வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
622 topics in this forum
-
-
வடக்கு, கிழக்கு பிராந்தியத்திலிருந்து சுமார் 1.25 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான நுண்நிதியியல் கடனாக பெற்றுக் கொண்ட பெண்கள், அதைத் தொகையை மீளச் செலுத்தாத இயலாத நிலையில், அரசாங்கம் அந்தத் தொகையை பொறுப்பேற்றுள்ளது. வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 45,135 பெண்களின் இந்தக் கடன் சுமையை அரசாங்கம் இவ்வாறு பொறுப்பேற்றுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நுண் நிதியியலுடன் தொடர்புடைய கடன் சுமை பாரிய சவாலாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களினாலும், இந்த பிரச்சினைக்கு இவ்வாறான தீர்வு வழங்கப்பட்டிருந்தது, குறிப்பாக தேர்தல் காலம் நெருங்கி வரும் போது, இவ்வாறானச் செயற்பாடுகளை …
-
- 0 replies
- 455 views
-
-
நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துதல்: ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பொருள்களைத் தயாரிப்பது தீமையே தருகிறது என்பது சுற்றுச் சூழல் வல்லுநர்களின் கருத்தாகும். எனவே இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி அடைப்பான், துணிப்பை போன்றவைகளை நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக்கின் தீமைகள் பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு) பிளாஸ்டி…
-
- 22 replies
- 5.3k views
-
-
உலக முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் நெட்ஃபிலிக்ஸின் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் 16 மில்லியன் பேர் தங்கள் கணக்கை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இருப்பினும் உலகம் முழுவதும் நடைபெறவிருந்த தங்களின் அனைத்து தயாரிப்புகளையும் நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் மேலும் 7.5 மில்லியன் கணக்குகள் தொடங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் வெளியிடவிருந்த நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது என்றும் ஆனால் சில நிகழ்ச்சிகள் தாமதமாவதால் வருங்காலத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அது …
-
- 0 replies
- 336 views
-
-
நெருக்கடி கால கொள்வனவு, நாடளாவிய முடக்கங்கள் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள சர்வதேச எச்சரிக்கை! அதிகரித்துவரும் ,நெருக்கடி கால கொள்வனவு மற்றும் நாடளாவிய முடக்கங்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டினை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்திடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின், உணவு மற்றும் விவசாய அமையத்தால், குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதான தானியங்கள் மற்றும் என்னை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் தற்போது விநியோகத்துக்கு தவையான சேமிப்புகள் இருந்தாலும், எதிர்காலத்தில் இந்நிலையினை தடுக்க முடியாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. இதனடிப்படைய…
-
- 0 replies
- 222 views
-
-
