Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அதிசயத் தகவல்கள்...! 1.நைல் நதியின் மேல் செல்லும் நீரோட்டத்தை விட அதன் அடிமட்டத்தில் பாயும் நீரின் வேகம் ஆறு மடங்கு அதிகமாக இருக்கும்.(எப்போதுமே உள்ளே என்ன நடக்கிறது என்று கணிப்பது கஷ்டம்தான்.) 2.ரோலர் கோஸ்டரில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் இரத்த அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.(ரோலர் கோஸ்டர் அப்படீனா என்ன?) 3.நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்(.நீல லென் மாட்டிக்கலாமா) 4.காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால்தான்.(அது எப்படின்னு சொல்லீட்டிங்கன்னா சௌகரியமா இருக்கும்.) 5.தேளை கொல்வதற்கு எளிய வழி.சிறிதளவு மதுபானத்தை தேளின் மீது ஊற்றினால் போதும் உடனே அது இறந்து விடும்.(மப்…

  2. இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனி நாஸி படைகள் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி டொலர் மதிப்புள்ள தங்கம், வைரம், கரன்சி புதையலை ரகசிய இடத்தில் பதுக்கி வைத்தனர். அந்த இடத்தை கண்டுபிடித்து விட்டதாக லியோன் கெய்சன் என்பவர் கூறியுள்ளார். ஜெர்மனியில் நாஸி படைகள் எதிரிகளிடம் இருந்து கொள்ளையடித்த பணம், தங்கம், வைரம் போன்றவை ஜெர்மனியின் பல இடங்களில் ரகசிய இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டன. இவை பல கோடி டொலர்கள் மதிப்புள்ளவை. இந்த புதையல்களை தோண்டி எடுக்கும் வேலையில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில்தான் பல ஆயிரம் கோடி டொலர்கள் மதிப்புள்ள புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாகக் கூறியிருக்கிறார் லியோன். ஏற்கனவே சிறு சிறு புதையல்களை கண்டறிந்த லியோன் கையில் இந்த …

  3. யாழில்... விரிவுரையாளரின் வீடு உடைத்து, ஒரு கோடி ரூபாய் பெறுமதியான... நகைகள் கொள்ளை!! யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. விரிவுரையாளரது குடும்பம் அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர், வீட்டில் அவர்கள் இல்லாத நேரத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளது என பொலிஸார்…

  4. ஜூலை 9, 1816- அர்ஜெண்டினா விடுதலையை அறிவித்த நாள் அர்ஜெண்டினா நாடு தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட நாள் இன்று. தென்னமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியில் அர்ஜெண்டினா உள்ளது. அர்ஜெண்டினா என்றால் லத்தீன் மொழியில் வெள்ளி என அர்த்தம். 16-ம் நூற்றாண்டில் இங்கு வெள்ளியிலான மலை இருப்பதாக நம்பி ஸ்பானியர்கள் அர்ஜெண்டினாவை ஆக்கிரமித்தனர். ஆனால், இங்கே வெள்ளி கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு அந்த அந்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டது. ஆனாலும் அர்ஜெண்டினா எனும் பெயரே நிலைத்துவிட்டது. ஸ்பானியர்களின் ஆட்சியும் 19-ம் நூற்றாண்டு வரை நிலைத்தது. ஸ்பெயின் நாட்டில் 1810-ல் நடந்த ஒரு புரட்சியில் அந்நாட்டின் அரசர் அரசராக ஏழாம் பெர்டினாண்டின் பதவி பறிபோனது. அவருக்கு அடுத்து முதலாம் நெப்ப…

