Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சூப்பர் கண்டம்: 25 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமி எப்படி இருக்கும்? ரிச்சர்ட் ஃபிஷர் பிபிசி ஃபியூச்சர் 26 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES உலகின் நிலப்பரப்புகள் நிலையானதாகத் தெரியலாம். ஆனால் ரிச்சர்ட் ஃபிஷர் கண்டுபிடித்தது போல பெரிய மாற்றங்கள் எதிர்காலத்தில் வரவுள்ளன. ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பு, பிளெமிஷ் வரைபடக் கலைஞர் ஜெராடஸ் மெர்கேட்டர் உலகின் மிக முக்கியமான வரைபடம் ஒன்றை உருவாக்கினார். இது நிச்சயமாக உலக அட்லஸின் முதல்முயற்சி அல்ல. ஆஸ்திரேலியா விடுபட்டும், அமரிக்கா தோராயமாகவும் வரையப்பட்டிருந்த அந்த வரைபடம் அவ்வளவு துல்லியமாகவும் இல்லை.…

  2. 12க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்.... கிங் தீவில் கரை ஒதுங்கின! அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14 இளம் ஸ்பர்ம் வகைத் திமிங்கிலங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியமைக்கான காரணத்தை அவுஸ்ரேலிய வனவிலங்கு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். வனவிலங்கு உயிரியலாளர்களும் கால்நடை மருத்துவர்களும் ஆய்வு செய்வதற்காக தீவுக்குச் சென்றுள்ள அதே நேரத்தில் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை ஊழியர்கள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். திமிங்கிலங்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பது அரிதான ஒன்று என்றும் இருப்பினும் இந்த வட்டாரத்தைப் பொறுத்தவரை இது எதிர்பாராத சம்பவம் அல்ல என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ht…

  3. ஆர்டிக் பெருங்கடல் பனிக் கட்டிகளின் தடிமனை அளவிட புதிய கண்டுபிடிப்பு ஜொனாதன் அமோஸ் அறிவியல் நிருபர் 22 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,AWI/S.GRAUPNER ஆர்டிக் பெருங்கடல் மீது படிந்துள்ள பனிப்படலத்தின் தடிமன் அளவை இனி செயற்கைக் கோள் உதவியோடு கணக்கிடலாம். ஆண்டு முழுவதும் அளவிடும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆர்டிக் கடலில் மிதக்கும் பனி பகுதிகளை முழுமையாக கண்டறிவதில் பாரம்பரிய விண்கலத்திற்கு பெரும் சிக்கல் இருந்தது. ஏனெனில், பனியின் அளவை ஆய்வு செய்யும்போது, அதன் மேற்பரப்பில் இருக்கும் தண்ணீர் காரணமாக அளவிடும் கருவிகளால் அதை தெளிவாக கண்டறிந்து கணக்கிட முடியவ…

  4. ஓசோன் வாயுவை வெளியிடுகின்றனவா துளசி செடிகள்? ஓசோன் உடல் நலத்துக்கு நல்லதா? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 23 நவம்பர் 2020 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, துளசி (இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி Myth Buster எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் 6-ம் பாகம் இது. சர்வதேச ஓசோன் தினத்தை ஒட்டி இந்த செய்தி மறுபகிர்வு செய்யப்படுகிறது. ) …

  5. காற்று மாசு புற்றுநோயை உண்டாக்குமா? - அறிவியல் விதிகளை மாற்றும் ஆய்வு முடிவு ஜேம்ஸ் கல்லாகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் நிருபர் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் தலைச்சிறந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் சார்லஸ் ஸ்வாண்டன், இந்த ஆய்வு நிச்சயம் ஒரு புதிய அத்தியாயத்துக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார். காற்று மாசு, புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, புற்றுநோய் கட்டிகள் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றன என இந்த ஆய்வின் மூல…