தேசிய பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ள காலத்தில் வடமாகாணத்தின் பொருளாதாரம் எவ்வாறான நிலையில் இருக்கிறது? நிச்சயமாக வடமாகாணத்தின் நிதித்துறை, சேவைத்துறை மற்றும் கைத்தொழில்துறை போன்றவற்றில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டு மாகாண மொத்த உற்பத்தியிலும் வீழ்ச்சி வரும். இங்கு மக்களின் வருமானமும் சரி வாழ்வாதாரமும் சரி குறிப்பாக நாள்கூலி வேலை செய்வோரது நிலை பெரும் பாதிப்பிற்குட்படும். வடமாகாணத்தின் சமூகப் பொருளாதாரத்தை எடுத்துப்பார்க்கும் போது தற்போது வந்திருக்கும் நெருக்கடிக்கு மேலாக நீண்டகால யுத்தம் அதன்பின் மீள்கட்டமைப்பின் தோல்விகள் மக்களை நலிவடைய செய்துள்ளன. அந்தவகையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி அவர்களை இரட்டிப்பான வகையில் பாதிக்கிறது. கிராமப்புற பொ…
-
- 0 replies
- 345 views
-
-
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்றுள்ள ஒரு பாரம்பரிய கைத்தொழிலான உள்நாட்டு பால் உற்பத்தியின் ஆற்றல் மூலமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சிறுவர்களின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு அது உதவி வருகின்றமை நாம் அனைவரும் அறிந்துள்ள ஒரு விடயமாகும். உள்நாட்டு பால் உற்பத்தி கைத்தொழில் துறையை முன்னெடுத்துச் செல்வதன் நடுநாயகமாக இலங்கையில் உள்ள சிறு அளவிலான பாற்பண்ணையாளர்கள் காணப்படுகின்றனர். அதாவது அனேகமாக குடும்பங்களால் நிர்வகிக்கப்படுகின்ற சிறு பாற்பண்ணைகள். எனினும், இலங்கையின் பால் உற்பத்தி கைத்தொழில் இன்னும் வளர்ந்து வருகின்ற ஒரு துறையாகக் காணப்படுவதுடன், கேள்வியை ஈடுசெய்யும் அளவிற்கு வழங்கல் இன்னும் முழுமையான அளவில் கிடைப்பதில்லை. பால் உற்பத்தி மற்றும…
-
- 0 replies
- 1.4k views
-
-
பங்குச் சந்தையில் என்ன இருக்கிறது? அனுதினன் சுதந்திரநாதன் / 2019 டிசெம்பர் 23 கடந்த சில வருடங்களாக, பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ளத் தொய்வும் உறுதியில்லாத அரசியல் கொள்கையும் முதலீட்டாளர்களைக் குழப்பத்துக்குட்படுத்தி தொடர்ச்சியாக முதலீடு செய்வதில் ஒரு பின்னடைவையே ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும், பங்குசந்தையில் எல்லா பங்குகளுமே நாம் நினைப்பதுபோல குறைவானப் பெறுபேற்றை வெளிப்படுத்துவன அல்ல. சராசரியாகப் பார்க்கும்போது, பங்குச் சந்தையில் பங்குகளின் பெறுபேறு எதிர்பார்த்த அளவுக்கு குறைவாகயிருந்தாலும் முதலீட்டுக்கு இலாபத்தைத் தரக்கூடியப் பங்குகளும் அவைசார் பங்குச் சந்தைப் பரிமாற்றங்களும் நிகழந்துகொண்டே இருக்கின்றன. எனவே, பங்கு முதலீட்டு விடயங்கள் தொடர்பில் அடிப்ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை மற்றும் உறையுள் ஆகியவற்றினை தங்குதடையின்றி வாழ்நாள்முழுவதும் எவரொருவர் பெறுகின்றாரோ அவர் நிச்சயமாக மிகுந்த பாக்கியசாளியாவார். சிலருக்கு எல்லாம் அமைந்துவிடுவதனை நாம் பார்த்திருக்கின்றோம். உண்மையிலேயே அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். சிலரோ வாழ்க்கையின் ஆரம்பத்தில் மிகவும் ஏழ்மையாகவும் பின்பு மிகுந்த செல்வந்தராகவும் வாழ்வதைப் பார்த்திருக்கின்றோம். வேறுசிலர் வசதியுடன் இருந்து பிற்காலத்தில் வாழ்க்கையில் ஒருவேளை உணவிற்காகக் கஷ்டப்பட்டுத் துன்பப்படுவதையும் நாம் பார்த்திருப்போம். இதற்கு மிகமுக்கிய காரணமாக அமைவது திட்டமில்லாத மற்றும் வருமானத்து…
-
- 1 reply
- 596 views
-
-
