Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பழனி அருகே ஆண்டிபட்டி மலைப்பகுதியில் 3000 ஆண்டு பழமையான சங்ககால குகை ஓவியங்கள், வாழ்வியல் தடங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன. பழனி அருகே ஆண்டிபட்டி மலைப்பகுதியின் மேற்கே உள்ள ஒரு குகையில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முனைவர் கன்னிமுத்து, ஆர்வலர்கள் பழனிச்சாமி, ராஜா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககால ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சுண்ணாம்பு, மூலிகை மற்றும் மரப்பிசின் கொண்டு வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் பல நிறம் மங்கியுள்ளது. காதலையும், வீரத்தையும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த சங்ககாலத் தமிழ் மக்கள…

  2. வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு பரலி சு. நெல்லையப்பர் எழுதிய வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு தோற்றம் திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி யயன்று திருஞான சம்பந்தர் முற்காலத்தில் போற்றிப் புகழ்ந்த திருநெல்வேலி நாட்டைப் பிற்காலத்தில் உலகத்தார் போற்றுமாறு செய்த பல பெரியோர்களில் காலஞ்சென்ற திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் ஒருவர். திருநெல்வேலி நாட்டிற்கு மட்டுமின்றித் தென்னாடு முழுமைக்குமே பெரியோர்களில் சிதம்பரம் பிள்ளை தலைசிறந்தவர். திருநெல்வேலி ஜில்லாவில், அக்காலத்தில் கும்பினி சர்க்காரை எதிர்த்துக் கலகம் செய்து பேர்பேற்ற கட்டபொம்மு நாயகன் அரசாண்ட பாஞ்சாலங் குறிச்சியைத் தனக்கு அருகே கொண்ட ஒட்டப்பிடாரம் என்ற சிற்றூரில் , சைவ வேளாளர் குலத்தில் , ஆங்கீ…

  3. வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர் களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் ! யானையின் தமிழ்ப்பெயர்கள்: யானை/ஏனை (கரியது) வேழம் (வெள்ளை யானை) களிறு களபம் மாதங்கம் கைம்மா (துதிக்கையுடைய விலங்கு) உம்பர் உம்பல் (உயர்ந்தது) அஞ்சனாவதி அரசுவா அல்லியன் அறுபடை ஆம்பல் ஆனை இபம் இரதி குஞ்சரம் இருள் தும்பு வல்விலங்கு தூங்கல் தோல் கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது) எறும்பி பெருமா (பெரிய விலங்கு) வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது பு…

  4. தமிழ், கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்று "ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது'. "தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். ÷தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெ…

  5. வணக்கம் வாசகர்களே !! கள உறவுகளே !!! உங்களது வில்லண்டம் பிடிச்ச விலங்கும் லவட்டின பச்சையும்!!!!! இத்துடன் நிறைவுக்கு வருகின்றது . இந்த தொடரிலே என்னால் முடிந்த அளவு விலங்குகளை உங்கள் உதவியுடன் வகைப்படுத்தி யாழ் இணையத்தின் ஆவணமாக்கி இருக்கின்றேன் . இத்தொடரை நீடிக்க வைத்த அனைத்துக் கள உறவுகளுக்கும் எனது தலை சாய்கின்றது . நேசமுடன் கோமகன் ********************************************************************************************** 26 கருமுகக் குரங்கு ( vervet monkey or Chlorocebus pygerythrus . படத்தில் உள்ள விலங்கிற்கான பெயர் கருமுகக் குரங்கு ஆகும் . இந்த இனம் தெற்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் அதிகமாக வசிக்கின்றது . இது பற்றிய தகவலை அறி…

  6. 1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது 2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில் 3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய் 5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம் 4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள் பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயி…

  7. தமிழில் ஏறக்குறைய இரண்டு லட்சத்து எண்ணாயிரத்துப் பத்துக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் 2,08,810 தமிழ்ச்சொற்கள் இருக்கக் காணலாம். அரி என்னும் ஒரு சொல்லுக்கு மட்டும் அகராதியில் 109 பொருள்களைக் காண்கிறோம். அந்த 109 பொருள்களுள் 50 பொருள்கள் வடமொழிச் சொற்களைத் தழுவியவை; மற்ற 59 பொருள்கள் அரி என்னும் தமிழ்ச்சொல்லுக்கே உண்டு. இப்படிப் பொருள்வளம் பெற்றுள்ள சிறப்பும் தமிழுக்குண்டு. 59 பொருள் தமிழ்மொழிக்கு வரவேண்டுமென்றால் அது நீண்ட காலமாய் மக்கள் புழக்கத்தில் இருந்திருத்தல் வேண்டும். இது தமிழ்மொழியின் தொன்மையையும் காட்டும். ஒன்றன் வெவ்வேறு நிலையை நன்கு காட்டுதற்கும், ஒன்றற்கும் மற்றொன்றற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துவதற்கும் தமிழ்மொழியில் …

