மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
லெப். கேணல் சந்தோசம் லெப். கேணல் சந்தோசம்: ஒரு முன்னுதாரணமான போராளி. இரட்டை இலக்கத்தில் அங்கத்தவர்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் விளங்கிய காலத்தில் தாக்குதல்கள் பற்றிய திட்டங்கள் போடப்படும்போது குண்டு வீசுவது என்ற பொறுப்பு சந்தோசத்திற்குதான். வெடிமருந்துகள், இயக்கத்தின் நிதி வசதி இவை மிகக் குறைவாக இருந்த காலம் அது. வீசப்படும் ஒவ்வொரு குண்டுகளுக்கும் நிறையப் பலன் எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே நிதானமாகச் சரியாகக் குண்டு வீசுவதற்குப் பொருத்தமான ஆளாகச் சந்தோசந்தான் பதிவு செய்யப்பட்டான். ஒவ்வொரு தாக்குதலிலும் இயக்கத்தின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் செயற்பட்டான் சந்தோசம். பின்னர் கண்ணிவெடியை சரியாகக் குறிதவறாது வெடிக்க வைப்பதற்குரிய நபராவும் தேர்ந்தெடுக்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
லெப். கேணல் விக்ரர் வீரத்தளபதி விக்ரர். மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போர்ராட்டமானது பறந்து விரிந்து, ஆழ வேருன்றி பெருகிவிட்டதாக தனக்கே உரித்தான வளர்ச்சி கண்டு நிற்பதைக் உலகம் புரிந்து கொண்டுள்ளது. அன்று எமது குரல்கள் அடங்க்கிக்கிடந்தன, எமக்கான குரல்களும் கேட்காது கிடந்தன, இன்று எட்டி நின்றவர்களும் எமக்காக குரல்கொடுகின்றனர். இது ஒரு கால மாற்றம் இந்த மாற்றத்தை எம் இனத்திற்கு பெற்றுத் தந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் வரிசையில் அத்திவார்கக் கற்களாகி நிற்கும் விக்டர் போன்ற வீரத்தலபதிகளை தமிழினம் ம…
-
- 4 replies
- 2.1k views
-
-
முதல் வித்து 2ம் லெப். மாலதி 1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்;த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன. அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார். வானம் கரிய இருளைச் சொரிந்து…
-
- 6 replies
- 3.6k views
- 1 follower
-
-
லெப். கேணல் அக்பர் விடுதலை வீரியம்: லெப். கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் அக்பர் / வழுதி. வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் செல்லச் செல்ல தளபதியிடமும் ஏன…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! AdminOctober 5, 2021 இலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்கபலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல்குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 34ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பா (பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை,யாழ்ப்பாணம்.) திருமலை மாவட்ட தளபதி லெப்.கேணல் புலேந்திரன் (குணநாயகம் தருமராசா – பாலையூற்று,திருகோணமலை.) மேஜர் அப்துல்லா (கணபதிப்பிள்ளை நகுலகுமார் –சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.) கப்டன் பழனி (பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா– வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) கப்டன் கரன் (வைத்திலிங்கம் மனோகரன் –சுண்டுக்…
-
- 0 replies
- 720 views
-
-
அகிம்சை வழியில் போராடி... உயிர் நீத்த, தியாக தீபம் திலீபனின் நினைவுநாள் இன்று இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக உணவு ஒறுப்பப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாள் இன்றாகும். ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி உணவு ஒறுப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.48 மணிக்கு அவர் உயிர்நீத்தார். இந்நிலையில் அவரது நினைவு தினம் வருடா வருடம் நினைவேந்தல் வாரமாக தமிழர் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. எனினும், அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் ம…
