செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
அணிந்திருந்த ஆடைகளை கலைந்து எலும்புக்கூடு ஆடைகளுடன் கற்பித்த ஆசிரியை நெதர்லாந்தில் ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும்படி வினோதமான முறையில் உயிரியல் பாடம் எடுத்துள்ளார். நெதர்லாந்தின் க்ரோயன் ஹார்ட் ரிஜ்ன்வூட் என்ற பள்ளியில், டெபி என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தனது இளமையான யோசனையால் மாணவர்களின் மனதைத் தொட்டிருக்கின்றார். இவர் ஒரு நாள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மனித உடற்பாகங்கள் சம்பந்தப்பட்ட பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் இவருக்கு வித்தியாசமான ஒரு யோசனை தோன்றியுள்ளது. அதாவது தனது நகரில் எலும்புக்கூடைப்போல வடிவமைக்கப்பட்ட ஆடைகளை பெண்கள் அணிந்துபோவதை, டெபி என்ற குறித்த ஆசிரியை அவ்வப்போது கவனித…
-
- 2 replies
- 560 views
-
-
ரூ.21 லட்சம் பணத்துடன் சீனரின் சடலம் எரிப்பு: மகன்கள் கைவிட்டதால் கடைசி ஆசை சீனாவில், ஒரு மனிதரின் கடைசி ஆசைப்படி அவர் சேமித்து வைத் திருந்த சுமார் ரூ.21 லட்சம் அவரின் உடலுடன் சேர்த்து தகனம் செய்யப் பட்டது. அவரின் இரு மகன்கள் அவரைப் புறக்கணித்ததால், பணத்தையும் தன்னுடன் சேர்த்து எரிக்க வேண்டும் என அவர் தனது கடைசி ஆசையை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார். கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த விவசாயி தாவோ. இவர் தனது சேமிப்பான ரூ.21 லட்சத்தை தனது மகன் களுக்கு கொடுக்க விரும்ப வில்லை. அவரின் இறுதிக்காலத் தில் இரு மகன்களும் அவரைக் கவனித்துக் கொள்ளாதது அவ ருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தன் விவசாய நிலத்ததை இரு மகன்களுக்கும் பகிர்ந்து கொடுத்துவ…
-
- 3 replies
- 477 views
-
-
வை-பை அலர்ஜியால் பிரெஞ்சு அரசிடமிருந்து நஷ்ட ஈடு பெற்ற பெண் தனக்கு வைபை (WiFi) சூழலில் இருப்பது அலர்ஜியானது எனக்கூறிய பிரான்ஸை சேர்ந்த பெண்ணொருவருக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு அந்நாட்டு அரசாங்கத்துக்கு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. மார்ட்டினி ரிச்சர்ட் எனும் இப்பெண்ணுக்கு 800 யூரோ (சுமார் 124,000 ரூபா) நஷ்ட ஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வைபை சூழல் தனக்கு அலர்ஜியானது என மார்டடினி கூறுகிறார். இந்நிலையில், தனது நகரம் வைபை மயமாக்கப்பட்டுள்ளதால் வேலைக்குச் செல்லமுடியாமல் ராஜினாமா செய்ததாகவும் வைபை இல்லாத கிராம மொன்றுக்கு தான் இடம்பெயர வேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ட்டினி ரிச்சர்ட்ஸுக்கு 800 யூரோ நஷ்டஈட…
-
- 2 replies
- 433 views
- 1 follower
-
-
வீதியில் சென்ற வாகனங்களுக்கு சில யார்கள் உயரத்தில் விமானம் பறந்து சென்றதால் பரபரப்பு கொஸ்தாரிக்காவில் பயணிகள் விமானமொன்று வீதியொன்றில் சென்ற வாகனங்களுக்கு சில யார் கள் உயரத்தில் பறந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினின் மட்றித் நகரிலிருந்து கொஸ்தா ரிக்காவிலுள்ள சான் ஜோஸ் நகருக்கு பயணித்த எயார்பஸ் 340 விமானமே இவ்வாறு பறந்துள்ளது. இந்த விமானம் சான் ஜோஸ் நகரிலுள்ள ஜுவான் சாந்த மரியா விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான நிலையில் கடும் காற்று காரணமாக அந்த விமானத்தின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டமை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://www.virakesari.lk/articles/2015/10/10/வீதியில்-சென்ற-…
-
- 0 replies
- 366 views
-
-
