பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
வணக்கம் என்றால் என்ன? வணக்கம்: வா + இணக்கம் = வணக்கம். தங்கள் வரவை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் (சம்மதிக்கின்றோம் உடன்படுகின்றோம்) என்பதே இதன் பொருள்.
-
- 10 replies
- 17.9k views
-
-
ஒரு கொடி பல விடயங்களை பிரதிநிதிப்படுத்தும் ஒன்று. அது ஒரு எண்ணக்கருத்தை, ஒரு விற்பனை பொருளை, ஒரு விளையாட்டுக்கழகத்தை, ஒரு அமைப்பை, ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டை பிரதிநிதிப்படுத்துவதாக உள்ளது. நாடுகள் தம்மை கொடி மூலம் பிரதிநிதி படுத்துகையில், பல நாடுகளை கடந்து வாழும் ஒரு இனம் தன்னை எவ்வாறு அடையளாப்படுத்துவது? இன்று தமிழினம் ஒரு உலக இனமாக உள்ளது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தும் தமிழின படுகொலையை ஏன் நிறுத்த முடியாமல் போனது? ஈழத்தமிழர்கள் தம்மை துணிகரமாக ஒரு கொடி மூலம் பிரதிநிதிப்படுத்தியுள்ளார்கள். ஆனால், இது உலக தமிழினத்தை பிரதிநிதிப்படுத்தவில்லை. உலக தமிழ் அரசியல் வாதிகள், இலக்கியவாதிகள், தமிழர்கள் தமக்கென ஒரு கொடி உருவாக்கல் பற்றி எண…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆசியவியல் நிறுவனத்தின் சார்பில், "ஆசிய பண்பாட்டு வளர்ச்சிக்கு தமிழர்கள் நல்கிய பங்களிப்பு' பற்றிய சர்வதேச கருத்தரங்கு சென்னையில் நடந்தது. சென்னை, தி.நகர் வாணி மகாலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கருத்தரங்கை துவங்கி வைத்து, பிரபல மொழி வரலாற்று ஆய்வாளர்களின் கட்டுரை முடிவுகளிலிருந்து, முக்கிய ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் பேசியதாவது: தமிழர்களின் கடல் கடந்த அயல்நாட்டு தொடர்புகளையும், அத்தொடர்புகளின் சமுதாய வரலாற்று பின்னணிகளையும் விரிவாக ஆராய்ந்து நிலை நாட்டும் விதமாக இந்தக் கருத்தரங்கு அமைந்துள்ளது. இந்திய மொழிகளில் தமிழ் மொழி அளவுக்கு, உலகின் பெரும்பான்மையான தொல் பழங்கால மொழிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மொழியாக வேறு எந்த மொழியும் இ…
-
- 27 replies
- 3.4k views
-
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் தான் தமிழ் புதிய பன்முக பரிமாண வளர்ச்சியை பெற்றிருக்கிறது. ஐரோப்பிய இலக்கியப் பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு நாட்கள் முன்னர்தான் சென்னை திரும்பியிருந்தார் இந்திரன். சற்று களைப்பாகக் காணப் பட்டாலும் மிகவும் உற்சாகமாகவே இருந்தார். கடந்த நாற்பதாண்டு களாக கவிதை, ஓவியம், சிற்பம், சினிமா என்று பல்வேறு துறைகளைப் பற்றி தமிழி லும், ஆங்கிலத்திலுமாகச் சலியாது எழுதி வருகிற வர் என்பதை துளியும் காட்டிக் கொள்ளாத எளிமை. பிரிட்டிஷ் அருங் காட்சியகத்தில் சேக ரிக்கப்பட்ட இந்திய கலைப் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் அசோசியேஷன் ஆஃப் பிரிட்டிஷ் ஸ்காலர்ஸ் அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆப்பிரிக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலமுரியா கண்டம் ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள். பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர். பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் கும…
-
- 1 reply
- 2k views
-
-
