://tamil.adaderana.lk/news.php?nid=…
-
- 1 reply
- 449 views
-
-
20 ஆண்டுகளுக்கு பிறகு சுத்தம் செய்யப்படவிருக்கும் பிரபல சூயிங்கம் சுவர் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டல் நகரின் ‘பைக் ப்லேஸ் மார்கெட்’-டின் பிரபலமான பகுதியாக ‘சூயிங் கம் சுவர்’ விளங்கி வருகின்றது. இந்த சுவர் கடந்த இருபது ஆண்டுகளாக இவ்வழியே வந்துசெல்லும் மக்கள் மென்று ஒட்டிய சூயிங் கம்களால் நிரம்பி வழிகின்றது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்தப் பழமையான அங்காடியின் பிரபலமான அங்கமாக விளங்கும் இந்த சுவரை பாதுகாக்கும் முயற்சியில் அதில் ஒட்டியுள்ள எச்சில் சூயிங்கமின் மிச்சங்கள் எல்லாம் சுத்தம் செய்யப்படவுள்ளது. இந்த சுவர் சுமார் ஆறு அங்குல அளவுள்ள, பத்து இலட்சத்துக்கும் அதிகமான ‘சூயிங் கம்களை’ தாங்கி நின்றுகொண்டிருக்கின்றது. இந்த சுவர் இம்ம…
-
- 1 reply
- 405 views
-
-
வேகமாக நடப்பவர்களுக்காக வீதியில் தனியான வழித்தடம் பிரிட்டனின் லிவர்பூல் நகரத்தில் வீதியில் வேகமாக நடந்து செல்லும் பாதசாரிகளுக்காக தனியான வழித்தடமொன்று (லேன்) திறக்கப்பட்டுள்ளது. மெதுவாக நடந்து செல்பவர்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களால் வேகமாக நடந்து செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்ப்பதே இதன் நோக்கமாகும். லிவர்பூல் நகரத்தின் செயின்ற் ஜோன் வீதியில் நேற்றுமுன்தினம் இந்த வேக நடைபாதை திறக்கப்பட்டது. பிரிட்டனின் முதலாவது வேக நடை பாதை இதுவாகும். லிவர்பூல் நகரில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பொன்றின்படி, பாதையோரங்களில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களால் வேகமாக நடப்பதற்கு …
-
- 2 replies
- 388 views
-
-
சிக்கன் சமைப்பதற்கு எவ்வளவு வெப்பநிலை தேவை? பிரித்தானிய அவசர சேவை பிரிவுடன் தொடர்புகொண்ட நபர் கேள்வி பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்நாட்டு அவசர சேவைப் பிரிவு பொலிஸாருக்கு அழைப்பு விடுத்து, சிக்கன் சமைப்பதற்கு அவணில் எந்தளவு வெப்பநிலை வைக்க வேண்டும் என கேட்டுள்ளார். இங்கிலாந்தின் கம்பிரியா பிராந்தியத்திலுள்ள அவசரசேவை பொலிஸ் பிரிவினரிடம் மேற்படி நபர் இக்கேள்வியை கேட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் அவசரத் தேவைகளின் போது உதவிக்கு அழைப்பதற்காக 999 எனும் தொலைபேசி இலக்கம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இச்சேவையின் பெறுமானத்தை உணராத சிலர் அபத்தமான விடயங்களுக்கும் இந்த இலக்கத்துக்கு அழைப்பு விடுப்பதாக கம்பிரியா பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். …
-
- 1 reply
- 410 views
-
-
முதலாவது உலக பழங்குடி விளையாட்டு விழா பழங்குடி மக்களுக்கான முதலாவது உலக பழங்குடி விளையாட்டு விழா பிரேஸிலின் பால்மாஸ் நகரில் ஒக்டோபர் 23 முதல் நவம்பர் முதலாம் திகதிவரை நடைபெற்றது. பிரேஸிலில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறுவதற்கு சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் பழங்குடிகளுக்கான இவ்விளையாட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, பிரே ஸில், கனடா, சிலி, கொலம்பியா, கொங்கோ, ஈக்குவடோர், எத்தியோப்பியா, பிரெஞ்ச் கயானா, மெக்ஸிகோ, மொங்கோலியா, குவாத்தமாலா, நியூஸிலாந்து, பனாமா, நிக்கரகுவா, பெரு, பராகுவே, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, உருகுவே, வெனிசூலா ஆகிய 23 நாடுகளைச் சேர்ந்த ச…
