துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
இலங்கையின் தமிழர் தாயக பகுதியில் பாடசாலை மாணவர்களை போதையின் பிடியில் இருந்து விலத்தும் வகையில் யாழ் பல்கலை கழக முன்னாள் மருத்துவ பீட மாணவர்கள் அமைப்பு ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது. இந்த வேலை திட்டத்துக்கும், Killi People அமைப்புக்குமாக சேர்த்து நிதி சேகரிக்கும் நோக்கில் டாக்டர் மதியழகன் பரமலிங்கம் ஸ்கொட்லாந்தின் எடின்பரோ மரதனில் ஓடுகிறார். அவரின் ஆங்கில செய்தியும், நன் கொடை பக்கமும் கீழே. OUR STORY: Dear all, Greetings! வணக்கம்! Deadly street drugs have become widely available with no shortage in Tamil-populated North-East Sri Lanka within the last few years. Innocent school students, are the main target of drug traffickers and every pa…
-
-
- 9 replies
- 768 views
-
-
அன்பார்ந்த நண்பர்களுக்கும் நவ்வாவ்இன் நலன் விரும்பிகளுக்கும், போரால் சீரழிந்த கிழக்குப் பிரதேசத்தில் சுய முயற்சிக் கமத்தொழில் பணிகளுக்கு நிதி வழங்கல் கிழக்கிலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இயல்பு வாழ்வுக்கு திரும்பவைப்பதில் நவ்வாவ் கடந்த ஒன்றரை வருட காலமாக முன்னெடுத்துவரும் செயல்பாடுகளைத் தாங்கள் நன்கறிவீர்கள் என்பதில் எமக்குச் சந்தேகம் இல்லை. கடந்த மார்ச் 2013 ல் அமெரிக்க வரியாணை செயலகம் எம்மை மார்ச் 2012 இலிருந்து பதிவு செய்யபட்ட அறக்கட்டளை நிலையமாக அதிவிரைவாக ஏற்றுக்கொண்டது, நாம் தனிய நின்று பொறுப்பெடுத்து நிதிவழங்கி பின்வரும் வரும் பணிகளை அவதானமாக திட்டமிட்டும், நுண்மையாக நிறைவேற்றி வைத்ததிலிருந்தும் ஊற்றெடுத்ததாகும் என்பதை நாம் பெருமையுடன் காட்டி…
-
- 3 replies
- 702 views
-
-
போரால் பாதிப்புற்ற தங்கராசா 10ஆயிரம் ரூபா உதவி தங்கராசா ரமேஷ் இவர் பிறப்பிலே ஊனமானவர். போரால் பாதிக்கப்பட்டு சொத்துகள் உடமைகள் யாவையும் இழந்து போனவர். எனினும் இழக்காத மனவுறுதியோடு முல்லைத்தீவு நகரில் கச்சான் விற்றுத் தனது குடும்ப வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்கிறார். வளங்கள் இல்லாத நிலமையில் அன்றாடம் தன்னால் இயன்றளவு முயற்சித்து உழைக்கும் தன்னம்பிக்கையுள்ள மனிதர். இவருடைய தொழிலை மேலும் சற்று விரிவுபடுத்திக் கொள்ள இவருக்கு இலங்கை ரூபா பத்தாயிரம் ரூபா (அண்ணளவாக 60€)உதவினால் போதுமென்ற பெருமனதோடு வாழும் மனிதர். இவருக்கு யாராவது உதவ முன்வந்து உதவினால் அவரது வாழ்வில் மீண்டும் புது நம்பிக்கையும் ஏற்றமும் உண்டாக ஏதுவாக இருக்கும். தொடர்புகளுக்கு :- Telephone: (Shanthy) +49…
-
- 3 replies
- 744 views
-
-
New Opportunities for Wounded, Widowed, and Orphans of War, (புதிய சந்தர்ப்பங்கள்) அமைப்பானது அமெரிக்க நாட்டு வருமானவரிச்சட்டத்தின் பிரிவு 501c3 பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்டு அமெரிக்க நாட்டைத் தளமாகவும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் வாழ் தமிழ் பேசும் மக்களைத் தன் சேவை நலங்களின் பெறுனராகவும்கொண்டியங்கும் ஒரு அறக்கொடை அமைப்பாகும். புலம்பெயர் தமிழ் மக்களுக்குத் தகவல் தருநோக்கில் உருவாக்கப்பட்ட எமது முகநூற் தளத்தினைத் (Facebook page) தற்போது நாம் விரிவுபடுத்தி வருகின்றனம். இந்த வகையில் நடைமுறையில் விரிந்துவரும், மற்றும் ஏற்கெனவே கனிந்துவிட்ட எமது திட்டங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள், சலனப்படங்கள், நிழற்படங்கள் போன்றவற்றால் நிறைந்து காணப்படும் இத்தளமானது மேலதிகமாக…
