Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் பதில்! மின்னம்பலம் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அனுமதிப்பதற்காக 260 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 20) நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அமைச்சர்கள், மருத்துவர்களுடன் கொரோனா வைரசைத் தடுப்பது தொடர்பாகப் பலமுறை ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. இந்நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையிலும், தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பாகச் சிகிச்சை அளிக்கின்றனர். இதன் காரணமாக, இன்றைக்குக் குணம் அடைந்தவர்களின் எண…

  2. சர்வதேச யோகா தினம்: தமிழகத்தில் வென்டிலேட்டரில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு யோக நித்ரா சிகிச்சை தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 650 நபர்களுக்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவ முறை சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அவர்களின் உடல்நலனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மருத்துவர்கள் கண்காணித்துவருகிறார்கள். கொரோனாவுக்கு ஆங்கில மருத்துவ முறையில் தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை என்ற நிலை நீடிக்கிறது. வைட்டமின் மாத்திரைகள் வழங்குவதோடு இந்திய மருத்துவ முறைகளையும் பின்பற்றவேண்டும் என இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்ததை அடுத்து, தமிழகத்திலும் இயற்கை, யோகா மருத்துவத்தில் சோதனை செய்யப்படுகிறது. நோய் எதிர்ப்பு பானம் தயாரிப்பது எப்படி?…

  3. நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8ம் வகுப்பு மாணவனால் பரபரப்பு நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பதிவு: ஜூன் 19, 2020 17:17 PM சென்னை, சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த்தின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. எனினும், இந்த செயலில் ஈடுபட்ட நபர் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் 8ம் வகுப்பு பட…

  4. 10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி 10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பதிவு: ஜூன் 19, 2020 12:06 PM சென்னை கொரோனா தொற்றில் இருந்து மாணவ-மாணவிகளை காக்கும் வகையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்…

  5. உதவிகள் குவிந்தாலும் நுங்கு வெட்டுவதைத் தொடரும் மருத்துவ மாணவர்! ஈரோடு நுங்கு வெட்டி, விற்பனை செய்யும் மருத்துவ மாணவர் சிவாவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் உதவிக்கரம் நீட்டியிருக்கும் நிலையில், “உதவிகளுக்கு நன்றி. எனினும், எங்கள் குடும்பத்துக்கே சோறு போடும் தொழிலை விடமுடியுமா?” எனத் தொடர்ந்து நுங்கு விற்று வருகிறார் சிவா. ஈரோடு மாவட்டம், எழத்தூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவரது குடும்பமே ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதிகளிலிருந்து நுங்கு குலைகளை மினி ஆட்டோவில் ஏற்றி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு எடுத்து வந்து வியாபாரம் செய்து வருகிற…

  6. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து சிறப்பு மருந்து சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுத்ததால் வண்டலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பதிவு: ஜூன் 19, 2020 08:16 AM சென்னை சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுத்ததால் வண்டலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொரோனா தொற்று தீயாய் பரவிய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், எந்தவித விதி மீறலிலும் ஈடுபடாமல் இருந்து சட்…

  7. கரோனா நோயாளிகள் ஒருவாரத்தில் குணமடைகின்றனர்; சித்த மருத்துவர்களை ஆரம்பத்திலேயே களமிறக்கியிருக்க வேண்டும்; மருத்துவர் வீரபாபு சிறப்புப் பேட்டி சித்த மருத்துவர் வீரபாபு தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி நிலவரப்படி, 31 ஆயிரத்து 667 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 22 ஆயிரத்து 149 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த ஒருவார காலமாக தினந்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடக்கிறது. தினந்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையிலும் சென்னையே முதலிடத்தில் உள்ளது. கரோனா தொற்றின் தாக்கம் வீரியமடைந்து வரும் நிலையில், தமிழக அரசின் சார்பாக, சென்னையில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் க…

  8. தமிழ் மொழிக்கு ஏற்ப ஆங்கிலத்தில் ஊர் பெயர்கள் மாற்றம்: தமிழக அரசு ஆணை ரத்து 14 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள், இடங்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்பக ஆங்கிலத்தில் ஒலிக்கும் வகையில் திருத்தி வெளியிடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்படுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரி…

