- Open Club
- 57 members
- Rules
ரசித்தவை

72 topics in this forum
-
எங்களைப் பொறுத்தவரை 'இந்தியர்கள்' என்றால் அது தமிழர்கள்தான், 'இந்திய மொழி' என்றால் அது தமிழ் மொழிதான்! - சிங்கப்பூர் அரசு அதிரடி..!! சிங்கப்பூரில் தமிழும் ஒரு ஆட்சி மொழியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இது அங்கு வாழும் வட இந்தியர்களுக்கு வயித்தெரிச்சலையும், நமைச்சலையும் கொடுக்க, சிங்கப்பூர் வாழ் வட இந்தியர்கள் அமைப்பு மூலம் சிங்கப்பூர் அரசிற்கு, இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்திமொழி. இந்திய அலுவல் மொழியும் இந்திதான், இங்கு இந்தி பேசும் மக்களும் நிறையபேர் வாழ்கிறார்கள். எனவே இங்கு ஆட்சி மொழியாக உள்ள தமிழை நீக்கிவிட்டு இந்தியா சார்பில் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும்னு கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு சிங்கப்பூர் அமைச்சகம் கொடுத்த மூக்…
-
- 0 replies
- 1.5k views
-
-
வெகு எளிமையாக, அருமையாக இந்த விளம்பரத்தை உருவாக்கியுள்ளனர்.. அந்த வீடியோ கலைஞருக்கு ஒரு சபாஷ்!
-
- 0 replies
- 575 views
-
-
'நீட்'ட நான் வச்சுக்கிறேன்.. 'சீட்'ட நீ வச்சுக்கோ..!
-
- 0 replies
- 399 views
-
-
முகத்தை சவரம் செய்ய சலூன் அல்லது பிளேடு கிடைக்காமல் குஷ்டம் வந்தது போல 'ட்ரிம்' செய்த தாடியுடன் அல்லது பரட்டை தலையில் 'கோடு போட்டு' திரிப்பவர்களை கண்டால் காத தூரம் விலகி நடப்பதுண்டு. அதில் இக்கால புள்ளீங்களும் அடக்கம்..! இவ்வகை 'புள்ளீங்களுக்கு' செமத்தியாக 'வச்சு செய்த' சிதம்பரம் நகர காவல் துறையினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..! 😛
-
-
- 5 replies
- 782 views
-
-
இந்த தெலுகு நாட்டுப்புற பாடல், இணையத்தில் பிரபலமாகி வருகிறது.. இந்த பாடலை காப்பியடித்து பலர் ரீல்ஸ் வெளியிட்டும் வருகின்றனர். நேரமிருக்கும்போது கேட்டுப் பாருங்கள்..
-
-
- 4 replies
- 664 views
- 1 follower
-
-
“ஒரு ஆலயம்” ஆகும்.. 41F நம்பர் பஸ்ல, ஒரு வயதான அம்மா வள்ளுவர்கோட்டம் ஸ்டாப்ல ஏறி மந்தைவெளிக்கு டிக்கெட் எடுத்தாங்க.. கூட்டம் அதிகமா இருந்ததால நின்னுக்கிட்டே வந்த அந்த அம்மா மீது பாவப்பட்டு கண்டக்டர் அவர் சீட்டுல இடம் கொடுத்து உக்கார சொன்னார். முன்னாடி எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்துட்டு, அவர் சீட் நோக்கி வரும்போது அந்த அம்மா அலறுனாங்க..! “என்னம்மா..?”ன்னு அவர் கேட்டாரு. “எவனோ கழுத்துல இருந்த செயின்ன திருடிட்டான்”னு அந்த அம்மா அழுதாங்க.. அந்த கண்டக்டர் பதட்டபடாம சுத்தி பாத்தாரு.. அந்த அம்மாகிட்ட “உங்க செயின் நிச்சயமாக திரும்ப கிடைக்கும் பதட்டபடாதீங்க.. பயப்படாதீங்க..!”ன்னு ஆறுதல் சொன்னார்.. அடுத்து வந்த எல்லா ஸ்டாப்லயும் பஸ் …
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
சென்னை மாமல்லபுரத்தில், உலகின் 188 நாடுகளிலிருந்து பல்வேறு வீரர்கள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மிக பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டினை கற்பித்து மாநில அளவிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் நம் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்று பதக்கங்களை வெல்லும் நோக்கத்துடன் சதுரங்கம் தொடர்பான பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கான வரவேற்பு காணொளி தற்பொழுது வெளியாகியுள்ளது.