  6. ஐரோப்பாவை தாக்கிய... சக்தி வாய்ந்த புயல்கள்: 3 சிறுமிகள் உட்பட... குறைந்தது 13பேர் உயிரிழப்பு! சக்திவாய்ந்த புயல்கள் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவின் பகுதிகளை தாக்கியதால், 3 சிறுமிகள் உட்பட குறைந்தது 13பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவிலும், பிரான்ஸ் தீவான கோர்சிகாவிலும் மரங்கள் விழுந்ததில் பெரும்பாலான இறப்புகள் பதிவாகியுள்ளன. கனமழை மற்றும் காற்று தீவில் உள்ள முகாம்களை நாசமாக்கியுள்ளது. அதே நேரத்தில் இத்தாலியின் வெனிஸிலும் கனிசமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. புயல்கள், கண்டத்தின் பெரும்பகுதி முழுவதும் பல வாரங்களாக வெப்ப அலை மற்றும் வறட்சியைத் தொடர்ந்து வருகின்றன. கோர்சிகாவில், மணிக்கு 224 கிமீ (140 மைல்) வேகத…

  7. வறட்சிக்குள் நுழையும், இங்கிலாந்து: இதுவரை இல்லாத அளவு.. தேம்ஸ் நதியில், நீர்மட்டம் வீழ்ச்சி! இங்கிலாந்து வறட்சிக்குள் நுழையத் தயாராகியுள்ள நிலையில், தேம்ஸ் நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காட்சியளிக்கிறது தேம்ஸ் நதியின் ஆதாரமாக அறியப்படும் இயற்கை நீரூற்று பெரும்பாலான கோடைகாலங்களில் வறண்டுவிடும். ஆனால் இந்த ஆண்டு வறண்ட ஆற்றுப்படுகை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் கணிசமாக கீழ்நோக்கி சென்றடைகிறது என்று பாதுகாப்பு நிபுணர்களின் அவதானிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 1935ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் திகழ்கிறது. நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலையில் வறட்சி நிலவிய…

  8. கொடைக்கானல் காடுகள் பசுமை பாலைவனமாகிறதா? இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கும் பல விஷயங்கள் பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 30 ஜூலை 2022, 09:09 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த அந்நிய ஆக்கிரமிப்பு மரங்கள், தற்போது 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். என்ன நடக்கிறது கொடைக்கானலில்? நதிகளின் தாய்மடி சோலைக் காடுகள் தான். அடர்ந்த நாட்டு மரங்களும் பரந்த புல்வெளிகளுமே சோலைக்காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பரந்த புல்வெளிகள் பொழியும் மழையை …

  9. வரலாறு காணாத, வெப்ப அலைக்கு... மனிதர்கள் உருவாக்கிய, பருவநிலை மாற்றமே காரணம்: ஆய்வறிக்கை! பிரித்தானியாவில் இந்த மாதம் பதிவான வரலாறு காணாத வெப்ப அலைக்கு மனிதர்கள் உருவாக்கிய பருவநிலை மாற்றமே காரணம் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இதே போன்ற பருவநிலையில், தொழில் புரட்சிக்கு முந்தைய 19ஆம் நூற்றாண்டு காலத்தில் வெப்பநிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வெப்பநிலையையும் ஒப்பிட்டு சர்வதேச நிபுணர் குழுவொன்று ஆய்வு செய்தது. அதில், பசுமை வாயுக்களை காற்றில் கலப்பதன் மூலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டும் புவி வெப்பமாதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால்தான் பிரித்தானியாவில் இந்த மாதம் வரலாறு காணாத வெப்ப அலை ஏற்பட்…

  10. 'அண்டரண்ட' பறவை : 5,000 கி.மீ பறந்து தங்கச்சி மடத்துக்கு வந்த பின்னணி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FRANCIS ARAVIND படக்குறிப்பு, அண்டரன்ட் பறவை இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் காணப்பட்ட பறவை, கண்டம் விட்டு கண்டம் பறக்கும் அன்டார்டிகாவின் அல்பட்ரோசு எனப்படும் அரிய வகை 'அண்டரண்ட' பறவை என தெரிய வந்துள்ளது. மதுரை இறகுகள் இயற்கை அறக்கட்டளை ஆய்வாளர் ரவீந்திரன் அண்ணாமலை பல்கலைக்கழக ஆய்வாளர் பைஜு நடத்திய ஆய்வின் போது இந்த பறவை தங்கச்சிமடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பறவைகள் ஆய்வ…