-
- 0 replies
- 675 views
-
-
நடுவர்களை துரத்திய குரங்குகள்; கால்பந்து போட்டி ரத்து! கொல்கத்தாவில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, கார்தா மைதானத்தில் மேற்கு வங்க பிரீமியர் டிவிஷன்' பி' பிரிவு போட்டிகள் நேற்று நடைபெற்று கொண்டிருந்தன. யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன், ரயில்வே அணி வீரர்கள் களமிறங்க தயாரகிக் கொண்டிருந்தனர். போட்டி மதியம் 2.15 மணியளவில் தொடங்குவதாக இருந்து. போட்டி தொடங்குவதற்கு சற்று முன், 4 லங்கூர் குரங்குள் கால்பந்து மைதானத்திற்குள் புகுந்தன. அவற்றை போட்டி அமைப்பாளர்கள் துரத்தியுள்ளனர். தொடர்ந்து போட்டித் தொடங்கியுள்ளது. இரு அணியினரும் தலா ஒரு கோல் அடித்திருந்தபோது, மீண்டும் மைதானத்திற்குள் புகுந்த குரங்குகள் பந்தை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளன. நடுவர்களையும் துரத்தியுள்ளன. எ…
-
- 1 reply
- 558 views
-
-
சிசுவை காப்பாற்றிய நாய்! (மனதை நெகிழவைக்கும் படங்கள்) வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியில் யாரோ ஒருவரால் வீசப்பட்டிருந்த தொப்புள் கொடியுடன் காணப்பட்ட சிசுவொன்றை நாயொன்று தூக்கிச் சென்று அருகில் இருந்த வீட்டு வாசலில் போட்டுள்ளது. மேலும் வாசலில் நின்று குரைத்துமுள்ளது. வீட்டில் உள்ளோர் வெளியே வந்து பார்த்த தும் சிசுவொன்று வாசலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவ்வீட்டிலிருந்தோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் குழந்தை உயிரோடு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைக்கு காயமேதும் ஏ…
-
- 3 replies
- 444 views
-
-
நியூஸிலாந்து றக்பி அணியின் அங்கியை தனது ஊழியர்களுக்கு இன்று அணிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஆஸியின் கான்டாஸ் நிறுவனம் உலகக் கிண்ண றக்பி சுற்றுப்போட்டியில் நியூஸிலாந்து அணி சம்பியனாகியதையடுத்து, அவுஸ்திரேலியாவின் பிரதான விமான சேவை நிறுவனமான கான்டாஸ் நிறுவனம், இன்று திங்கட்கிழமை தனது விமானங்களின் ஊழியர்கள் அனைவருக்கும் நியூஸிலாந்து அணியின் சீருடையான கறுப்பு நிற அங்கியை அணிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உலகக் கிண்ண றக்பி போட்டி தொடர்பாக அவுஸ்திரேலியாவின் கான்டாஸ் நிறுவனத்துகும் நியூஸிலாந்தின் எயார் நியூஸிலண்ட் நிறுவனத்துக்கும் இடையில் நடைபெற்ற பந்தயமே இதற்குக் காரணம். அவுஸ்திரேலியாவும் நிய…
-
- 0 replies
- 333 views
-
-
வீட்டின் கூரையில் ஏறிய கார் அமெரிக்காவிலுள்ள ஒரு தம்பதியினர் தமது வீட்டின் கூரையில் காரொன்று நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. தான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது கூரையில் சத்தமொன்று கேட்டதாகவும் வெளியே சென்று பார்த்தபோது வீட்டின் கூரையில் காரொன்று இருப்பதைக் கண்டு தான் வியப்புற்றதாகவும் 83 வயதான பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். மேற்படி காரின் சாரதி சுகவீனமுற்றதால் கட்டுப்பாட்டை இழந்தபோது அக்கார், வீட்டின் கூரை மீது ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=13020#sthash.PpAGt59Z.dpuf
-
- 1 reply
- 448 views
-
-
சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு ! அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை சர்தார்ஜி ஜோக்குகள் தமிழகம் உள்பட இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் ஃபேமசாக வலம் வந்தன. இந்திய பத்திரிகைகளில் குறிப்பாக ஆங்கில பத்திரிகைகள் மற்றும் வட இந்திய ஏடுகளில் இடம்பெறும் சர்தார்ஜி ஜோக்குகள் ரொம்பவே பாப்புலர்! இந்நிலையில் சர்தார்ஜிக்களை முட்டாள்களாகவும், அறிவற்றவர்களாகவும் சித்தரிக்கும் இந்த சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. ஹர்வீந்தர் சவுத்ரி என்பவரால் தொடரப்பட்ட இந்த பொதுநல வழக்கினை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு மும்பையில் சர்தார்ஜிகளை கிண்டல் அடித்து 'ச…
-
- 1 reply
- 363 views
-
-
ஆடியே கலவரத்தை அடக்கிய பெண் பொலிஸ் அதிகாரி (வீடியோ) அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில், பொலிசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்தக் குழுக்களுக்கிடையேயான சண்டையை நிறுத்தி அங்கே குழுமியிருந்த கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் ஒரு பெண் பொலிஸ் அதிகாரி ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த இளைஞர் கூட்டத்தில் இருந்த ஒரு 17 வயது பெண், பொலிசாரை வெறுப்பேற்றும் விதமாக ‘வாட்ச் மீ’ (சைலண்ட்டோ) என்கிற பிரபலப் பாடலைப் போட்டு திடீரென ஆடத் தொடங்கினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பொலிஸ் அதிகாரி அந்தப் பெண்ணின் மீது மிளகு தெளிப்பானையோ, தடியடியையோ பயன்படுத்த முயற்சிக்காமல், அவருக்கு இணையாக இன்னும் சிறப்பாக …
-
- 1 reply
- 463 views
-
-
48,000 செல்லிடத் தொலைபேசிகளை பழுதுபார்த்த சவூதி அரேபியாவின் முதலாவது பெண் தொலைபேசி திருத்துனர் 2015-10-29 09:05:32 சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், செல்லிடத் தொலைபேசி பழுது பார்க்கும் தொழிலை ஆரம்பித்து, 48,000 இற்கும் அதிகமான தொலைபேசிகளை பழுதுபார்த்துள்ளார். மரியம் அல் சுபேய் எனும் இப்பெண், சவூதி அரேபியாவில் செல்லிடத் தொலைபேசி திருத்துனராக பணியாற்றும் முதலாவது பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபிய தலைநகர் றியாத்தில், மரியம் அல் சுபேயின் தொலைபேசி பழுதுபார்க்கும் நிலையம் அமைந்துள்ளது. இவர் பெண்களுக்கு மாத்திரமே இச்சேவையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. தினமும் 90 முதல் 120 வரையி…
-
- 0 replies
- 349 views
-
-
ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததால் புது மனைவியை விவாகரத்துச் செய்த கணவன் தமது வீட்டின் ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததை அபசகுனமாகக் கருதி தனது புது மனைவியை திருமணமாகி இரண்டே நாட்களில் கணவர் ஒருவர் விவாகரத்துச் செய்த சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. திருமணமாகி புதுமணத் தம்பதிகளாக அவர்கள் இருவரும் தமது வீட்டில் பிரவேசித்த வேளை, அந்த வீட்டின் ஜன்னல் திரைச்சீலை தானாக கழன்று விழுந்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு உணவு பரிமாற வந்த ஊழியரும் அவர்களுக்கு உணவைப் பரிமாறிய வேளை கால் தடுக்கி விழுந்துள்ளார். மேலும் அந்தக் கணவர், தனது கையிலிருந்த வாசனைத் திரவிய போத்தல் குறித்து தனது மனைவி விமர்சித்த வேளை அந்தப் போத்தலை அவர் கைதவறி கீழே நழுவவிட நேர்ந்துள்ளது. இதனைய…
