சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
சீரற்ற வானிலை: அமெரிக்காவில் 600 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து சீரற்ற வானிலை காரணமாக அமெரிக்க எயார்லைன்ஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றும் நேற்று முன்தினமும் 800 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் 1,500 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்யும் மழையுடன் கூடிய கடுமையான காற்று காரணமாக சேவைகள் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். பிறக்கப்போகும் புதிய மாதத்துடன் சேவைகள் பட…
-
- 0 replies
- 172 views
-
-
பாலுறவு இல்லாமல் ஆண் மரபணு இல்லாமல் முட்டையிட்டு குஞ்சு பொறித்த அமெரிக்க பறவை 'கலிபோர்னியா கான்டோர்' 30 அக்டோபர் 2021 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இது அற்புதமான கண்டுபிடிப்பு என்கிறார் ஆய்வின் இணை ஆசிரியர். இந்த வியப்புக்கு காரணம் தெரியுமா? கலிபோர்னியா கன்டோர் என்ற இனத்தை சேர்ந்த இரண்டு பெண் பறவைகள் ஆண் துணை இல்லாமல் மட்டுமல்ல, ஆண் மரபணு டி.என்.ஏ. இல்லாமலேயே முட்டையிட்டு குஞ்சு பொறித்திருப்பதை அமெரிக்க காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கலிபோர்னியா கான்டோர் என்பது அழிவின் விளிம்பில் இருக்கிற ஓர் உயிரினம். கலிபோர்னியா கான்டோர்கள் பார்த்தனோஜெனசிஸ் அ…
-
- 0 replies
- 181 views
-
-
பாமாயில் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக இருப்பது எப்படி? பட மூலாதாரம், SOPA IMAGES நாளைக்கே நாம் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை நிறுத்தினாலும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது நமக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சாதாரணப் பொருள், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரிய தடையாக இருக்கும். அதுதான் பனை எண்ணெய் அல்லது பாமாயில். செப்டம்பர் 2015ல் பாரீஸ் காலநிலை ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில மாதங்கள் முன்பாக, போர்னியொ மற்றும் இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் மிக அதிகமான எண்ணிக்கையில் காட்டுத்தீ நிகழ்வுகள் ஏற்பட்டன. தென்கிழக்கு ஆசியாவின் வானத்தையே இருளடையச் செய்த இந்த நிகழ…
-
- 0 replies
- 235 views
-
-
ஹேரியட் ஓரெல் பிபிசி உலக சேவை கடந்த சில ஆண்டுகளாக 'வீகன்' ஆணுறைகள் மற்றும் கழிவற்ற கருத்தடை பொருட்கள் தொடர்பான தேடல்கள் இணையத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஈகோ-ஃப்ரெண்ட்லி செக்ஸ் என்றால் என்ன? "சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது என்றால் சிலருக்கு பூமியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத லூப்கள், விளையாட்டு பொருட்கள், படுக்கை விரிப்புகள், ஆணுறைகளைப் பயன்படுத்துவதாகும்," என்கிறார் நைஜீரியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அறிவியலாளர் முனைவர் அடெனிகே அகின்செமொலு. ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 1000 கோடி லேடெக்ஸ் ஆணுறைகள் தயாரிக்கப்படுவதாகவும், அதில் பெரும்பாலானவை திறந்த வெளியில் வீசப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளை சபையின் ம…
-
- 3 replies
- 619 views
-
-
பருவநிலை மாற்றம்: கார்பன் உறிஞ்சவேண்டிய காடுகளை கார்பன் உமிழ்கிறவையாக மாற்றிய மனிதர்கள், அதிர வைக்கும் ஆய்வு விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANDREAS BRINK புவியை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் போரில் துணையாக இருக்க கூடியவை காடுகளே. அவையே பெரிய அளவில் கார்பனை உறிஞ்சி சுற்றுச்சூழலை காக்க உதவி செய்ய முடியும். ஆனால், காடுகள் கார்பனை உறிஞ்சுவதற்குப் பதிலாக கார்பனை உமிழ்பவையாக மாறியுள்ளன என்பதும், அதற்கு மனித நடவடிக்கைகளும், பருவநிலை மாற்றமும் காரணமாகியுள்ளன என்பதும் ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
