தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10254 topics in this forum
-
அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு- சென்னை மருத்துவமனையில் அனுமதி.! சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செல்லூர் ராஜு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,26,581 ஆக உள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,765 ஆக இருக்கிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவிலேயே கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. ஒருவர் முதலில் பலியானது தமிழகத்தில்தான். திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனா பாதித்து உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் அடுத்தடுத்து கொரோ…
-
- 0 replies
- 380 views
-
-
நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை, வேலூர் சிறையில் உள்ள நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அவரின் தாய் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அவரது தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் வேலூர் சிறையில் உள்ள நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனக்கு 80 வயதாகும் நிலையில், தன் மகளை வேலூருக்கு சென்று பார்த்து வருவதில் சிரமம் இருப்பதாக அந்…
-
- 0 replies
- 358 views
-
-
தொகுதி மாறும் ஸ்டாலின் முதல் முக்கோணச் சிக்கலில் வாசன் வரை... கழுகார் அப்டேட்ஸ்! கழுகாரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு... ``ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்துக்குச் செல்கிறேன்... வாட்ஸ்அப்பைப் பார்க்கவும்’’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். `முதல்வர்’ சென்டிமென்ட்! தொகுதி மாறும் மு.க.ஸ்டாலின்... `வரும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மாட்டார்’ என்பதே தி.மு.க-வில் ஹாட் டாபிக். ``கட்சிக்காரருக்காக விட்டுக்கொடுக்கிறாரா?’’ என்று உடன்பிறப்புகளிடம் கேட்டால், `ம்ஹூம்... அவர் புள்ளை உதயநிதி ஈஸியா ஜெயிக்கணும்கிறதுக்காக கொளத்தூர் தொகுதியை அவ…
-
- 0 replies
- 663 views
-
-
சசிகலா வலையில் சிக்குகிறாரா சசிகலா புஷ்பா? மிரட்டும் வழக்குகள் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் போய்விட்டார் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க தலைமைக்கு எதிராக சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க கூறியதையடுத்து அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன. வழக்கறிஞர் சுகந்தி வீடு சூறையாடப்பட்ட வழக்கிலும் அவர் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலா புஷ்பா எம்.பி வீட்டில் பணியாற்றிய பானுமதி, ஜான்சிராணி ஆகியோருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஷ்வர திலகர், இவர்களது மகன் பிரதீப் மற்றும் சசிகலா புஷ்பாவின் அம்மா கௌரி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். பானு…
-
- 0 replies
- 1k views
-
-
when you deal with the Romans, deal as the Romans would deal அருண் ஜெட்லி யின் காட்டம். தேர்தலுக்கு வாக்கு அளித்து விட்டு இந்தியா திரும்பி விடுவார்கள் என்று , இத்தாலி சார்பாக உறுதி அளித்த இந்தியாவிற்கான இத்தாலி தூதர் , Daniele Mancini., இந்தியாவிற்கு திருப்பி வராத குற்றம் செய்த கப்பல் மாலுமிகள் இருவருக்கு பொறுப்பானவர் என்று பா ஜ க மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறி உள்ளார் இத்தாலி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த அவர் இது மூன்றாவது முறை இத்தாலி அரசாங்கம் இந்தியாவை ஏமாற்றுவது என்பதையும் சொல்லி உள்ளார் . ஜேம்ஸ் பாண்ட் இன் திரைபடமான Goldfinger இல் சொன்னதை போல முதல் முறை என்றால் அதை சூழ்நிலை எனலாம் , இரண்டாம் முறை என்றால் அதை திட்டமிட்ட சம்பவம் எனலாம் , மூன்றா…
-
- 0 replies
- 484 views
-
-
வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு? – முதலமைச்சர் கேள்வி by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/12/Tamil_News_large_2668035.jpg வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார். புயல், மழை சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவாரூரில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மத்திய அரசின் வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள். விவசாயிகளுக்கு பயனுள்ளது என்பதால்தான் சட்டமூலத்தை தமிழகம் வரவேற்கிறது. விளைபொருட்களை நல்…
-
- 0 replies
- 385 views
-
-
