தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
மெரினா எழுச்சி: ஒரு வரலாற்று துரோகத்தின் நேரடி சாட்சியம்! ‘‘மெரினாவின் கடைசி நிமிடங்களைக் கடந்துவர இன்னும் இயலவில்லை. இன்னும் அந்தக் கிழிந்த கால்சட்டையைக் கழற்றாமல் அமர்ந்திருக்கிறேன். அதிகாரிகள் நடத்திய நாடகங்கள், கண்முன் வெளிப்படையாகச் செய்த சூழ்ச்சிகள், சினிமாவைவிட அதிபயங்கரமாக இருந்தன. ஓர் அதிகாரக்குரலின் கூச்சலில் விடிந்த அந்தப் பொழுதில் கண் விழிப்பதற்குள் விழுந்தது அடி. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் மீண்டும் இரு அடிகள். அனைத்து இளைஞர்களும் பொதுமக்களும் கடலை நோக்கி ஓடத் தொடங்கினோம். லத்தியுடன் துரத்திக்கொண்டே வந்தனர் போலீஸ்காரர்கள். சேலைக்கட்டி ஓட முடியாமல் சில பெண்கள் தடுமாற, அவர்களை ஒரு பொம்மைப்போல் தூக்கி வீசினர் காவல் துறையினர். நான்கு …
-
- 0 replies
- 540 views
-
-
கர்நாடகத்தில் வறட்சி நிலவினாலும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணிரை கர்நாடக திறந்து விடாததால், தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் நாசமடைந்துள்ளதாகவும், இதற்கு நஷ்டஈடு கேட்டு அம்மாநில முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். காவிரியில் தண்ணீர் இல்லாத போதும், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடி வரும் வேளையிலும், உச்சநீதிமன்றத்தின் உத்திரவின் பேரில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில…
-
- 0 replies
- 395 views
-
-
`என்னை மகிழ்விப்பதாக எண்ணி எனது நூல்களை விநியோகிக்க வேண்டாம்! ’ - தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ரா. அரவிந்த்ராஜ் வெ.இறையன்பு ``இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக, பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது” தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் இறையன்பு ஐஏஎஸ், பொது வெளியில் அதிக கவனம் ஈர்த்த ஐ.ஏ.எஸ் அதிகாரி. நிர்வாக செயல்பாடுகள் மட்டுமல்லாது, பொதுத்தளத்தில் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் அறியப்படுகிறார். குறிப்பாக, உள்ளொளிப் …
-
- 0 replies
- 532 views
-
-
டெல்லி சாலையில் மண்சோறு சாப்பிட்டு தமிழக விவசாயிகள் நூதனப் போராட்டம் Image captionஜந்தர் மந்தர் சாலையில் மண் சோறு டெல்லியில் கடந்த 29 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள், தங்களது நூதனப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை மண்சோறு சாப்பிட்டனர். நேற்று திங்கட்கிழமை, பிரதமர் அலுவலகத்தில் மனுக்கொடுப்பதற்காக, காவல் துறையினர் அவர்களை அழைத்துச் சென்றனர். வெளியே வந்ததும், வாகனத்திலிருந்து குதித்த சில விவசாயிகள் தங்கள் ஆடைகளக் களைந்து நடுரோட்டில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல தொடர்ந்து அவர்கள் நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்…
-
- 0 replies
- 419 views
-
-
அ.தி.மு.க-வுக்கு தீபாவின் அதிர்ச்சி..! - தேர்தல் ஆணையத்திடம் 13 பக்க ஆதாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம், அ.தி.மு.க. ஜெ. தீபா அணி சார்பில் 13 பக்க ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது, நிச்சயம் அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாக இருந்த அ.தி.மு.க., மேலும் பிளவுபட்டுள்ளது. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, அந்த அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அணி உருவானது. சசிகலாவால் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், சசிகலா அணியில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ…
-
- 0 replies
- 373 views
-
-
டெல்லி: ஆந்திரப் பிரதேச போலீசார் நடத்திய சந்தேகத்திற்கிடமான, சட்ட விரோதமான கொலைகள் தொடர்பாய் விசாரணை செய்யப்பட வேண்டும் என பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. செம்மரக்கட்டை கடத்தியதாக சந்தேகிக்கப்படுகிற இருபது பேரை ஆந்திரப் பிரதேச போலீசார் சுட்டுக்கொன்றது தொடர்பாய், சுயேச்சையான முறையில் துரித விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு இன்று குரல் கொடுத்துள்ளது. இக்கொலைகள், சட்டவிரோதமானவை என கண்டறியப்பட்டால், அவற்றிற்கு பொறுப்பானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இது குறித்து பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு கூறுயிருப்பதாவது, ஏப்ரல் 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, ஆந்திரப் பிரதேச போலீசாரும் வனத்துறை அ…
