Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஓய்வு கிடைக்காமல் உழைப்பவர்கள் நிறைய பேர். விபத்து, இழப்பு மாதிரியான அசம்பாவிதம் நடந்தால் கட்டாய ஓய்வு கிட்டும். ஓடி ஓடி உழைக்கிறோமே தேவைதானா, நாம் போகும் பாதை சரிதானா என்று நிதானமாக திரும்பிப் பார்த்து யோசிக்க கடவுள் வழங்கும் சந்தர்ப்பம் அது. மறுப்பாளிகள் இயற்கை எனலாம். ஜெயலலிதாவுக்கு கிடைத்திருப்பது அம்மாதிரியான சந்தர்ப்பம்.அரசு நிர்வாகத்தில் அன்றாட தலையீடுக்கு இடமில்லை. திரும்பி பார்ப்பது தவிரவும் நிறைய நேரம் கிடைக்கும். எங்கெங்கோ கண்காணாத இடங்களில் வசிக்கும் கட்சிக்காரர்களின் கடிதங்களை உதவியாளர்கள் வடிகட்ட விடாமல் தானே எடுத்து படிக்கலாம். நிதர்சனத்துக்கும் தனக்கும் இடையே எழுப்பப்பட்ட சுவரை அளவெடுக்கலாம். பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கத்தை புதுப்பிக்கலா…

  2. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 27-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி... கனவு நனவாகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகிற 27-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அன்றைய தினம் மதுரை - சென்னை இடையிலான அதிநவீன தேஜஸ் ரயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ரூ.1,258 கோடியில், மதுரை தோப்பூரில் அனைத்து வசதிகளுடன் பிரமாண்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில், வரும் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி, மதுரை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்றைய தினம் அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.தென் தமிழகத்தில் சகல மருத்துவ வசதிக…

  3. தி.மு.கவுக்கு எதிராக ரஜினியைக் களமிறக்க பா.ஜ.க வியூகம் எம். காசிநாதன் / 2019 ஜூன் 10 திங்கட்கிழமை, மு.ப. 10:54 Comments - 0 தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர், மான்ய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக ஆரம்பிக்கும் நேரத்தில், அ.தி.மு.கவுக்குள் பூகம்பம் உருவாகி இருக்கிறது. மத்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், பா.ஜ.க இந்தமுறை இல்லை. ஆனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற காரணத்தால், ‘அடையாள நிமித்தமாக’க் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுக்கும், ஓர் அமைச்சர் பதவியை, மத்திய அமைச்சரவையில் வழங்க பா.ஜ.க முன் வந்தது. இந்த அடையாள அங்…

  4. தே.மு.தி.க. தலைமையில் கூட்டணி?: விஜயகாந்த் அறிவிப்பார் என்கிறார் பிரேமலதா! காஞ்சிபுரம்: தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதையும், அந்தக் கூட்டணி தே.மு.தி.க. தலைமையில் இருக்குமா என்பதையும் கட்சித் தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமத்தில், தே.மு.தி.க. மாநில மாநாடு, வருகின்ற 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தே.மு.தி.க.வின் தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கூட்டணி குறித்த அறிவிப்பை மாநாட்டின்போதோ, மாநாடு முடிந்த ஒரு வா…

  5. தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க மெடிக்கல் சர்டிபிகேட் தயாரிக்கும் பாமகவினர்: ‘டாக்டர் அப்போதுதான் நம்புவாராம்’ சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதற்காகவே பாமக நிர்வாகிகள் பெரும்பாலானோர் கட்சித் தலைமையை சந்திப்பதை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுகிறது. முதலமைச்சர் வேட்பாளருக்கு உரிய அனைத்துத் தகுதிகளும் தனக்கு மட்டும்தான் உள்ளது என அன்புமணியும், பாமக நிறுவனர் ராமதாஸும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை நிறுத்த பாமக தலைமை தயாராகி வருகிறது. இதற்காக விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலும் நடத்தி முடித்துவிட்டது. இதனிடையே வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள், தேர்தலில் களமி…

