Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரசித்தவை

 

Kitty.jpg

  1. மறுநாள் (இன்று) வார விடுமுறை.. நள்ளிரவு தூங்கும் வரை வழக்கமாக பழைய பாடல்களை கேட்கும் எனக்கு, இந்தப்பாடல் வரிகள் கவர்ந்தன.. யூடுயூபில் தேடி படத்தை பார்த்தேன். பாடல்கள் அத்தனையும் அருமை.. படமும் பரவாயில்லை.. அசிரத்தையான ஆணின் கவனத்தை ஈர்க்க, "எனக்கென்ன குறை..? ஏன் இந்த பாராமுகம்..?" என பெண் பாடுவதாக கண்ணதாசன் வரிகளில், எம்.எஸ்.வி இசையில் மனம் கவர்ந்த பாடல்..! ஊகிக்க முடிகிறதா..?

  2. டிஸ்கி: இன்று 2020 புது வருடத்தில் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாள்..! பொழுது போகாமல் தொலைகாட்சியின் "டென்ட் கொட்டா" அப்.பில் உயர்தர HD ப்ரிண்டில் வெளிவந்துள்ள படங்களை அசிரத்தையாக முதல் சில காட்சிகளை மட்டும் ஓடவிட்டு ப்ரிவியூ பார்க்க ஆரம்பித்தேன். அதில் காளிதாஸ் என்ற இப்படத்தினை பார்க்க ஆரம்பிக்கையில், முதல் சில நிமிடங்களிலேயே ஒரு பெண்ணின் துர்மரணம்.. அதை விசாரிக்க வரும் காவல் அதிகாரி, சில கோணங்களில் விசாரணையை ஆரம்பிக்க, எனக்கும் 'இந்த மரணம் எப்படி நடந்திருக்கும்..?' என ஊகிக்க ஆரம்பித்து படத்தோடு ஒன்றி விட்டேன்..! சில 'லாகிக்' சறுக்கல்களை தவிர, கடைசி வரை விறுவிறுப்பாகவே படம் இருந்தது. இயக்குநருக்கு இதுதான் முதல் படம் என்பதை நம்ப மு…

  3. கேலக்ஸி 9 'சாம்சுங் கேலக்ஸி S9' கைப்பேசியை சந்தையில் அறிமுகப்படுத்தும் உத்தியாக, உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயிலுள்ள 'புர்ஜ் கலீஃபா'வில் பதிக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகளால் ஒளிரப்பட்டது..! அதன் காணொளியை அவசியம் காணுங்கள்..

  4. ஓய்வு நேரத்தில் IBC-யில் வரும் இந்த "Tea கடை" நிகழ்ச்சியை அடிக்கடி பார்ப்பதுண்டு..! இவ்வாரநிகழச்சியில் "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.." என்பதற்கு, பொன்னம்பலம் ஈஸ்வரன் (அம்மான்)சொல்லும் விளக்கம் ரசிக்கும்படி இருந்தது. டிஸ்கி: இம்மாதிரி சீரியல்களை நாங்கள் பார்க்க வெளிக்கிட்டமென்டால், நாங்களும் ஈழத்தமிழில் கதைச்சுடுவோமென்ட அச்சம் வருதுடாப்பா, கடவுளே..! 😝

  5. “சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?" வார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னை திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார். மறுபடியும் ஒரு முறை கேட்டார், "தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா ?” “ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் ரோடு, எதித்தாப்ல போய் நில்லுங்க, தாம்பரம் பஸ் வரும் ! " சரி என தலையாட்டிவிட்டு, எதிர்புற ரோட்டில் நுழைந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் கிண்டியை நோக்கி விறு விறு வென நடக்க துவங்கினார், "அய்யா ! அடுத்த பஸ்ஸ்டாப் ர…

  6. சில நாட்களுக்கு முன், யாழ்கள உறவு திரு.பாஞ் அவர்கள் இந்தக் காணொளியை வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார்.. காணொளி பாடலை திரும்ப திரும்ப கேட்டு ரசிக்கும்படி அமைந்திருப்பது சிறப்பு.. பொறுமையாக கேட்டால் மெய்மறந்து ரசிக்கலாம்..!

  7. இசையின் ஒரு வடிவம் செல்வி செயலலிதா அம்மையார் மறைந்தபொழுது, செயா தொலைக்காட்சி, அவரின் காணொளிகளை நேரலையாக ஒளிபரப்பியபோது, அதன் பின்னணியில் ஒரு வயலின் இசை மட்டும் மெல்லிதாக ஒலித்துக்கொண்டே இருந்தது மனதை மிகவும் பாதித்தது. இசையின் மூலம் மனதை வருடி, சோகத்தையும் உணர்த்தலாம் என்பதை இவ்விசையை உணர்ந்தால் புரியும்.. யுடுயூபில் தேடியதில், அந்த இசையொலி கிடைத்தது.. உணர்ந்து ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது..! முழு வடிவம்..