-
- 0 replies
- 373 views
-
-
இலங்கை துணை தூதரகத்துக்கு முருகன் சென்றுவர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு March 8, 2024 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகனுக்கு கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலுக்காக இலங்கைத் துணை தூதரகம் சென்று வர அனுமதி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் 7 பேரையும் விடுவித்தது. இந்த நிலையில், இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் எனது கணவர் முருகன் தங்கவைக்கப்பட்டுள்ளா…
-
- 0 replies
- 331 views
-
-
கோவையில் கைதான ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, தமிழகம், கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை யின்போது நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, இந்தியாவிலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஆதரவாளர்களை கண்டறியும் பணியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) தீவிரப்படுத் தினர். அதில், கோவை உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த முகமது அசாருதீன்(32) உள்ளிட்ட சிலர் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதையும், பிரத்யேக சாட் பக்கம் மூலம் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய தீவிரவாதி ஜஹ்ரான் ஹாசிமுடன் முகநூல் மூலம் தொடர்பு ஏற்படுத்தி, தகவல்களை பரிமாறி வந்ததையும் என்ஐஏ அதிக…
-
- 0 replies
- 929 views
-
-
காரில் இருந்து ஐவரின் சடலம் மீட்பு – விசாரணைகள் தீவிரம். புதுக்கோட்டை-மதுரை தேசிய நெஞ்சாலையில் நமன சமுத்திரம் பகுதி அருகே வீதியோரமாக ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த காரில் இருந்து ஐவரின் சடலம் மீடக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் வெகு நேரமாக கார் நின்று கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் நமனசமுத்திரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காரில் சடலங்கள் இருப்பதை கண்டுள்ளனர். காரில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 5 பேர் உயிரற்ற நிலையில் காருக்குள் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் எதற்காக புதுக்கோட்டை பகுதிக்கு வந்தனர் என்பது தொடர்பாக பொ…
-
- 0 replies
- 848 views
-
-
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 128 மீனவர்கள் மற்றும் 199 படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படிஇந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து இன்று (அக்.24) அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் 2 இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த அக்.23-ம் தேதிஇ எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
38 நிமிடங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை andriano_cz / GETTY IMAGES Image caption சித்தரிக்கும் படம் கோவையில் திருமணம் செய்து கொள்ள தாமதித்ததால் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த வாலிபர் தற்கொலைக்கு முயன்றதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கீரணத்தம் பகுதிக்கு அருகே உள்ள கல்லுக்குழியை சேர்ந்த நந்தினி (வயது 21) அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்தார். இவரும், சங்கனூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 21) என்பவரும் பள்ளிக்காலம் முதல் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் என்று உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கூறு…
-
- 0 replies
- 523 views
-
-
மே 17 வரை சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு…! சென்னையில் மே 17 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனிடையே தமிழத்தில் உள்ள பல்வேறு அம்மா உணவகங்களில் ஊரடங்கு அறிவித்த நாள் முதல் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது ம…
-
- 0 replies
- 897 views
-
-
