- Open Club
- 57 members
- Rules
தொழிற்நுட்பம்

14 topics in this forum
-
'IMAX' என்றால் என்ன? சினிமாஸ் கோப்பில் திரைப் படங்களை பார்ப்பவர்கள் 70 எம்.எம் தியேட்டரில் படம் பார்க்கும்போது மிரண்டு போவார்கள். ஆனால், 70 எம்.எம்மில் படம் பார்த்தவர்களே ஐமேக்ஸ் திரையரங்கில் படம் பார்க்கும்போது பிரமாண்டத்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள். அப்படிப்பட்டதொரு பிரமிப்பை தரும் ஐமேக்ஸ் திரையரங்கம் (IMAX Theatre) இப்போது சென்னைக்கு வந்திருக்கிறது. இந்த ஐமேக்ஸ் தியேட்டரில் அப்படி என்ன விசேஷம்? Image Maximum என்பதன் சுருக்கமே ஐமேக்ஸ். இது கனடாவைச் சேர்ந்த நிறுவனம். இது வரை உலகில் 66 நாடுகளில் மொத்தம் 1008 ஐமேக்ஸ் தியேட்டர்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இந்த 'ஐமேக்ஸ்' தொழில்நுட்பம் ஏற்கனவே இந்தியாவின் பல பெரிய நகரங…
-
-
- 2 replies
- 8.1k views
-
-
4K என்றால் என்ன? ஒருவர் 'கேமரா வாங்க வேண்டும்' என்று நினைக்கும் நேரத்தில், நண்பர்கள் "மாப்பிள்ளை 4K கேமரா வாங்கு.. அதுதான் எதிர்காலம்" என்று போகிற போக்கில் தட்டிவிடுகிறார்கள். சொல்பவர்களுக்கு 'அது என்ன?' என்றே தெரியாமலிருக்கும், ஆனால் மற்றவர்களுக்கு ஜடியா சொல்வார்கள், இதனால் நம் கலைஞர்களிடையே ஒரு வித குழப்பம் நிலவுகிறது, 4K என்றால் என்ன..?, அதை எந்த சாஃப்ட்வேரில் எடிட் செய்வது..?, அதை எந்த ரூபத்தில் கஸ்டமர்களுக்கு கொடுப்பது..? போன்ற கேள்விகளை 4K பொருட்களை விற்கும் கம்பெனி பிரதிநிதிகளை கேளுங்கள், பதில் கிடைக்காது. அவர்களுக்கு விற்க மட்டுமே தெரியும். இது போன்று பல வியாபாரிகள் விற்கும் பொருளின் தொழில் நுட்பம் தெரியாமலே. அதை மிகைப்படுத்தி நம்மிடையே விற்கிறார்க…
-
-
- 1 reply
- 17.2k views
-
-
சிறிய விமானத்தையே தூக்கிச் செல்லும் அளவிற்குத் திறன் கொண்ட பிரமாண்டமான விமானம் இந்த ஏர்பஸ் பெலுகா No.2 A300-608ST. உலகம் முழுவதும் சரக்குப் போக்குவரத்து சேவைகள் வழங்கி வரும் இந்த கார்கோ விமானம், ஜூலை 7ம் தேதி பிரான்ஸ் நாட்டின் டோலூஸி என்ற இடத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து மெர்சிலி, கெய்ரோ, அபுதாபி, அகமதாபாத்துக்குச் சென்றுவிட்டு எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. பின்னர் இன்று இந்த விமானம் சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகருக்குச் சென்றது. இந்த ஏர்பஸ் பெலுகா விமானம் வந்தது சென்னைக்கு மட்டுமல்ல, தென்னிந்தியாவிற்கே இதுதான் முதல் முறை. Airbus நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விம…
-
-
- 11 replies
- 1.4k views
- 2 followers
-
-