மனித குலத்துக்கு பனிமலைகள் உருகுவதால் ஏற்படப்போகும் ஆபத்துகள் என்னென்ன? வில்லியம் பார்க் 22 அக்டோபர் 2021, 01:54 GMT பட மூலாதாரம், DENIS BALIBOUSE/AFP/GETTY IMAGES பனிப் பாறைகளில் உறைந்துள்ள நீரைப் பல லட்சம் மக்கள் வாழ்வாதாரத்துக்கும், மின்சாரத்துக்கும் உணவுக்கும் நம்பியுள்ளனர். ஆனால் பருவநிலை மாற்றத்தால் அவை உருகி ஓடிக் கொண்டிருக்கின்றன? அவை மாயமானால் நமக்கு ஏற்படும் இழப்பு என்ன? பனிக்கட்டிகள் ஆறுகளாகி மலையடிவாரங்களை நோக்கிச் செல்லும் போது, கீழே உள்ள பாறைகளைக் கழுவிப் பண்படுத்திக்கொண்டு செல்வது, மனம் கவரும் காட்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை நம் அனைவரின் வாழ்விலும் முக்கியப் பங்கு வகிக்…
-
- 0 replies
- 284 views
-
-
எரிவாயு கொதிகலன்களை மாற்ற... அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள் மானியம்! இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு பழைய எரிவாயு கொதிகலன்களை குறைந்த கார்பன் வெப்ப விசையியக்கக் குழாய்களால் மாற்றுவதற்கு அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள் மானியமாக வழங்கப்படும். மானியங்கள், அரசாங்கத்தின் 3.9 பில்லியன் பவுண்டுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக வெப்பமூட்டும் வீடுகள் மற்றும் பிற கட்டடங்களிலிருந்து கார்பன் உமிழ்வைக் குறைக்கிறது. எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய எரிவாயு கொதிகலன்கள் விற்கப்படாது என்று நம்பப்படுகிறது. இந்த நிதி, சமூக வீடுகள் மற்றும் பொது கட்டடங்களை அதிக ஆற்றல் திறன் கொண்டதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வல்லுந…
-
- 0 replies
- 304 views
-
-
சீனப் பெருஞ்சுவரை விட அதிகமாக குவிந்த மின்னணு கழிவுகள் விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலக அளவில் உற்பத்தியாகும் மின்னணு கழிவுகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான கழிவுகளே மறு சுழற்சி செய்யப்படுகின்றன என்கிறார்கள் வல்லுநர்கள். மின்னணு கழிவுகள் உலக அளவில் ஒரு தலைவலியாகவே உருவெடுத்துள்ளன. 2021ம் ஆண்டில் மட்டும் தூக்கி எறியப்பட்ட பழைய மின்னணுப் பொருள்களின் எடை 5.7 கோடி டன் இருக்கும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். மின் மற்றும் மின்னணு சாதனக் கழிவுகளை கையாள்…
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
சீனாவின் பருவநிலைக் கொள்கை பற்றி உலகம் ஏன் கவலைப்படவேண்டும்? சீனாவின் கார்பன் உமிழ்வு அதிவேகமாக அதிகரிக்கிறது. மற்ற நாடுகளின் கார்பன் உமிழ்வு அளவு மிக சாதாரணமாகத் தோன்றும் அளவில் இது உள்ளது. சீனாவின் கார்பன் உமிழ்வு அளவில் பெரிய அளவு குறையாமல் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் உலகம் வெல்ல முடியாது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். 2030க்கு முன்பாக தங்கள் கார்பன் உமிழ்வு அளவு உச்சபட்ச அளவை எட்டிவிட வேண்டும் என்றும் 2060ல் கார்பன் சமநிலையை எட்டிவிட வேண்டும் என்பதும் சீனாவின் இலக்கு என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார். ஆனால், மிக அதீதமான இந்த இலக்கை சீனா எப்படி எட்டும் என்று அவர் கூறவில்லை. காற்றுமண்டலத்தில…
-
- 0 replies
- 308 views
-
-
அமேசான் மழைக்காடுகள் சட்ட விரோத விற்பனை: பிபிசி புலனாய்வும் ஃபேஸ்புக் நடவடிக்கையும் Getty Images புவியில் கண்டறியப்பட்ட உயிரினங்களில் பத்தில் ஒன்று அமேசான் மழைக்காடுகளில் காணப்படுகின்றன. அமேசான் மழைக்காடுகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளை சட்டவிரோதமாக தமது தளத்தைப் பயன்படுத்தி விற்பனை செய்வதை தடுக்கப்போவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இது போன்ற சட்டவிரோத வணிகம் பற்றி பிபிசி நடத்திய புலனாய்வினை அடுத்து ஃபேஸ்புக் இது தொடர்பான தமது கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளது. ஃபேஸ்புக்கின் இந்த நடவடிக்கை, பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். அரசுக்கு சொந்தமான எல்லா காடுகளுக்கும் பொருந்தாது. அதைப…