மும்பை : உலகளவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், பங்குச்சந்தைகளை நிலை குலைய செய்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், வர்த்தகம் நிறுத்திவைக்கப்பட்டது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுக்க பல நாடுகளில் பரவி வருகிறது. பல உயிர்களை பழிவாங்கிய கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகவும், ரூபாயின் மதிப்பு சரிவு, பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்வது, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இன்றைய (மார்ச் 13) வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தைய…
-
- 0 replies
- 204 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் சரிவு ஏற்பட்டதுடன், பங்குச்சந்தைகள் அதளபாதாளத்துக்கு சென்று விட்டன. உலகமகா கோடீஸ்வரர்களின் 32 லட்சம் கோடி பணம் கையை விட்டு போய் விட்டது. கடந்த வாரம் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ெகாரோனா வைரஸ் காரணமாக பல தொழில்கள் முடங்கின; அதனால், பங்குச்சந்தைகளும் மதிப்பை இழந்து சரிந்தன. பல ஆயிரம் புள்ளிகள் சரிந்து அதளபாதாளத்துக்கு சென்று விட்டன. முதலீடு செய்திருந்த சாதாரண முதலீட்டாளர் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் அனைவருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. சீனாவில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதி, பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் இடியாக அமைந்துள்ளது. உலகில் முன்னணி…
-
- 3 replies
- 416 views
-
-
பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்திற்கு கனடா ஒப்புதல், அவுஸ்ரேலியா இறுதி கட்ட ஆலோசனை! ஜப்பான் தலைமையிலான ஒரு பரந்த பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் ஐந்தாவது நாடாக கனடா இணைந்து கொண்டுள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உறுதிப்படுத்தல் கடிதம் ஒன்றை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் நேற்று (சனிக்கிழமை) நியூசிலாந்திற்கு அனுப்பியுள்ளது. பசிபிக் வலயத்திற்கு அப்பால் கூட்டுப் பங்காண்மை கொண்ட 11 நாடுகள் விரிவான மற்றும் முற்போக்கு ஒப்பந்தத்திற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வியாழனன்று சட்டத்துறையினர் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிய பின்னர் கனடா அதன் சட்டப்பூர்வ செயல்முறையை வார இறுதிக்குள் நிறைவு செய்துள்ளது. பசுபிக் வர்த்தக ஒப்பந…
-
- 0 replies
- 319 views
-
-
பசுஞ்சாண விறகு தயாரித்து லாபம் ஈட்டலாம்- அருமையான தொழில்வாய்ப்பு லாபகரமான சுயத்தொழிலைத் தொடங்கி வெற்றிரகமாக நடத்துவது என்பது அனைவருடைய விருப்பமாக இருக்கும். அதேநேரத்தில் குறைந்த முதலீட்டில், நல்ல லாபம் ஈட்டும் தொழிலைத் தேர்வு செய்வது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். இத்தகைய சிந்தனையில் இருப்பவர்களா நீங்கள்? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். கிராமப்புற மக்களுக்கு, மிகச் சுலபமானதாகக் கருதப்படும் இந்த தொழில் தொடங்க, குறைந்த முதலீடு போதும். முதல் மாதத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்ட முடியும், ஆறு மாதங்கள் கடந்துவிட்டால், மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதி…
-
- 2 replies
- 1.1k views
-
-