-
-
- 18 replies
- 2.2k views
- 2 followers
-
-
தகவல் தொழிற்நுட்பம் அதிவேகத்தில் முன்னேறியவுடன் பல விடயங்களை உடனுக்குடன் நேரலையாக கையடக்க கருவிகளில் பார்த்து அறியக்கூடியதாக உள்ளது. முன்பெல்லாம் எமக்கு ஈழத்து கலைஞர்கள் யாரென்றே தெரியாது. இலங்கை வானொலியில், அல்லது தமிழ் நாட்டில் வரும் ஊடக துணுக்குகளில் மட்டுமே அறியக்கூடியதாக இருந்த ஈழத்து கலைஞர்களின் முகம், தற்பொழுது பலரும் பார்த்து அறியக்கூடியதாக உள்ளது. அவ்வகையில் முன்பு காட்பெர்டில்(Hot Bird) வந்துகொண்டிருந்த "படலைக்கு படலை" காணொளியை சில வருடங்களுக்கு முன் பார்த்து வந்தேன். அத்தொடரில் கவர்ந்த கலைஞர்களான 'சிறீதரன் மாணிக்கம்' மற்றும் 'பாஸ்கி' ஆகியோரின் இயல்பான ஈழத்து தமிழில் நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். அந்த கலைஞரின் நேர்முக பேட்டியை இன்று ரசித்து பார்த்தே…
-
- 0 replies
- 361 views
-
-
தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் இந்த பேட்டி, வட இந்திய அதிகார வர்க்கத்தை, பிராமணிய குழுவை அசைத்துப்பார்த்து எரிச்சலடைய வைத்துள்ளது. பேட்டி ஆங்கிலத்தில் இருந்தாலும், தமிழ் நாட்டின் சுயநிர்ணய, சுயமரியாதைக்கான தேவையை, விட்டுக்கொடுக்க முடியாது என்பதை நுணுக்கமாக எடுத்துரைத்துள்ளார். பொறுமையாக பார்த்தால், இக்காணொளியை நிச்சயம் ரசிக்கலாம். 👌 நேர்காணலின் முடிவில் 'பல்வேறு கலாச்சாரம், மொழிகள், இனங்கள் கொண்ட இந்தியா ஒரு நாடாக இருப்பது அதிசயம், அது இன்னும் 25 கழித்தும் அது தொடருமா? என்பதை காலம்தான் சொல்லும்' என முத்தாய்ப்பாக முடித்துள்ளது சிறப்பு..!
-
-
- 9 replies
- 992 views
- 2 followers
-
-
'சங்கீத ஞானம்' இல்லாவிட்டாலும் இளையராஜாவின் பாடலை, இந்த வீணை இசைமழையில் கேட்பது காதுகளுக்கு மிக இனிய தேன்மழை..! வீணை இசைக் கலைஞருக்கு ஒரு சபாஷ்..!
-
- 0 replies
- 1k views
-
-
ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சியின் யூடியூபில் பழைய தமிழ்ப் பாடல்களை பார்ப்பது வழக்கம். அப்படி உலாவரும் பொழுது, இந்த இசைக்குழுவின் வாத்திய இசை மிகவும் கவர்ந்தது. நீங்களும் கேட்டுப் பாருங்களேன், நிச்சயம் ரசிப்பீர்கள்..!
