தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10254 topics in this forum
-
தமிழக முதல்வர் யாரென்று தெரியாத தமிழர்களும் இருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா..?! தேர்தல் களம் கோடை வெயிலைவிட வெப்பமாக இருக்கிறது என்றெல்லாம் பிதற்ற விரும்பவில்லை. வாக்குறுதிகள், அவதூறு பேச்சுகள், மாற்று கட்சி மீதான தூற்றல்கள் என எல்லாவற்றையும், பிரதான நீரோட்டத்தில் இருக்கும் தமிழன் கடந்த பல தசாப்தங்களாக பார்த்து பழகிவிட்டான். இந்த கட்டுரை உங்களுக்கு தேர்தல் சூது, தலைவர்கள், வாக்குறுதிகள், ஏன் முதலமைச்சர் யார் என்றே கூட தெரியாத வெள்ளந்தி மனிதர்களைப் பற்றி. ஆம். ரோல்ஸ்ராய் கார் பறக்கும் இதே தமிழ்நாட்டில், உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி, லட்சம் கோடிகள் மூலதனம் திரட்டிவிட்டதாக பெருமை அடித்து கொள்ளும் இதே தமிழ்நாட்டில், ஐநூறுக்கு மேல் பொறியியல் கல்லூரிகள் இருக்கும்…
-
- 0 replies
- 634 views
-
-
500,1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததிலிருந்து சுங்கச்சாவடிகளில் சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக நவம்பர் 11 வரை சுங்கக்கட்டணம் கிடையாது என்று அறிவித்தது மத்திய அரசு. அதன் பின் இந்த சில்லறைத் தட்டுப்பாடு நீடித்ததால் நவம்பர் 14 வரையிலும், பின் டிசம்பர் 2 வரையிலும் நீடிக்கப்பட்டிருந்தது. இந்த தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில் நாளை முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. சுங்கக்கட்டணம் செலுத்தும் பொழுது ரூ. 200க்கு மேல் செலுத்துவதாக இருந்தால் மட்டுமே பழைய 500 ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், ரூ.200க்கு கீழ் கட்டணம் இருந்தால் சில்லறையாகக் கொடுக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. தற்போது ரூ.2000 மட்டுமே அதிகமாகக் கிடைக்கும் நிலை உள்ளதால் சுங…
-
- 0 replies
- 409 views
-
-
யாருங்க இந்த ரஜினி.. தமிழர்கள் இப்படி முட்டாளா இருக்காங்களே.! மார்க்கண்டேய கட்ஜு வேதனை.! சென்னை: ரஜினிக்கு மண்டையில் ஒன்னுமே இல்லை என்று அன்று சொல்ல ஆரம்பித்த மார்க்கண்டேய கட்ஜூ இன்றுவரை ரஜினி மீதான தன் நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவே இல்லை... "ரஜினிக்கு ஆன்மீகம் தவிர மக்கள் பிரச்சனை பற்றி ஏதாவது தெரியுமா?" என்று ட்வீட் போட்டுகளை போட்டு கேள்விகளை எழுப்பி வருகிறார். சென்னை ஹைகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவுக்கு தமிழ்நாடு என்றால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாசம்.. ஒரு இணைப்பு.. ஒரு பிணைப்பு.. இதற்கு காரணம் எல்லாம் தெரியவில்லை. ஜெயலலிதா இறந்த சம்பவம், ஜல்லிக்கட்டு பிரச்சனை, இப்படி நம் மாநிலத்தை அசைக்கும…
-
- 0 replies
- 751 views
-
-
தர்மபுரி வன்முறை: மாறும் அரசியல் முகங்கள் ஸ்டாலின் ராஜாங்கம் நவம்பர் 7ஆம் தேதி தர்மபுரியில் மூன்று தலித் கிராமங்கள்மீது வன்னியர்களால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் சாதி முக்கியமான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கும் குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் அரசை வலியுறுத்துவதைவிட நடைபெற்ற வன்முறையை முன்வைத்து சமூக அரங்கில் உருவாகிவரும் புதிய அணிசேர்க்கைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கின்றன. தர்மபுரி வன்முறைக்குப் பாமகவின் சாதி அரசியலும் அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் கலப்புமணத்திற்கு எதிரான கருத்துகளும்தாம் காரணம் என்பதை முதன்…
-
- 0 replies
- 780 views
-
-
‘சசி லீலாவதி’ - நிஜமாகுமா நாடகம்? ப.திருமாவேலன், ஓவியம்: பாரதிராஜா `அம்மா’வை வாழ்த்தி எழுதிய பாசுரங்களை, `சின்ன அம்மா’வுக்காகச் சின்னத் திருத்தங்களுடன் ரத்தத்தின் ரத்தங்கள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதே கதை, அதே காட்சி, அதே நடிப்பு, அதே பாட்டு... விசிலடிக்கும் ரசிகர்களும் ஒன்றுதான். நடிக்கும் ஆள் மட்டுமே மாறியிருக்கிறார். முன்னர் ஜெயலலிதா; இதோ இப்போது சசிகலா! ‘நமது எம்.ஜி.ஆர்’ சித்ரகுப்தனுக்குச் சொல்லியா தர வேண்டும்? ‘வங்கக் கடலோரம் உறங்குகிற தாய்க்கு வரமாகக் கிடைத்தவர் வலக்கரமாய் வாய்த்தவர் வல்லூறுகள் வாலறுந்த நரிகள் ஏவுகின்ற பழிகளை வாழ்வெல்லாம் சுமப்பவர் வரும்பகை தூவிய வசவுகளை வாழ்வெல்லாம் சகித்தவர் தாயே உலகமென தவம்க…
-
- 0 replies
- 681 views
-
-
