- Open Club
- 57 members
- Rules
ரசித்தவை

72 topics in this forum
-
இசையின் ஒரு வடிவம் செல்வி செயலலிதா அம்மையார் மறைந்தபொழுது, செயா தொலைக்காட்சி, அவரின் காணொளிகளை நேரலையாக ஒளிபரப்பியபோது, அதன் பின்னணியில் ஒரு வயலின் இசை மட்டும் மெல்லிதாக ஒலித்துக்கொண்டே இருந்தது மனதை மிகவும் பாதித்தது. இசையின் மூலம் மனதை வருடி, சோகத்தையும் உணர்த்தலாம் என்பதை இவ்விசையை உணர்ந்தால் புரியும்.. யுடுயூபில் தேடியதில், அந்த இசையொலி கிடைத்தது.. உணர்ந்து ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது..! முழு வடிவம்..
-
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
தேவராஜ்-மோகன் இயக்கத்தில் உருவான "உறவாடும் நெஞ்சம்" படத்தில் வந்த மீசை அரும்பும் கல்லூரி பருவத்தில் கேட்ட பாடல் இது.. மனதை வசீகரிக்கும் இசை..திரும்பத் திரும்ப காசெட் ரெக்கார்டரில் கேட்ட பாடல்.. இசைஞானியின் ஆரம்பகால பாடல்களில் பிரசித்தி பெற்றவைகளில் இதுவும் ஒன்று..! இந்தப் பாடலின் காணொளியை யுடுயூபில் தேடியபோது இந்தக் காணொளிதான் கிடைத்தது..!! பாடலுக்காகவே பார்க்கலாம்..
-
- 2 replies
- 813 views
- 1 follower
-
-
இளங்காற்று வீசுதே... இப்பாடலை கேட்கும்போதெல்லாம் அரசுப்பணியின் ஆரம்ப காலங்களில், தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, வருசநாடு, உடங்கல், பெரியகுளம் போன்ற மலையடிவாரப்பகுதிகளில், இளங்காளையாய் சக அலுவலர்களுடன் திட்டப்பணிகளுக்காக சுற்றித் திரிந்த பசுமையான நினைவுகளை மீட்டுச் செல்லும்.. இப்பகுதிகளைப் பார்த்து இப்போ பல வருசமாச்சுது.. போடி, கம்பம் பள்ளத்தாக்குகளின் சுழல்காற்றின் வாசத்தில், இவ்விளங்காற்றும் தவழட்டும் இனிமையாய்..!
-
-
- 2 replies
- 1.7k views
- 1 follower
-
-
நிஜமும், நிழலும்..! இரண்டு நாளைக்கு முன்பு யாழ்கள உறவு பாஞ் அவர்கள், ஈழத்து கலைஞர்கள்(மன்மதன் பாஸ்கி மற்றும் சிறி சித்தப்பா) நடித்த ஒரு காணொளியை வாட்ஸ் அப்பில் அனுப்பிருந்தார்.. முதலில் அசிரத்தையாக பார்க்க ஆரம்பித்த நான், இக்காணொளியை கண்டு முடித்தவுடன் கவரப்பட்டு யூடுயுபில் இந்த இரட்டையர்கள் நடித்த பல காணொளிகளை வரிசையாக ரசித்து வருகிறேன்.. புலத்தில் (லா சப்பல்?)எடுக்கப்பட்டுள்ள இக்காணொளிகள் மிகவும் நன்றாக உள்ளது.. அவற்றில் சில.. ( ஈழத்து தமிழர்களிடம் நல்ல,அற்புதமான திறமைகள் உள்ளன, ஆனால் வெளியே தெரிய மாட்டேன்கிறது..! )
-
- 1 reply
- 687 views
-
-
கல்லூரியில் படிக்கும்பொழுது விடுதியில் சிலசமயம் இசைக்குழுக்களின் கச்சேரி நடப்பதுண்டு. அம்மாதிரி சமயங்களில் சிலர் தண்ணியை போட்டுக்கொண்டு குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவதுண்டு..! ஆனால் நடனம் தெரியாவிட்டாலும் சிலசமயம் நம்மையும் அறியாமல், பாட்டுக்கு சுருதி ஏற ஏற நம் கால், கைகள் தாளம் போடுவதுண்டு. சிலர் தம்மையும் அறியாமல் வயது வித்தியாசம் பாராமல் ஆண்களும், பெண்களும் எழுந்து ஆடுவதும் உண்டு.. அம்மாதிரியே இந்தப்பாடலும் சிலரை ஆட வைத்துள்ளது..!