ஏறக்குறைய கடந்த ஆறு வருடங்களாக சாம்சுங் கேலக்சி S3 கைப்பேசியை பயன்படுத்தி வந்தேன்.. கடந்த மாதம் "அட.. இன்னாப்பா..! என்னையே பிடித்து தொங்குறாய், கொல்லாதே..!! ஆளை விடு..!!" என என் சாம்சுங் கேலக்ஸி S3 திடீரென உயிரை விட்டுவிட்டது.. கைப்பேசி இல்லாமல், உடுக்கை இழந்தவன் கைபோல் ஆனேன்.. ! உடனே அருகிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்று விசாரித்து பார்த்தபொழுது, எந்த கைப்பேசியும் அவ்வளவாக மனதைக் கவரவில்லை. மனதிற்கு பிடித்த ஐபோன் 10 வாங்கலாமென்றால், நம் சொத்தையே எழுதிக் கேட்பார்கள் போலிருந்தது..! வெறுப்புடன் கைப்பேசிகளின் பிரிவுகளிலிருந்து வெளியேறும் சமயம், தற்செயலாக ஹுவாய் (HUAWEI) கைப்பேசிகளின் பிரிவை கடந்தபோது இந்த HUAWEI P20 Pro கைப்பேசி கண்ணில் பட்டது..! …
-
-
- 7 replies
- 1.5k views
- 2 followers
-
-
என்னிடமுள்ள ஐபோன் 13 பற்றிய 'உட்பாகங்களை தெரிந்துகொள்ள, அல்லது ஏதும் பழுது ஏற்பட்டல் நாமே அதை திருத்திக்கொள்வது எப்படி?' என இணையத்தில் தேடியபோது இக்கணொளி கிடைத்தது. இதில் இயங்குதள மென்பொருளை பற்றி இல்லையென்றாலும், வன்பொருட்களின் உள்ளார்ந்த அமைப்பை அறிந்துகொள்ளலாம். பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன். 😉
-
-
- 2 replies
- 552 views
-
-
சில வருடங்களுக்கு முன் வாங்கிய சாதாரண தொலைக்காட்சி பெட்டியை(Normal TV) எப்படி கூடுதல் கருவி(additional Gadget) மூலம் திறனுடைய தொலைக்காட்சி பெட்டியாக(Smart TV) மாற்றுவது...? இந்தக் காணொளியில் சில யோசனைகள் சொல்லப்பட்டுள்ளது.. பிடித்திருந்தால் அந்தக் கருவியை வாங்கி பயன்பெறலாமே?
-
-
- 1 reply
- 698 views
-
-
"ஆஹா" (Aha) என்ற ஒரு புதிய ஓ.டி.டி(OTT) தளம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளது. இதில் தெலுங்கு படங்களும் உள்ளன. சில தமிழ் படங்கள் இலவசமாகவும், சிலவற்றை கட்டணம் செலுத்தியும் பார்க்க வசதியும் உள்ளது. இணைப்பு கீழே.. 👇 https://www.aha.video/all
-
- 1 reply
- 509 views
-
-
உலகின் அதிவேக சூப்பர்சோனிக் பயணிகள் விமானத்தை உருவாக்கும் "பூம் ஓவர்சர் சூப்பர்சோனிக் (Boom Overture)" விமானத்தின் பிரச்சனைகள் இன்னும் முடிவடையவில்லை. பல பெரிய நிறுவனங்கள் இந்த சூப்பர்சோனிக் விமான திட்டத்திற்கான இன்ஜினை உருவாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்று அறிவித்தன. செப்டம்பர் தொடக்கத்தில், ரோல்ஸ் ராய்ஸ்(Rolls Royce) இந்த திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்த பிரிட்டிஷ் நிறுவனத்தின் சிறந்த நிதி செயல்திறனுக்கு இத்திட்டத்தில் பங்கு பெறுவது உதவாது என காரணங்கள் சொல்லப்படுகிறது. அதை தொடர்ந்து, பிராட் & விட்னி(Pratt & Whitney), ஜி.இ ஏவியேஷன்(GE Aviation), ஹனிவெல்(Honeywell) மற்றும் சஃப்ரான் ஏர்கிராப்ட் என்ஜின்கள் (Safran Aircraft Engines) ஆகிய விமான எஞ…