நீலகிரி: குன்னூர், வெலிங்டன் ராணுவ முகாமில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து இன்று மாலை ராணுவ முகாமை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் இரண்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு கடந்த மாதம் 21ஆம் தேதியில் இருந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 'தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது' என மத்திய அரசு உறுதியளித்திருந்த நிலையில், இங்கு இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது கண்டனத்துக்குள்ளானது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பல்வேறு தரப்பினரும் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளித்து…
-
- 0 replies
- 411 views
-
-
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ள மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நீர் பாசன பகுதிகளான திருவிடைமருதூர், கும்பகோணம், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் பூமிக்கு அடியில் இருந்து மீத்தேன் வாயு எடுக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. இதனை அனுமதித்தால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்ப்படும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தால் சுமார் ஒரு லட்சத்துக்கு 70 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி பாத…
-
- 0 replies
- 652 views
-
-
சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட ஆளுநருக்கு அட்டர்னி ஜெனரல் யோசனை?! சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரொஹத்கி யோசனை வழங்கியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. பெரும்பான்மையை தீர்மானிக்க சிறப்பு கூட்டத்தொடரே வழிவகுக்கும் என முகுல் ரொஹத்கி கூறியுள்ளாராம். ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொண்டதின் பேரில் தலைமை வழக்கறிஞர் இந்த யோசனையை வழங்கியிருப்பதாகவும், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக காத்திருப்பது நல்லதுதான். ஆனால், நீண்ட நாட்களுக்கு காத்திருப்பது ஏற்புடையதல்ல என முகுல் ரோஹத்கி கூறியுள்ளதாக தகவல். இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக…
-
- 0 replies
- 225 views
-
-
மெட்ராஸ் கஃபே : சீன் பை சீன் முழு திரைக்கதையை இங்கு படியுங்கள், பிறகு நீங்களே சொல்லுங்கள் தடை செய்ய வேண்டாமா என்று? மெட்ராஸ் காபே ராஜிவை கொல்ல சதியில் ஈடுபடுபடுபவர்கள் சந்திக்கும் இடம் அது ஓர் உணவு விடுதி காட்சி 1 மூன்று நான்கு வாகனத்தில் ஆயுதங்களுடன் வரும் விடுதலைப் புலிகள் யாழ்பாண வீதியில் சென்று கொண்டிருக்கும் மக்கள் மீது கண்மூடிட்தனமாக தாக்குதல் நடத்துகிறார்கள் பேருந்து கொளுத்தப்பட்டு பலர் சாகடிக்கப்படுகிறார்கள் இக்காட்சி முடிந்த பிறகுதான் படமே துவங்குகிறது இலங்கை பெரும்பான்மையாக சிங்களர் வாழும் ஒர் நாடு அதில் சிறுபான்மையாக உள்ள தமிழர்கள் தங்களுக்கு தனி நாடு கேட்டு போராடுவதிலிருந்துதான் சிக்கல் பெரிதாகிற்று என்ற பின்னணி கதைக் குறல் நமக்கு கதை சொல்கிறது .எ…
-
- 0 replies
- 726 views
-
-
அணிகள் இணைப்பு விவகாரத்தில் திருப்பம் பன்னீரும்,பழனியும் விரைவில் தனி ஆலோசனை அ.தி.மு.க., அணிகள் இணைவதில் உள்ள சிக்கல் தீர, முதல்வர் பழனிசாமியும், முன் னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், தனியாக சந்தித்து பேச வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக, இருவரும் ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என, நிர்வாகிகள் மற்றும் தொண்டர் கள் விரும்பு கின்றனர். சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் மட்டும் விரும்பவில்லை. நிபந்தனை இணைப்பு பேச்சு நடத்த, இரு…
-
- 0 replies
- 396 views
-
-
கலைஞர் கருணாநிதியின், 3ஆம் வருட நினைவேந்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 3ஆம் வருட நினைவு தினத்தினை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை- மெரீனாவிலுள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு இன்று காலை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதன்போது அங்கு வருகைதந்திருந்த அமைச்சர்கள், தி.மு.க.நிர்வாகிகள், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். https://athavannews.com/2021/1232985
-
- 0 replies
- 368 views
-
-
ஸ்டாலின் மெகா வெற்றியும் - அதிமுகவின் வீழ்ச்சியும் - ரவீந்திரன் துரைசாமி | கொடி பறக்குது நன்றி - யூரூப்
-
- 0 replies
- 377 views
-
-
