செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
எந்தவொரு நாடும் தனது தேசிய நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காது பிறிதொரு நாட்டிற்கு உதவ முன்வராது. இது சர்வதேச அரசியலின் அடிப்படைச் சித்தாந்தம். தனது இலாபத்திற்காகப் பிற நாட்டுப் பிரச்சனையில் தலையிடும் போது பிரச்சனையோடு தொடர்பு இல்லாதவர்களும் இலாபம் அடைய வாய்ப்புண்டு. அது தற்செயலாக நடக்கும் நிகழ்ச்சி. தேவை எவருக்கு இருக்கிறதோ அவர்கள் தான் தலையிடுவார்கள் என்பதும் மேற்கூறிய கருத்தின் இன்னொரு பரிமாணம். இவற்றை வைத்து நோக்கும் போது குற்றவாளி நாடான இலங்கையின் சிங்கள அரசு தயாரித்த நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கைக்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?. சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜநா நிபுணர் குழு அறிக்கை கூறுகிறது. இந்தப் பரிந்துரை ஏற்று…
-
- 0 replies
- 522 views
-
-
ஏறத்தாள மூன்றாண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக பட்டாசு கொளுத்தி கொண்டாடியது மகிந்த அரசு. போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக நேரடிக் கண்டனங்களுக்கு உட்பட்டிருக்கும் மகிந்தாவின் அரசு பல்வேறு விதமான புரளிகளை கடந்த இரண்டு வருடங்களாக கிளப்பிவிட்டுக் கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவிற்கு எதிராக 24 நாடுகள் வாக்களித்தன. சிறிலங்காவிற்கு எதிராக இந்தியாவும் வாக்களித்ததுதான் சிறிலங்காவிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதன் காரணமாகத்தான் சிறிலங்கா அரசு கிளப்பிவிட்டிருக்கிறது மீண்டும் புலி எனும் கிலியை. காலத்திற்குக் காலம் இந்தியாவின் அரசியலில் என்றாலும் சரி, சிறிலங்காவின் அரசியலில் என்ற…
-
- 0 replies
- 340 views
-
-
ஜெனிவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில், குழப்பமடைந்துள்ள சிங்களம் ஜெனிவா விடயம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வெளியிட்டு வருகின்றது. சிறீலங்கா அரசாங்கத்திற்கும் அதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கும் தொடர்பில்லாததுபோலவே சிறீலங்காவினால் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறான இனவாதப் போக்குடைய அரசு சர்வதேசத்தையே ஏமாற்றுவது போன்று தகவல்களை வெளிவிடும் நிலையில் தமிழ் மக்கள் விடயத்தில் இவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதுபற்றி சர்வதேசம் புரிந்துகொள்ளும் என்பது திண்ணம். இந்நிலையில் பௌத்த மதபீடம் ஒன்றை உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு வட பகுதித் தமிழ் மக்களிடம் இருந்து பணம் பிடுங்கும் முயற்சியில் சிங்களம் …
-
- 0 replies
- 482 views
-
-
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்தொன்றைக் கூறியிருந்தார். விடுதலைப் புலிகளின் கருத்தொருமைமிக்கவர்களாகவும் கனவில் சஞ்சரித்துக் கொண்டு தனி நாட்டை அமைக்கும் நோக்கில் செயற்படுகின்ற இனவாத சக்திகள், இன்னும் இருந்து கொண்டுதானிருக்கின்றன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் இனவாதம் களையப்பட வேண்டுமென தெரிவித்திருந்தார். இனக்குரோதங்களும், சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறைகளும், யாரால் கட்டவிழ்த்து விடப்படுகின்றன எனும் உண்மை, தமிழ் இலக்கியத்தின் மீது பற்றுகொண்ட ஹக்கீமிற்கு புரியவில்லை என்பது கவலைக்குரியது. மகாவலி அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக தமிழ், முஸ்லிம் ம…
