Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. `மனிதர்களுக்குத்தான் லாக் டெளன்... சாலையில் உறங்கும் சிங்கங்கள்’ -மிரளவைக்கும் புகைப்படங்கள்! கொரோனா ஊரடங்கால் மனித நடமாட்டம் குறைந்துள்ளது. இதனால் தென்னாப்பிரிக்காவின் தேசியப் பூங்காவில், சிங்கங்கள் சாலையில் உறங்கும் காட்சி வைரலாகிவருகிறது. கொரோனா வைரஸால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வனப் பகுதிகளில் மனித நடமாட்டம் இல்லாததால், விலங்கினங்களும் பறவைகளும் சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் தேசியப் பூங்காக்களில் ஒன்றான, க்ரூகர் தேசியப் பூங்காவில், சிங்கங்கள் சாலைகளில் கூட்டமாகப் படுத்துறங்கும் காட்சி இணையத்தில் பரவ, செம வைரல். …

  2. சிக்காகோ ஓ ஹரோ விமான நிலையம் At Charles de Gaulle Airport in Paris: This photo taken in March of last year shows planes from various airlines in storage at a “Boneyard” facility beside the Southern California Logistics Airport in Victorville, Calif. Some of the planes will be returned to service while others will be dismantled and scrapped at the facility. California with its dry desert climate is a perfect place to store surplus aircraft. (Mark Ralston AFP/Getty Images) ஏற்கனவே போயுங்கின் மாக்ஸ் 737 பல கோளாறுகள் காரணமாக விற்க முடியாமல் இருந்தது

    • 1 reply
    • 436 views
  3. ஐந்தடி நீள பெண் சிறுத்தை புலியொன்று உயிருடன் மீட்பு April 18, 2020 (க.கிஷாந்தன்) மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில், ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தை புலியொன்று (ஸ்ரீலங்கன் டைகர்) 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 8 மணிநேரம் தவித்தது. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது உயிருடன் மீட்கப்பட்டது. மேற்படி தோட்டத்தில் சிறுத்தை சிக்கியிருப்பதை அறிந்த தோட்ட முகாமையாளர் அது தொடர்பில் இன்று (18.04.2020) காலை மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார். அதன்பின்னர் பொலிஸார் ஊடாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து இராணுவம், காவல்துறையினர், வனவிலங்கு அதிகாரி…

  4. கொரோனா கிருமிப் பரவலை தடுக்க ‘சானிடைசர்’ எனப்படும் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு அமைப்புகளும் அரசாங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன. கிருமி நாசினியை பல நாடுகள் லாரிகளில் வைத்து பெருமளவில் தெளித்து வருகின்றன. ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஜப்பானிலும் தற்போது கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஒவ்வொரு கிருமி நாசினியிலும் 40 முதல் 80% வரை ‘ஆல்கஹால்’ எனப்படும் மதுபானம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, கிருமி நாசினிக்கு பதிலாக மதுபானத்தையே நேரடியாகப் பயன்படுத்த ஜப்பான் சுகாதார அமைச்சகம் முடி…

  5. குடும்பத்துடன் நாள்களைக் களிக்கும் ஏழு நாள்கள் சவாலின் மூன்றாவது நாளான இன்று, தன் தந்தையுடன் (பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ) மகிழ்வாகப் பொழுதைக் கழித்ததாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, தன்னுடைய பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். “ஒவ்வொரு நாளும் என் தந்தையுடன் கவலையற்ற நேரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பொன்னான சந்தர்ப்பம் எனக்கு இல்லை. ஆனால், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், அந்த தருணங்கள் ஆழமாக பொக்கிஷமாக இருக்கின்றன. இன்று இதுபோன்ற ஒரு நாள், நாங்கள் இருவரும் வழக்கமாக பரபரப்பான கால அட்டவணையிலும், ஓய்வு நேரத்தை மகிழ்வாகக் களிக்க சிறிது நேரம் ஒதுக்கியிருந்தோம். சமூக இடைவௌியைப் பேணி, பொன்னான சந்தர்ப்பந்தைப் பேணிய தருணமிது” என, நாமல் ராஜபக்‌ஷ அக்குறிப்பில் மேலும்…