-
- 1 reply
- 1.1k views
-
-
புறநகர் ரயிலில் களைகட்டிய கச்சேரி: வாய்விட்டு பாடினால் நோய்விட்டு போகும்? பல்லாவரம் ரயில் நிலையம்... அலுவலகம் செல்லும் காலை பொழுது... வழக்கம் போல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. அலுவலகம் செல்லும் அவசரத்தில் நானும் ஓடோடி வந்து பல்லாவரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரயிலில் ஏறினேன். சுமாரான கூட்டம் தான். ரயில் புறப்பட்டு திரிசூலம் ரயில் நிலையத்தை நெருங்கியது. அவசர அவசரமாக வந்த பதற்றம் - வேகமாக அலுவலகம் செல்ல வேண்டும் என்ற ஆதங்கம், ஓட்டமும் நடையுமாக வந்ததால் டென்ஷன் குறைய வில்லை! திடீரென பாட்டுச் சத்தம் கேட்டது. புறநகர் மின்சார ரயில்களில் சிலர் பாட்டு பாடிக் கொண்டே பணம் வசூலிப்பது வாடிக்கை. அதுபோன்று சிலர் …
-
-
- 1 reply
- 396 views
-
-
மறுநாள் (இன்று) வார விடுமுறை.. நள்ளிரவு தூங்கும் வரை வழக்கமாக பழைய பாடல்களை கேட்கும் எனக்கு, இந்தப்பாடல் வரிகள் கவர்ந்தன.. யூடுயூபில் தேடி படத்தை பார்த்தேன். பாடல்கள் அத்தனையும் அருமை.. படமும் பரவாயில்லை.. அசிரத்தையான ஆணின் கவனத்தை ஈர்க்க, "எனக்கென்ன குறை..? ஏன் இந்த பாராமுகம்..?" என பெண் பாடுவதாக கண்ணதாசன் வரிகளில், எம்.எஸ்.வி இசையில் மனம் கவர்ந்த பாடல்..! ஊகிக்க முடிகிறதா..?
-
- 1 reply
- 913 views
- 1 follower
-
-
காதல், காமம், தாபம் ஆகியவற்றை ஒருசேரக் குழைத்து, பெருவெள்ளமாக இசையில் கொடுத்த இளையராஜாவின் பாடலை, இரண்டே வயலின்களை வைத்துக் கொண்டு தத்ரூபமாக வாசித்திருப்பது மிக அருமை..! 😍 பாராட்டுக்கள்..!
-
- 1 reply
- 997 views
- 1 follower
-
-
கேலக்ஸி 9 'சாம்சுங் கேலக்ஸி S9' கைப்பேசியை சந்தையில் அறிமுகப்படுத்தும் உத்தியாக, உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயிலுள்ள 'புர்ஜ் கலீஃபா'வில் பதிக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகளால் ஒளிரப்பட்டது..! அதன் காணொளியை அவசியம் காணுங்கள்..
-
-
- 1 reply
- 771 views
-
-
"மேரா சபுநோ கி ராணி கப் ஆயா கீ தூ..?" - "என் கனவு ராணி எப்போது வருவாள்..?" என்னங்க, 'இந்த வயசுல இவருக்கு இளமை திரும்புகிறதா..' என்று நினைக்கிறீர்களா..? பரண் மீதிருக்கும் பழைய பஞ்சாங்கத்தை தேடலாமென ஏறிப் பார்த்தால், பழைய எல்பி ரெகார்ட் ஒன்றுதான் கிடைத்தது..! சுழலவிட்டேன்.. பாடலும் வந்தது.. அதோடு வீணை இசையும் புது வடிவில்..!! ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது..! Start the music...
