செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
சனல்-4 தொலைக்காட்சி மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஈழமனிதப்படுகொலை காணொளி காட்சிகளால், பன்னாட்டு மட்டத்தில் எழுந்துவரும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. நடப்பு ஐநா மனித உரிமைகள் மாநாடு, பெப்,27,2012 ஜெனீவாவில் கூட இருக்கிறது. மாநாட்டு அமர்வில் இலங்கைக்கு எதிராக (இந்தியா தவிர்ந்த) அனேக நாடுகள் எதிர்நிலையெடுக்க இருப்பதாக சர்வதேச மட்டத்தில் கருதப்படுகிறது. அப்படி ஏற்படாமல் தடுப்பதற்கு இலங்கை அரசும் தன்னாலான தந்திரங்கள் அனைத்தையும் பலமாதங்களாக செய்துவருகிறது. அதற்கான அறிவுறுத்தல்களையும் திசை திருப்புதலுக்கான உத்திகளையும் நண்பன் இந்தியா சிரமேற்கொண்டு பொறுப்புடன் உதவிவருவதாக தெரிகிறது. இருந்தும் சர்வதேசநாடுகள் பலவும், ராஜபக்க்ஷ மீது பெருத்த …
-
- 0 replies
- 328 views
-
-
சர்வதேசத்தை ஏமாற்ற காலத்திற்கு காலம் பல்வேறு குழுக்களை அமைத்துவரும் சிறீலங்காவின் புதிய அவதாராகமாக பிறப்பெடுத்துள்ளது ‘இராணுவ நீதிமன்றம்’. போர் நிறைவடைந்ததன் பின்னர் சர்வதேச அழுத்தங்கள் எழுந்தபோது நல்லிணக்க மற்றும் கற்றுக்கொண்ட ஆணைக்குழு ஒன்றை மகிந்த அமைத்து காலத்தை ஓட்டிவந்தார். தங்களது நிபுணர் குழுவின் அறிக்கையைக்கூடக் கிடப்பில் போட்டுவிட்டு, மகிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்பார்த்து இலவுகாத்த கிளியாகக் காத்துக்கிடந்தது ஐ.நா. ஆனாலும் மகிந்த காலத்தை இழுத்தடிப்பதைப் புரிந்துகொண்ட, மனித உரிமை அமைப்புக்களும், மேற்குலக நாடுகளும் உடனடியாக அறிக்கையை வெளியிடவேண்டும் என்று அழுத்தம் போட்டன. வேறுவழியின்றி மகிந்தவும் அறிக்கையை வெளியிட்டுவைத்தார். மகிந்தவி…
-
- 0 replies
- 334 views
-
-
பேரினவாத சிங்கள அரசுக்கு மட்டுமல்ல, அதன் சகபாடிகளுக்கும் இரண்டு விடயங்களில் தமிழீழ மக்களது மௌனமும், அமைதியும் பெரும் எரிச்சலை மூட்டி வருகின்றது. ஒன்று, யுத்தக் குற்றச்சாட்டிலிருந்து சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் எந்தவித நகர்வுகளுக்கும் அவர்கள் அசைந்து கொடுப்பதில்லை. இன்னொன்று, திடீர் எரிபொருள் விலையேற்றத்தின் மூலம் பேரினவாதிகளது அரச எதிர்ப்புப் போராட்டத்தினுள் தமிழ் மக்களை உள்ளிளுக்கும் தந்திரத்திற்கும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. கடந்த வருட இறுதியில் சிறிலங்கா அரசுமீது மேற்குலக நாடுகள் கொண்டுவந்த போர்க் குற்றச்சாட்டு முன்மொழிவுகளை முறியடிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசுக்குப் பேருதவி செய்தது. இடையில் தடைபட்டிருந்த பேச்சுவார்த்தையில் கல…
-
- 0 replies
- 336 views
-
-
ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதற்கு முன்பாக, இப்படியான ஒரு நிலைமை ஏற்படும் என்பதனையும் அதனை தவிர்க்க சிறீலங்கா எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அமெரிக்கா சிறீலங்காவிற்கு பலமுறை தெளிவு படுத்தியிருந்தது. அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலர் கிலாரி கிளிண்டன் முதல் சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதர் வரை அமெரிக்காவின் பல உயர்மட்டத் தலைவர்கள் பல தடவைகள் சிறீலங்காவின் தலைவர்களை நேரில் சந்…