வலைத்தளங்களில் வைரலான ராஜீவ் காந்தி- சோனியா திருமண வீடியோ! புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரின் திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கருப்பு வெள்ளையில் பதிவு செய்யப்பட்ட இந்த அரிதான வீடியோ எதற்காக வெளியானது என்பது குறித்த காரணங்கள் தெரியவில்லை. முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் மூத்த மகனான ராஜீவ் காந்தி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் படித்தபோது இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவை சந்தித்தார். இருவரின் நட்பும் காதலாக மலர்ந்தது. இது அப்போது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் கடந்த 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி, இருவருக்கும் திருமணம் டெல்லியில் நம்பர் 1 சப்தர்ஜுங் சாலையில் உள…
-
- 0 replies
- 437 views
-
-
ஜெர்மனியில் நடந்த ‘குண்டு’ பூசணிக்காய் போட்டி.... பரிசைத் தட்டிச் சென்ற 812.5 கி பூசணி! லுட்விக்ஸ்பர்க், ஜெர்மனி: ஜெர்மனியில் நடந்த பிரமாண்ட பூசணிக்காய்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் ராபர்ட் ஜேசர் என்பவருடைய பூசணிக்காய் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது. இந்தப் பூசணிக்காயின் எடை 812.5 கிலோவாகும். இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிக அதிக எடை கொண்ட பூசணிக்காய் என்ற புதிய சாதனையையும் ஜேசரின் பூசணிக்காய் படைத்துள்ளது. ஆண்டுதோறும் ஜெர்மனியில் நடந்து வரும் பூசணிக்காய் போட்டியாகும் இது. லுட்விக்ஸ்பர்க் பூசணித் திருவிழா... இந்தப் போட்டி, லுட்விக்ஸ்பர்க் பூசணித் திருவிழாவின் ஒரு பகுதியாகும். இந்தத் திருவிழாவானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற…
-
- 1 reply
- 466 views
-
-
கொடிய உயிர்க்கொல்லியான ‘எபோலா’ நோயினால் குடும்பத்தை இழந்து பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்துள்ள வாலிபர் ஒருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சிரா லியோன். 2013ம் ஆண்டு உலகையே உலக்கிய ‘எபோலா’ நோய்க்கு இந்த நாட்டில் வசிப்பவரே அதிக எண்ணிக்கையில் பலியாகியுள்ளனர். இதே நாட்டை சேர்ந்த ஜிம்மி தொரோன்கா(20) என்பவர் அந்நாட்டில் தடகள விளையாட்டு போட்டியில் முன்னணியில் உள்ள ஒரு வாலிபர் ஆவர். ஆனால், துரதிஷ்டவசமாக எபோலா நோய் தாக்கியதில் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்…
-
- 0 replies
- 178 views
-
-
பேஸ்புக் இயங்கவில்லையா? எம்மை அழைக்காமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் - பிரித்தானிய பொலிஸார் அறிவுரை கடந்த திங்கட்கிழமை இரவு பல மணித்தியாலங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளம் முடங்கியதால் உலகம் முழுவதும் பேஸ்புக் பாவனையாளர்கள் திணறிப் போயினர். அதிதீவிர பேஸ்புக் அபிமானிகள் சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவங்களும் சில நாடுகளில் இடம்பெற்றுள்ளமை வேடிக்கையானது. பிரிட்டனிலும் பலர் இவ்வாறு பொலிருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பல்வேறு பணிகளில் மூழ்கியிருக்கும் தமக்கு பேஸ்புக் இயங்காதுள்ளமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டமை பொலிஸாருக்கு விசனத்தை ஏற்படுத்தியது. …
-
- 2 replies
- 429 views
-
-
கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் முன்னாள் கணவர் அதிபன் போஸ் இப்போது சாமியார் ஆகி விட்டார். கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் முன்னாள் கணவன் அதிபன் பிரபல தொழிலதிபராக விளங்கினார். இப்போது அமெரிக்காவில் காவி வேட்டி கட்டி சாமியாரக செட்டிலாகி விட்டார். இப்பொது தமிழ்நாட்டிலும் ஆன்மீக கருத்துக்களை பரப்ப இருக்கிறார். அமெரிக்காவில் தனக்கு ஒரு லட்சம் சீடர்கள் இருப்பதாக கூறும் இவர் சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் “சிறு வயதிலிருந்தே எனக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டு. கனிமொழியுடன் திருமணம் நடந்த பிறகு என் வாழ்வில் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அப்போது நான் உயிருடன் இருக்கும்போதே இறந்து, என் ஆத்மா என்னை விட்டு வெளியேறியது ப…