எமக்குத் தொழில் கவிதை' என்பார் பாரதி. புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம் பெண் பேச்சாளர் பாரதி கூறுகிறார் "எமக்குத் தொழில் பேச்சு' என்று. பேச்சுக்கலையில் இப்போது பிரபலம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம்தான். அதிலும் குறிப்பாக, அந்தக் குழுவில் ஒரு பெண் இருப்பது அவசியமான ஒன்று என்பது மாறி, முற்றிலும் பெண் பேச்சாளர்களைக் கொண்டே ஒரு நிகழ்ச்சியை வடிவமைப்பது இப்போதைய புதிய பாணி. அப்படித்தான் நிகழ்ச்சி நடத்துகிறார் இந்தப் பாரதி. 30 வயது நிரம்பிய இவர் எம்சிஏ (கணினியியலில் முதுநிலைப் பட்டம்!) முடித்துள்ளார். தந்தை சந்திரசேகரன்தான் இவருக்கு குரு. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான சந்திரசேகரன், இப்போது தனியார் கல்லூரி ஒன்றின் முதல்வர். தாய் ஜெயலட்சுமி, தங்கை ஸ்ரீவித்யா. கணவர் பாபு. பேச்ச…
-
- 0 replies
- 955 views
-
-
சரியான உச்சரிப்புகள் இல்லாமல் தமிழ் வானொலிகளின் உரையாடல்கள் தமிங்கிலிஸ் மயமாகுவதை தடுப்பதற்கு நாமெல்லோரும் நல்ல தமிழில் உரையாடுவதோடு தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து பழக வேண்டும் என உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத், தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார். சிறகுகளை விரித்து பட்டாம்பூச்சியாக பறக்கவேண்டிய சிறுவயதில் அழையாத விருந்தாளியாக இலங்கை வானொலி கலையகத்தில் கால்பதித்த பீ.எச்.அப்துல் ஹமீத், இன்று உலகம் போற்றும் சிறந்த அறிவிப்பாளராகவும் ஒளிபரப்பாளராகவும் பல பரிமாணங்களில் எம் முன் பரிணமித்துக்கொண்டிருப்பது கண்கூடு. இவரின் அறிவிப்புத்துறையின் உள்நுழைவே சற்று வித்தியாசமானது. வானலையில் தனது …
-
- 1 reply
- 1.2k views
-
-
-
மழலைகளுடன் தலைவர் http://www.aruchuna.net/categories.php?cat_id=23&sessionid=265a928656d1979a18260227cc0f41a3&sessionid=265a928656d1979a18260227cc0f41a3'>http://www.aruchuna.net/categories.php?cat_id=23&sessionid=265a928656d1979a18260227cc0f41a3&sessionid=265a928656d1979a18260227cc0f41a3 திருவிழா http://aruchuna.net/categories.php?cat_id=43 தமிழர் விழா http://aruchuna.net/categories.php?cat_id=45 மக்கள் பணி - தமிழீழ காவல்துறை http://aruchuna.net/categories.php?cat_id=54 அரசியல் - அரசியல் சந்திப்புக்கள் http://aruchuna.net/categories.php?cat_id=41 தாயக மக்கள் எழுச்சி http://aruchuna.net/categories.ph…
-
- 0 replies
- 1k views
-
-
மழலைகளுடன் தலைவர் மேதகு பிரபாகரன் http://www.aruchuna.net/categories.php?cat_id=23&sessionid=265a928656d1979a18260227cc0f41a3&sessionid=265a928656d1979a18260227cc0f41a3 முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 609 views
-
-
மழலைகளுடன் தலைவர் மேதகு பிரபாகரன் http://www.aruchuna.net/categories.php?cat_id=23&sessionid=265a928656d1979a18260227cc0f41a3&sessionid=265a928656d1979a18260227cc0f41a3 முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 462 views
-
-
கணினிப் பயன்பாட்டில் தமிழ் மொழியின் எழுத்துக்களை ஒரே மாதிரியாகப் பயன்படுத்த "TAMIL ALL CHARACTER ENCODING 16" மென்பொருளில் ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் (வடமொழி) கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதை முதலில் கவனிக்காமல் இருந்துவிட்டு, அப்புறம் ஏன் இப்போது பின்வாங்குகிறார் முதல்வர் கருணாநிதி" என்று கேட்கிறது ஒரு குரல்! ஆகா...! முதல்வர் காலம் க்டந்தாவது தமிழ் குறித்து நல்லறிவு பெற்று, எதிர்க்கவேண்டிய வடமொழி எழுத்துகளை எதிர்திருக்கிறாரே என்று களிப்பேருவகை அடைந்தோம்! கருணாநிதி மத்திய அரசுக்கு எழுதிய மடல் ஏகெனவே தமிழ் ஒருங்குறியில் உள்ள, ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் ஐந்து எழுத்துகள் குறித்தவை அல்லவாம். இவைபோல் இன்னும் 26 கிரந்த எழுத்துக்களைத் தமிழ் ஒருங்குறியில் சேர்…
-
- 10 replies