-
- 0 replies
- 370 views
-
-
கியூபாவில் முதன் முறையாக, புனித வெள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கம்யூனிச நாடான கியூபாவில், கடந்த 59ம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு, பிடல் கேஸ்ட்ரோ அதிபரானார். அது முதல் கொண்டு, அந்நாட்டில் மதம் சார்ந்த விழாக்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 98ம் ஆண்டு, போப் ஜான்பால், கியூபா நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட போது, அந்நாட்டு அரசிடம், கிறிஸ்துமசுக்கு விடுமுறை அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். கியூபாவில், 10 சதவீதம் பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். எனவே, போப் ஜான்பாலின் வேண்டுகோளை ஏற்று, கிறிஸ்துமசுக்கு விடுமுறை விடப்பட்டது. இதற்கிடையே, போப் பெனிடிக்ட், கடந்த வாரம் கியூபாவில் பயணம் செய்தார். அப்போது, அவரை முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவும், …
-
- 0 replies
- 429 views
-
-
ஒரு எலுமிச்சை பழம் ரூ.14 ஆயிரத்திற்கு ஏலம் முருகன் கோவில் வேலில் சொருகிய எலுமிச்சை பழம், 14 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டைக் குன்றின் மீது சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் கருவறையில், ஒரு வேல் மட்டும் இருந்தது. மலைக்குன்றிற்கு கீழ் கடந்த மாதம் முருகன், வள்ளி, தெய்வானை சிலையுடன் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, வேலில் சொருகப்படும், 9 நாட்களின் எலுமிச்சை பழம் இடும்பன் பூஜையின் போது ஏலம் விடப்படும். இப்பழத்தை குழந்தை இல்லாதவர்கள் வாங்கி சாப்பிட்டால், அடுத்த ஆண்டு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், பல …
-
- 1 reply
- 545 views
-
-
இலங்கை அரசு தயாரித்து வெளியிட்ட நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை தமிழ் -சிங்கள நல்லுறவுக்கு முதலிடம் அளிக்கிறது. எனினும் இதற்கு முரணான நிகழ்ச்சி நிரலை அரசு தீவிரமாக நடைமுறைப் படுத்துகிறது. ஈழத் தமிழர்களுடைய தாய் மண் தொடர்ச்சியாக அபகரிக்கப் படுகிறது. தமிழர் மண்ணில் சிங்களக் குடியேற்றம் இராணுவ ஆதரவோடு நடத்தப்படுகிறது. இந்து மதக் கோவில்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. சிங்களவர் ஒருவர் கூட வாழாத இடத்திலும் புத்த விகாரைகள் கட்டியெழுப்பப் படுகின்றன. உதாரணத்திற்கு வல்வெட்டித்துறைச் சந்தி விகாரை வடக்கு – கிழக்கை இராணுவ ஆட்சி மூலம் அடிமைப் படுத்தும் அரசின் அடிப்படை நோக்கம் பளிச்சென்று தெரிகிறது. இன விகிதாசரத்தை மாற்றி அமைக்கும் ஆயுதமாகச் சிங்களக் குடி…
-
- 0 replies
- 446 views
-
-
ஈழத்தமிழரின் உரிமைப்போருக்கான திறவுகோல்களாய் இருந்த வராலற்று மாந்தர்களை நினைவு கொண்டாடும் இடத்தில், கூட்டமைப்பு மீண்டும் ஒரு முறை தங்கள் அழுக்கு முகத்தைக் காண்பித்திருக்கின்றது. தமிழீழ கோட்பாட்டை நிலைநிறுதியதற்காகவும், அரசியல் ரீதியாகக் கூறிய தீர்க்க தரிசனங்களுக்காகவும் இன்றளவும் தமிழர்கள் தந்தை செல்வநாயகத்தைப் போற்றுகின்றனர். இந்த இடத்தில், அவருக்கு நிகராக சில துரோகிகளின் பெயர்களையும் நினைவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பினுள் நுழைந்திருக்கின்ற துரோகிகள் கும்பல் ஒன்று செயற்படுகின்றமை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பட்டமாகியிருக்கின்றது. தந்தை செல்வநாயகத்தில் 114வது பிறந்த தின நிகழ்வுகள் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் தலைமை தாங்கியிருந்…