சூரிய ஒளியில் இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்து கோவில்பட்டி மாணவர் சாதனை! கோவில்பட்டியில் சூரிய ஒளியில் இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்து மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ள மாணவர் ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெறவுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சிவசூர்யா என்ற மாணவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். விவசாயத்துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் விவசாயிகளுக்கு உதவும் புதுமையான படைப்பை உருவாக்க திட்டமிட்டார். இதற்காக நீண்ட நாட்கள் போராடி சூரிய ஒளியால் இயங்கக்கூடிய டிராக்டர் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த டிராக்டர் சிறு குறு விவசாயிகளுக்கு உதவும் வகைய…
-
- 0 replies
- 514 views
-
-
ஜார்ஜ், அமல்ராஜ், சைலேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்! ஜி.ராமகிருஷ்ணன் "சென்னையில் நடந்த வன்முறை சம்பவங்கள் அனைத்துக்கும் காரணமான போலீஸ் கமிஷனர்கள் ஜார்ஜ், அமல்ராஜ், சைலேஷ் குமார் ஆகியோரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து, அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜல்லிக்கட்டு உரிமைக்காக ஒருவார காலம் தமிழகம் முழுவதும் அமைதியாகப் போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவர் மீதும் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் மூர்க்கத்தனமான வன்முறையைக் கட்டவிழ்த்து…
-
- 0 replies
- 502 views
-
-
"விவசாயிகளையே பிச்சை எடுக்க விட்டுட்டாங்க; எங்களையா கண்டுக்கப் போறாங்க?" ஈழ அகதிகள்! "தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இந்த 26 வருடங்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்காக மட்டுமே எங்களுடைய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது"- திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர். தமிழக அரசு அண்மையில் தாக்கல்செய்த பட்ஜெட்டில், இலங்கை தமிழ் அகதிகளுக்காக 116 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை எத்தனை பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அகதிகள் மறுவாழ்வு பதிவேடோ, சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கி இருப்பதாகவும், முகாம்களுக…
-
- 0 replies
- 355 views
-
-
பெங்களூரு சிறைக்கு தினகரன் வரவில்லை: பண்ணை வீட்டில் தங்கலா? டிடிவி தினகரன் | கோப்புப் படம்: க.ஸ்ரீபரத். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவை பார்க்க புறப்பட்டுச் சென்ற டிடிவி.தினகரன் திட்டமிட்டபடி சிறைக்கு வரவில்லை. இதனால், பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தினகரன் பெங்களூரு வந்துவிட்டார் ஆனால் சிறைக்கு வராமல் நட்சத்திர விடுதியிலோ அல்லது அவரது நண்பரின் பண்ணை வீட்டிலோ தங்கியிருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்து கிடக்கிறது. கட்சி சின்னமும் முடக்க…
-
- 0 replies
- 650 views
-
-
எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் தலைமையில் நடந்த அ.தி.மு.க கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டது. பதிவு: ஜூன் 17, 2021 13:58 PM மாற்றம்: ஜூன் 17, 2021 16:20 PM சென்னை சசிகலா தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசும் வீடியோ அவ்வப்போது வெளியாகி அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் உள்பட 16 பேர் அ.தி.மு.க.வில் இருந்து திடீரென நீக்கப்பட்டனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். …
-
- 0 replies
- 270 views
-
-
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை! தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இலஞ்ச் ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி அவருக்கு சொந்தமான 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இதற்கு முன் அதிமுக அமைச்சர்களான எம்.ஆர்.விஜய பாஸ்கர், எஸ்.பி வேலுமணி, வீரமணி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1245505
-
- 0 replies
- 270 views
-
-
தமிழ்நாட்டுக்கு மூவேந்தர் கொடி: 'தி.மு.க அரசுக்கு நெருக்கடி உண்டாக்கும் திட்டம்' - சீமான் மீது வழக்கு ஏன்? ஆ விஜயானந்த் பிபிசி தமிழ் 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NAAMTAMILARKATCHIOFFL FACEBOOK PAGE நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. `தி.மு.க ஆட்சியை மத்திய அரசு கேள்வி கேட்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்துச் சிலர் செயல்படுகிறார்கள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே வழக்கு பதியப்பட்டது' என்கிறது தி.மு.க. என்ன நடந்தது? என்னென்ன பிரிவுகளில் வழக்கு? சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் …
-
- 0 replies
