தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
ஈழத்த தமிழர்களுக்கு மாநில சுயாட்சியே தீர்வு - தா.பாண்டியன் விசேட செவ்வி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ரூபவ் மாநில பொதுச்செயலாளர் பதவிகளை வகித்தவரும் தேசிய குழு உறுப்பனருமா தா.பாண்டியன் வீரகேசரி இணையத்தளத்திற்கு அளித்த விசேட செவ்வி வருமாறு, கேள்வி:- தமிழகத்தில் திரைப்படத்துறையின் பிரபல்யங்கள் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அரசியலில் பிரவேசிப்பதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்:- திரைப்பட நடிகர்கள் வருகை தருவதையும் பேசுவதையும் பார்வை…
-
- 0 replies
- 658 views
-
-
மிஸ்டர் கழுகு - டாக்டருக்கு நெருக்கம்... அரசருக்குப் பதக்கம்... அணி மாறுகின்றனவா கட்சிகள்? கழுகார் நுழைந்ததும், ‘‘அரசியல் கூட்டணிகள் மாறுகின்றனவா?” என்ற கேள்வியை மையமாகக்் கேட்டு வைத்தோம். நாம் எதைக் கேட்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டவராக, ‘‘ஓ! அதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார். எதை வைத்து என்று கேட்பதற்குள், கழுகாரே தொடங்கிவிட்டார். ‘‘சென்னையில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் ஸ்டாலினும் ராமதாஸும் ஒரே மேடையில் உட்கார்ந்து இருந்ததை வைத்துத்தான் அரசியல் கூட்டணிகள் மாறுகின்றனவா என்று கேட்கிறீரா? கூட்டணிகள் மாறுகின்றனவா, கூட்டணிகள் சேர்கின்றனவா என்பது போகப் போகத்தான் தெரியும். ‘இந்திய வணிகர் சங்க உரிமை மீட்பு மாநாடு’ என்ற பெயரில், சென்னை வ…
-
- 0 replies
- 979 views
-
-
நான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம்: நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜ.கவை எதிர்த்து தொடர்ந்து பேசி வருவதால் தான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார் . பிரபல பத்திரிக்கையாளரும், தனது தோழியுமான கௌரி லங்கேஷ் கொலைக்கு பின்னர் தொடர்ச்சியாக மத்திய அரசை எதிர்த்து கருத்துகளை முன்வைத்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். இந்நிலையில் மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகாஷ் ராஜ் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புக்கு எதிராக பேசி வருவதால் என்னை கொல்ல சதி நடக்கிறது. இதற்காக சில இந்து அமைப்புகள் திட்டம் தீட்டுகின்றன, நான் அஞ்சப் போவதில்லை, என்னுடைய உயிரை வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம். என்னுடைய அறிவு…
-
- 0 replies
- 560 views
-
-
ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம்! - அம்மா சமாதி ‘டெண்டர்’ குஷி! காவிரிப் பிரச்னை, நீட் தேர்வு சிக்கல், வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாடு, அரசு ஊழியர்கள் போராட்டம் என உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், ‘ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம்’ என முதல்வர் எடப்பாடி பழனி சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து, பிரமாண்ட யாகசாலை பூஜைகளுடன் ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். உலகத் தரத்தில் இதை ஓராண்டுக்குள் கட்டிமுடிப்பதாகத் திட்டம். 36,806 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த நினைவிடத்தில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது. செலவு, 50 கோடியே 80 லட்சம் ரூபாய். எம்.ஜி.ஆர் நினைவிட…
-
- 0 replies
- 1.8k views
-
-
உயிர்க்கொல்லி நீட்: எர்ணாகுளத்தில் துயரம்.. தமிழக மாணவரின் தந்தை மாரடைப்பால் திடீர் மரணம். நீட் தேர்வை எழுத எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்ற தந்தை கிருஷ்ணசாமிக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி விளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (47). அரசு ஊழியராவார். இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம். இவர் பிளஸ் 2 முடித்துள்ளார். நீட் தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்தும் அந்த மாணவருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கஸ்தூரி மகாலிங்கம், தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் நேற்று எர்ணாகுளம் சென்றடைந்தார்.அங்கு ஹோட்டல்களில் தங்கும் அறை கிடைக்காமல்…
-
- 2 replies