    • 4 replies
    • 676 views
  6. ஊரடங்கால் வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவிய 6-ம் வகுப்பு மாணவி கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியதன் காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு 6-ம் வகுப்பு மாணவி ரித்தி ரூ.6 லட்சம் நிதி திரட்டி உதவிகள் செய்துள்ளார். பதிவு: ஏப்ரல் 16, 2020 12:30 PM ஐதராபாத் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சர்வதேச பள்ளிக்கூடம் ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவி, ரித்தி. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவி செய்ய எண்ணினார்.இதையடுத்து ரித்தி, தான் சேமித்து வைத்து இருந்த பணத்துடன், உறவினர், நண்பர்கள் என பலரை அணுகினார். 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. உடனே உதவி வழங்க முடிவு செய்தனர். …

  7. கடைசி ஆசை... விலை உயர்ந்த பென்ஸ் காரில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட அரசியல்வாதி.! அரசியல்வாதியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் ஊர் மக்கள் ஒன்றுகூடி விலையுயர்ந்த பென்ஸ் காரை, இறந்த அரசியல்வாதியின் உடலுடன் சேர்த்து நல்லடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம் சர்ச்சைகளுக்கும், வித்தியாசங்களுக்கும் பெயர்போனவர்கள் அரசியல்வாதிகள். இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இதேநிலைதான் காணப்படுகின்றது. அந்தவகையில், இங்கு ஓர் அரசியல் கட்சி தலைவரின் இறுதி ஊர்வலம் மிகவும் வித்தியாசமான முறையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெற்கு ஆப்பிரிக்காவில் அரங்கேறியிருப்பதாக தகல்கள் தெரிவிக்கின்றன தென் ஆப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான அரசியல்வாத…

  8. கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி முதல் முக்கிய சேவைகள் மற்றும் ஊரக பகுதிகளில் சிறு குறு தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் அல்லாத வாகன போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவரை, மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால், ஆட்டோவை வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊரடங்கு விதிமுறைகள் காரண…

  9. ஒரு மாத கைக்குழந்தையுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் அதிகாரி ஆந்திரப் பிரதேசத்தில் பணி புரியும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பிறந்த ஒரு மாத கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பியுள்ளார். நாடு முழுவதும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் என அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர். இந்தக் காலகட்டத்தில் அரசு மிகத் தீவிரமாகத் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையுடன் தனது பணிக்குத் திரும்பியுள்ளார். விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மாளா, 2013 இல் ஐஏஎஸ் அதிகாரியாகப் பதவியேற்றவர். இவர் தற்போது கைக்குழந்தையுடன் அந்த …

    • 3 replies
    • 473 views
  10. ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் - 'என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த போலீஸ் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 8 ஆயிரத்து 447 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய காரணங்களுக்கு அல்லாமல் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ள…

  11. ஊரடங்கால் ரூல்ஸை மீறி 2வது மனைவியுடன் தங்கிய கணவர்.. முதல் மனைவி ஆவேசம்.. கணவர் எடுத்த அதிரடி முடிவு பெங்களூரில் இரண்டாவது மனைவி வீட்டில் லாக்டவுனால் சிக்கிக் கொண்ட கணவனை தங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என முதல் மனைவி போர்க் கொடி உயர்த்தியுள்ளதால் போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இறுதியில் கணவரோ யாரும் வேண்டாம், லாக் டவுன் முடியும் வரை நண்பர் வீட்டில் தங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டார். பெங்களூரின் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான நவீன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மாதுரி (பெயர் மாற்றம்) திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். இந்த நிலையில் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த போது ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது…