-
- 5 replies
- 504 views
- 1 follower
-
-
அமைதியான ஆளுமை, ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல் - லெப். கேணல் சித்தார்த்தன்.! மட்டக்களப்பபு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது. காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல. படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் கடுமையான விதிமுறைகளுக்கும், விசித்திரமான தண்டனைகளுக்கும் பெயர் பெற்றது. அதேவேளை ஆற்…
-
- 0 replies
- 617 views
-
-
லெப். கேணல் விசு வாழ்வினைக் கரைத்து வீரம் விதைத்தவன்: புலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் விசு / அருமை கனகராசா குலேந்திரன் மல்லாகம், யாழ்ப்பாணம். 1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம்இ இந்தியப்படை வருகை என பல வரலாற்றுச் சம்பவங்களைக் கொண்ட ஆண்டு. இருப்பைப் பாதுகாத்தல், தலைமையைப் பாதுகாத்தல், கட்டமைப்பைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல் அதேநேரம் எதிரியுடன் சண்டையிடல். சுருங்கக் கூறின் ‘கண்ணையும் பாதுகாக்க வேண்டும், இமையையும் பாதுகாக்க வேண்டும்’ அதேநேரம் பார்க்கவும் வேண்டும். ‘கல்மடு’, ‘இராமநாதபுரம்’; கிளிநொச்சி மாவட்டத்தின் சிறு ஊர்கள் அவை. காட்டுப்புறங்களை ஒரு பகுதியாகவும், நீர்த்தேக்கங்கள், மக்கள் குடியி…
-
- 3 replies
- 1.6k views
-
-
நீண்ட கடற்சண்டையில் அனுபவமுள்ள உத்வேகமான போராளி லெப்.கேணல் சீராளன்... லெப்.கேணல் சீராளன் தேவதாஸ் சூரியவதணன் - 12ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:-13.11.1980 வீரச்சாவு: - 24.09.2006 நிகழ்வு: -திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவு 1992ம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட சீராளன் அடிப்படைப் பயிற்சிகள் நிறைவடைந்ததும் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கடல்சார் பயிற்சிகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப்பள்ளிக்கு செல்கிறான்.அங்கு சென்றவன் கடல் சம்பந்தமான பயிற்சிகள் மற்றும் வகுப்பக்களில் சிறந்து விளங்கியதுடன் விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினான். இவனது செயற்பாடு…
-
- 0 replies
- 298 views
-
-
லெப். கேணல் பிறையாளன் அவன் ஒரு புதுமையான மனிதன் ‘லெப். கேணல் நவம் அறிவுக்கூட நிர்வாகப் பொறுப்பாளர்’ லெப். கேணல் பிறையாளன் / சுட்டா 24.09.2005 அன்றைய நாளின் காலைப்பொழுது. லெப்.கேணல் நவம் அறிவுக் கூடத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. மனதில் தயக்கம் யாருக்கு என்ன நடந்தது? போராளிகளின் முகங்கள் இருண்டு கிடந்தன. சுட்டா அப்பா வீரச்சாவாம். அந்த வார்த்தைகள் உள்நுழையும் முன்னரே அடுத்து எதுவும் செய்யத் தோன்றவில்லை. அப்பாவைப் பிரிந்த பிள்ளைகளைப்போல எல்லோரும் தவித்துப்போனோம். ஏனென்றால் எங்களுக் கெல்லாம் அப்பாவாகவே அவன் இருந்தான். அந்த நினைவுகளைத்தான் இந்தக் குறிப்பு சொல்ல முனைகின்றது. சுட்டாவின் தொடக்ககால வாழ்க்கையே துயர…
-
- 2 replies
- 795 views
-
-