  5. யாழில் சரிந்து விழுந்த 200 வருட பழைமை வாய்ந்த மலைவேம்பு மரம் By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 01:05 PM யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் சீரற்ற காலநிலையின் காரணமாக இருநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த மலைவேம்பு மரம் ஒன்று திங்கட்கிழமை (நவ. 14) இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்துள்ளது. குறித்த மரம் வீதியின் குறுக்காக சரிந்து விழுந்ததில் முன்னால் இருந்த வீட்டு மதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வீதியில் பயணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாண மாநகர சபையினரால் கச்சேரி நல்லூர் பிரதான வீதியானது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதோடு விழுந்த மரத்தினை அகற்றும் நடவடிக்கைகளை உரிய சம்பந்தப்பட்ட தரப்பினர் …

  6. மும்பை, மே 6: அமெரிக்காவையே கதிகலங்க வைத்த பின்லேடன் எப்படி கொல்லப்பட்டார் என்பதை அறிந்து கொள்ள பயங்கரவாதி அஜ்மல் கசாப் அதீத ஆர்வம் காட்டியதாகத் தெரியவந்துள்ளது. மும்பை தாக்குதல் வழக்கில் பிடிபட்டுள்ள அஜ்மல் கசாப் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுல்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்காவின் சிறப்பு கமாண்டோ படை சுட்டுக்கொன்று தூக்கிச் சென்றது குறித்து கசாபிடம் சிறைக் காவலர்கள் தெரிவித்தனர். இந்தத் தகவலை கேட்டதுமே கசாப் ஆர்வம் அடைந்தார். ஒசாமாவை கொன்றுவிட்டார்களா? என்ன சொல்கிறீர்கள்? அவரை யார் கொன்றது? எங்கு கொன்றார்கள்? எப்படி க…

    • 0 replies
    • 544 views
  7. Published By: VISHNU 12 FEB, 2024 | 09:36 PM கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள பரிதாப சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்திலேயே இந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது. கால்பந்துபோட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது மைதானத்தில் நின்ற 35 வயதான வீரர் மேல் மின்னல் தாக்கியுள்ள நிலையில் குறித்த வீரர் மைதானத்திற்குள் விழுந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கால்பந்துபோட்டியை நேரடியாக ஒளிபரப்புச் செய்துகொண்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது. …

  8. வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த யாழ் இளைஞர் விபத்தில் மரணம்! கனடா நாட்டிற்கு செல்வதற்கு தயாராக இருந்த இளைஞன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்., மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி – புத்தூர் வீதியில், நேற்று முன்தினம் இரவே இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த பகுதியில் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து, மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான். மட்டுவில் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பி.பானுஜன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த இளைஞன் இன்று கனடாவுக்கு பயணம் செய்வதற்கு தயாராக இருந்தவர்…

  9. பெப்ரவரி 2, 2012 ஈழத் தமிழர் குறித்த இந்தியாவின் வகிபாகம் குறைந்து செல்கின்றது. சீனாவுடனான நெருக்கத் திகிலில் ஈழத் தமிழர்களது விடயத்தில் இந்தியா விரும்பினாலும், சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாத நிலையில் உள்ளது. ஆனால், தமிழர் தளம் தன் கையை விட்டுப் போய்விட்டால், சிங்கள தேசத்தை மிரட்டும் ஒரே அஸ்திரமும் இல்லாமல், சிறிலங்கா ஊடான சீனாவின் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் ஈழத் தமிழர்கள் மீது கரிசனை கொள்வதாகப் பாவனை செய்கின்றது. இந்தியாவின் முழு வடிவத்தையும் புரிந்து கொண்ட ஈழத் தமிழர்கள் இந்தியாவை நம்புவதற்குத் தயாராக இல்லாத நிலையில், ஈழத் தமிழர்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தமிழகத்தில் கொந்தளிப்பை அதிகரித்து வருகின்றது. கருணாநிதி ஆட்ச…

  10. இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது. இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது. தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது. மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது. இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா,சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இ…

