கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
இலக்கில்லா சிறுகுருவி ------------------------------------- இந்த குருவியை எழுத எழுத என்று நினைத்து எழுதாமலேயே போய்க் கொண்டிருக்கின்றேன் இது ஒரு சின்ன சிட்டுக் குருவி தான் கொய்யா மரத்தின் கீழ் கொப்பில் நின்று அப்படியே பறந்து முருங்கையின் ஒரு கொப்பிற்கு அது போகின்றது அங்கிருந்து கண்ணாடி யன்னலில் பாய்ந்து அப்படியே அது சறுக்கி கீழே விழுகின்றது எழும்பி அது மீண்டும் பறந்து கொய்யா மரம் போகின்றது இப்படியே செய்து கொண்டு இடையிடையே நின்று செட்டைகளை விரித்து நீவி விடுகின்றது தன் வாலையும் அப்பப்ப ஆட்டிக் கொள…
-
-
- 3 replies
- 581 views
-
-
"மரியாதை" [அந்தாதிக் கவிதை] & ["சூடினாள் மல்லிகை" "மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு வாங்கும் புகழ் நிலைத்து நிற்கட்டும் நிற்கும் நிலையில் உறுதி மலரட்டும் மலரும் நட்பில் துலங்கட்டும் மரியாதை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. "சூடினாள் மல்லிகை" "சூடினாள் மல்லிகை அழகு கொண்டையில் ஆடினாள் நிருத்தம் முத்திரைகள் காட்டினாள் கூடினாள் இதயத்தில் கவர்ச்சி வீசினாள் தேடினாள் நட்பை சேர்ந்து அனுபவிக்க!" "நாடினாள் அன்பை தனிமை போக்க பாடினாள் கவிதை இனிமை கொடுக்க ஓடினாள் கரையில் ஆனந்தம் பொங்க மூடினாள் நெஞ்சை ஒருவனை நிறுத்தி!" …
-
- 0 replies
- 421 views
-
-
14.01.1986 தைப் பொங்கல் தினத்தன்று வெளியாகி இருந்த இந்தக் கவிதையை எனது பழய பொக்கிஷங்களிலிருந்து கண்டேன். அதை 14.01.2025 நடந்த பொங்கலோடு சேர்த்துக் கொள்ளுவோம். பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்! ************************************* ஏட்டைப் படித்த நாங்களனைவரும் சேட்டைக் கோட்டை வெறுத்திடுவோம் காட்டையழித்து மாட்டைப் பூட்டி நாட்டை ஏரால் உயர்த்திடுவோம் சூட்டையடித்து நெல்லைக் கொட்டி மூட்டையிலிட்டுச் சேர்த்துதிடுவோம் ஆட்டை மாட்டை பண்ணையில் வளர்த்து சோட்டையுணவை உண்டிடுவோம் வீட்டையாளும் பஞ்சப் பாட்டை ஓட்டை வழியால் துரத்திடுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
-
- 8 replies
- 725 views
-
-
"நண்பர்கள்" [தன்முனைக் கவிதை] & "முத்துக் குளிப்போம்" "நண்பர்கள்" [தன்முனைக் கவிதை] "புரிந்துணர்வு மலர நண்பர்கள் தழைத்து ஓங்கும்! பொறாமை சூழ எதிரிகள் வளர்ந்து பெருகும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................. "முத்துக் குளிப்போம்" "ஆழத்தில் மலரும் முத்து சிற்பிகள் அழகு கோலத்தில் வண்ணக் கற்கள்! ஈழ நாட்டின் சிலாபத் துறையில் அலைகளுக்கு அடியில் பலபல இரகசியம்!" "ஓடுகளின் அரவணைப்பில் ஆழமாக கிடக்குது வண்ணவண்ண நிறத்தில் கண்களைக் கவருது! தூங்கும் புதையலை வெளியே எடுக்க வாருங்கள் நாம் முத்துக் குளிப்போம்!" [கந்தையா தில்லைவிநா…
