Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. "மீட்டாத வீணை.." வரலாறும், கலாச்சாரமும், இயற்கை அழகும் நிறைந்த யாழ்ப்பாண மாவட்டமானது எழில் கொஞ்சும் கடற்கரையினையும் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலப்பகுதிகளில் அதிக வெப்பநிலையினையும் டிசம்பர் - பெப்ரவரி வரை குளிரான காலநிலையினையும் கொண்டு இருப்பதுடன் தரைத் தோற்றத்தினை அவதானிக்கு மிடத்து கரையோர சமவெளியினை கொண்டும், அழகியத் தீவுகளினையும், பல்லுருவத்தன்மை கொண்ட கடற் கரைகளினையும், பாரிய மணல் மேடுகளினையும், நாற்புறமும் பனை சூழவும் காணப்படுகின்றது. அங்கு தான் கவிதா என்ற ஒரு இளம் பட்டதாரி ஆசிரியை, பெற்றோருடனும் சகோதர, சகோதரிகளுடனும் வாழ்ந்து வந்தார். அழகு மற்றும் நாகரிகம் என்ற வார்த்தைகளுக்கு அவளே உதாரணம். அவள் படிக்கும் காலத்திலும் சரி, இன்று ஆசிரியையாக பணிபுரிய…

  2. "மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை] துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தார். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தார். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவர் மட்டுமல…

  3. "பெண்ணே புயலாகு” இலங்கைத் தீவானது, தொன்மை வாய்ந்த இரு நாகரீகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பரியங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்கின என்பது வரலாற்று உண்மையாகும். என்றாலும் சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் கைமாறியதை அடுத்து, சிங்களப் புத்த பேரினவாதம் மேலாண்மை பெற்றது. இதனால் தமிழர்களுக்கு எதிரான அரச அடக்குமுறை குரூரமான வன்முறை வடிவமாக, கொஞ்சம் கொஞ்சமாக 1956, 1958, 1966, 1977, 1981, 1983, 1985, கலவரமாக மாறத் தொடங்கி, அது 2009 உச்சகட்டத்தை அடைந்தது வரலாறு ஆகும். வன்னி அடிப்படையில் நீர் மேலாண்மைக் குடியிருப்பு ஆகும். ஆறுகளும், கடல்களும், குளங்…

  4. "சிவப்பு உருவம்" இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட் மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிம…

  5. "காதல் கடிதம்" காதலின் சின்னம் காதல் கடிதம் என்பார்கள். அங்கு தான் ஒருவர் மற்றவர் மேல் உள்ள மோகம் அல்லது அழகு வர்ணனையை தங்கு தடை இன்றி, வெட்கம் இன்றி, வெளிப்படையாக கூறமுடியும். யாருக்கு தெரியும் என் காதல் தவறான புரிதலுடனும், பிழையான இடத்தில் சேர்ந்த காதல் கடிதத்துடனும் மலர்ந்தது என்று! “என் அன்பிற்கினியவளே, அழகின் தேவதையே என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடுகிறேன். அதை நீ எப்ப அறிவையோ நான் அறியேன்? எனக்கு முன்னால் உன்னைப் பார்க்கிறேன், நான் தலை முதல் கால் வரை உன்னை அன்போடு மெல்ல வருடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டு உன்னை ரசிக்கிறேன், ‘அன்பே! உண்மையாக உன்னைக் காதலிக்கிறேன்! உன்னுடைய இனிமை நிறைந்த தனி…

  6. "பொண்டாட்டி ராஜ்ஜியம்" இலங்கையின் வடமாகாணத்தில் ஒரு அமைதியான புறநகர் பகுதியில், அகிலா மற்றும் துகிலன் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக மகிழ்ச்சியாக, அவர்களின் காதலின் அடையாளமாக ஒரு அழகிய பெண் குழந்தையும் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். என்றாலும் நாளடைவில் மூடிய கதவுகளுக்குப் பின்னால், ஒரு இருண்ட மற்றும் ஒரு 'பொண்டாட்டி ராஜ்ஜியம்' மெல்ல மெல்ல தலை தூக்க தொடங்கியது. அகிலம் எல்லாம் தன் கையில் என்ற ஒரு திமிர் அகிலாவிடம் வளர்ந்துவிட்டது. துகிலன் அவளின் காதலிலும் அழகிலும் தன்னை இழந்து, அதை கவனிக்காமல் தூங்கி விட்டான் போலும்! இதைத்தான் தலையணை மந்திரம் என்கிறீர்களா? அகிலா ஒரு வலுவான விருப்பமும்…