-
- 3 replies
- 428 views
-
-
ஊழியர்களுடன் தகராறு செய்ததால் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பாடகி 2015-10-27 16:30:14 பிரிட்டனின் பிரபல பாடகியும் முன்னாள் மொடலுமான சமந்தா பொக்ஸ், தகராறு செய்ததால் விமானமொன்றிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 49 வயதான சமந்தா பொக்ஸ், கடந்த வாரம் லண்டனிலிருந்து லித்துவேனியாவின் வில்னியுஸ் நகருக்கு செல்லும் விமானமொன்றில் ஏறியிருந்தார். ஆனால், விமான ஊழியர்களுடன் அவர் தகராறு செய்ததால் விமானத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். இசை நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்காகவே லித்துவேனியாவுக்கு சமந்தா பொக்ஸ் புறப்பட்டார். இதற்காக, அவர் விஸ் எயார் விமானமொன்றில் ஏறியிருந்தபோதே தகராறு செய்ததாகத் தெரிவிக்க…
-
- 0 replies
- 243 views
-
-
நடிகை அனுஷ்காவை திருமணம் செய்ய மறுத்த கோஹ்லி மும்பை: நடிகை அனுஷ்கா சர்மாவை இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மறுத்துள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. தங்களின் காதலை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த அவர்கள் அண்மையில் தான் அதை வெளிப்படையாக தெரிவித்தனர். அனுஷ்காவும், கோஹ்லியும் அவர்களின் காதலை ரகசியமாக வைத்திருந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் காதலிக்கத் துவங்கியதுமே அந்த விஷயம் பாலிவுட் முழுவதும் பரவிவிட்டது. பின்னர் மீடியாவுக்கும் அந்த செய்தி கசிந்துவிட்டது. அனுஷ்காவுக்கு இந்த ஆண்டே கோஹ்லியை திருமணம் செய்து செட்டிலாக ஆசை. ஆனால் கோஹ்லியோ திருமணத்த…
-
- 2 replies
- 400 views
-
-
விமான நிலைய தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஒளிபரப்பு விமான நிலையமொன்றை சென்றடைந்த விமானப் பயணிகள் தமது பொதிகளைப் பெற்றுக்கொள்ள சென்றபோது, அங்குள்ள தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஒளிபரப்பாகியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் போர்த்துகலில் இடம்பெற்றுள்ளது. போர்த்துகலின் தலைநகர் லிஸ்பனில் உள்ள விமான நிலையமொன்றில் கடந்த திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது. அதிகாலை 3.00 மணியளவில் பயணிகள் பொதிகளை எடுக்கச் சென்றபோது, ஆபாசப்படமொன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. சுமார் 7 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக லிஸ்பன் விமான நிலைய பேச்சாளர் ஒருவர் கூறுகையில், “அவ்வேளையில் மேற்படி தொலைக்காட்சி போர்த்துகல் அலைவரிசையொன்…
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
அரேபியர்களும் யூதர்களும் இணைந்து உணவு உட்கொண்டால் பாதி கட்டணம் மாத்திரம் அறவிடும் இஸ்ரேலிய உணவகம் இஸ்ரேலிலுள்ள உணவகமொன்று யூதர்களும் அரேபியர்களும் இணைந்து உணவு உட்கொண்டால் பாதி விலைக்கு உணவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இஸ்ரேலியர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்காக இந்தத் தீர்மானத்தை தான் மேற்கொண்டதாக இஸ்ரேலிய உணவகத்தின் உரிமையாளர் கோபி ஸப்ரிர் தெரிவித்துள்ளார். உணவகத்தின் உரிமையாளர் கோபி ஸப்ரிர் .................................................................................. “அரேபியர்களைக் கண்டு பயப்படுகிறீர்களா? யூதர்களைக் கண்டு அஞ்சுகிறீர்களா? எம்மைப…
