வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
செயற்கை நுண்ணறிவில் முதலீடு; 9,000 ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்! தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) இந்த ஆண்டு 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டு நிறுவனத்தின் வேலை குறைப்புக்களின் அண்மைய அலையாகும். எந்தெந்த பிரிவுகள் மேற்கண்ட அறிவிப்பினால் பாதிக்கப்படும் என்பதை மைக்ரோசாப்ட் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால், அதன் எக்ஸ்பாக்ஸ் வீடியோ கேமிங் பிரிவு இதனால் பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் (AI) அதிக அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் AI மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்காக மிகப்பெரிய தரவு மையங்களில் $80 பில்லியன் (£68.6 பில்லியன்) செலவிடுகிறது. இந்த குறைப்பு…
-
- 0 replies
- 130 views
-
-
தனது ஊழியர் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானதை அடுத்து, தென் கொரியாவில் உள்ள தொழிற்சாலையை பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் மூடிவிட்டது. தென் கொரியாவில் கொரானாவின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் டேகு நகருக்கு அருகில் உள்ள உல்சானில் ஹுண்டாய் நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி ஆலை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 14 லட்சம் கார்களை ஹுண்டாய் தயாரிக்கிறது. மொத்தம் 34 ஆயிரம் பேர் பணியாற்றும் இந்த ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து ஹுண்டாயின் பங்குகள் 5 சதவிகித வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியாவில் மொத்தம் 2 ஆயிரத்து 22 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/102090/ஹுண்டாய்-ஆலை-மூடல்..!
-
- 0 replies
- 267 views
-
-
-
- 0 replies
- 397 views
- 1 follower
-
-
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர்; தங்கத்தின் விலை புதிய சாதனை! அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் தாக்கம் குறித்து முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளதால், தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, புதன்கிழமை அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,357.40 (£2,540) அமெரிக்க டொலர்கள் என்ற விலையை எட்டியது. பின்னர் அதன் விலை உச்சத்திலிருந்து சரிந்து. வியாழக்கிழமை (17) 3,322 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலையானது மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைகள் மெதுவான வளர்ச்சி, அதிக விலைகள் மற்றும் வேலையின்மை அபாயங்களைக் குறிக்கும் என்று அமெரிக்க மத்…
-
- 0 replies
- 197 views
-
-
உலகப் பொருளாதாரம் 2020: இன்னொரு நெருக்கடியை நோக்கி... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜனவரி 23 சில பழக்க வழக்கங்கள், முறைமைகள் போன்றவற்றில் இருந்து மாற்றமடையாமல், மீட்சிக்கு வழி இல்லை. இலகுவில் மாற்றங்களுக்கு உள்ளாக, மனித மனம் தயாராக இருப்பதில்லை. இதன் பாதகமான விளைவுகள் எல்லாவற்றையும் அது, தொடர்ந்து அனுபவித்து வருகிறது. வரலாறும், எமக்குத் தவறாது பாடங்களை இடித்துரைத்தபடியே இருக்கிறது. நாமோ அவற்றைக் கேட்காது, புறந்தள்ளிய படியே, புதிய திசையில் பயணிப்பதானது, சொல்லியபடி புதைகுழியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதற்கு ஒப்பானதாகும். குழியில் விழுவதும், சகதியில் சிக்கி உடலெங்கும் ஒட்டிய சகதியையும் தூக்கி அள்ளிக் கொண்டு நடந்து, திரும்பவும் படுகுழியில் விழுகிறோம். …
-
- 0 replies
- 497 views
-
-