  11. நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனை, மரணம் கொடுக்கக்காத்திருக்கும் போதும் எங்கள் உணர்வுகளை சாகடித்துவிட்டு நடக்கமுடியாது. யாரெல்லாம் எமக்கு மரணம் கொடுத்தார்களோ அவர்களெல்லாம் புனிதர்களாகி வந்தார்கள், நாங்கள் சிந்திய இரத்தம் உறையும் முன்னர் தாய் மண்ணை முத்தமிடுவதாய் கூறிக்கொண்டு எங்கள் இரத்தத்தை சுவை பார்த்தவர்கள் மீட்பர்களாய் மாறி எம்மோடு நின்றபோதும் நிச்சயமாக எங்கள் உணர்வுகளை சாகடித்து விட்டு எம்மால் நடக்கமுடியாது. பூவோடு, காயும் துப்பாக்கிச் சன்னங்களால் கிழிக்கப்பட்டு வீசப்பட்டன, அந்தக் காமுகனின் தாய் வயதுப் பெண்ணும் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாளே. எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் இப்போதும் உயிரோடு இருக்கின்றது. நாம் பிரிந்து வாழ தமிழீழம் கேட்ட…

  12. 14,600 செம்மறியாடுகளுடன் கருங்கடலில் கவிழ்ந்த குயின் ஹின்ட் கப்பல்! ரொமேனிய கரையோரம், கருங்கடல் பகுதியில் 14,600 செம்மறியாடுகளை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்துள்ளது. சவுதி அரேபியாவுக்குச் செல்லும் வழியில் Queen Hind என்ற குறித்த கப்பல் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்று இன்னும் அறியப்படவில்லை. கப்பலிலிருந்து சிரியாவைச் சேர்ந்த 20 பேரும், லெபனானைச் சேர்ந்த ஒருவரும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் 32 செம்மறியாடுகளும் மீட்கப்பட்டுள்ளன. கப்பலின் சரக்கு கிடங்கில் உள்ள எஞ்சிய செம்மறியாடுகள் இன்னும் உயிருடன் இருக்கக்கூடும் என மீட்புக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கப்பலை நிலை நிறுத்தி அதனை மீண்டும் துறைமுகத்திற்கு இழுத்துச்செல்லும் பணிகள…

  13. இலங்கை தொடர்பான விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது இந்தியா மிக நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இலங்கைக்கான தனது ஆதரவை இந்தியா தொடருமானால் இலங்கைக்கு எதிராக இனிமேல் எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப் பட வாய்ப்பில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை மீது ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்த ஆண்டு முற்பகுதியில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்கியமை குறித்துக் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததிலிருந்து இது வரை இறுக்கமான கருத்தெதனையும் வெளிப்படுத்தாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தம…

  14. மட்டக்களப்பில் வௌவாலால் நடந்த விபரீதம் – தாதி மீது துப்பாக்கிச் சூடு மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3 ம் குறுக்கு வீதியில் தாதியர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பறவைகளை சுடும் துப்பாக்கி மூலம் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் எயார்கண் துப்பாகியைக் கொண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணியளவில் வீட்டின் மேல்மாடியில் இருந்து மரத்தில் இருந்த வௌவால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதன்போது சத்தம் கேட்டு எதிர்வீட்டில் இருந்து வெளியில் வந்த தாதி மீது குறி தவறி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த தாதி மட்டக்கள…

  15. விவேக்-நீது உடல் எடையை குறைக்க வேண்டி, அம்மருத்துவமனையின் 12வது மாடிக்கு நீது தினமும் படிகளின் வாயிலாகவே ஏறி, இறங்கினார். அதோடு தனக்குப் பிடித்தமான உணவு வகைகளான இனிப்பு, ஆயில் வகைகளைத் தன் கணவருக்காகத் துறந்து, கடினமான டயட்டையும் பின்பற்றினார். மாகாராஷ்டிராவில், தன் கணவருக்கு கல்லீரல் தானம் வழங்குவதற்காக மனைவி மேற்கொண்ட முயற்சிகள், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் மதுபானக்கடை வைத்திருப்பவர் விவேக் ஜெயின். ஒயின் ஷாப் நடத்தி வரும் விவேக் ஜெயின்(51) மது பழக்கத்திற்கு அடிமையானார். அளவுக்கு அதிகமான மது காரணமாக அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் கல்லீரல் …