  8. எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது. சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் "மகாவம்சம்.'' சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது. அனுராதபுரம் இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வ…

  9. தமிழர்களின் சங்க காலம் பற்றிய குறிப்பு. காணொளியை முழுமையாகப் பார்க்கவும். http://www.youtube.com/watch?v=nQZFS9Hij0M

  10. தமிழர் கலை இலக்கிய வாழ்வு நலிந்துள்ளதா,வளர்ந்துள்ளதா? http://www.youtube.com/watch?v=o3-eTFTkmkk

  11. மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தன…

  12. தமிழர்க்கு எதிரி யார் ? ராஜபக்சேவும், ராஜ பக்சேவுக்கு ஒத்து ஊதுபவர்களும் தான் என்பதை உணர்ந்து செயல் பட வேண்டாமா? எதிரும் புதிருமான உலக நாடுகள் ஈரான் இசுரேல், அமெரிக்கா ருசியா, இந்தியா பாகிஸ்தான் இவை அனைத்தையும் ஏமாற்றி ராஜபக்சே அவை அனைத்தும் மற்றும் சீனாவிடமிருந்தும் பெரும் உதவி பெற்று தமிழினத்தை அழித்துக் கொண்டுள் ளான்.இப்போது தான் சில உலக நாடுகள் உண்மையை உணர்ந்து ராஜபக்சே கொடுங்கோலன், ஹிட்லரை விட மோசமான இன அழிப்புக்காரன் என்பதை உணர்ந்துள்ளனர். தமிழ், தமிழன் என்ற அடையாளமே இருக்கக் கூடாது என்பதைத் திட்ட மிட்டுச் செயல் படுத்தி வரும் ஆட்சி ராஜபக்சே குடும்பத்தின் கொடுங்கோல் ஆட்சி.இதற்கு எதிராக இருக்கும் சிங்களவர்களையும் துன்புறுத்தத் தயங்காத கொடுங்கோலன் என்பதைச் சிங்கள மக…

  13. அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் : அரிக்கன் விளக்கு காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு. அம்மி குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல். அண்டா அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம். அடுக்குப்பானை ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர். அடிகுழாய் கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய். ஆட்டுக்கல் வட்ட அல்லது சதுர வடிவ…

  14. சோழ நாட்டின் மன்னன் குலோத்துங்க சோழனின் குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தவர் கவி ஒட்டக்கூத்தர். இவர் தமிழ்ப்பற்று மிக்கவர், புலமையில் கரைகண்டவர். தானும் தமிழ்ப் புலவர் என்று கூறிக்கொண்டு யாரேனும் தமிழைப் பிழையாக உரைத்தால் அவரைச் சிறையிலடைத்து விடுவார். பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்ட நபர்களுக்குப் பிழைக்க ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார். அது யாதெனில், ஒட்டக்கூத்தர் கேட்கும் கேள்விக்கு அவர்கள் சரியான பதில் தந்தால் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவர். சரியான விடை கூறாதவர்கள் இருவரின் தலைமுடிகளையும் ஒன்றாக முடிந்து சிரச்சேதம் செய்துவிடுவார் அதாவது இருவரது தலைகளையும் வெட்டிவிடச் செய்வார். இதனாலேயே தான் ஒரு புலவன் என்று முறையாகத் தமிழ் பயிலாத எவர…

  15. தமிழரின் மறைந்த இசைக்கருவி – ஆர். பிருந்தாவதி இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழினை ம…

