செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி எனும் ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய நாடுகள் சபையின் 19 மனித உரிமைகள் பேரவையில் அரச பிரதிநிதியாக கலந்து கொள்வதற்கு ஜெனீவான சென்றுள்ளார். அவர் ஜெனிவா செல்லும்போது கட்சியின் பொறுப்புக்கள் யாவற்றையும் அவரது சகோதரன் தயானந்தாவிடம் கையளித்து விட்டுச் சென்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. நேற்று ஜனாதிபதி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் டக்ளசின் சகோதரன் தயானந்தா ஈபிடிபி சார்பில் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது. ஈபிடிபி யினுள் உள்முரண்பாடுகள் வலுத்து யாழ் மாவட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர்கள் வெளியேறியுள்ள சந்தர்ப்பத்தில் இச்சந்திப்பில் தயானந்தா கலந்து கொண்டது கட்சி வட்டாரங்களில் பெரும் அதிருப்தியை உருவாக்கி…
-
- 2 replies
- 628 views
-
-
ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலஙகைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைக் கண்டித்து நேற்று குருநாகல் மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களின் ஏற்பாட்டில் குருநாகல் பெரிய ஜுமஆப் பள்ளி தொழுகை முடிந்ததுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நகிழ்வில் குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்றது இதில் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கொடும்பாவிப் பதாதை தீயிட்டு எரிக்கப்பட்டது. பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.
-
- 8 replies
- 907 views
-
-
மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யும் அதிகாரம் பெற்ற ஐநா மனித உரிமைக் கவுன்சில் வருடமொன்றுக்கு மூன்று தடவை சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் தனது கூட்டத் தொடரை நடத்துகிறது. ஐநா மனித உரிமை ஆணையம் என்ற முன்னாள் அமைப்பு 2005ம் ஆண்டு உலக உச்சி மாநாட்டில் மனித உரிமைக் கவுன்சிலாக பெயர் மாற்றப்பட்டது. இப்போது நடக்கும் 19ம் கூட்டத் தொடரில் சிறிலங்கா போர்க் குற்றங்கள் தொடர்பான காரசாரமான விவாதங்கள் நடக்குமென எதிர்பார்க்கப்டுகிறது. மேற்கு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணையை கொண்டு வரலாம் என்ற தகவல் கசியத் தொடங்கியுள்ளது. இப்படியான பிரேரணைகள் கொண்டு வரப்படலாம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இது தொடர்பான கசிவுகளை ஒரு சிறிலங்கா மீதான அழுத்தம் பிரியோகிக்கும் …
-
- 0 replies
- 387 views
-
-
கீ.மு 10ம் நூற்றாண்டுக்கு முன் பண்டைய தமிழர்கள் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமாக தெளிவான ஆறு புலன்களின் மூலம் அதாவது தொடுதல், சுவைத்தல், மணத்தல், பார்த்தல், கேட்டல், அறிதல் என வகுத்துள்ளான்.
-
- 0 replies
- 422 views
-
-
அமெரிக்காவில் சாக்லேட் சாப்பிட்டதற்கு தண்டனையாக 3 மணி நேரம் ஓடிய சிறுமி பலி அலபாமா: சாக்லேட் சாப்பிட்டதற்காக 9 வயது சிறுமியை தண்டிக்க அவரை 3 மணி நேரம் நிற்காமல் ஓடும்படி செய்துள்ளனர். இதனால் நா வறண்டு மயங்கிய சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார். அமெரிக்காவின் அலபாமா பகுதியைச் சேர்ந்த சிறுமி சவன்னா ஹார்டின்(9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தாள். அவளது மாற்றான் தாய் ஜெசிகா மே ஹார்டின்(27), பாட்டி ஜாய்ஸ் ஹார்டின் காரட்(47). கடந்த வெள்ளிக்கிழமை சவன்னா சாக்லேட் சாப்பிட்டுவிட்டு பாட்டியிடம் இல்லை என்று பொய் சொல்லியிருக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த ஜெசிகாவும், ஜாய்ஸும் சவன்னாவை 3 மணிநேரம் நிற்காமல் ஓடச் செய்துள்ளனர்.…
-
- 1 reply
- 524 views
-
-
