Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை மிகத்தெளிவாக அய்யனார் பாண்டியன் அருமையாக சொல்கிறார்.

    • 0 replies
    • 221 views
  2. ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால்.. புகையிரத நிலையத்திற்குள், விபத்து !! தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதியதில் பழைய கட்டிடமொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர். பராமரிப்பு நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி பழைய கட்டிடத்தின் மீது மோதியதால் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும் விபத்து தொடர்பாக ரயில்வே திணைக்களம் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1301576

  3. விழுங்கப்பட்ட பற்றரி வெடித்ததால் 2 வயது சிறுவன் உயிருக்குப் போராட்டம் By DIGITAL DESK 3 08 NOV, 2022 | 12:13 PM மெக்ஸிகோவைச் சேர்ந்த 2 வயதான சிறுவனொருவன் விழுங்கிய பற்றரி, வயிற்றுக்குள் வெடித்ததால் அச்சிறுவன் உயிருக்குப் போராடி வருகிறான். அச்சிறுவன் சுவாசிப்பதற்கு சிரமப்படுவதாகக் கூறி, இச்சிறுவனை அவனின் தாயார் கெனானியா நகரிலுள்ள வைத்தியசாலைக்கு ஒக்டோபர் 23 ஆம் திகதி அழைத்துச் சென்றார். அச்சிறுவன் பற்றரியை விழுங்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன்பின், ஹேர்மோசிலோ நகரிலுள்ள வைத்தியசாலைக்கு அச்சிறுவன் அனுப்பப்பட்டான். அச்சிறுவனை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு முன்னர், அந்த பற்றரி வெடித்த…

  4. இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் வேல்ஸ் இளவரசியான டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர். இவர் இளவரசர் சார்லசின் முதலாவது மனைவி ஆவார். இவருக்கு வில்லியம்ஸ் மற்றும் ஹென்றி எனும் ஹேரி என இரு மகன்கள். இளவரசர் சார்லசை திருமணம் செய்ததில் இருந்து தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டார் இளவரசி டயானா. பிரிட்டிஷ் இராஜ குடும்பத்தில் இணைந்ததில் இருந்தே உலகின் மிக முக்கிய புள்ளியாக திகழ்ந்தார் டயானா. திருமணமானது முதல் இவர் இறந்து பல வருடங்கள் வரை ஊடகங்களுக்கு நல்ல இரையாக (செய்தியாக) இருந்தார் இளவரசி டயானா. இவரது மரணம் விபத்தா அல்ல கொலையா என்பது நீண்ட வருடங்களாக பெரும் குழப்பமாக இருந்து வந்தது. தன்னை விட வயது அதிகமான பெண்…

    • 0 replies
    • 221 views
  5. 200 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வேன் நித்யானந்தா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அவர் தான் சமாதி நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- நான் இன்னும் சமாதியில் இருந்தாலும் சீடர்கள் மூலம் உடல் மனமும், ஆன்மாவும் ஒரே நிலையில் செயல்படுகின்றன. எனது சீடர்களின் பதிவுகளை நான் மிகவும் அரிதாகவே பகிர்கிறேன். எனது அன்பான பக்தர்கள், அன்பான சீடர்கள் மற்றும் கைலாசாவாசிகள் அனைவரையும் நான் விரும்புகிறேன். அதிர்ஷ்டவசமாக பரமசிவனின் கருணையுடனும், உங்கள் எல்லா ஆத…

    • 0 replies
    • 221 views
  6. காலை உணவுக்கு செத்த எலி! டெல்லியில் இயங்கிவரும் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் விடுதி மாணவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவில் இறந்த எலியொன்று காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜயந்த் என்ற மாணவர், கடந்த செவ்வாயன்று அவருக்கு வழங்கப்பட்ட உணவை உண்ண முற்பட்டார். அப்போது, தேங்காய்ச் சட்னியில் எலிக்குஞ்சு ஒன்று இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்தார். ஏற்கனவே அந்தச் சட்னியை ஏனைய மாணவர்கள் பலரும் சாப்பிட்டிருந்தனர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, கல்லூரி இயக்குனர் ராம்கோபால் ராவ் தலையிட்டு, குறித்த சம்பவம் பற்றி ஆராய மூன்று பேர் அடங்கிய குழுவை அமைப…