-
- 0 replies
- 544 views
-
-
கணவர் உடல் மீது... விழுந்து, மனைவி உயிர் விட்டார். பனப்பாக்கம் அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி (98) தையல் தொழிலாளி. இவரது மனைவி வரதம்மாள் (92). துரைசாமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். நேற்று காலை முதல் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் வந்து துரைசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் நடந்தது. பகல் 1 மணிக்கு துரைசாமியின் உடலைப் பார்த்து அவரது மனைவி வரதம்மாள், கதறினார். 70 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த என்னை விட்டு பிரிந்து சென்று விட்டீர்களே என்று தனது மார்பில் அடித்து கொண்டு கணவனின் காலடியில் சர…
-
- 8 replies
- 1.1k views
-
-
3.2 மில்லியன் புள்ளிகளை பயன்படுத்தி தந்தையின் உருவத்தை வரைந்த கலைஞன் தந்தையர்களின் அறிவுரைகளை செவிமடுக்க நேரமில்லாத பிள்ளைகள் வாழுகின்ற இந்த கலியுகத்தில் மிகவும் பொறுமையுடன் தனது தந்தையின் படத்தை புள்ளிகளை வைத்து தத்துரூபமாக வரைந்துள்ளார் மியூஜ்வெல் என்டாரா என்ற புளோரிடாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர். இதற்காக 11in X 17in அளவினையுடைய தாளைப் பயன்படுத்திய அவர் 3.2 மில்லியன் கணக்கான மிகவும் மெல்லிய புள்ளிகளையும் தனது கைகளாலேயே வைத்து வரைந்து முடித்திருக்கின்றார். இதுபற்றி மியூஜ்வெல் கூறுகையில், புள்ளிகளை கொண்டு வரையப்படும் படங்களுக்கு தான் ஒரு ரசிகன் எனவும், ஆகவே தான் முதல் முதலாக வரையும் புள்ளிகளை கொண்ட படமாக தனது தந்தையின் உருவத்தை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்து…
-
- 2 replies
- 728 views
-
-
உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்...ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிசம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வள…
-
- 3 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளிடம் மட்டுமே அடிவாங்கி, அதிலிருந்து மீண்ட திமிருடன் நிமிர்ந்து நின்ற சிங்கள அரசுக்கு, தற்போது திரும்பும் திசைகளிலெல்லாம் அடி விழுந்து வருகின்றது. அமெரிக்கா வழங்கிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற அனுமதிச் சீட்டைக் கையில் எடுத்துக்கொண்டு, தமிழீழ மக்கள்மீது பாரிய இனப் படுகொலையை நடாத்தி முடித்த சிங்கள அரசு, அதற்கான பின் விளைவுகளைத் தற்போது எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. மேற்குலகைப் பொறுத்தவரை ஒரு யுத்தத்தின் வெற்றி என்பது தமக்கான தடைக்கல்லை நீக்குதல் அல்லது தமது எதிரியை அழித்தல் என்பதுடன் முற்றுப்பெற்று விடுகின்றது. இரண்டாவது உலகப் போரின் பின்னர் இந்த அணுகுமுறையையே மேற்குலகு கடைப்பிடித்து வருகின்றது. ஜெர்மனியில் கிட்லரின் மரணத்துடன் அந்த…
-
- 0 replies
- 494 views
-
-
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று கொண்டுவரப்படுமென மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு எத்தகைய உறுதி மொழிகளை வழங்கினாலும், தீர்மானம் முன்வைக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு நடாத்திய பேச்சுவார்த்தையில், றொபேர்ட் பிளேக்கும், மரியா ஒட்ரோவும் கூறிய விடயத்தில், கூட்டமைப்பின் கருத்தினைக்கூட அவர்கள் இருவரும் பரிசீலிக்க விரும்பவில்லையென்பது தெளிவாகிறது. கூட்டமைப்போடு இது குறித்துப் பேசிப்பயனில்லை என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் தகவல்கள் உண்டு. இதுதான் தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர…