டில்லி, நிஜாமுதீன் பகுதியில், பழமையான நினைவு சின்னங்கள் அதிகம் உள்ளதால், இப்பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உயரமான கட்டடங்கள் கட்டவோ, ஏற்கனவே உள்ள வீடுகளில், மாடிகளை எழுப்பவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில்தான், ஜனதா கட்சித் தலைவர், சுப்ரமணிய சாமி, அவரது மனைவி ரெக்சேனாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இருந்து, 28 மீட்டர் தொலைவில், ஒரு வரலாற்று நினைவு சின்னம் உள்ளது. தொல்லியில் துறையின் தடையை மீறி, சாமியும் அவரது மனைவியும், தங்கள் வீட்டில் இரண்டாவது மாடியை எழுப்பவதற்கான பணிகளை துவக்கினர்.சட்ட விரோதமாக கட்டப்படும், இரண்டாவது மாடியை இடிக்கும்படி, தொல்லியல் துறை, கடந்த, 2ம் தேதி, சாமிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதை எதிர்த்து, சுப்ரமணிய…
-
- 0 replies
- 579 views
-
-
அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக சசிகலா பதவியேற்க, அக்கட்சியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதன் வெளிப்பாடாக, ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அடுத்தடுத்து வழக்குகள் தொடரப் பட்டு வருகின்றன; இது, சசிகலா ஆதரவாளர் களிடம், கிலியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், கட்சியில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்குவோரை மிரட்டி பணிய வைக்கும் பணியில், அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க., விதிகளின்படி, பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர், ஐந்து ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந் திருக்க வேண்டும். தற்போது, பொதுச்செயலர் பதவிக்கு வர விரும்பும் சசிகலா, கட்சியில் ஐந்து ஆண்டுகளாக உறுப்பினராக இல்லை. நீக்கப்பட்டனர் …
-
- 0 replies
- 725 views
-
-
தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் நாடுதிரும்பும் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜ.நா.சபையின் அகதிகள் ஆணைக்குழுவின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் அகதிகள் தமது தாயதகத்தில் இருந்து இந்தியா சென்ற 1 600 பேர் கடந்த ஆண்டு நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பெரும்பாலானவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றிருந்ததனர். எனினும் 2009ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அகதிகள் நாடு திரும்புவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி கடந்த 2010ஆம் ஆண்டில் 2040 பேர் நாடு திரும்பியுள்ளதுடன் …
-
- 0 replies
- 350 views
-
-
மக்களின் ஒத்துழைப்பே... வைரஸ் தொற்றினை, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது- முதலமைச்சர் அரசினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றி, முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியமையினால் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த காணொளி ஊடாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் 2 வார காலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றியமையாலும் சுகாதார நடைமுறைகளை இற…
-
- 0 replies
- 315 views
-
-
தமிழக முதல்வரின், போயஸ் கார்டன் வீடு அருகில் சுற்றித் திரிந்த, இலங்கைப் பெண்ணை, பாதுகாப்புப் பிரிவு போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். சென்னை, தேனாம்பேட்டை, போயஸ் கார்டன் பகுதியில், நேற்று முன்தினம், 53 வயது பெண் ஒருவர், சுற்றிக் கொண்டிருந்தார். மாலையில் அவர், முதல்வர் வீடு அருகில் வந்தார். அப்போது திடீரென பாதுகாப்பு போலீசாரை மீறி, முதல்வர் வீடு இருக்கும் பகுதியில் நுழைய முயன்றார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அப்பெண்ணைப் பிடித்து, தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர், இலங்கை, கொழும்பு, முகமதியாபுரம், மண்டல் பட்டு ரோட்டைச் சேர்ந்த, பரிமளா காந்தி, 53, என்பது தெரியவந்தது. இலங்கையில் இருந்து, கடந்த ஜூ…
-
- 0 replies
- 457 views
-
-
மதுபான விற்பனை கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்: - வலுக்கும் மக்கள் போராட்டம் [Friday 2017-05-26 08:00] தமிழ்நாடு முழுவதும் அரசு டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை புழல், லட்சுமிபுரம் பகுதியில் டாஸ்மாக் விற்பனை நேரத்துக்கு முன்னரும், பின்னரும் கூட மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு ஆட்கள் வருவதைக் கண்ட பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர் . ஆனால் போலீசார், புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதே பகுதியிலுள்ள பச்சையப்பன் காலனியில் ரகசியமாக மக்கள் கண்காணித்தனர். அங்கே மதுபானங்கள் விற்பனை ஜரூராக நடப்பதைப் பார்த்த…
-
- 0 replies
- 356 views
-
-