3 மாதங்களின் பின் ASPI இன்று 5000 புள்ளிகளை கடந்தது கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 3 மாதங்களுக்கு பின்னர் 5000 புள்ளிகளை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து குறைவடைந்து வந்திருந்தது. இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 3.34% வீதமாக இன்று (22) பதிவாகியுள்ளது. மேலும் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 5061.50 புள்ளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=130049
-
- 0 replies
- 538 views
-
-
இலங்கையின் பொருளாதார நிலைமை: அடுத்து வரும் மூன்று மாதங்கள் முக்கியமானவை ஜூன் 5, 2022 -கலாநிதி எம்.கணேசமூர்த்தி பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பலவீனமாகித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. விலையேற்றங்கள் கட்டுக்கடங்காமல் செல்கின்றன. ஏறிய விலையிலும் பொருள்களைக் கொள்வனவு செய்யமுடியாமல் மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை. எரிபொருள் வரிசைகளும் எரிவாயு வரிசைகளும் நாட்டின் நாலாபாகங்களிலும் தொடர்கின்றன. பொதுமக்கள் தரப்பிலிருந்து தவிர்க்க முடியாதவாறு எழுப்பப்படும் வினா எப்போது இந்த வரிசைகள் முடிவுக்குவரும்; சாதாரண வாழ்க்கையை மக்கள் வாழக்கூடிய சூழல் உருவாகும் என்பதாகும். ஆனால் இதற்குரிய சரியான பதிலை எவராலும்…
-
- 0 replies
- 254 views
-
-
10ஆவது யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நிறைவு Editorial / 2019 ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:05 Comments - 0 வடக்குக்கான நுழைவாயிலாக, யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, தொடர்ச்சியாக 10ஆவது வருடமாகவும் ஜனவரி 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. தொழில் வழிகாட்டல் சேவைகள், விசேட உணவு வகைகள், குடிபானங்கள், வீட்டுக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், கட்டட நிர்மாண பொருட்கள், சாதனங்கள், அழகுச் சாதன, அழகுக்கலை சேவைகள், சிறுவர்களுக்கான விசேட நிகழ்வுகள், கல்வி ஆலோசனைகள், மருத்துவப் பரிசோதனைகள் என்பன இக்கண்காட்சியில் இடம்பெற்றன. பல்வேறு உற்பத்திகளை கொண்டிருந்த இந்நிகழ்வு, வட பகுதிக்கு தமது வ…
-
- 0 replies
- 951 views
-
-
மகாநதி திரைப்படத்தின் இறுதிக் கட்டத்தில் கதாநாயகனும் வில்லனும் உயர் மாடி ஒன்றில்மோதிய போது இருவரின் கைகளும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும். வில்லன் சண்டையில் வில்லன் மொட்டை மாடியில் இருந்து சறுக்கி விழுந்து அந்தச் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருப்பான். அந்த இடத்திற்கு காவற்துறையினர் வந்து கொண்டிருப்பர். அவர்கள் வந்து வில்லைனைக் காப்பாற்ற முன்னர் அவனைக் கொல்ல கதாநாயகன் தன் கையை வெட்டி வில்லனை உயரத்தில் இருந்து விழச் செய்து கொல்வார். உலகமயமாதல் அதிகரித்த போது வல்லரசு நாடுகள்கூட ஒன்றின் மீது ஒன்று அளவிற்கு அதிகமாகத் தங்கியிருப்பது வேண்டத் தகாத ஒன்றாகி விட்டது. இதன் ஆபத்து கொரோனாநச்சுக்கிருமி உலகப் போக்குவரத்தை துண்டித்த போது ஏற்பட்ட பொருளாதார அதிர்வால் உணரப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
சீனா: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உலகின் மிகப்பெரிய சந்தையை விட்டு வெளியேறுவது ஏன்? - ஐந்து காரணங்கள் அதாஹோல்பா அமேரீஸ் பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவின் 'விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு' அங்கு செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஒரு முக்கிய காரணம். இந்த விரைவான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக சீனா, கடந்த 40 ஆண்டுகளில் தனது 85 கோடி குடிமக்களை வறுமைக் கோட்டுக்கு மேலே உயர்த்தியுள்ளது. 1976 இல் மாவோ சேதுங்கின் மரணத்திற்குப் பிறகு சீனா தனது கொள்கையை சிறிது மாற்றி, பழமைவாத கம்யூனிசத்திற்கு பதிலாக பொருளாதார வளர்ச்சிக்கான புத…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