-
- 0 replies
- 442 views
-
-
ஒரு காலையும், கையையும் இழந்த ஒருவருக்கும், அங்கவீனமான அல்லது கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நிலையிலும், தம்மையும் உறவினரையும் தமது உழைப்பில் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள ஐந்து பெண்களுக்கும், உதவி தேவையாக இருக்கிறது. இவர்களுக்கு சிறு தொழில் முயற்சிகள் தேவையாக இருக்கின்றன. சிறிய தென்னந்தோட்டத்தில் வரும் வருமானமும், கோழி வளர்ப்பும் இவர்களுக்கு சாத்தியமான தொழில்களாக இருக்கின்றன. தேவையான பணத்தின் அளவு பற்றி இன்னமும் கணக்கிடவில்லை. உங்களால் உதவ முடியுமானால் தொடர்பு கொள்ளுங்கள். பணஉதவி மட்டுமல்ல, தொழில்துறை சார்பான உபகரணங்களை பெற்றுக்கொடுப்பது முதல், தொழில்நுட்ப அறிவு, தொழிலை நட்டமடையாமல் வருமானம் வரக்கூடிய வகையில் நடத்துவதற்கு உதவுதல், போன்றவற்றில் பங்களிப்பு செய்ய…
-
- 0 replies
- 732 views
-
-
போரில் பெற்றோரை இழந்த மடுவலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தேவை. ------------------------------------------------------------------------------------------------------- போரில் தாயை அல்லது தந்தையை அல்லது தாய்தந்தை இரவரையும் இழந்த மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மடு வலயத்தில் உள்ள 16 பாடசாலைகளின் கல்வி கற்கும் 251 மாணவ மாணவியர்களுக்கான கற்றல் உபகரணங்களான கொப்பிகள் , எழுதுகருவிகள் ஆகியவயை தேவைப்படுகிறது. இம்மாணவர்கள் உறவினர்களின் பாதுகாப்பிலும் பலர் வயதான அம்மம்மா , அப்பம்மா ஆகியோருடனும் வாழ்ந்து வருகின்றனர். போரின் காயங்களிலிருந்து மீள எழுகிற மடு வலயத்தில் வாழும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி அவர்களது கல்வியை மேம்படுத்த புலம்பெயர் தமிழர…
-
- 0 replies
- 400 views
-
-
மட்டக்களப்பில் தையல் நிலையம் ஆரம்பம். எம்மால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தொழில் முயற்சியின் முதலாவது முதலீட்டாளராக நேசக்கரம் அமைப்பின் நீண்ட கால ஆதரவாளரான யேர்மனியில் வசித்து வரும் திரு.சபேசன் அவர்கள் இணைந்துள்ளார். ஏற்கனவே போரில் பெற்றோரை இழந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு சபேசன் மாதாந்தம் உதவிக் கொண்டிருப்பதோடு அவசர உதவிகள் தொழில் முயற்சிகளுக்கும் உதவியுள்ளார். அத்தோடு தனது உறவினர்கள் நண்பர்களையும் நேசக்கரத்துடன் இணைத்து உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டமாக தையல் நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட உதவியையும் வழங்கியதோடு தையல் நிறுவனத்தை தொடர்ந்த வளர்ச்சியில் கொண்டு சென்று போரால் பாதிப்புற்றவர்களுக்கான ஆதரவை வழங்கும் நோக்கில் எம்முடன் இணைந்துள…
-
- 5 replies
- 987 views
-
-
மட்டக்களப்பு மலையர்கட்டு கிராம மாணவர்களுக்கு அவசர கல்வியுதவி தேவை போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மலையர்கட்டு கிராமத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் 43 பேருக்கான அடிப்படை கற்கை உபகரணங்களும் பாதணிகளும் வழங்க வேண்டியுள்ளது. இப்பாடசாலைக்கு நேரில் சென்று மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்ட எமது அமைப்பின் பணியாளர்களின் அவதானிப்பில் இக்கிராமம்; போரால் பாதிப்புற்ற கிராமங்களில் அதிக பாதிப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் யாவற்றிலும் தேவைகளை அதிகம் எதிர்பார்த்து இருக்கும் இக்கிராமத்தில் வறிய நிலமையில் உள்ள மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலமையில் வாழ்கின்றனர். தொடர் இடப்பெயர்வு யுத்தம் அனைத்தாலும் பாதிப…
