- Open Club
- 57 members
- Rules
சுற்றுலா
11 topics in this forum
-
இருபது வருடங்களாக கடும் (சில சமயம் 50பாகை) வெப்பத்ததையே பார்த்து பழகிய எனக்கு, கடந்த இரு வருடத்தில் இரண்டு முறை இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு கிட்டியது. வடக்கு அயர்லாந்தில் 4 பாகை குளிரைக் கண்டு அரண்டு போய் அறைக்குள்ளேயே ஒடுங்கியிருந்தேன். கடந்த மாதம் லண்டன் சென்று முக்கிய இடங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது. நான் பார்த்து ரசித்த பிரசித்திபெற்ற இடங்கள் கீழேயுள்ள காணொளியில் உறைபனியில் போர்த்தியிருப்பதை காணும்போது இன்னும் கால்கள் சில்லிடுகின்றன. வெப்பத்தையாவது தாங்கிக்கொள்ளலாம், ஆனால் இந்தக் குளிரையும், பனிக்கட்டிகளையும் காணும்போது 'எப்படி இவற்றை தாங்கி வாழ்கிறார்கள்..?' என வியப்பு மேலிடுகிறது.
-
- 0 replies
- 620 views
- 1 follower
-
-
இரண்டு நாட்கள் முன்பு சுவிஸ்ஸில் Lauterbrunnen என்ற இந்த மலைக் கிராம பகுதிக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சென்று சுற்றிப் பார்க்க எனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. மூன்று அடுத்தடுத்த அருவிகளுடன் பசுமை பள்ளத்தாக்கு நம் மனதை போட்டுத் தாக்குகிறது. இயற்கையின் கொள்ளை அழகு.. திரும்பி வர மனம் இல்லை..!
-
-
- 25 replies
- 2.1k views
- 1 follower
-
-
இன்றிலிருந்து சரியாக ஒரு வருடத்தில்(01-10-2021) ஆரம்பிக்கபோகும் "துபாய் எக்ஸ்போ 2020" வர்த்தக பொருட்காட்சி பற்றிய படங்கள் இன்றைய நாளிழில் வந்துள்ளது.. வாய்ப்பிருந்தால் கலந்துகொள்ள வேண்டும்..! கலீஜ் டைம்ஸ்
-
-
- 15 replies
- 1.7k views
- 1 follower
-
-
"துபாய் எக்ஸ்போ 2020" நாளை முடிவடைகிறது.. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஆறு மாதங்களாக அமீரகத்தின் கவர்ச்சியான துபாய் எக்ஸ்போ 2020 நாளையுடன் (31-03-2022) பிரியா விடைபெறுகிறது. நான் இரண்டு முறை அங்கே சென்றும் முழுவதும் சுற்றிப்பார்க்க இயலவில்லை. அவ்வளவு பெரிய பரப்பளவில் ஏறக்குறைய 192 பல்வேறு நாட்டு அரங்குகள், காட்சியமைப்புகள்.. இனிமேல் இம்மாதிரியான "மெகா திருவிழா"வை வாழ்க்கையில் மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமாவென தெரியவில்லை.. உழைத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்..! 😍
-
-
- 10 replies
- 1.2k views
-
-
சர்வதேச விமான பறப்புகளில், குப்பூஸ் பார்த்திருக்கேன், சப்பாத்தி உண்டிருக்கேன், கட்லெட் கடித்திருக்கேன்.. ஆனால்... மசால் வடையை இப்பொழுதுதான் பார்க்கிறேன்..! பின்னுறீங்களேப்பா.. நீங்க வேற லெவல்..!! அபாரம்..!
-
-
- 10 replies
- 2k views
- 1 follower
-
-
நேசமணி புகழ்ந்த துபாய் பஸ் & துபாய் பஸ் ஸ்டாப்.. "காண்ட்ராக்டர் நேசமணி" அவர்கள் துபாயில் வேலை செய்து வெற்றிக் கொடி நாட்டியபோது அவர் துபாய் நகரின் முக்கிய அம்சமான துபாய் பஸ் ஸ்டாப் மற்றும் துபாய் பஸ் பற்றி விளக்கியதை அறிந்து நாமும் தெரிந்துகொள்வோமா..? Let us #Pray_for_Nesamani 😢 யாழ்க்கள உறவு திரு.பாஞ் அவர்கள், துபாய் வந்தபோதும் துபாய் மியூசியம் அருகே இந்த பஸ் நிறுத்தத்தினுள்ளே சென்று சற்றே ஓய்வெடுத்தார். நீங்களும் பாருங்களேன்..!
-
- 6 replies
- 1.3k views
-
-
எங்கடா போறே, சிறீலங்காவா..? ஆபத்தான விடயங்களை சீண்டிப்பார்ப்பது இளசுகளின் இயல்பு.. ஆனால் இப்படியா..? பாம்பன் பாலத்திருந்து குதிக்கும் நபர், கடலின் நீரோட்டம் பற்றி அறியாமல் விளையாடுவதை என்னவென்று சொல்வது?
-
-
- 5 replies
- 753 views
-
-
இவ்வளவு உயர மலையிலிருந்து குதிச்சி, குறிப்பிட்ட இடத்துக்கு காற்றில் நீந்தி இறங்கும் துல்லியம் அபாரமான திறமை..! சென்ற ஆண்டு இன்டர்லாகன், லாட்டர்புரூனன் சென்றுவிட்டு 'டாப் ஆஃப் ஈரோப்'(Jungfraujoch) சென்றபோது இம்மாதிரி சிலர் பறப்பதை பார்த்து வியந்தேன்.. நிச்சயம் துணிவு வேண்டும்..!
-
- 2 replies
- 475 views
- 1 follower
-
-
துபாய் ஷேக்குகளின் ஷோக்கான உணவுகள்.. ஷேக்குகள் சாப்பிடும் உணவு வகைகளின் விலையைக் கேட்டால் மூச்சடைத்துவிடும்..! 'இப்படியும் உணவு வகைகளா..?' எனவும் தோன்றும்..
-
-
- 2 replies
- 665 views
- 1 follower
-
-
ஒரு நாட்டின் சனாதிபதியை துரத்திவிட்டு பொது மக்களை குடும்பம் குடும்பமாக சுற்றுலா இடமாக பார்க்க வைத்த நிலைமை நல்ல வேடிக்கை..! காணொளி விளக்கம், அழகு தமிழில்..! 😎
-
-
- 1 reply
- 871 views
- 1 follower
-
-
கடந்த வாரம் திருநெல்வேலி தச்சநல்லூரை சேர்ந்த பொறியாளர், அந்த ஊரின் சிறப்பான 'இருட்டுக்கடை அல்வா'வை வாங்கி வந்து கொடுத்தார்.. பொதியை திறந்து சாப்பிட்டால், என்ன ஒரு சுவையோ சுவை.. ! திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை பற்றி... இக்கடையை 1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள். இருட்டுக்கடை என்று பெயர் வரக் காரணம் - 1930 களில் கடை துவங்க பட்ட போது, ஒரே ஒரு மண்ணெண்ணெய் விளக்கு மட்டும் இருக்குமாம். இருட்டாய் இருக்கும் கடை என்பதே பெயராகி " இருட்டு கடை அல்வா" என்ற பெயர் வந்து விட்டது. இன்றைக்கு மண்ணெண்ணெய் விளக்கு அகன்று ஒரு 200 Wa…
-
- 0 replies
- 630 views
-