    • 0 replies
    • 426 views
  6. கொரொனா தொற்று – சென்னையில் 15 வயது சிறுவன் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி சென்னையில் 15 வயது சிறுவன் உட்பட இருவா் கொரொனா வைரஸ் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் இருவரது ரத்த மாதிரிகளும் சென்னை கிங் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் இருவருக்கு அத்தகைய அறிகுறிகள் இருப்பதால், மாநிலம் முழுவதும் தீவிர மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை 39 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா…

  7. தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்த உள்ள காரணத்தால் காய்கறிகளை வாங்க கிருஷ்ணகிரி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், மக்களின் அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், மளிகைப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவை கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அரசின் இந்த 144 தடை உத்தரவை அறிந்த மக்கள் உடனடியாக ஒரு வாரத்திற்குத் தே…

  8. ராஜிவ் கொலை வழக்கில் விசாரணை முழுமையாக முடியலையே..:ரகோத்தமன் அதிரடி! Posted by: Mathi Published: Monday, February 11, 2013, 11:15 [iST] சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை என்று அக்கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் தெரிவித்திருக்கிறார். அப்சல் குருவைத் தூக்கிலிட்ட நிலையில் ராஜிவ் மற்றும் பியாந்த்சிங் கொலையாளிகள் இன்னமும் தூக்கிலிடப்படவில்லையே என்று ஒருதரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊடகங்கள் பலவும் பல கோணங்களில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ராஜிவ் கொலையாளிகள் விவகாரமும் அப்சல் குரு விவகாரமும் எப்படி வேறுபட்டது என்று டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளர் பகவான்சிங…

  9. ஈழத் தமிழரை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியை புதுவையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிப்பதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் இந்திய ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது: “ஈழத் தமிழரை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியை புதுவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்படி ஆதரிக்கலாம்? டெல்லியில் இன்று மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 4 அல்ல 40 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் மீனவர் பிரச்சினை தீரப்போவதில்லை. சிறுவாணியில் அணை கட்ட கேரளாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை நாம் வரவேற்கிறோம். தமிழர்களின் தொடர் போராட்டத்தால்தான் மத்திய அரசு இந்த தடையை …

  10. பல இன்னல்கள், அழுத்தங்களுக்கு மத்தியிலும் எம் தமிழக உறவுகளான மாணவர்கள் தமிழீழத்தில் வாழும் தம் தொப்புள்கொடி உறவுகளுக்காக தமிழகமெங்கும் பரவலாக முன்னெடுத்து வரும் உண்ணாநிலைப் போராட்டங்கள் புலம்பெயர்ந்து வாழும் மாணவர்களாகிய எம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வால் ஒற்றைப் புள்ளியில் இணைந்துள்ளோம் என்ற உணர்வை மீண்டுமொரு முறை ஊட்டியுள்ளது. பல்லாண்டு கால எமது விடுதலைக்கான போராட்டத்தில் மிக முக்கியமானதொரு படிக்கல்லாகவே உங்களது இப்போராட்டத்தினை புலம்பெயர்ந்து வாழும் மாணவர் சமூகத்தினராகிய நாம் கருதுகின்றோம். வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு ஈழத் தீவின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்த தமிழினம், படிப்படியாக சிங்கள இனத்தால் ஒதுக்கப்…

  11. ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தில் மாற்றம் கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று கலைஞர் அறிக்கை விடுத்தார். இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த இன்னும் காலஅவகாசம் உள்ளது. இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. திமுக எங்களுடன் கூட்டணியில் உள்ளனர். அவர்களுடன் இதுதொடர்பாக பேசுவோம் என்றார். இதனையடுத்து மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து கலைஞரிடம்…

    • 0 replies
    • 434 views
  12. ‘‘எல்லாத்துக்கும் காரணம் சசிகலாதான்...!’’ - ஒரு அ.தி.மு.க. தொண்டனின் குரல் ‘‘அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் வேண்டுமானால்... பதவிக்காக, சசிகலாவிடம் விலைபோகலாம். நாங்கள் எப்போதும் விலை போவதில்லை’’ என்று கொதிக்கிறார்கள், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள். இந்த நிலையில், ‘‘ ‘சசிகலா பொதுச் செயலாளராவது அ.தி.மு.க. தொண்டர்களின் முடிவு’ என்று பொன்னையன் சொல்கிறார். நீங்கள் இப்படிப்பட்ட விஷயத்தில் பொன்னையன், அமைச்சர்கள், கட்சிப் பிரமுகர்கள் போன்றவர்களிடம் பேட்டி எடுத்தால்... அப்படித்தான் சொல்வார்கள். அதற்குப் பதில், எங்களைப் போன்ற அடிமட்டத் தொண்டர்களிடம் பேட்டி எடுக்க வேண்டும்’’ என்று விகடன் இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த குமரவே…