  12. COVID -19 லாக் டவுனின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மைகள் 1. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது. 2. ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல் நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும். 3. நோய் எதிர்ப்பு சக்தி பணக்கார நாடுகளுக்கே மட்டும் சொந்தமானவை அல்ல 4. பாதிரியார், அர்ச்சகர்கள், குருக்கள், பூசாரி, மௌலவி, மதகுருமார்கள், ராபாய்க்கள், சாமியார்களால் ஒரு நோயாளியையும் காப்பாற்ற முடியாது. 5. அரசு சார்ந்த சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், நிர்வாகப் பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். இராணுவ வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் அல்ல. 6. தங்கம் மற்றும் எரிபொருளுக்கு நுகர்வோர் இல்ல…

    • 8 replies
    • 1.4k views
  13. தினமும் 6000 லிட்டர்... கொரோனாவை குறி வைத்து படு ஜோராக நடைபெறும் கோமிய விற்பனை..! கொரோனா வைரஸ் நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க பசு மாட்டின் கோமியம் மிகச்சிறந்த கிருமிநாசினி என்ற நம்பிக்கை தற்போது மக்களிடையே அதிகரித்து வருகின்றது. ஏற்கனவே, பசு மாட்டின் கோமியத்தில் நோய்க்கிருமிகளின் தாக்கத்தை கொல்லும் சக்தி மிக அதிகமாக இருப்பதாக விஞ்ஞானப்பூர்வமாகவும் மருத்துவ ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பசுவின் கோமியம் மற்றும் சாணத்தின் மூலம் தீர்வு காண முடியும் என அசாம் சட்டசபையில் சுமன் ஹர்ப்ரியா என்ற பாஜக எம்.எல்.ஏ. சுட்டிக் காட்டி இருந்தார். உத்தர பிரதேசம் மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பசு மாட்டின் கோமியம்…

  14. மத்திய சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கைதிகளை பரோலிலும் விசாரணை கைதிகளை ஜமீனிலும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் சிறையில் உள்ள விசாரணை கைதிகள் சிலர் பரோலில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் ஏற்கனவே நீண்ட நாட்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு மக்கள் மன்றத்தில் தீர்மானம் இயற்றியும் கவர்னர் அவர்களை விடுதலை செய்வதை மத்தியில் ஆளும் பாஜக அரசு நடவடிக்கைகளால் நிறுத்தி வைத்துள்ளார். இந்த சமயத்தில் அவர்களை விடுதலை செய்யச்சொல்லி சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.அறிக்கையில் தமிழக அரசே, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்,…

  15. மனிதர்கள் அவ்வப்போது முகத்தைத் தொடுவது ஒரு பொதுப் பழக்கம். முகத்தைத் தொடுதல் என்பது தாடியைத் தடவிக்கொடுப்பது, நெற்றியில் கைவைப்பது, வியப்பிலோ அதிர்ச்சியிலோ வாயில் கைவைப்பது, மூக்கை நோண்டுதல், விரல் நகத்தைக் கடித்தல், கண்ணைக் கசக்குதல் என்று பல்வேறு செயல்களை உள்ளடக்கியது. தற்போது கரோனா கொள்ளைநோயின் பரவலையொட்டி முகத்தில் கை வைக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளும்படி வலியுறுத்துகிறார்கள். கரோனா தொற்று உள்ள ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் அவரைச் சுற்றியுள்ள பரப்பில் போய் அந்தக் கிருமி படியும். அதில் கை வைக்கும் இன்னொருவர் தன்னிச்சையாகத் தனது வாய், மூக்கு, கண்ணுக்குக் கையைக் கொண்டுபோவதால் கரோனா வைரஸ் அவருக்கும் தொற்றிக்கொள்ளும். இதனால்தான், முகத்தைத் தொடக் கூடாது என்பது கரோன…