  11. ஒரு நூற்றாண்டுக்கு, முன்பு இருந்ததை விட... கடல் மட்டம் மிக வேகமாக உயர்வு: ஆய்வில் தகவல்! ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததை விட கடல் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகின்றது என பிரித்தானியாவின் காலநிலை மற்றும் வானிலை குறித்த வானிலை அலுவலகத்தின் வருடாந்திர அறிக்கை தெரிவிக்கின்றது. அதேவேளை, வசந்த காலம் முன்னதாகவே வரப்போகிறது என்றும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் விரைவாக வளர்ச்சியடையவில்லை என்றும் பாதுகாவலர்கள் எச்சரிக்கின்றனர். காலநிலை மாற்றம் பிரித்தானியாவை பாதிக்கும் வழிகளை அறிக்கை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. வானிலை அலுவலகம், 2021ஆம் ஆண்டிற்கான காலநிலை மற்றும் வானிலை நிகழ்வுகளை மதிப்பிட்டது, இதில் புயல் அர்வென் ப…

  12. இங்கிலாந்தில்.... தேசிய வெப்ப சுகாதார அவசரநிலை: பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென எச்சரிக்கை! இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பநிலை உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளதால், இது ‘தேசிய அவசரநிலை’ எச்சரிக்கை அளவைத் தூண்டுகிறது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக வெப்பம் இருக்குமென பிரித்தானிய வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். புயல்களுக்கு முன்னர் இதுபோன்ற எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தாலும், வெப்பம் காரணமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. 40 செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுவ…

  13. குஜராத் கடற்கரையில் தஞ்சம் புகுந்த சிங்கங்கள் - கிர் காட்டிலிருந்து வெளியேறியதன் காரணம் என்ன? ராக்ஸி கக்டேகர் சாரா பிபிசி குஜராத்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒருகாலத்தில் குஜராத் முழுவதும் சிங்கங்கள் பரவியிருந்தன. மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தின் கடலோரப்பகுதிகள், தற்போது 100க்கும் மேற்பட்ட சிங்கங்களின் வாழ்விடமாக திகழ்கிறது. சிங்கங்களின் இயற்கை வாழ்விடம் சுருங்கிவருவதையே இது உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆசிய சிங்கங்களின் ஒரே இயற்கை வாழ்விடமான குஜராத்தின் கிர் வனப்பகுதியில், 2020ஆம் ஆண்டில் சுமார் 4…

  14. போர்த்துகலில்... கட்டுக்கடங்காத காட்டுத் தீ: தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் திணறல்! வடக்கு மற்றும் மத்திய போர்த்துகல் முழுவதும் பரவிவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தீயைக் கட்டுப்படுத்த 3,000 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தீயினால் ஏற்பட்ட சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்க 12 தீயணைப்பு வீரர்களுக்கும் 17 பொதுமக்களுக்கும் மருத்துவ உதவி தேவைப்படுவதாக போர்த்துகீசிய அரசு தொலைக்காட்சி மற்றும் பிற உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. ஐரோப்பிய ஒன்றியம் ஞாயிற்றுக்கிழமை அதன் தீயணைப்பு விமானக் கடற்பட…

  15. சிட்னியை... தடம்புரட்டிய வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்! அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாக்கிய வெள்ளதால், சிட்னியின் சில பகுதிகளில் நான்கு நாட்களில் சுமார் எட்டு மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்துள்ளது. இந்த வெள்ளத்தால், வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். தற்போதைய அவசரநிலைக்காக கிரேட்டர் சிட்னி முழுவதும் 100க்கும் மேற்பட்ட வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பல முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

