மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
957 topics in this forum
-
பரந்தன் பகுதியில் சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது காவியமான 67 மாவீரர்களினதும், இதன்போது கிளிநொச்சிப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சு மற்றும் வான் தாக்குதல்களில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் வெண்நிலவன், கப்டன் உத்தமன் ஆகியோரினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். || ஆனையிறவு படைத்தளத்திலிருந்து 04.08.1996 அன்று பரந்தன் பகுதி நோக்கி “சத்ஜய” என்ருபெருமெடுப்பில் பெயர் சூட்டபப்ட்டு முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலின்போது சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.|| இந்த முறியடிப்புத் தாக்குதலில் 67 வரையான போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையி…
-
- 8 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் மாதவன்(சுனித்) மற்றும் புளியங்குளத்தில் சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் தாட்சாயினி, கப்டன் பாஞ்சாலி ஆகியோரின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது….. வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதியில் 03.08.1997 அன்று சிறிலங்கா வான்படை நடாத்திய குண்டு வீச்சின்போது…. இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
-
- 4 replies
- 802 views
-
-
பலாலி வான்படைத்தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதலின்போது வீரகாவியமான கரும்புலிகள் மேஜர் ஜெயம், கப்டன் திரு, கப்டன் திலகன், கப்டன் நவரட்ணம், லெப்.ரங்கன் மற்றும் வேவுப்புலி மேஜர் சேரன் ஆகியோரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். உன்னத விடுதலை பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலிலிருந்து….. என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணி ஆகஸ்ட் 2 1994 இல் நடத்திய அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். இது பலாலித் தளத்தின் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதலாகும். இதயம் முழுதும் தலைவன் பின்னணி : 1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல் என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத…
-
- 2 replies
- 833 views
-
-
ஓமந்தை ஊடறுப்புத் தாக்குதலில் காவியமான மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் 16ம் வீரவணக்க நாள். ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக ஒமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் வீரகாவியமான தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் 16ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். வன்னி மண்ணை ஊடறுத்து யாழில் நிலை கொண்டிருந்த படையினருடன் இணைப்பை ஏற்படுத்த ஜெயசிக்குறு என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை மூலம் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது 01.08.1997 அன்று வவுனியா மாவட்டம் ஒமந்தைப் பகுதியில் விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. பூமித்தாயே சிவந்தாயா…? ஏற்கனவே தாண்டிக்கு…
-
- 5 replies
- 952 views
-
-
போராளிக் கலைஞன் / பாடகன் மேஜர் சிட்டு ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவ…
-
- 11 replies
- 1.8k views
-
-
|| சர்வதேசக் கடற்பரப்பில் காவியமான 4 கடற்கரும்புலிகளின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். || சர்வதேசக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விமத்து ஒன்றில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் முருகேசன், மேஜர் இசைநிலவன், மேஜர் புகழினி மற்றும் மேஜர் தனிச்சுடர் ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னை மடிதன்னில் தாய்மண்ணின் நினைவுடன் கலந்த உயிராயுதங்களுக்கு எம் வீரவணக்கம். [உயிரில் உறவில் புதுவிடியலின் …. ] தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
-
- 9 replies
- 1.1k views
-
-