லெப். கேணல் சந்திரன் வன்னியின் முழுநிலவு” வன்னிப் பிராந்திய அரசியல்த்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் சந்திரன். சந்தின், உன்னை நாங்கள் மறந்து விட்டோமா? இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த் மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க முடியாது. சந்திரன், உன்னை – உனது உணர்வுகளை மறக்கமுடியாமல் நாங்கள் மட்டுமா தவிக்கிறோம்? இல்லை. புதரிகுடாவில் காற்சட்டை இல்லாமல் உன்னைக் கண்டதாகவும் சிறுசுகளும், பொன் நகரிலும் முள்ளியவளையிலும் உரலுக்குள் பாக்கிடித்தபடியே விழிகளால் உன்னைத் தேடும் கிழவிகளும், களைத்து விழுந்துவரும் உன்னைத் தடவி உற்சாகமாக வழியனுப்பும் நிழல்மரங்களும் உன்னைக் காணாமல், உன்னை விழ…
-
- 2 replies
- 1.3k views
-
-
லெப்டினன்ட் ராஜா தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்டினன்ட் ராஜா (பரமதேவா) மட்டு நகர் மண்ணின் முதல் மாவீரன்! 1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தாக்குதல் தளபதியாக ராஜா என்னும் பெயருடன் பரமதேவா தாய் மண்ணில் கால் பதித்தார். 1983 ம் ஆண்டு யூலை இலங்கைத் தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து தமிழ் இளையோர்களின் எழுச்சி, புரட்சிவாத உணர்வாக மாறியதன் விளைவில் பரமதேவா என்ற விடுதலை வீரனின் பயணம் ஒரு தளபதியாக, சிங்களப் படைகளை எதிர்த்துத்தாக்கும் களவீரனாக எம்மைக் காண வைத்தது. சிங்களப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் நோக்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
19.09.1994 அன்று “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடித்து வெற்றிக்கு வித்திட்ட மறவர்கள் நினைவில் கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன், கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் வீரவணக்க நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி, கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 27 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகு…
-
- 0 replies
- 810 views
-
-
லெப். கேணல் ஜஸ்ரின் எல்லையில் நின்று எதிரியை விரட்டியவன்: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின். போர்முனைக்குச் சென்றவர்கள் வென்றதுண்டு வந்ததில்லை என்பார்கள். இதை ஜஸ்ரினும் படித்திருந்ததினாலோ என்னவோ இறுதியாக மணலாற்றுச் சண்டைக்குச் செல்வதற்கு முன்னர் தனது தாயை அவன் சந்தித்தபோது “அம்மா, நான் சண்டைக்குப் போறேன். ஆனால் நான் உயிரோடை திரும்பி வர மாட்டன்” என்று கூறிவிட்டுச் சென்றான். கண் தெரியாத அந்தத் தாயிடம் அதனைத் தெரிவித்துவிடவேண்டும் என்று அவனது உள்ளுணர்வு அவனைத் தூண்டியுள்ளது. தாக்கு மகனாகச் செய்ய வேண்டிய கடமையைவிட மண்ணின் மகனாக அவன் ஆற்றவேண்டிய கடமை அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது. 1984ம் ஆண்டு காலத்திலிர…
-
- 2 replies
- 1.6k views
-
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் முதலாம் நாள்…! AdminSeptember 15, 2021 செப்.15 – 1987 🔴தியாக பயணத்தின் முதலாவது நாள்! காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடை பெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வாக்கி டோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார். அவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக…
-
- 1 reply
- 1.1k views
-
-
அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்ற 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு! AdminSeptember 12, 2021 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு, வீரவேங்கை இதயன், வீரவேங்கை பிரியவதனா, வீரவேங்கை புலியரசன், வீரவேங்கை புதியவன், வீரவேங்கை தீப்பொறி, வீரவேங்கை அன்பரசன்/லோறன்ஸ், வீரவேங்கை கவியரசி/ அமலா, வீரவேங்கை முகிலன், வீரவேங்கை நிறையிசை, வீரவேங்கை கரிகாலன், வீரவேங்கை சுதாகரி, வீரவேங்கை இசைவாணன், வீரவேங்கை பல்லவன் உட்பட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு யேர்மனி…