-
- 1 reply
- 454 views
-
-
யாழ்குடாவில் தற்போது அரங்கேறிவரும் சம்பவங்களை நோக்கும் போது மரணம் மலிந்த பூமியாக காணப்படுவதை உணரக் கூடியதாக உள்ளது. பொருளாதாரத்தைப் பொறுத்தளவில் அங்கு நாளாந்தம் ஒரு சிறிய குடும்பத்துக்கு ஆயிரம் ரூபா போதாமையாக உள்ளது. விலைவாசி ஏற்றம் நாளும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திவருகின்றது. அங்கு அதிஉச்ச ரீதியில் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உளரீதியில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. பல குடும்பங்கள் யுத்தம் இடம்பெற்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டதைவிட தற்போது அதிகமாகப் பாதிக்கப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை யாழில் நாளாந்தம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவர்களே அதிகமாகத் தற்கொலை செய்துகொள்வதாக …
-
- 0 replies
- 514 views
-
-
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் சில பக்கங்களை ஈழத் தமிழர்கள் நிச்சயம் படிக்க வேண்டும். இந்திய விடுதலைக்காக ஒரு தேசிய இராணுவத்தை அமைத்து, அதனை வழிநடாத்திய சுபாஸ் சந்திரபோஸ் அவர்களது வரலாறு தேசியத் தலைவர் அவர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தித் தம்மை அர்ப்பணித்த உயர்வான இந்தியர்களது வரலாறுகள் சில எமக்கும் படிப்பினையாக உள்ளன. அந்த வகையில், நாம் படிக்க வேண்டிய வரலாற்று மனிதராக உதம் சிங் அவர்களைக் கற்றுக்கொள்ளலாம். அவரது கோபமும், அதன்மீதான நியாயமும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட பாதையும், பழிவாங்கலும், அவரது மரணமும் அவரைக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையை எமக்கு ஏற்படுத்துகின்றது. …
-
- 0 replies
- 370 views
-
-
வேற்று கிரகங்களில் வாழும் மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்த செய்தி தற்பொழுது வெளியாகி உள்ளது.உலகம் முழுவதும் நம்பப்படும் செய்தி வேற்று கிரகத்தில் மனிதர்கள் உள்ளனர் என்பதுதான். உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வேற்று கிரக மனிதர்களோ அல்லது அவர்கள் பறந்து செல்லும் தட்டு தென்பட்டதாக செய்திகள் வரும். ஆனால் இன்று வரை அந்த செய்திகள் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் பிபிசி 2 கரண்ட் அபையர்ஸ் இல் பங்கேற்று, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினரும் பென்டகனின் ஆலேசாகருமான பணிபுரிந்த குட் பேசுகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிவைட்டி ஐசனோவர் வேற்று கிரக மனிதர்களை மூன்று முறை சந்தித்தார் என்று கூறினார். எப்பிஐ அதிகாரிகள் டெலிபதி தகவல் பரிமாற்ற முறை மூலம் வேற்று கிரக மனிதர்க…
-
- 1 reply
- 691 views
-
-
-
- 0 replies
- 550 views
-
-