  16. கடந்த 70 ஆண்டுகளில்... இல்லாத அளவுக்கு, இத்தாலியில் கடுமையான வறட்சி! கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், போ ஆற்றை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பகுதிகளில் இத்தாலி அவசரகால நிலையை அறிவித்துள்ளது. எமிலியா-ரோமக்னா, ஃப்ரியூலி வெனிசியா கியுலியா, லோம்பார்டி, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ ஆகிய இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அவசரகால நிதியாக 36.5 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. விவசாய சங்கமான கோல்டிரெட்டியின் கூற்றுப்படி, வறட்சி இத்தாலியின் விவசாய உற்பத்தியில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை அச்சுறுத்துகிறது. பல நகராட்சிகள் ஏற்கனவே குடிநீர் வி…

  17. ஜப்பானில் வரலாறு காணாத வெப்பம் ஜப்பானில் கடந்த 150 வருடங்களில் முதன்முறையாக வெப்பநிலையானது கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. டோக்கியோவில் ஐந்தாவது நாளாக புதன்கிழமை 35 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1875 இல் பதிவான வெப்பநிலையை விட ஜூன் மாதத்தில் மிக மோசமான வெப்பமான காலநிலை பதிவாகியுள்ளது. ஜப்பான் தலைநகரின் வடமேற்கே உள்ள இசெசாகி நகரத்தில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவே ஜூன் மாதத்தில் ஜப்பானில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாகும். கடுமையான வெப்பம் காரணமாக மின் துண்டிப்பை அமுல்படுத்த வழிவகுத்துள்ளது. இதனால் மக்கள் மின்சாரத்தை சேமிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடும் வெப்பநிலை காரணமாக…

  18. நீர்வீழ்ச்சி முதல் டெட் சோன்கள் வரை: ஆழ்கடலின் ரகசியங்கள் என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,DAMIR ZURUB படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் (ஐநாவின் புகைப்படப் போட்டியில் ஆழ்கடல் காட்சிகள் பிரிவில் 2ஆம் பரிசு வென்ற படம்) நம் பூமியின் 70 சதவீத பரப்பை கடல் சூழ்ந்துள்ளது. ஆனால், கடலை பற்றி நாம் அறிந்தவை மிக அரிதே. ஆனால், ஆழ்கடலில் முழுவதும் ஆராயப்படாத ஒரு பிரபஞ்சமே உள்ளது, மனித கண்களுக்கு புலப்படாதவையாக அவை உள்ளன. கடல் குறித்து நாம் ஏன் கொஞ்சம் மட்டுமே அறிந்திருக்கிறோம்?.... ஆழ்கடலில் உள்ள அபரிமிதமான அழுத்தம், டைவர்களுக்கும் ஆழ்கடல் உபகரணங்களுக்கும் பெரும் சவாலாக விளங்குகிறது. வ…

  19. வரலாறு காணாத... வெப்ப அலையால், பிரான்ஸில்.. திறந்தவெளி நிகழ்ச்சிகளுக்கு தடை! ஐரோப்பா முழுவதும் இதுவரை காணாத வெப்ப அலை வீசி வரும் நிலையில், பிரான்ஸில் ஒரு இடத்தில் திறந்த வெளி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போர்டியாக்ஸைச் சுற்றியுள்ள ஜிரோண்டே துறையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் பெரும் திரளாக கூடும் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், திருமணம் போன்ற தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உண்டு. வியாழக்கிழமை மட்டும் பிரான்ஸின் சில பகுதிகளில் முந்தைய ஆண்டைவிட 40 டிகிரி அதிக வெயில் இருந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வெப்பநிலை சனிக்கிழமை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புவி வெப்பமடைதலின் விளைவாக கடுமை…