  16. முழுமையாக படிக்கவும்.....! (சோழப் பேரரசு 11ம் நூற்றாண்டில்) இந்திய சரித்திரத்தின் வீரப்புருஷர்கள் தற்காப்பு யுத்தத்தையே தூக்கிப் பிடித்தபோது, எதிரிகள் மீது படையெடுத்து அவர்களைப் பந்தாடிய இரண்டு தமிழர்கள் இருந்தார்கள். வடக்குப் படையெடுப்புகளால் முடக்கப்பட்டபோது, தெற்கை எட்டுத்திக்கிலும் பட்டொளி வீசிப் பறக்கும் பளபளக்கும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி தகதகவென மின்னும் தந்தையும், மகனும் வந்தார்கள். அவர்கள் வாள் வீச்சு வடக்கையும் தாக்கி யது, கடல் கடந்தும் தாவியது. வேழம் அவர்களுக்கு வெள்ளாடாகவும், மலைகள் அவர்களுக்கு மண்மேடாகவும் காட்சியளித்தன. ‘வடமேற்கில் தொடர்ந்து கஜினி முகமது படையெடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் ஒரு மாவீரன் இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து ஒரு பெரு…

    • 0 replies
    • 2.6k views
  17. தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு. தமிழர் வரலாறு - கி.மு 14 பில்.- கி. மு. 776 கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது. கி.மு. 470000 இக்கால இந்தியாவின் …

  18. இருப்பிடம் மியன்மாரின் பழைய பெயர் பர்மா 6,76552 சதுர மைல்கள் கொண்டது. பர்மா நாட்டின் வடமேற்கு எல்லையில் இந்தியாவும், பங்களாதேசும் இருக்கின்றன. வடகிழக்கு எல்லையில் žனாவும் லாவோசும் இருக்கின்றன. தென் கிழக்கு எல்லையில் தாய்லாந்து இருக்கிறது. பர்மா ஆங்கில ஆட்சியில் 1936 வரை இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இருந்தது. அரிசி, தேக்கு, நவரத்தினம், முத்து போன்றவை அதன் பாரம்பரியச் சொத்து. தமிழர் குடியேறிய வரலாறு : கிறிஸ்து தோன்றுவதற்கு முன்பே தமிழகத்திற்கும் பர்மாவுக்கும் தொடர்பு இருந்து வந்தது. அத்தொடர்பு வணிகத்தை நோக்கமாகக் கொண்டது. பர்மாவை-பட்டினப்பாலை 'காழகம்' என்கிறது. 'காழகத்து ஆக்கமும்' என்ற வரிகள் இதனை உணர்த்துகின்றன. 'அருமணதேயம்' என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. கி.மு. 200 முத…

  19. இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்! கட்டுரையை படித்துவிட்டு வரவும்! இதுவரையிலான கணிப்புகளின்படி ஆஸ்திரேலியாவில் 45,000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் காலடி எடுத்து வைத்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்குள் 18ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா தனித்திருந்தது.. எந்த இனக் கலப்பும் நடக்கவில்லை, அங்கே வேறு யாருமே நுழையவில்லை என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், இது தவறு என்பதை ஆஸ்திரேலிய பழங்குடியினர் (aboriginal Australians) இடையே நடத்தப்பட்ட ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த இனத்தினரின் ஜீன்களில் 11 சதவீதம் இந்தியாவின் ஆதிவாசி இனத்தினரின் அடையாளங்கள…

  20. காதலர் தினம் தமிழர் விழா? 2500 ஆண்டுகளுக்கு முன்பே காதல் விழா கொண்டாடிய தமிழர்கள்! காதலர் தினம் என்றால் மேற்கத்திய திருவிழா என்றுதானே இதுவரை நினைத்துக்கொண்டிருந்தோம்? ஆனால் உண்மை அதுவல்ல. காதலர் தினம் முதன்முதலில் பண்டைய தமிழகத்தில் கொண்டாடப்பட்ட ஒரு திருவிழா. ரோமில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது கி.பி 3ம் நூற்றாண்டில் இருந்துதான். ஆனால் பண்டைத் தமிழகத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு 5ம் நூற்றாண்டுக்கு முன்பே) இந்திர விழா (காதல் விழா, காமன் விழா) என்ற பெயர்களில் காதலர் தினம் கொண்டாடப்பட்டிருந்திருக்கிறது. பூம்புகாருக்கு வர்த்தகம் செய்ய வந்த ரோமானியர்கள் அதை ரோமில் ஏற்படுத்தியிருக்க வேண்டும். தமிழர் - ரோமானியர் வர்த்தகம்: ரோம் மன்னர் அகஸ்டஸ் கா…

