Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமெந்து வீடுகள் November 28, 2018 கஜாபுயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசை வீடுகளுக்குப் பதிலாக சீமெந்து வீடுகள் கட்டித் தரப்படும் என்று நாகபட்டினம் மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகபட்டினம் மாவட்டத்தின் நிலவரங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியதுடன் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதேவேளை, நாகப்பட்டினத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, மாவட்டத்தின் புயல் பாதிப்பு மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். …

  2. "ஸ்டெர்லைட்" ஆலை மீண்டும் இயங்க 25 நிபந்தனைகளுடன் பரிந்துரை! தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க 25 நிபந்தனைகள் விதிக்க நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ள முக்கிய நிபந்தனைகள், “ஸ்டெர்லைட் நிர்வாகம், ஆலை வளாகம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீரில் ஆர்சீனிக், காட்மியம், வெள்ளி, தாமிரம், ப்ளூரைடு ஆகியவை அடங்கியுள்ளனவா என்பதை ஆய்வு செய்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மாதம் ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான சோதனை மாதிரிகளை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் எட…

  3. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மு. க. ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது- ஐ.பெரியசாமி தி.மு.க.வில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரான மு. க. ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது என்று கட்சியின் துணை பொதுசெயலாளரான ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, “ மக்களவை தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் மத்தியில் ஆட்சியமைந்ததும் சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவோம். தமிழகத்தில் அ.தி.மு.க. பா.ஜ.கவைத் தவிர மக்கள் நலனுக்காக அனைத்து கட்சிகளும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் திரண்டுள்ளன. தற்போது கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மாநில அளவில் தற்போது கூட்டணி குறித்து…

  4. காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான ஆய்வை நடத்த கர்நாடக அரசாங்கத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளனர். மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு அளிக்கப்படும் நதிநீரின் அளவு பாதிக்கப்படாது என்று கூறியுள்ள அமைச்சர் சிவகுமார், அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசாங்கத்திடம் பேசவும் தயாராக உள்ளதாக கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில், கர்நாடகாவுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள ஒப்புதலை திரும்பப்பெறவேண்டும் என்று கோரி தமிழகத்தில் உள்ள விவச…

  5. இந்தி மொழி திணிப்பும் தமிழர்களின் எதிர்ப்பும்

  6. தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சி உறவு வலுவாக உள்ளது- தொல் திருமாவளவன் தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் உறவு வலுவாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, “ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடனான வழக்கமான தோழமையான சந்திப்பு தான் . கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கலந்தாய்வு செய்தோம். தி.மு.க.விற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே இடைவெளி இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை சிலர் திட்டமிட்டு தொடர்ந்து பரப்பி வருகின்றனர். தி.மு.க. கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில். மிகவும் யதார்த்தமான முறையில் சில க…

  7. வஞ்சிக்கப்படும் தமிழக மக்கள் : மேகதாது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு..! மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய சுற்றுசூழல் அமைச்சகம். கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவிடாமல் எப்பொழுதும் அலைக்கழிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு மழை அதிகளவில் பெய்து உபரி நீர் வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடகாவில் காவிரி குறுக்கே தண்ணீர் தேக்கி வைக்க 4 அணைகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் காவிரி தண்ணீரை தேக்கி வைக்க மேட்டூர் அணை மட்டுமே உள்ளது. இந்த சூழ்நிலையில் கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்ட…

  8. புழல் ஏரி அருகே 25 மூட்டைகளில் வீசப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள். சென்னை புழல் ஏரி அருகே 25 மூட்டைகளில் பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை கத்தை கத்தையாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்புநீக்க நடவடிக்கையை அறிவித்தார். நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டன. பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு, அதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டது. பழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக…

  9. சிலைக் கடத்தல் விகாரம்- ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கையும் எடுக்கக் கூடாது- உயர் நீதிமன்றம் உத்தரவு! சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் மீது அனுமதியின்றி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக கோவில்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் துப்பு துலக்கி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவித்தது. பொன்.மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையில் திருப்தி இல்லை என்றும் அரசு தெரிவித்தது. இதனால் சிலை கடத்தல் தடுப்…

