தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10296 topics in this forum
-
சேகர் ரெட்டி... எடப்பாடி... ஊழல் டீலிங்! - ‘அறப்போர்’ அதிரடி! சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைத்தண்டனைப் பெற்ற சூழலில், அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார், எடப்பாடி பழனிசாமி. அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப்பட்ட சூழலில், அவர்மீது அதிரடி ஊழல் புகார் ஒன்று பரபரப்பாக வலம் வரத் தொடங்கியுள்ளது. கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டவுடன், அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். இதைத் தொடர்ந்து ராவுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் பற்றி தகவல் வெளியானது. அதோடு, சேகர் ரெட்டிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இருந்த தொடர்பு உள்ளிட்ட விவகாரங்…
-
- 0 replies
- 929 views
-
-
“நான் ஒதுங்கி போக மாட்டேன்”- மல்லுக்கட்டும் தினகரன்! அ.தி.மு.க-வை விட்டு தினகரனை வெளியேற்றும் திருவிளையாடல்களை அவரது அணியில் உள்ளவர்களே ஆரம்பித்துவிட்டனர். ஆனால், மன்னார்குடி உறவுகளிடம் கட்சியை விட்டு நான் ஒதுங்கி போகமாட்டேன் என்று மல்லுக்கட்ட ஆரம்பித்துள்ளார் தினகரன். சசிகலா உறவுகளிடம் அ.தி.மு.க.வினர் காட்டிய பயமும், பவ்வியமும் இள்று காணமல் போய்விட்டது. சசிகலா உறவுகள் இனிமேல் அ.தி.மு.க.வில் கோலோச்ச வேண்டாம் என்ற கருத்துகள் பரவிவரும் நிலையில் சசிகலா உறவுகளுக்குள்ளும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. சசிகலாவினால் துணைப் பொதுச்செயெலாளராக அறிவிக்க தினகரன் கட்சி, ஆட்சி என இரண்டிலும் கோலோச்சுவதை பிற உறவுகள் விரும்பவில்லை. தினகரன் தனி ஆவ…
-
- 0 replies
- 392 views
-
-
உருகிய அற்புதம்மாள்.. நம்பிக்கை கொடுத்த ஸ்டாலின்.. நெகிழ்ச்சியான சந்திப்பு.. விரைவில் நல்ல முடிவு? Rayar AUpdated: Wed, Jun 16, 2021, 14:19 [IST] ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக எழுந்து வரும் கோரிக்கையாக இருந்து வருகிறது. 7 தமிழர்கள் விடுதலை 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 7 பேரையும் தமிழ்நாடு அரசே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விடுதலை செய்யலாம் என கூறியது. இதனை தொடர்ந்து முந்தைய அதிமுக அரசு, எழுவர் விடுதலை குறித்து தமிழக சட்டச…
-
- 0 replies
- 322 views
-
-
தினகரன் கைது: ஆட்சிக் கலைப்புக்கு வழிவகுக்குமா? #VikatanExclusive இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக 50 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாகக் கூறி, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கைது செய்யப்பட்ட அவரை டெல்லி போலீஸார் நேற்று சென்னைக்கு அழைத்து வந்து, அவரது வீட்டில் 6 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, பெங்களுரு, கொச்சி ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தினகரனுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் சென்னைக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்புவரை, தினகரனு…
-
- 0 replies
- 406 views
-
-
லஞ்சம் கேட்டதால் தொழிற்சாலை துவங்க கொரிய நிறுவனம் மறுப்பா? தமிழக அரசு விளக்கம் கியா மோட்டர்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்தபோது, மாநில அரசின் சார்பில் லஞ்சம் கேட்கப்பட்டதால் அந்நிறுவனம் விலகிச்செல்லவில்லையென்றும், தனது கொள்கை முடிவின் அடிப்படையிலேயே விலகிச் சென்றது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES தென்கொரியாவைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான கியா மோட்டர்ஸ் தமிழகத்தில் தனது தொழிற்சாலையை அமைக்க முடிவுசெய்து, தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது அரசு வழங்கும் நிலத்தின் மதிப்பைப் போல ஒன்றரை மடங்கு அதிக தொகை லஞ்சமாகக் கேட்கப்பட்டதாகவும் அதன் காரணமாக அந்த நிறுவனம் ஆந்திர மாந…