  7. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஏர் இந்தியா நிறுவனம் முற்றிலும் பெண் பணியாளர்களை கொண்ட உலகின் மிக நீண்ட தூர விமான சேவையை இயக்கியது. டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் ஃபரான்சிஸ்கோ வரை சென்ற இந்த நீண்ட தூர விமான சேவையின் பயண நேரம் 17 மணி நேரம், அதாவது சுமார் 14500 கி.மீ. இந்த சாதனைக்காக விரைவில் கின்னஸுக்கு விண்ணப்பிக்க இருக்கிறது ஏர் இந்தியா. இந்த விமானத்தில் காக்பிட்டில் இருக்கும் விமான ஓட்டுநர்கள் ,கேபின் ஊழியர்கள், மருத்துவர், தரையிலிருந்து விமானத்தை வழி நடத்தும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோலர் மற்றும் இதர ஊழியர்கள் அனைவருமே பெண்கள். இந்த விமானத்தை கமாண்ட் செய்வது க்‌ஷம்தா பானர்ஜி , சுபாங்கி சிங் மற்றும் ஃபர்ஸ்ட் ஆபீஸர்கள் ரம்யா கீர்த்தி குப்தா மற்றும் அம்ரித் நம்தாரி. …

  8. மட்டு. வவுணதீவில்... 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது! மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 21 வயது இளைஞர் ஒருவரை நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர் . குறித்த சிறுமியின் தந்தையார் வெளிநாட்டில் வேலைவாய்பு பெற்று அங்க பணியாற்றிவரும் நிலையில் தாயாருடன் வாழந்துவரும் குறித்த சிறுமியை சம்பவதினமான நேற்று தனிமையில் இருந்தபோது அங்கு சென்ற இளைஞன் சிறுமிக்கு தனது கையடக்க தொலைபேசியிலுள்ள ஆபாச படத்தை காட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாத…

  9. உயிரைப் பறிக்குமா பேன் கொல்லி?! - வாட்ஸ்அப்பில் வலம்வரும் வீடியோவும் நிபுணரின் விளக்கமும் மா.அருந்ததி ஷாம்பூ பேன் கொல்லி ரசாயனங்கள் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானவையா... இந்த மருந்துகளைப் பயன்படுத்தும்போது என்னென்ன விஷயங்களைை கவனத்தில் கொள்ள வேண்டும்? கடந்த சில நாள்களாக வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. அதில் பேசும் பெண்மணி பிரபல செய்தித்தாள் ஒன்றில் தான் படித்த செய்தி ஒன்றை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி: ``பெண்மணி ஒருவர் தன் ஏழு வயது மகளுக்குத் தலையில் பேன் கொல்லி ஷாம்பூவை தேய்த்துவிட்டு தொலைக்காட்சியில் மூழ்கிவிடுகிறார். அந்த ஷாம்பூ 20 நிமிட…

  10. Published By: DIGITAL DESK 3 22 JUN, 2025 | 09:48 AM பிரேசிலின் சாண்டா கேடரினா மாநிலத்தில் பிரியா கிராண்டே நகரில் சனிக்கிழமை (21) காலை வெப்பக்காற்று பலூன் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அதில் வெப்பக்காற்று பலூனில் பயணம் செய்த 21 பேரில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, 13 பேர் காயமடைந்துள்ளனர். சாண்டா கேடரினா மாநில தீயணைப்புத் துறையின் தகவல்படி , சுற்றுலாவிற்குப் பயன்படுத்தப்பட்ட பலூன், காலை விமானப் பயணத்தின் போது திடீரென தீப்பிடித்தது. தீ விபத்துக்குப் பின்னர், பலூன் பிரியா கிராண்டே நகரில் தரையில் விழுந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த 13 பேர் உடனடியாக சிகிச்…