-
- 1 reply
- 326 views
- 1 follower
-
-
வாட்ஸ்ஆப்பில் ஒரு புதிய அம்சம் இணைப்பு வாட்ஸ்ஆப் இன்று, மிகவும் அமைதியாக அதன் ஆண்ட்ராய்டு பீட்டா ஆப்பில் ஒரு புதிய அம்சத்தை உருட்டியுள்ளது. அது வேறு எந்த அப்டேட்டும் அல்ல, மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மொபைல் நம்பர் சேன்ஜ் (Mobile Number Change option) அம்சம் தான். இனி ஒரு பயனர் அவரின் வாட்ஸ்ஆப் மொபைல் நம்பரை மாற்றியதை மொத்தம் மூன்று வழிகளில் அவரின் நண்பர்களுக்கு தெரிவிக்கலாம். இந்த அப்டேட் ஆனது ஆண்ட்ராய்டின் சமீபத்திய வாட்ஸ்ஆப் பீட்டா(Beta) பதிப்பில் காணப்பட்டுள்ளது. அதில் மொத்தம் மூன்று விருப்பங்கள் உள்ளன. மொபைல் நம்பரை மாற்றியதை அனைத்து தொடர்புகளுக்கும் அறிவிக்க வேண்டும் அல்லது சாட்டில் உள்ள தொடர்புகளுக்கு மட்டும் அல்லது கஸ்டம். தற்போது…
-
- 0 replies
- 600 views
-
-
MP4 Audio (MP4A) கோப்பு என்றால் என்ன..? MP4A எனப்படும் MPEG-4 கோப்பு, ஆடியோ டிராக்(Audio Track)குகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வடிவமாகும். 1990 களின் பிற்பகுதியில் வெளியானதிலிருந்து, இந்த வடிவம் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. MP3 கள், .WAV கள் மற்றும் .WMA கள். வடிவமைப்பின் டெவலப்பர்கள், 2004 ஆம் ஆண்டில், அதன் ஆடியோ தரம் திறன்களை மேம்படுத்துவதற்கு வடிவமைப்பில் இரண்டாவது பதிப்பை வெளியிட்டனர். வடிவமைப்பாளர்கள் ஆடியோ MP4A வடிவமைப்புடன் இணைந்து MP4 வீடியோ வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர். பொதுவாக MP4 விரிவாக்கத்துடன் உள்ள கோப்புகள் வீடியோ கோப்புகள் மற்றும் MR4A நீட்டிப்பு கண்டிப்பாக ஆடியோ டிராக்குகளுக்கு பயன்படுத்தப்படும். மோஷன் பிக்சர் எக்ஸ்பர்ட்ஸ் குரூப்(MPEG) 1999 ஆம…
-
- 0 replies
- 1.6k views
- 1 follower
-
-
முன்பெல்லாம் தொலைக்காட்சி பெட்டிகள் வாங்குவது கொஞ்சம் எளிதான காரியமாக இருக்கும். தொழிற்நுட்ப அம்சங்கள், அதனால் கிட்டும் வசதிகள் என பட்டியலிட சிறப்பம்சங்கள் அவ்வளவாக இருக்காது. நுகர்வோரை எளிதில் குழப்பாமல் திரையில் தோன்றும் படத்தின் துல்லியத்தை மட்டும் கருத்தில்கொண்டு தீர்மானித்து வாங்குவோம். ஆனால் தற்கால தொலைக்காட்சி திரைகளை (பெட்டி அல்ல 😋) தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. ஒப்பீடு செய்து செலவழிக்கும் பணத்திற்கு மதிப்பாக நெடுநாள் உழைக்கும் தொலைக்காட்சி திரைகளை தெரிவு செய்து வாங்குவது இமாலய சோதனை. கண்ணையும் கருத்தையும் கவரும் விளம்பரங்கள், நம்மை எளிதாக குழப்பிவிடுகின்றன. அதுவும் மிக வேகமாக முன்னேறிவரும் தொழிற்நுணுக்கங்கள், வியாபார போட்டிகள்.. அப்பப்பா..! இ…