-
- 1 reply
- 637 views
- 1 follower
-
-
பல நாட்கள் கழித்து இளையராஜாவின் இசையில் இந்தப் பாடல் மிகவும் பிடித்தது..! இப்பாடலின் பின்னணியில் காட்சிகளின் வனப்பு மிக அருமை.. புல்வெளிக் குன்றுகளில் மின்விளக்குகளை அமைத்து ஒளிரவிட்டு, அருகில் சிறு குளத்தில் அன்னப் பறவைகளை நீந்தவிட்டுள்ள காட்சியமைப்புக் கலை, கண்கவரும் வண்ணம் அமைந்துள்ளது. கீழே இரண்டாவது காணொளியில் கிராபிக்ஸ் தொகுப்பு பாடல் வரிகளுடன் நம்மையும் கூடவே பாடத் தூண்டுகிறது..!
-
-
- 1 reply
- 655 views
- 1 follower
-
-
தாயின் நம்பிக்கை.. குழந்தையின் மீதான தாயின் நம்பிக்கையை பற்றிய அருமையான சொற்பொழிவு..!
-
- 1 reply
- 432 views
-
-
சில நாட்களுக்கு முன், யாழ்கள உறவு திரு.பாஞ் அவர்கள் இந்தக் காணொளியை வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார்.. காணொளி பாடலை திரும்ப திரும்ப கேட்டு ரசிக்கும்படி அமைந்திருப்பது சிறப்பு.. பொறுமையாக கேட்டால் மெய்மறந்து ரசிக்கலாம்..!
-
- 1 reply
- 715 views
- 1 follower
-
-
ரொம்ப நாட்கள் கழிந்து, இன்று தீபாவளிக்காக கேட்ட ஜிக்கியின் இனிமையான பாடல்.. என்னை அக்காலத்திற்கே இழுத்துச் சென்றது..!
-
- 1 reply
- 607 views
- 1 follower
-
-
பிரதமர் மோடி இந்த நாட்டுக்கு தேவையா? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது விடயமாக இன்றைய நியூஸ்7 தொலைக்காட்சி விவாதத்தில் 'வழக்கறிஞர் பிரசன்னா'வின் சில கருத்துக்கள் கவர்ந்ததன.. அவற்றில் இது ஒன்று..
-
-
- 1 reply
- 999 views
-
-
டேய் அப்பா.. ஏன்டா இந்தமாதிரி பண்ற...?
-
- 0 replies
- 333 views
-
-
“ஒரு ஆலயம்” ஆகும்.. 41F நம்பர் பஸ்ல, ஒரு வயதான அம்மா வள்ளுவர்கோட்டம் ஸ்டாப்ல ஏறி மந்தைவெளிக்கு டிக்கெட் எடுத்தாங்க.. கூட்டம் அதிகமா இருந்ததால நின்னுக்கிட்டே வந்த அந்த அம்மா மீது பாவப்பட்டு கண்டக்டர் அவர் சீட்டுல இடம் கொடுத்து உக்கார சொன்னார். முன்னாடி எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்துட்டு, அவர் சீட் நோக்கி வரும்போது அந்த அம்மா அலறுனாங்க..! “என்னம்மா..?”ன்னு அவர் கேட்டாரு. “எவனோ கழுத்துல இருந்த செயின்ன திருடிட்டான்”னு அந்த அம்மா அழுதாங்க.. அந்த கண்டக்டர் பதட்டபடாம சுத்தி பாத்தாரு.. அந்த அம்மாகிட்ட “உங்க செயின் நிச்சயமாக திரும்ப கிடைக்கும் பதட்டபடாதீங்க.. பயப்படாதீங்க..!”ன்னு ஆறுதல் சொன்னார்.. அடுத்து வந்த எல்லா ஸ்டாப்லயும் பஸ் …
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
-
மீதேன் நோ.. சுகில் மாஃபி.. தமிழ்நாட்டில் விளைநிலங்களில், மீத்தேன் எடுப்பதால் ஏற்படும் உணவுப்பற்றாக்குறையை அரபியிடம் விளக்கியபோது அரபியின் ரியாக்க்ஷன்..
