தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
கறுப்பர் கூட்டம் யூ-ரியூப் தளத்தில் இருந்து 500 காணொளிகள் நீக்கம்! கறுப்பர் கூட்டம் யூ-ரியூப் தளத்தில் பதிவிடப்பட்டிருந்த 500இற்கும் மேற்பட்ட காணொளிகள் நீக்கப்பட்டதாக சென்னை சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தளத்தை முடக்க வேண்டும் என யூ-ரியூப் நிறுவனத்திற்கு சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கறுப்பர் கூட்டம் தளத்தை ஒட்டுமொத்தமாக யூ-ரியூப் நிறுவனம்தான் முடக்க முடியும் என்றும் இருப்பினும் அதில் சர்ச்சைக்குரிய காணொளிகள் பல இருப்பதாலும் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினைகள் மேலும் ஏற்படக் கூடும் என்று கருதுவதாலும் பொதுமக்கள் யாரும் அந்தக் காணொளிகளைப் பார்க்க மு…
-
- 0 replies
- 343 views
-
-
நளினி தற்கொலைக்கு முயன்றதன் பின்னணி என்ன? விசாரணையை முடுக்கிவிட்டுள்ள அதிகாரிகள் July 21, 2020 தமிழகத்திலுள்ள வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, திங்கள்கிழமை இரவு துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றிருப்பது குறித்த செய்திகள் வெளியானதையடுத்து அது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள். இதுதொடர்பாக, சிறைத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் 28 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் தங்களுக்கு விட…
-
- 2 replies
- 842 views
-
-
கீழடியில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கீழடியில் ரூ.12.25 கோடியில் அருங்காட்சியகத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பதிவு: ஜூலை 20, 2020 10:46 AM சென்னை கீழடி அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஆயிரக் கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச்…
-
- 1 reply
- 351 views
-
-
தமிழ் நாட்டில் உணர்வுபூர்வமாகும் சமூக நீதிக் களம் எம். காசிநாதன் / 2020 ஜூலை 20 தமிழகத்துக்குச் சட்டமன்றத் தேர்தல், 2021 மே இல் நடைபெற வேண்டும். 2017 பெப்ரவரியில் தமிழக முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, 2021 மே இல், தனது பதவி காலத்தை நிறைவு செய்யப் போகிறார். “கொல்லைப்புற வழியாக, ஆட்சிக்கு வர மாட்டோம்” என்ற தி.மு.க தலைவர் ஸ்டாலினின் முடிவும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசாங்கம், அ.தி.மு.க அரசாங்கத்துக்கு அளித்த ஆதரவும், எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டிப்பு ‘போனஸ்’ ஆகி, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை, வேறு வழியில் சிந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தியது. அதன் விளைவாகவே, அ.தி.மு.க அரசாங்கம் இன்று வரை நீடித்து வருகிறது; இனியும், 2021 மே வரை நீடிக்கப் போகிறது. …
-
- 0 replies
- 453 views
-
-
பி.ஜே.பி-யில் இந்துகள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் பல தரப்பு மக்கள் வரை அனைவரும் இருக்கிறார்கள். சாதி, மதம் பார்க்காமல் சமமாக நடத்துவதோடு, அனைவருக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. சந்தனக்கடத்தல் வீரப்பனை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் என மூன்று மாநில காவல்துறைக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். இவர் 2004-ம் ஆண்டு தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய மூத்த மகள் வித்யா வீரப்பன், கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க-வில் இணைந்தார். அவருக்குத் தற்போது மாநில இளைஞரணி துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. வித்யா வீரப்பன் வித்யா வீரப்பனிடம் ப…
-
- 0 replies
- 496 views
-
-
பள்ளிகள் திறப்பு: தமிழக அரசின் நிலை என்ன? மின்னம்பலம் கொரோனா ஊரடங்கு காரணமாக, 2020-21ஆம் கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவே இல்லை. மார்ச் 23ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் விடுமுறை இன்னும் தொடர்வதால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி இந்திய அளவில் பெற்றோர்கள் மனத்தில் அலைபாயும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. அதேநேரம் குழந்தைகளின் பாதுகாப்பும் முக்கியம் என்ற பதற்றமும் பெற்றோர்களிடத்தில் இருக்கிறது. ஆன்லைன் கல்வியிலும் மாணவர்கள் முழுமையான முறையில் சேரவில்லை என்பதே டிஜிட்டல் இந்தியாவின் நிதர்சன நிலை. இந்த விவகாரத்தில் பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை இன்று வரை தெரிவிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. நாடு முழுது…