|| லெப்.கேணல் அருணசீலன் – 2ம் லெப்.புஸ்பானந்தன் ஆகியோரின் வீரவணக்க நாள் || அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் 29.07.2001 அன்று சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருணசீலன் மற்றும் 2ம் லெப். புஸ்பானந்தன் ஆகியோரின் 12ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். திருக்கோவில் பகுதியில் 29.07.2001 அன்று எதிர்பாராத விதமாக சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் தாய்மண் நினைவுடன் விழிமடல் மூடி உறங்கும் மாவீரர்கள். லெப்.கேணல் அருணசீலன் (கவாஸ்கர்) ( மாணிக்கம் ரவிக்குமார் – பாண்டிருப்பு, மட்டக்களப்பு ) 2ம் லெப்டினன்ட் புஸ்பானந்தன் ( தட்சணாமூர்த்தி தவநேசன் – தம்பிலுவில், அம்பாறை ) தாயக விடுதலை வேள…
-
- 5 replies
- 777 views
-
-
1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் 19 ம் ஆண்டு வீரவணக்க நாள். மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது 28.07.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான போராளிகளின் வீரவணக நாள் இன்றாகும். தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த ஐந்து படைத் தளங்களையும் அழித்தொழிப்பதற்காக 28.07.1995 அன்று விடுதலைப் புலிகளால் கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. எனினும் சில காட்டிக்கொடுப்புகளால் இத்திட்டம் வெற்றியளிக்காதபோதும் படைத்தளத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா படைகளின் இர…
-
- 1 reply
- 647 views
-
-
சரா …. சரா …. அவனது முகத்தைக் கடைசியாக ஒரு தரம் பார்க்க வேண்டும். எனக்கு இதயம் வெடித்து விடும்போல இருந்தது. எங்கள் போராளிகளின் உடல்கள் துப்பரவு செய்யும் இடம். ” சராவின் உடல் வந்துவிட்டதா ? ” என்னை மாதிரிப் பலர் கேட்டுக்கொண்டு நின்றார்கள். உள்ளே போனேன். வீரமரணமடைந்த எமது போராளிகள் , அங்கொன்றும் , இங்கொன்றுமாகக் கிடந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் முகங்களாக நான் தடவினேன். எனக்கு பழக்கமான சராவின் முகத்தைக் காணவே இல்லை. ஆனால் அந்தத் தோழர்களின் முகங்களும் எனக்குப் பல கதைகளைச் சொல்லின. பதினைந்து வயதிருக்கும். சற்று நிறமான , சுருள் சுருளான தலைமயிருடன் ஒரு போராளி முகம் வாடிக்கிடந்தான் அவனது உயிரை அழைத்துச் சென்ற விமானக் குண்டு வயிற்றை ஆழமாகச் சிதைத்துருந்தது. அவனைக் கண்ட…
-
- 6 replies
- 1.1k views
-
-
ஆனையிறவு தடைமுகாம் மீதான தாக்குதலில் காவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள் ஆனையிறவு படைத்தளம் மீதான || ஆகாய கடல்வெளி || தடைமுகாம் நடவடிக்கையில் 27.07.1991 அன்று இரண்டாம் நாள் சமரில் வீரகாவியமான லெப்.கேணல் சரா உட்பட்ட 69 மாவீரர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.. ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது 11.07.1991 அன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வெற்றிக் கொள்ளப்படாதிருந்த தடைமுகாம் மீது 27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய தாக்குதல் தொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடாத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிறிலங்கா படையினர் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கையின்போது படைத்தளம் நோக்கி முன்னகர்ந்த போராளிகளிற்கு காப்பாக விடுதலைப் ப…
-
- 11 replies
- 1.7k views
-
-
" லெப். செல்லக்கிளி அம்மானின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் " 23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கிய விடுதலைப் புலிகளின் கரந்தடித் தாக்குதலில் சுற்றுக்காவல் வந்த படையினரில் 13 பேர் கொல்லப்பட இரு படுகாயத்துடன் தப்பியோடினர். [ லெப் செல்லக்கிளி அம்மான் நினைவூட்டல் ‘ ] தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின…
-
- 9 replies
- 1.2k views
-
-
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” - குட்டிமணி ( சிங்களவனால் கண்கள் தோண்டி எறியப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர் )
-
- 0 replies
- 519 views
-
-