-
- 0 replies
- 375 views
-
-
வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்களஅரசை நிறுவியவன் என்று சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. பாலி மொழியில் எழுதப்பட்ட “மகாவம்சம்” என்ற நூலை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள். இதை தங்கள் “வரலாறு” என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கதைகளும் இதில் உண்டு. இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் – இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது. விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:- “வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
புதிய தமிழர் கொடி அறிமுகம்... [படம் ஏத்தவோ, தமிழில் எழுதவோ இயலாமல் இருக்கிறது..] www.TamilTiger.org இது உத்தியோகபூர்வமான அறிக்கையாக்கும்.. ஆதாரம்.. http://www.tamiltiger.org/
-
- 5 replies
- 3.1k views
-
-
இணையத்தளம் ஒன்றிற்கு தகவல்களை வழங்கும் ஒற்றர்கள் சிலர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவரேனும் சிக்கினால் அவர்களுக்கு அரச காலத்து தண்டனை வழங்கப்படும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஜநாயக்க தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தள்ளது. பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரன் கொலை தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றத்திற்கு வழங்குவதற்கு முன்னர் அதிலுள்ள தகவல்கள் குறித்த இணையத்தளத்தில் பிரசுரமாகியிருந்தன. இதுவே பிரதிப் பணிப்பாளர் சமீபத்தில் ஆத்திரமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்யும் அறிக்கையில்இ பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரன் மீதுஇ துமிந்த சில்வா தற்ப…
-
- 0 replies
- 410 views
-
-
மனிதப் பிறவி மகா உன்னதமானது. உயிர் பிறப்பின் இறுதிநிலை மனிதப்பிறப்பாகுமென சொல்லிச் செல்கிறார்கள், இறுதி இருப்பை உய்த்துணர்ந்து கொண்டவர்கள். துன்பத்தை பரிசளிப்பவர்கள் எம்மில் ஏராளமானோர்கள் இருக்கின்றார்கள். நாம் கேட்காமலேயே துன்பத்தை பரிசளிப்பவர்கள் அப்பால் சிரித்து மகிழ்ந்து கொள்கின்றார்கள். அகமும் புறமும் மலர மகிழ்ச்சியை பரிசளிப்பவர்கள் மானுடத்தின் மகத்துவங்கள். எம்முடனே நடமாடிச் சென்றவர்கள், மகிழ்ச்சியை பரிசளித்தவர்கள் எனில் இறுதி இருப்பை சுகப் பதிவாக்கிய மானுட மகானுபாவர்கள். இயந்திர மயமாகிவிட்ட விஞ்ஞான உலகில் மானுடம் குறித்த தேடல்கள் அரிதானவை. காலத்தின் காலமாதலுக்கு உயிர் சேகரித்த உன்னதமானவர்கள்; வறட்சிப் பிடிப்பின் நீர்த்திவலைகள். அடித்து அழவைக்க முடியும் பிடித்து வைத…
-
- 0 replies
- 881 views
-
-
அகிம்சையெல்லாம் வாளெடுத்து ஆடிடும்போது -எம் அன்னையவள் அறவழியில் நீதியும் கேட்டாள் திகில் பிடிக்கச் சிரமெடுக்கும் தீயவர்தம்மை கண்டு தேடுமொரு சுதந்திரத் தாய் தேவையைக் கேட்டாள் துகில்பறித்து மகிழ்வு கொள்ளும் துச்சாதனரும் -எங்கும் ... துணிபிடிக்கும் தீயைக்கண்டு துயருறுவாரோ முகிழ்வெடித்து மலர் தொடுத்தமாலைகள் தம்மை -ஓடி மரம் பிடித்து தாவுமினம் மதிப்பதுமுண்டோ விலைகொடுத்து உயிர்கொடுத்து வேண்டிழுதாய் -ஆயின் வினைபிடித்தோர் குடலுருவல் விட்டதுமில்லை குலை நடுங்க கொலைபுரிய கூடிய கூட்டம் -என்றும் குறையிலதைவிட்டு வாழ்வு கொடுக்கவுமில்லை சிலை யிருந்தால் அழுகைகண்டு சற்றுஇரங்கும் கெட்ட சீழ்பிடித்த மனமெடுத்தோர் சிந்தைகொள்வரோ நிலையிதுவோ அழுக்கெடுத்த சாக்கடைநீரில்…