-
- 0 replies
- 414 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமான கிரிமிச்சையோடை கிராம மக்களுக்கு லண்டன் செல்வ விநாயகர் ஆலய நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக ஞாயிற்றுக்கிழமை மாலை உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இவ் உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக வழங்கப்பட்ட உதவிப்; பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாக சென்று வழங்கி வைத்தனர். இதன்போது பேரவை பிரதி நிதிகள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப் உணவுப் பொதியில் அரிசி சீனி தேயிலை கோதுமை மா பருப்…
-
- 0 replies
- 435 views
-
-
நேற்று தாயகத்திலிருந்து (மட்டக்கிளப்பு) வைபரில் ஒரு படம் வந்தது படத்தில் ஒரு தாய் ஒரு மகள் இவர் யெயந்தன் படையணியின் தளபதிகளில் ஒருவரின் மனைவி மற்றும் பிள்ளை அண்ணை என்று எழுதியிருந்தது தொலைபேசி எடுத்தேன் அந்த பிள்ளைக்கு பாடசாலைக்கு போக ஒரு சைக்கிள் கேட்கினமண்ணை என்றார் சரி சைக்கிள் என்னவிலை? என்பதற்கு 12 500 ரூபாக்கள் என்றார் உங்களிடம் 12 500 ரூபா இருந்தால் வாங்கிக்கொடுக்கமுடியுமா இந்த மாசம் ஏலாது வாற மாசம் அனுப்புகின்றேன் என்றேன் சரியண்ணை வாங்கிக்கொடுத்துவிட்டு தொடர்பு கொள்கின்றேன் என்றார் என்னை அவர்களுடன் கதைக்கும்படி தொலைபேசி இலக்கம் அனுப்பியிருந்தார் அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்கின்றேன் …
-
- 12 replies
- 2.1k views
-
-
மனிதநேயப்பணியை வாழ்த்துகின்றோம் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய மத்தியகுழு உறுப்பினர் திரு தர்மலிங்கம் பாஸ்கரன் அவர்களும், ஒன்றிய உறுப்பினர் திரு சதாசிவம் வைகுந்தவாசன் அவர்களும் அவர்களின் அன்புக்குரியவர்களின் நினைவாக புங்குடுதீவில் தற்போதைய கொடிய கொரோனா நோய்ப்பரவல் காரணமாக வீடுகளில் வாரக்கணக்கில் தங்கியிருக்கும் மக்களுக்கு பாரிய நிதியுதவியுடன், உள்ளுார் அமைப்புக்களுடன் சேர்ந்து அம்மக்களுக்கு தேவையான உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றார்கள் இவர்களின் இம்மனித நேயப்பணியானது சரியான நேரத்தில் அங்கு வாழ்வியல் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு கிடைக்கச் செய்ததனையிட்டு அவர்கள…
-
- 0 replies
- 910 views
-
-
மன்னார் மாவட்டம் நேசம் இலவச கல்வித்திட்டம் 171 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். நேசம் இலவச கல்வித்திட்டத்தினை இவ்வாண்டு மன்னார் மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தியிருந்தோம். மன்னார் மாவட்டத்திற்கு 3ஆயிரம் வழிகாட்டி வினாத்தாழ்கள் 3 வகையில் தயாரிக்கப்பட்டு பெப்ரவரி, ஏப்றல்,யூன் ஆகிய மாதங்கள் வழங்கியிருந்தோம். இவ்வழிகாட்டி வினாத்தாழ்கள் மன்னார் மாவட்டத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் கல்வி கற்கும் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் தோற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டிகள் வழங்கப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களால் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. தங்கள் கவனிப்பு கற்பித்தல் மூலம் மாணவர்களின் முன்னேற்றத்தில் ஆதரவு தந்த அனைத்து ஆசிரியர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் அ…