- 572 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் (நேர்காணல்:- ஆர்.ராம்) மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபரும், ஈழத்தமிழர் விடயத்தில்; நீண்ட அனுபம் கொண்டவரும், தமிழர் தேசிய முன்னணியின் தலைவரும் எழுத்தாளருமான பழ.நெடுமாறனுடன் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு, சமகால அரசியல் நிலைமைகள், ராஜீவ் காந்தி மரணத்தின் பின்னணி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது? உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த அவருடைய அலுலகத்தில் நடைபெற்ற பிரத்தியேக சந்திப்பின்போது கலந்துரையாட முடிந்தது. இதன்போது அவர் விளக்கமளித்து முன்வைத்த கருத்துக்கள் வருமாறு, அமிர்தலிங்கத்தை …
-
- 1 reply
- 688 views
-
-
ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில்.. ஜெயலலிதா நினைவு மண்டப மாதிரி தோற்றம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்கும் நிகழ்ச்சிக்கான யாக பூஜை இன்று காலை 6.30 மணிக்கு துவங்கி நடைபெற்றது. யாகசாலை பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினாவில் எம்ஜிஆர் சமாதி அருகேயுள்ளது. ஜெ. நினைவிடத்தை நினைவு மண்டபமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.50.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஃபினிக்ஸ் பறவை போல அரசியலில் அதிரடியாக எழுந்து வந்தவர் ஜெயலலிதா என்று பறைசாற்ற வேண்டும் என்பது அதிமுக தலைமை விருப்பம். அதற்கேற்ப நினைவு மண்டபமும் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அ…
-
- 0 replies
- 631 views
-
-
டாஸ்மாக் கடைகளை மூட ஆவியாக வருவேன்: தற்கொலை செய்த மாணவன் கடிதம் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயிலைச் சேர்ந்த தினேஷ் (17) என்ற பள்ளி மாணவன் தனது மரணத்திற்கு பிறகாவது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை பிரதமர் மோதி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மூடவேண்டும் என்று கோரி கடிதம் எழுதிவைத்துவிட்டு, புதன் அன்று (மே2) தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ரெயில் மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்ட மாணவனின் பையில் இருந்து எடுக்கப்பட்ட கடிதத்தில் தனது தந்தை குடிப்பழக்கத்தில் இர…
-
- 1 reply
- 661 views
-
-
அவர் எப்படி உலகத் தமிழர்களிடம் நிதி வசூல் செய்தாரோ அப்படித்தான் நானும் அவர்களிடம் வசூலித்து வருகிறேன் காவிரி, ஸ்டெர்லைட் நியூட்ரினோ என போராட்டங்களால் தமிழகமே கொந்தளித்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டங்களில் பங்ெகடுத்து கொண்டே தனிக்களத்தில் மோதி கொண்டிருக்கிறார்கள் சீமானும் வைகோவும். பிரபாகரனோடு சீமான் இருக்கும் புகைப்படம் கிராபிக்ஸ். அதை பயன்படுத்தி சீமான் உலக நாடுகள் முழுவதிலும் புலிகளின் பிரதிநிதி என்று கூறி பணம் வசூலிக்கிறார். புலிகளோடு வேட்டைக்கு போனதாகவும், ஆமைக்கறி தின்றதாகவும் பொய் சொல்லி வருகிறார் என சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் …
-
- 0 replies
- 940 views
-
-
மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் புது வியூகம்... மூன்றாவது அணியா? ‘‘செம வெயிட்டு’’ எனக் ‘காலா’ பாடலை உற்சாகமாகப் பாடிக்கொண்டு உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘வெயிட்டான தகவல்களுடன் வந்திருக்கிறீர் போல... அந்தத் தகவல்களைக் கொட்டும்’’ என்றோம். ‘‘முதலில் டெல்லியிலிருந்து ஆரம்பிக்கிறேன். மே 1-ம் தேதி டெல்லி சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத் திடீரென சந்தித்தார். கொஞ்ச நாள்களாக தேசியச் செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ள மூன்றாவது அணி குறித்த குழப்பங்களை இந்தச் சந்திப்பு மேலும் அதிகமாக்கிவிட்டது.’’ ‘‘என்ன புதுக்குழப்பம்?’’ ‘‘திருமாவளவன் - ராகுல் காந்தி சந்திப்புக்கு இரண்டு நாள்கள் முன்னதாகத…
-
- 0 replies
- 1.6k views
-
-
மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-க்கு எதிராக..! - காங்கிரஸும் இருக்குமா? ‘‘வெயிலும் கொளுத்துகிறது... டெல்லி அனல் இங்கே பரவுவதால், அரசியலும் தகிக்கிறது’’ என்றபடி வந்தார் கழுகார். ‘‘விளக்கமாகச் சொல்லும்’’ என்றோம். ‘‘தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணியை அமைப்பதில் வேகமாக இருந்தார். இதில் அவரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும் முக்கியமானவர்கள். இப்போது, அவர்களின் மனத்தை மாற்றி காங்கிரஸ் தலைமையிலான இரண்டாவது அணியிலேயே இணைந்து செயல் படுவோம் என்ற எண்ணத்துக்கு அவர்களைக் கொண்டுவந்துள்ளார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். கருணாநிதியைச் சந்திக்க சந்திரசேகர ராவ் கோபாலபுரம் வந்ததில் ஆரம்பித்தது இந்த மாற்றம்.’’ …