  16. சாருக்கு இப்ப வயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு.. டோட்டல் மகிழ்ச்சியில் பெர்னி குடும்பம். மிலன்: பார்முலா ஒன் கார்ப் பந்தயங்களில் புதுமைகள் பலவற்றைப் புகுத்தி அதை சீரமைத்த முன்னோடிகளில் ஒருவரான பெர்னி எக்கல்ஸ்டோன் தந்தையாகியுள்ளார். அவருக்கு தற்போது வயது 89 ஆகும்.1978 முதல் 2017 வரை பல புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்து பார்முலா 1 கார்ப் பந்தயத்துக்கு தனி கெத்து சேர்த்தவர் பெர்னி. இவர் மொத்தம் 3 திருமணம் செய்துள்ளார்.முதல் இரு திருமணங்கள் மூலம் அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். தற்போது இவரது மூன்றாவது மனைவி பேபியோனா புளோசி கர்ப்பமடைந்துள்ளாராம். இதனால் பெர்னி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். பெர்னியை விட பாதி வயது (44 வயது) கொண்டவர் புளோசி. இவருக்கு …

  17. ‘நாம் மீண்டும் சந்திப்போம்’ – 68 ஆண்டுகளில் ஐந்தாவது உரை நிகழ்த்தினார் எலிசபெத் மகாராணி! நாட்டு மக்கள் அனைவரும் உறுதியுடன் எதிர்கொண்டால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மேலெழுந்து வர முடியும் என பிரித்தானிய மகாராணி எலிசபெத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவது பாரிய பாதிப்பினை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலினால் பிரித்தானியா பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பாக பிரித்தானிய முடிக்குரிய மகாராணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உரை நிகழ்த்தினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தேசமெங்கும் வியாபித்திருந்த இரண்டாம் உலகப்போர் நெருக்கடி நிலையின் போது செயற்பட்டது போல இப்போது நாட்டு மக்கள் உறுதியுடன் செயற்பட்டால் கொரோனா பாதிப்புக்களில் இருந்து …

  18. கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் என்று நீங்கள் புகைப்படங்களில், காணொளிகளில் பார்த்திருக்கலாம். ஆனால், முதல் முறையாக மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் கட்டமைப்பை இசை வடிவமாக மாற்றியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் இந்த இசை வடிவம், இந்த நோய்த்தொற்று குறித்து நுண்ணோக்கி மூலம் விஞ்ஞானிகளால் காண முடியாததை விளக்கும் என்று அந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸின் தொற்றுத் தன்மைக்கு காரணமான அதன் புரதங்களின் கட்டமைப்பு குறித்து அறிவதற்காக தங்களது குழுவினர் ஏற்கனவே இந்த இசை வடிவத்தை பயன்படுத்தி அதன் அதிர்வு கட்டமைப்பை பகுப்பாய்வு செய்துள்ளதாக பேரா…

    • 0 replies
    • 314 views
  19. காசோலையை அயன் செய்து கிருமி நீக்கம் செய்தார் வங்கி கேசியர் ஒருவர் பதிவு: ஏப்ரல் 06, 2020 16:52 PM அகமதாபாத் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வங்கிகள் போன்ற பல அத்தியாவசிய சேவைகள் இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், குஜராத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடாவின் கிளையிலிருந்து ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. வீடியோவில், ஒரு காசோலையை அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தி காசோலையை கிருமி நீக்கம் செய்வதைக் காணலாம். இந்த வீடியோவை ஆனந்த் மஹிந்திரா என்பவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு நபர் ஒரு காசோலையை ஒரு ஜன்னல் வழியாக காசாளரிடம் கொட…

    • 1 reply
    • 345 views
  20. இலங்கையின் ' பிளக் டீ' நிமோனியா நோயினை கட்டுப்படுத்த உதவுவதாகவும், அதிக மருத்துவ குணம் கொண்டதாகவும் மருத்துவத்துறையினர் கூறுகின்றனர். இதன் காரணத்தினால் இலங்கையின் தேயிலை சர்வதேச சந்தையில் கேள்வியை எழுப்பியுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரொமேஷ் பத்திரன இதனை தெரித்தார். அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பிரதான ஏற்றுமதியான தேயிலை, இறப்பர் என்பவற்றை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றது.</p> அதேபோல் தேசிய விவசாயத்தை பலப்படுத்த இப்போதே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். தொழ்ற்சாலைகளை மீண்டும் இயக்க…