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவதற்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை திறம்பட நடைமுறைப்படுத்தினால், தேசிய நல்லிணக்கத்தை ஏற்றுபடுத்துவதற்கான நடவடிக்கையில் முக்கியமான பங்களிப்பை செய்ய முடியும். சிறிலங்காவில் இனமுரண்பாட்டுக்கு மூலகாரணமான தமிழ்மக்களின் உண்மையான குறைகளை தீர்ப்பதில் கடந்தகால அரசாங்கங்கள் தவறியுள்ளன என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் கருத்தை ஐரோப…
-
- 0 replies
- 596 views
-
-
முள்ளிவாய்க்காலில் வீழ்ந்தவர்களுக்கும், வீழ்த்தப்பட்டவர்களுக்குமானதொரு பெரும் போர்க் களம் ஜெனிவாவில் மையங்கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைக்காக அக்கினி வேள்வி நடாத்திய விடுதலைப் புலிகள் களத்தினை இழந்த பின்னர், தமிழீழ விடுதலைக்கான புதிய போர்க் களம் புலம்பெயர் தமிழர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்க் களத்தில் நாங்கள் மீண்டு எழுவது ஒன்றே, ஈழத் தமிழர்களது வரலாற்றைத் திருத்தி எழுதப் போகின்றது. வஞ்சகத்தால் வீழ்ந்த தமிழினம், மீண்டும் அதே வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டது. அந்த வரலாற்றை மீட்டெடுக்கும் போர்க் களமாக எதிர்வரும் மார்ச் 05-ம் திகதி ஜெனிவா முருகதாசன் திடல் மாறப் போகின்றது. முள்ளிவாய்க்காலில் ஏன் என்ற கேள்விக்கே இடம் இல்லாமல் ஈழத் தமிழினத்தைக் கோரக் க…
-
- 0 replies
- 629 views
-
-
தமிழீழம் என்பது வெறும் கனவு அல்ல இலட்சத்திற்கும் மேற்பட்ட எம்தமிழ் உறவுகளின் இலட்சியம். அந்த உயர்ந்த இலட்சிய நோக்கோடு பல வழிப்போராட்டங்களை எம்தமிழ் உறவுகள் அனைத்து நாடுகளிலும் முன்னெடுத்தார்கள், வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அப்போராட்டங்கள் அந்தந்த நாட்டு நீதியின் கதவுகளை அழுத்தி தட்டியிருக்கின்றன. எந்தவொரு நாட்டிலும் நீதிக்கான போராட்டங்கள் ஓய்ந்ததில்லை என்பதையே இப்போதும் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நீதிக்கான நடைப்பயணமும் பறைசாற்றி நிற்கின்றது. பெரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது விடுதலை, இனப்படுகொலை, போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்டு புறப்பட்டிருக்கும் எம்தமிழ் உறவுகளான வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா, லோகநாதன் மருதையா, மற்றும் ஜக்கமுத்து க்ராசியன் ஆகிய மூவரோடு…
-
- 1 reply
- 532 views
-
-
அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அதியு யர்மட்ட இராஜதந்திரியொருவர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா அமர்வில் பார்வையாளராகக் கலந்துகொள்ளவிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இம்முறை அமர்வின்போது இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை கொண்டுவருவதில் அமெரிக்கா வெகுவான அக்கறை காட்டிவருகின்ற நிலையில் மேற்படி தகவல் நேற்று வெளியாகியுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மார்ச் முதல் வாரத்தில் முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் அன்றையதினம் அமெரிக்காவின் அந்த உயர்மட்ட இராஜதந்திரி பார்வையாளராகக் கலந்துகொள்வாரென்றும் இலங்கைக்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவது அமெரிக்க பிரதிநிதியின் இந்த பிரசன்னம் உ…
-
- 0 replies
- 534 views
-
-
இலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதத்தால் அடிமைகளாக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்திற்கு நிரந்தரமானதும் நிம்மதியானதுமான வாழ்வுக்கு சர்வதேச சமூகம் வழிசமைக்க வேண்டும் என்று நீதி கோரி 18 நாட்களைக் கடந்து எழுச்சி வலுப்பெற நடைப்பயணம் தொடர்கின்றது. Mühlhausenஅருகாமையில் தொடர்ந்துகொண்டிருக்கும் நடைப்பயணம் ஐரோப்பிய வடகடலையும் சுவிஸையும் இணைக்கும் Rain நதி ஓரமாக நகர்ந்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுவிஸை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைப்பயணத்தை தொடர் எழுச்சியுடன் ஜெனிவா வரை அழைத்துச் செல்வதற்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். தமிழர்களின் வெளியக வெகுயனப் போராட்டங்களினதும் உள்ளக இராயதந்திர நகர்வுகளினதும் …
