தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
எங்க ஊரைச் சேர்ந்தவர்கள் வெளியே சென்று வந்தாலும் அல்லது வெளியூரிலிருந்து எங்க ஊருக்கு வருபவர்களாக இருந்தாலும் அந்தத் தண்ணீரில் கைகளைச் சுத்தமாகக் கழுவிய பிறகு மாஸ்க் அணிந்து கொண்டுதான் உள்ளே செல்ல அனுமதித்து வருகிறோம். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் உள்ள நுழைவாயில்களில் செக் போஸ்ட் அமைத்து அதில் இரண்டு பேர் வீதம் கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், யார் ஊருக்குள் வந்தாலும் மஞ்சள், வேப்பிலை, டெட்டால் கலந்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கைகளைச் சுத்தமாகக் கழுவிய பிறகே ஊருக்குள் செல்ல அனுமதிக்கின்றனர். தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு புதூர் என்ற கிராமம். இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயிகள் நிறைந்த இந்தக் கிரா…
-
- 1 reply
- 686 views
-
-
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், வெளிநாடுகளில் இருந்து வந்தோர் வீடுகளை கண்டறிந்து, அந்த பகுதி பாதுகாப்பு மண்டலமாக மாற்றப்படும் என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது: தற்போது நம் மாநிலத்தில் வெளிநாடு சென்று வந்த 43,537 வெளிநாட்டு நபர்களை கண்டறிந்துள்ளோம். வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த பயணிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் தனிமைப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். பாதிக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் ஆட்சியர்கள், சுகாதார துறையினர் காணொலி மூலமாக சந்திப்பு நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் வெளிநாடு சென்று வ…
-
- 0 replies
- 352 views
-
-
-
- 0 replies
- 532 views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
நடிகர் சேதுராமன் மரணம் - "நீ திரும்பி வர மாட்டாயா..." - திரைப்பட நடிகர் சேது மாரடைப்பில் மரணம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்த் திரைப்பட நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று (வியாழக்கிழமை) இரவு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவருக்கு வயது 36. இவர் 2013ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகத்தில் 144 தடை உத்தரவு மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, பேருந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்சி வாகனங்கள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளன. பிரதமர் மோடி அறிவித்த " மக்கள் ஊரடங்கு " மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. மாவட்ட எல்லைகளை சீல் வைத்த அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கங்களை, ஆங்காங்கே முடக்கினர். ஆட்டோக்கள், கால் டாக்சிகள் என எந்த வொரு வாகனமும் ஓடவில்லை. மாநிலங்களுக்கு இடையேயும்,…
-
- 25 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா வைரஸினால், பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் இருந்து சேலத்துக்கு வந்த இஸ்லாமிய மதபோதகர்கள் 11 பேர், அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர், சேலத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 16 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதில் இந்தோனேசியர்கள் 4 பேர், சென்னையைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் என 5 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோ…
-
- 0 replies
- 373 views
-
-
கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முதல் நபர் உயிரிழப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் முதல் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்கவரே குறித்த வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று பாதிப்பு காரணமாக ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தமிழகத்தில-4/
-
- 1 reply
- 616 views
-
-
நடிகர் ரஜினிகாந்த் கொரோனா குறித்து வெளியிட்டிருந்த வீடியோவை ட்விட்டர் நீக்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று சனிக்கிழமை கொரோனா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "12-14 மணி நேரம்வரை கொரோனா பரவாமல் தடுத்துவிட்டால், இந்தியாவில் மூன்றாம் நிலை பரவலைத் தடுத்துவிடலாம்" என்ற கருத்தையும், வேறு சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ அவரது ட்விட்டர் மற்றும் யு டியூப் பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வீடியோ தங்களது விதிமுறைகளை மீறி இருப்பதாகக் கூறி ட்விட்டர் அந்த பதிவை நேற்று சனிக்கிழமை நீக்கியது. இருந்தபோதும், அந்த வீடியோ யு டியூபில் பார்க்கக் கிடைக்கிறது. ட்விட்டரில் ரஜினிகாந்தை 57 லட்சம் பேர் பின்தொடர்கின்ற…
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
கொரோனா தொற்றினை தவிர்ப்பதற்காக இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அனைத்து இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் மாமன்றம் உட்பட அனைத்து அமைப்புகளும் திரைப்படப் பணிகளைக் கடந்த 19ஆம் தேதி முதல் நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரப் படங்கள் போன்ற அனைத்துப் பிரிவு திரைப்படப் பணிகளையும் நிறுத்து வைப்பது எனவும் முடிவு செய்துள்ளதாகவும் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருந்தார். படத்தின் காப்புரிமை Getty Images வேண்டுகோள் இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கத்தின் தலைவர் செந்தில் குமாரிடம் பிபிசி தமிழுக்காக அளித்த பேட்டியில், 'பத்து நாட்கள் ஷூட்டிங் நடைபெறாது என்றாலும் ஓரளவ…