-
- 0 replies
- 425 views
-
-
கிராமத்தின் பள்ளிப் பருவத்தில், இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பபட்டு, நான் விரும்பிக் கேட்ட பாடல் இது..! ஏறக்குறைய 45 வருடங்கள் கழித்து, அதே பாடலை யாழ்ப்பாணத்தில்(2016) எஸ்.பி.பி பாடியபோது..! 😎
-
- 0 replies
- 829 views
- 1 follower
-
-
இன்றைய கலீஜ் டைம்ஸில் வெளியான துபாயின் 'நகர வளர்ச்சி'க்கான இப்படங்கள் தெரிவு செய்யப்பட்டு உலகளவில் பரிசை வென்றுள்ளது..! துபாய் 'மெரீனா' 'புர்ஜ் அல் அராப்' துபாய் 'மிராக்கிள் கார்டன்' மாலையில் பாலையின் சாலை 'ஜுமைரா லேக்' பகுதி ஷேக் சையத் சாலை, துபாய் கால்வாய் அருகே! கலீஜ் டைம்ஸ்
-
- 0 replies
- 414 views
-
-
'சங்கீத ஞானம்' இல்லாவிட்டாலும் இளையராஜாவின் பாடலை, இந்த வீணை இசைமழையில் கேட்பது காதுகளுக்கு மிக இனிய தேன்மழை..! வீணை இசைக் கலைஞருக்கு ஒரு சபாஷ்..!
-
- 0 replies
- 1k views
-
-
பொடியர் நல்லாவே பாடி அசத்தியுள்ளார்..
-
- 0 replies
- 352 views
-
-
நாளை நமதே..! இன்று தற்செயலாக இந்தக் காணொளியை காண நேர்ந்தது.. பெரும்பாலும் திரைப்பாடல்கள் கச்சேரி அசல் பாடல்கள் போல அமைவதில்லை..! பாடகரின் அலட்டலும் இருக்கும், அசலை விட்டு வேறெங்கோ ராகமும் சென்று நம் பொறுமை சோதித்துவிடும். சிறு கச்சேரிகளில் திறமையாக பாடக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.. அவற்றில் நான் உணர்ந்த ஒன்று..கீழேயுள்ள காணொளி. இக்காணொளியில் முதலில் பாடும் பாடகரின் (கறுப்பு சூட் டில் இருப்பவர்) குரல்வளமும், பாடும் தொனியும் மிக அருமை. கொசுறு: இந்த காணொளியில், வளையமிட்ட இசைக்கலைஞரின் முகச்சாயல், அடிக்கடி வடிவேலு நகைச்சுவைக் காட்சியில் வரும் நடிகர் போல் உள்ளார். ஊகிக்க முடிகிறதா..? 🧐
-
- 0 replies
- 993 views
-
-
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்த லோகமணி என்ற ஏழை பெண்ணின் தாய்மை உணர்வை பாராட்டி மாநிலத்தின் தலைமை காவல் இயக்குநரான (DGP) திரு.கவுதம் சவாங் அவர்கள் அழைத்து நேரடி காணொளி மூலம் "போலீஸ் சல்யூட்" அளித்து கெளவரப்படுத்தியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியுற செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீசாருக்கு ஏழை பெண் ஒருவர் குளிர்பானங்கள் வாங்கிக்கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக மக்கள் அனவைரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதாரத்துறையினர், போலீசார், தூய்மை பணியாளர்கள் போன்றார் நேரடியாக களத்தில் இறங்கி கொரோனாவுக்கு எதிராக…
-
- 0 replies
- 842 views
-