-
- 0 replies
- 485 views
-
-
தமிழகத்தில் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி! மின்னம்பலம் தமிழகத்தில் கோயில் திருவிழாக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. திருவிழாக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் தரிசனம் இல்லாமல் கோயில்களில் பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. தற்போது திருவிழாக் காலம் என்பதால் பக்தர்கள் இல்லாமல் திருவிழா நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை இன்று (ஜூலை 20) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் குறிப்பிட்ட திருவிழாக்கள் சிறப்பு உடையதாகவும்…
-
- 0 replies
- 377 views
-
-
ஆடி அமாவாசை : ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், வேதாரண்யத்திற்கு தர்ப்பணம் கொடுக்க தயவு செய்து போகாதீங்க திருச்சி: ஆடி அமாவாசை அன்று மக்கள் ஆறு, கடல்களில் புனிதநீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் போன்றவை கொடுப்பது வழக்கம்.ஆயிரக்கணக்கான மக்கள் வருமிடத்தில் கொரோனா தொற்று வாய்ப்பு அதிகமிருப்பதால், அன்றைய தினம் பொதுமக்கள் திருச்சி அம்மா மண்டபத்திற்கு வருவதற்கு அரசின் வழிகாட்டுதல்படி போலீசார் தடைவிதித்துள்ளனர். இதேபோல ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடல், வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரைக்கும் தர்ப்பணம் கொடுக்க வரவேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்திலிருந்து நாடெங்கும் மு…
-
- 0 replies
- 689 views
-
-
பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல் - என்ன நடந்தது? தமிழகத்தில் கோவை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது நள்ளிரவில் மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்டது என்ற புகாரை அடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோவிலூர் அருகே கீழையூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்தவர்களை கண்டறிந்து கைது செய்யவேண்டும் என பெரியாரிய அமைப்பினர் கோரிக்க…
-
- 14 replies
- 1.9k views
-
-
திருக்குறள் ஆராய்ச்சி, அறநெறி பரப்பும் உலக மையம் நிறுவ வேண்டும்.மோடிக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை சென்னை: திருக்குறள் ஆராய்ச்சி மற்றும் அறநெறி பரப்பும் உலக மையம் நிறுவ வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். உயர்ந்த கருத்துக்களை கொண்ட சிறந்த நூல் திருக்குறள், அதனை இன்றைய இளைஞர்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ஏற்கனவே லடாக் பகுதியில் படைவீரர்களை சந்தித்து உரையாடிய போது மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு" என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார். இப்படி திருக்குறளின் மேன்மையை, பெருமையை, திக்கெட்டும் பேசி, பரப்பி வரும் பிரதம…
-
- 0 replies
- 374 views
-
-
நீதிமன்றத் தாமதத்தாலும், குழப்பமான நடைமுறைகளாலும் நானும் பாதிக்கப்பட்டேன்’: நாளை ஓய்வுபெறும் உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி உருக்கம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி : கோப்புப்படம் புதுடெல்லி நீதிமன்றம் நீதி வழங்குவதில் ஏற்பட்ட தாமத்தாலும், குழப்பமான நடைமுறைகளாலும் நானும் பாதிக்கப்பட்டேன். விபத்தில் இறந்த என் தந்தைக்கு இழப்பீடு பெறுவதில் கடும் சிக்கல் இருந்தது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி உருக்கமாகத் தெரிவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி நாளை (19-ம் தேதி) ஓய்வுபெற உள்ளார். அவருக்கு நேற்றுதான் கடைசி வேலை நாள் என்பதால், அவருக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 433 views
-
-
