Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 2 வாரத்துக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: மருத்துவர்கள் பரிந்துரை! மின்னம்பலம் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க மருத்துவர்கள் குழு முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 843 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி இ…

  2. தி.மலை: வந்தவாசி அருகே மழையில் நனைந்து 2,500 நெல் மூட்டைகள் சேதமாகியுள்ளன. ஆயல்வாடி, மலையூர் கிராமங்களில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த 2,500 நெல் மூட்டைகள் சேதமாகியுள்ளன. 144 தடையால் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால் வெட்டவெளியில் வைக்கப்பட்டுள்ளன. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=577955

  3. கொரோனாவை கட்டுப்படுத்த 19 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக 19 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிபுணர் குழுவில் இடம்பெறும் மருத்துவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குழுவினர் மாநிலத்தில் தொற்றுப் பரவல் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்றும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து, அவற்றை…

  4. தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மொத்தம் 690 பேர் கொரோனாவால் பாதிப்பு தமிழகத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முந்தினம் 621 ஆக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண…

    • 1 reply
    • 745 views
  5. கொரோனா: தமிழகத்தில் 690 பேர் பாதிப்பு: 7 பேர் பலி! மின்னம்பலம் கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690ஆக அதிகரித்திருப்பதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்றைய தினம் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 66,431. அரசு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 253. 28 நாள் கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை 27,416. புதிதாக 2 பரிசோதனை ஆய்வகங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 5305 பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இன்று புதிதாக 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 690 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். …

  6. சென்னையில் பாரிய தீ விபத்து – போராடி அணைத்த வீரர்கள்! சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு அருகில் அரசாங்கத்திற்கு சொந்தமான காலி இடத்தில் பற்றிய தீயை, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் நாட்டு மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதின் பேரில் நாடு முழுவதும் நேற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டும், சிலர் செல்போன்களில் டோர்ச் அடித்தும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். சில இடங்களில் பட்டாசுகளையும் வெடித்தனர். இந்நிலையில், சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்புக்கு அருகில் தமிழக அரசுக்கு சொந்தமான…

  7. திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் நடமாடியதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஊரடங்கை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.ஆனால் தமிழகத்தில் சில இடங்களில் மக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடுவதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் வடக்குரத வீதி, கச்சேரி தெருவில் எண்ணெய் விற்பனை கடைகள், காய்கறி, மளிகை கடைகள் இருப்பதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் பொது மக்கள் அதிகளவில் நடமாடியதாலும் சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் எச்சரிக்கையை மீறி கொரோனா வைரஸின் தீவிரத்தையும் பொருட்படுத்தாமல் ப…

  8. 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் கரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் 2,10,538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. 3,371 வென்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மர…

  9. 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 13 ஆயிரம் வழக்குகள் பதிவு: 11 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் 2020-04-06@ 10:05:50 சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரே நாளில் தொற்று நோய் பரப்பும் வகையில் சுற்றியதாக ஒரே நாளில் 13 ஆயிரம் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் மக்கள் பொருட்கள் வாங்க அடிக்கடி வெளியே சுற்றி வருகின்றனர். அவர்களை போலீசார் பிடித்து நூதன முறையில் தண்டனை வழங்கி வருகின்றனர். இருந்தாலும் மக்கள் வெளியில் சுற்றி தான் வருகின்றனர். அந்…

  10. குமரியில் ஆழ்கடலில் இருந்து கரைதிரும்பி வரும் 500 விசைப்படகுகள்; துறைமுக பகுதிகளிலேயே கரோனா வைரஸ் பரிசோதனை: மீன்களைப் பதப்படுத்தவும் வலியுறுத்தல் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. தங்கு மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு துறைமுகத்திலேயே கரோனா வைரஸ் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும், அவர்கள் பிடித்து வரும் மீன்களைப் பதப்படுத்தி விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், சின்னமுட்டம், தேங்காய்ப்பட்டணம், முட்டம் ஆகிய 4 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. கரோனா பாதிப்பைத் தொடர்ந்த…

  11. தமிழகத்திலிருந்து டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட மேலும் 85 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச்…