-
- 6 replies
- 471 views
-
-
நிர்வாணமாக நின்ற பயணி : விமானம் அவசரமாக தரையிறக்கம் போர்த்துக்கல் நாட்டு விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர் மது போதையில் ஆடைகளை களைந்து விட்டு, விமானப் பணிப் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சன் எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஒன்று போர்த்துக்கல் நாட்டின் டப்ளின் விமான நிலையத்தில் இருந்து துருக்கி நோக்கி பயணித்தபோதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. விமானம் நடுவானில் பறக்கத் தொடங்கியதும், அதில் பயணித்த நபர் ஒருவர் மது போதையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில், தனது ஆடைகளைக் களைந்து, விமானப் பணிப்பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடக்கத் தொடங்கியுள்ளார். இதனையடுத்து, விமானம் அவசரமாக பெல்கிரேடில் தரையிறக்கப்பட்டு குறித்த பயணி விமான நிலைய பாதுகாப்பு அத…
-
- 1 reply
- 532 views
-
-
ஒரே செடியில் பூத்த 1,500 பூக்கள் 1,500 பூக்களைக் கொண்ட பூச்செடியொன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. செவ்வந்தி (கிரிஷாந்திமம்) இனத்தைச் சேர்ந்த இந்த பூச்செடி, சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ளது. நான்கு வருட கால முயற்சியினால் உருவாக்கப்பட்ட இந்த மலர்ச்செடி 3.8 மீற்றர் விட்டத்தைக் கொண்டுள்ளது. இதில் 641 வகையான 1500 மலர்கள் பூத்துள்ளன. உலகில் ஒரே தடவையில் மிக அதிக மலர்களைக் கொண்டிருந்த பூச்செடியாக கடந்த கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் இச்செடி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இதற்கான சான்றிதழ் கையளிக்கப்பட்டது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=12857#sthash.KweES7ap.dpuf
-
- 0 replies
- 321 views
-
-
நீச்சலுடைகளுடன் வருபவர்களுக்கு இலவசமாக எரிபொருள் யுக்ரைனிலுள்ள எரிபொருள் நிலையமொன்றுக்கு நீச்சலுடைகளுடன் வருபவர்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கப்படும் என எரிபொருள் நிலைய நிர்வாகம் அண்மையில் அறிவித்திருந்தது. அதையடுத்து பெரும் எண்ணிக்கையானோர் மேற்படி நீச்சலுடைகளுடன் எரிபொருள் நிலையத்துக்குச் சென்றனர். யுக்ரைனின் தலைநகர் கீவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமே கோடைக்கால வேடிக்கையாக இந்த அறிவிப்பை விடுத்திருந்தது. ஆனால், பெரும்பாலானோர் வேடிக்கையைவிட, பணத்தை சேமிப்பதற்காகவே இதில் பங்குபற்றினர் என தாம் கருதுவதாக வாடிக்கையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=12833#sthash.ZhkUq4RQ.dpuf
-
- 3 replies
- 392 views
-
-
எங்கள் நாட்டை மீள எடுத்துக்கொள்ளுங்கள்! இங்கிலாந்து ராணியிடம் கெஞ்சும் அமெரிக்கர் அரசியல்வாதிகளின் பேச்சை சகிக்கமுடியாத ஒரு அமெரிக்கர் ’தயவு செய்து எங்கள் நாட்டை மீண்டும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று இங்கிலாந்து ராணியிடம் கெஞ்சி கடிதம் எழுதியுள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட நடந்துவரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அக்கட்சியை சேர்ந்த 11 வேட்பாளர்கள், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் விவாதத்தில் ஈடுப்பட்டனர். இவர்களின் விவாதத்தை பார்த்து கடும் வெறுப்படைந்த ஒரு அமெரிக்கர், இங்கிலாந்து ராணிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் ”பிரிட்டனின் அரசாட்சிக்கு கீழ் அமெரிக்காவை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்ற…
