செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
உலகில் அதிக நேரம் மக்கள் உறங்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை 3ஆவது இடம் பிடித்துள்ளது. உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரியாக உறங்கும் அளவினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்கமைய இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை வாழ் மக்கள் 8.1 மணிநேரம் உறங்குவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வின்படி 12 மணி நேரத்துடன் பல்கேரியா 1ஆவது இடத்திலும் 10.2 மணிநேரத்துடன் அகோலா 2ஆவது இடத்திலும் காணப்படுகின்றன. இதேவேளை எமது அண்டை நாடான இந்தியா 42ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301159
-
-
- 5 replies
- 586 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 10 MAY, 2024 | 01:20 PM யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொது சந்தையில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால், பொது சந்தையில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பழுதடைந்த மரக்கறிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அதேவேளை, வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183142
-
-
- 7 replies
- 893 views
- 2 followers
-
-
பொதிசெய்யப்பட்ட இரண்டு பாண் பாக்கெட்டுகளில் எலியின் உடலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 100,000 க்கும் மேற்பட்ட பாண்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இச்சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. ஜப்பான் உயர்தர சுகாதாரம் பேணப்படும் நாடாகும். இவ்வாறான சம்பவங்கள் அங்கு நடைபெறுவது அரிதாகும். எலியின் எச்சங்கள் அதன் தயாரிப்புகளில் எவ்வாறு ஊடுருவின என்பதை ஆராய்ந்து வருவதாக குறித்த பாண் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஷிகிஷிமா தெரிவித்துள்ளார். “எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியதற்காக நாங்கள் ஆழ்ந்த மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்” என்று குறித்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜப்பானில் தூய்மை மற்றும் சுகாதாரம் தீவிரமாக எ…
-
- 0 replies
- 357 views
- 1 follower
-
-
மனைவி தனது கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு சிகரெட்டினால் தனது உடலை எரித்ததாகவும் கத்தியால் தனது உறுப்புகளை வெட்ட முயன்றதாகவும் கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.கணவரின் புகாரின் பேரில் பொலிசார் அந்த பெண்ணை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.கடந்தவருடம் நவம்பர் திருமணம் நடந்ததாகவும் சில நாட்களுக்குப் பிறகு அவர் தனது மனைவி மது அருந்துவதையும் சிகரெட் புகைப்பதையும் கண்டுபிடித்தார். மனைவி அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினார். இதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனைவி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தன் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பதாக மனைவி மிரட்டியதாக கணவர் சொல்லியுள்ளார். https://www.freepressjournal.in/india/up-shocker-bijnor-woman-to…
-
-
- 4 replies
- 786 views
-
-
ஜப்பானில் அக்குள் வியர்வையில் சோற்று உருண்டை தயாரிப்பு - கையினால் தயாரிக்கப்படும் ஓனிகிரியை விட 10 மடங்கு விலை PrashahiniMay 6, 2024 ஜப்பான் உணவகங்களில் புதிதாக அக்குளை பயன்படுத்தி வியர்வை கலந்த ஓனிகிரி எனப்படும் சோற்று உருண்டைகள் தயாரிக்கப்படுகிறன. சோறில் தயாரிக்கப்படும் ஓனிகிரி என்ற உணவு ஜப்பானில் பாரம்பரிய உணவாக உள்ளது. இந்நிலையில் இதனை கையினால் தயாரிப்பதை விட புதிதாக அக்குளுக்கு வைத்து முக்கோணமாகவும், வட்டமாகவும் செய்து விற்பனைக்கு வந்துள்ளதாக ஜப்பான் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு உணவகங்களில் பணிபுரியும் இளம் பெண்கள் தங்கள் அக்குள்களைப் பயன்படுத்தி ஓனிகிரியை வடிவமைக்கிறார்கள். தயாரிக்கும் பெண்கள் க…
-
-
- 10 replies
- 990 views
-
-
நெல்லை பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர், பானுமதி. 40 வயதான அவர், சில வருடங்களுக்கு முன்பு கணவரை விட்டுப் பிரிந்து வெள்ளத்துரை என்பவருடன் குடித்தனம் நடத்தி வருகிறார். சபலம் கொண்ட தொழிலதிபர்களை சமூக வலைதளங்களில் தேடிக் கண்டுபிடித்து, முகநூல் நண்பர்களாகி ஏமாற்றி மோசடி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார், பானுமதி. 20-க்கும் அதிகமான தொழிலதிபர்கள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தைப் பறித்த விவரம் வெளியாகியுள்ளது. முகநூல் பழக்கத்தில் தொழிலதிபர்களை கடத்திய தம்பதி அவரிடம் அண்மையில் சிக்கிய சேலம் மாவட்டம், அய்யன்பெருமாள்பட்டியை சேர்ந்த நித்யானந்தன் மூலமாகவே இந்த வில்ல…
-
- 0 replies
- 169 views
-
-
மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது, அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக பலரின் கடவுச்சீட்டுகளையும் வாங்கி வைத்து இருந்த குறித்த நபர் சுமார் 26 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு தற்போது தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.madawalaenews.com/2024/05/180.html இந்த மடவளவுகாரங்களின் தொல்லை வாயிலையும் தமிழை சிதைச்சு கொள்வார்கள் உங்களுக்கு அரபு வேணுமென்றால் அரபியில் செய்தியை போட்டு தொலைகிறதுதானே ?