-
- 0 replies
- 386 views
-
-
இந்தோனேசியாவில் 2 குழந்தைகள் உள்பட 10 பேருடன் கிளம்பிய விமானம் மாயம் ஜகார்தா: இந்தோனேசியாவில் 10 பேருடன் கிளம்பிய சிறிய ரக விமானம் சுலாவெசி தீவில் மாயமாகியுள்ளது. இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் உள்ள மசாம்பாவில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான நிறுவனமான ஏவியஸ்டருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் 10 பேருடன் கிளம்பியது. 2 குழந்தைகள் உள்பட 7 பயணிகள், 3 விமான ஊழியர்களுடன் விமானம் மகாசாருக்கு கிளம்பியது. இந்நிலையில் விமானம் கிளம்பிய வேகத்தில் ரேடாரில் இருந்து மாயமாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேட மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விமானம் கிளம்பிய 7வது நிமிடத்தில் ரேடாரில் இருந்து மாயமானதாக போக்குவரத்து அமைச்சக செய்…
-
- 0 replies
- 190 views
-
-
சென்னை நந்தனத்தில் வாழும் பால'சிவாஜி'! ஒரு நடிகரின் பரம ரசிகராக இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் அந்த பரம ரசிகர், முகத்தோற்றத் தில், தான் விரும்பும் நடிகரைப் போலவே இருப்பது அரிதிலும் அரிது. பிரபல நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், வடிவேலு போலவே முகத்தோற்றமும், உடல் அமைப்பும் கொண்டவர்களை தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். அவர்கள், அந்த நடிகர்கள் குறிப்பிட்ட சில திரைப்படங்களில் இடம்பெற்ற தோற்றங்களை ஒத்திருப்பர். ஆனால் சென்னை நந்தனத்தில் வசிக்கும் சிவாஜியின் தீவிர ரசிகரான பாலசுப்ரமணியம் எனும் பாலசிவாஜி, தன் இளமைப் பருவம் தொடங்கி, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போலவே தோற்றமளிக்கிறார். 60 களில் பாசமலர் சிவாஜியை போல்…
-
- 1 reply
- 488 views
-
-
பானைக்குள் தலையைவிட்டு மாட்டிக்கொண்ட சிறுத்தை AP பீதியடைந்து ஊருக்குள்ளேயே சுற்றியலைந்த அந்த மிருகத்தை உள்ளூர்வாசிகள் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்தனர். PTI சிறுத்தை 5 மணி நேரத்திற்குப் பிறகு வனத்துறையினரால் விடுவிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பானைக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்ட ஆண் சிறுத்தை ஒன்று ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பானைக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்ட ஆண் சிறுத்தை ஒன்று ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. தண்ணீரைத் தேடி அலைந்தபோது, தவறுதலாக அந்தப் பானைக்குள் தலையை விட்டு சிறுத்தை மாட்டிக்கொண்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். பிறகு வனத்துறையினர் அந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டு, ப…
-
- 3 replies
- 714 views
-
-