  10. ராஜீவ் கொலை வழக்கில்... சிறையில் இருக்கும், 7 பேர் விடுதலையில் தலையிட முடியாது- மத்திய அரசு. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையில் மத்திய அரசு தலையிட முடியாது என்று உள்துறை அமைச்சகம் ஆர்டிஐ மூலம் பதில் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருக்கும் இவர்களை விடுவிக்க வேண்டும் என அவரது உறவினர்களும் ,தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. …

  11. ‘காவிரி டெல்டா’வைப் புரட்டிப் போட்ட ‘கஜா’ எம். காசிநாதன் / 2018 நவம்பர் 26 திங்கட்கிழமை, மு.ப. 12:29 ‘கஜா’ப் புயல், தமிழகத்தைப் புரட்டிப் போட்டு விட்டு, பறந்து விட்டது. 63 பேருக்கு மேல், உயிர்ப் பலி வாங்கிய இந்தப் புயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாடு,‘சுனாமி’யைப் பார்த்தது; ‘தானே’ புயலைப் பார்த்தது; ‘ஒகி’ புயலைப் பார்த்தது; ஆனால், இந்தக் ‘கஜா’ புயல் பாதிப்பு, மற்றப் புயல்களை விட வீரியமானது. இரண்டரை இலட்சம் மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்கள், “கஜாப் புயல், உயிரை விட்டுவிட்டு, உடைமைகளை எடுத்துச் சென்று விட்டது” எனக் கூறுகிறார்கள். …

  12. உண்மையான தமிழகனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்ற சமூக வலைதள பதிவுகள் தோன்றாத காலம் அது. தனக்கு கிடைத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பை துறந்து, தமிழ்மொழி குறித்த ஆய்வுகளை நடத்துவதற்காக 1953ல் இந்தியாவிலேயே தனது வேலையை அமைத்துக்கொண்டவர் ஐராவதம் மகாதேவன். அவர் தனது 88வது வயதில் இன்று காலமானார். சிந்து சமவெளி வரலாறு, தமிழ் மொழியின் தொன்மை குறித்து விஞ்ஞானபூர்வமாக ஆய்வுகளை நடத்தி, தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த கல்வெட்டியியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன். வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவரது இழப்புக்கு உலகம் முழுவதும் உள்ள பல தமிழ் அமைப்புகள் வருத்தம் தெரிவித்துள்ளன. இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, தினமணி பத்திரிகையின் ஆசிரியர், கல்வெட்டியியல் அ…

  13. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்த நாள் விழா தமிழீழம், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் தமிழீழ ஆதரவு நிலைப்பாடு உடைய அரசியல் கட்சிகளின் தலைமைகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழாவினை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் திரைப்பட இயக்குநர் கௌதமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பேனர் வைக்க மட்டுமே அனுமதியளிக்கப்ப…

  14. படத்தின் காப்புரிமை Getty Images தினத்தந்தி: நுரை தள்ளும் மெரினா கடற்கரை; அச்சப்படும் மக்கள் - காரணம் என்ன? மெரினா கடற்கரையில் ஒதுங்கும் நுரை குறித்து ஆய்வு செய்யப்பட்டதில், அதனால் ஆபத்து ஏதுவும் இல்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "சென்னை, மெரினா கடற்கரையில் 23ஆம் தேதி முதல் அலையில் இருந்து நுரை வெளியே தள்ளப்பட்டு, கடற்கரை முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் அங்கு செல்வோர் அச்சப்பட்டு கடற்கரை அலையில் கால்களை நனைக்காமல் ஒதுங்கி நின்று க…

  15. ஏர்செல் மக்சிஸ் வழக்கில் சி.பி.ஐ. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை – ப. சிதம்பரம் பதில் மனு : November 25, 2018 எர் செல் மக்சிஸ் வழக்கு தொடர்பாக தன் மீது சி.பி.ஐ. தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என டெல்லி நீதிமன்றில் ப. சிதம்பரம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது 2006-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபா முதலீடு செய்த போது ப சிதம்பரம் , விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் அனுமதி அளித்து விட்டார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த அனுமதியைப் பெறுவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்…