-
- 0 replies
- 439 views
-
-
மதுரை: மதுரையில், ஒரு பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. ஷேர் மார்க்கெட் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் அதில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார். மகன் அதிர்ச்சியிலும், மன வேதனையிலும், கடன்காரர்கள் நெருக்கியதாலும், மனம் உடைந்து காணப்பட்டதைப் பார்த்து அவரது தந்தை தனது மனைவி, மகனோடு தற்கொலை செய்து கொண்டார். மதுரை சிலைமான் செளராஷ்டிர காலனியைச் சேர்ந்தவர் குபேந்திரன். 28 வயதான இவர் எம்.பி.ஏ. படித்தவர். இவருக்கு மனைவி, மகன் உள்ளனர். ஷேர் பிசினஸில் ஈடுபட்டிருந்தார் குபேந்திரன். ஆனால் அதில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார். இதை சமாளிக்க கடன் வாங்க ஆரம்பித்தார். கடன் வாங்கினால்தான் அடைப்பது பெரும் கஷ்டமாச்சே... தொடர்ந்து கடன் வாங்க ஆரம்பித்து அது மலை போல உயர்ந்து விட்டது. இதையடுத்து கடன் க…
-
- 0 replies
- 345 views
-
-
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் கலை – அறிவியல் கல்லூரி : February 8, 2019 ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக 3,985 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபா நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வரும் குடும்பத்திற்கு விரிவான விபத்து- ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாகவும் விபத்து மூலம்…
-
- 0 replies
- 624 views
-
-
படக்குறிப்பு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சிப் பற்றிய சுவாரசிய தகவல்கள் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2024 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பூக்கத் துவங்கியுள்ளன. புல்வெளி நிறைந்த மலைப்பகுதியில் பூக்கும் இந்தப் பூக்களைக் காண மக்கள் ஆர்வத்துடன் படையெடுப்பது வழக்கம். ஆனால் இந்த மலர்கள் பற்றிய தகவல்கள் பலரும் அறியாததாகவே இருக்கின்றன. நீலகிரிக்கு நீலமலை என்ற பெயர் வரக் காரணம் என்ன? நீலக்குறிஞ்சி மலர்களின் பண்புகள் என்ன? இவை எந்தச் சூழலில் வளர்கின்றன? இந்த மலர் உள்ளூர் கலாசாரத்தில் எத்தகைய மு…
-
- 0 replies
- 575 views
- 1 follower
-
-
மு.க.ஸ்டாலினுக்கு 72-வது பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். மேலும் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு , தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்க…
-
- 0 replies
- 203 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காத்தவராயன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நபர் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிறகு தெய்வமாக்கப்பட்டதாக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் & ரக்ஷனா. ரா பதவி, பிபிசி தமிழ் 6 ஏப்ரல் 2025, 02:07 GMT காத்தவராயன் என்ற நாட்டார் தெய்வம் குறித்து கிட்டத்தட்ட அனைவருக்குமே நன்கு தெரியும். ஆனால், இந்தக் காத்தவராயன் என்ற தெய்வமும் அதற்கான வழிபாட்டு முறையும் தொடங்கியதன் பின்னணியில் ஓர் ஆணவக்கொலை சம்பவம் இருக்கலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். காத்தவராயன் மட்டுமில்லை, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் நாட்டார் தெய்வங்கள் பலவற்றின் தோற்றுவாயாக ஆணவக்கொல…
-
- 0 replies
- 403 views
- 1 follower
-
-