  9. நாட்டுக்காக மகன் உயிரை தியாகம் செய்ததை இட்டு பெருமை -லடாக் மோதலில் பலியான இராணுவ வீரரின் தாய் உருக்கம் எனது ஒரேயொரு மகனை பறிகொடுத்ததை இட்டு நான் மிகவும் துயர் அடைகின்றேன். எனினும் நாட்டுக்காக தனது உயிரை அவர் தியாகம் செய்ததை இட்டு நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு லடாக் மோதலில் உயிரிழந்த இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கேணல் சந்தோஷ் பாபுவின் தாயாரான மஞ்சுளா உருக்கமாக தெரிவித்துள்ளார். ஞாயிறன்று மகனுடன் கடைசியாக பேசியதாக தெரிவித்த அவர் அங்கிருந்து வரும் தகவல்கள் குறித்து விசாரித்தபோது,அதை நம்ப வேண்டாம் எனவும், உண்மையான நிலவரம் வேறு எனவும் அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மகன் இறந்த தகவலை முதலில் நம்ப மறுத்ததாக கூறும் தந்தை உபேந்தர், உண்மை அதுவென தங்களு…

    • 3 replies
    • 674 views
  10. உறைநிலையில் சென்னை: பசித்திருக்கும் வயிறுகளுக்கு என்ன பதில்? மீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ளலாகின்றன சென்னையும் அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும். ஊரடங்கு எனும் சொல்லுக்குப் பின் மக்கள் கொடுக்கும் விலை என்னவென்பதை மிகச் சுலபமாக எண்ணிவிடுகிறதோ அரசு என்கிற கேள்வியே பிரதானமாக எழுகிறது. கிருமித் தொற்றைக் குறைப்பதற்கான தவிர்க்க முடியாத வியூகம் என்று அரசு இதற்கான காரணத்தைச் சொல்லுமானால், முன்னதாக அமலாக்கப்பட்ட ஊரடங்கு நாட்களில் அரசு இயந்திரம் சாதித்தது என்ன என்ற பதில் கேள்வி தவிர்க்கவே முடியாதது. சென்னையில் முந்தைய ஊரடங்குக்குப் பிறகு, மே 25 முதலாகவே தொழிற்பேட்டைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஜூன் 1 முதலாகக் கடைகளைத்…

  11. ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு மனு - தொடர்ந்து உண்ணாவிரதத்தில் முருகன் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் வேலூர்ச் சிறையில் ஜீவசமாதி அடைவதற்கு அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் ஜீவசமாதி அடைவதற்கு அனுமதிக்க கோரி முருகன் கடந்த முதலாம் திகதி முதல் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 7 ஆவது நாளாக நேற்றும் அவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார். முருகன் தனது மனைவி நளினி மற்றும் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் …

  12. மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3,000 கோடி தேவை: பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை பிரதமர் மோடி மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியுடன் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார். ஆலோசனையின்போது ‘‘மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3000 கோடி உடனடியாக வழங்க வேண்டும். மார்ச் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி வழங்க வேண்டும். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு மறு நிதியு…

  13. கோவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் உட்பட 11 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஆண், மூச்சுக்குழாயில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக கோவை அரசு மருத்துவமனையின் தொண்டை, மூக்கு, காது சிகிச்சைப் பிரிவில் கடந்த 8-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக 'டிரக்யாஸ்டமி' அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார். பிறகு, இவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் …

  14. ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு- மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத…

  15. அடையாளமே இல்லாதவர்களிடம் அடையாள அட்டை கேட்கிறது அரசு! - திருநபர் கிரேஸ் பானு பேட்டி முகம்மது ரியாஸ் நம் சமூகத்தில் திருநபர்களில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். தனியே அலைந்துதிரிந்து, தன் போன்றவர்களைக் கண்டடைந்து, சிறு குழுவாக உருப்பெற்றவர்கள். மக்கள் புழக்கம்தான் அவர்களுக்கான மூலதனம். ஊரடங்குச் சூழலில் அவர்கள் என்ன ஆனார்கள்? திருநபர் சமூகச் செயல்பாட்டாளரும், எழுத்தாளரும், திருநபர் கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான கிரேஸ் பானுவிடம் பேசினேன் இந்த ஊரடங்குக் காலகட்டத்தில் திருநபர்கள் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்? தமிழ்நாட்டில் உத்தேசமாக 5 லட்சம் திருநபர்கள் இருக்கிறார்கள். பெருந…

  16. ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி ஆர்.எஸ்.பாரதி: கோப்புப்படம் சென்னை வன்கொடுமைத் தடுப்பு வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மா…