  21. தமிழர்களிடையே ஓவியக்கலைக்கு போதிய மதிப்பு இருப்பதில்லை. இது உலகத்தின் பெரும்பாலான நவீனர்களின் வழக்கம் என்று பொதுவாக இந்தக் குறைபாட்டை புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், ஓவியக்கலையில் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்றுக் காலத்திலேயே உலகத்தின் முக்கியமான கலைப்பீடமாக தமிழகம் இருந்துள்ளது. தஞ்சாவூர் ஓவியங்கள் உலகத்தின் முக்கியமான பாரம்பரிய சொத்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அது உள்ளிட்ட ஓவியக்கலையை தமிழர்கள் புறந்தள்ளி விட்டோம். தமிழிலே ஓவியர்களுக்கு மதிப்பு பெரிதாக இல்லை. அதிலும், இலங்கையில் ஏறத்தாழ துண்டாக இல்லை. (இலங்கையில் ஓவியக்கலையின் நாட்டம் குறைந்ததற்கு, ஓவியம் என்றாலே புத்தரின் சிலைகள்தான் என்பதாக உள்ள கடினமான சிங்கள ஆதிக்க பாடசாலை சிலபசும், பிள்ளை படம் கீறுவ…

  22. திருச்சி மலைக் கோட்டை , திருச்சிராப்பள்ளியின் அடையாளமாகவே விளங்குகிறது. ஒரு மலையைச் சுற்றி கோட்டை அமைந்துள்ளதால் மலைக் கோட்டை என்று அழைக்கப்படும் இது காவிரி ஆற்றின் தென்கரையோரம் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. திருச்சி பல இடங்களில் இருந்து இந்தக் கோட்டையின் அழகை கண்டுகளிக்கலாம். இந்த மலையில் மொத்தம் மூன்று கோவில்கள் உள்ளன. மலையின் கீழே ஒரு கோவில், நடுவே ஒரு கோவில், உச்சியில் ஒரு கோவில் என மூன்று பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோவில், நடுவில் தாயுமானவர் கோவில், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவில் என்பதே அந்த மூன்று கோவில்களாகும். பல்லவர்கள் காலத்தில் தான் இந்தக் கோவில்கள் கட்டப்பட்டது, இங்கு உள்ள கோட்டை நாயக்கர்கள் …

  23. http://www.padippakam.com/index.php?option=com_content&view=category&id=490&Itemid=1&format=feed&type=atom இந்த இணைப்பில் பி டி எவ் வடிவில் உள்ளது. கீழிருந்து மேலாக இணைப்புக்களில் இருந்து தரவிறக்கிப் படியுங்கள்..! உதாரணத்திற்குச் சில... http://www.padippakam.com/document/EelamHistory/kalampalakandakotti/19_kalampalakandakotti_03_07_1996.pdf http://www.padippakam.com/document/EelamHistory/kalampalakandakotti/20_kalampalakandakotti_10_07_1996.pdf

  24. கரிகால் சோழனுக்கு மணிமண்டபம்: முதல்வர் அறிவிப்பு. கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனுக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பகுதியில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னி குவிக் நினைவு மணிமண்டபத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்துப் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசியது: வைகை படுகையில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், மேற்கு நோக்கிப் பாயும் பெரியாறு நதி நீரை வைகை படுகைக்குத் திருப்பும் வகையில் அணை கட்டும் திட்டத்தை அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் தயாரித்தது. இத் திட்டத்தை பல்வேறு இடையூறுகளுக்கிடையே கர்னல் ஜான் பென்னி குவிக் கட்டி முடித்தார். இத் திட…

    • 0 replies
    • 529 views
  25. பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில் பாட்டுடைத் தலைவனாக தொண்டைமான் இளந்திரையனைக் கொண்டாடப் படுகிறது. இந்நூலில் உப்பு வாணிகம் செய்பவர்களின் பயண வழியில் அவர்கள் காணும் ஐந்து நில மக்களின் வாழக்கை முறையை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியுள்ளார். அதில் வலைஞர் குல மக்களின் வாழ்க்கை முறையை கூறும்போது, அவர்கள் கள்ளு தயாரித்து உண்ணும் முறையை கூறுகிறார். எளிய செயல்முறைதான் வீட்டில் செய்து பார்க்கலாம் தயாரிப்பு முறையை கவனியுங்கள்.. உரலில் இட்டுக் குற்றாத கொழியல் அரிசியை(சுத்தம் செய்யாத) களியாகச் சமைத்து அதை கூழாக்க வேண்டும். பின்னர் அந்தக் கூழை அகலமான தட்டில் இட்டு ஆறச் செய்து, நல்ல முளை அரிசியை(பாலை நெல்) இடித்து கூழுடன் சேர்த்து கலக்கி இரண்டு இரவும் இரண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.