-
- 0 replies
- 369 views
-
-
"பாசம்" "பாசம் ஒரு மென்மையான நீரோடையோ காற்றை சூடாக்கும் ஒரு புன்னகையோ இனிய வார்த்தைகளின் குளிர்ந்த தொடுதலோ உள்ளம் வெளிப்படுத்தும் அன்பின் கனிவோ இருண்ட இதயத்துக்கு கலங்கரை விளக்கமோ ஆன்மாவைப் பார்க்கும் பார்வையின் ஒளியோ?" "பாசம் என்றும் கருணையின் வடிவோ காதல் என்பதும் ஆசையின் ஈர்ப்போ பழகபழக முளை விடுவது நேசமோ உள்ளங்கள் கூடி சேருவது நட்போ அனைவர் மேலும் தோன்றுவது அன்போ பலபல வடிவில் எல்லாம் ஒன்றோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 1 reply
- 330 views
-
-
மாற்றமொன்றே மாறாதது! ****************************** ஆண்டுகள் பழசு,அனுபவம் பழசு மாண்டவர் பழசு,மன்னர்கள் பழசு இன்றைய நாளே எமக்கு புதிது எனிவரும் நாட்களும் புதிது புதிதே! பத்து ரூபாய்க்கு பவுண் விலை விற்றதும் பனாட்டொடியல் நாங்கள் உண்டதும் வித்துகள் சேர்த்து விவசாயம் செய்ததும் வேறு கிராமங்கள் வண்டிலில் சென்றதும். சூள்கொழுத்தி மீன்கள் பிடித்ததும்-தோணி சுக்கான் பிடித்து கரைகளத் தொட்டதும் நடந்தே நாங்கள் பள்ளிக்கு சென்றதும் நம்முன்னோர் வாழ்வுக் கதைகள் சொல்வதும். இந்தகாலத்து பிள்ளைகள் காதுக்கு இவைகள் எல்லாம் கற்பனைக்கதைகளே! எங்கள் வாழ்வோ இப்போது இல்லை இவர்களின் வாழ்வும் இதுபோல…
-
-
- 4 replies
- 538 views
-
-
"கால மாற்றத்தில் காணாத புள்ளினம்" "கால மாற்றத்தில் காணாத புள்ளினம் கோலம் வேறாக அழிந்த பண்பாடு உலகம் சுருங்க தழைத்த இணையம் ஓலம் வேண்டாம் உண்மை உணர்வாய்!" "பச்சை வெளிகள் வறண்டு காயுது நதிகள் உடைத்து நாட்டுக்குள் பாயுது வானத்தில் கேட்ட புள்ளுவம் காணோம் வண்ணச் சிறகுகள் பறப்பது மறையுது!" "காற்று கொடூரமாக வானம் வெறுமையாக கருணை குறைவாக கானம் வெளியாக காடுகள் அழிந்து கட்டிடங்கள் தோன்ற கார்மேகம் கூட மாசு படுகுது!" "பறவைகள் வாழ வழி தெரியவில்லை உறவுகள் கூடிக்குலாவ கிளைகள் இல்லை சிறகுகள் விரித்து பறப்பது எங்கே இறப்பதை தவிர முடிவு வேறுண்டா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 5 replies
- 507 views
- 1 follower
-
-
"களிப்பும் கடலானதே துளிப்பா காதலிலே" "களிப்பும் கடலானதே துளிப்பா காதலிலே ஒளிரும் அன்பிலே துள்ளுதே கவர்ச்சி எளிய நடையும் அன்னநடை ஆகுமே துளி துளியாய் கொட்டும் மழையிலே!" "கள்ளி இவளின் இடை அழகில் அள்ளி வீசுது கொள்ளை இன்பம் உள்ளம் நாடுது கட்டி அணைக்க வெள்ளம் போல பாசம் பொங்குதே!" "விழிகள் இரண்டும் எதோ பேசுது ஆழி முத்துக்களும் ஈர்ப்பு இழக்குது தோழியாக்க மனது எனோ துடிக்குது அழியாத உறவு இது ஒன்றே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 252 views