-
- 2 replies
- 459 views
-
-
அவுஸ்ரேலியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் விமானி அறைக்குள் பாம்பு நுழைந்ததால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. டார்வின் விமான நிலையத்தில் இருந்து வடக்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பெபிமெனாட்டி என்ற இடத்தை நோக்கி புறப்பட்ட சரக்கு விமானத்தை பிராடன் பீலீனர்ஹாசத் என்ற விமானி இயக்கினார். விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் விமானியின் அறைக்குள் பாம்பு ஒன்று நுழைந்து. இதனால் பீதியடைந்த விமானி, உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். இருப்பினும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அருகில் இருந்த நிலத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கி உள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 4 replies
- 3.4k views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரான காசிப்பிளை மனோகரன், கலைச்செல்வன், ஜெயக்குமார் ஐயாத்துரை ஆகியோரின் சார்பில், சட்டவாளர் புரூஸ் பெயன் – சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் நட்டஈடு வழக்குத் தொடுத்திருந்தார். ஆனால், சிறிலங்கா அதிபருக்கு இராஜதந்திர விலக்குரிமை உள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பரிந்துரைத்ததன் அடிப்படையில், இந்த வழக்கை தம்மால் விசாரிக்க முடியாதிருப்பதாக கூறி, கொலம்பியா மாவட்ட நீதிபதி கொலீன் கொல்லர் கொட்டெலி கட…
-
- 0 replies
- 380 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பரிந்துரை செய்துள்ள மற்றும் அந்த அறிக்கையில் பதிலளிக்கப்படாதுள்ள- நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக சுதந்திரமான – வெளிப்படையான- நடுநிலையான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிப் பணியகத்தினால் இந்த அறிக்கை நேற்று அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. “சிறிலங்கா அரசினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அனைத்துலக அமைப்புகளின் விசாரணை மற்றும் அனைத்துலக மனிதாபிமான, மனிதஉரிமைச் சட்டங்களை மீறியோரைப் பொறுப்புக்கூற வைத்தல்“ என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, அமெரிக்க இராஜா…
-
- 0 replies
- 400 views
-
-
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றே. ஆனால் இந்த வெற்றியை நிர்ணயிக்கும் வாக்குகள் எத்தனை? என்பது குறித்துத்தான் கேள்வியாக இருந்தது. இலங்கைத் தரப்பு ஆரம்பத்திலிருந்து ‘இந்தப் போரில் வெற்றியடைவோம்” என்று கூறி வந்தது. வாக்களிக்கத் தகுதி பெற்ற 47 நாடுகளில் 22 நாடுகளுக்கு மேல் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலையில் இருப்பதாக இலங்கைத் தரப்பு நம்பிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் இந்தியாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த எதிர்பார்ப்பில் இலங்கைக்கு நம்பிக்கை குறைவடையத் தொடங்கியது. தற்பொழுது பெறுபேறுகள் வெளிவந்துவிட்டன. அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வ…
-
- 0 replies
- 246 views
-
-