-
- 2 replies
- 1.6k views
-
-
11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்ற ஆழக்கடலோடிகள் உலக வல்லரசுகள் இலங்கைக்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில். 10.09.2007அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல்(1500NM )மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் இரு வணிகக் கப்பல்களும் அவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்காக வந்த எண்ணெய்க் கப்பலும் தமது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கடற்படையின் கப்பல் வருவதை (எந்த நாட்டுக் கடற்படையென்று அவருக்குத் தெரியாது )அவதானித்த வணிகக் கப்பலொன்றின் தலைவரான எழில்வேந்தன் கப்பல்களை பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்லப் பணித்ததுடன் …
-
- 1 reply
- 579 views
-
-
வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல் வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல் – (சிறிலங்கா இராணுவத்தின் வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான கரும்புலிகள் தாக்குதல்) வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர். வவுனியாவில் நகரின் தென்பகுதியில் வன்னிப் பிராந்திய இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தளம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருந்த ஜோசெவ் படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய மூன்று முனைத் தாக்குதல் படைத் தரப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. …
-
- 2 replies
- 1.9k views
-
-
லெப்டினன்ட் அபிநயா துள்ளித் திரிந்த சின்னப்புலி லெப்டினன்ட் அபிநயா. அபிநயாவின் நெட்டையான, சற்றுக் குண்டான தோற்றம் அவ்வணியிலேயே அவளைத் தனியாக இனங்காட்டும. முகம் நிறையச் சிரிப்புடன் எந்நேரமும் துள்ளித்திரியும் இவள் பயிற்சியிலும் இதே ஆர்வத்துடன் செயற்படுவாள். அந்த அணியிலேயே சிறியவள் என்பதால் எல்லோருக்கும் விருப்பமுள்ளவளாக இருந்ததுடன், தனது குழந்தைத்தமான பேச்சினால் அனைவரையும் கவர்ந்து விடுவாள் 1998 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அபிநயா சிறுவயதிலேயே சிங்கள மொழியில் கதைக்கத் தெரிந்திருந்தாள். சிலவேளைகளில் தனக்குத் தெரிந்த சிங்களப் பாடல்களைப் பாடி எல்லோரையும் சிரிக்க வைப்பாள். இவளுக்குக் கோபம் வந்தால் சிங்களத்தில்தான் ஏசுவா…
-
- 3 replies
- 767 views
-
-
விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம் விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம் இந்தியர்களும், இந்தியக்கூலிகளும் அம்மாவின் வீட்டிற்குள் அடிக்கடி பாய்வார்கள் நெடுமாறனையும், அவன் சனோதரர்களையும் தேடி…… நெடுமாறன் அம்மாவின் ஏழாவது பிள்ளை; அவன் தான் கடைசி. “நெடுமாறன் இங்க வாறதில்லையா… நேற்று வந்து எங்கட ஒரு ஆளையும் போட்டிட்டான்……” “அம்மாவில் அன்பிருந்தா மோன் அடிக்கடி வீட்டை வருவான் தானே……” அம்மாவையும், அக்காவையும் அவர்கள் அடிக்கடி வந்து உறுக்கிப் பார்ப்பார்கள். அப்போதெல்லாம் அக்கா அவர்களுக்குச் சூடாகவே பதில் சொல்லி அனுப்புவாள். இது அம்மா கொடுத்து வளர்த்த உறுதி – துணிவு. ஆனால், அம்மா அமைதியானவள் – எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு பேசாமலி…
-
- 2 replies
- 763 views
-
-