  12. முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை புதுதில்லி, ஏப்.5- கொரோனா பாதிப்பு எதிரொலியாக முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் 24 அன்று நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்த ரவு அன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை அம லில் இருக்கும். பொதுமக்கள் அளிக்கும் ஒத்து ழைப்புக்கு ஏற்ப பாதிப்பு மற்றும் பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு எச்சரிக்கை செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 75ல் இருந்து 79…

  13. மூன்றாவது கட்டத்துக்கு செல்கிறோமா?- பீலா ராஜேஷ் பேட்டி . தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் 86 பேர் கண்டறியப்பட்டு மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது. 86 பேரில் 85 பேர் டெல்லிச் சென்று திரும்பியவர்கள். ஒருவர் துபாயிலிருந்து வந்தவர். இதன் மூலம் தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை இன்று 571 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 86 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் 690 என்கிற எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்டிராவை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது: “வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் 90824 பேர், 10818 பேர் 28 நாள் தனிமைப்…

  14. தமிழகத்தில் சிக்கிய மலேசியர்களை அங்கு அனுப்பும் முயற்சியில் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு அனுப்பப்படும் பயணிகளுடன் டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து தப்பி மலேசியாவுக்கு செல்ல முயன்ற 10 மலேசியர்கள் சிக்கினர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக நாடு முழுவதும் உள்நாடு மற்றும் சா்வதேச விமானசேவைகள் வரும் 14 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் மலேசியா நாட்டவா்கள் பலா் இந்தியாவில் சிக்கிக்கொண்டனா்.குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவு மலேசியா்கள் தவிக்கின்றனா். மலேசியா அரசு இந்திய அரசுடன் பேசி தங்கள் நாட்டவரை தனி சிறப்பு விமானங்களில் மலேசியா அழைத்து செல்ல அனுமதி கேட்டது.இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி அளித்தது. அதன்பேரில் கடந்த வெள்ளிக்…

    • 1 reply
    • 592 views
  15. சிவகங்கை அருகே உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கவுன்சிலர் சிவகங்கை அருகே உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு அப்பகுதி ஒன்றியக் கவுன்சிலர் மகேஸ்வரி கண்ணன் உதவிகரம் நீட்டினார். சிவகங்கை அருகே ஒக்கூர் இலங்கை தமிழர் முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள் கூலித் தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் இலங்கை தமிழர்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே முடங்கினர். மேலும் வேலைக்குச் செல்லாததால் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்ச…

    • 2 replies
    • 500 views
  16. ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு: கலெக்டர் கதிரவன் பேட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய நவீன கிருமிநாசினி தெளிப்பான் எந்திரத்தை பார்வையிட்ட கலெக்டர் கதிரவன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:- ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திடம் இருந்து ஈரோடு கிழக்கு ,கோபி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பில் நவீன கிருமிநாசினி தெளிப்பான் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற எந்திரம் தேவைப்பட்டால் எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்க தயாராக இருக்கிறார்கள் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு …

  17. ஊரடங்கு உத்தரவால் சென்னையிலிருந்து மதுரை செல்ல போராடும் தொழிலாளர்கள்: லாரிகளில் லிப்ட் கேட்டும், நடந்தும் 275 கி.மீ கடந்தனர் பெரம்பலூர்: ஊரடங்கு உத்தரவால் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லப் போராடும் தொழிலாளர்கள் நடந்தும், காய்கறி லாரிகளில் லிப்ட் கேட்டும் 275 கி.மீ கடந்தனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு நாடெங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 25ம்தேதி அதிகாலை தொடங்கி இதுவரை எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு திரும்ப வாகன வசதியின்றி நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்து வருகின்றனர்.இதேபோல் நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் டீக்கடை, ஹோட் டல்களில்…

  18. ஓட்டப்பிடாரம்: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள், மலர் சாகுபடி செய்து வருகின்றனர். நெல்லை, கோவில்பட்டி, தென்காசி, தூத்துக்குடி பூ மார்க்கெட்டுகளுக்கு தென்காசி, மானூர், சங்கரன்கோவில், கங்கைகொண்டான், நாலாட்டின்புத்தூர், காமநாயக்கன்பட்டி, தெய்வசெயல்புரம், செய்துங்கநல்லூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், குலசேகரநல்லூர், கொம்பாடி, கீழமுடிமண், ஆரைக்குளம், கப்பிகுளம், கீழமங்கலம், குப்பனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மல்லி, சம்பங்கி, கனகாம்பரம், கோழிக்கொண்டை, செவ்வந்தி, சாமந்தி போன்றவற்றை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். தற…