மீண்டும் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்படும் கிளாலி மக்கள்! – இளந்தி கிளாலிக் கடற் பகுதியில் முன்பு தொழில் செய்த மக்கள் இப்போது அதே தொழிலைச் செய்வதற்கு அனுமதிக்கப் படவில்லை. தமது வீடு வாசல்களை இழந்த இந்தக் குடும்பங்கள் கடந்த சில வருடமாக இடம் பெயர்ந்து வாழ்ந்தனர். மிக அண்மையில் அவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டாலும் ஒரு வகை நிவாரண உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏறத்தாழ 150 குடும்பங்கள் கிளாலிக்கு வந்துள்ளன. தமது கையிருப்புக்களை மூலதனமாக்கி அவர்கள் நிலத்தைத் துப்பரவு செய்து குடிசைகளை அமைத்துள்ளனர். அரச உயரதிகாரிகளும் படையினரும் இவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிப்படி நடக்கத் தவறியுள்ளதால் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர். கிளாலிக் கடலில…
-
- 0 replies
- 422 views
-
-
முல்லைத்தீவு அரச அதிபராகப் பதவி வகித்த திருமதி இமெல்டா சுகுமார் 2010 யூலை 13ம் நாள் யாழ் அரச அதிபராகப் பதவியேற்றார் அவருக்கு முன்பு யாழ் அதிபராக க.கணேஷ் பதவி வகித்தார் அவர் வவுனியா அரச அதிபராக இருந்த பின் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாக வந்தார். 2010ம் ஆண்டு கே.கணேஷ் 69 வயதினராக இருந்தார். கொழும்பு அரசுக்குச் சிறந்த ஒத்துழைப்பு வழங்கியதால் இளைப்பாறும் வயதிற்க்குப் பிறகும் அவருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. மீண்டுமொரு நீடிப்பு வழங்கப்படலாம் என்று இருக்கையில் இமெல்டா சுகுமாருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டிய தேவை எழுந்தது. இதன் காரணமாக கணேஷ் இளைப்பாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியும் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவும் யாழ் அதிபராக இமெல்டா சுகு…
-
- 0 replies
- 432 views
-
-
இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத்தினுடாக தீர்வு காணமுடியும் என பிரதி அமைச்சர் வி.முரளிதரன் கூறும் கருத்துக்கு நான் உடன்படுகின்றேன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதனை எனது அனுபவத்தினுடாகக் கூறுகின்றேன். 15 வருடத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்ட நான் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையிழந்து அரசியல் ஊடாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்து, ஐனநாயக அரசியலுக்குள் நுழைந்தேன். 1950 ஆண்டு முதல் அரசியல் பேச்சின் ஊடாக பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதால் 30 வருடத்தின் பின்னர் ஆயதமேந்திப் போராட ஆரம்பித்தோம் அதிலும் எட்டாத நிலையில் தற்போது மூன்றாம் கட்டத்திற்கு வந்துள்ளோம். -இதனைத் தெரிவித்திருப்பது டக்ளஸ் தேவ…
-
- 0 replies
- 523 views
-
-
உலகின் யதார்த்தங்கள் எப்போதும் ஒன்றாக நிலைத்திருந்ததில்லை. உலக ஒழுங்குகளும், யதார்த்தங்களும் எப்பொதுமே மாறியபடியே உள்ளன. கிழக்கு - மேற்காக ஜெர்மன் நாட்டைப் பிரித்து வைத்திருந்த சுவர் தகர்க்கப்பட்டதும், இரும்புக் கோட்டையாக இருந்த சோவியத் யூனியன் உதிர்ந்து போனதும், சாத்தியமே இல்லாத ஒரு மக்கள் புரட்சி துனீசியாவின் அரசியலைப் புரட்டிப் போட்டதும், அதன் நீட்சியாக லிபியாவின் இரும்பு மனிதன் கடாபி இல்லாமல் போனதும் உலகில் மாறிவரும் யதார்த்தங்களை எமக்குப் புரிய வைக்கின்றது. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், இந்தியாவைத் தாண்டி எந்த மாற்றமும் ஈழத்தில் சாத்தியம் இல்லை என்று கயிறு திரிப்பவர்கள் இந்தியாவிடமிருந்தே அந்த யாதார்த்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளலாம். …