நினைவஞ்சலி விளம்பரத்துக்குப் பின்னால் நடந்த மோசடி! தென்னிந்தியத் திரைப்படத்தில் நடிகையாக நடிக்கும் பாவனாவின் புகைப்படத்துடன் இன்னொரு பெண் இறந்து விட்டதாகத் தெரிவித்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் 31 ஆம் நாள் நினைவஞ்சலி விளம்பரமாகப் பிரசுரிக் கப்பட்டிருந்தது நீங்கள் அறிந்திருப்பீர் கள். இதன் பின்னணியிலுள்ள மர்மம் பற்றி விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் எமக்குக் கிடைத்தன. அதாவது புதிய வகையான ஏமாற்று மோசடியே தற்பொழுது அம்பலத்திற்கு வந்துள்ளது. நடந்தது இதுதான், லண்டனில் புலம்பெயர்ந்து வசித்துவரும் ஒரு இளைஞன் தான் தனஞ்சயன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது காதலியுடன் சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக காதலிக்கின்றார். அதாவது கதைக்கின்றார். அவருக…
-
- 1 reply
- 865 views
-
-
தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய சூரியனின் நகர்வு இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை இலங்கைக்கு மிகவும் அண்மித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய நாட்டின் சில பகுதிகளில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார். கந்தகொட, மித்தெனிய, வீரவெல ஆகிய நகரங்களை இணைக்கும் அகலக்கோட்டின் வழியே இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது மாலைவேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வானிலை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். கடல் பிராந்தியங்களில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு ஆழ்கடல் பகுதிகளில் ம…
-
- 0 replies
- 494 views
-
-
மகாத்மா காந்திக்கு ’தேச தந்தை’ என்று பெயர் வைத்தது யார்..? - பதில் தெரியாமல் விழிக்கும் அரசு மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் யாரால் எப்போது வழங்கப்பட்டது என்பதை அறிய ஆறாவது படிக்கும் மாணவி கேட்ட கேள்விக்கு சரியான தகவல் இல்லை என்ற பதிலை மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பரஷ்ஹார் என்ற 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் வழக்கப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்தியாவின் தேசத்தந்தை என மகாத்மா காந்திக்கு வழங்கப்பட்டது எப்போது, அதற்குரிய ஆவணங்கள் உள்ளனவா? என விவரம் தருமாறு கோரியிருந்தார். இந்த மன…
-
- 4 replies
- 3.2k views
-
-
அம்ஸ்ரடாம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில் இருந்து தற்செயலாக எடுக்கப்பட்ட வீடியோவே இங்கு நீங்கள் பார்க்கப்போகும் வீடியோவாகும். ஐபோனில் எடுக்கப்பட்டுள்ள இவ் வீடியோவில் எவ்வித கிராபிக்ஸ் வேலைகளும் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அக் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் வானில் வேறு எந்தவித வானிலை அறிகருவிகளும் ஏவப்படவில்லை என்பதையும் விமான நிலையமும் அவ்வூர் விஞ்ஞான ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது. இது ஐஃபோன் கமெராவில் இருக்கக்கூடிய புள்ளி அல்லது விமான கண்ணாடியில் இருக்கக்கூடிய புள்ளி என்று கூறமுடியாது. ( காட்சிகளைப்பாருங்கள் புரியும். ) இங்கு பதிவாகியுள்ள உருவைப்பார்க்கும் போது, பரவலாக வேற்றுக்கிரக வாசிகள் வருவதாகக்கரு…
-
- 0 replies
- 417 views
-
-