ஆம்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 103 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினார் ஆம்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 103 வயது மூதாட்டி குணமடைந்து இன்று வீடு திரும்பினார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியவரிக்கம் கிராமத்தைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி ஒருவர், தன்னுடைய மகள் மற்றும் மகள் வயிற்றுப் பேத்தி ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 4 தலைமுறைகளைக் கண்ட மூதாட்டிக்கு 13 பிள்ளைகள். இவர்களில் 12 பேர் தற்போது உயிருடன் இல்லை. இவருடைய மகளும், பேத்தியும் கணவரை இழந்தவர்கள். வாழ்வாதாரத்துக்காக ஆம்பூரில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் மூதாட்டியின் பேத்தி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இந்நிலையில், மூதாட்…
-
- 0 replies
- 354 views
-
-
சர்வதேச விருது பெற்ற இஸ்ரோ தலைவர் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவராக பணியாற்றி வரும் சிவனுக்கு இந்த ஆண்டிற்கான வோன் கார்மான் விருது வழங்கப்பட இருக்கிறது. இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவராக பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த சிவன் அவர்களுக்கு, விண்வெளித் துறையில் உயர்ந்த விருதாக போற்றப்படும் 'வோன் கார்மான்' விருதிற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். 2020 ஆம் ஆண்டிற்கான இந்த விருதினைப் பெறும் மூன்றாவது இந்தியர் ஆவார். இதற்கு முன் இந்த விருதை பேராசிரியர் உடுப்பி இராமச்சந்திர ராவ் அவர்களுக்கு 2005 ஆம் ஆண்டிலும், 2007 ஆம் ஆண்டில் டாக்டர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது…
-
- 0 replies
- 602 views
-
-
இந்து கடவுள்களை அவமதிப்பு வழக்கு பதிவு | வழக்கறிஞர் சரவணன்
-
- 0 replies
- 676 views
-
-
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டலத்தில் 96.17 % பேர் தேர்ச்சி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். பதிவு: ஜூலை 13, 2020 14:19 PM புதுடெல்லி, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வில், கொரோனா ஊரடங்கால் சில தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. அவர்களுக்கு மீண்டும் தேர்வு தேதியை அறிவித்து, தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் அதனை ரத்து செய்து, மாணவர்களுக்கு மதிப்பெண் எந்த வகையில் கணக்கிடப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பை…
-
- 0 replies
- 501 views
-
-
அரச அலுவலகங்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வேலை – தமிழக அரசு by : Dhackshala அரச அலுவலகங்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வேலை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல நாட்கள் அரச அலுவலகங்கள் இயங்கவில்லை. மேலும் குறைந்த ஊழியர்களுடனே பல மாவட்டங்களில் அரச அலுவலங்கள் இயங்கி வந்தன. இதனால் அரச அலுவலங்களில் கோப்புகளுக்கான பணிகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் ஆறு நாட்களும் அரச அலுவலகங்களுக்கு வேலை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஹன்…
-
- 0 replies
- 402 views
-
-
19 நிமிடம் 30 வினாடிகளில் ஆமைக்கறி, உடும்புக்கறி வருகின்றது😆
-
- 777 replies
- 65.5k views
- 3 followers
-
-
மதுரையில் ரூ.10 க்கு உணவு - ஏழைகளின் பசி போக்கி வந்த ராமு தாத்தா காலமானார் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சிறிய பெட்டிக்கடை நடத்தி பத்து ரூபாய்க்கு உணவு வழங்கி வந்தவர் திருமங்கலம் வில்லூரை சேர்ந்த ராமு தாத்தா. மதுரை மக்களின் இதயத்திலும், அண்ணா பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் மக்களின் மனதிலும் நிலையான இடம் பிடித்தவர் மதுரை ராமு தாத்தா. அவர் மக்களுக்கு வழங்கிய உணவின் விலை மிக குறைவானது என்பதை விட அவர் மக்கள் இடத்தில் உணவுடன் அன்பையும் சேர்த்து பரிமாறப்பட்டதுதான் அவரது தனிச்சிறப்பு. இந்த அன்பு தான் பல வாடிக்கையாளர்களை ஈர்த்தது. 1957 ஆம் ஆண்டு வடலூரில் உள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு சென்ற மதுரை ராமு தாத்தா, வள்ளலாரை போ…
-
- 5 replies
- 816 views
-
-