காணாமல் போன கிரிப்டோ ராணி: டாக்டர் ருஜா இக்னடோவா தான் உலகில் அதிக கிரிப்டோகரன்சியை வைத்திருக்கிறாரா? 6 மணி நேரங்களுக்கு முன்னர் கிரிப்டோ சந்தைகள் அசாதாரணமான சூழலில் இருப்பதால், பிட்காயின் முதலீட்டாளரான, "காணாமல் போன கிரிப்டோராணி" என்றழைக்கப்படும் டாக்டர் ருஜா இக்னாடோவாவும் நஷ்டத்தைச் சந்தித்திருக்கலாம் என்று பிபிசியால் பார்க்கப்பட்ட கோப்புகள் தெரிவிக்கின்றன. 2017-ஆம் ஆண்டில் அவருடைய கிரிப்டோகரன்சியான ஒன்காயின் அதன் உச்சத்தில் இருந்தநேரத்தில் பில்லியன்கணக்கில் முதலீடுகளை ஈர்த்து மோசடி செய்துவிட்டு அவர் காணாமல் போனார். இதன்மூலம், அமெரிக்காவில் மோசடி மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளோடு மத்திய புலனாய்வுப் பிரி…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
கொரோனா காலமும் வருமானத்துக்கு மீறிய செலவீனங்களும் அனுதினன் சுதந்திரநாதன் என்னதான், செலவுகளைக் குறைத்து, வருமானங்களைச் சேமித்தாலும், கையில் பணப்பற்றாக்குறையே உள்ளது என்பதை, யாரேனும் ஒருவர் கூறுவதையே நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம். ஒவ்வொரு நாளும், ஏதாவது ஒரு வகையில் செலவு அதிகரிக்க, வரவுகளை எதிர்பார்த்து விழிபிதுங்கி நிற்கும் சாமானி நிலையையே, பெரும்பாலான குடும்பங்கள அனுபவித்து வருகின்றன. அதிலும் இந்தக் கொரோனா நெருக்கடி, அதிகளவான அழுத்தத்தைத் கொடுத்து வருகின்றது. வருமானம் அப்படியே இருக்க அல்லது குறைந்துச் செல்ல, செலவீனங்க மாத்திரம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என்றே கூறலாம். அப்படியாயின், நாம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமலேயே கடந்துபோய் கொண்டு இரு…
-
- 0 replies
- 491 views
-
-
நடுத்தர வர்க்கத்தில் உள்ள மக்கள் எவ்வளவு உழைத்தாலும் மாத இறுதியில் பணம் இல்லாத நிலை பல குடும்பங்களிலும் உள்ளது, இதற்கு, திட்டமிடல் முக்கியமானதாக இருக்குமா?
-
- 0 replies
- 253 views
-
-
ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் ஆலோசனை: செலவுகளைச் சமாளிப்பது எப்படி? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சேமிப்பு கணக்கு செலவுகளை சமாளிப்பது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் டிப்ஸ் இதோ: ஸ்டாண்ஃபோர்டில் 1960களில் ஒரு பரிசோதனை செய்தார்கள். அதற்குப் பெயர் மார்ஷ்மெலோ சோதனை எனப் பெயர். மார்ஷ்மெலோ என்பது அமெரிக்காவில் ஒரு மிட்டாய். மிகச் சிறிய வயது குழந்தைகளுக்கு முன்பாக அந்த இனிப்பை வைத்தார்கள். அந்த அறையில் யாருமே இருக்க மாட்டார்கள். ஐந்து நிமிடம் அ…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
முதலில் பாதீடு என்றால் என்ன : தமிழ் இலக்கணத்தில், பாதீடு என்பது வெட்சி வீரர்கள் கைப்பற்றி கொன்டுவந்து ஊரின் நடுவே (அம்பலத்தே) செலுத்திய பகைவருடைய பசுக் கூட்டங்களை, அவர்களுடைய படைத்தலைவன் அவரவர் ஆற்றிய தொழிலின் தகுதிக்கேற்ப அவற்றைப் பிரித்து கொடுத்தல் பாதீடு என்பதாகும். அதாவது வரவு செலவு திட்டம். இன்றைய செய்திகளில் சீன அமெரிக்க வர்த்தக, ஏற்றுமதி - இறக்குமதியில் உள்ள சமநிலை உலக பொருளாதாரத்தை ஒரு நிலையற்ற நிலையில் வைத்து வருகின்றது. ========= இலங்கையின், 2018ஆம் ஆண்டுக்கான வர்த்தகப் பற்றாக்குறையானது = 10.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ========= கடந்த ஆண்டில் உழைக்கப்பட்ட இலங்கையரின் வெளிநாட்டு வருமானமானம் = 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலாத்துறை மூ…
-
- 0 replies
- 2.8k views
-
-
முதலீட்டுக்கு மிகப் பொருத்தமான நாடாக இலங்கையை மாற்றுவதே தனது இலக்காகுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். சுற்றாடலை பாதுகாத்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான பொறிமுறையொன்றுக்கு சட்ட ரீதியான பின்புலத்தை உருவாக்க வேண்டுமெனவும் சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், ஒழுங்குவிதிகளில் நடைமுறைக்கேற்றவாறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். சுற்றாடலை பாதுகாப்பதோடு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய முறைமைகள…