  7. Started by shanthy,

    Saturday, July 4, 2020 குற்றம் 1 ----------+-++---- அன்று குடும்ப நீதிமன்றிற்கு காலை 10.20 மணிக்கு 74வது இலக்க அறைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். 24.12.2015 என்மீது நிகழ்த்தபட்ட வன்முறைக்கு எதிராக காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்ட வழக்கு விசாரணை நாளது. திருமதி.ஆனந்தா அவர்கள் 24.12.2015 அன்று நள்ளிரவு ஈடார் ஓபஸ்ரைன் மலைக்கோட்டை தேவாலயத்திற்கு தனது காதலருடன் போய் வந்திருந்தார். …

    • 0 replies
    • 1.5k views
  8. "வழிப்போக்கன்" “பூர்வீக நிலம், பூர்வீக கலாச்சாரம், பூர்வீக கிராமம் அல்லது நகரத்தின் மீது அன்பை வளர்ப்பது மிக முக்கியமான பணியாகும், அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த அன்பை எப்படி வளர்ப்பது? அது சிறியதாகத் தொடங்குகிறது - தன் குடும்பத்தின் மீதும், தன் வீடு மீதும், தன் பள்ளி மீதும் அன்புடன். படிப்படியாக விரிவடைந்து, பூர்வீக நிலத்தின் மீதான இந்த அன்பு உங்கள் நாட்டிற்கான அன்பாக மாறும் - அதன் வரலாறு, அதன் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்திற்காக ” / “Inculcating love for one's native land, native culture, native village or town is a very important task and there is no need to prove it. But how to cultivate this love? She starts small - with lo…

  9. "கனவே கலையாதே" கனவும், இயல்பும் ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் வேறுபட்டது, என்றாலும் சிலவேளை இயல்பாக நடக்கும் ஒரு சம்பவத்தை, இது கனவா என கருதும் அளவிற்கு ஆச்சரியப்படுத்தும் வலிமை கனவுக்கு உண்டு. அதேபோல கனவு கண்டு கொண்டிருப்பவர் இது இயல்பாகவே நடக்குமா என அவரை சிந்திக்க தூண்டிவிட்டு போகும் வல்லமையும் கனவுக்கு நிறையவே உண்டு. எனக்கு இரண்டுமே நடந்து உள்ளது அதனால்த்தானோ என்னவோ 'உங்களுக்கென ஒரு கனவு இருந்தால், அதைப் கெட்டியாகப் பிடிக்க வேண்டும், ஒருபோதும் விடக்கூடாது' என்று என் பொன்மொழியை மாற்றி உள்ளேன் இல்லை "கனவே கலையாதே" என்று வேண்டுகிறேன்! நான் இப்ப திருமதி ஜெயா தில்லை, ஆனால் நான் வேம்படி மகளிர் கல்லூரியில் உயர் வகுப்பு படிக்கும் காலத…

  10. "விடியலைத் தேடி" கிளிநொச்சி இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். எனினும் கிளிநொச்சியில் கிராஞ்சி, வலைப்பாடு, பள்ளிக்குடா, இரணைமாதா நகர் மற்றும் நாச்சிகுடா கிராமம் போன்றவை மீன்பிடிக் கிராமமும் ஆகும். இந்த நிலவளம், நீர்வளம் நிரம்பிய கிளிநொச்சி பிரதேசம், வன்னி நிலத்தின் முக்கிய பகுதியாக, வடமுனையில் இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களிலே, இந்த வன்னிப் பகுதியில், குறிப்பாக கிளிநொச்சிப் பிரதேசத்தில், ஆங்ஆங்கே சில குடியிருப்புகளே இருந்தன. அதைத் தவிர்த்து அநேக இடங்கள், அடர்ந்த காடுகளான வனப் பகுதியாகவே காணப்பட்டது. அந்தக் காலத்தில் பிற இடங்களில் இருந்து இந்த அ…