- 521 views
- 1 follower
-
-
தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா?! அரசுக்கு அடுத்த நெருக்கடி?! தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்குப் பதிலடி கொடுக்க, எதிர்க்கட்சியான தி.மு.க முடிவெடுத்து விட்டது. அவை உரிமைக்குழு கூட்டத்தில், குட்கா பிரச்னையைக் காரணம் காட்டி, தி.மு.க. உறுப்பினர்களை நீக்கம் செய்தால், ஒட்டுமொத்தமாக அனைத்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலையிலான அரசு அறுதிப் பெரும்பான்மையை இழந்து, 'மைனாரிட்டி' அரசாகி விட்டது என்று தி.மு.க குற்றம…
-
- 0 replies
- 272 views
-
-
சி.என்.அண்ணாதுரை நினைவு நாள்: இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட நாடு குறித்து முழங்கியவர் 15 செப்டெம்பர் 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARUNKUMARSUBASUNDARAM (செப்டம்பர் 15, 2018 அன்று பிபிசி தமிழில் வெளியான கட்டுரை அண்ணா நினைவு நாளான இன்று மறுபகிர்வு செய்ய்யப்படுகிறது.) தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை, மாநிலங்களவையில் 1962-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தமது முதலாவது உரையை ஆற்றினார். அப்போது நடந்த குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது அண்ணாதுரை பேசிய உரையை அவரது நினைவு தினமான இன்று தொகுத்துவழங்குகிறோம். பெருமதிப்பிற்குரிய மன…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
எம்ஜிஆரை பாரதப் பிரதமர் ஆக்கிய தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் : மன்மோகன் சிங்கை பிரதமராக்கிய தமிழக முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை பாரதப் பிரதமர் என்று வாய் தடுமாறி சொல்லி மீண்டும் சர்சையில் சிக்கியுள்ளார்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மாவட்டம்தோறும் கொண்டாடிவருகின்றது. திண்டுக்கல்லில் இன்று இடம்பெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார். இதன்போது பாரதப் பிரதமர் எம்ஜிஆர்..என்று பேசிவிட்டு பின்னர் பாரத ரத்னா எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என்றார். எம்.ஜி. ஆரை பாரதப் பிரதமராக்கிப் பேசியதன…
-
- 0 replies
- 418 views
-
-
மிஸ்டர் கழுகு: ஆபரேஷன் ஆர்.கே.நகர் - அமைச்சர்களுக்கு 5000 டார்கெட்! ஆர்.கே. நகரைச் சுற்றிவிட்டு அலுவலகம் வந்தார் கழுகார். ‘‘ ‘குறைந்த வாக்கு வித்தியாசமாக இருந்தாலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும்’ என்பது அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி இட்டுள்ள கட்டளை’’ என்ற பீடிகையுடன் செய்திகளைச் சொல்லத் தொடங்கினார். ‘‘என்ன செய்கிறது அ.தி.மு.க?’’ ‘‘தினகரனை அ.தி.மு.க குறிவைத்துள்ளது. ‘தமிழக உளவுத்துறை ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி, மஃப்டி போலீஸை ஏவி, தினகரன் கோஷ்டியில் ஆக்டிவான பிரமுகர்களை இரவோடு இரவாகப் பிடித்துப் பொய் கேஸ் போடுகிறார்’ என்று சொல்கிறார்கள். ‘உளவுத்துறை ஐ.ஜி., சென்னை போலீஸ் கமிஷனர், இணை போலீஸ் கமிஷனர் ஆகிய மூவரையும் மாற்றவேண்டும்’ என்று தலைமைத் தேர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை தினம்: மெட்ராஸ் நகரத்தின் உண்மையான வயது என்ன? - கல்வெட்டுகள் விவரிக்கும் வரலாறு பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 13 ஆகஸ்ட் 2017 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FOX PHOTOS/GETTY IMAGES படக்குறிப்பு, சுமார் 1950 ஆம் ஆண்டில் மெட்ராஸிலுள்ள சட்டமன்றப்பேரவை கட்டடம் (2017ஆம் ஆண்டு வெளியான கட்டுரையை மீண்டும் மீள்பகிர்வு செய்கிறோம்) ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சென்னையில் பழைய மெட்ராஸ் நகரத்தின் உதய தினத்தை கொண்டாடுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு நடைப் பயணம், சென்னை நகரத்தின் தொன்மை க…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
தாயின் உடலை அடக்கம் செய்வதற்காக பிச்சையெடுத்த திண்டுக்கல் சிறுவர்கள்: இறந்துபோன தாயின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் சிறுவர்கள் பிச்சை எடுத்த சம்பவம் ஒன்று தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப் பகுதியில் வசித்த கணவனை இழந்த விஜயா என்பருக்கு மூன்று மகன்கள். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விஜயாவை அவர்களது மூன்று மகன்கள் மட்டுமே கவனித்து வந்து நிலையில் தமது தாயின் உடலை அட…
-
- 0 replies
- 378 views
-