-
-
"மனமும் மனிதனும்" "மனமும் மனிதனும் போராடும் உலகில் கானம் அழித்து சூழலைக் கெடுக்கிறான் தானம் போட்டு இணையத்தில் பதிக்கிறான் மானம் புரியாமல் மனிதநேயம் தேடுகிறான்!" "மதி நுட்ப சிந்தனையாளனா மரத்துப்போனவனா நெருக்கடி வந்தபின்பே மாற்றுவழி தேடுகிறானா தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கிறதா எண்ணம் குறுகியதா மனிதம் தோற்றதா?" "உள்ளம் அலைபாயும் மனிதன் இவன் நெஞ்சம் முழுக்க மெய்யும் பொய்யும் மனது மாந்தனை உயர்த்தும் வீழ்த்தும் மனிதனின் விருப்பம் பாசாங்கும் தேடும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 289 views
-
-
"அள்ளக் குறையாமல் அன்பிருக்கு அத்தானே" "அள்ளக் குறையாமல் அன்பிருக்கு அத்தானே வெள்ளம் போல பாசம் அழைக்குதே குள்ள நரிகளும் பின்னால் தொடருதே வெள்ள மச்சான் துணைக்கு வாராயா?" "கிள்ள கிள்ள குறையாத அன்பே துள்ள துள்ள இன்பம் பெருகுதே பள்ளிப் பருவத்தில் பின்னால் அலைந்தவனே உள்ளம் துடிக்குதே காதல் மெய்யே?" "இளந்தாரிப் பெடியனே கட்டிளம் காளையே இளவட்டப் பொண்ணு காத்திருப்பது தெரியாதா மேளம் கச்சேரி வைப்பமா கல்யாணத்துக்கு தாளம் தப்பாமல் முத்தம் போடுவோமா?" "பொய் பறையாதே கண்டு கனகாலம் பொருத்தம் இருவருக்கும் அயத்துப் போனாயா பொம்பிளை இங்கே காத்து நிக்குதே பொறுத்தது போதும் சங்கதி சொல்லையா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்…
-
- 0 replies
- 262 views
-
-
"பனியில் நனைந்த சூரியன்" "பனியில் நனைந்த சூரியன் தெரிவதில்லை பணியில் நேர்மை காட்டியவன் வாழ்ந்ததில்லை குனிந்த இனம் என்றும் பிழைத்ததில்லை இனித்த பலகாரம் ஆரோக்கியம் தருவதில்லை!" "நனைந்து நடுங்கும் குளிரில் உடல் கனைத்து அதிர்க்கும் பொங்கு கடல் அனைத்து உயிர்களும் விரும்புவது கூடல் தினைப் புனம் காப்பது மடவரல்!" "சூரியன் உதிப்பது உலகம் வாழ நரி ஊளையிடுவது இரவில் மட்டுமே திரி எரிவது வெளிச்சம் கொடுக்க அறிந்தால் இவை சமூக நீதியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] கனைத்து = ஒலித்து அதிர்க்கும் = அதிரும்
-
- 0 replies
- 445 views
-
-