வலியால் துடித்த தாய்க்கு பிரசவம் பார்த்து நெகிழ வைத்த 11 வயது மகன்! நியூயார்க்: பிரசவ வலியால் கதறித்துடித்து கொண்டிருந்த தாயின் அருகில் இருந்து, அவருக்கு ஆறுதலும், தைரியமும் அளித்து அவர் குழந்தை பெற்றெடுக்க உதவியாக இருந்துள்ளான் அமெரிக்காவை சேர்ந்த 11 வயது சிறுவன். அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள மரியேட்டா பகுதியை சேர்ந்தவர் கென்யார்டா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு குறிப்பிடப்பட்டிருந்த தேதிக்கு முன்னதாகவே திடீரென பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. அப்போது வீட்டில், அவருடைய 11 வயது மகனை தவிர யாரும் துணைக்கு இல்லாததால் அவர் வேதனையால் துடிதுடித்துப் போயுள்ளார். அந்த நேரத்தில், பிரசவ வலியால் தனது தாய் கதறி துடித்துக்கொண்டிருப்பதை வீட்டில் விளையாடிக் கொண்டி…
-
- 1 reply
- 340 views
-
-
நட்ட நடு ரோட்டில்... பலரும் பார்க்க... ஒரு ஐ போனுக்காக இப்படியா? ஹாங்காங்: தனது பாய் ஃபிரண்ட் ஐ போன் 6 s வாங்கித் தரவில்லை என்பதற்காக, சீனாவில் இளம்பெண் ஒருவர் நடு ரோட்டில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம், சீனாவின் நான்ஜிங் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பாய் ஃபிரண்டுடன் பிசியான மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அப்போது தனக்கு ஐ போன் 6 s வாங்கி தருமாறு தனது பாய் ஃபிரண்டிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தற்போது வாங்கித் தர முடியாது எனக் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த அந்த பெண், ஏன் வாங்கித் தரமுடியாது என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் …
-
- 1 reply
- 596 views
-
-
மும்பையில் விநாயகர் சதூர்த்திக்காக அமைக்கப்பட்ட பந்தலில் இஸ்லாமியர்கள் பக்ரீத் தொழுகைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மும்பையின் கொலபா நகரில் உள்ள மசூதி ஒன்றில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் எதிர்பாரதவிதமாக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகைக்கு வந்ததால், ஏராளமானோர் மசூதியின் வாயிலில் நின்று கொண்ட படி தொழுகையில் ஈடுபட்டனர். மசூதியின் அருகே விநாயகர் சதூர்த்திக்காக பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இடப்பற்றாக்குறை குறித்து அறிந்த இந்து அமைப்பாளர்கள், விநாயகர் சதூர்த்திக்காக அமைக்கப்பட்ட பந்தலை பயன்படுத்துமாறு இஸ்லாமியர்களிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பந்தலில் அமர்ந்து இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு…
-
- 3 replies
- 704 views
-
-
வீதிக் காவல் தடையைத் தாண்டி பாப்பரசரிடம் தனிப்பட்ட கடிதத்தைக் கையளித்த 5 வயதுச் சிறுமி அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ் வாஷிங்டன் நகரிலுள்ள வீதியொன்றினுடாக தனது விசேட வாகனத்தில் புதன்கிழமை பயணித்த போது, 5 வயது சிறுமியொருவர் ஒருவாறு பாதுகாப்பு தடையைத் தாண்டி வந்து பாப்பரசரிடம் தனிப்பட்ட கடிதமொன்றை கையளித்து பாப்பரசரது மட்டுமல்லாது அங்கு கூடியிருந்த அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கொன்ஸ்ரிரியூஷன் வீதியின் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடைகளுக்கு அப்பால் பாப்பரசரை காணும் முகமாக கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களில் சோபி குரூஸ் என்ற மேற்படி சிறுமியும் ஒருவ…
-
- 1 reply
- 336 views
-
-
( எம். செல்வராஜா ) நீதிமன்றத்தினால் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டு பதினேழு வருடங்களுக்குப் பின்னர் தன்னை சந்திக்க வந்த கணவனை, மனைவி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று எல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், மனைவியை விட்டுப் பிரிந்ததினால் அவருக்கெதிராக மனைவினால் தொடரப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், பல நீதிமன்ற அழைப்பாணைகளை புறக்கணித்தமையினால் பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 1998 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி குறிப்பிட்ட நபருக்கு எதிராக பிடி விறாந்தினை பிறப்பித்திருந்தது. அதன் பின்னர் கடந்த பதினேழு வருடகாலமாக மனைவியையோ பிள்ளைகளையோ பார்க்க வ…