  11. நிர்வாண கோலத்துடன் குழப்பம் ஏற்படுத்திய பயணி; அவசரமாக தரையிறக்கப்பட்டது விமானம் !! 2016-11-14 11:58:39 பறந்­து­கொண்­டி­ருந்த விமா­ன­மொன்றில் நபர் ஒருவர் தனது ஆடை­களைக் களைந்து நிர்­வா­ண­மாக காணப்­பட்­டதால் அவ் ­வி­மானம் அவ­ச­ர­மாக தரை­யி­றக்­கப்­பட்­டது. மெக்­ஸி­கோவின் கென்குன் நக­ரி­லி­ருந்து ஜேர்­ம­னியின் பிராங்பர்ட் நகரை நோக்கி சென்­று­கொண்­டி­ருந்த விமா­ன­மொன்­றி­லேயே இச் ­சம்­பவம் இடம்­பெற்­றது. கோண்டோர் நிறு­வ­னத்தின் இவ்­ வி­மானம் பறந்­து­கொண்­டி­ருந்­த­போது பய­ணி­களில் ஒரு­வ­ரான ஒலிவர் சார்ள்ஸ் ஹாலிடே கீ என்­பவர் தனது ஆடை­களை களைந்­து­கொண்டு நிர்­வா­ண­மாக தோன்­றி­ய­துடன் பணி­க…

  12. யாழில்... பேருந்து சாரதியின், மூக்கை வெட்டிய நபர்! யாழில் தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வீதியில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார். அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்த…

  13. 10 MAY, 2023 | 10:22 PM குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறின்போது காலில் கயமடைந்த நபரை பொலிஸார் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு வந்த நிலையில், அங்கு சிகிச்சையளித்த பெண் வைத்தியரை குறித்த நபர் கொலை செய்துள்ளார். இச் சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குறித்த வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றிய 23 வயதான வந்தனா தாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவ தினமான இன்று (10) அதிகாலையில் குறித்த வைத்தியர் பணியில் இருந்தபோது, சந்தீப் என்ற நபருக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளனர். …

  14. திருமணம் செய்யவுள்ள மணமக்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி! திருமண பந்தத்தில் இணையும் மணமகன், மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடுகளின் போது, திருமண நிகழ்வுகளை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரின் பெற்றோர்களும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1228385

  15. மஹிந்த ராஜபக்ச... நலமாக உள்ளார் – முன்னாள் பிரதமர் அலுவலகம். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. ருவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் பிரதமரின் செயலாளர் கீத் காசிலிங்கம், முன்னாள் பிரதமரின் உடல்நிலை சரியில்லை எனவும் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார். https://athavannews.com/2022/1289140

  16. திருகோணமலையில் விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! October 31, 2020 திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறைமுகத்தில் உள்ள விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கைத்துறைமுகத்தில் உள்ள பக்வத விகாகரையின் விகாராதிபதியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் விகாராதிபதியை சடலமாக மீட்டுள்ளனர். குறித்த விகாராதிபதியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். https://www.meenagam.com/?p=16340

  17. நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து - ஒருவர் காயம்; இரண்டு மாடுகள் மாயம் 18 JAN, 2025 | 11:50 AM நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது லொறியின் உதவியாளர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிமடை பகுதியில் இருந்து நுவரெலியா வழியாக ஹட்டன் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குறித்த மாடுகளை ஏற்றிச்சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

  18. நேரடி ஒளிபரப்பில் வித்தியாசமான தற்கொலை; ‘பாம்பு’ கணவனின் பரிதாப முடிவு மனைவியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத கணவர், சமூக வலைதளத்தில் தனது வித்தியாசமான தற்கொலையை நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. யூட்யூபில் தனது செல்லப் ‘பாம்புகளுடன்’ காட்சி நடத்திவந்தவர் பாம்பு நிபுணர் ஆர்ஸ்லான் வலீவ் (31). இவர் தனது மனைவி எக்டரீனா காட்யாவுடன் நடத்தும் பாம்புக் காட்சிகள் யூட்யூபில் பெருவரவேற்புப் பெற்றவை. இந்த நிலையில், தன் மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பிருப்பதாகக் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் வலீவ், காட்யாவைக் கடுமையாகத் தாக்கினார். இதனால் காட்யா பிரிந்து சென்றார். எனினும், சில தினங்களுக்கு முன் தனது செயலுக்கு வருந்த…

  19. மோனிக் என்ற கோழி, தனது நண்பருடன் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக கடல் மூலம் உலகைச் சுற்றி வருகிறது. பிரான்ஸைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கியூரக் சவுடீ என்பவர், தனது சிறிய படகில் உலகைச் சுற்றத் திட்டமிட்டார். இதற்காக அவர் துணையாகத் தேர்ந்தெடுத்தது மோனிக் என்ற கோழியை. கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அந்த கோழியுடன் உலகை அவர் சுற்றி வருகிறார். உலகின் மிகவும் வெப்பமான கடல்பகுதிகள் முதல், சூரியனே பல மாதங்கள் உதிக்காத கடல் பகுதி வரை பல பகுதிகளைச் சுற்றி வந்துவிட்டனர். பிரான்ஸின் கேனேரி தீவுகளில் தொடங்கிய அவர்களது கடல் பயணம், ஸ்பெயின் கடல்பகுதி கடந்து கரீபியக் கடற்பகுதி வழியாக ஆர்டிக் கடலுக்குள் தங்களது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். மோனிக் உடனான பயணம்…