-
- 0 replies
- 291 views
-
-
வரிக் கொள்கையுடன் அரசினால் ஏற்படுத்தப்பட வேண்டிய ஏனைய சீராக்கங்கள் ச.சேகர் – business.tamilmirror@gmail.com நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள பொருளாதாரத்தை சீராக்கும் வகையில், நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய வரிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வரிக் குறைப்புகளுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய வருமான வீதத்துக்கு நிகரான அரச வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நாடு திவாலாகியுள்ளதாக அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, வரி வருமான அதிகரிப்பு தவிர்க்கப்படமுடியாத விடயமாக மாறியிருந்தது. அத்துடன், சர…
-
- 0 replies
- 276 views
-
-
இன்றைய அவசர உலகில் பொதுவாக உடல் நலத்தை பேண பலரும் உடல்பயிற்சி செய்வது உண்டு. மேலை நாடுகளில் பல வகையான 'ஜிம்'முகள் உள்ளன. நமது தாயகத்தில் இதற்கான வசதிகள் குறைவு, ஆனால் பாடசாலைகளில், இளையவர்கள் மற்றும் யாவரும் பயன்பட கூடிய சில எளிய முறைகளை பாடசாலைகள், வாசிகசாலைகளை அண்டிய பகுதிகளில் அமைக்கலாம். இந்த காணொளியில் அவ்வாறான ஒரு முறையை பாலா ஊடாக பார்க்கலாம். எவ்வாறான வியாபார திட்டங்களை நாம் ஆலோசிக்கவேண்டும் அவ்வாறான ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்க விரும்பினால் ... அது பற்றிய ஒரு காணொளி
-
- 0 replies
- 348 views
-
-
"தோமஸ் குக்கின்" அனைத்துக் கிளைகளையும் ஹேய்ஸ் ட்ராவல்ஸ் திறக்கவுள்ளது தோமஸ் குக் நிறுவனத்தின் 555 கிளைகளும் ஹேய்ஸ் ட்ராவல் நிறுவனத்தால் வாங்கப்படவுள்ளன. அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் இருந்து தோமஸ் குக்கின் அனைத்துக் கிளைகளும் ஹேய்ஸ் ட்ராவல் நிறுவனத்தால் வாங்கப்படவுள்ளன. கடந்த மாதம் தோமஸ் குக் நிறுவனம் நிதிநிலைமையால் இயங்கமுடியாமல் மூடப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய 2,500 பணியாளர்களும் வேலையை இழந்திருந்தனர். சன்டர்லான்டைத் தளமாகக் கொண்ட ஹேய்ஸ் ட்ராவல் நிறுவனத்தின் நிர்வாகத்தில் அனைத்துக் கிளைகளும் உடனடியாகத் திறக்கப்படும் என்று அதன் தலைவர் ஐரீன் ஹேய்ஸ் (Irene Hays) தெரிவித்துள்ளார். ஏற்கனவே தோமஸ் குக் நிறுவனத்தின் 600 பணியாளர்களுக்கு…
-
- 0 replies
- 328 views
-
-
சமீப நாட்களில் வெங்காய விலை அனைவரையும் கவலைக்குள்ளாக்கிய நிலையில், விவசாயி ஒருவரை கோடீஸ்வரராக்கியுள்ளது அதே வெங்காயம் என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி. 42 வயதாகும் அந்த விவசாயி கடன் வாங்கி தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். 15லட்சம் முதலீடு செய்து ஏதோ 5-10 லட்சம் லாபம் பார்த்தால் பெரிய விஷயம் என்று முடிவு செய்து வெங்காயத்தை பயிர் செய்த அந்த விவசாயிக்கு அடித்தது ஜாக்பாட். அவர் நிலத்தில் விளைந்துள்ள 240 டன் வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. பெங்களூருவில் இருந்து 200கிமீ தொலைவில் உள்ள சித்ரதுர்கா என்ற அந்த கிராமத்தில் வசிக்கும் மல்லிகார்ஜுனா என்ற அந்த விவசாயியை தற்போது வியப்புடன் பார்த்து வருகின்றனர் அந்த கிராம மக்கள். கடந்த காலங்க…
-
- 0 replies
- 278 views
-
-
உங்களுடைய இறுதி மாதச் சம்பளம் என்னவானது? அனுதினன் சுதந்திரநாதன் 2020ஆம் ஆண்டு எனும் புதியவோர் ஆண்டு ஆரம்பித்திருக்கிறது. புதியவோர் ஆண்டில், அனைத்தையும் புதிதாகத் தொடங்கவும் செயற்படுத்தவும் அனைவருமே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், மாதாந்தம் உங்களுடைய செயற்பாடுகளைக் கொண்டு நடத்த மூலாதாரமாக இருக்கக்கூடிய உங்களுடைய வருமானத்துக்கு/ மாதச் சம்பளத்துக்கு என்ன ஆகிறது என்பதையும் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. காரணம் எல்லாவற்றையும் நீங்கள் திட்டமிடுவதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்திடுவதற்கும் இந்த மாதாந்த வருமானம் அவசியமானது. எங்களில் பெரும்பாலானோர் எப்போதுமே மாதாந்த வருமானம் போதவில்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களாகவே இருக்கிறார்…