விடுதலை விலைமதிப்பற்றது. நாளை மலரப் போகும் தமிழீழத்திற்காக ஆயிரமாயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இன்னுயிர்களை விடுதலை வேள்விக்கு காணிக்கையாக்கிக் கொண்டார்கள். தனது எதிர்காலத் தலைமுறை எந்த வித அடக்குமுறைகளும் அற்று உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்காக தன்னை அழித்துக் கொண்டவர்தான் குட்டிமணி என்று அழைக்கப்படும் திரு செல்வராசா யோகச்சந்திரன். ஈழத் தமிழர்களின் இன்னல்கள் நிரந்தரமாகக் களையப் படவேண்டுமென்றால் தனித் தமிழீழம்தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் மிக உறுதியாக இருந்தவர் குட்டிமணி. அந்த விடுதலை வீரரை 08-05 1981 அன்று சிங்களக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிங்கள நீதிமன்றம் அவருக்கு மரணதன்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்த நீதிப…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழர் இனவழிப்பு கறுப்பு ஜூலையின் 30ம் ஆண்டு நினைவில் தமிழீழ தேசம் தமிழர் தாயகத்திலும் – தன் தேசத்திலும் வாழ்ந்த தமிழர்கள் மீது 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி சிங்கள பேரினாவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவாய் தமிழர்களில் நெஞ்சங்களில் ஆறாத துயராமாய் உறவுகளின் மீள்நினைவுகளுடன் நெஞ்சம் உறைந்து உயிர் கரைகிறது. இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனச்சங்காரமே கறுப்பு யூலை. சிங்கள ஆட்சிபீடத்தின், நன்கு திட்டமிட்ட நடவடிக்கைய…
-
- 1 reply
- 1.3k views
-
-
லெப்டினன்ட் மாமா (பாலையா) வின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும். 21.07.1988 அன்று யாழ்மாவட்டம் காரைநகர்ப் பகுதியில் இந்திய இராணுவத்தின் சுற்றிவளைப்பில் எதிரியிடம் பிடிபடாமல் விடுதலைப் புலிகளின் கோட்பாட்டுக்கு அமைவாக சயனைற் விலையை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிய லெப்டினன்ட் மாமா (பாலையா) அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள். தமிழீழத்தின் தங்கமண் அன்னியநெருபில் அழிந்துகொண்டிருக்கிறது. பேரினவாதிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய தர்மயுத்தம் வெற்றியின் எல்லைகளை தொட்ட போதுதான் புதிதொரு அன்னியப்புயல் நம்மை ஆக்கிரமித்து அழிக்க வந்தது. எங்கள் தாயகத்தின் பிறப்பிற்காகவே புலிகளின் இறப்புக்கள் தொடர்கின்றன. தர்மம் எத்தனை நிர்ப்பந்தங்கள் ஏற்ப்பட்டாலும் சரணாகதி அடையமாட்ட…
-
- 1 reply
- 545 views
-
-
முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையில் 21.07.1996 அன்று வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் உட்பட்ட 12 மாவீரர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். முல்லைத்தீவு படைத்தளம் மீதான || ஓயாத அலைகள் – 01 || நடவடிக்கை18.07.1996 அன்று தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவு தளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ச…
-
- 1 reply
- 594 views
-
-
|| மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் 21.07.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 32 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும் || சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதலில் தீரத்துடன் களத்திடை புலி மறவர்களாக பாய்ந்த வேங்கைகள்… மேஜர் ஜெயநீதன் (சதா) (வடிவேல் விமலன் – பெரிபுல்லுமலை, மட்டக்களப்பு) கப்டன் குலேந்திரன் (வனவேல் சுந்தரலிங்கம் – உன்னிச்சை, மட்டக்களப்பு) கப்டன் கார்முகிலன் (கோபு) (வெள்ளைச்சாமி கர்ணன் – நுணுகலை, மட்டக்களப்பு) கப்டன் தேரு (தம்பிரத்தினம் ஜெயாபரன் – ம்பிலுவில், அம்பாறை) லெப்டினன்ட் வன்னி (சின்னத்தம்பி புஸ்பராஜா – அக்கரைப்பற்று, அம்பாறை) லெப்டினன்ட் சபேசன் (செலலத்தம்பி கணேஸ் – சித்தாண்டி, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன…
-
- 1 reply
- 614 views
-
-
கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் அவர்கள் பற்றி நினைவில் நிலைத்தவை... பலதடவை படகு கட்டுமானத்தில் கரும்புலிப்படகு ( இடியன் ) வடிவமைக்கும் போது அதில் இயந்திரம் இருப்பு இணைக்கும் வேளையில் பல சில தாக்குதல் வழிமுறைகள் அனுபவங்கள் பற்றி பொறுப்பாளர் மற்றும் அந்த தாக்குதலில் பங்கு பற்றிய சக போராளி ( அக்காமார்கள் , அண்ணாமார்கள் ) கூறுகையில் பல கடல் கருவேங்கை காவியம் மனதில் பதிந்து நிற்கின்றன... இம்மாவீரன் அதிக பேச்சாற்றல் , தோழர்கள் இழப்பை தாங்கத ஓர் நட்பின் இமையம் , தாய்மண்ணின் மடியில் சிங்களத்தில் இனவழிப்பின் அரங்கேற்றமும் , இயற்கை அனர்த்தமும் சேர்ந்து வதைத்த போது நாளும் வனத்தில் தனிமையில் இவனின் மனம் உருகி விழிநீர் கசிந்ததை அந்த மரத்தடி வேர்களும் , துயிலும் நீளும் இரவுகளும் …