  13. 29 ஏப்ரல் 2013 வேலூரில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட ஒருவர், பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்தது அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 52). தங்க நகைகளின் பேரில் கடன் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்துவந்தார். இவரது மனைவி சுமதி (வயது 44), விக்னேஷ்வரன் (வயது 19), சந்திரகாந்தன் (வயது 17) என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது இரு மகன்களுடன் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு சுமதி சென்று விட்டார். வீட்டில் சிவராமன் மட்டும் தனியாக இருந்துள்ளார். கடந்த 7…

  14. சசிகலாவுக்கு எதிராக தீபா வீட்டில் குவியுது கூட்டம்: அரசு இடையூறு செய்வதாக கட்சியினர் மறியல் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வீட்டின் முன், நாளுக்கு நாள் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தன் பேச்சு அனைவருக்கும் கேட்க வேண்டும் என்பதால், 'மைக்' பிடித்து பேச ஆரம்பித்துள்ளார் தீபா. கூட்டம் குவிவதால், இடையூறு ஏற்படுத்தும் செயல்கள் நடப்பதாக, தொண்டர்கள் நேற்று, மறியல் செய்தனர். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, அர…

  15. பெங்களூரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு சசிகலாவை மாற்றுவதை அனுமதிக்க முடியாது: கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா திட்டவட்டம் பி.வி. ஆச்சார்யா | கோப்புப் படம் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை அங்கிருந்து தமிழக சிறைக்கு மாற்றுவதை அனுமதிக்கமாட்டோம் என்று கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறினார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் கடந்த 15-ம் தேதி அடைக்கப்பட்டனர். …

  16. ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதம் வசூலிக்கப்படுமா? உச்சநீதிமன்றம் ஏப்ரல் 5-ல் விசாரணை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பாக கர்நாடக அரசு மனு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவை ஏப்ரல் 5-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது உச்சநீதிமன்றம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிப்ரவரி மாதம் 14-ம் தேதி உச்சநீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக…

  17. 'தமிழ்நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி குறைவு ஓர் அபாயமாக உருவெடுக்கிறது': ஆனந்த் ஸ்ரீநிவாஸன் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 10 ஜூலை 2021, 03:49 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாகக் கூறுகிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன். இதன் காரணமாக அடுத்த 20 ஆண்டுகளில் தமிழ்நாடு பெரும் சிக்கல்களைச் சந்திக்கும் என்கிறார் அவர். பிபிசி தமிழிடம் இது தொடர்பாக அவர் பேசியதிலிருந்து.. கே. தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகரிக்கும் விகிதம் தொடர்ந்து குறைந்துவருவது குறித்து கவலைப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டதா? ப. …

  18. ‘சசிகலா சிறை விவகாரத்தில் சென்னை அ.தி.மு.க. பிரமுகருக்குச் சிக்கல்!’ ஏ.சி, பிரிட்ஜ், இண்டக்‌ஷன் ஸ்டவ் சப்ளை செய்தது அம்பலம் #VikatanExclusive சென்னை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான எலக்ட்ரானிக்ஸ் கடை பெங்களூரில் உள்ளது. அங்கிருந்துதான் சசிகலா சிறை அறைக்கு குளிர்சாதன பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைக்குழுவுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக பெங்களூரு போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும் சில வி.வி.ஐ.பி.களுக…