  16. தந்தையின் சடலத்தை வணங்கி விட்டுப் பரீட்சை எழுதச் சென்ற மாணவி சிறுமி ஒருவர் உயிரிழந்த தன் தந்தையின் சடலத்தருகில் சென்று அப்பா நான் பரீட்சை எழுதச் சென்று வருகிறேன் எனக் கூறிச் சென்ற சம்பவம் ஒன்று அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. குறித்த மாணவி உயிரிழந்த தனது தந்தையின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் புலமை பரீட்சைக்கு சென்றுள்ளார். இச் சம்பவம் சுரியவெவ, விஹாரகல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த சிறுமியின் தந்தை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுப் பரீட்சைக்கு தயாரான சிறுமி முதலில் தாயாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர்…

  17. நடுவானில் 'சீட்' சண்டை: அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம். நியூயார்க்: அமெரிக்காவில் இருக்கை தொடர்பாக 2 பயணிகள் இடையே ஏற்பட்ட சண்டையால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூவார்க் நகரில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் டென்வருக்கு கிளம்பியது. விமானம் நடுவானில் பறக்கையில் அதில் இருந்த பயணி ஒருவர் தனக்கு முன்பு இருந்த இருக்கை பின்னால் சாயாதவாறு இருக்க தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தினார். முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்த பெண் பயணி தனது இருக்கையை பின்புறமாக சாய்க்க அது சாயவில்லை. இதையடுத்து இருக்கை சாயாமல் இருக்கும்படி செய்த அந்த ஆண் பயணியின் முகத்தில் அந்த பெண் பயணி ஒரு கப் தண்ணீரை ஊற்றினார். உடனே அவர்கள் இருவருக்கும் இட…

  18. விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்தவர் கைது: பணி நீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம்! KalaiJan 07, 2023 16:37PM விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். வேலைப் பார்த்த அமெரிக்க நிறுவனமும் அவரை பணிநீக்கம் செய்துள்ளது. அதேபோன்று சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனமும் தனது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர்இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது குடிபோதையில் இருந்த சகபயணி சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. AI 102 என்ற ஏர் இந்தியா விமானம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு பறந்து கொண்டிருந்த போது பிசினஸ் வகுப்பில் பயணம் செய்…

  19. பாலியல் குற்றத்திலிருந்து தப்பிக்க 'மரண' நாடகம் நடத்திய ஆசிரியர் சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,SWASTIK PAL படக்குறிப்பு, தன் மகளை பாலியல் வன்புணர்வு செய்தவரை தண்டிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்ததாக அச்சிறுமியின் தாயார் கூறினார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வட இந்திய மாநிலமான பிகாரில் கடந்தாண்டு ஒரு பெண்ணிடம் அவருடைய மகளை பாலியல் வன்புணர்வு செய்த நபர் இறந்துவிட்டதாகவும் அதனால் அவருக்கு எதிரான வழக்கு முடித்துவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதை எதிர்கேள்வி கேட்ட அந்த பெண் உண்மையை கண்டறிந்துள்ளார். இதனால், அந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு அப்பெண்ணுடை…

  20. வீரகேசரி இணையம் 7/7/2011 8:18:31 PM அமெரிக்காவின் நியூயோர்க்கில் மனித உடலில் எரிகாயங்கள் மற்றும் கண்களில் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய தாவர வகையொன்று வேகமாகப் பரவி வருவதாக அம் மாநில சுற்றாடல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'ஜயன்ட் ஹொக்வீட்' எனப்படும் இவ்வகை மரமானது சுமார் 12 அடி வரை வளரக் கூடியது. இம்மரத்தின் பூக்கள் குடைகள் போன்ற வடிவில் காணப்படும். இதன் பால் உடலில் பட்டு அவ்விடத்தில் சூரிய ஒளிக் கதிர்கள் படுமிடத்து மோசமான காயங்களை உண்டாக்கக் கூடியது. மேலும் கண்களில் பட்டால் நிரந்தரமாக குருடாக்கக் கூடிய தன்மை கொண்டவை. நியூயோர்க் நகரில் மாத்திரம் சுமார் 944 இடங்களில் இத்தாவரமானது இனங்காணப்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்த…