பட்டு மற்றும் பாதை திட்டத்திற்கு போட்டியாக பைடன் முன்னெடுக்கும் 'புளூ டொட் நெட்வேர்க்' அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கங்களுடன் இணைந்து, சீனாவின் பட்டிய மற்றும் பாதை முன்முயற்சிக்கு மாற்றாக வளர்ந்து வரும் சந்தைகளுக்கு வாய்ப்பினை வழங்குமொரு உள்கட்டமைப்பு முயற்சியை ஏற்படுத்தி வருகின்றது. நீண்ட கால செயலற்ற நிலையில் இருந்ததும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரெம்பின் நிர்வாகத்தின் போது முதன்முதலாக அறிவிக்கப்பட்டதுமான 'புளூ டொட் நெட்வேர்க்கானது' பாரிஸில் தனது பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளை கடந்த திங்களன்று ஆரம்பித்திருந்தது. இந்த கூட்டத்தின்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக வொஷிங்டன் மற்றும் கான்பெர்ராவின் நிதி …
-
- 0 replies
- 533 views
-
-
Published By: DIGITAL DESK 2 29 APR, 2025 | 05:56 PM (டேனியல் மாக்ரட் மேரி) ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பணம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனால், கட்டுப்பாடின்றி அதிகமான பணம் உருவாக்கப்பட்டால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனை "பண அச்சிடல்" (Money Printing) என அழைக்கலாம். இது சில நேரங்களில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும். பணம் அச்சிடல் என்றால் என்ன? அதாவது, பண அச்சிடல் என்பது, ஒரு நாட்டின் மத்திய வங்கி புதிய பணத்தை உருவாக்கி அரசுக்கு அல்லது பொருளாதாரத்துக்கு வழங்கும் செயலாகும். பொதுவாக அரசு திறைசேரியில் பணம் குறையும்போது, அரசின் செலவுகளை நிரப்ப மத்திய வங்கியிடம் பணம் பெறும். மத்திய வங்கி, புது பணத்தை அச்சிட்டு அல்லது வேறு முறையில் பணத்தை கணக்கில் சேர…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
ராபர்ட் கியோஸாகி ஒரு அமெரிக்கர். இவரின் மொத்த சொத்து 80 அமெரிக்க மில்லயன்கள். இவரின் தந்தை படிப்பில் உழைப்பில் வெற்றி பெற்றவரராக இருந்தாலும், பணத்தை முறைப்படி நிர்வகிக்க தெரியாத காரணத்தால் வறுமையில் இறந்தார். ராபர்ட் கியோஸாகியின் நண்பரின் தந்தை எவ்வாறு நீ செல்வந்தராக வரலாம் என வழி நடத்தினார். சொந்த தந்தை படி, உழை என்கிறார். நண்பரின் தந்தை எவ்வாறு உனக்காக மற்றையவர்கள் உழைக்கும் வழிகளை கூறினார். ஆங்கிலத்தில் 'பசிவ் இன்கம்', அதாவது நீங்கள் தூங்கும் பொழுதும் உங்களுக்கான வருமானம் வந்த வண்ணம் இருக்கும். சொந்த தந்தை எங்களால் அதை வாங்க முடியாது என்கிறார். நண்பரின் தந்தை எவ்வாறு அதை நாங்கள் வாங்க முடியும் என திட்டம் வகுத்தார். பொதுவாக நாங்கள் …
-
- 1 reply
- 889 views
-
-
பணத்தின் உளவியல்: குறைந்த வருமானம் பெறுவோரை கோடீஸ்வரர்களாக மாற்றும் உத்தி எது? - நிபுணரின் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஐவிபி கார்த்திகேயா பதவி, பிபிசிக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனிநபர் நிதி சார்ந்த புத்தகங்கள் பெரும்பாலும் முதலீட்டுக் கொள்கைகள் அல்லது பங்குச் சந்தை நிலவரங்களை எவ்வாறு அளவிடுவது என்பதில் கவனம் செலுத்துகின்றன. வேறு சில புத்தகங்கள், பிரபல முதலீட்டாளர்கள் சிலரின் அனுபவங்களை அவர்கள் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பணம் அல்லது செல்வத்துடன் மனிதனின் மனநிலையின் தொடர்பை மிகச் சில படைப்புகளே விளக்குகின்றன. இ…
-
- 0 replies
- 594 views
- 1 follower
-
-
பணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி! பணவீக்கத்தின் முக்கிய விளைவாக சீனாவின் நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ), செப்டம்பர் மாதம் ஆண்டுக்கு 2.5 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது ஓகஸ்ட் மாதத்தில் 2.3 சதவீதமாக இருந்ததாக தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தொழிற்சாலை வாசலில் பொருட்களின் பெறுமதியை அளவீட செய்யும் சீனாவின் தயாரிப்பாளர் விலை குறியீட்டெண் (பிபிஐ), செப்டம்பர் மாதம் ஆண்டுக்கு 3.6 சதவீதம் உயர்வடைந்துள்ளது. ஆனாலும் முந்தைய மாதத்தை விடவும் 0.5 சதவீத புள்ளிகள்; குறைவடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. மேலும், காய்கறிகள், பழங்கள், மற்றும் முட்டை, பன்றி இறைச்சி விலைகள் 2.4 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதுடன் உண…
-
- 0 replies
- 543 views
-
-
பொருளாதாரத்தில் பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும். பணவீக்க விகிதங்களை விலைவாசி உயரும் அளவு அதன் வேகம் பொருத்து பிரிக்கும்பொழுது தவழும் பணவீக்கம் இந்த நிலையில் விலைவாசியானது மெதுவாக உயர்ந்துகொண்டுருக்கும் இதை பல பொருளாதார நிபுணர்கள் வரவேற்கிறார்கள். இது பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்கிறார்கள் இதிலுள்ள சிறிய விலைவாசி உயர்வு பொருளாதாரத்தை தேக்க நிலையிலிருந்து மீட்கும். ஆனால் சில பொருளாதார நிபுணர்கள் இந்த தவழும் பணவீக்கம் பின்பு நடக்கும் பணவீக்கம் ஓடும் பணவீக்கம் பறக்கும் பணவீக்கமாக மாறும் அபாய…
-
- 0 replies
- 2.9k views
-
-
பணி ஓய்வுக்குப் பிறகு பணம் தேவையா? இந்த டிப்ஸ் உங்களுக்காக ஐ.வி.பி கார்த்திகேயா பிபிசி தெலுங்கு சேவைக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நமது தலைமுறைக்கும் நமக்கு முந்தைய தலைமுறைக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு 'பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்கும் ஓய்வூதியம்' என்று சொன்னால் அது மிகையாகாது. ஓய்வூதிய பாதுகாப்பு இல்லாத முதல் தலைமுறையாக நமது தலைமுறை இருக்கிறது. ஆகவே, நமது ஓய்வுக்குப் பிந்தைய காலம் எப்படி இருக்கும் என்பது ஊகங்கள் மற்றும் சில வழிமுறைகளை பொருத்தே அமைகிறது. ஆனால், பலருக்கும் அது குறித்த புரிதல் தெளிவாக இல்லை. அத்தகைய சூழ்நிலையில், ஓய்வுக…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
பிரிட்டனை சேர்ந்த பிரபல கண்டுபிடிப்பாளர் (inventor) ஜேம்ஸ் டைசன் (James Dyson) பத்தே நாளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதுவகையான வென்டிலேட்டரை உருவாக்கியுள்ளார். அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய வென்டிலேட்டர் இல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளும் திண்டாடி வருகின்றன. இதற்காக உலக வல்லரசான அமெரிக்கா போர்டு (Ford) நிறுவனத்தையும், இந்தியா மாருதி சுசுகி (maruti suzuki) நிறுவனத்தையும் அணுகியுள்ளன. கொரோனா பாதித்த நோயாளிகள் மூச்சு விட திணறும்போது, அவர்களின் சுவாசத்துக்கு வென்டிலேட்டர் அவசியமாகும். இருப்பினும் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையில் வென்டிலேட்டரை தயாரிக்க இயலாது என பல்வேறு நிறுவனங்களும் தெரிவித்து வருகின்ற…
-
- 1 reply
- 647 views
-
-