"ஈர விழிகள் என்னை ஈர்க்கிறதே!" "ஈர விழிகள் என்னை ஈர்க்கிறதே பாரமாய் அன்பு இதயத்தை தாக்குதே வீர மொழிகள் இனி வேண்டாம் தூர விலகாதே என்னிடம் வருவாயா?" "ஆற அமர்ந்து முடிவு எடுக்காயா கூற நினைப்பதை நேராய் சொல்லாயா சிறந்த பெண்ணே சீற்றம் வேண்டாம் நிறம் மாறலாம் காதல் மாறலாமா?" "கோரமான எண்ணம் அழிந்து போகட்டும் அரசியல் ஒழிந்து ஒற்றுமை பெருகட்டும் அரங்கத்தில் பார்க்கும் நாடகம் இதுவல்ல தரமான செயல்கள் கூட்டாதோ நட்பை?" "அறம் தரும் இன்பம் மலரட்டும் புறம் பேசும் பழக்கம் அழியட்டும் உரம் சேர்க்கும் பாசம் துளிரட்டும் விறலியே விரைந்து என்னைத் தழுவாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 326 views
-
-
"அடைமழை" [அந்தாதிக் கவிதை] "அடைமழை தொடர்ந்து ஐப்பசியில் பெய்யுது பெய்த நீரோ வெள்ளமாய் நிற்குது நிற்கும் தண்ணீரில் கழிவுகள் மிதக்குது மிதக்கும் எண்ணங்கள் தேடுது கடுதாசி கடுதாசி கப்பலாக அங்கே ஓடுது ஓடும் மீன்கள் அதைத் துரத்துது துரத்தும் மீனைப் பறவை கொத்துது கொத்தும் பறவை பசியைத் தீர்க்குது தீர்க்கும் பிரச்சனைகள் அப்படியே இருக்குது இருக்கும் வடிகாலும் முடங்கிக் கிடக்குது கிடக்கும் குப்பைகள் ஒட்டத்தை தடுக்குது தடுக்கும் எதையும் உடைக்குது அடைமழை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 267 views
-
-
"அன்பே ஆரமுதே" "அன்பே ஆரமுதே கரும்பே தேனே இன்பம் பொழியும் அழகு தேவதையே துன்பம் போக்கும் கருணை மாதே இன்னும் ஏன் தயக்கம் உனக்கு?" "மாசறு பொன்னே வலம்புரி முத்தே பாசம் கொட்டும் பெருங்குடி மகளே வாசம் வீசும் கூந்தல் அழகியே நேசம் கொண்டு அருகில் வருவாயோ?" "காதல் என்பது காமம் அல்ல மோதல் பிறக்கும் இடமும் அன்று சாதல் எம்மை அணுகும் வரை இதயம் சேரும் ஒற்றுமை நட்பே!" "உணர்வு ஒன்றி இருவரும் கலந்து உள்ளம் நாடும் இனிய உறவில் உணர்ச்சி தவிர்த்து நிலை அறிந்து உண்மை வாழும் இருவரின் பற்றே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 279 views
-
-
"நிலவுக்குள் நீயடி..!" "நிலவுக்குள் நீயடி நினைவில் நிறைந்தவளே நிம்மதி தேடி உன்னைத் தேடுகிறேன் முழுமதியே வருவாயோ அருகில்?" "கண்ணுக்குள் புதைந்த சித்திரமே மண்ணில் வாழும் இவனுக்கு பண்பு சொல்லாயோ காதல் பொழியாயோ?" "திங்கள் முகத்தில் திலகம் பதிக்க வரவா நான் தித்திக்கும் இளமை காதல் தேடுது கண்ணே மார்பைத் தழுவவா?" "நெஞ்சம் மகிழுதடி மஞ்சம் அழைக்குதடி வஞ்சகம் வேண்டாம் பெண்ணே கொஞ்சம் கருணை என்னிடம் காட்டினால் என்னடி?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 249 views
-
-
சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தகவிழாவின் ஒரு நாளில் எழுத்தாளர் சாருநிவேதிதாவை அங்கு போயிருந்த ஒரு வாசகர் ' என்ன சார், இப்படிச் சோர்ந்து போய் இருக்கிறீர்களே. மெலிந்தும் இருக்கிறீர்கள். உடம்புக்கு ஏதாவது ஆயிட்டுதா...........' என்று அக்கறையுடன் விசாரித்து இருக்கின்றார். அந்த வாசகரின் அக்கறைக்கு சாரு கொடுத்த பதில் நெத்தியடியையும் மிஞ்சியது. அந்தக் கேள்வியால் சாருவிற்கு எக்கச்சக்கமான கோபம் வந்துவிட்டது. இதற்கு ஏன் சாரு இவ்வளவு பதட்டப்பட வேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை. ஆனால் விளங்கவில்லை என்றவர்கள் மீதும் பாய்ந்திருக்கின்றார் சாரு.................