- 1.3k views
-
-
தலைக்கு ஊத்தல்! சாவகாசமாக ஒரு எண்ணெய்க் குளியல். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அன்பும், நலமும் வேண்டி செய்யப்படும் ஒரு சடங்கு... விழாக்காலங்களின் தொடக்க நிகழ்வாக... கோடையின் வெப்பத்தை எதிர்கொள்ள உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு வழக்கம்...! தமிழ்நாட்டின் விருதுநகர் பகுதியிலோ இது மெதுவாக நடைபெறும் ஒரு கொலை. வறுமையின் கொடுமை தாங்காமல் வயதான தாயை பெற்ற மகனே கொலை செய்யும் கொடூரத்தின் அடையாளம்! தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் வயதான முதியவர்களை பராமரிக்க இயலாமல் அவர்கள் வீட்டு இளைய தலைமுறையே இவ்வாறு செய்யும் நிலைக்கு தள்ளப் படுகின்றனர். 65 வயதான மாரியம்மாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கும் இது நடக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அவர் மக…
-
- 0 replies
- 958 views
-
-
விழிப்புணர்வு பெறும் மக்கள் தத்தம் மொழியைக் காப்பதில் முனைந்து செயல்படுகிறார்கள். சான்றுக்கு இலாட்விய மக்களைக் குறிப்பிடலாம். சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோது அதன் பிடியில் அகப்பட்டிருந்த இலாட்வியா தன் மொழி மேம்பாட்டில் கருத்துச் செலுத்தியது. ஊடகத்திலும், மக்கள் உரையாடலிலும் இரஷ்யனுக்குப் பதில் இலாட்விய மொழி ஒலிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. மீறியவர்களுக்குத் தண்டனை வழங்கியது. விளைவு, பத்தே ஆண்டுகளில் இலாட்விய மொழி வணிக மொழியாகவும், உயர்கல்வி மொழியாகவும் ஆகிவிட்டது. பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் வெல்ஷ் மொழியைப் புழக்கத்திற்குக் கொண்டு வர விரும்பிய அப்பகுதியின் சட்டமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, நெடுஞ்சாலைகளில் முதன்முறையாக ஆங்கிலத்துடன் வெல்ஷ் மொழியையும் அறிவிப்புப் …
-
- 0 replies
- 758 views
-
-
நாட்டுப்பாடல்கள் -கிழக்கிலங்கையின் பொக்கிஷம் பண்டு தொட்டு வாழ்ந்து மறைந்த மனிதர்களிடையே காணப்பட்ட பண்பாடு, வாழ்க்கை முறைமைகள் என்பன அவர்களது இலக்கியம் தோன்ற வழி வகுத்தது எனலாம். அவ்வக் காலங்களில் வாழ்ந்தவர்களது வாழ்க்கைப் பண்புகள் அவற்றைப் பிரதிபலிக்கின்றன. அப்பொழுது அவ்விலக்கியங்கள் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன. வள்ளுவர் காலத்திலும் செய்யுள் வடிவிலேயே அவை இருந்தமையினால் சாதாரண படிப்பில்லாத மக்கள் அவற்றை விளங்கிக்கொள்ளக் கூடினமாகக் காணப்பட்டது. படித்தறிந்த பண்டிதர்கள் மாத்திரம்தான் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அவற்றைப் ‘பண்டிதர் இலக்கியம்’ என்று சொன்னால் கூட பிழையிருக்காது. ஏனைய மக்கள் அவற்றைப் படித்து அறிந்து அதன் தன்மைகளைப் புரிந்துகொள்வதாயிருந்தால் அ…
-
- 1 reply
- 3.2k views
-
-
மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள் கணினி உலகில் மிக ஜாம்ப்வான்களாக உள்ள நிறுவனங்கள் இணைந்து "யூனிகோட் கன்சார்ட்டியம்" எனும் ஒருங்குறி (Unicode) அவையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகின்றன. கணினியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் இதில் இனை உறுப்பினர்களாக இருக்கின்றன. கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித…
-
- 2 replies
- 755 views
-
-