'உள்துறை அமைச்சர் போதும்!'- அ.தி.மு.க: 'பொறுப்பு முதல்வர் வேண்டும்!' - கவர்னர் ராஜ் பவனில் நடந்த அரசியல் பஞ்சாயத்து முதல்வர் ஜெயலலிதா குணமாக நீண்ட நாட்கள் ஆகும் என்று மருத்துவமனை தரப்பில் சொன்னதால், ஆளுங்கட்சியில் அடுத்தடுத்த விறுப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் காலகட்டம் மாதிரியான அசாதாரண அரசியல் சூழ்நிலையில் பி.ஜே.பி. அரசு மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவை தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக நியமித்தது. தற்போது ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருக்கிற சூழ்நிலையில், பி.ஜே.பி-யின் ஆதரவு அ.தி.மு.க&வில் யாருக்கு என்கிற பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ராகுல் …
-
- 0 replies
- 501 views
-
-
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சோதனை நடந்திருக்குமா? என்.ராம் கேள்வி ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தலைமைச் செயலரின் வீட்டிலோ, அலுவலகத்திலோ சோதனை நடத்த மத்திய அரசுக்கு தைரியம் வந்திருக்காது என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் இக் கருத்தைத் தெரிவித்தார்.தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் "ஜெயலலிதா இருந்திருந்தால் கட்டாயமாக நடத்தியிருக்க மாட்டார்கள். மென்மையான நேரத்தில் நடத்தியிருப்பது ஒரு பலவீனம்தான். ஆனால் எப்போதும் நடக்காமல்…
-
- 0 replies
- 435 views
-
-
தமிழர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல மாதங்களாக வீரியத்தோடு போராடி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கூடங்குளம் அணு உலைக்கான பொருட்களை வாங்குவதில் ஊழல் நடந்திருக்க கூடும் என்று வெளியாகியிருக்கும் தகவல்கள் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கூடங்குளம் அணு உலைக்காக பொருட்கள் வாங்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஜியோ-போல்டோஸ்க் என்கிற நிறுவனத்தின் அதிகாரி செர்ஜி ஷுடோவ் பல நாடுகளிலுள்ள அணு உலைகளுக்கு தரக்குறைவான பொருட்களை வழங்கியதில் ஊழல் என்கிற குற்றசாட்டுகளின் அடிப்படையில் பிப்ரவரி 2012ல் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தியா,பல்கேரியா,ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளில் ரஷ்யா அமைத்து வரும் அணு உலைகளுக்கு …
-
- 0 replies
- 446 views
-
-
ஏழே வழிகளில் ஈசியாக கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பண முதலைகள்.. தடுக்குமா அரசாங்கம்? மும்பை: புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்ட பிறகு சுமார் 200 இடங்களில் ஐடி துறை ரெய்டுகள் நடத்தியுள்லது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.17.2 கோடி மதிப்பிலானவை புதிய ரூ.2000 நோட்டுக்களாகும். அரசு அச்சடித்து அனுப்பும் புதிய 2000 நோட்டுக்களை கருப்பு பண முதலைகள் எப்படி பெறுகிறார்கள். தங்கள் கருப்பு பணத்தை எப்படி மாற்றுகிறார்கள் என்பது குறித்த ஒரு பார்வை இது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள தகவல் அடிப்படையில், பண மோசடியின் முக்கியமான 7 வழிமுறைகளை நாம் இதில் தெரிவித்துள்ளோம். அடையாள திருட்டு பொதுமக்கள் தங்களிடமுள்ள ப…
-
- 0 replies
- 302 views
-
-
கொரோனா பேரிடர் காலமான 2020-21 நிதியாண்டில் செலுத்த வேண்டிய ரூ. 36,311.47 கோடி வட்டியில், கடந்த நவம்பர் மாதம் வரை ரூ14,181.51 கோடி மட்டும்தான் வட்டி செலுத்தப்பட்டிருக்கிறது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. கடந்த பொங்கலுக்கு இரண்டு கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசப் பொருள்களுடன் ரூ 2,500 வழங்கி மக்களை மகிழ்ச்சியடையவைத்தது. வட்டி கொரோனா பேரிடர் காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மூன்று தவணைகளாக நிதியும், விலையில்லாமல் அத்தியாவசியப் பொருள்களும் வழங்கியது தமிழக அரசு. சமீபத்தில் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்…