-
- 0 replies
- 566 views
-
-
மரணத்தின் வாசலை நெருங்கியிருக்கும் வீரத்தாய் (இது கதையில்லை) ஈழவிடுதலை வரலாறு எத்தனையோ வீரத்தாய்களையும் அவர்களது வீரக்குழந்தைகளின் வரலாறுகளையும் சேமித்து வைத்திருக்கிறது. ஈழக்கனவு கலைந்ததாய் நம்பப்படுகிற இந்நாட்களிலும் இன்னும் அந்தக் கனவின் நனவுக்காய் வாழ்கிற ஆயிரமாயிரம் அம்மாக்களின் வரிசையில் தனது பிள்ளைகளை தமிழீழக்கனவுக்காய் ஈந்த அம்மா பெயரைப்போல அழகான அம்மா. தனது குடும்பத்தின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளென 10 உறுப்பினர்கள் வரை நாட்டுக்குத் தந்த வீரத்தாய். வயது 90ஐத் தாண்டும். கண்பார்வையும் குறைந்து காதும் கொஞ்சம் கேட்காது. ஆனால் குரலை வைத்தும் நிழலை வைத்தும் ஆட்களை அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய திறனை இன்னும் இழக்கவில்லை. இன்றும் இடையறாத மாவீரர் நினைவும் அந்த…
-
- 1 reply
- 854 views
-
-
-
- 19 replies
- 2k views
- 1 follower
-
-
புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் 1 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தில் 10 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் மருதடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவ காலத்தில் பல இடங்களிலிருந்தும், பக்தர்கள் வருகை தருவார்கள். அத்துடன், ஆலய வளாகத்தில் தங்கியிருந்து வியாபார நடவடிக்கையிலும் சிலர் ஈடுபடுகின்றனர். இவர்களுக்காக திருவிழாக்காலங்களில் தற்காலிக மலசலகூடங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் நிரந்தர மலசலகூடம் அமைப்பதற்கு தீர்மானித்த ஆலய தர்மகத்தா சபையினர் கனடா வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவரிடம் இருந்து நிதியைப் பெற்றனர். அந்நிதியைக் கொண்டு ஆலயத்தின் தெற்குப் பக்கமாகவுள்ள குளத்துக்கு அருகாமையில் இருபாலாருக…
-
- 18 replies
- 1.2k views
-
-
மருத்துவ தொழில்நுட்பத்துறைசார் 700 மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் உயர்தரம் கற்கும் மருத்துவத்துறை ,தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த 700 மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சைகளை நடாத்துவதற்கான உதவியினை நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பு புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியில் வழங்கியிருக்கிறது. மேற்படி மாவட்டங்களில் 3வலயங்களை உள்ளடக்கிய மாணவர்களில் தமிழ் மாணவர்களை உள்ளடக்கிய இரு வலயங்களைத் தெரிவு செய்து மருத்துவம் , தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் கற்கும் மாணவர்களின் பல்கலைக்கழக நுளைவை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 20வருடங்களாக EDUCATION INCENTIVE ASSOCIATION BATTICALO அமைப்பினரால் முன்னோடிப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு வருகிறது.…
-
- 0 replies
- 881 views
-
-