🤣. ******************************************* இலக்கியச் சிக்கல் -----------------------------…
-
- 2 replies
- 348 views
-
-
தேவையானவை --------------------------- அலைபேசியில் அபாயச்சங்கு முழங்கியது நெருப்பு உங்கள் அருகில் உடனடியாக கிளம்பவும் அவசியமாக தேவையானவற்றை அளவாக எடுக்கவும் என்று அலைபேசி மின்னியது எவை தேவை என்று முகட்டைப் பார்த்தேன் முதலில் தேவை ஒரு காற்சட்டை' வீட்டிலிருந்து வேலை என்பதால் இடுப்பில் இருந்தது வெறும் சாரம் மட்டுமே அடுத்தது தேவை மட்டைகள் காசு மட்டை கடன் மட்டை அடையாள மட்டை என்று ஒரு கொத்து மட்டைகள் இருக்கின்றன் இங்கு எல்லோரிடமும் எதற்கும் கடவுச்சீட்டையும் எடுப்போம் ஓடிப் போக மெக்சிக்கோ வந்து நான் உள்ளே போய் விட்டால் திரும்பி வர அது வேண்டுமே அலைபேசியும் அ…
-
-
- 13 replies
- 891 views
-
-
"பொன்னந்தி மாலையிலே" "பொன்னந்தி மாலையிலே தனியே நிற்பவளே அன்ன நடையில் மனதைக் கவர்பவளே சின்ன இடையில் அழகு காட்டுபவளே அன்பு கொண்டேன் அருகில் வருவாயோ?" "முந்தானை காற்றில் மேலே பறக்குதே சிந்தனை தடுமாறி ஆசை தூண்டுதே எந்தன் இதயத்தை தொட்ட தேவதையே இந்திர மண்டலத்து ஊர்வசி நீயோ?" "வண்ணக் கோலத்தில் மயக்கம் தருபவளே மண்ணின் வாசனையை பண்பில் சொல்பவளே எண்ணம் எல்லாம் உன்னையே நாடுதே கண்ணே கண்மணியே பூச்சூட வரலாமா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 314 views
-
-
"தேடும் விழிகளில்" [கசல் கவிதை] "தேடும் விழிகளில் கதைகள் இருக்கும் சொல்லப்படாத கனவுகள் ஆடும்!" "மௌன பிரார்த்தனையில் ஏக்கம் விரிந்து காதல் கலந்து மோதல் வெடித்து பின்னிப் பிணைந்து கண்களின் கண்ணீர் ஏதேதோ சொல்லும்!" "சோகத்தின் திரைகள் வழியாக மகிழ்ச்சியின் முகமூடி வழியாக மனம் பறந்து தேடும் கண்களில் நம்பிக்கை ஒளிர்விடும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 305 views
-
-
"வாழ்ந்து பார்" வாழ்ந்து பார் நீங்க யாழில் தாழ்ந்து போன கதை புரியும்! ஆழ்ந்த சிந்தனை கொண்ட இவன் கீழ் மட்டம் தொட்டது தெரியும்! "வீழ்ந்த வரலாற்றை பாடமாகக் கற்று சூழ்ந்த வஞ்சகத்தை எடுத்து எறிந்து காழ்ப்பு களைந்து உண்மை அறிந்து மூழ்கிய ஒற்றுமையை மீட்டு எடுத்திடு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 266 views
-
-