என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 01, 2020 10:53 AM நெய்வேலி, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங் களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக…
-
- 6 replies
- 975 views
-
-
குஜராத், தமிழ்நாட்டில் அதிக அளவு போலீஸ் காவலில் மரணங்கள் நிகழ்ந்து உள்ளன, ஆனால் இதில் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. பதிவு: ஜூலை 11, 2020 11:16 AM புதுடெல்லி: தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2018 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி என்கவுன்டர்கள் தொடர்பாக நடத்தபட்ட விசாரணைகளில் ஒரு போலீசாருக்கு ஒரு தண்டனை கூட கிடைக்கவில்லை. பகுப்பாய்வு செய்த தரவுகளின்படி, சிறைச்சாலை மரணங்கள் உட்பட மனித உரிமை மீறல்களுக்கு எந்த போலீசாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. 2018 ஆம் ஆண்டில் மொத்தம் 70 காவல் நிலைய மரணங்கள் பதிவாகியுள்ளன, அவர்களில் பெரும்பாலோர் - 46 பேர் ரிமாண்டில் இல்லை. குஜராத்தில் இதுபோன்ற 14 மரணங்கள் பதிவாகியுள்ளன.இதுபோன்ற 12 மரணங்கள் தமிழகத்திலும் ஆந்திராவில் 11 -ம்…
-
- 0 replies
- 403 views
-
-
சேது சமுத்திர திட்டத்தைப் புதுப்பித்தால் பாஜகவுடன் திமுக கூட்டணி? மின்னம்பலம் சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி ஆர் பாலு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில் இன்று ஜூலை 10 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்... “தமிழக மக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சேதுசமுத்திர திட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இக்கடிதத்தை எழுதுகிறேன். அண்மையில் ஆக்கிரமிப்பு மனோபாவம் கொண்ட நமது அண்டை நாடான சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசுடன் உறுதி…
-
- 2 replies
- 940 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிளாஸ்மா தெரப்பி மூலம் சிகிச்சை அளிக்க, சென்னையில் இரண்டு கோடி ரூபாயில் பிளாஸ்மா வங்கியை நிறுவும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பிளாஸ்மா தெரபி (ஊநீர் சிகிச்சை) தொடர்பான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) ஆகியவற்றிடம் தமிழ்நாடு அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 'பிளாஸ்மா தெரபி' அல்லது ஊநீர் சிகிச்சை என்பது என்ன? ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என…
-
- 0 replies
- 389 views
-
-
அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு- சென்னை மருத்துவமனையில் அனுமதி.! சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செல்லூர் ராஜு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,26,581 ஆக உள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,765 ஆக இருக்கிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவிலேயே கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. ஒருவர் முதலில் பலியானது தமிழகத்தில்தான். திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனா பாதித்து உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் அடுத்தடுத்து கொரோ…
-
- 0 replies
- 387 views
-
-
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..! தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயுத்துறை அமைச்சருமான தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் திணறி வருகிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,18,594 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்…
-
- 0 replies
- 395 views
-
-
தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை - தமிழக அரசு உத்தரவு தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவு: ஜூலை 08, 2020 14:30 PM சென்னை, சாத்தான்குளம் தந்தை-மகன் போலீசார் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, இதில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த காவலர்கள், கொரோனா தன்னார்வல பணியாளர்கள் மற்றும் பென்னிக்ஸின் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த சம்பவத்தில், ‘பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அம…
-
- 1 reply
- 502 views
-