  11. "வறுமையின் சிறகினை அறுத்தெறி" அண்மையில் குண்டு தாக்குதலால் கால் இழந்த தந்தையையும், அயல் வீடுகளுக்கு சென்று துப்பரவு பணிகளில் ஈடுபடும் தாயையும், ஆறு பிள்ளைகளில் மூத்தவனாகவும் இன்று நான் இருக்கிறேன். எனக்கு வயது பதின்நான்கு எம் குடிசை "இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்" போல், உணவின்றி வருந்தி, மாறி மாறித் தோண்டி எலிகள் மடிந்த சுவருடையதாக இருக்கிறது. தாயோ "பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து முலைக்கோள் மறந்த புதல்வனொடு" என்பது போல பால் காணாது, பால் குடிப்பதையே நிறுத்திவிட்ட பிள்ளையுடன், என் கடைசி தம்பியுடன் வாடி நிற்கிறாள். …

  12. "காதல் கோட்டை" இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில், யாழ் நகரின் ஒரு சிறு பகுதியான அத்தியடியில் அப்பன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று கொழும்பு, பொரளையில் அவனின் உறவினர் ஒருவரின் வீட்டில் ஒரு அறையில் தங்கி, ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி முகாமையாளராக தன் முதல் உத்தியோகத்தை ஆரம்பித்தான். அகவை இருபத்தி மூன்று, இருபத்தி நாலு இருக்கும். ஒரு வாலிபனுக்கான ஆசைகள், கனவுகள் நிறைந்தவனாக, ஒரு உண்மையான அன்பை பெற்று வாழ்வை பூரணமாக்க வேண்டும் என்பதில் அவனுக்கு ஒரு விருப்பம், அவா இருந்ததில் வியப்பு இல்லை. நாளாக ஆக, தன்னுடைய தனிமையை அதிகமாய் உணரத் தொடங்கினான். முன்பு அத்தியடியில், பேராதனையில் இருந்…

  13. MY NOVEL "KALSSUVADU" ”காலச்சுவடு” நாவல் . பாதியில் கைவிடப்பட்ட எனது காலச்சுவடு நாவல் பிரதியை நீண்டகாலத்தின் பின்னர் மீண்டும் தூசி தட்டி எடுத்து திருத்தி எழுத ஆரம்பித்திருக்கிறேன். அந்த நாவலுக்கு முகவுரையாக நான் எழுதியவற்றை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். . காலச்சுவடு வ.ஐ.ச.ஜெயபாலன் , காட்டை வகிடு பிரிக்கும் காலச் சுவடான ஒற்றையடிப் பாதை - இளவேனிலும் உளவனும் 1970 . நூற்றாண்டுகாலங்களாக நம் மூதாதையர்கள் வழி வழியாகச் சொல்லி வந்த போதைதரும் கதைகளால் என் மனசு நொதிக்கும் செந் திராட்சை மது ஜாடியாக நிரம்பி வழிகிறது. என் முன்னோர்களாலும் சகபாடிகளாலும் பல லட்சம் தடவைகள் ஏற்கனவே சொல்லப்பட்ட அந்தக்கதைகளை என் பங்கிற்கான கற்பனைகளுடன் பல்லாயிரம்…

    • 0 replies
    • 1.6k views
  14. 'என் தங்கை' நான் பிறக்கும் பொழுது என் அம்மா, அப்பா இருவரும் மிகவும் மகிழ்வாக இருந்தார்கள். நான் அவர்களின் முதல் பிள்ளை. அவர்களுக்கு ஆண் பிள்ளை என்றால் கொள்ளை ஆசை. இரண்டு பையன்கள் வீட்டிற்கு வேண்டும் என்பது அவர்களின் கனவு. நான் ஐந்து வயது கடந்தபின், இரண்டாவது பிள்ளைக்கு முயற்சி செய்தார்கள். "யாயே, கண்ணினும் கடுங் காதலளே எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’ யாமே, ...... " [அகநானூறு 12] எம் தாய் தன் கண்ணினும் இவள்பால் மிக்க காதலுடையாள் எம் தந்தையும் (இவள் எங்கேனும் செல்வது காணின்) நிலத்தே இவள் அடி பொருந்தி நடக்கப் பொறாதவனாகி, ஏடி! இள…