  8. டேய் அப்பா.. ஏன்டா இந்தமாதிரி பண்ற...?

  9. வாட்ஸ் அப்பில் வந்த அருமையான செய்தி: ஐந்து மாநிலங்களின் கழிவுகளை சுமந்தாலும் கங்கைதான் புனித நதி, காவிரி அல்ல! ஐவரைக் கலந்தாலும் பாஞ்சாலிதான் பத்தினி, கண்ணகி அல்ல! பல மொழிகள் கலந்திருந்தாலும் இந்தியும், சமற்கிருதமும்தான் உயர்ந்தவை, தமிழ் அல்ல! உலகின் முதல் மாந்தனாக இல்லாத போதும் ஆரியனே உயர்ந்தவன், தமிழன் அல்ல! மனித வாழ்வியலுக்கான உலகப் பொதுமறையாக போற்றப்பட்டாலும் மகாபாரத, இராமாயண புராணப் புரட்டுகளே உயர்ந்தவை, திருக்குறளோ, சங்க இலக்கியங்களோ அல்ல! எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஆரிய இந்துத்துவா கழிசடைகள் ஆளும் இந்தியாவின் பார்வை இதுதான்! இது மாறாது, தமிழினம் இதை உணர்ந்துள்ளது! ஆகையால்தான் தமிழ்த்தேச விடுதலையே தமிழ்த்தேசியம் என்று இறுதி செய்துள்ளது ந…

  10. இந்த காணொளியில் வரும் தம்பி யாரென தெரியாது..! ஆனால், இவர் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டின் சென்னையில் இறங்கி, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் தாய்நாட்டின் பூமியை தொட்டு வணங்கியபோது நேசத்தில் கண்கள் கலங்கியது உண்மை. 💔 வாழ்க வளமுடன்..! 🙌 வெகுளி மனதோடு செங்கல்பட்டு அருகேயிருக்கும் கிராமத்து கடைகளிலும், வீதியோரம் செல்பவர்களோடும் ஈழத்து தமிழில் பேச முயலும்போது அவர் அனுபவித்த சுகமான சிரமங்கள் அலாதியானது. (சில வருடங்களுக்கு முன் துபை வந்த பாஞ் மற்றும் அவரின் துணைவியாரிடமும் நான் தமிழக தமிழில் பேச, அவர்கள் ஈழத்து தமிழில் பேச, நாங்கள் தடுமாறிய நொடிகளின் இனிமையான தருணங்களை நினைத்து இன்னமும் ரசிக்கிறேன்..!) காணொளி முடிவில், ஒரு அம்மா "என்னையும…

  11. தாயின் நம்பிக்கை.. குழந்தையின் மீதான தாயின் நம்பிக்கையை பற்றிய அருமையான சொற்பொழிவு..!

  12. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்த லோகமணி என்ற ஏழை பெண்ணின் தாய்மை உணர்வை பாராட்டி மாநிலத்தின் தலைமை காவல் இயக்குநரான (DGP) திரு.கவுதம் சவாங் அவர்கள் அழைத்து நேரடி காணொளி மூலம் "போலீஸ் சல்யூட்" அளித்து கெளவரப்படுத்தியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியுற செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீசாருக்கு ஏழை பெண் ஒருவர் குளிர்பானங்கள் வாங்கிக்கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக மக்கள் அனவைரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதாரத்துறையினர், போலீசார், தூய்மை பணியாளர்கள் போன்றார் நேரடியாக களத்தில் இறங்கி கொரோனாவுக்கு எதிராக…

  13. பின்னிரவில் ஏகாந்தமாய் அமரும் சந்தர்ப்பங்களில், மெல்லிய விளக்கொளியில் பழைய பாடல்களை கேட்பதுண்டு.. ! வார இறுதியான நேற்றிரவு, அப்படி கேட்ட பாடல்களில் கீழ்க்கண்ட பாடல்களை ரசிக்க முடிந்தது..! மிக்ககுறைந்த இசைக்கருவிகளோடு சிரத்தையாய் பழைய பாடல்களை இசைத்து, நம் மனக்கண் முன்னே ரசித்த அக்கால படத்தின் பிம்பங்களை நிழலாடவிட்டுள்ளனர் இந்த குழுவினர்.. ** பழைய பாடல்களை ரசிப்பவர்களுக்கு மட்டுமே இப்பதிவு, பொறுமையாக ரசிக்கவும்.. "தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா..?" "எனை ஆளும் மேரி மாதா... துணை நீயே மேரி மாதா...!"