-
- 0 replies
- 327 views
-
-
ணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டகாசியின் கடைசி தினங்களில் ரேஞ்சர் பவுமாவுடன், டகாசி என்ற மலைவாழ் கொரில்லாவை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆம் ரேஞ்சருடன் இயல்பாக செல்ஃபிக்கு போஸ் கொடுத்த கொரில்லாவின் பெயர்தான் டகாசி. அப்போது கொரில்லாவின் அந்த செல்ஃபி புகைப்படம் வைரலானது. ஆனால் இப்போது அந்த கொரில்லா தனது 14 வயதில் நீண்ட உடல்நலக் குறைவுக்கு பிறகு உயிரிழந்துள்ளது. அதுவும் குழந்தையாக தன்னை மீட்ட அண்ட்ரே பவுமா என்ற அந்த ரேஞ்சரின் மடியில். காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள ஆப்ரிக்காவின் பழமையான தேசிய பூங்காவான, விருங்கா கொரில்லா காப்பகத்தில்தான் அந்த 14 வயது …
-
- 0 replies
- 413 views
-
-
வானிலை அறிவிப்பு: மழை வருமா வராதா? உடனே கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்குள் மழை பொழியுமா இல்லையா என்று கண்டறிய முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான, லண்டனில் உள்ள டீப்மைண்ட் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் மற்றும் எக்செட்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் பிரிட்டனின் வானிலை ஆய்வு அலுவலகத்துடன் இணைந்து இந்தத் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வானிலை கணிப்பு முறைகள் மூலம் அடுத்த ஆறு மணி நேர…
-
- 0 replies
- 502 views
- 1 follower
-
-
பூமியின் அதிசய வரலாறு: 100 கோடி ஆண்டுகளை காணவில்லை - விஞ்ஞானிகள் கூறும் விளக்கம் என்ன? ஜாரியா கோர்வெட் பிபிசி பியூச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புவியியல் வரலாற்றுப் பதிவேட்டில் இருந்து நூறு கோடி ஆண்டுகள் காணாமல் போய்விட்டன. இப்படிக் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும் இது எப்படி நடந்தது என்பதில் விஞ்ஞானிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. "சிகாகோ ட்ரிப்யூன்" என்ற பாரம்பரியம் மிக்க பத்திரிகையின் முதல் பக்கத்தில் 1869-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3-ஆம் தேதி "நடுங்கவைக்கும் விபரீதம்" என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்தது. …
-
- 0 replies
- 439 views
- 1 follower
-
-
நேச்சர் கன்சர்வென்சி 2021: பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு கொரில்லா - மனதை கவர்ந்த வெற்றிப் புகைப்படங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ANUP SHAH/TNC PHOTO CONTEST 2021 நேச்சர் கன்சர்வன்சி 2021-ன் புகைப்படப் போட்டியின் வெற்றியாளராக அனுப் ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய ஆப்ரிக்க குடியரசில் பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் நடந்து வரும் மேற்கு தாழ்நில கொரிலாவின் புகைப்படம்தான் அனுப் ஷாவிற்கு வெற்றியாளர் என்ற சிறப்பை பெற்று தந்துள்ளது. இந்த புகைப்படம் சுமார் 158 நாடுகளிலிருந்து வந்த ஒரு லட்சம் புகைப்படத்திலிருந்து வெற்றிப் பெற்ற புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த அ…
-
- 0 replies
- 393 views
- 1 follower
-
-
உடல் முழுக்க கொம்பு முளைத்த அங்கிலோசர்: 16.8 கோடி ஆண்டு பழைய முள் எலும்பு அதிசயம் ஜோனாத்தன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அங்கிலோசர்: கவசம் பூட்டிய காஃபி டேபிள் நகர்ந்து வந்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்குமோ? குட்டையான, அகலமான காபி டேபிளுக்கு உடம்பெல்லாம் கொம்பு முளைத்து உங்களை நோக்கி நகர்ந்து வருவதாக கற்பனை செய்து பாருங்கள். அதுதான் அங்கிலோசர். டைனோசர் போல அழிந்துபோன ஒரு தொல் பழங்கால விலங்கு. இது போன்ற அங்கிலோசர் ஒன்றின் உடலில் இருந்த முள் முள்ளாய் நீட்டிக்கொண்டிருக்…
-
- 0 replies
- 410 views
- 1 follower
-
-