மொழி தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது. [1] இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, த…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒரு இனத்தின் அடையாளமே மொழிதான் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசினார். தருமபுரி தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமை நடத்திய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அவர் பேசியது: தமிழ்ச் சங்கங்கள் ஊருக்கு ஊர் ஏன் உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர். ஒரு இனத்தின் அடையாளமே மொழிதான். என்னதான் ஆங்கிலத்தில் பேசினாலும், ஆங்கிலேயர் போல் உடையணிந்து கொண்டாலும், வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாட்டின் குடியுரிமையே பெற்றிருந்தாலும், அவர்கள் சார்ந்த இனத்தின் பெயரால்தான் ஒருவர் அடையாளம் காணப்படுவார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர் என்பதால் ஆப்ரோ அமெரிக்கர் என்றுதான் அழைக்கின்றனர். அதுபோலதான் தெலுங்கு பேசுபவர்களை தெலு…
-
- 0 replies
- 904 views
-
-
சிறீரமண சர்மா என்பவர், தற்போது இருக்கும் தமிழ், கிரந்த எழுத்துக்களோடு பிற சமசுக்கிருத எழுத்துக்களையும் சேர்க்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே தமிழ் எழுத்தில் Ja Jaa Ju Juu எழுத்துக்கள் இருக்கின்றனவே என்று குழம்புகிறீர்களா?அந்தக் கிரந்த எழுத்துக்களை ஏற்கனவே யுனிகோடுவில் சேர்த்தாயிற்று. தற்போது சேர்க்கப்பட இருப்பவை இதுவரை எந்தத் தமிழனும் பார்த்துக் கூட இருக்காத பிற சமசுக்கிருத எழுத்துக்களாகும். யுனிகோடு சேர்த்தியம் (unicode consortium) வழியாக யாரும் அறியாமல் எல்லா சமசுக்கிருத எழுத்துக்களையும் தமிழோடு சேர்த்து விட்டு, அதனை "Extended Tamil" என்று ஆக்கிவிட்டால் தமிழர்களும், “ஆகா தமிழ் என்று இருந்தது. இப்போது Extended என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்…
-
- 2 replies
- 1.1k views
-
-
மலேசியத் தமிழர்களாகிய நாங்கள் தமிழ் செம்மொழி மீதிலான எங்கள் கோரிக்கையை இந்திய நடுவண் அரசு, தமிழக அரசு, மலேசியாவில் இந்தியத் தூதரகம், யுனெஸ்கோ ஆகிய அமைப்புகளுக்கு இதன் வழி முன் வைக்கிறோம். 1. தமிழ் மொழியின் தொன்மை 1,500 ஆண்டுகள் என்று அறிவித்திருக்கும் இந்திய நடுவண் அரசின் அறிவிப்பை மறுக்கின்றோம். 2. தமிழின் தொன்மை 3,000 ஆண்டுகளுக்கும் முந்தியது என இந்திய நடுவண் அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். 3. தமிழின் தொன்மை 1,500 ஆண்டுகள் என்ற இந்திய நடுவண் அரசின் கருத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். எமது கருத்தை உறுதிப்படுத்தும் சான்றுகள் கீழ்வருமாறு: 1. கி.மு. 1,200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆரிய வேதங்களில் தூய தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளன. 2. 3,000 ஆண…
-
- 1 reply
- 758 views
-
-
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்படும் ஆய்விதழ் தமிழியல் - Journal of Tamil Studies இல் 1972 முதல் வெளியான அத்தனை ஆய்வுக் கட்டுரைகளும், புத்தக மதிப்புரைகளும் சுமார் 9000 பக்கங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் நிலையில் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. http://www.ulakaththamizh.org/default.aspx என்ற பக்கத்தில் இதனைப் பார்க்கலாம். இதுவரை Journal of Tamil Studies இல் 76 இதழ்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் கடைசி 4 இதழ்கள் நீங்கலாக, அதாவது முதல் ( 001 - September 1972 ) இதழ் தொடக்கம் எழுபத்திரண்டாவது ( 072 - December 2007 ) வரையிலான இதழ்களில் இருந்து ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தையும் நீங்கள் தரவிறக்கம் செய்யலாம். 306 முதன்மைக் கட்டுரையாளர்களால் எழுத…
-
- 0 replies
- 1.6k views
-
-