-
- 0 replies
- 339 views
- 1 follower
-
-
ஓய்வு நேரங்களில் யாழ்க்களம் தவிர, யூடுபில் தொழில் நுட்பம் சார்ந்த காணொளிகளை பார்ப்பது வழக்கம். உலகின் பல பகுதிகளில் வானுயுர கட்டப்படும் கட்டிடங்கள், பாலங்கள், மின்னணுவியல் போக, என்னை கவர்ந்தது இந்த விமானங்களின் வடிவபைப்பும், அதன் உற்பத்தி தொழிற்சாலைகளில் அதற்கான மெனக்கெடுதலும்..! பல்வேறு பாகங்களை பல இடங்களில் உற்பத்தி செய்து, அவற்றை ஒருங்கிணைத்து பொருத்தும் தொழிற்சாலைக்கு கொண்டு வந்து, இறுதி வடிவம் கொடுக்கும் பொறியியல் அற்புதம். ஒரு விமானம் உருவாகி முழுமை பெற்று, அது பறக்கும் வரை இந்தக் காணொளியில் சுருக்கமாக விளக்கியுள்ளது அருமை..! போயிங் 787 டிரீம்லைனர்.. இரண்டடுக்கு எர்பஸ் 380..
-
- 0 replies
- 707 views
- 1 follower
-
-
பரோட்டா போட பயிற்சி மையமா? புதுசா இருக்கே! படித்த இளைஞர்கள் தாங்கள் பெற்ற பட்டப்படிப்புக்குப் பொருத்தமான வேலையில் தான் சேருவோம் என்று பிடிவாதமாகக் காத்திருந்தது ஒருகாலம். அதனால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில் கால தாமதம் நேர்ந்து பல்வேறு விதமான உளச்சிக்கல்களுக்கு ஆட்பட்டு வாழ்க்கையை நிராசையாகக் கடத்தியதெல்லாம் அந்தக் காலம் என்றாகி விட்டது இப்போது. ஆனால் பாருங்கள்... இன்றைய இளைஞர்கள் அப்படி இல்லை. அவர்கள் தாங்கள் படித்து வாங்கிய பட்டத்திற்கு ஏற்ற வேலை கிடைக்காவிட்டால் அதற்காக நெடுங்காலம் காத்திருக்க விரும்புவதில்லை. வருமானம் ஈட்டித்தரக்கூடிய எந்த வேலையாக இருந்தால் என்ன? அதைக் கெளரவமாகக் கற்றுக் கொண்டு செய்யத் துடிக்கும் ஆர்வம் இளைஞர்களிடையே மிகுந்து வருகிறது. அதற…
-
- 0 replies
- 590 views
-
-
பழுதான கைப்பேசியில் இழந்த தரவுகளை மீட்க.. பழுதான கைப்பேசியிலூள்ள தொடர்பு எண்கள், மற்றும் பலதரப்பட்ட கோப்புகளை எப்படி மீளப் பெறுவது..? திருத்தும் கடைகளுக்கு உங்கள் கைப்பேசியை எடுத்துச் சென்றால் அதைலுள்ள உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அவற்றை திருடி தவறான வழிகளில் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.. இதை தவிர்க்க இணையத்தில் பல மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது.. அவற்றில் நான் சமீபத்தில் பயன்படுத்தியது dr.fone என்ற இந்த மென்பொருள்.. கைப்பேசியின் உள்ளக சேமிப்பு செல்லிலிருந்து பத்திரமாக அனைத்து தகவல்களையும் மீட்டுவிட்டேன். பயன்படுத்தி பாருங்கள்! கவனிக்க: கைப்பேசியின் உள்ளக மெமரியை ஃபார்மேட்(Format o…
-
- 0 replies
- 622 views
-