-
- 3 replies
- 364 views
-
-
இராணுவ சிப்பாயின் மனைவியடன் தகாத உறவில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி மீது சரமாரி தாக்குதல். அம்பாறை பதியத்தலாவையில் தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி மீது இராணுவ சிப்பாய் தாக்குதல் நடத்தியுள்ளார். இராணுவசிப்பாய் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (3) இரவு சரணகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் குறித்த இராணுவச் சிப்பாயின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட காதலையடுத்து குறித்த பெண்ணின் வீட்டில் சம்பவதினமான நேற்று இரவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தகாத உறவில் ஈடுபட்டபோது …
-
- 0 replies
- 252 views
-
-
கஞ்சாவை(ganja) சட்டபூர்வமாக்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஜனசேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை செளரதன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்காலத்தில் அரசாங்கத்திடம் முறையான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். கஞ்சா சோதனைகள் தேவையற்றது கஞ்சா சோதனைகள் தேவையற்றது என்று கூறிய அவர், இலங்கையில்(sri lanka) மதுபானங்கள் இல்லாத காலகட்டத்தில் சாமானியர்கள் கூட கஞ்சாவை பயன்படுத்தியதாக கூறினார். இனத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது கஞ்சா பயன்பாடு சிறப்பான உத்வேகத்தையும் வலிமையையும் தருவதுடன் இனத்தின் வளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்தார். இதேவேளை யுக்திய என்ற பெயரில் காவல்துறையினர், போத…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
படக்குறிப்பு,நுரையீரலில் சிக்கிக்கொண்ட மூக்குத்தி திருகு. கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி நியூஸ், டெல்லி 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வர்ஷா சாஹு மூச்சை இழுக்கும்போது தற்செயலாக அவரது மூக்குத்தி திருகு மூக்கு வழியாக உடலுக்குள் சென்றுவிட்டது. அப்போது அவர் அதைக் குறித்து அதிகம் கவலைப்படவில்லை. காரணம் திருகு வயிற்றுக்குள் சென்றுவிட்டது, எனவே தன் செரிமான அமைப்பு வழியாக அது வெளியே சென்றுவிடும் என்றும் அவர் நினைத்தார். ஆனால் அந்த உலோகப் பொருள் அவரது நுரையீரலுக்குள் சென்றுவிட்டது. சில வாரங்களுக்கு அசௌகரியத்தையும் மூச்சுத் திணறலையும் அது ஏற்படுத்தியது. அதன் பிறகு என்ன நடந்தது?…
-
-
- 1 reply
- 409 views
- 1 follower
-
-
மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஒன்றில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியை ஒருவர் வெல்வது இதுவே முதல்முறையாகும். மிஸ் வோர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் உள்ளிட்ட உலக அழகி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த அழகி போட்டிகளில் இளம் பெண்கள் மட்டுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். ஆனால், இங்கே அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ள அதேநேரம், அழகுப் போட்டியின் பன்முகத்தன்மை மற்றும் அனைவருக்கும் சம அளவில் வாய்ப்பு …
-
-
- 6 replies
- 620 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விமான நிறுவனத்தின் முன்பதிவு தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 101 வயது மூதாட்டி ஒருவரை குழந்தை என்று தவறாக பதிவு செய்து பயணச்சீட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 101 வயது மூதாட்டியான பாட்ரிசியா (தன் குடும்பப் பெயரை பகிர விரும்பாதவர்) விமானத்தில் பயணிக்க பயணச்சீட்டு பதிவு செய்த போது தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணச்சீட்டு விநியோக தளத்தால் பாட்ரிசியா 1922 இல் பிறந்தவர் என்பதை கணக்கிட முடியவில்லை, எனவே 2022 இல் பிறந்ததாக தளத்தில் பதிவாகிவிட்டது. சமீபத்தில் நிகழ்ந்த இந்த நகைச்சுவை…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
29 APR, 2024 | 10:55 AM இலங்கை மக்கள் நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை புகைபிடிப்பதற்கு செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும், புகைபிடித்தல் இதற்கான முக்கிய காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் வருடமொன்றுக்கு 2,300 சிகரெட் துண்டுகள் சுற்றுச்சூழலில் கிடப்பதாக போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/182206
-
-
- 4 replies
- 371 views
- 1 follower
-
-
இலங்கையில் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி Vhg ஏப்ரல் 27, 2024 இலங்கையில் மனித முக அமைப்பை கொண்ட ஆடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெனியாய, விஹாரஹேன செல்வகந்த பிரதேசத்திலேயே இந்த ஆடு பிறந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடு, இந்த குட்டியை ஈன்றுள்ளது. ஆட்டுக்குட்டி எவ்வாறாயினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.battinatham.com/2024/04/blog-post_113.html