பெருங்கடல்களின் சுவாசங்கள்: இதயத்துக்கு இதம் தரும் '2021' சிறந்த படங்கள் 19 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,AIMEE JAN / OCEAN PHOTOGRAPHY AWARDS மேற்கு ஆஸ்திரேலியாவின் நிங்கலூ கடலடி பவளப்பாறை பகுதியில் கண்ணாடி மீன்கள் புடை சூழ வலம் வந்த தோணி ஆமையின் படத்துக்கு 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த பெருங்கடல் புகைப்படத்துக்கான முதல் இடம் கிடைத்திருக்கிறது. இந்த படத்தை எடுத்தவர் எய்மீ ஜான் என்ற புகைப்பட கலைஞர். ஓஷியானிக் இதழ் நடத்திய இந்த போட்டி, பெருங்கடல்களின் அழகையும் அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் உலகம் அறிய வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது. பட மூலாதாரம்,HE…
-
- 2 replies
- 464 views
- 1 follower
-
-
எரிமலை குழம்பு கடலில் கலப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சிவப்பு நிறத்திலான உருகிய பாறை குழம்பு நீரில் கலப்பதற்கு முன்னர் டெல்டா பகுதியாக உருவானது. 250மீட்டர் தூரத்திலிருந்து பாறைகள் விழுந்ததால் நெருப்பு புகை மண்டலம் உருவாகியது. எரிமலை குழம்பு கடலில் விழுந்தால் அந்த காட்சி பார்ப்பதற்கு அரிய காட்சியாக இருக்கலாம் ஆனால் அது அதிகம் விஷமாக மாறலாம். அந்த புகை விஷத்தன்மை வாய்ந்தது. இம்மாதிரியான சூழலில் மனிதர்கள் சிக்கிக் கொண்டால் அவர்களை காப்பாற்றுவது எப்படி என உங்களுக்கு தெரியுமா? எரிமலை குழம்பு கடலில் நுழைந்தால் அத…
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
உடல்நலம்: காற்று மாசு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை -'நினைத்ததைவிட மோசம்' 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, காற்று மாசின் மோசமான தாக்கம் அதிகமுள்ள உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று தாங்கள் முன்பு கருதியதை விட காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் காற்றை மாசுபடுத்தும் நைட்ரஜன் டை ஆக்ஸைட் போன்ற நச்சுப் பொருட்களின் அதிகபட்ச பாதுகாப்பு அளவை குறைத்துள்ளது. காற்று மாசுபாடு தொடர்புடைய நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 70 லட்சம் பேர் தங்கள் வாழ வேண்டிய காலத்துக்கு முன்பே இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
தென்னப்பிரிக்காவில் தேனீக்கள் கொட்டி இறந்த 63 பென்குவின்கள் - அரிதினும் அரிய நிகழ்வு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஆப்பிரிக்க பென்குவின்கள் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. (கோப்புப்படம்) கேப் டவுன் அருகே, அரிதிலும் அரிதாக நடக்கும் நிகழ்வு ஒன்றில் அழியும் நிலையில் உள்ள இனமான ஆப்பிரிக்க பென்குவின்கள் தேனீக் கூட்டம் ஒன்றால் கொல்லப்பட்டுள்ளன. மொத்தம் 63 ஆப்பிரிக்கப் பென்குவின்கள் இவ்வாறு இறந்துள்ளன என்று தென்னாப்பிரிக்காவில் உள்ள பறவை இன பாதுகாவலர்கள் கூறுகிறார்கள். சிம்சன்ஸ்டவுன் எனும் ஊரில் உள்ள இரூந்த பென்குவின் காலனி, அங்கிருந்த கடற்கரை ஒன…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
கலிபோர்னியா காட்டுத்தீ: பழங்கால மரங்களைச் சுற்றி தீயை எதிர்க்கும் போர்வை போர்த்தும் தீயணைப்பு வீரர்கள்! கலிபோர்னியாவின் உலகப் புகழ்பெற்ற சீக்வோயா தேசியப் பூங்காவில் தீப்பிடித்து எரிவதால், தீயணைப்பு வீரர்கள் பழங்கால மரங்களைச் சுற்றி தீயை எதிர்க்கும் போர்வைகளை போர்த்தியுள்ளனர். ஜெனரல் ஷெர்மன் உட்பட பல மரங்களை அலுமினியப் படலத்தால் பாதுகாத்து வருகின்றனர். இதுகுறித்து சீக்வோயா மற்றும் கிங்ஸ் கனியன் தேசிய பூங்கா செய்தித் தொடர்பாளர் ரெபேக்கா பேட்டர்சன் கூறுகையில், ‘இது பல, பல மக்களுக்கு மிக முக்கியமான பகுதி, எனவே இந்த தோப்பைப் பாதுகாக்க நிறைய சிறப்பு முயற்சிகள் நடக்கிறது’ என கூறினார். சில மணிநேரங்களுக்குள் உலகின் மிகப் பெரிய மரங்களின் தோப்பாகிய ஜெயன்ட் காட்டை …
-
- 0 replies
- 217 views
-
-