மருத்துவம் இயந்திரவியல் கற்கும் பல்கலைக்கழக ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள். நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் கல்வி ஊக்குவிப்புக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மருத்துவ , இயந்திரபீட மாணவர்கள் 50பேருக்கான கல்வியுதவியை வழங்க புலம்பெயர் உறவுகளை வேண்டுகிறோம். சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் தொடர்ந்து மருத்துவ , இயந்திரபீடக்கல்வியை தொடர வசதியற்ற மாணவர்களை நேசக்கரம் இவ்வாண்டிலிருந்து குறித்த துறைகளில் கற்று முடிக்க வேண்டிய ஆதரவினை வழங்க வேண்டிய பொறுப்பை ஏற்றுள்ளது. எமது அமைப்பின் மூலம் பல்கலைக்கழக கல்விக்கான உதவியை பெறும் மாணவர்கள் நாம் தெரிவு செய்து கூறும் ஊர்களில் வாழும் வறிய மாணவர்களுக்கான இலவச கற்பித்தல் வகுப்புக்களை இலவசமாக வழங்…
-
- 1 reply
- 657 views
-
-
மறக்கப்படும் புற்று நோயாளரும் மாற்று வழிகளும் – வடக்கு கிழக்கு புற்றுநோய் சங்கம் (CANE) 4 Views புற்றுநோயானது, உலகில் ஏற்படும் அதிகமான இறப்புகளுக்கான காரணிகளில் 2ஆம் இடத்தை வகிக்கும் அதே நேரம், இலங்கையில் வைத்தியசாலைகளில் இடம்பெறம் இறப்புக்கான காரணிகளிலும் 2ஆம் இடத்தை வகிக்கின்றது. உலகளாவிய ரீதியில் 2018ஆம் ஆண்டு 9.6 மில்லியன் இறப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டு 20,246 ஆகவும் 2014இல் 23,105 ஆகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வட மாகாணத்தில் 2010ஆம் ஆண்டு 445 ஆக இருந்த புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2011ஆம…
-
- 0 replies
- 779 views
-
-
தலைவர் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அன்புடையீர் வணக்கம். மலசலகூடம் அமைப்பதற்கு உதவி புரிந்தமைக்கான நன்றி மடல். கிருஸ்னராஜா சந்திராதேவி என்ற மாவீரர் குடும்பத்திற்கு மலசலகூடம் அமைப்பதற்காக ரூபா 45000.00 (ரூபா நாற்பத்து ஐந்தாயிரம்) நிதியுதவி வழங்கியமைக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சார்பில் - நிதியுதவி வழங்கிய மனிதநேயமுள்ள திரு.சிவராஜா- மார்கண்டு அவர்களுக்கும் சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பிலும் பயனாளி குடும்பத்தின் சார்பிலும் நன்றியையும் மகிழ்ச்சியையும் கூறுகின்றோம். போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் நலன் கருதி தங்களினால் முன்னெடுக்கப்படும் புனித கங்கரியங்களுக்கும் மனித நேய தொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
மலையர்கட்டு கிராமமக்களுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கல் நிகழ்வு. போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மாலையர்கட்டில் வறுமைக்கோட்டிற்கு கீட்பட்ட 44குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பாக ஆயிரம் கோழிக்குஞ்சுகள் 01.10.2013 அன்று நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் அமைப்பாளர் திரு.ஜனனன் , உபதலைவர் டினேஷ் , எமது உப அமைப்பான மீழ்ச்சி அமைப்பின் தலைவர் பொருளாளர் , உறுப்பினர்கள் , மலையர்கட்டு கிராம சேவகர் திரு.குகதாசன் , கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கயேந்திரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். ஏற்கனவே இக்கிராமத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக அடிப்படைத் தேவைகளை எமது அமைப்பு …
-
- 26 replies
- 2.9k views
-
-