-
-
- 6 replies
- 448 views
- 1 follower
-
-
யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 …
-
- 0 replies
- 193 views
-
-
’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
துபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன. வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வீதிகளில் நீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது. கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. மாலையில் 100 விமானங்கள் வரை வந்து சேரக்கூடிய நிலையில், நேற்று பல விமானங்களின் வருகை …
-
-
- 6 replies
- 651 views
- 1 follower
-
-
பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube) போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
-
- 0 replies
- 138 views
-
-
முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மல்லிகைதீவு பகுதியில் உள்ள ஆட்டு மந்தையொன்றில் இருந்து 35 ஆடுகளை கும்பலொன்று திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினமான நேற்று குறித்த ஆட்டு மந்தையில் பாதுகாப்புப் பணியில் இருந்த இருவரைத் தாக்கிவிட்டு கும்பலொன்று சுமார் 9 லட்சத்து முப்பத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான 35 ஆடுகளைத் திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான இருவரில் ஒருவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் வற்றாப்பளை பகுதியை சேர்ந்த குடும்பஸ…
-
-
- 4 replies
- 487 views
-
-
17 APR, 2024 | 11:38 AM புத்தாண்டுக்காக காலி லபுதுவ பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்குச் சென்ற பத்தேகம மாவட்ட நீதிபதி ஒருவரை கடுமையான வார்த்தைகளால் தூஷித்து அறைந்த குற்றச்சாட்டில் அவரது மைத்துனரான உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவரை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் பத்தேகம மாவட்ட நீதிபதியின் மனைவியின் சகோதரராவார். பத்தேகம மாவட்ட நீதிபதி எல்.கே.ஜி விஸ்வநாத் தனது மனைவி மற்றும் செல்லப் பிராணியான பூனையுடன் காலி, லபுதுவ பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் தாயின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற மறு…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி தம்பதியினர் பற்றி குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர். ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும் . இந்த துறவறத்தில் ஈடுபடும்…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
12 APR, 2024 | 10:10 AM கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மனைவியும் கள்ளக்காதலனும் பொலிஸாரால் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்த நபரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று வியாழக்கிழமை (11) அக்கரைப்பற்று வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்து. பிரேத பரிசோதனையில் கழுத்தை அறுத்ததால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதைய…
-
-
- 18 replies
- 1.4k views
- 1 follower
-
-
Published:Yesterday at 3 PMUpdated:Yesterday at 3 PM நவீன் தாமஸ் - தேவி, ஆர்யா 6Comments Share கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூவர், அருணாசலப் பிரதேசத்தில் கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ‘பிளாக் மேஜிக்’ குறித்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு அருகேயுள்ள வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார். இவரின் மகள் ஆர்யா (29), திருவனந்தபுரத்திலுள்ள தனியார் பள்ளியில் பிரெஞ்ச் மொழி ஆசிரியராகப் பணிபுரிந்துவந்தார். பள்ளிக்குச் செல்வதாகப் புறப்பட்ட ஆர்யா வீட்டுக்குத் திரும்ப…
-
-
- 9 replies
- 673 views
-
-
கொழும்பில் உள்ள விகாரமஹாதேவி பூங்காவில் இரண்டு யானைகள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் குறித்த யானைகளை நகருக்கு வெளியே கொண்டு செல்வது ஆபத்தானது என்பதால், யானைகள் அங்கே தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு மாநகர சபை (CMC) தெரிவித்துள்ளது. ஹுனுப்பிட்டி கங்காராமய ஆலயத்தின் வருடாந்த நவம் பெரஹெராவுக்காக இரண்டு யானைகளும் ஆரம்பத்தில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “எனினும், யானைகள் பெரஹராவில் பங்குபெறவில்லை என்று பராமரிப்பாளர்கள் எங்களிடம் தெரிவித்தனர், ஏனெனில் குழப்பநிலையில் இருந்தன,” என்று அதிகாரி கூறியுள்ளார். . கொழும்பின் மையத்தில் உள்ள பூங்காவில் யானைகளை வைத்திருப்பதை ஒப்புக்கொண்ட அதிகாரி மேலும் கூறுகைய…
-
- 0 replies
- 380 views
- 1 follower
-