-
- 3 replies
- 1.1k views
-
-
கல்லூரியில் படிக்கும்பொழுது விடுதியில் சிலசமயம் இசைக்குழுக்களின் கச்சேரி நடப்பதுண்டு. அம்மாதிரி சமயங்களில் சிலர் தண்ணியை போட்டுக்கொண்டு குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவதுண்டு..! ஆனால் நடனம் தெரியாவிட்டாலும் சிலசமயம் நம்மையும் அறியாமல், பாட்டுக்கு சுருதி ஏற ஏற நம் கால், கைகள் தாளம் போடுவதுண்டு. சிலர் தம்மையும் அறியாமல் வயது வித்தியாசம் பாராமல் ஆண்களும், பெண்களும் எழுந்து ஆடுவதும் உண்டு.. அம்மாதிரியே இந்தப்பாடலும் சிலரை ஆட வைத்துள்ளது..!
-
- 1 reply
- 1.1k views
-
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
இண்டிகோ - அடிங்கோ..! இண்டிகோ விமான ஊழியர்கள், அதில் பயணம் செய்த பயணியை அடித்து வீழ்த்தி கழுத்தை நெரித்த காணொளி இணையத்தில் வைரலாக உலா வரும் இவ்வேளையில், அந்நிறுவனத்தின் வியாபார சின்னத்தை(Logo) மாற்றியமைத்து நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.. 'இண்டிகோ' என்பது 'அடிங்கோ'வாக மாறியுள்ளது..! சின்னத்திலுள்ள விமான படத்தையும் எட்டி உதைக்கும் விதமாக மாற்றியுள்ளனர். சின்னத்தின் கீழே அருமையான வாசகத்தையும் பொறித்துள்ளனர்.. "நம்பி வாங்க.. அடி வாங்கிட்டுப் போங்க..!"
-
- 2 replies
- 568 views
-
-
பொடியர் நல்லாவே பாடி அசத்தியுள்ளார்..
-
- 0 replies
- 353 views
-
-
இளங்காற்று வீசுதே... இப்பாடலை கேட்கும்போதெல்லாம் அரசுப்பணியின் ஆரம்ப காலங்களில், தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, வருசநாடு, உடங்கல், பெரியகுளம் போன்ற மலையடிவாரப்பகுதிகளில், இளங்காளையாய் சக அலுவலர்களுடன் திட்டப்பணிகளுக்காக சுற்றித் திரிந்த பசுமையான நினைவுகளை மீட்டுச் செல்லும்.. இப்பகுதிகளைப் பார்த்து இப்போ பல வருசமாச்சுது.. போடி, கம்பம் பள்ளத்தாக்குகளின் சுழல்காற்றின் வாசத்தில், இவ்விளங்காற்றும் தவழட்டும் இனிமையாய்..!
-
-
- 2 replies
- 1.7k views
- 1 follower
-
-
ரொம்ப நாட்கள் கழிந்து, இன்று தீபாவளிக்காக கேட்ட ஜிக்கியின் இனிமையான பாடல்.. என்னை அக்காலத்திற்கே இழுத்துச் சென்றது..!
-
- 1 reply
- 608 views
- 1 follower
-
-
பல நாட்கள் கழித்து இளையராஜாவின் இசையில் இந்தப் பாடல் மிகவும் பிடித்தது..! இப்பாடலின் பின்னணியில் காட்சிகளின் வனப்பு மிக அருமை.. புல்வெளிக் குன்றுகளில் மின்விளக்குகளை அமைத்து ஒளிரவிட்டு, அருகில் சிறு குளத்தில் அன்னப் பறவைகளை நீந்தவிட்டுள்ள காட்சியமைப்புக் கலை, கண்கவரும் வண்ணம் அமைந்துள்ளது. கீழே இரண்டாவது காணொளியில் கிராபிக்ஸ் தொகுப்பு பாடல் வரிகளுடன் நம்மையும் கூடவே பாடத் தூண்டுகிறது..!
-
-
- 1 reply
- 655 views
- 1 follower
-
-
உழவன் மகன்(1987) திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல்..! இந்த காணொளியில் பாடும் மொத்த குழுவினரும் நன்றாக பாடியிருந்தாலும், பாடகரின் உடல்மொழி செம காமெடி.. பார்த்தால் புரியும்..!