-
- 0 replies
- 703 views
-
-
புதன், 22 மே 2013 கர்நாடக மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைப்பதே வாடிக்கை ஆகி விட்டது. காவிரிப் பிரச்சனையில் ஒன்றுபட்டுக் குரல் எழுப்புவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைப்பதே வாடிக்கை ஆகி விட்டது. கர்நாடகத்தில் புதிய முதல்வராகப் பதவி ஏற்று உள்ள சித்தராமையாவும் இதற்கு விதி விலக்கு அல்ல. தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவைச் செயல்படுத்த, பாஜக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முயன்றபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சித…
-
- 0 replies
- 421 views
-
-
வரலாறு படைத்த அறவழி போராட்டம் தமிழக அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத ஒரு சூழலை கடந்த வாரம் எதிர்கொண்டது. உலக வரலாற்றில் சாதனையாக பதிவு செய்யும் அளவிற்கு தலைமையேயில்லாத தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. அரசியல் நோக்கர்கள் மற்றும் எதிர்கால அரசியலுக்கான கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருக்கு ஆகச்சிறந்த உதாரணமாகவும் இந்த அறவழி போராட்டம் அமைந்தது. ஜனநாயகத்தில் மக்களின் உரிமை காக்கப்படவேண்டும் என்றாலோ அல்லது உரிமை மீட்டெடுக்கப்படவேண்டும் என்றாலோ போராட்டம் நடத்துவது என்பது அடிப்படையான நோக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் போராட்டத்தின் எந்த வடிவமாக இருந்தாலும் அதற்கு ஒரு தலைமை இருக…
-
- 0 replies
- 647 views
-
-
சென்னை: உச்ச நீதிமன்றத்தால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர், புகைப்படங்களை, அரசு திட்டங்களில் இருந்து நீக்கவும், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தவும் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், 2016 டிச., 5ல் மறைந்தார்.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பிப்., 14ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா இறந்து விட்டதால், மற்ற …
-
- 0 replies
- 322 views
-
-
ஜெயலலிதா கைநாட்டும் சசிகலா பதவியும்...! - ஆணையத்தை நெருக்கும் பன்னீர்செல்வம் தரப்பு #VikatanExclusive தேர்தல் ஆணையத்தை எதிர்கொள்வது குறித்துத்தான் சசிகலா உறவினர்கள் தீவிர ஆலோசனை நடத்திவருகின்றனர். ' அ.தி.மு.க-வின் சட்டவிதிகளுக்கு மாறாக, பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்தார் சசிகலா. ஜெயலலிதா இருந்தபோது, அ.தி.மு.க என்ன நிலையில் இருந்ததோ, அப்போது இருந்த கட்சியின் நிலையைத்தான் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கணக்கில் எடுத்துள்ளனர். இது, சசிகலாவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, அ.தி.மு.க நிர்வாகிகளால் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. இதுகுறித்து …
-
- 0 replies
- 678 views
-
-
"ஜெ.வீட்டு பணிப்பெண் எங்கே?" - ஓ.பி.எஸ் வீட்டில் விடிய விடிய ஆலோசனை! ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்து வருகிறார். சென்னை அடையாறு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டில், தனது ஆதரவாளர்களுடன் விடிய விடிய ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ஆலோசனைக் கூட்டம் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். "நேற்று இரவிலிருந்து இப்போ வரைக்கும் கூட்டம் நடந்துட்டு இருக்கு. கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'அப்போலோ மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதை மத்திய-மாநில அரசுகள் விளக்க வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்ததாகவும், ப…
-
- 0 replies