“எனக்கு 19... உனக்கு 21” எடப்பாடியின் எலிமினேஷன் எம்.எல்.ஏ-க்கள்! ‘சட்டசபையைக் கூட்டி பலத்தை நிரூபித்தாக வேண்டும்’ என்கிற கட்டத்தை நோக்கி நகர்கிறது எடப்பாடி பழனிசாமியின் அரசு. ‘‘50 எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்’’ என டி.டி.வி.தினகரன் தரப்பு சொல்லிக்கொண்டிருக்க, ‘‘113 எம்.எல்.ஏ-க்கள் எங்களிடம் இருக்கிறார்கள்’’ என்கின்றனர் எடப்பாடி தரப்பினர். சபாநாயகர் தவிர்த்து மொத்தமுள்ள அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை 134-தான். பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடிக்கு 117 எம்.எல்.ஏ-க்கள் பலம் தேவை. அது இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். ‘‘இந்தச் சூழலில், தினகரன் தரப்பு மற்றும் தி.மு.க கோரிக்கைகளை ஏற்று கவர்னரோ, நீதிமன்றமோ ஏதாவது உத்தரவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
சசிகலா கும்பலில் இந்த ஆண்டு தண்டனை பெற்றவர்கள் 1 - 2 - 3 - 4 - 5 - 6... Colors: சென்னை:சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டு தண்டனை பெற்ற சசிகலா, சிறையில் உள்ள நிலையில், லண்டனில் இருந்து சொகுசு கார் இறக்கும…
-
- 0 replies
- 388 views
-
-
தமிழக கோவில்களில் தமிழில் குடமுழுக்கு: சுகிசிவம், ஆன்மிக தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் சலசலப்பு - என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SOCIAL MEDIA கோவில்களில் குடமுழுக்கை தமிழில் நடத்தலாமா என்பது தொடர்பாக திருநெல்வேலியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு, கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பாதியிலேயே அக்கூட்டம் முடிந்தது. கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தலாமா என்பது தொடர்பான கருத்துகளை அறிவதற்காக முதல் கட்டமாக தூத்துக்குடி, கன்னியா…
-
- 0 replies
- 734 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 17 JUN, 2023 | 06:58 AM விடுதலைப்புலிகளை மீளஉருவாக்குவதற்காக ஆயுதங்கள் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பத்து இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு வியாழக்கிழமை குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளது. இலங்கை இந்தியாவில் விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் அளிப்பதற்காக ஆயுதம் பணம் போதைப்பொருள் ஆயுதங்களை சேகரித்தல் பதுக்கிவைத்தல்போன்றவற்றிற்காக இவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என இந்தியாவின் என்ஐஏ குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்த குணா என அழைக்கப்படும் குணசேகரன் பூக்குட்டி கண்ணா என அழைக்கப…
-
- 0 replies
- 338 views
- 1 follower
-
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன. இன்று (வியாழக்கிழமை) மாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தலைமையில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்குப் பின்னர அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவிக்கையில் “பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. அந்தவகையில், சென்னை நகரிலிருந்து 14,263 சிறப்பு பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன. இந்த சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் ஜனவரி 9 ஆம் திகதி திறக்கப்படும…
-
- 0 replies
- 491 views
-
-
கதை கேளு.. கதை கேளு... 200 ரூபாய்க்காக கட்சி கூட்டத்துக்கு போகும் பெண்களின் கண்ணீர் கதையை கேளு..! சென்னை: முதல் நாள் இரவில் குடித்துவிட்டு வரும் கணவர்களால் அடுத்த நாள் காலையில் வீட்டில் உலை வைக்க காசு இல்லாத நிலையில் தான் பல வீட்டில் பெண்கள் தவிக்கிறார்கள். கிடைக்கும் அந்தக்கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், கட்சிகள் தரும் ரூ.200க்காக கோஷம் போட சென்று வருகிறார்கள். அவர்களை பற்றிய கதை தான் இது... இப்போது பெரும்பாலான வீடுகளில் ஆண்கள், மனைவி மற்றும் குழந்தைகளை விட, குடிதான் பெரிசு என்ற அளவுக்கு முழு நேரமும் மதுவுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். முன்பெல்லாம் ஏதேனும் விஷேசம் என்றால் குடித்துவந்த ஆண்கள், தினசரி குடிகாரர்களாக மாறிவிட்டார்கள். அதிலும் பலர் பகல் நேரக் கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக ரி. ரி. வி. தினகரன் தெரிவு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக ரி. ரி. வி. தினகரன் தெரிவு செய்யப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சி. ஆர்.சரஸ்வதி தெரிவித்ததாவது, “சென்னையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுச்செயலாளராக ரி. ரி. வி. தினகரன் ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவராக தெரிவு செய்யப்படுவார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடைபெற்று வருகிறது.” என்றார். முன்னதாக நீதிமன…