  15. "வாழாவெட்டி" இலங்கையின் யாழ்பாணத்தில் ஒரு அமைதியான கிராமத்தில் நன்முகை என்ற ஒரு இளம் பெண் கனவுகள் நிறைந்த இதயத்துடன் உயர் வகுப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு, ஆசிரியர் ஆகும் எண்ணத்துடன் யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்று வந்தார். நவம்பர் 28, 2022 அன்று யாழ்பாணத்தை ஆண்ட இறுதி மன்னனான சங்கிலிய மன்னனின் குடும்பப்படம் தேசிய கல்வியியற் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டது. சங்கிலிய மன்னனின் குடும்பப்படத்தை சித்திரத்துறை மாணவ ஆசிரியர்களின் மூலம் கல்லூரியின் சித்திரத்துறை விரிவுரையாளர் நெறிப்படுத்தியிருந்தார். அதேவேளை கல்லூரியின் நுழைவாயிலில் தனிக்கருங்கல்லால் ஆன 13.5 அடி சங்கிலியன் உருவச்சிலை இருப்பதும் குறிப்பிடத் தக்கது. அன்று…

  16. "காதல் கடிதம்" காதலின் சின்னம் காதல் கடிதம் என்பார்கள். அங்கு தான் ஒருவர் மற்றவர் மேல் உள்ள மோகம் அல்லது அழகு வர்ணனையை தங்கு தடை இன்றி, வெட்கம் இன்றி, வெளிப்படையாக கூறமுடியும். யாருக்கு தெரியும் என் காதல் தவறான புரிதலுடனும், பிழையான இடத்தில் சேர்ந்த காதல் கடிதத்துடனும் மலர்ந்தது என்று! “என் அன்பிற்கினியவளே, அழகின் தேவதையே என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடுகிறேன். அதை நீ எப்ப அறிவையோ நான் அறியேன்? எனக்கு முன்னால் உன்னைப் பார்க்கிறேன், நான் தலை முதல் கால் வரை உன்னை அன்போடு மெல்ல வருடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டு உன்னை ரசிக்கிறேன், ‘அன்பே! உண்மையாக உன்னைக் காதலிக்கிறேன்! உன்னுடைய இனிமை நிறைந்த தனித்துவமான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து …

  17. "நிலவே முகம் காட்டு .. " ஞாயிறு, செப்டம்பர் 23, 2018, நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாக சென்னை நகரம் இரண்டு மணித்தியாலத்துக்கு ஆர்வமும், அதிர்ச்சியும் அடைந்தது. பலர் கைகளில் டெலஸ்கோப் இருந்தது. நிலாவையே பார்த்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் பிரத்தியேக கண்ணாடி அணிந்தும் இருந்தனர். அப்போது அவர்களில் சிலர், "ஆமாம்.. பாபா முகம் தெரிகிறது" எனக் கூறி பரவசப்பட்டனர். ஒருசிலர் நிலாவை பார்த்து வணங்கவே ஆரம்பித்து விட்டனர். எனக்கு இவர்களை பார்க்க வேடிக்கையாக இருந்தது, நான் உயர் வகுப்பு படிக்கும் கூலித் தொழிலாளியின் மகன். எங்கள் குடிசைக்கு கொஞ்சம் அருகில் தான், ஒரு மாட மாளிகையில் ஒரு கோடீஸ்வரர் வாழ்ந்து வாரார். அவர் குடும்பமும் தமது மொட்டை மாடியி…