பயங்கரவாதமும் இலங்கை பொருளாதாரமும் - அனுதினன் சுதந்திரநாதன் இலங்கை வரலாற்றில், கடந்துவந்தப் பாதையை மீண்டும் நினைவுபடுத்துவதாக அல்லது கடந்துவந்த பாதையிலேயே, மீண்டும் பயணிக்க வைப்பதாக, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் அமைந்துள்ளது. உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்பு, அபிவிருத்தி பாதையை நோக்கி, மெல்ல மெல்ல பயணித்துக் கொண்டிருந்த இலங்கையின் பொருளாதாரம், மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்திருக்கிறது. உள்நாட்டுப் போரைக் கையாண்ட அரசாங்கம், இப்போது உள்நாட்டின் ஒத்துழைப்புடன், சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான, அறிவிக்கப்படாதப் போரை நிகழ்த்தும் நிலைக்கு வந்துவிட்டது. இவையனைத்துமே, இலங்கைப் பொருளாதாரத்தையும் அபிவிருத்தியையும் …
-
- 3 replies
- 1.4k views
-
-
பெண்களுக்கு இயல்பாகவே கிரியேட்டிவிட்டி அதிகம். அதனைச் செயலுருப்படுத்தினால் அவர்கள் செல்லக்கூடிய தூரம் மதிப்பிட முடியாதது மட்டுமல்ல அதனால் அவர்கள் அடையக்கூடிய திருப்தியும் மகிழ்ச்சியும் எல்லையில்லாதது. கண்டியில் இயங்கும் எல்லிஸ் டிரசர்ஸ் (Elle's Treasures) என்ற கூட்டுறவு அமைப்பானது பெண்களின் யோசனையிலிருந்து உயிர் பெற்றிருக்கிறது. இவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்தான் என்றா யோசிக்கிறீர்கள்? நம் அலுமாரிகளைத் திறந்து பார்த்தால் நமக்கே சிலபோது எரிச்சலாக இருக்கும். நாலு வருடங்களுக்கு முன்பு வாங்கி ஒரேயொரு முறை திருமண விழாவொன்றில் அணிந்துவிட்டு மடித்துவத்தை சேலை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும். ஒவ்வொரு முறை ஒவ்வொரு நிகழ்வு, பயணம் என்று வரும்போது அத…
-
- 0 replies
- 734 views
-
-
பரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு... போனவருடம் தமிழகம் சென்றிருந்த போது, எனது அலுவகத்தில் முன்னர் ஒன்றாக வேலை செய்து சிறந்த நண்பரான ஒருவரின், பண்ணை வீட்டில் தங்கினேன். அவரது தம்பி youtbube மூலம் அறிமுகமான ஒரு நிறுவனத்தின் அனுசரணையுடன் பரண் அமைத்து, மேலே 250 ஆடு, கீழே 1000 கோழி வளர்க்க, வெளிநாட்டு அண்ணர், அவரது நண்பர்கள் உதவியுடன் முதலீடு செய்து தானே முன் நின்று நடத்த போவதாக சொன்னார். கணக்காளர்களுக்கு இருக்கும் ஒரு கோதாரி மனப்பான்மை... முதலில் 5 அல்லது, 10 ஆடுகளுடன் தொடங்கு.... நல்லா போனா... முதலீடை செய்.... 250 ஆடுகள் மிகப் பெரிய முதலீடு.... அவர்கள் சொல்வது, வருமானம்... லாபம்.... சொல்லாதது, வளர்ப்பில் உள்ள கஷடம், நோய், தீவனம்.... இலகுவா…
-
- 39 replies
- 5.3k views
-
-
வங்கி தேர்வு பயிற்சி மையம், நீட் தேர்வு பயிற்சி மையம் என அனைத்து படிப்புகளுக்கும், தொழில்களுக்கும் பயிற்சி மையங்கள் வந்து விட்டன. இந்த வரிசையில் மதுரையில் பரோட்டா போடுவதற்கு ஒரு பயிற்சி மையம் உள்ளது என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரையின் தெருவோர உணவுகள் தனி கவனம் பெற்றவை. அவற்றிலும் விதவிதமாக தயாரிக்கப்படும் பரோட்டாக்கள் பெயர் பெற்றவை. பரோட்டா உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை தாண்டி பலரும் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது பரோட்டா. இதனால் கடைகளில் பரோட்டா தயாரிக்கும் மாஸ்டர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பரோட்டா மாஸ்டர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 800 முதல் 1200 வரை ஊதியம் பெறுகின்றனர். சிலர் பகலில் ஒரு கடையிலும் …
-
- 0 replies
- 471 views
-