  14. வேலை களைப்பிற்கிடையே நேற்று பார்த்து ரசித்த பாடல்.. பொடுசுகளின் குரலும், உடல் பாவங்களும் அசத்தல்..!! 💯 இறுதியாக இந்த பாடல் வரிகள்.. "கட்டுப்பாட்ட மீறாமே.. சட்ட திட்டம் மாறமே.. காத்திருக்க வேணும், கொஞ்ச காலம் வரையில் பிறகு கல்யாணம் ஆகிவிட்டால், ஏது தடை? ஏது தடை? மாமா மாமா மாமா..!" ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.. ஒல்டு ஈஸ் கோல்ட்..! 😍

  15. கிராமத்தின் பள்ளிப் பருவத்தில், இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பபட்டு, நான் விரும்பிக் கேட்ட பாடல் இது..! ஏறக்குறைய 45 வருடங்கள் கழித்து, அதே பாடலை யாழ்ப்பாணத்தில்(2016) எஸ்.பி.பி பாடியபோது..! 😎

  16. "நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு.. பகை வந்த போது துணை ஒன்று உண்டு.. இருள் வந்த போது விளக்கொன்று உண்டு.. எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு.. உண்மை என்பது எங்கும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும்.. நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்..!" கவிஞர் வாலியின் பாடல் வரிகளில் பிடித்த ஒன்று.. இந்தக் காணொளியை யூ டுயூபில் காண நேர்ந்தது.. பாடகர் நன்றாகவே பாடியுள்ளார்..!

  17. நாளை நமதே..! இன்று தற்செயலாக இந்தக் காணொளியை காண நேர்ந்தது.. பெரும்பாலும் திரைப்பாடல்கள் கச்சேரி அசல் பாடல்கள் போல அமைவதில்லை..! பாடகரின் அலட்டலும் இருக்கும், அசலை விட்டு வேறெங்கோ ராகமும் சென்று நம் பொறுமை சோதித்துவிடும். சிறு கச்சேரிகளில் திறமையாக பாடக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.. அவற்றில் நான் உணர்ந்த ஒன்று..கீழேயுள்ள காணொளி. இக்காணொளியில் முதலில் பாடும் பாடகரின் (கறுப்பு சூட் டில் இருப்பவர்) குரல்வளமும், பாடும் தொனியும் மிக அருமை. கொசுறு: இந்த காணொளியில், வளையமிட்ட இசைக்கலைஞரின் முகச்சாயல், அடிக்கடி வடிவேலு நகைச்சுவைக் காட்சியில் வரும் நடிகர் போல் உள்ளார். ஊகிக்க முடிகிறதா..? 🧐

  18. நிஜமும், நிழலும்..! இரண்டு நாளைக்கு முன்பு யாழ்கள உறவு பாஞ் அவர்கள், ஈழத்து கலைஞர்கள்(மன்மதன் பாஸ்கி மற்றும் சிறி சித்தப்பா) நடித்த ஒரு காணொளியை வாட்ஸ் அப்பில் அனுப்பிருந்தார்.. முதலில் அசிரத்தையாக பார்க்க ஆரம்பித்த நான், இக்காணொளியை கண்டு முடித்தவுடன் கவரப்பட்டு யூடுயுபில் இந்த இரட்டையர்கள் நடித்த பல காணொளிகளை வரிசையாக ரசித்து வருகிறேன்.. புலத்தில் (லா சப்பல்?)எடுக்கப்பட்டுள்ள இக்காணொளிகள் மிகவும் நன்றாக உள்ளது.. அவற்றில் சில.. ( ஈழத்து தமிழர்களிடம் நல்ல,அற்புதமான திறமைகள் உள்ளன, ஆனால் வெளியே தெரிய மாட்டேன்கிறது..! )

  19. திரைப்படங்களில் சில சாதாரண, எளிமையான காட்சிகள். நம் மனதைவிட்டு அகலாமல் நிரந்தரமாக நின்றுவிடும்.. அவற்றில் சில காட்சிகள் கீழே.. சமீபத்தில் வெளியான 'வெற்றிவேல்' படத்திலிருந்து..

  20. எப்பொழுது இந்த பாடலை கேட்டாலும் மனமும், மேனியும், நிச்சயம் குளிர்ச்சியை உணரும்..

  21. இதர் ஆவோ...! தமிழ் நாட்டில் அந்நியநாட்டு மொழியாம் 'இந்தி'யை திணிக்க முயலுகையில், நம் பார்போற்றிய கான்ராக்டர் "நேசமணி", இந்தி சொல்லித்தரும் பாங்கை இங்கே பார்க்கலாம்..!

  22. பதில் கேள்விகள்..!

  23. இன்றைய கலீஜ் டைம்ஸில் வெளியான துபாயின் 'நகர வளர்ச்சி'க்கான இப்படங்கள் தெரிவு செய்யப்பட்டு உலகளவில் பரிசை வென்றுள்ளது..! துபாய் 'மெரீனா' 'புர்ஜ் அல் அராப்' துபாய் 'மிராக்கிள் கார்டன்' மாலையில் பாலையின் சாலை 'ஜுமைரா லேக்' பகுதி ஷேக் சையத் சாலை, துபாய் கால்வாய் அருகே! கலீஜ் டைம்ஸ்

  24. எழுபதுகளின் ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது இப்பாடல் மிகவும் பிரபலம்..! இப்பொழுது புது வடிவில்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.