சண்டை நீக்கி இணையவிருக்கும் குடும்பங்கள்?! சசிகலாவின் மாஸ்டர் ப்ளான்! சிறையில் இருக்கும் சசிகலா, கட்சிக்குள் நிலவும் குழப்பங்களை நினைத்து வேதனையில் இருக்கிறார். கட்சி நிர்வாகிகளுக்குள் நாளுக்குநாள் விரிசல் அதிகமாகிக் கொண்டு இருப்பது கட்சிக்கும் ஆட்சிக்கும் ஆபத்தாகிவிடும் என்று குடும்ப உறவுகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் சசிகலா. கசப்புகளை மறந்து ஒன்றுசேர்வதற்கான இணைப்பு வேலைகளில் மன்னார்குடி குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில், வருமான வரித்துறையின் ரெய்டில் சிக்கிய அமைச்சர்கள் கிலியில் இருக்கும்போதே... 'இரட்டை இலைச் சின்னத்தை மீட்க பணம் கொடுக்க முயன்றார்' என்ற வழக்கில் டி.டி.வி.தினகரனைச் சுற்றிவளைத…
-
- 0 replies
- 324 views
-
-
‘மூன்று நாளில் நல்ல செய்தி!’ - மர்மம் கலைக்கும் டி.டி.வி.தினகரன் #VikatanExclusive ‘மூன்று நாள்களுக்குள் நல்ல முடிவை அறிவிப்பேன்' என்று டி.டி.வி.தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீபா, திவாகரன் என அணிகளின் பட்டியல் நீள்கின்றன. அ.தி.மு.க-வில் உருவான அணிகளால் தொண்டர்களின் நிலைமை மதில்மேல் பூனையாக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தைரியத்தைப் பார்த்து மன்னார்குடி குடும்ப உறவுகளும் அ.தி.மு.க-வினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். …
-
- 0 replies
- 500 views
-
-
மிஸ்டர் கழுகு: சசிகலாவிடம் பேசிய 8 அமைச்சர்கள்? - பயத்தில் எடப்பாடி! ‘‘சி.சி.டி.வி கேமரா வந்த பிறகு யாரும் தப்ப முடியாது போலிருக்கிறது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டோம். ‘‘சென்னை, தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில்தான் சசிகலா தங்கியுள்ளார். பரோலில் வந்துள்ள சசிகலாவை யார் யாரெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க மத்திய, மாநில உளவுத்துறை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இது போதாது என்று ஏழு இடங்களில் ரகசிய கேமராக்களையும் பொருத்தியுள்ளதாம் மாநில உளவுத்துறை.’’ ‘‘சசிகலாவை யார் யாரெல்லாம் சந்தித்தார்கள்?’’ ‘‘மன்னார்குடி உறவுகள், நெருங்கிய சொந்தங்கள், தூரத்துச் சொந்தங்கள் எனப் பலரும் ச…
-
- 0 replies
- 4.7k views
-
-
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்கக் கோரும் வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்திருந்தார். வரும் 25-ம் தேதி, தாம் ஓய்வு பெறப் போவதாகவும், அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கோவையில் அவர் கூறியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, ராஜீவ் கொலை குற்ற வழக்கில் 25-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவ…
-
- 0 replies
- 504 views
-
-
மிஸ்டர் கழுகு: தி.மு.க-வுக்கு சைனி பெயர்ச்சி கையில் ‘முரசொலி’யுடன் கழுகார் நம்முன் ஆஜரானார். 2ஜி வழக்கின் தீர்ப்பை வைத்து 22-ம் தேதி, வெளியான ‘முரசொலி’யில், ‘வாய்மை வென்றது! பொய்மை புதைக்குழிக்குச் சென்றது’ என்று தலைப்புச்செய்தி வெளியிடப்பட்டது. ‘அன்றே சொன்னார்’ என்று கருணாநிதியின் கையெழுத்தில் ஒரு குறிப்பும் இருந்தது. ‘அநீதி வீழும், அறம் வெல்லும்’ என்று எழுதி மு.க. என்று கருணாநிதி அதில் கையெழுத்துப் போட்டுள்ளார். ‘2ஜி வழக்கு ஆரம்பித்தபோதே தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன கருத்து’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது.அவை அனைத்தையும் நம்மிடம் காட்டிய கழுகார், அது பற்றிய மேலும் பல செய்திகளை நம்மிடம் கொட்டினார். ‘‘தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்த சனிப்பெயர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்... அக்டோபர் 10, 2014 முனைவர் சுப. உதயகுமாரன் நாகர்கோவில் திரு. ரஜினிகாந்த் அவர்கள் போயஸ் கார்டன், சென்னை அன்பார்ந்த ஐயா: வணக்கம். எனது பெயர் சுப. உதயகுமாரன்; நான் ஒரு சமூகப் போராளி. தாங்கள் நடித்த பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். தாங்கள் ஒரு நல்ல மனிதர், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் நேரடி அரசியலில் ஈடுபடவிருப்பதாகவும், அது குறித்து தங்கள் ரசிகர் மன்றத் தோழர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஓர் இந்தியக் குடிமகன் என்ற முறையில் தேர்தல் அரசியலில் ஈடுபடவும், அதற்கான ஆயத்தங்கள் செய்துகொள்ளவும் தங்களுக்கு முழு உரி…
-
- 0 replies
- 706 views
-
-
தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.- சென்னை சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கிவைத்த அன்பில் மகேஸ் By RAJEEBAN 16 JAN, 2023 | 05:15 PM சென்னை சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கிவைத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (ஜன.16) துவக்கி வைத்தார். இம்மாதம் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் மலேசியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்,…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
`ஓரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே தேர்தல், ஒரே சட்டம் என்று ஒற்றைமயமாக்கல் பேசும் பா.ஜ.க, ஒரே நாட்டுக்குள் இருக்கும் கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்றுத் தராதது ஏன்?' - சீமான் காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடகம் - தமிழ்நாடு இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், உச்ச நீதிமன்றம், "தினமும் வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்த வேண்டும்" என கடந்த 21-ம் தேதி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப…
-
- 0 replies
- 682 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், செரிலன் மோலன் பதவி, பிபிசி நியூஸ், மும்பை 3 மணி நேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனம் விரைவில் தனது பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளதாக, அதன் முன்னெடுப்புகளை நன்கறிந்த ஆதாரங்கள் வாயிலாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலேயே பிக்ஸல் ஸ்மார்ட்போன் உற்பத்தியை தொடங்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அத்துடன், தானே சொந்தமாக ட்ரோன்களை தயாரிக்கும் ஆலையை தமிழ்நாட்டில் நிறுவ கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவுக்கும், மேற்குலகிற்கும் இட…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
குடித்து விட்டு கூத்தடித்த பெண்ணால் பரபரப்பு…. தஞ்சை அருகே இளம்பெண் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுவன் ஒருவனுக்கு அவனது தாய் மாமனே மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்த வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற மேலும் ஒரு சிறுவன் மது குடிக்கும் காட்சியும் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் காதல் தோல்வியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அதன் பரபரப்பு அடங்கு முன்பு தஞ்சையில் இளம்பெண் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை விளார் பைபாஸ் சாலையில் 25 வயது மதிக்க…
-
- 0 replies
- 325 views
-
-
வெள்ளம் பாதித்த கடலோர மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கை துரிதம்: சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பத்திரமாக மீட்பு சென்னையின் மீட்புப் பணிகள். | படம்: ஏ.எஃப்.பி வடசென்னையில் சுணக்கம்: ஆயிரக்கணக்கானோர் தவிப்பு * வெள்ளம் சூழந்த சென்னையில் இதுவரை ஏறத்தாழ 2,500 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் புதன்கிழமை நள்ளிரவு தொடங்கி இன்று பிற்பகல் வரை மழை பெய்யாததால் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்றன. கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சற்று குறைந்தது. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ள…
-
- 0 replies
- 230 views
-
-
அடேங்கப்பா... 3 ஆண்டுகளில் சமஸ்கிருதத்துக்கு ரூ643.84 கோடி ஒதுக்கீடு- தமிழுக்கு ரூ 22 கோடிதானாம்! மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு ரூ643.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது; ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வெறும் ரூ22 கோடி மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. லோக்சபாவில் மொழிகளின் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த எம்.பி.க்களின் கேள்விகளுக்கு மத்திய அரசு அளித்திருக்கும் பதில்:சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்காக டெல்லியில் ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ643.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2017-18ல் ரூ198.31 கோடி; 2018-19-ல் ரூ 214. 38 கோடி; 2019-2020-ல் ரூ 231.15 கோடி ஒதுக்கப்பட்டு…
-
- 0 replies
- 583 views
-
-
மற்றும் போன்ற மத்திய அரசு பணிகளிற்கான தேர்வாணையம் சமீபத்தில் நான்கு பெரிய மாற்றங்களை தேர்வு முறையில் மாற்றம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது இது ஹிந்தி பேசாத மக்களை வெகுவாக பதித்து உள்ளது. இது குறித்து முதல்வர் , ஜெயலலிதா நேற்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஜெயலலிதா மேலும் கூறியுள்ளதாவது:- 2013-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எஸ்.,ஐ.ஏ.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மாற்றம் செய்துள்ளது. இந்த மாற்றமானது பாரபட்சமாகவும் அநீதியாகவும் உள்ளது. தேர்வு முறையில் பெரிய அளவில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றமானது தமிழகத்தில் இருந்து ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களின் நலன்களை கடுமையாக பாதிக்கும். அதுவம்…
-
- 0 replies
- 513 views
-