-
- 4 replies
- 397 views
-
-
20 ஆண்டுகளாக பஞ்சுகளை மட்டுமே உண்டு வாழும் வினோத பெண் (வீடியோ) சமையலறையில் பயன்படுத்தும் பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பழக்கத்துக்கு பெண் ஒருவர் அடிமையாக உள்ளார். இங்கிலாந்தின் வால்சென்ட் பகுதியில் குடியிருந்து வரும் 23 வயதான எம்மா தாம்சன் என்ற இளம்பெள் நாள் ஒன்றுக்கு 20 பஞ்சுகளை சுவைத்து சாப்பிடுகிறார். தனது 3-வது வயதில் குளியலறை பஞ்சை முதன் முறையாக சுவைத்து பார்த்த எம்மா, அதைத் தொடர்ந்து சமையலறையில் பயன்படுத்தும் பஞ்சை சாப்பிடத் துவங்கியுள்ளார். பீகா (Pica) எனப்படும் ஒருவித நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதுபோன்று சத்துக்கள் எதுவும் இல்லாத பொருட்களை உணவாக உட்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாத்திரம் துலக்கும் திரவத்தில் ஏற்கெனவே ஊறப்போட்டு வைத்திருந்த…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஓநாய் போல ஊளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த இங்கிலாந்து ஆர்வலர்கள்! (வீடியோ) லண்டன்: இங்கிலாந்தில் ஓநாய் ஆர்வலர்கள் ஓநாய் போலவே ஊளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. இங்கிலாந்தின் லெய்டன் புசார்ட் நகரின் பூங்காவில் கடந்த சனிக்கிழமை, ஓநாய் பற்றாளர்கள் 464 பேர் ஒன்றுதிரண்டு, ‘ஒரே வார இறுதியில் அதிகம் பேர் ஊளையிட்டதற்கான’ கின்னஸ் சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளனர். இதில் பலர் தமக்கு விருப்பமான ஓநாய்களைப் போல அலங்காரத்துடன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது, வித்தியாசமான உடை அலங்காரங்களுடன் மக்களால் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையை வரவேற்கும் விதத்திலும் அமைந்திருந்தது. ஏற்கெனவே கடந்த 2013-ம் ஆண்டு, அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தின் செயின்…
-
- 1 reply
- 312 views
-
-
இலங்கையில் பளகோல்ல போலீஸ் பகுதியில் வசிக்கும் 2 பிள்ளிகளின் தாய் மனோஹரி ச்சாமரி ஹேவகே தனது தந்தையாரை பல வருடங்களாக நாய்கள் வளர்க்கும் நாய்கூட்டில் சங்கிலியால் பிணைத்து பராமரித்து / கஷ்டப்படுதிய கொடுமைக்காய் விசாரணை செய்யப்பட்டார். https://youtu.be/bqufmUUAF9g https://youtu.be/bqufmUUAF9g
-
- 0 replies
- 313 views
-
-
பறக்கும் விமானத்தில் 'குவா குவா'! சீனாவில் இருந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில், சீன பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார். விமானம் பறந்து கொண்டிருக்கும்போது, விமானத்தில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ஒரு சீன பெண்ணுக்கு வயிறு வலிக்க ஆரம்பித்தது. இதையடுத்து அதே விமானத்தில் பயணித்த மருத்துவர் ஒருவர், அந்த பெண்ணுக்கு பிரவசம் பார்த்தார். குழந்தை சுகப்பிரவசமாக பிறந்தது. தொடர்ந்து அலாஸ்காவில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.vikatan.com/news/article.php?aid=53736
-
- 3 replies
- 1k views
-