-
- 0 replies
- 497 views
-
-
வெள்ளத்தால் மின்வெட்டு? சென்னை தனியார் மருத்துவமனையில் 14 பேர் பலி ( காணொளியின் சில பகுதிகள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்) சென்னையில் 14 நோயாளிகளின் சடலங்கள், ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து, ராயப்பேட்டை அரச மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய செய்தி ஊடகங்கள் கூறுகின்றன. கடும் வெள்ளம் காரணமாக மருத்துவமனையில் உள்ள அவசர பிரிவுக்கு மின்சார விநியோகம் இல்லாத காரணத்தினாலேயே, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த சிலர் இறந்துவிட்டதாக, இறந்தவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். சென்னை மியாட் மருத்துவமனையிலிருந்து அந்த சடலங்கள் கொண்டுவரப்பட்டதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் மியாட் மருத்துவமனையின் அதிக…
-
- 0 replies
- 338 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் உள்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் திருத்தியமைக்கப்பட்ட 67 அமைப்புகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 45 பயங்கரவாத அமைப்புகளாகவும், 22 சட்டவிரோத அமைப்புகளாகவும் வகைப்படுத்தப்பட்டு திருத்தி அமைக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள், பாபர் கால்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் கமாண்டோ படை, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு, லஷ்க…
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
570 கோடி யாருக்குச் சொந்தம்? தி.மு.க. நடத்தும் நீதிமன்ற யுத்தம்!அலசல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2016, பல கண்கட்டி வித்தைகளைப் பொதுமக்களுக்குக் காட்டிச் சென்றுள்ளது. அவற்றில் சில வித்தைகள், விடை தெரியாத விநோதங்களாக இன்னும் நீடிக்கின்றன. கரூர் தொழிலதிபர் அன்புநாதன் வீட்டில் சிக்கிய பணம் எவ்வளவு? அன்புநாதனுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? திடீரென சிறுதாவூரில் 18 கன்டெய்னர்கள் ஏன் நின்றன... அதில், என்ன இருந்தன? அதன்பிறகு, அவை எங்கே மாயமாக மறைந்தன? திருப்பூரில் ரூ.570 கோடிகளுடன் வந்த 3 கன்டெய்னர்கள் யாருடையவை? அந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை என்பன எல்லாம் அப்படிப்பட்ட விடை தெரியாத விநோதங்கள். ஊடகங்கள், போலீஸ், அரச…
-
- 0 replies
- 784 views
-
-
தீபாவை தலைமையேற்க அழைக்கும் பேனர்களால் பரபரப்பு ! பெரம்பலூர் : ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை அ.தி.மு.க. தலைமையேற்க வருமாறு அழைத்து பெரம்பலூரில் ப்ளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் பதவி வகித்த ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் அழைப்பு விடுக்க... இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கண்டனக் குரல்கள் எழத்துவங்கியுள்ளன. இந்நிலையில், ஜெயலலிதாவின் ரத்த வாரிசான தீபா தலைமையில் கட்சி செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை திடீரென எழுந்துள்ள…
-
- 0 replies
- 678 views
-
-
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 160 தொகுதிகளின் வெற்றி - தோல்விகளுக்கு, சமூக வலைத்தளங்களின் தாக்கம் மிக முக்கியக் காரணமாக இருக்கக் கூடும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதில், தமிழகத்தில் உள்ள 12 நாடாளுமன்றத் தொகுதிகளும் அடங்கும். மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்கு தொடர்பாக, ஐ.ஆர்.ஐ.எஸ். நாலெட்ஜ் ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசிஷியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில், மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 160 தொகுதிகளில் வெற்றி - தோல்விகளை நிர்ணயிக்கும் அளவுக்கு சமூக வலைத்தளங்களின் தாக்கம் இருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 21 தொகுதிகளிலும்…
-
- 0 replies
- 550 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த வக்கீல் சாந்தகுமரேசன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- ராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள் அதிகம் உள்ளன. எனவே மீண்டும் விசாரித்தால் முழு விவரம் தெரியவரும். இல்லையெனில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் வழக்கை போல ராஜீவ் கொலையும் "மர்ம"மாக இருக்கும். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. இயக்குநர்கள் க…
-
- 0 replies
- 566 views
-