-
- 0 replies
- 899 views
- 1 follower
-
-
சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி சந்தையில் படமாக்கப்பட்ட நாட்டுப்புற பாடல் காணொளியை பார்த்தது முதல் அடுத்து ஏதாவது ஈழத்து மண் வாசனையுடன் கிராமிய பாடல் எதுவும் இணையத்தில் உள்ளதா..? என தேடியபோது கிடைத்தது கீழேயுள்ள பாடல். பால்ய வயதில் கிராமத்து வயல்களில், ஓடைகளில் தோழர்களுடன் சட்டையில்லாமல் விளையாடிய எனது அனுபவம்.. கனாக் காலங்கள்..! இப்பொழுது கிராமத்திற்கு சென்றால் ஏக்கத்துடன் நினைத்துக் கொள்வதுண்டு. அக்காலத்தை இரைமீட்டிய பாடல் இது..!
-
- 0 replies
- 616 views
-
-
என் இதயத்தில் தாக்குதல்.. இந்தோனிசியாவின் பாப் பாடகி 'சிட்டா சிட்டட்டா'வின் பாடலுக்கு நடனமாடும் குழந்தைகள்..! So cute..
-
- 0 replies
- 389 views
-
-
"மேரா சபுநோ கி ராணி கப் ஆயா கீ தூ..?" - "என் கனவு ராணி எப்போது வருவாள்..?" என்னங்க, 'இந்த வயசுல இவருக்கு இளமை திரும்புகிறதா..' என்று நினைக்கிறீர்களா..? பரண் மீதிருக்கும் பழைய பஞ்சாங்கத்தை தேடலாமென ஏறிப் பார்த்தால், பழைய எல்பி ரெகார்ட் ஒன்றுதான் கிடைத்தது..! சுழலவிட்டேன்.. பாடலும் வந்தது.. அதோடு வீணை இசையும் புது வடிவில்..!! ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது..! Start the music...
-
- 1 reply
- 638 views
- 1 follower
-
-
காதல், காமம், தாபம் ஆகியவற்றை ஒருசேரக் குழைத்து, பெருவெள்ளமாக இசையில் கொடுத்த இளையராஜாவின் பாடலை, இரண்டே வயலின்களை வைத்துக் கொண்டு தத்ரூபமாக வாசித்திருப்பது மிக அருமை..! 😍 பாராட்டுக்கள்..!
-
- 1 reply
- 999 views
- 1 follower
-
-
தேவராஜ்-மோகன் இயக்கத்தில் உருவான "உறவாடும் நெஞ்சம்" படத்தில் வந்த மீசை அரும்பும் கல்லூரி பருவத்தில் கேட்ட பாடல் இது.. மனதை வசீகரிக்கும் இசை..திரும்பத் திரும்ப காசெட் ரெக்கார்டரில் கேட்ட பாடல்.. இசைஞானியின் ஆரம்பகால பாடல்களில் பிரசித்தி பெற்றவைகளில் இதுவும் ஒன்று..! இந்தப் பாடலின் காணொளியை யுடுயூபில் தேடியபோது இந்தக் காணொளிதான் கிடைத்தது..!! பாடலுக்காகவே பார்க்கலாம்..
-
- 2 replies
- 813 views
- 1 follower
-
-
வழக்கமான திருமண காணொளிகளை பார்த்திருப்போம்.. "அடச் சே..! இவ்வளவுதானா..?" என அலுத்திருப்போம்..! சிலர் வித்தியாசமான முறையில் முயற்சித்திருப்பர்... அவ்வகையில் இந்தக் காணொளி தெலுங்கில் இருந்தாலும் சற்று ரசிக்கக் கூடியதுதான்..!! (கீழேயுள்ளது திருமணக் காணொளிதானா? என்ற ஐயப்பாடும் உண்டு..)
-
-
- 4 replies
- 704 views
- 1 follower
-