-
- 2 replies
- 332 views
-
-
ரஷ்யாவில் நள்ளிரவில் பேய் வேடம் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்திய நபர் துப்பாக்கியால் சுடப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் விளாடிமர் டசபாவ் சொந்தமாக நகைச்சுவை இணையதளத்தை நடத்தி வருகிறார். இந்த இணையதளத்தில் அவர் பல்வேறு நகைச்சுவை வீடியோக்களை பதிவேற்றம் செய்து உள்ளார். இந்நிலையில் புதிய நகைச்சுவை காட்சிகளை படம் பிடிக்க திட்டமிட்ட விளாடிமர், நள்ளிரவில் பேய் வேடமிட்டு, ஏமாளிகளுக்காக காத்திருந்தார். நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் ஒரு இளைஞர் வருவதை அறிந்த விளாடிமர் அவரை நோக்கி நடந்து சென்றார். ஆனால் பேய் வேடமணிந்த விளாடிமரைக் கண்டு சிறிதும் பயப்படாத அந்த இளைஞன், அவரை சரமாரியாக தாக்கினார். கிழே விழுந்த விளாடிமரை நோக்கி அந்த இளைஞ…
-
- 0 replies
- 225 views
-
-
சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு முன்பு இளம் தீவிரவாதி ஒருவர் பயத்தின் காரணமாக கதறி அழுத காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். அமைப்பு, அல்கொய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து பல தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் சிரியாவில் உள்ள இரண்டு கிராமங்களை குறிவைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள், தற்கொலைப்படை தாக்குதலை நடத்த திட்டமிட்டது. அதற்காக தங்கள் அமைப்பில் உள்ள உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜாஃபர் அல் தையர் என்ற இளைஞரை ஐ.எஸ். தேர்ந்தெடுத்தது. தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஜாஃபர் அல் தையருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரியாவிடை அளித்தனர். அந்த இளைஞரை கட்டிப்பிடித்து தாக்குதல் வெற்றி பெற…
-
- 5 replies
- 537 views
-
-
மணக் கோலத்தில் ஓடோடி சென்று வாலிபரின் உயிரை காப்பாற்றிய பெண்! (வீடியோ) திருமணம் முடிந்த கையோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரின் உயிரை, மணப்பெண் கோலத்தில் இருந்த செவிலியர் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது சீனாவை சேர்ந்த கு யங்குவான் என்ற 25 வயதுடைய இளம்பெண், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் இதயநோய் பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன், தனது கணவரோடு சீனாவின் டாலியான் கடற்கரையில், அழகிய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த கடற்கரையில் நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென மூச்சடைத்த நிலையில் மயங்கி சரிந்துள்ளார். இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் கூட்டமாக கூட…
-
- 0 replies
- 419 views
-
-
''ஹப்பி பேர்த்டே ...'' பாடலுக்கு காப்புரிமக் கட்டுப்பாடு கிடையாது bbc ''ஹப்பி பேர்த்டே ...'' பாடலுக்கு காப்புரிமக் கட்டுப்பாடு கிடையாது ''ஹப்பி பேர்த்டே டூ யூ'' என்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வரிகளை இனி எவரும் காப்புரிமத்தால் தடுத்து வைக்க முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருக்கிறது. ''ஹப்பி பேர்த்டே டூ யூ'' என்ற ஆங்கில மொழியின் மிகவும் பிரபலமான பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வரிகளை இனி எவரும் காப்புரிமத்தால் தடுத்து வைக்க முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருக்கிறது. இன்னுமொரு நிறுவனத்திடம் இருந்து இந்தப் பாடலை தாம் 1998இல் வாங்கியதாக வார்னர் சப்பல் மியூசிக் நிறுவனம் வாதிடுகிறது. ஆனால், அந்தப் பாடலை பியானோவில் வாசிக்கும் ஒரு குறி…