  19. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மும்பையில் இருந்து 1,000 கி.மீ. நடந்தே வந்த நாகை, திருவாரூர் பட்டதாரிகள் திருச்சியில் இருந்து வாகனத்தில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மும்பையில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தூரம் நடந்தே வந்த பட்டதாரிகள். திருச்சி: நாகை மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 22 பேர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே சோலாப்பூரில் செயல்பட்டு வரும் வேளாண் உபகரணங்கள் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பி.எஸ்சி, எம்.எஸ்சி. வேளாண் பட்டதாரிகள் ஆவர். அனைவரும் சோலாப்பூரில் தங்கி வேலை …

  20. கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சராசரி மனிதனுக்கு சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பதிவு: ஏப்ரல் 05, 2020 12:38 PM சென்னை இதய நோய் வந்துவிட்டாலே அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை நினைத்தும் அதற்கு ஆகும் செலவை எண்ணியுமே பலரும் அதிகம் வருந்துவார்கள். வசதி குறைந்தவர்களாக இருந்தால் சரியான மருத்துவத்தைப் பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள். இந்த அளவிற்கு இதய நோய்க்கான பரிசோதனை மற்றும் மருத்துவம் ஆடம்பர பொருளாக இருந்தது சாதாரணமாக அடிப்படை பரிசோதனைகளை செய்வதற்கே அதிக செலவாகும். ஆனால் கொரோனா நோய் தொற்று வந்த பிறகு மாரடைப்பு மற்ரும் எய்ட்ஸ்போன்ற அதிக அபாயகரமான நோய்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது. …

  21. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில்- இன்று முதல் சென்னையில் வீடுவீடாக சோதனை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பணியாளர்களை பயன்படுத்தி சென்னையில் வீடுவீடாக சோதனை நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக மாநில அரசாஙகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோன வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையிலேயே மாநில அரசாங்கம் இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது. பயிற்றுவிக்கப்பட்ட 16,00 சுகாதார தொழிலாளர்களை பயன்படுத்தி வீடுவீடாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உடைகளுடன் நடவடிக்கையில் இறங்கவுள்ள சுகாதார பணியாளர்கள் சென்னையை 24மணிநேர கண்காணிப்பின் கீழ் வைத்திருப்ப…

  22. தமிழகம், விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இன்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநாட்டில் இருந்து விழுப்புரம் திரும்பிய 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் இன்று (சனிக்கிழமை) காலை இறந்தார். அவர் விழுப்புரம் வண்டிமேடு சிங்காரத்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் என்துடன் பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். இதேவேளை, தமிழ்நாட்டில் மொத்தமாக 411 பேர் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளம…

  23. சென்னை: கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கும், சிகிச்சை மற்றும் மாத்திரை பெற வருபவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்…

  24. சென்னை: எப்போதுமே எங்களுக்கு முக்கியத்துவம் தராமல் ஒதுக்கி வைக்கும் நிலையில் இப்போது மட்டும் எங்களை கொண்டாடுவது ஏன் என தூய்மைப்பணியாளர்கள் தங்கள் மனக்குமுறலை வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இயற்கை சீற்றங்கள், பேரிடர் காலங்கள் மற்றும் அன்றாட வாழ்வில் தூய்மைப்பணியாளர்கள் இல்லாமல் நமது வாழ்வு இல்லை. நாடு தூய்மையாக இருக்க மற்றவர்களின் கழிவுகளையும், குப்பைகளையும் அப்புறப்படுத்தினாலும் நாள்தோறும் அவர்கள் தங்கள் உடல், உடைகளில் அசுத்தங்களை சுமக்கிறார்கள். தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருக்க அறிவுறுத்தப…

  25. அத்தியாவசிய பொருட்களை வாங்க, காலை 6.00 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவுவதை தவிர்க்க, மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவுக்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், பாதிக்கப்படுபவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் வெறுப்புணர்வுடன் பார்க்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை. மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து மருத்துவம…

    • 0 replies
    • 222 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.