-
- 0 replies
- 395 views
-
-
இன்று தளபதி பிரிகேடியர் சொர்ணத்தின் அணியில் இருந்த ஒரு போராளியுடன் உரையாடினேன். சொர்ணம் அவர்கள் "தலைவர்தான் போராட்டம். தலைவர்தான் எல்லாம். தலைவரை நாம் எப்படியாவது காப்பாற்ற வேண்டும" என்று தமக்கு தொடர்ந்து கட்டளை இட்டபடியே இருந்ததாக குறிப்பிட்டார் அந்த போராளி. குறைந்த வளங்களுடன் ஓய்வின்றி பல ஊடறுப்பு சமர்களை தொடர்ந்து நடத்தியபபடி எதிரியை நிலைகுலைப்பதிலேயே குறியாக இருந்தாராம். எல்லா சமர்களிலும் சிற...ிதும் பெரிதுமாக நிறைய விழுப்புண்கள் அவருக்கு ஏற்பட்டதாகவும் அதையும் கவனியாமல் தமக்கு மே மாத நடுப்பகுதிவரை கட்டளை வழங்கியபடியே இருந்தாராம். இறுதியாக முழுவதுமாக உடல் செயல் இழந்த நிலையில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்திருக்கிறார். அந்த போராளி சொன்ன கதைகள் பல தற்போது இங்கு பதிவிட முட…
-
- 0 replies
- 837 views
-
-
காலம் மாறுகிறது.காதலும் மாறிக்கொண்டிருக்கிறது.காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமும் மாறிக்கொண்டிருக்கிறது .காதலர்கள் தங்களுக்கு இடையிலான நெருக்கத்தை உணர்த்தும் விதமும் மாறியிருக்கிறது.எல்லாம் ஒரே பாஸ்வேர்டாக மாறியிருக்கிறது. ஆம் மனம் ஒத்த காதல் ஜோடிகளை வர்ணிக்க வேண்டும் என்றால் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தும் அளவுக்கு அவர்கள் நெருக்கமானவர்கள் என்று சொல்லும் நிலையில் ஏற்பட்டிருக்கிறது. வாருங்கள் இண்டெர்நெட் கால காதலுக்கு! இந்த டிஜிட்டல் யுகத்தில் காதலை பரிமாறிக்கொள்ள இமெயில் ,பேஸ்புக் ,சாட்டிங் என புதிய வழிகள் உருவாகியிருப்பது போல காதல் நெருக்கத்தை வெளிப்படுத்தி கொள்ளவும் புதிய வழி கிடைத்திருக்கிறது.அது தான் ஒரே பாஸ்வேர்டு.அதாவது காதலர்கள் பரஸ்பரம் பாஸ்வேர்டை பகிர்ந்து க…
-
- 0 replies
- 636 views
-
-
எதிர்வரும் பெப்ரவரி 27 தொடக்கம் மார்ச்சு 23 வரையான நாட்களில் ஜநா மனித உரிமைக் கவுன்சில் அமர்வுகள் ஜெனிவாவில் நடக்கவிருக்கின்றன. அதன் தலைவி நவநீதம்பிள்ளை கொழும்புக்கு மேற்கொள்ளத் திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார். இது இலங்கை – இந்திய தரப்பினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நவநீதம்பிள்ளையை வளைத்துப் போடலாம் என்ற இலங்கை அரசின் நப்பாசை கை கூடவில்லை. இலங்கை அரச படைகளின் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் திருவாட்டி நவநீதம்பிள்ளை உறுதியாக இருக்கிறார். மனித உரிமை கவுன்சிலில் மேற்கு நாடுகள் கொண்டுவர உத்தேசித்திருக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை தடுப்பதற்கு அல்லது தோற்கடிப்பதற்கு இந்திய மத்திய அரசு கங்க…
-
- 1 reply
- 481 views
-
-