    • 4 replies
    • 445 views
  21. கொரோனா பரவுவதற்கு டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு காரணம் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது டெல்ல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் தான் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதிகம் பரவி இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தம்முடைய பகுதியில் மத மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தான் இந்தியாவில் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று பரவியது என பிரச்சாரம் செய்ததாக தெரிகிறது அந்த இளைஞர் தனது வீட்டின் வெளியே நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள்…

  22. ’தென்கொரியாவில் கரோனா நோய்த்தொற்று பரவக் காரணாக இருந்த தேவாலயம்.’ கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவுவதற்கு கூட்டம் நிறைந்த இடங்கள் சாதகமாக உள்ளன என்பது உலகம் முழுவதும் அரங்கேறிய பல்வேறு நிகழ்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான அறிகுறிகள் அவருக்குத் தோன்றுவதற்கு முன்பே மற்றவா்களுக்கு அந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கிவிடுகிறது எனத் தெரியவந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபா் தும்மும்போதும் இருமும்போதும் வெளியேறும் நீா்த்திவலைகள் மூலம் வைரஸும் வெளியேறுவதால், அது காற்றிலும் அருகிலுள்ள பரப்புகளிலும் படிந்துவிடுகிறது. அதனை வேறொரு நபா் தொடும்போது அந்த வைரஸ் அவரது கைகளில் ஒட்டிக்கொள்கிறது.…

  23. இக்கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை. இதற்கான பதில் நாம் "உயிர்" என்பதற்கு கொடுக்கும் வரைவிலக்கணத்தில் தங்கியுள்ளது. இப்போது சொல்லக்கூடிய பதில்: "இருக்கு ஆனால் இல்லை".உயிருள்ளவற்றின் பண்புகளையும் உயிரற்றவைகளின் பண்புகளையும் பெற்றுள்ளதால் வைரஸ்கள், இன்றளவும் உயிரியல் வல்லநர்களுக்கு பெரிய புதிராகவே உள்ளன.எனவே வைரஸ்களுக்கு வகைபாட்டியலில் தனி இடம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. மிக நுண்ணிய, இலத்திரனியல் நுண்ணோக்கியினால் (Electron Microscope) மட்டுமே காணக்கூடிய, தொற்றக்கூடிய வேறு உயிருள்ள கலன்களுக்குள் வாழும் கட்டாய ஒட்டுண்ணிகள் என்று தற்போது வைரஸ்கள் வரையறுக்கப்படுகின்றன.வைரஸ்களின் மிக நுண்ணிய அளவின் காரணமாக அவைகளைப் பற்றிய அறிவு உயிரியல் வல்லுநர்களுக்கு நீண்ட காலமாக இல்லாமலேயே இ…

    • 2 replies
    • 885 views
  24. பிரான்சில் கொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள் என செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பதிவு: ஏப்ரல் 05, 2020 12:00 PM பாரீஸ் பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு போராடி வரும் நிலையில், பிரான்ஸ் செவிலியர்கள் சிலர் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு, கொரோனாவை எதிர்கொள்ள அரசு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறது என்ற குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று, தற்போது நாட்டில் 82,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,507 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காக…

    • 2 replies
    • 682 views
  25. தாயைக் கொன்று உடலுக்கு அருகில் தூங்கிய மகன் கைது அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில், மகனின் தாக்குதலில் தாயொருவர், நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர், சீதனவெளி பகுதியைச் சேர்ந்த இராசையா சரோஜாதேவி (57 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த பெண்ணும் அவரது மகன், மருமகள் ஆகியோர் சீதனவெளி பகுதியில் வசித்து வந்த நிலையில், மகனுக்கும் மருமகளுக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், மருமகள், சந்தனவெட்டை, 64ஆம் கட்டையிலுள்ள அவரது தாயாரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.