-
- 0 replies
- 917 views
-
-
தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்த உள்ள காரணத்தால் காய்கறிகளை வாங்க கிருஷ்ணகிரி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், மக்களின் அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், மளிகைப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவை கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அரசின் இந்த 144 தடை உத்தரவை அறிந்த மக்கள் உடனடியாக ஒரு வாரத்திற்குத் தே…
-
- 0 replies
- 558 views
-
-
கிராமப்புற மக்களிடம் கொரோனா விழிப்புணர்வை வேகமாக கொண்டு சேர்க்கும் விதமாக எம்.ஜி.ஆரின் பாடல் ஒன்று பயன்பட்டு வருகின்றது. அதே நேரத்தில் நோயின் அச்சமின்றி பேருந்து பயணத்திற்கு முண்டியடிக்கும் நபர்கள் பின்பற்ற வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... தமிழகத்தில் கொரோனா வைரஸ் கிருமி பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இத்தாலியின் நிலைமையை பார்த்தும் அஞ்சாத நம்மவர்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மிகவும் மெத்தனமாக நடந்து கொள்கின்றனர் என்பதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டமாக முண்டியடித்த பயணிகளின் இந்த காட்சிகளே சாட்சி..! பேருந்து பயணத்தில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த பேருந்துகளின் எண்ணிக…
-
- 0 replies
- 895 views
-
-
கொரோனா யுத்தம்: தலைமையின்றி தடுமாறும் தமிழக அரசு! மின்னம்பலம் ராஜன் குறை உலகையே அச்சுறுத்தி நிலைகுலைய வைத்திருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலின்போது துரதிர்ஷ்டவசமாக தமிழகம் தலைமைப்பண்பற்ற பலவீனமான மனிதரால் ஆளப்படுவது பெரும் வருத்தத்திற்குரியது, விபரீதமானது. கடந்த சில தினங்களாக தமிழக அரசின் அறிக்கைகளும், நடவடிக்கைகளும் எந்த வித தெளிவும், தொலைநோக்கும் தலைமைப்பண்புமற்ற தடுமாற்றங்களையே காட்டுகின்றது. பிரச்சினைகளை சற்றே விரிவாகக் காண்போம். அதற்குமுன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த சில அடிப்படைத் தகவல்களை நாம் கவனிக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தமிழக அரசியல் எந்த வித தலைமைப் பண்புமின்றி, அதற்கான ஒரு ஆற்றலோ அல்லது அருகதையோ இர…
-
- 0 replies
- 739 views
-
-
தமிழகம் முழுவதும் 144 தடை: மாவட்ட எல்லைகள் மூடப்படுகிறது! மின்னம்பலம் தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணியிலிருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை மற்ற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. கொரோனா மேலும் பரவாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மத்திய …
-
- 0 replies
- 719 views
-
-
கொரோனா – இந்தியாவில் 80 மாவட்டங்களை முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது… March 23, 2020 கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மத்திய அரசின் அமைச்சரவைச் செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர் ஆகியோர் மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சுய ஊரடங்கு அழைப்புக்கு மக்கள் தாங்களாக முன்வந்து பெருமளவில் ஆதரவு அளித்ததாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் அப…
-
- 0 replies
- 351 views
-
-
கோவை: தினமும் ரூ. 100 மட்டுமே சம்பளம் வழங்கும் நிலையில், சம்பளத்தை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மைக் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2014 -15 ஆம் நிதியாண்டு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்கீழ் ஊராட்சிகளில் வீடுதோறும் கழிவுகளைச் சேகரித்து அதனை மக்கும், மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து, அதிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்க தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 150 குடியிருப்புகளுக்கு ஒரு தூய்மைக் காவலர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளிலும் சேர்த்து 1,608 தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 612 views
-
-
சேலத்தில் ஒருவர், பசியால் வாடிய மக்கள் 500 பேருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி அவர்களது பசியைப் போக்கியுள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' பின்பற்றப்படுகிறது. இதனால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடக்கின்றனர். ஆனால், சாலையில் அடுத்த வேலைக்கு உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில், சேலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை தாயுள்ளத்தோடு வழங்கி அவர்களது பசியைப் போக்கியு…
-
- 0 replies
- 486 views
-
-
கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸப் மூலம் வதந்தி பரப்பியதாக 'ஹீலர் பாஸ்கர்' என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் மூன்றாம் தேதிவரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் குனியாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர். நிஷ்டை என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்திவரும் ஹீலர் பாஸ்கர், மருந்தில்லா மருத்துவம், இயற்கை மருத்துவம் என்ற பெயரில் மருத்துவம் செய்துவந்தார். யூ டியூபிலும் இது தொடர்பாக அவர் பேசி வந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் 17ஆம் தேதியன்று கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக செய்தி ஒன்றை சமூக வலைதளங்கள் மூலம் ஹீலர் பாஸ்கர்…
-
- 3 replies
- 684 views
-
-
மார்ச்–31 க்கு பிறகு தெரியும் கொரனோவை விட பெரிய ஆபத்து.....!