-
- 1 reply
- 401 views
-
-
நேர்காணல் காணொளி : Part :1 Part 2: http://youtu.be/2ovCehRZv_A Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக அனுபவித்த சம்பவங்களை கொண்டு உண்மை கதையில் எழுதப்பட்ட நாடகம் பெர்லின் நகரத்தில் சென்ற கிழமை பல்லின மக்களுக்கு காண்பிக்கப்பட்டது . குரல் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மனிதர்களின் உண்மைக் கதைகளை உலகத்திற்கு கொண்டு செல்வது Annet Henneman அவர்களின் நோக்கம் ஆகும்.அத்தோடு புலம்பெயர்ந்து அகதிகளாக பல கஷ…
-
- 0 replies
- 396 views
-
-
ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுத் தலைவரும், ஆயுதக் குழுவை வைத்திருக்கும் நபருமான டக்ளஸ் தேவானந்த நேற்றிரவு சுவிசுக்கு பயணமாகியுள்ளார். ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் இவர் கலந்துகொள்ளவிருக்கிறாராம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சூளைமேட்டில் வைத்து தனது கைத்துப்பாக்கியல் திருநாவுக்கரசு என்னும் தமிழ்ச் சகோதரரை சுட்டு, நடு ரோட்டில் காட்டு மிராண்டித்தனம் காட்டிவர் இந்த டக்ளஸ் தேவானந்தா. இக் குற்றச்செயலுக்காக அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது(சென்னை நீதிமன்றில்). வட கிழக்கில் ஆயுதக் குழுவொன்றை வைத்து மக்களை மிரட்டி தனது காரியங்களைச் சாதித்துவரும் இவர், மனித உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார் என்பது பெரும் நகைப்புக்குரிய விடையமாகும். பின்னர் கள்ளமாக…
-
- 2 replies
- 572 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியரான தமிழ் யுவதி ஒருவரை கருணா குழுவினர் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் படுகொலை செய்து உள்ளார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்து இருக்கின்றனர். தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விபரங்கள் கிடைத்து உள்ளன. தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கால் இந்த அறிக்கை எழுதப்பட்டு இருக்கின்றது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்ட மனிதாபிமான அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஊழியர்களை கருணா குழுவினர் கடத்தி உள்ளனர் என்று…
-
- 0 replies
- 430 views
-
-
இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது. இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது. தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது. மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது. இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா,சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இ…
-
- 0 replies
- 375 views
-
-
சனல்-4 தொலைக்காட்சி மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஈழமனிதப்படுகொலை காணொளி காட்சிகளால், பன்னாட்டு மட்டத்தில் எழுந்துவரும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. நடப்பு ஐநா மனித உரிமைகள் மாநாடு, பெப்,27,2012 ஜெனீவாவில் கூட இருக்கிறது. மாநாட்டு அமர்வில் இலங்கைக்கு எதிராக (இந்தியா தவிர்ந்த) அனேக நாடுகள் எதிர்நிலையெடுக்க இருப்பதாக சர்வதேச மட்டத்தில் கருதப்படுகிறது. அப்படி ஏற்படாமல் தடுப்பதற்கு இலங்கை அரசும் தன்னாலான தந்திரங்கள் அனைத்தையும் பலமாதங்களாக செய்துவருகிறது. அதற்கான அறிவுறுத்தல்களையும் திசை திருப்புதலுக்கான உத்திகளையும் நண்பன் இந்தியா சிரமேற்கொண்டு பொறுப்புடன் உதவிவருவதாக தெரிகிறது. இருந்தும் சர்வதேசநாடுகள் பலவும், ராஜபக்க்ஷ மீது பெருத்த …
-
- 0 replies