-
- 0 replies
- 395 views
-
-
செக். குடியரசு ஜனாதிபதியின் கொடிக்குப் பதிலாக பாரிய உள்ளாடையை பறக்கவிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் செக். குடியரசின் ஜனாதிபதி மாளிகையின் கூரையிலுள்ள கொடிகம்பத்தில் அந்நாட்டு ஜனாதிபதியின் கொடிக்கு பதிலாக பாரிய உள்ளாடையொன்று அண்மையில் பறக்கவிடப்பட்டிருந்தது. செக். குடியரசு ஜனாதிபதி மிலோஸ் ஸெமேனுக்கு எதிரான கலைஞர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை இந்த உள்ளாடையை பறக்க விட்டிருந்தனர். ஜனாதிபதி மிலோஸ் ஸெமன், சீனா, ரஷ்யா நாடுகளுடன் ஆரோக்கி யமற்ற வகையில் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாக மேற்படி கலைஞர்கள் குழு குற்றம் சுமத்துகின்றனர். மேற்படி பாரிய உள்ளாடையின் சிவப்பு நிறமானது இந்த தொடர்புகளை பிரதிலிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். செக் குடியரசின் தலைநகர் பிரேக்க…
-
- 0 replies
- 338 views
-
-
டொமினிகன் குடியரசு நாட்டில் பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறும் வினோதம் நிகழ்கிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் தான் இந்த நிகழ்வு நடக்கிறது. அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறுகின்றனர். பெண் குழந்தையாக பிறந்து சிறுமி ஆக வளரும் பெண் 12 வயதில் பருவம் அடையும் போது சிறுவனாகிறான். அதாவது 12 வயது தொடங்கும் போது சிறுமியாக இருக்கும் பெண்ணுக்கு பெண்ணுறுப்பு மறைந்து ஆணுறுப்பு உள்ளிட்டவை தோன்றுகிறது. தற்போது இது குறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வளர்ச்சி 5 வயதில் ஏற்பட தொடங்குகின்றன. உடலில் உள்ள ஹார்மோஙளில் குறிப்பிட்ட ஒன்றின் குறைபாடுகளால…
-
- 0 replies
- 258 views
-
-
விதவிதமான பொம்மைகளால் நிறைந்த விநோத தீவு! மெக்ஸிகோவில் அமைந்துள்ள பொம்மைகளின் தீவில் எங்கு பார்த்தாலும் விதவிதமான பயத்தை ஏற்படுத்தும் வகையில் பல வித பொம்மைகள் காட்சியளிக்கின்றன. பெரேரா என்ற நபர் எஸ்ஸோ சிமில்கோ-வில் உள்ள அந்த தீவு பகுதிக்கு சென்ற போது சிறுமி ஒருவர் கால்வாயில் சடலமாக கிடந்ததை பார்த்துள்ளார். அருகில் அந்த சிறுமியின் பொம்மை ஒன்று கிடந்துள்ளது. பெரேரா அந்த பகுதியில் தங்கிய போது, இரவு வேளைகளில், யாரோ நடப்பது போன்ற கால் தடம் பதிக்கும் சத்தமும் பெண் ஒருவரின் அழுகுரலும் கேட்டுள்ளது. இதையடுத்து, பெரேரா அந்த பொம்மையை ஒரு மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளார். 50 ஆண்டுகளில் தொடர்ந்து சைனாம்பஸ் என்ற பகுதியில் உள்ள பல மரங்களில் பலவிதமான பொம்மைகள…
-
- 0 replies
- 362 views
-
-
பெண்களின் கண்ணீரைத் துடைக்க வாடகை ஆண்கள் பெண்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு ஆண்களை வாடகைக்கு விடும் ஒரு புதிய வர்த்தகத்தை ஜப்பானிய நிறுவனமொன்று தொடங்கியுள்ளது. ஐக்கேம்மேசோ டான்ஷி என்ற நிறுவனம் பெண்களுக்கு சேவை செய்வதற்காக அழகான ஆண்களை பணிக்கமர்த்தியுள்ளது. மன அழுத்தத்தில் உள்ளவர்கள், தங்கள் துன்பங்களை பகிரக்கூட ஒரு ஆண் துணை இல்லாதவர்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு, தங்களுக்கு பிடித்தமானவர்களை தெரிவுசெய்து கொள்ளலாம். ஆணாதிக்கமுள்ள சூழ்நிலையில், வேலை செய்யும்போது ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க இந்த ஆண்கள் உதவி செய்வார்கள். அந்தப் பெண்களுடன் அமர்ந்து படம் பார்ப்பது, அவர்கள் அழுதால் அவர்களின் கண்ணீரை துடைப்பது, அவர்களின் தோளில் கைவைத்து ஆறுதல் சொல்வது என இவர…
-
- 6 replies
- 1k views
-