-
- 0 replies
- 305 views
-
-
ஆன்லைன் பிசினஸ்தான் எதிர்காலம்!’- வெற்றி ரகசியம் சொல்லும் `BigBasket’ ஹரிமேனன் BigBasket: கோவிட்-19 சிக்கல் தொடங்கியபோது ஆர்டர்களின் எண்ணிக்கை சரிந்தது. பிறகு, படிப்படியாக உயர்ந்து தினமும் 3.5 லட்சம் அளவுக்கு ஆர்டர்கள் குவிந்தன. நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்குத் தேவையான நிதியைச் திரட்டுவது அவ்வப்போது நடந்துவருவதுதான். அந்த வகையில் தனது நிறுவனத்துக்குத் தேவையான நிதியைத் திரட்ட முடிவெடுத்திருந்தது பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிக்பாஸ்கெட் நிறுவனம். ஆனால், கோவிட்-19 நோய்த் தொற்று வந்தபிறகு, நிதி திரட்டும் முடிவைக் கைவிட்டு நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டே நடத்த முடிவெடுத்திருக்கிறது பிக்பாஸ்கெட் நிறுவனம். …
-
- 0 replies
- 347 views
-
-
இக்கட்டான பொருளாதாரத்திலும் நம்பிக்கை தரும் நீண்டகால முதலீடு அனுதினன் சுதந்திரநாதன் இலங்கை போன்ற நாடொன்றில் தற்போதைய நிலையில் பொருளாதார ரீதியான உறுதிப்பாடற்ற நிலையொன்றே காணப்படுகின்றது. இந்த நிலையில், வருமானம் மூலமாக வருகின்ற பணத்தில், எத்தகைய சேமிப்பை மேற்கொள்ள வேண்டுமென்கிற குழப்பம், நம்மிடையே நீடிக்கிறது. இதன்காரணமாக, வருமானம் உழைக்கக் கூடிய மேலதிக வழிகளை நாடாமல், பணத்தை சாதாரண சேமிப்பு, நிலையான வைப்புகளில் வைத்திருக்கின்ற நிலை தொடர்கின்றது. சேமிப்புக்கு மேலான வருமானத்தை மிகக்குறைந்த இடநேர்வுடன் நமக்குத் தருகின்ற பாதுகாப்பான முதலீடுகளும் நம்மிடையே உள்ளன. ஆனால், அது தொடர்பில் போதுமான அறிவூட்டல்கள் இல்லாமையின் காரணமாக, முதலீடுகளை இழக்கக்கூடிய அதிகூடிய இடநேர…
-
- 0 replies
- 266 views
-
-
திட்டம் போட்டு செயல்படும் சீனா: இந்தியாவில் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு உயர்வு இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் சீனாவின் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது என குளோபல் டேட்டா கூறி உள்ளது. பதிவு: ஜூன் 27, 2020 14:53 PM புதுடெல்லி இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் சீனாவின் முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்களில் சீனாவின் முதலீடு இரண்டாயிரத்து 881 கோடி ரூபாயாக இருந்தது. இதையடுத்து ஆண்டுக்கு ஆண்டு சீன முதலீடு அதிகரித்துக்கொண்டே வந்தது. 2019ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் 34 ஆயிரத்து 788 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குளோபல் ட…
-
- 0 replies
- 322 views
-
-
சீனாவுடனான வணிக ஒப்பந்தங்கள் கறைபட்டுள்ளனவா? சீனாவிடமிருந்து கூடிய வட்டிவீதத்துக்கு இலங்கை கடன்பெற்றுள்ளதாகவும் பல்வோறான திட்டங்களுக்காக இலங்கையில் பல பிரதேசங்களையும் பெறுமதிமிக்க இடங்களையும் குத்தகைக்க விட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாகவே முன்வைக்கப்படுகின்றன. கொழும்பு- துறைமுக நகருக்குச் செல்லவேண்டுமாயின் கடவுச்சீட்டை பெற்றுச்செல்லவேண்டும். இலங்கையில் சீனா கொலனி என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கையில் சீனாவின் எவ்வாறான நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளன. அதன்பின்புலன் என்ன? அதனூடாக அரசியல் செல்வாக்கு எவ்வாறு இருக்கிறது. உள்ளிட்டவை தொடர்பில் தகவல்கள் கசிந்துள்ளன. சீனாவின் மீதான இலங்கையின் ஆர்வம், தெற்காச…
-
- 0 replies
- 451 views
-