  20. காத்தான்குடியில் பெண் மீது துப்பாக்கிச்சூடு. காத்தான்குடியில் பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வீடொன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதுடன் குறித்த துப்பாக்கி தாரி தப்பி சென்ற நிலையில் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் லேனில் நேற்று (14) முற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த துப்பாக்கி சூட்டில் வீட்டில் வசித்த இளம் பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டு…

  21. மதுபானத்தை திருடிக் குடிக்கும் குரங்குகள் Freelancer / 2025 ஜனவரி 30 , மு.ப. 08:49 கண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகள் கூட்டம் புகுந்து, ஒரு அறையில் இருந்து படுக்கை விரிப்பையும், சிற்றுண்டிப் பொருட்களையும், உள்நாட்டு மதுபானம் ஒன்றையும் திருடிச்சென்றுள்ளன. திருடிய பொருட்களை ஹோட்டலின் கூரையில் இருந்து உணண்பதையும், அவை செய்யும் சேட்டைகளையும் அங்கிருக்கும் மக்கள் தங்கள் கெமராக்களில் படம்பிடித்துள்ளனர். அந்தப் புகைப்படங்களில் ஒரு குரங்கு மதுபானத்தை ஊற்றுவதையும், மற்றொரு குரங்கு சிந்திய மதுபானத்தை குடிப்பதையும், அருகில் இருந்த மற்றொரு குரங்கு சாப்பி…

  22. Published by T Yuwaraj on 2022-02-11 21:21:02 மாத்தறை ஹக்மன நகரில் பொலிஸார் நடத்திய சோதனையில், சுகவீனம் காரணமாக உயிரிழந்த பிச்சைக்காரின் ஆடைகளில் இருந்தும், அவரிடமிருந்த பல்வேறு பைகளில் இருந்தும் சுமார் 400,000 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் ஹக்மன, கொங்கல பகுதியில் வசிக்கும் 69 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் மலை உச்சியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்ததாகவும், வெளியில் செல்லும் வழியில் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து குறித்த நபரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அந்த நபருக்கு உறவினர்கள் …

  23. 4 கால்களுடன் பிறந்த பெண் குழந்தை : அதிர்ச்சியில் உறவினர்கள்..! 16 DEC, 2022 | 10:01 PM இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், நிறைமாத கர்ப்பிணிக்கு 4 கால்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் உறவினர்கள் மற்றும் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் சிக்கந்தர் கம்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி குஷ்வாஹா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை, குவாலியரில் உள்ள கமலா ராஜா மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு, கடந்த புதன்கிழமை ஆர்த்திக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்தக் குழந்தைக்கு நா…

  24. பெண்ணின் வயிற்­றி­லி­ருந்து 55 பற்­ற­றி­களை அகற்­றிய அயர்­லாந்து மருத்­து­வர்கள் By VISHNU 20 SEP, 2022 | 11:57 AM அயர்­லாந்தைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரின் உட­லி­லி­ருந்து 55 பற்­ற­ரி­களை மருத்­து­வர்கள் அகற்­றி­யுள்­ளனர். 66 வய­தான இப்பெண் வயிற்று வலி­யினால் பாதிக்­கப்­பட்ட நிலையில், அயர்­லாந்தின் தலை­நகர் டப்­ளி­னி­லுள்ள செயின்ற் வின்சென்ட்ஸ் பல்­க­லைக்­க­ழக வைத்­தி­ய­சா­லைக்கு சென்­றி­ருந்தார். அப்­பெண்ணை எக்ஸ்றே பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தி­ய­போது, அவரின் வயிற்றில் 55 பற்­ற­றிகள் இருப்­பதைக் கண்டு மருத்­து­வர்கள் அதிர்ச்­சி­ய­டைந்­தனர். ஒரு­வரின் வயிற்றில் காணப்­பட்ட மிக அதி­க­மன பற்­ற­ரி­கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.