  16. டெல்டா விவசாயிகளை சாகடிக்கும் ‘கூஜா’ அரசு . ஒரு பெரும் பேரழிவை டெல்டா மாவட்டங்கள் சந்தித்திருக்கின்றன. கஜா புயல் ஈவு இரக்கமற்று தன் கோரத் தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளது. டெல்டா விவசாயிகள் வரலாற்றின் இருண்ட காலத்திற்குள் தூக்கி எறியப்பட்டிருக்கின்றார்கள். குடிக்க தண்ணீர், உண்ண உணவு, உடுக்க ஆடை என எதுவுமே இல்லாமல் உள்நாட்டிலேயே அகதிகள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். பார்த்துப் பார்த்து வளர்த்த தென்னையும், வாழையும், பலாவும் கஜாவால் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, உயிரற்ற உடல்களாக வீழ்ந்து கிடக்கின்றன. இனி உயிர் பிழைத்து இந்த உலகில் வாழ்வதற்கு என்ன வழி இருக்கின்றது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்கள் ஊருக்கே உணவளித்து காத்த விவசாய மக்கள். ஆனாலும் என…

  17. தினமலர்: விடிய விடிய சப்பாத்தி சுட்ட கிராம மக்கள் படத்தின் காப்புரிமை DINAMALAR கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க, இரு கிராமத்தினர், விடிய விடிய சப்பாத்திகளை சுட்டுக் கொடுத்ததாக தினமலரில் செய்தி வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே, சென்னகிரி மற்றும் இருசனம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த, 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தங்கள் பகுதி மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்மூலம், அரிசி, பருப்பு, நுாடுல்ஸ் பாக்கெட்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பாய், போர்வை, துண்டுகள் என, 30 ஆயிரம் ரூபாய…

  18. கன்னியாகுமரியில் பா.ஜ.க சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்! கேரள பொலிஸ் அதிகாரிகளை கண்டித்து கன்னியாகுமரியில் பா.ஜ.க சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகின்றது. சபரிமலைக்கு சென்றிருந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்த, கேரள பொலிஸ் அதிகாரிகளை கண்டித்து கன்னியாகுமரியில் பா.ஜ.க சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகின்றது. இந்நிலையில், அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்கு போருந்துகள் இயக்கப்படவில்லை. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் போருந்துகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. முழு அடைப்பால் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக் மு…

  19. டெல்டாவில் சீமான் தலைமையில் கஜா நிவாரண பணிகள்.. அகதிகள் முகாமில் உதவி.. பெரும் வரவேற்பு ! தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரிய அளவில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். கஜா புயலால் டெல்டா பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. அங்கு அரசு பெரிய அளவில் இன்னும் நிவாரண பணிகளை செய்யவில்லை.இந்த நிலையில் அங்கு நிவாரண பணிகளை சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி செய்து வருகிறது. மூன்று நாட்கள் நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மூன்று நாட்கள் இந்த நிவாரண பணிகள் திட்டமிடப்பட்டு இருக்கிறது. நேற்று காலை தொடங்கிய இந்த நிவாரண உதவி வழங்கும் பணிகள் நாளை இ…

  20. கஜா புயலை தொடர்ந்து தமிழகத்திற்கு தொடரும் ஆபத்து! கஜா புயலினால் பேரழிவை எதிர்நோக்கியிருந்த தமிழகம் தொடர்ந்தும் கடும் காற்று மற்றும் மழையினால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முழுவதும் பரவலாக மழை பெய்ததுடன், இந்த நிலை மேலும் வலுப்பெறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையும் அதிகபட்சமாக 60 கிலோமீற்றர் வரையும் காற்று வீசக்கூடும் என்பதால்…