  19. ஓ.டி.எஃப். கிராமங்கள் : 2ஆம் இடத்தில் தமிழகம்! மின்னம்பலம்2022-01-03 தூய்மை இந்தியா திட்டத்தின்படி கிராமப்புறத்தில் தூய்மையையும் சுகாதாரத்தையும் மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. இதில், ஊரக தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதக் கடைசிவரை அதாவது 2021 டிசம்பர் 31ஆம் தேதிவரை, நாட்டில் திறந்தவெளி மலம் கழிப்பு (ஓடிஎஃப்) ஒழிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கையில், தெலங்கானா மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 14, 200 கிராமங்களில் 13 ஆயிரத்து 737 கிராமங்களில் திறந்தவெளி மலம் கழிப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 9…

  20. கேரள அரசியல்வாதிகளின் நெருக்கடிகளுக்கு இடம் கொடுத்து கஸ்தூரி இரங்கன் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு வழங்கிய ஒப்புதலை இரத்து செய்து சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராசன் பதவி விலகி இருக்கிறார். தமிழகத்திற்கு இப்படியொரு அப்பட்டமான துரோகத்தைச் செய்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறது காங்கிரஸ்? கேரளாவில் இருந்து கிடைக்கும் வாக்குகள் எங்களுக்குப் போதும். தமிழகத்தில் இருந்து எங்களுக்கு உறுப்பினர்கள் தேவையில்லை என்பதாகத்தானே இருக்க முடியும்? தமிழகத்தைச் சேர்ந்த பிற காங்கிரஸ் அமைச்சர்களும், ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, ஆள நினைக்கும் கட்சிகளும் வேடிக…

  21. மிஸ்டர் கழுகு: அழைப்பு போகும்... ஆனா போகாது! கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘அ.தி.மு.க பொதுக்குழுவுக்கான வேலைகள் தொடங்கிவிட்டதா?” என்ற கேள்வியைப் போட்டோம். ‘‘அ.தி.மு.க பொதுக்குழு செப்டம்பர் 12-ம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்த மண்டபத்தில்தான் கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி, அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூடி, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இப்போது அதே மண்டபத்தில் பொதுக்குழுவைக் கூட்டி, சசிகலாவைக் கட்சியை விட்டே நீக்க இருக்கிறார்கள். பொதுக்குழுவில் சுமார் 3 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ள…

  22. சென்னை: தை முதல் நாளே, தமிழ்ப் புத்தாண்டு நாள் என்பதால் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுமாறு கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: 2008 ம் ஆண்டு சட்டப் பேரவையில் ஆளுநர் தனது உரையில் செய்த அறிவிப்பில், திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம்; ஒட்டுமொத்தமாக தமிழ் அறிஞர்கள் அனைவரும் ஒரு மனதாக ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட திமுக அரசு முடிவு செய்துள்ளது என்று அறிவித்தார். 1939ம் ஆண்டு திருச்சியில் அகில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில், பெரியார், கரந்தை தமிழ்ச் சங்கத் தல…

  23. நெல்லை மாவட்டத்தில் அமைகப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். இந்த மக்களை தங்களது கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்து, வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் சுமார் 15 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியின் தேர்தல் பணிக்கும் சுமார் 7 ஆயிரத்து 500 தொண்டர்களை களமிறக்க தீர்மானித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தமிழ் நாடு மாநில கிளை நிர்வாகிகள், கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதில் ஒரு கட்டமாக, உதயகுமார் தலைமையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் போராடி வரும் மக்களை தங்களது கட்சியில் உறுப்பினர்…

  24. பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு! பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், வெடிகுண்டில் நான் வாங்கிக் கொடுத்த பேட்டரியே பயன்படுத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. இதனால் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். …

  25. இலங்கைக்கு கடத்தவிருந்த பெருமளவிலான கஞ்சா மீட்பு : ஒருவர் கைது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருளுடன் கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை இராமநாதபுரம் சுங்கத்துறையினர் கைதுசெய்துள்ளனர். இலங்கைக்கு கடத்தவிருந்த பத்து இலட்சம் ரூபாமதிப்பிலான 150 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை இராமநாதபுரம் சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இராமநாதபுரம் அருகே நொச்சியூராணி கடற்கரை பகுதியில் வைத்து குறித்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கார்த்தி என்பவரை கைதுசெய்துள்ள இராமநாதபுரம் சுங்கத்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவத்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.