- 333 views
-
-
சர்வதேசத்தை ஏமாற்ற காலத்திற்கு காலம் பல்வேறு குழுக்களை அமைத்துவரும் சிறீலங்காவின் புதிய அவதாராகமாக பிறப்பெடுத்துள்ளது ‘இராணுவ நீதிமன்றம்’. போர் நிறைவடைந்ததன் பின்னர் சர்வதேச அழுத்தங்கள் எழுந்தபோது நல்லிணக்க மற்றும் கற்றுக்கொண்ட ஆணைக்குழு ஒன்றை மகிந்த அமைத்து காலத்தை ஓட்டிவந்தார். தங்களது நிபுணர் குழுவின் அறிக்கையைக்கூடக் கிடப்பில் போட்டுவிட்டு, மகிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்பார்த்து இலவுகாத்த கிளியாகக் காத்துக்கிடந்தது ஐ.நா. ஆனாலும் மகிந்த காலத்தை இழுத்தடிப்பதைப் புரிந்துகொண்ட, மனித உரிமை அமைப்புக்களும், மேற்குலக நாடுகளும் உடனடியாக அறிக்கையை வெளியிடவேண்டும் என்று அழுத்தம் போட்டன. வேறுவழியின்றி மகிந்தவும் அறிக்கையை வெளியிட்டுவைத்தார். மகிந்தவி…
-
- 0 replies
- 341 views
-
-
பேரினவாத சிங்கள அரசுக்கு மட்டுமல்ல, அதன் சகபாடிகளுக்கும் இரண்டு விடயங்களில் தமிழீழ மக்களது மௌனமும், அமைதியும் பெரும் எரிச்சலை மூட்டி வருகின்றது. ஒன்று, யுத்தக் குற்றச்சாட்டிலிருந்து சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் எந்தவித நகர்வுகளுக்கும் அவர்கள் அசைந்து கொடுப்பதில்லை. இன்னொன்று, திடீர் எரிபொருள் விலையேற்றத்தின் மூலம் பேரினவாதிகளது அரச எதிர்ப்புப் போராட்டத்தினுள் தமிழ் மக்களை உள்ளிளுக்கும் தந்திரத்திற்கும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. கடந்த வருட இறுதியில் சிறிலங்கா அரசுமீது மேற்குலக நாடுகள் கொண்டுவந்த போர்க் குற்றச்சாட்டு முன்மொழிவுகளை முறியடிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசுக்குப் பேருதவி செய்தது. இடையில் தடைபட்டிருந்த பேச்சுவார்த்தையில் கல…
-
- 0 replies
- 344 views
-
-
ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதற்கு முன்பாக, இப்படியான ஒரு நிலைமை ஏற்படும் என்பதனையும் அதனை தவிர்க்க சிறீலங்கா எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அமெரிக்கா சிறீலங்காவிற்கு பலமுறை தெளிவு படுத்தியிருந்தது. அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலர் கிலாரி கிளிண்டன் முதல் சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதர் வரை அமெரிக்காவின் பல உயர்மட்டத் தலைவர்கள் பல தடவைகள் சிறீலங்காவின் தலைவர்களை நேரில் சந்…
-
- 0 replies
- 551 views
-
-
கணவர் உடல் மீது... விழுந்து, மனைவி உயிர் விட்டார். பனப்பாக்கம் அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி (98) தையல் தொழிலாளி. இவரது மனைவி வரதம்மாள் (92). துரைசாமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். நேற்று காலை முதல் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் வந்து துரைசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் நடந்தது. பகல் 1 மணிக்கு துரைசாமியின் உடலைப் பார்த்து அவரது மனைவி வரதம்மாள், கதறினார். 70 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த என்னை விட்டு பிரிந்து சென்று விட்டீர்களே என்று தனது மார்பில் அடித்து கொண்டு கணவனின் காலடியில் சர…
-
- 8 replies
- 1.1k views
-
-
3.2 மில்லியன் புள்ளிகளை பயன்படுத்தி தந்தையின் உருவத்தை வரைந்த கலைஞன் தந்தையர்களின் அறிவுரைகளை செவிமடுக்க நேரமில்லாத பிள்ளைகள் வாழுகின்ற இந்த கலியுகத்தில் மிகவும் பொறுமையுடன் தனது தந்தையின் படத்தை புள்ளிகளை வைத்து தத்துரூபமாக வரைந்துள்ளார் மியூஜ்வெல் என்டாரா என்ற புளோரிடாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர். இதற்காக 11in X 17in அளவினையுடைய தாளைப் பயன்படுத்திய அவர் 3.2 மில்லியன் கணக்கான மிகவும் மெல்லிய புள்ளிகளையும் தனது கைகளாலேயே வைத்து வரைந்து முடித்திருக்கின்றார். இதுபற்றி மியூஜ்வெல் கூறுகையில், புள்ளிகளை கொண்டு வரையப்படும் படங்களுக்கு தான் ஒரு ரசிகன் எனவும், ஆகவே தான் முதல் முதலாக வரையும் புள்ளிகளை கொண்ட படமாக தனது தந்தையின் உருவத்தை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்து…