  18. மரங்கள்.! (குறுங்கதை) பலாமரம் ஒன்று வேலிக்கு அப்பால் நின்ற புளியமரத்தை ஏளனமாகப் பார்த்து என்னைபோல் இனிமையான பழம் உன்னால் தரமுடியுமா என்றது. இதைக்கேட்ட புளிய மரம் இயற்கையோடு நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி எந்தமரமும் கேட்டதில்லையே என மனதுக்குள் யோசித்தது. பின் சிரித்துவிட்டு சொன்னது என்னைப் போல புளிக்கின்ற பழமும் உன்னாலும் கொடுக்க முடியாது.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்குதென்று ஏற்றுக்கொள். பழங்களில் நீதான் பெரியவன் இனிப்பானவன் என்று எண்ணிக்கொண்டு பெருமை பேசாதே என்றது. மனிதர்கள் போல் உயர்வு தாழ்வு போட்டி பொறாமை இருக்கக் கூடாதென்று எட்டத்தில் நின்ற வேப்பமரம் பிசின் வடிய கத்தியது. எங்கள் காலம் என்ன ஆகுமோ என ஏங்கி அசைந்தன சுற்றிநின்ற சிறுமரக்கூட்டம்.மரபணு மாற…

  19. "காதலே கலையாதே" உலகப் புகழ் பெற்ற காதலர்கள் என இன்று நாம் போற்றும் ரோமியோ - ஜூலியட், சகுந்தலை - துஷ்யந்தன், லைலா - மஜ்னூன், மும்தாஜ் - ஷாஜஹான், கிளியோபட்ரா - மார்க்ஆண்டனி, அம்பிகாபதி - அமராவதி, தேவதாஸ் - பார்வதி, உதயணன் - வாசவதத்தை, சங்க இலக்கிய ஆதிமந்தி - ஆட்டநத்தி இப்படி யாரை எடுத்தாலும் அங்கு காதல் வாழ்ந்ததாக முற்றும் முழுதாக சொல்லமுடியாது. பல சோகத்தில் முடிந்தன, பல மரணத்தில் முடிந்தன என்பதே உண்மை. என்றாலும் "காதலே கலையாதே" என்ற வார்த்தைக்கு அர்த்தமும் மதிப்பும் இருப்பதை காண்கிறோம். என் வாழ்வும் இப்படி ஒன்றோ என எண்ணத் தோன்றுகிறது. மும்தாஜ் - ஷாஜஹான் மற்றும் உதயணன் - வாசவதத்தை காப்பியத்தி…

  20. கறுப்புச் சட்டை ------------------------ அறிவித்தலில் இருந்த திகதிகளை கழித்துப் பார்த்தால், அவருக்கு 55 வயதுகள் தான் ஆகியிருந்தது என்று வந்தது. அடப் பாவமே, இப்படி இடைநடுவிலேயே போய்ச் சேர்ந்து விட்டாரே என்ற மெல்லிய கவலை பற்றிப் பிடித்தது. அவரை சில தடவைகள் அங்கே இங்கேயென்று பார்த்திருக்கின்றேன். ஆனால் பழக்கம் எதுவும் இல்லை. ஒரு தடவை கூட அவருடன் உரையாடியதும் இல்லை. நல்ல மனிதன் என்று அவர் உயிருடன் இருக்கும் போதே பலரும் சொல்வார்கள். தோற்றத்தில் இன்னும் ஒரு பத்து வயதுகள் அதிகமாகவே தெரிந்திருந்தார். எப்படி இறந்திருப்பார் என்று அறிவித்தலில் போட மாட்டார்கள், ஆனால் காலமானார் என்று இருந்தது. அகாலமானார் என்று இல்லை, ஆகவே விபத்து என்று எதுவும் இல்லை. காலம…

  21. "விட்டுக்கொடுத்துப் பழகு" 'விட்டுக்கொடுத்துப் பழகு', கேட்க நல்லாத்தான் இருக்குது. ஆனால் பழகின எனக்குத்தான் தெரியும் அதன் கொடுமை . 'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு' என்று இன்றும் சொல்பவர்கள் உண்டு. அவர்கள் இன்னும் அடி வாங்காதவர்கள் என்றே எண்ணுகிறேன்! காலம் மாற கோலம் மாறும் என்பது உண்மையே! அப்படித்தான் என் மனம் முணுமுணுத்துக் கொண்டு இருந்தது. நான் என் மனைவியை காதலிக்க ஆரம்பிக்கும் பொழுதே , 'என் மனதுக்கும் உண்மைக்கும் ஒவ்வாத ஒன்றில் நான் என்றும் ஈடுபட மாட்டேன். என் உணவு சைவம் , உடை , அலங்காரம் பகட்டு இல்லாமல், தேவையின் அடிப்படையில். அது என் தனிப்பட்ட கொள்கை, அதே போல நீ…