  21. எம்.றொசாந்த், நிதர்ஷன் வினோத் தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள குளிர்களி (ஐஸ் கிறீம்) விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதிக்கு கடை உரிமையாளர் தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டுவது, அவற்றை யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்புவது போன்ற பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதனை அடுத்து பாதிக்கப்பட்ட யுவதியால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கடை உரிமையாளரை கைது செய்து மல்லாகம் நீதவான…

  22. சிறுவனின் வாயில் முளைத்திருந்த 526 பற்கள் ஒரு மனிதனுக்கு 'அதிகபட்சம் 32 பற்கள் வரை காணப்படலாம்' என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், இந்தியாவை சேர்ந்த 'ஏழு வயது சிறுவனுக்கு 500 பற்களுக்கும் அதிகமான பற்கள் காணப்பட்டதாக கூறி மலைக்க வைத்துள்ளார்கள் மருத்துவர்கள். இந்தியாவில் சிறுவன் ஒருவன் மூன்று வயதில் இருந்து வாயின் கீழ் தாடையில் வீக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போது அருகில் இருக்கும் அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்று அப்போது கண்டுபிடிக்க இயலவில்லை. தற்போது அவருக்கு வயது 7 ஆகும். வீக்கம் அதிகரித்து, வலியால் துடித்த அவரை சென்னையில் இருக்கும் பிரபல பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அவருடைய …

  23. அர்ஜெண்டினா எல்லைப்பகுதியில் 55 கலைஞர்களை கொண்டு பென்சிலால் வரையப்பட்ட சுவரோவியம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அர்ஜெண்டினா - பராகுவே எல்லைப் பகுதியில் 16 அடி உயரத்தில் இரண்டரை மைல் தூரம் கொண்ட சுவர் 2014ம் ஆண்டு கட்டப்பட்டது. இருநாட்டு எல்லையில் உள்ள இந்த சுவர் பெரிதாக பேசப்பட்டு வந்தாலும் லத்தின் அமெரிக்க நாடுகளிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக உணர்ந்த கட்டிட வல்லுநர்கள் புது யுக்தியை கையாண்டனர். அதன்படி, சுவரின் ஒரு புறம் எல்லைப்பகுதியின் தற்போது வரையிலான வரலாற்று நிகழ்வுகள் பல வண்ணங்களில் ஓவிய வல்லுநர்களை கொண்டு வரையப்பட்டது. அதே வரலாற்று நிகழ்வுகள் சுவரின் மற்றொரு புறத்தில், பென்சில் கொண்டு தீட்டப்பட்டது. இறுதியாக பென்சில் கொண்டு வரையப்பட…

    • 0 replies
    • 317 views
  24. உலகின் மிகவும் வயதான மனிதராக சிறிலங்காவைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியை கின்னஸ் சாதனைத் பதிவேடு அறிவித்துள்ளது. உலகின் வயதான மனிதராக அறிவிக்கப்பட்டிருந்த ஜப்பானைச் சேர்ந்த, ஜிரோமோன் கிமுரா கடந்த 12ம் நாள் மரணமானதையடுத்தே, சிறிலங்காவைச் சேர்ந்த அப்புலானந்த உக்கு உலகின் மூத்த மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார். அப்புலாந்த உக்கு என்ற இந்த மூதாட்டி கேகாலை மாவட்டத்தில் உள்ள மாவனல்ல பிரதேசத்தில் உள்ள புலத்கமுவ என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவர் 1897ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதி பிறந்தவர். இவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் - 977960037V ஆகும். இவருக்கு எட்டு பிள்ளைகளும், 80இற்கும் அதிகமான பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரையடுத்து உலகின் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.