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு உதய முயன்றதாக நால்வருக்கு சிறைத்தண்டனை விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆயுதங்களையும், பொருட்களையும் சிறிலங்காவுக்கு கடத்த முயன்றார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கிருஷ்ணகுமார், சுபாஸ்கரன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகளும், இராஜேந்திரன், சசிகுமார் ஆகிய இருவருக்கும் தலா மூன்றரை ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும், 2014ஆம் ஆண்டு இராமேஸ்வரன் அருகே கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஒரு தொகை சயனைட், மற்றும் புவிநிலைகாட்டி கருவிகள் கைப்பற்றப்பட்டன. விடுதலைப் புலிகள் இயக…
-
- 0 replies
- 462 views
-
-
மிஸ்டர் கழுகு: பதவி பறிக்கும் குட்கா? ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறேன். மதியத்துக்குள் வந்துவிடுவேன்’ என மெசேஜ் அனுப்பியிருந்தார் கழுகார். மதிய வெயிலில் வியர்வையோடு வந்த அவரிடம், ‘‘காவிரிப் பிரச்னை, கவர்னர் விவகாரத்தால் பின்னுக்குப் போனது. கவர்னர் விவகாரம், தினகரன்-திவாகரன் மோதலில் அடிபட்டுப் போனது. இப்போது குட்கா விவகாரம் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டதே’’ என்றோம். ‘‘தினகரனுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. மோடியின் ஆலோசகராக உள்ள அதிகாரி ஒருவர் தினகரனை சென்னையில் வந்து சந்தித்துவிட்டுப் போனார் என பல வாரங்களுக்கு முன்பே நமது நிருபர் எழுதியிருந்தார். அதற்கும், நீர் மேலே சொல்லி இருக்கிற எல்லா வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேரின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுமா? - உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, அக்கட்சியின் பொருளாளராக இருந்த நிதிமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பொறுப்பேற்றார். சில நாள்களில், சசிகலா குடும்பத்தோடு ஏற்பட்ட மோதலால் முதல்வர் பதவியில் இருந்து திடீரென்று ராஜினாமாசெய்தார். அவருக்கு ஆதரவாக 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இந்நிலையில், சசிகலா ஆதரவாளராக இருந்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஆனார். அப்போது, 'ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் அவரிடம் இல்லை' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து, எடப்பாடி ப…
-
- 1 reply
- 744 views
-
-
நளினியை விடுதலை செய்ய உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் சென்னை: முன்கூட்டியே விடுவிக்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், நளினியை விடுதலை செய்ய உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-இன் படி முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனைக் கைதியான நளினி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று மனுவை தள்ளுபடி செய்துள்ளத…
-
- 0 replies
- 451 views
-
-
ஜெயலலிதாவின் ரத்த, திசு மாதிரிகள் இல்லை: அப்போலோ பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளோ, திசு மாதிரிகளோ தங்களிடம் இல்லை என அவருக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என அறிவிக்கக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''ஜெயலலிதாவின் உடலுக்கு எங்களது வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்பதால், அவரது உடலைத் தோண்டியெடுத்து எங்கள் சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். மேலு…
-
- 0 replies
- 487 views
-
-
அரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது - ரஜினிகாந்த் பாரதிராஜா உள்ளிட்ட பலர் உங்களை எதிர்க்கிறார்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். #Rajinikanth நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக அரசியல் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று இரவு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. …
-
- 3 replies
- 1.1k views
-
-
திவாகரன் தனிக்கட்சி! - பின்னணியில் எடப்பாடி ‘‘நான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும்? இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். நாம் நமக்கான வழியைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்’’ என மன்னார் குடியில் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் மத்தியில் கர்ஜனை செய்திருக்கிறார் திவாகரன். விரைவில் தனிக்கட்சி ஆரம்பிக்கும் மனநிலையில் திவாகரன் இருப்பதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் கிசுகிசுக்கிறார்கள். இதன் பின்னணி யில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகச் சொல்லப்படுவதால், பரபரக்கத் தொடங்கியுள்ளது மன்னார்குடி வட்டாரம். …
-
- 5 replies
- 2.2k views
-