  21. சங்கர், இளவரசன், நந்தீஷ்.. 1000 நாளில் 81 ஆணவ படுகொலைகள்.. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? தமிழ்நாட்டில் கடந்த ஆயிரம் நாட்களில் மட்டும் மொத்தம் 81 ஆணவ படுகொலைகள் நடைபெற்று இருக்கிறது. உத்தர பிரதேசம், பீகாரில் நடக்கும் மதக்கலவரங்கள் தமிழர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். அந்த மாநிலங்கள் எல்லாம் இன்னும் முன்னேறவில்லை என்று கூட தமிழகத்தை சேர்ந்தவர்கள் மார்தட்டிக் கொள்ள முடியும். ஆனால் தமிழகம் வேறு ஒரு விஷயத்தில் அந்த மாநிலங்களை எல்லாம் விட பின்தங்கி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களில் மற்ற எந்த மாநிலத்திலும் நடக்காத அளவிற்கு ஆணவக்கொலைகள் நடந்து இருக்கிறது. கடந்த 1000 நாட்களில் தமிழகத்தில் மொத்தம் 81 ஆணவ படுகொலைகள் நடந்துள்ளது. அதாவது 12 நாட்களுக…

  22. 3 கொலையாளிகளை விடுதலை செய்ய என்ன ஒரு அக்கறை, வேகம்.. 7 தமிழர்கள் விடுதலை ஏன் இல்லை ? சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள 7 தமிழர்களை விடுதலை செய்யாத நிலையில், 3 கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்துக்கொலை செய்த அதிமுகவை சேர்ந்த தண்டனை குற்றவாளிகளை அவசரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேருமே 25 வருடங்களை சிறையில் கழித்தவர்கள். சுமார், இரட்டை ஆயுள் தண்டனை காலத்தை சிறையில் கழித்துள்ளனர்.ஆனால், அவர்கள் விடுதலை என்பது தொடர்ந்து காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த 3 பேரை தெரிந்த ஆளுநருக்கு இந்த 7 பேரை தெரியுமா? இவர்களையும் விடுதலை செய்வார…

    • 2 replies
    • 1.4k views
  23. கஜா புயல்: புதுக்கோட்டையில் வாழும் இலங்கை அகதிகள் பாதிப்பு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமில் வாழும் இலங்கை மக்களும் கஜா புயலின் தாக்கத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த முகாமில் சுமார் 450 குடும்பங்கள் வசிப்பதாகவும், இதுவரையில் தமக்கான எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும் இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரும் நிலையில், கஜாபுயலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குடிசை வீடுகளையும், ஓட்டு வீடுகளையும் குடியிருப்புகளாக கொண்ட இவர்கள் தற்போது அதனையும் இழந்து வீதிகளில் வசிக்கின்றனர். அந்தவகையில் புயல் தாக்கி, இன்றுடன் ஐந்தாவது நாளாகிய நிலையில் முற்றுமுழுதாக தமது இயல…

  24. இரட்டை இலை சின்னம் வழக்கு: விரைவில் கைதாகிறாரா டிடிவி?

  25. சுழற்றியடித்த கஜா.. மிரண்டு போன சிறுமி.. உயிரை பறித்த தென்னை மரம்.. ஒரு பரிதாப மரணம்! கஜா புயலை விட கொடுமையான, கொடூரமான செயலைதான் இவர்கள் செய்திருக்கிறார்கள்... அந்த செய்திதான் இது!! கஜா... பட்டுக்கோட்டை பக்கமாக போகும்போது தந்துவிட்டுபோன அழிவு கொஞ்சம் நஞ்சமல்ல. நடுராத்திரி... அப்படி ஒரு பேய்க்காத்து.. ஊரே தூக்கிட்டு போற மாதிரி காற்று சுழட்டி அடித்தபோதுதான் இந்த சம்பவம் நடந்தது. அணைக்காடு கிராமத்தில் 7-ம் வகுப்பு படிக்கிறாள் அந்த சிறுமி. திடீரென்று வயசுக்கு வந்துட்டாள். அதனால் வீட்டு பெரிசுகள் எல்லாம் சேர்ந்து தீட்டு என்று காரணம் சொல்லி, அந்த சிறுமியை தனியாக உட்கார வைத்து விட்டார்கள். உட்கார வைக்கப்பட்ட இடம் எது தெரியுமா? வீட்டுக்கு ஒதுக்குப்புறமாக இருக்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.