தமிழீழத்தின் அன்பார்ந்த நண்பர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும், இதோ, சோதனையான ஒரு காலகட்டத்தில் “போரினாற் காயமுற்றோர், விதவைகள், அனாதைகளுக்கான் புதிய சந்தர்ப்பங்கள்” அமைப்பின் சார்பில் தங்கள் உதவியை ஒரு முறை மீண்டும் ஒரு தடவை இங்கு நாடி நிற்பது சுபா சுந்தரலிங்கம். கடு மழையாலும், திடீர் வெள்ளத்தாலும் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள பேரழிவு பற்றிச் சிறிதளவேனும் தாங்கள் அறிந்திருப்பீர்களென்பதில் எமக்கு ஐயமேதுமில்லை. அங்குள்ள மக்கள் படும் அவதிகளோ வார்த்தைகளுக்கப்பாற்பட்டவை. உணவுப்பொருட்களின் பற்றாக்குறையும் அவற்றை வாங்குவதற்கான பணவுதவி யேதுமற்றிருப்பதும் அம்மக்களை ஒட்டு மொத்தமாகப் பட்டினியில் வாட்டும் நிலையையே அங்கு உருவாகியுள்ளது. வெள்ளம் தணிந்த பகு…
-
- 1 reply
- 615 views
-
-
மாணவர்களுக்கான ஓவியப்போட்டி தாண்டியடி அரசினர் தமிழ்கலவன் பாடசாலை கட்டடச் சுற்று மதில் சுவர்களில் விழிப்பூட்டல் ஓவியங்கள் வரைவதற்கு வர்ணங்கள் தேவைப்படுகிறது. இப்பாடசாலையில் கற்கும் மாணவர்களின் கைவண்ணத்தில் அமையப்பெறும் இவ் ஓவியங்களில் சிறந்த ஓவியங்களுக்கான பரிசில்களை வழங்கி மாணவர்களை ஊக்குவிப்பதோடு நேசக்கரத்தின் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்துடன் இணைந்து இது போன்ற மாணவர்களுக்கான வழிகாட்டலையும் தொடர்ச்சியாக வழங்கி ஊக்குவிப்பதே எமது நோக்கமாகும். இவ் ஓவியங்களை வரைவதற்கு தேவையான வர்ணங்கள் தூரிகைகள் கொள்வனவு செய்ய25ஆயிரம் ரூபா (150€) தேவைப்படுகிறது. இவ்வுதவியை வழங்கி மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கான ஆதரவினை புலம்பெயர் கருணையாளர்களிடம் வேண்டி நிற்கிறோம். உதவ விரும்புவோர் த…
-
- 0 replies
- 485 views
-
-
டிசம்பர் 2010 கணக்கறிக்கையும் பயன்பெற்றோரின் விபரங்களும். கீழுள்ள இணைப்பில் இணைத்துள்ளோம். 01.12.10 – 31.12.10 வரையான கணக்கறிக்கை.
-
- 0 replies
- 920 views
-
-
மாற்றுத் திறனாளிகளின் நண்பன் We Can அறக்கட்டளைநிறுவனம் உள்நாட்டுப் போரைநாம் மறந்துபோனாலும் அதுதந்துவிட்டுச் சென்றஆறாதஉடல் மற்றும் உளகாயங்களால் தினம் தினம் செத்துப் பிழைப்பவர்கள் மாற்றுத் திறனாளிகள். பிறப்பால் உடல் அங்கவீனமானவர்களைவிடகொடியபோரால் அவயவங்களை இழந்தவர்கள் வடக்கில் அதிகம். மன்னார் மாவட்டத்திலேமாந்தைமேற்கில்தான் மாற்றுத் திறனாளிகள் அதிகம் பேர் உள்ளனர். மாந்தைமேற்கின் மாற்றுத் திறனாளிகள் மண்மீதுபற்றும் இனத்தின் மீதுகாதலும் கொண்டவர்கள்.உடலளவில் பாதிப்படைந்தவர்களாக இருந்தாலும் உளரீதியில் மிகப் பலசாலிகள். இவர்களுக்கானவாழ்வை WeCan என்னும் அறக்கட்டளை அமைப்பு கட்டமைத்து வருகின்றது. காலம் முழுக்க சுய தொழிலை மேற்கொள்ளத் தேவையான உதவியை மாற்றுவலுவுள்ளோருக்கு அளித்…
-
- 0 replies
- 689 views
- 1 follower
-
-
இனிய வாழ்வு இல்லத்தில் சிறப்புற இடம்பெற்ற கலை விழா! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் சிறப்புற இயங்கி வருகின்ற மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் காப்பகமாக இருக்கின்ற இனிய வாழ்வு இல்லத்தின் மாபெரும் கலை விழா நிகழ்வு நேற்று காலை முதல் மிகவும் சிறப்பாக இடம்பெற்று நிறைவு பெற்று உள்ளது. இனிய வாழ்வு இல்ல சிறார்களின் கலை அம்சங்களை வெளிக்கொணரும் முகமாக இனிய வாழ்வு இல்ல நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த மாபெரும் கலை விழாவில் கலை விழா பரிசளிப்பு விழா இனியவள் என்கின்ற மலர் வெளியீட்டு விழா என்பன இடம்பெற்றன. http://www.hirunews.lk/tamil/picture-story/443
-
- 0 replies
- 504 views
-