-
ஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை கிராம பெண்கள் ஆபத்தை அறியாமல் கழுத்து அளவு தண்ணீரில் இறங்கி உணவுக்காக கைகளால் இறால் மீன்களை பிடிக்கின்ற நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ளது காரங்காடு மற்றும் சேந்தனேந்தல் கடற்கரை கிராமம். அங்குதான் இ…
-
- 4 replies
- 2.5k views
-
-
மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்! ‘‘தமிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது. அந்த வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 22-வது அகில இந்திய மாநாடு’’ என்றபடி வந்தார் கழுகார். ‘‘அந்த மாநாட்டில் என்ன முக்கியத்துவம்?’’ என்றோம். ‘‘கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதான், மிகப்பெரிய முக்கியத்துவம். ஏனென்றால், அவருக்கும், அந்தக் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
எஸ்.வி.சேகருக்கு அடைக்கலம்? தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு.பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகர் எஸ்.வி. சேகருக்கு அவரது உறவினரும் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் அடைக்கலம் கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது. பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தும் பதிவை தமது சமூக வலைதளங்களில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக எஸ்.வி.சேகர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இதனிடையே எஸ்.வி.ச…
-
- 0 replies
- 650 views
-
-
காவிரியை விட மெரீனா கடற்கரை முக்கியமா: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், "காவிரி பிரச்சனையைவிட மெரீனா கடற்கரை முக்கியமா?" என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசைக் கேட்டுள்ளது. Image captionஉயர்நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலி…
-
- 0 replies
- 508 views
-
-
''அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியா.. இல்லையா..?'' பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணி குறித்து முன்னுக்குப்பின் முரணாக வரும் அறிவிப்புகளால் அ.தி.மு.க. தொண்டர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். பி.ஜே.பி-யிலும் இதே குழப்பம் நிலவுகிறது. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அவரோடு நட்பு பாராட்டினார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா. பிறந்த நாள்களின் போது ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லி வந்தார்கள். 2011-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது, சென்னை வந்து அந்த விழாவில் பங்கேற்றதுடன் ஜெயலலிதாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் மோடி. அதன்பிறகு 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யின் பிரதமர…
-
- 0 replies
- 596 views
-
-
சசிகலா குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் 'பளிச்'சென அம்பலமாகி வருகின்றன. தினகரன் - திவாகரன் இடையே வெடித்த குடும்பத்தில் கடும் கசமுசா ஏற்பட்டுள்ளது.இதை, திவாகரன் மகன், ஜெயானந்த், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோரின் 'பேஸ்புக்'பதிவுகள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளன. ஜெ., மறைவுக்கு பின், சசிகலா குடும்பத்திற்குள் அதிகார மோதல் ஏற்பட்டது. சசிகலா சிறைக்கு சென்றதும், மோதல் அதிகரித்தது. சசிகலா அறிவுரைப்படி, அவரது அக்கா மகன் தினகரன், புதிய கட்சியை துவக்கி உள்ளார். சசிகலாவின் தம்பி திவாகரன் கட்சியில் தன் மகனுக்கு முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், குடும்பத்தினரை ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டி தினகரன் தனித்து செயல்பட்டு வருகிறார். இது, த…
-
- 0 replies
- 588 views
-
-
தமிழர்களுக்குள்ள பாதுகாப்பு என்ன? - பண்ருட்டி இராமச்சந்திரன் விசேட செவ்வி இலங்கை இந்திய ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் பணியாற்றியவரும் முழுநேர அரசியலுக்கு விடைகொடுத்துள்ள போதும் அ.தி.மு.க.வில் தற்போதும் செயற்பட்டு வருகின்றவரும் அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என அனைத்து தலைவர்களுடனும் பணியாற்றிய அனுபவத்தினைக் கொண்டிருப்பவருமான மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி இராமச்சந்திரன் தமிழகம் மற்றும் இலங்கையில் நிலவும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமைத்துவ இடைவெளி ஏற்பட்டுள்ளமையை உணர்கின்றீர்களா? கமல், ரஜினியை வருகையை எப்படி பார்க…
-
- 0 replies
- 538 views
-