எம் நினைவுகளின் என்றும் நின்றகலாத நேசத்துக்குரிய மருத்துவப்போராளி லெப்டினன்ட் கேணல் கமலினி, கேணல் லக்ஸ்மன் அண்ணனின் மனைவி. முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருந்த வைத்தியசாலையில் கடமையின் போது வீரமரணத்தை தழுவிக்கொண்டார். ->Credit: Facebook
-
- 0 replies
- 356 views
-
-
கட்டுநாயக்கா விமானப்படை தளம் மீதான தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலை புலிகளின் பயணத்தில், வெற்றி மகுடம் சூட்டிய நாள்.ஆம். கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்த்த நாள்! 1983 ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத,இன்னல்கள், கொடிய துயரங்கள் நிறைந்த மாதம். கொடுங்கோலன் சிங்களவனால்,ஒரு மிகப்பெரிய யுத்தத்தை, தமிழர்களின் வாழ்வில் திணித்த நாள். ஆயிரக்கணக்கான தமிழர்களை, சிங்களன் கொன்றொழித்த நாள். லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள்,வீடுகளற்ற அகதிகளாக நடுத்தெருவில் நின்ற நாள். பல்லாயிரகணக்கான தமிழர்களின் வீடுகளையும், ,உடமைகளையும்,அவர்களின் வியாபார ஸ்தலங்களையும் அடித்து நொறுக்கிய நாள். தமிழர்களுக்கு பெருமளவில் பொருட்சேத…
-
- 2 replies
- 974 views
-
-
மரண தண்டனைக்கு எதிரான இறுதி உயிராக இருக்கட்டும் -தோழர் செங்கொடி.! வீரமங்கை தோழர் செங்கொடியின் நினைவு வணக்கநாள் இன்றாகும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்ற வேளை அம்மூவரின் உயிர் காக்க (மரண தண்டனைக்கு எதிராக) 28.08.2011 அன்று தமிழகத்தில் காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட “வீரத்தமிழிச்சி” தோழர் செங்கொடி ஆகிய வீரமங்கையின் 10ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும். தூக்குத் தண்டனையை இரத்துசெய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் (28.08.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கிய காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த …
-
- 0 replies
- 364 views
-
-
மேஜர் செல்வராசா மாஸ்டர் மேஜர் செல்வராசா மாஸ்டர் / அன்பு செல்வராசா மாஸ்டர்… எமதியக்கத்திலுள்ள கூடுதலான போராளிகளுக்குப் பரிச்சயமான ஒருவர். காரணம் பல்லாயிரக்கணக்கான போராளிகள் அவராலேயே உருவாக்கப்பட்டனர். அவரிடம் நான் பயிற்சி பெறவில்லையே என்தொரு ஏக்கம் அவரிடம் பயிற்சி பெறாதோருக்கு இருந்ததுண்டு. அவரிடம் பயிற்சி பெறாது விட்டாலும் பரவாயில்லை. சில மாதங்கள் அவருடன் கூட இருந்தாலே போதும் என்று கருதும் போராளிகளும் உண்டு. அவர்களில் நானும் ஒருவன். 1987ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இந்தியப் படைகளுடன் சண்டை ஆரம்பமாகி சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் வன்னியிலுள்ள விசுவமடுக் காட்டுக்குள் இருந்த முகாம் ஒன்றுக்குள் அவருடன் இருந்தேன். 1987ம் ஆண்டுக்கு ம…
-
- 5 replies
- 1.6k views
-
-
கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் வரதன், மதன் கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் மேஜர் வரதன் / நிலவன், கப்டன் மதன். ‘மகனைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது! இப்ப எப்படி இருப்பானோ?’ அம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்துவங்கிய போது “புலிக்கு……” என்று புறப்பட்டுப் போனவன்தான். அதன் பிறகு அவர்கள் ஒருநாள்கூட காணவில்லை. இடையில் ஒரு நாள் சண்டை ஒன்றில் மைன்ஸ் வெடித்து பிள்ளைக்கு கால் போய் விட்டதாம் என்ற துயரச் செய்தி அம்மாவுக்கு எட்டியது. அம்மாவின் கண்களில் அருவி. வேதனையால் துடித்துக்கொண்டிருப்பானோ……? “அம்மா……!” என்று அழுவானோ……? அவள் மகனையே நினைத்துக்கொண்டிருப்பான். கொஞ்ச நாட்களா…
-
-
- 6 replies
- 1.4k views
-