- 465 views
-
-
கலக்கம் ! தொடர் அஸ்திரத்தால் சசி அணியினர்... அ.தி.மு.க.,அலுவலகத்தை கைப்பற்ற பன்னீர் இலக்கு இரட்டை இலை சின்னத்தை முடக்கியது போல, அ.தி.மு.க., அலுவலகத்தை கைப்பற்ற, பன்னீர்செல்வம் அணி முடிவு செய்துள்ளதால், சசி அணியினர் கலக்கம் அடைந்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப்பின், அ.தி.மு.க., சசிகலா, பன்னீர் என, இரண்டு அணிகளாகச் செயல்படுகிறது. சசி அணிக்கு, 122 எம்.எல்.ஏ.,க் கள், 37 எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள் ஆதரவு உள்ளது. பன்னீர் அணிக்கு, 11 எம்.எல்.ஏ.,க்கள், 12 எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளது. சிறு குழு சசிகலா குடும்பத்தினர் மீதுள்ள வெறுப்பு காரண மாக, தொண்டர்கள்,…
-
- 0 replies
- 425 views
-
-
நெல்லை: இலங்கை முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் தஞ்சையில் அமைய உள்ள நினைவேந்தல் முற்றத்துக்கான நினைவு சுடர் பயணத்தில் ஈடுபட்டவர்களை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. ஈழ தமிழர் படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் தஞ்சையை அடுத்த விளார் என்ற இடத்தில் நினைவேந்தல் முற்றம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் முடிவடைந்து வரும் 8 ஆம் தேதி அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் முயற்சியில் அமைக்கப் பெற்றுள்ள இந்த நினைவிடத்திற்கு நினைவுச் சுடரை கொண்டு செல்லும் பயணம் இன்று தொடங்கியது. இந்த சுடர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நினைவிடம் அமைந்துள்ள இடத்…
-
- 0 replies
- 526 views
-
-
மிஸ்டர் கழுகு: “எவ்வளவு செலவானாலும் கட்சியைக் கைப்பற்ற வேண்டும்!” - சசி குடும்ப சபதம் மூவண்ணக் கொடியைச் சிறகுகளில் செருகியபடி வந்தார் கழுகார். அச்சு அவசரம் கருதி, சுதந்திர தினக் கொடியேற்ற நிகழ்ச்சியைப் பெட்டிச் செய்தியாகக் கொடுத்து விட்டுப் பேசத் தொடங்கினார். ‘‘மேலூரில் இருந்து தொடங்குகிறேன்... ‘கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்; எடப்பாடி பழனிசாமிக்குப் பாடம் புகட்ட வேண்டும்’ என்றுதான் டி.டி.வி.தினகரன் மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அவர் எதிர்பார்த்தது போலவே பிரமாண்டக் கூட்டத்தை மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ சாமி கூட்டிவிட்டார். ஒருபக்கம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திகைப்பு... இன்னொரு…
-
- 0 replies
- 1.5k views
-
-
முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம்: எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி தங்க தமிழ்ச்செல்வன் | கோப்புப் படம்: எம்.சாம்ராஜ் முதல்வர் கூட்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது: ''தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை குறையவில்லை. தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்கள்…
-
- 0 replies
- 331 views
-
-
நடிகர் கமல் போன்றவர்கள் பற்றி கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தாதீர்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கமலின் அரசியல் பிரவேசம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சீமான் ஆவேசத்துடன் கூறியதாவது:- கமல் போன்றவர்கள் பற்றி கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தாதீர்கள். அவர்கள் வரும்போது வரட்டும். அப்போது பார்த்து கொள்ளலாம். தமிழக அரசு மின்சாரம் வாங்குவதற்கு 9 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுவதில் முனைப்பு காட்டுகிறது. ஆனால் உற்பத்தி துறையில் அந்த தொகையை முதலீடு செய்ய மறுக்கிறது. இதுபோன்று பல பிரச்சினைகள் உள்ளன. அவைகளை…
-
- 0 replies
- 401 views
-