வேலூர் - ஐப்பசி 05, 2010 விஐடி பல்கலைக்கழகம், தமிழ் மொழி அகடமி இணைந்து நடத்திய 13வது தேசிய மொழிகள் மாநாடு விஐடியில் நேற்று நடந்தது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: தூய தமிழில் பேசுபவர்களை காண முடிவதில்லை. ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசுவதற்கு கூச்சப்படும் நிலை மாற வேண்டும். விஐடியில் 25 மொழிகள் பேசும் மாணவ & மாணவிகள் உள்ளனர். 16 ஆயிரம் பேர் இங்கு படித்தாலும் தமிழ் மொழி பேசுபவர்கள் குறைவு. தமிழ் மொழி பேசாதவர்களுக்கு தமிழ் மொழியை கற்றுத்தரவும், தமிழ் மொழியியல் பட்டய சான்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேவைப்படும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியை கற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாட்டை தமிழ் மொழி அகடமி செய்யவேண்டும் என்றார். …
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழின் ஆங்கில மயம் Courtesy: தினக்குரல் - புரட்டாதி 29, 2010 தமிழ்ப் பத்திரிகைகளில் ஆங்கில சொற்களை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் உணர்வு ஏற்படுகின்றதா? அந்த மாதிரியான தினசரிகளை நீங்கள் அடிக்கடி நிராகரித்து கண்டிப்பதுண்டா? ஆங்கில வார்த்தைகள் கிரமமாக தமிழ்ப் பத்திரிகைகளில் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான உணர்வுகள் இப்போது அதிகரித்து வருகின்றன. "மற்றர்", "சஸ்பென்ட்", "கட்", "ரெடி", "நைட்", "பவர்", இச்சொற்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் (இந்தியாவில்) அதிகளவுக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வமற்ற உரையாடல்களில் காணப்படும் தமிழ்மொழியின் ஆங்கிலமயமாக்கலானது உத்தியோகபூர்வ தொடர்பாடலாக உருவாகி வந்திருக்கிறது. மாநில அரசாங்கமான…
-
- 0 replies
- 881 views
-
-
தஞ்சை கோட்டைக் கொத்தளச் சுவரில் 1000 ஆண்டு கால கற் சிலைகண்டுபிடிப்பு தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள பெரிய கோவில் [^] என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவிலின் கோட்டை கொத்தளச் சுவரில் மணிமகுடத்துடன் கூடிய ஒரு கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ராஜ ராஜசோழ மன்னனின் சிலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சிலையின் வயது 1000 ஆண்டுகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய மாபெரும் கோவில்தான் பிரகதீஸ்வரர் கோவில். இக்கோவில் கட்டி 1000 ஆண்டுகளாகிறது. இதையொட்டி தமிழக அரசு [^] தஞ்சையில் செப்டம்பர் 22ம் தேதி முதல் 5 நாட்களுக்கு பிரமாண்ட விழா எடுத்து கொண்டாடவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்காக பெரிய …
-
- 0 replies
- 709 views
-
-
(சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் எழுதியது இது. 2000 ஆண்டு நோர்வேயின் சமரச முயற்சியைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள நோர்வே நாட்டுத் தூதரகத்தின் முன்பு சமாதானத்திற்கு எதிராக சிங்களப் பிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது புத்தன் எங்கே! சிங்களப் பிக்குகள் எங்கே! என மனத்தில் ஏற்பட்ட கேள்வியைத் தொடர்ந்து எழுதிய ஒன்று இது. தற்போது ஈழத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் விடுதலைப் போரைச் சிதைத்திருந்தாலும் பெளத்தமும் சிங்களமும் அப்படியேதான் இருக்கின்றன.) கி.மு 260, மௌரியப் பேரரசின் மூன்றாவது அரசன் மாமன்னன் அசோகன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்தான். கலிங்க நாடு (தற்போதைய ஒரிசா மானிலம்) மிகப் பெரிய நிலப்பரப்பையும் படைபலத்தையும் கொண்ட நாடு கலிங்கத்தின் வெற்றி அசோகனின் வாழ்நாள் …
-
- 1 reply
- 1.6k views
-