கடந்த வருடம் இரண்டு மாவீரர் தினம் நடந்தது எல்லாருக்கும் நினைவு தானே அந்த மாவீரர் கனவுகளைச் சுமந்ததாக சொன்ன எத்தனை பேர் , மாவீரர் விழா நடாத்துவதற்கு அப்பால் , ஏதாவது செயல்பாட்டில் உங்கள் நாட்டில் , சென்றிருக்கின்றார்கள். செல்கின்றார்கள் என்பதை மக்களே உங்கள் வீட்டுச் சுவரில் எழுதி வையுங்கள். கண்டிப்பாக இது தேவைப்படவேண்டிய விடயம் . (உங்கள் மறதிக் குணத்தை அறிந்து அரசியல் வாதிகள் செயல்படுவதை தடுக்க இது தான் ஒரே வழி ..ஹி ஹி ) இப்பொழுது சிறீலங்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணை என்ற விடயம் சர்வதேச அரசியலில் முக்கியமான விடயமாக உள்ளது . இதனை நாம் செய்தால் தான் இனப்படுகொலை நிரூபிக்கப் படும் . தமிழீழம் மலரும் . நாம் ஒவ்வொருவரும் முதலில் நாம் வ…
-
- 0 replies
- 2.2k views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விரிவான வகையில்,அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட்ஓ பிளக் மற்றும் சிவிலியன் பாதுகாப்பு, மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பானதுணைச் செயலாளர் மாரியா ஒடேரோ ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுபேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. மிகவும் ஆக்கபூர்வமான வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் விரிவானபேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை மற்றும் பரிந்துரைகள்உள்ளிட்ட …
-
- 0 replies
- 378 views
-
-
காண்டீபன் என்றழைக்கப்படும் முல்லைத்தீவு குமுழமுனையைச் சேர்ந்த சிறீஸ்கந்தராஜா, இவர் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் கல்வி கற்பித்துக்கொண்டிருந்தவர். போராளியான இவர், 1983ம் ஆண்டு காலப் பகுதியில் வன்னிப்பிராந்தியத்தில் இருந்து புதிய போராளிகளை இணைத்து இந்தியாவில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பும் பணியைச் செய்துகொண்டிருந்தார். அவருடன் புதிய போராளிகளை இணைப்பதில் அப்போது முன்னின்று செயற்பட்டவர் தான் பாலராஜ் அண்ணன் அவர்கள். கொக்குத்தொடுவாயில் பிறந்து வாழ்ந்தபடியால் திருமலை, முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒவ்வொரு பகுதிகளையும் பால்ராஜ் அண்ணை தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். அத்துடன், சிங்கள ம…
-
- 0 replies
- 839 views
-
-
கொழும்பு சிங்கள பத்திரிகையில் வந்த செய்தி ... .... சிங்கள மகிந்த ராஜபகச, இதுவரை காலமும் சிங்களத்தின் ஏவலில் இனவழிப்புக்கு துணை போன அத்தியடிக்குத்தி டக்லஸை கழட்டி விட்டு, வித்தியாதரன்(உதயன் முன்னால் ஆசிரியர்) வடமாகாண முதல்வராக்க முனைவதாக ...!!!!!!!!?????????
-
- 8 replies
- 1.7k views
-
-
தென்னாப்பிரிக்காவின் புதிய நாணயதாளில் 93 வயதான முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா படம் இடம்பெறுகிறது. மண்டேலா ஆப்பிரிக்கா மக்களுக்காக சிறையிலிருந்து வெளிவந்தது மற்றும் 22வது மனித இன ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தென்னாப்பிரிக்க ரிசர்வ் வங்கி தலைமையகத்தில் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா கூறுகையில் தென்னாப்பிரிக்க மக்களின் உரிமைக்காக போராடிய மண்டேலா சிறையிலிருந்து வந்து 27 ஆண்டுகளுக்கு பின் புதிய ஜனநாயக மலரவும், ஜனநாயக முறையில் நாட்டின் முதல் அதிபராக மண்டேலா இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
-
- 0 replies
- 924 views
-