-
- 0 replies
- 585 views
-
-
ஆமை விசாரணையும், ஆளுநர் முடிவும்: ஏழு பேர் விடுதலைக்கு மறைமுக மறுப்பா? மின்னம்பலம் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் அளித்த பதிலை இன்று (மார்ச் 20) சட்டமன்றத்தில் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் வெளியிட்டார். சட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், 7 பேர் விடுதலை குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி கேள்வி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சி.வி. சண்முகம், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7பேர் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே அனைவரது ஆசை. 7 பேர் விடுதலையைப் பொறுத்தவரை அவர்களது விடுதலைக்காகத் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஆளுநர் செயலகத்தில் இருந்து பதி…
-
- 0 replies
- 497 views
-
-
ருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவும் வைரஸ் என்பதால் கொரோனா வைரஸ் தொடர்பான பீதி சென்னை மக்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. வெறிச்சோடிய தியாகராய நகர் உஸ்மான் ரோடு. சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த 16-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதற்காக வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் மற்றும் நகை கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 486 views
-
-
முதல்வர் ஆதித்யநாத் அவர்களின் ராம நவமி முட்டாள்தனமும் தமிழக அரசின் கடமையும்... எதிர் வரும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை ராம நவமி திருவிழாவை பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி கோலாகலமாகக் கொண்டாடப் போவதாகவும், கொரோனா வைரஸ் தாக்காமல் ராமர் பார்த்துக் கொள்வார் என்றும் முட்டாள்தனமான ஒரு உத்தரவை மதக் கிறுக்கன் ஆதித்யநாத் அறிவித்துள்ளார்... அந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகத்திலிருந்து செல்பவர்கள் திரும்பி வரும் போது தடுப்பு முகாம்களில் 15 நாட்கள் கட்டணம் செலுத்தித் தங்கி இருந்து கொரானா தாக்குதல் இல்லை என்று சர்டிபிகேட் வாங்கிக் கொண்டுதான் தமிழகத்துக்குள் வர வேண்டும் என தமிழக அரசு உடனடியாக ஒரு உத்தரவு போட வேண்டும்.... (1) 1918 ல் வந்த ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலில் சுமார…
-
- 6 replies
- 752 views
-
-
அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த மருத்துவ மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தமிழகத்தில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது தமிழகத்தில் இந்த நோய்த் தொற்றியோர் எண்ணிக்கையை 3 ஆக ஆக்கியுள்ளது. 17-ம் தேதி சென்னை வந்தவுடனே அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். நேற்று மார்ச் 18 அன்று அவர் அறிகுறிகளோடு ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்தார். அவரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன…
-
- 0 replies
- 369 views
-
-
தனுஷ்கோடி கடற்பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்த பூநாரைகள் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழ் jayashankar வலசை வரும் பூநாரை என்று தமிழில் அழைக்கப்படும் ஃப்ளமிங்கோ பறவைகள் தற்போது தனுஷ்கோடி கடற்கரையில் ஏராளமாக வந்து குவிந்துள்ளன. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில் பகுதிக்கு அதிக அளவில் ஆஸ்திரேலிய ஃப்ளமிங்கோ பறவைகள் ஆண்டுதோறும் வலசை வருவது வழக்கம். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு இந்தப் பறவைகள் மிகப் பெரிய அளவில் தனுஷ்கோடி வந்து குவிந்துள்ளன. கோதண்டராமர் கோவில் அருகே உள்ள கடற் பகுதியில் இவை ஆயிரக் கணக்கில் குவிந்துள்ளன. ஃப்ளமிங்கோக்களில் அன்டீன் ஃப்ளமிங்கோ, அமெரிக்கன் ஃப்ளமிங்கோ, சைலியன் ஃப்ளமிங்கோ, ஜாம்ஸெஸ் ஃப்ளமிங்கோ போன்ற வகைகள…
-
- 3 replies
- 899 views
-
-
தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்காக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகல் தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் விருப்பம் தெரிவித்து, தான் வகித்துவந்த பொருளாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள குறித்த அறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 29 ஆம் திகதிக்கு அன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் ‘பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர்’ பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும் என்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம், தி.மு.க.…
-
- 1 reply
- 610 views
-