  20. உயரும் கடல் மட்டம்... இங்கிலாந்தில், 200,000 சொத்துக்கள்... கைவிடப்படும் அபாயம் ! 2050-க்குள் கடல் மட்டம் உயரும் காரணத்தால் இங்கிலாந்தில் உள்ள சுமார் 200,000 சொத்துக்கள் கைவிடப்படலாம் என ஒரு அறிக்கை கூறுகிறது. தண்ணீர் எங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்பதனால் தொழில்நுட்ப ரீதியாகவும் நிதி ரீதியாகவும் அவற்றை சரிசெய்ய சாத்தியமா என்பது குறித்து ஆராயப்படுகின்றது. பல தசாப்தங்களாக கடல் மட்ட உயர்வு தவிர்க்க முடியாதது என விஞ்ஞானிகள் தெரிவிக்கும் அதேவேளை சொத்துக்களையும் காப்பாற்ற முடியாது என்று அரசாங்கம் கூறியுள்ளது. இங்கிலாந்தின் கடற்கரையில் மூன்றில் ஒரு பங்கு கடல் மட்ட உயர்வினால் அழுத்தத்திற்கு உள்ளாகும் என்று அறிக்கை கூறுகிறது. https://athavann…

  21. பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் புழுக்கள் கண்டுபிடிப்பு சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் புழுக்களை அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மூன்று வகை புழுக்களிடம் மூன்று வார சோதனை மேற்கொண்டதில் சூப்பர் வார்ம் என்றழைக்கப்படும் புழுக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கடித்து தின்று ஜீரணிக்கும் அதிசயத்தை கண்டுபிடித்தனர். இந்த புழுக்களின் குடலில் உள்ள ஒருவிதமான நொதி பிளாஸ்டிக்கையே ஜீரணமாக்கி விடுகிறது. இந்த நொதியில் உள்ள பக்டீரியாக்களை ஆய்வு செய்தால் பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புரட்சியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சுற்றுசூழலை பாதிக்காத பிளாஸ்டிக்கை கூட உரு…

    • 1 reply
    • 350 views
  22. அண்டார்டிகா பனியிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் - ஏன் இது கவலையானது? நவீன் சிங் கட்கா சூழலியல் செய்தியாளர், பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிளாஸ்டிக் நுண்துகள்கள் அண்டார்டிகா பனியில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை முதன்முறையாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அண்டார்டிகாவின் 19 பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை நியூசிலாந்தின் கேன்டெர்பெரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஒவ்வொரு மாதிரியிலும் மிகச்சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ப…

  23. உலக சுற்றுச்சூழல் தினம்: மரம் நடுவது எப்படி - தெரிந்து கொள்ள வேண்டிய 10 விதிகள் ஹெலன் ப்ரிக்ஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 31 ஜனவரி 2021 புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மரம் நடுவதற்கான 10 விதிமுறைகளை அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதைக் கவனமாக பின்பற்றுவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். மரம் நடுவது நன்மை தரும்; பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க உதவும் என மரங்கள் பல பலனை தரும். ஆனால் இடத்திற்கு தகுந்தாற்போல ஒரு மரத்தை நடவில்லை என்றால் அதுவே தவறாக முடிந்துவிடும் என்கின்றனர் லண்டனில் உள்ள …

  24. மெகலடான் சுறா 2 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்தது எப்படி? ஹெலன் பிரிக்ஸ் சூழலியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அவை கடலில் சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சுற்றித்திரிந்துள்ளது. இதுவரை இந்த உலகில் வாழ்ந்த மிக நீளமான சுறா இனமான மெகலடானின் முடிவுக்கு மற்றொரு மிகப்பெரிய உயிரினத்துடன் ஏற்பட்ட வரலாற்றுக்கு முந்தைய உணவுச்சண்டை காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெருங்கடலில் வாழ்ந்த இந்த மிகப்பெரிய கடல் உயிரினத்தின் புதைபடிவ பற்…

  25. அறிவியல் அதிசயம்: உலகின் மிக நீளமான தாவரம் - ஒரே விதையிலிருந்து உருவானது டிஃப்பேனி டர்ன்புல் பிபிசி செய்திகள், சிட்னி 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RACHEL AUSTIN அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரைவிட மூன்று மடங்கு அளவில் பெரிய கடற்புல் தாவரம் ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக நீளமான தாவரமாக அறியப்படுகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் இந்த நீளமான கடற்புல் தாவரத்தை மரபணு சோதனை மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த நீளமான கடற்புல் ஒரே தாவரம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒரேயொரு விதையிலிருந்து சுமார் 4,500 …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.