-
- 2 replies
- 734 views
-
-
விடுதலைப் புலிகளிடம் மட்டுமே அடிவாங்கி, அதிலிருந்து மீண்ட திமிருடன் நிமிர்ந்து நின்ற சிங்கள அரசுக்கு, தற்போது திரும்பும் திசைகளிலெல்லாம் அடி விழுந்து வருகின்றது. அமெரிக்கா வழங்கிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற அனுமதிச் சீட்டைக் கையில் எடுத்துக்கொண்டு, தமிழீழ மக்கள்மீது பாரிய இனப் படுகொலையை நடாத்தி முடித்த சிங்கள அரசு, அதற்கான பின் விளைவுகளைத் தற்போது எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. மேற்குலகைப் பொறுத்தவரை ஒரு யுத்தத்தின் வெற்றி என்பது தமக்கான தடைக்கல்லை நீக்குதல் அல்லது தமது எதிரியை அழித்தல் என்பதுடன் முற்றுப்பெற்று விடுகின்றது. இரண்டாவது உலகப் போரின் பின்னர் இந்த அணுகுமுறையையே மேற்குலகு கடைப்பிடித்து வருகின்றது. ஜெர்மனியில் கிட்லரின் மரணத்துடன் அந்த…
-
- 0 replies
- 501 views
-
-
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று கொண்டுவரப்படுமென மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு எத்தகைய உறுதி மொழிகளை வழங்கினாலும், தீர்மானம் முன்வைக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு நடாத்திய பேச்சுவார்த்தையில், றொபேர்ட் பிளேக்கும், மரியா ஒட்ரோவும் கூறிய விடயத்தில், கூட்டமைப்பின் கருத்தினைக்கூட அவர்கள் இருவரும் பரிசீலிக்க விரும்பவில்லையென்பது தெளிவாகிறது. கூட்டமைப்போடு இது குறித்துப் பேசிப்பயனில்லை என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் தகவல்கள் உண்டு. இதுதான் தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர…
-
- 1 reply
- 460 views
-
-
உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்...ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிசம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வள…
-
- 3 replies
- 1k views
-
-
யாழ்குடாவில் தற்போது அரங்கேறிவரும் சம்பவங்களை நோக்கும் போது மரணம் மலிந்த பூமியாக காணப்படுவதை உணரக் கூடியதாக உள்ளது. பொருளாதாரத்தைப் பொறுத்தளவில் அங்கு நாளாந்தம் ஒரு சிறிய குடும்பத்துக்கு ஆயிரம் ரூபா போதாமையாக உள்ளது. விலைவாசி ஏற்றம் நாளும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திவருகின்றது. அங்கு அதிஉச்ச ரீதியில் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உளரீதியில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. பல குடும்பங்கள் யுத்தம் இடம்பெற்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டதைவிட தற்போது அதிகமாகப் பாதிக்கப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை யாழில் நாளாந்தம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவர்களே அதிகமாகத் தற்கொலை செய்துகொள்வதாக …
-
- 0 replies
- 520 views
-
-
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் சில பக்கங்களை ஈழத் தமிழர்கள் நிச்சயம் படிக்க வேண்டும். இந்திய விடுதலைக்காக ஒரு தேசிய இராணுவத்தை அமைத்து, அதனை வழிநடாத்திய சுபாஸ் சந்திரபோஸ் அவர்களது வரலாறு தேசியத் தலைவர் அவர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தித் தம்மை அர்ப்பணித்த உயர்வான இந்தியர்களது வரலாறுகள் சில எமக்கும் படிப்பினையாக உள்ளன. அந்த வகையில், நாம் படிக்க வேண்டிய வரலாற்று மனிதராக உதம் சிங் அவர்களைக் கற்றுக்கொள்ளலாம். அவரது கோபமும், அதன்மீதான நியாயமும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட பாதையும், பழிவாங்கலும், அவரது மரணமும் அவரைக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையை எமக்கு ஏற்படுத்துகின்றது. …
-
- 0 replies
- 374 views
-