இறுதி யுத்தத்தின் போது கிழக்கின் நிலை? இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காளில் முடிவடையும் பொழுது கிழக்கிற்கான தொடர்புகளும், போராளிகளிற்கான அனைத்து வளங்கல்களும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன. அக் காலகட்டத்தில் கிழக்கில் செயற்பட்டுவந்த புலிகளின் இராணுவச் செயற்பாடுகளிற்கு தலைவர்களாக இருந்த சால்ஸ் அன்ரனியின் சிறப்புப் படையணியின் கட்டளைத் தளபதி கேணல் நகுலன்;, கேணல் றாம், கேணல் உமாறாம், மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளராக பதவிவகித்த லெப். கேணல் தரப் போராளி தாயாமோகன், மட்டு அம்பாறை மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளராக பதவி வகித்த லெப். தரப் போராளி கேணல் ரவிமோகன் மற்றம் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பிரபா ஆகியோரே கிழக்கிலிருந்த இராணுவத்தினருக்கு சிம்மசொற்பனமாக விழங்கி…
-
- 0 replies
- 936 views
-
-
யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புத் தாக்குதல் நடவடிக்கை உச்சமடைந்திருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் தங்களது முதலாவது உயிராயுதத்தைப் பயன்படுத்தினார்கள். கப்டன் மில்லர் எனப்படும் வல்லிபுரம் வசந்தன் என்ற வேங்கை கரும்புலியாக மாறி சிங்கள இராணுவத்தின் இதயத்தின்மீது வெடித்துச் சிதறினான். 05 ஜுலை 1987 அன்று நெல்லியடி மகாவித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த சிங்கள இராணுவத்தின்மீது மில்லர் நடாத்திய தற்கொடைத் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான சிங்களப் படையினர் பலியானார்கள். இந்த முதலாவது கரும்புலித் தாக்குதலில் அதிர்ந்தது சிங்கள தேசம் மட்டுமல்ல, இந்திய ஆட்சியாளரும் கூடத்தான். தனது கட்டுக்குள் அடங்க மறுக்கும் சிங்கள ஆட்சியாளர்களை வழிக்குக் கொண்டுவருவதற்காகப் பயன்படுத்…
-
- 1 reply
- 321 views
-
-
தமிழகச் சிந்தனையாளர் தமிழருவி மணியன் ஏற்பாடு செய்த கருத்தரங்கு பல அடிப்படை விவாதங்களை எழுப்புகிறது. இந்திய அரசியலை மாத்திரமல்ல உலக அரசியலையும் இந்த மேடையில் எழுந்த கருத்துக்கள் விமர்சிக்கின்றன. தெற்கு ஆசியாவில் கணவனுக்குப் பிறகு மனைவி என்ற வாரிசு உரிமையை முதன் முதலாக உருவாக்கிய நாடு இலங்கை தான்.; பிரதமர் எஸ் டபிள்யூ ஆர் டி பண்டார நாயக்கா ஒரு புத்த பிக்குவால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவருடைய மனைவி சிறிமாவோ பிரதமரானார். இதே உதாரணம் வங்க தேசத்திலும் பின்பற்றப்பட்டது. இந்தியாவிலும் அது நடைமுறையில் உள்ளது. ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா இந்தியத் தேசியக் காங்கிரசின் தலைமைப் பதவியைத் தக்க வைத்தபடி மக்களால் தெரிவு செய்யப்படாத பிரதமர் மன்மோகன் சிங் ஊடாக நாட்டின் அதிபதி…
-
- 0 replies
- 388 views
-
-
வன்னியில் இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட ஆண்களின் துணையில்லாத வீடுகளுள் அத்துமீறிப் நுழையும் இராணுவத்தினரின் தொல்லை அதிகரித்திருப்பதாக பிரதேச மக்கள் அச்சங்கொண்டுள்ளனர். நேற்றிரவும் அப்பகுதியில் இத்தகைய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாண்டியன்குளம்- நெட்டாங்கண்டல் பிரதேசங்களிலிருந்து சுமார் ஆறு கிலோமீற்றர் தூரம் காட்டுப்பகுதிக்கு அப்பாலுள்ள சறாட்டிகுளம் கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றன. அடிப்படை வசதிகள் மற்றும் வெளித்தொடர்புகள் அதிகமில்லாத இந்தக் கிராமத்தில் அண்மைக்காலமாக படையினரின் அடாவடித்தனங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதாக விசம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்திலுள்ள கணவனை இழந்த இளம் பெண்னொர…
-
- 0 replies
- 424 views
-