மாமத யானைகளை மீண்டும் உருவாக்கி பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முயற்சி: இதில் சிக்கல் என்ன? 20 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சில விஞ்ஞானிகளும் தொழிலதிபர்களும் மாமத யானைகளை (Woolly Mammoth) மீண்டும் உயிர்ப்பிக்கும் திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன உயிரினங்கள் இவை. லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்து பனியில் உறைந்து கிடக்கும் மாமதங்களின் உடற்பகுதிகளிலிருந்து டி.என்.ஏ. வை எடுத்து மரபணு பொறியியல் தொழில்நுட்பம் மூலமாக அவற்றை மீண்டும் உருவாக்கும் திட்டம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார். கொலாஸல் என்ற நிறுவனம், இதுவரை இந்தத…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
டைனோசர்களை அழித்த விண்கல் தாக்குதலில் பாம்புகள் பிழைத்தது எப்படி? ஹெலென் ப்ரிக்ஸ் அறிவியல் & சுற்றுச்சூழல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விண் எரிகல்லின் தாக்கம் பூமியில் பேரழிவை ஏற்படுத்தியது, பெரும்பாலான விலங்குகள் மற்றும் தாவரங்கள் இறந்து கொண்டிருந்தன. ஆனால் விஞ்ஞானிகள் கூறுகையில், ஒரு சில பாம்பு இனங்கள் எரிகல் தாக்கிய பிறகான உலகில், நிலத்தடியில் ஒளிந்து கொண்டு, நீண்ட நாட்களுக்கு உணவு இல்லாமல் தழைத்து வளர முடிந்தது. அந்த அளவுக்கு அதிக எதிர்வினை ஆற்றல் கொண்ட ஊர்வன, பின்னர் உலகம் முழுவதும் பரவி, இன்று அறியப்படும் அளவுக்கு 3,0…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
இயற்கையைப் பாதுகாக்கும், முயற்சியில் ஈடுபட்டிருந்த 227 பேர் உயிரிழப்பு! 2020ஆம் ஆண்டில் உலகெங்கிலும் இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 227 பேர் உயிரிழந்துள்ளனர். காடுகள், இயற்கை வளங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது இவர்கள் உயிரிழந்துள்ளதாக ‘கிளோபல் விட்னஸ்’ எனும் மனித உரிமைக் குழு நடத்திய ஆய்வின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. கொலம்பியாவில் பழங்குடியினருக்குச் சொந்தமான நிலம், காடுகள் அல்லது கோக்கோ பயிர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முயன்ற சுமார் 65 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோன்ற காரணத்துக்காக உலகில் மிக அதிகமானோர் கொலம்பியாவில் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அதற்கு இரண்டாம் நிலையில் மெக்சிகோ உள்ளது.…
-
- 0 replies
- 331 views
-
-
பசுக்களுக்கு அறையில் சிறுநீர் கழிக்க பயிற்சி - பசுங்குடில் வாயு உமிழ்வை குறைக்க புது முயற்சி 22 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FBN படக்குறிப்பு, பசுக்கள் சிறுநீர் கழிக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனி அறை பசுக்களுக்கு சிறுநீர் கழிக்க சரியான பயிற்சி கொடுத்தால் அதன் மூலம் பசுங்குடில் வாயு வெளியேற்றம் குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் புதிய முயற்சியில் ஈடுபட்டனர். அதாவது, குறிப்பிட்ட சில பசுக்களை அழைத்து வந்து, அவற்றை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறுநீர் கழிக்கும் பகுதிக்கு மேல் நிற்க வைத்து சிறுநீர்…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
பருவநிலை மாற்றம்: தீவிர வெப்பநிலையால் ஆண்டுதோறும் அதிகரிக்கும் ஆபத்து - பிபிசி ஆய்வு பெக்கி டேல் மற்றும் நாஸ்ஸோஸ் ஸ்டீலியானூ தரவுகள் ஆய்வு செய்தியாளர்கள் 14 செப்டெம்பர் 2021, 05:40 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1980களில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் பூமி 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டும் போது, அந்தந்த ஆண்டுகளில் மிகவும் அதிகமான வெப்பம் பதிவான நாட்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக பிபிசி ஆய்வு கண்டறிந்துள்ளது. அந்த வெப்பநிலை முன்பை விட மேலதிக இடங்களில் உண்டாவதாகவும் அந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் 50 டிகிரி வெப்பநிலையை கடந்த நாட்களி…
-
- 0 replies
- 401 views
- 1 follower
-