-
- 2 replies
- 854 views
-
-
|||| முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட || ஓயாத அலைகள் – 01 || படை நடவடிக்கையில் 19.07.1996 அன்று இரண்டாம் நாள் சமரில் வீரகாவியமான ஐந்து கடற்கரும்புலிகள், லெப்.கேணல் சேரன் உட்பட்ட 112 மாவீரர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்..|||| முல்லைத்தீவு படைத்தளம் மீது 18.07.1996 அன்று தொடங்கப்பட்ட || ஓயாத அலைகள் – 01 || நடவடிக்கையில் படைத்தளத்தின் பெரும்பகுதி முதல்நாள் சமரில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் ‘ 19.07.1996 ‘ படைத்தளத்தின் எஞ்சிய பகுதிகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்த நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் சிறிலங்கா படைகளினால் கடல் மற்றும் வான் மூலமான மீட்பு அணிகளை தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முல்லைத்த…
-
- 4 replies
- 862 views
-
-
||| ஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர் ||| விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது. ஓயாத அலைகல் நினைவூடல் இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீ…
-
- 0 replies
- 3.7k views
-
-
18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட || ஓயாத அலைகள் – 1 || படை நடவடிக்கையில் முதலாம் நாள் சமரில் வீரகாவியமான லெப்.கேணல் சுதர்சன் உட்பட்ட 158 மாவீரர்களின் 17 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஓயாத அலைகள் – 1 என்ற பெயர் சூட்டப்பட்டு தொடங்கப்பட்ட இந்த படை நடவடிக்கையில் முல்லைத்தீவு சிறிலங்கா படைத்தளம் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டது. இதன்போது ஆயிரத்திற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். ஆட்டிலறிப் பீரங்கள் இரண்டு உட்பட பலகோடி ரூபா பெறுமதியான போர் கருவிகள் மீட்கப்பட்டன. இந்த நகர்வை முறியடிக்கும் நோக்கில் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படையினரின் நகர்வும் முறியடிக்கப்பட்டு சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரிழப்பு ஏற்படுத்தப்பட…
-
- 7 replies
- 898 views
-
-
கடற்சமரை வழிநடத்தும் கடற்புலித் துணைத்தளபதி லெப் கேணல் இரும்பொறை மாஸ்ரர் .... உம் வீரம் அலையெறி பகை வென்றிட எம்மண்ணில் பிறப்பாயா எம் கடற்சேனைத் துணைத்தளபதியே ...?
-
- 1 reply
- 694 views
-
-
உங்களுக்கு எழுத்துருவிலான பதிவா அல்லது இவ்வகையான பதிவா இலகுவானது என மனம் திறந்து கூறுங்கள் என பணிவன்புடன் கேட்கின்றோம். நன்றி தேசக்காற்று நிர்வாகம்
-
- 9 replies
- 868 views
-
-
காங்கேசன்துறைமுகக் கடற்பரப்பில் வரலாறு காணாத சமர் 16 . 07 . 1995 ... அதிகாலை 01 : 00 மணி துறைமுகத்தின் உள்ளே ” எடித்தாரா ” கட்டளைக் கப்பலோடு , 3 தரையிறங்கு கலங்கள் ( Landing Crafts ) , மேலும் ஒரு கப்பல் என்பன இராணுவத் தளபாடங்களை இருக்கிக்கொண்டிருந்தன. துறைமுகத்தின் வெளிப்பகுதியில் போர்க்கலங்கள் பலம் வாய்ந்த வியூகமிட்டு வளைத்து நின்றன. ” டோறா “ அதிவேகத் தாக்குதற் படகுகள் எட்டு , ” சங்காய் “ பீரங்கிப் படகுகள் மூன்று. இரும்புக் காவல். அலைமடியில் தவழ்ந்து அமைதியாகி நெருங்கின கடற்புலிகளின் படகுகள். ” சுலோஜன் நீரடித் தாக்குதற் பிரிவின் “ கரும்புலி வீரர்களான நியூட்டனும் – தங்கனும் வெடிகுன்டுகளோடு ” எடித்தாராவை ” அண்மித்தார்கள். ஆரம்பித்தது உக்கிரமான சண்டை. …
-
- 8 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் றீகனின் 23 ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும். 16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 23 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள். இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர். தென் தமிழீழத்தின் புகழ் பூத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன…
-
- 3 replies
- 1k views
-