  17. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஜூன் 19ஆம் திகதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்நிலையில், இது குறித்து இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த 4 மாவட்டங்களிலும் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை மையங்க…

  18. `வேலூரில் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்களால், பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது இளம் பெண் அவர். 11ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் வீட்டுக்குப் பின்புறம் உள்ள குளியலறையில் குளிப்பதை அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் வீடியோ எடுத்து மிரட்டியதால் அப்பெண் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். குளிக்கும் வீடியோவை அனுப்பி பணம் கேட்டும், தனியே வருமாறு வலியுறுத்தியும் அவர்கள் தொந்தரவு செய்த நிலையில் சனிக்கிழமை இந்த விபரீத முடிவை சிறுமி எடுத்ததாக காவல் துறை கூறுகிறது. குற்றம்சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாணவி கொடுத்த வாக்குமூலத்தில், "எனக்குத் தெரியாமல் நான் குளிப்பதை வ…

  19. நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% உள் ஒதுக்கீடு: அவசரச் சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் சென்னை நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. குழு உறுப்பினர்…

  20. திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் காலமானார் Web Team Published : 10,Jun 2020 08:38 AM கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் இன்று காலமானார். Advertisement திமுக எம் எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டாம் ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அண்மையில் அன்பழகனின் உடலை பரிசோதித்…

  21. `மாறுபட்ட உடல்நிறம், குட்டை வால்!' - குன்னூரில் உலவும் விசித்திர காட்டுமாடு; அதிர்ச்சியில் வனத்துறை காட்டுமாடுகளின் முழங்கால் வரை வெள்ளையாகவும் உடல் கறுப்பு நிறத்திலும் இருப்பதுதான் இயல்பு. ஆனால், இந்தக் காட்டுமாடு மாறுபட்ட நிறத்தில் காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்ட சாலையைக் காட்டுமாடு கூட்டம் ஒன்று கடந்துள்ளது. 20-க்கும் அதிகமான காட்டுமாடுகள் இருந்த அந்தக் கூட்டத்தில் ஒரு காட்டுமாடு மட்டும் மாறுபட்ட நிறத்தில் காணப்பட்டுள்ளது. இதைப்பார்த்த குன்னூர் கரன்சி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இயல்பற்ற நிறத்துடன் காணப்படும் இந்தக் காட்…

  22. புதுக்கோட்டையில் கல்லூரி மாணவி ஆணவக்கொலை?- காதலன் கண்ணீருடன் எஸ்.பியிடம் புகார் இருவருக்கும் திருமண வயது பூர்த்தியடையாததால், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று போலீஸார் கூறியுள்ளனர். புதுக்கோட்டை அருகே தோப்புக்கொல்லையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விவேக் (20). பெயின்டர் வேலை செய்து வருகிறார். திருவரங்குளத்தைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன் என்பவரது மகள் சாவித்திரி (19). இவர் புதுக்கோட்டை அரசுக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். விவேக்கும், சாவித்திரியும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் சாவித்திரியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்குத் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சம…

    • 1 reply
    • 677 views
  23. கடலூரில் அசத்தும் இளைஞர்கள்: மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரில் முகக்கவசம் தயாரிப்பு வெட்டிவேரில் தயாரிக்கப்படும் முகக்கவசம் கடலூர் ஊரடங்கு காரணமாக தேக்கம் அடைந்துள்ள மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரில் முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்து கடலூர் இளைஞர்கள் அசத்தி வருகின்றனர். வெட்டிவேர் நறுமணமிக்கது மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும் கொண்டது. வெட்டிவேரில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெட்டிவேர் சாகுபடி…

  24. சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட 97 வயது முதியவர் சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து மக்களை தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் தொற்று எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியவர்களுக்கு இந்த நோய் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 97 வயது முதியவர் கிருஷ்ணமூர்த்தி, பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். இது அனைவரிடமும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணமூர்த்திக்கு கடந்த மாதம் 30ம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, காவேரி மருத்துவமனையில் சேர்க்…

  25. 81 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் மல்லிப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள். தஞ்சாவூர் மீன்பிடித் தடைக்காலம், கரோனா ஊரடங்கு ஆகியவற்றால் 81 நாட்கள் கடந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் சுமார் 150 விசைப்படகுகள் உள்ளன. விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமை என வாரத்தில் 3 நாட்களும், மற்ற நாட்களில் நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில், கரோனா காரணமாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.