  22. "நல்லிணக்கக் தணல்" இலங்கை யாழ் நகரில், புகையிரத நிலையத்துக்கும் நாவலர் மணடபத்துக்கும் அருகில் உள்ள அத்தியடி என்ற ஒரு இடத்தில் தில்லை என்ற ஒரு நபரும் அவரது மனைவி ஜெயாவும் வாழ்ந்து வந்தார்கள். ஜெயா ஒரு பாரம்பரிய மனிதராக இருந்ததுடன் கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகளில் ஆழமாகவும் வேரூன்றி இருந்தார், அதே நேரத்தில் தில்லையோ மிகவும் நவீனமாகவும் திறந்த மனதுடனும், மாற்றங்களை தேடுபவனாகவும், மூட நம்பிக்கைகள் மற்றும் சமயங்கள் வியாபாரமாக செய்யும் செயல்களை எதிர்ப்பவனாகவும் இருந்தார். இருவருக்கும் இடையில் சில பல கருத்து வேறுபாடுகள் இருந்ததால், ஒருவரையொருவர் நேசிப்பது, அல்லது நல்லிணக்கம் ஒரு தீப்பிழம்பு போல இருந்தது. அது எரிந்து ஒளி கொடுக்கவும் இல்லை, அணை…

  23. இன்றும் அன்றும் அரசியலிலும் சிங்கள ஆதிக்கத்திலும் மாற்றம் இல்லை என்பதால் இதை இங்கு இணைக்கின்றேன் ---- 1994 இல் இடம்பெற இருந்த தேர்தலில் சந்திரிக்கா ஒரு சமாதான தேவதையாக பிரச்சாரப்படுத்தப்பட்டுக் கொண்டு இருந்தார். சந்திரிக்கா வந்தால் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்றளவுக்கு அவர் மீதான நம்பிக்கை கட்டியெழுப்பட்டுக் கொண்டு இருந்தது. சிங்கள அரசியலமைப்பில், முற்றிலும் சிங்கள இயந்திரமயப்படுத்தப்பட்ட சிவில் நிர்வாக அமைப்பில் தமிழருக்கு எக்காலத்திலும் தீர்வு வராது என்ற அரசியல் ரீதியிலான உண்மையை சரிநிகர் எமக்கு வழங்கியிருந்தது. அந்த உண்மையை ஒற்றி நான் எழுதிய சிறுகதை இது, இதை நான் எழுதியது 1994 இல். சரியாக 20 வயதில். இது பிரசுரிக்கப…

  24. தலைப்பு : முக பவுடர் முக பூச்சு சாயங்களுடன் தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்தவள் திடீரெனகத்தினாள்கதை ; கண்ணாடி ^^^ஒரு வார்த்தை கதைகள் எழுத்துருவாக்கம் கே இனியவன் மேலும் தொடரும்

  25. "மர்மம் விலகியது" இலங்கைக் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர, மக்கள் விடுதலை முன்னணி [சிங்களத்தில் Janatha Vimukthi Peramuna] என்ற ஒரு கட்சியை நிறுவினார். இவற்றால் கவரப்பட்ட படித்த கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், முக்கியமாக சிங்கள மக்கள் பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். அவர்கள் 1971ம் ஆண்டும் மீண்டும் 1987-1989 ம் ஆண்டும் ஆயுதப் புரட்சி அரசுக்கு [பெரும்பாலும் சிங்களவர்களை கொண்ட] எதிராக செய்தனர். அப்படியான ஒரு காலகட்டத்தில், நான் பேராதனை வளாகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்தேன். என்னுடன் பல்கலைக்கழக நூலகத்தின் உதவி நூலகர், ஆறுமுகம், மிகவும் நண்பராக இரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.