"முற்றத்து மல்லிகையில் மூழ்கும் நினைவு" "முற்றத்து மல்லிகையில் மூழ்கும் நினைவு முட்டி மோதுது கொண்டையில் சூட்டியவனை! முல்லைக் கொடியாக கைகளில் ஏந்தினான் முத்துச்சரமாக நானும் புன்னகை சிந்தினேன்! "பட்டத்து ராணி நீயே என்றான் பகல் இரவாக காதல் தூவினான்! பகட்டு வார்த்தையில் என்னைக் கொடுத்து பருந்து வாயில் இரையாய் போனேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 218 views
-
-
"காசேதான் கடவுளடா" & "தர்மம் தலை காக்கும்" "காசேதான் கடவுளடா" "காசேதான் கடவுளடா ஆலயமும் வணிகமடா காதல் வேண்டுமா பரிசு கொடடா காதலர் தினம் வணிக சூழ்ச்சியடா! காலம் தாழ்த்தாமல் கையூட்டு கொடுத்தால் காரியம் நிறைவேறும் வெற்றியும் வருமடா!" "ஆண்டவனை வணங்க அர்ச்சனை வேறு ஆரம்ப கல்விக்கும் நன்கொடை வேண்டுமடா! ஆராத்தி தட்டிலும் ஏதாவது போடணும் ஆலவட்டம் ஏந்தினால் நன்மை கிடைக்குமடா ஆராய்ந்து பார்த்தல் அழுவதா சிரிப்பதா!" "தர்மம் தலை காக்கும்" "தர்மம் வகுத்த வழியில் நின்று கர்வம் மறந்து ஆசை துறந்து ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி அர்த்தம் உள்ள உதவி செய்யின் ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!" "தாய் தந்தை இரு…
-
- 0 replies
- 276 views
-
-
“ராஜ பார்வையின் ரகசியங்கள்” "ராஜ பார்வையின் ரகசியங்கள் எதுவோ ராதை கொடுத்த ஊடலின் வலியோ ராத்திரி துயிலாத விழிகளின் கோலமோ ராணியைக் காணாத ராமனின் சீற்றமோ?" "கண்கள் ஏங்கும் பார்வை ஏனோ கண்மணி சுற்றி சிவந்தது எதற்கோ கவலைகள் தந்த கண்மணி யாரோ களங்கம் படுத்திய செயல் என்னவோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 291 views
-
-
கரைச்சல் வேண்டும் ---------------------------------- கடவுளே வருடம் வந்து விட்டதே என்று காணி நிலம் கேட்பார்கள் சொத்து சுகம் கேட்பார்கள் நீங்கள் கொடுக்க வேண்டும் என்றில்லை ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கரைச்சலாவது கட்டாயம் கொடுக்கவும் ஒன்றுக்கு மேல் கொடுத்தால் இன்னும் நல்லது பெரிதாக தேவையில்லை சிறியவையாகவே போதும் பச்சை தண்ணீர் குடித்தால் மூக்கு ஓடுவது போல முருங்கைக்காய் சாப்பிட்டால் தோலில் அரிப்பு வருவது போல இனிப்பு சாப்பிட்டால் நெஞ்சு எரிவது உறைப்பு சாப்பிட்டால் வயிறு எரிவது நடந்தால் பாதம் நோவது இருந்தால் பிஷ்டம் நோவது படுத்தால் கழுத்து சுளுக்கு…
-
-
- 18 replies
- 804 views
-
-
“நினைவு வணக்கமோ?" [படக்கவிதை] "கார்த்திகை தீபம் ஏற்றும் காந்தையே காலத்தின் கட்டாயம் இது என்றாயோ? காரணம் கேட்டு நீதிக்குப் போராடிய காணா உயிரின் நினைவு வணக்கமோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] காணா - காணாமல் போன
-
- 0 replies
- 261 views
-