தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
திமுக தலைவர் கருணாநிதிக்கும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மறைமுக மோதல் நிலவி வருவதாக தகவல்கள் உலா வருகின்றன. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் தலைவர் கருணாநிதி தான் முதல்வர் வேட்பாளர் என்றாலும், ஸ்டாலின் தரப்பினர் அவரை தான் முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரங்களையும், சமூக வலைதள பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர். இதனால் கட்சி தோல்வியடைந்ததும் கருணாநிதி ஸ்டாலின் தரப்பு மீது கோபமாக இருந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்னரும் ஸ்டாலின் தரப்பினர் சமூக வலைதளங்களில் ஸ்டாலினை முன்னிறுத்தியே பதிவிட்டு வந்துள்ளனர். இதனால் கருணாநிதி மீண்டும் கட்சியை தன்னுடைய முழுக்கட்டுபாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார் என கூறப்படுகிறது. இதனால் தான…
-
- 0 replies
- 535 views
-
-
சென்னையில் தீனதயாளன் வீட்டில் இதுவரையிலும் 300க்கும் மேற்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பழங்கால சிலைகளை கடத்தி விற்று வந்த ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரும், சிலை கடத்தல் மன்னனுமான தீனதயாளன் கடந்த வாரம் பொலிசில் சரணடைந்தார். பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல சிலைகளை பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் 300க்கும் மேற்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகள் கேரளா, மகாராஷ்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று தொல்லியியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கடந்த 10 நாட்களாக சிலை கடத்தல் பற்றியும், வெளிநாட்டு தொடர்புகள் பற்றியும் தீனதயாளனிடம் பல்வேறு…
-
- 0 replies
- 447 views
-
-
13 வருடங்களுக்குப் பிறகு 'தற்கொலை குமார்' கைது தாய், மகளை கொன்று கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை அகதி 13 வருடங்களுக்குப் பிறகு , சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, திண்டுக்கல் பகுதியில் வசித்து வந்தவர் துரை என்பவருடைய மனைவியான பூங்கோதை மற்றும் மகளான 3 வயது குழந்தை ஜனப்பிரியா ஆகிய இருவரும் வீட்டில் தனிமையில் இருந்த போது அங்கு வந்த ஒரு கும்பல், 2 பேரையும் கொன்று, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை 2003ஆம் ஆண்டு கொள்ளையடித்தது. இது குறித்து பொலிஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், இந்த வழக்கில் தொடர்ந்து மர்மமே நீடித்து வந்தது. …
-
- 0 replies
- 441 views
-
-
பிளாட்டினம் பூமி பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! விரைவில் புதிய சுரங்கம் ஏலம் தமிழகத்தில், விலை உயர்ந்த பிளாட்டினம் உலோகம் கிடைக்கும் இடத்தை, மத்திய அரசு கண்டறிந்துள்ளது. அந்தச் சுரங்கம் உட்பட, பல உலோகங்கள் கிடைக்கும், ஐந்து சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளன. இந்திய நில அளவை துறையினர், தமிழகத்தின் பல இடங்களில், பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தங்கத்தை விட பன்மடங்கு விலை உயர்வான பிளாட்டினம் என்ற உலோக பொருள் படிமங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். துறைப்பாடியில்..இதுகுறித்து, இந்திய நில அளவை துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 10 புதிய கனிம சுரங்கங்களை கண்டறிந்து, மத்திய…
-
- 0 replies
- 572 views
-
-
வேலூரில் அனுமதி மறுப்பு... ஏழு பேர் விடுதலைக்கான பேரணி இடமாற்றம்! வேலூர்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக நாளை (11-ம் தேதி) வேலூரில் இருந்து நடைபெறுவதாக இருந்த பேரணி சென்னையில் நடைபெறும் என அற்புதம்மாள் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்ற நிலையில் அவர்களை விடுதலை செய்யக் கோரி, நாளை (11-ம் தேதி) வேலூர் சிறை முன்பிருந்து தலைமைச் செயலகம் வரை வாகனத்தில் பேரணியாக சென்று முதல்வரை சந்தித்து மனு கொடுக்கப்படும் என அற்புதம்மாள் அறிவித்திருந்தார். இந்த பேரணிக்கு தமிழக அரசும் அனுமதி கொடுத்ததாக செய்திகள் வெளியாகியிர…
-
- 0 replies
- 338 views
-
-
சாட்டையை சொடுக்கிய கருணாநிதி.... திமுக மாவட்டச் செயலாளர்கள் நீக்கத்தின் பின்னணித் தகவல்கள்! இந்தமுறை தேர்தல் தோல்வி திமுக தலைமையை கொஞ்சம்.... இல்லை, அதிகமாகவே அசைத்துப்பார்த்துவிட்டது. வெற்றிக்கோட்டுக்கு மிக அருகில் வந்தும் அதைத் தொட முடியாமல் போனது கருணாநிதியை ரொம்பவே வருத்தம் கொள்ளவைத்துவிட்டது. '130 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றிப் பெற வேண்டும்' என்பதுதான் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு, கட்சித் தலைமை கொடுத்த அசைன்மென்ட். மிக எளிதாக இந்த இலக்கை எட்டிவிடலாம் எனக் கருதியிருந்த நிலையில், 89 இடங்களில் மட்டுமே திமுகவால் வெற்றிப் பெற முடிந்தது. சில மாவட்டச் செயலாளர்களின் மோசமான செயல்பாடுகளே பெரும்பாலான இடங்களில் தோல்விக்கு காரணம் எனக் கூறப்பட்டது. …
-
- 0 replies
- 484 views
-
-
புதுடெல்லி: சாலை விபத்துக்களில் நாள் ஒன்றுக்கு 400 பேர் பலியாகின்றனர். அதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகள் தொடர்பான அறிக்கையை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டு உள்ளார். அதனை வெளியிட்டு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் 5 லட்சத்து ஆயிரத்து 423 விபத்துகள் நேரிட்டுள்ளது. அதில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 671 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நாள்தோறும் 1,374 விபத்துகள் ஏற்படுவதாகவும், அதில் சராசரியாக 400 பேர் பலியாவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் ஒரு மணி நேரத்தில் 5…
-
- 0 replies
- 399 views
-
-
107 பேருக்கு ஆயுள் தண்டனை: நேர்மையான அரசு வழக்கறிஞரின் தொடர் பயணம் வழக்கறிஞர் ரஹ்மான் ஷெரிப் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அத்தியூர் விஜயா பாலியல் பலாத்கார வழக்கு உட்பட 107 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்துள்ளார் விழுப்புரம் வழக்கறிஞர் எம் ரஹ்மான் ஷெரிப். அவர் 'தி இந்து'விடம் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்: 1976ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறேன். இதை நான் முழுக்க முழுக்க சேவையாகவே செய்துவருகிறேன். முதன் முதலாக எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தில் ஏ பி பியாக தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் என் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார்கள். இதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்ற சட்டம்கூட அப்போது எனக்கு தெரியாது…
-
- 1 reply
- 384 views
-
-
சென்னையில் கடல் சீற்றம்: 50 வீடுகள் சேதம் சென்னையின் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் கடற்கரையை ஒட்டியுள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. மேலும் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள காட்சி பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள ஸ்ரீநிவாஸபுரம் என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்தே கடல் நீர்மட்டம் உயர்ந்தும் சீற்றம் அதிகரித்தும் காணப்பட்டது. இதனால், கடலோரம் அமைந்துள்ள பல வீடுகள் அலையின் சீற்றத்தில் நொறுங்கின. கடல் சீற…
-
- 0 replies
- 531 views
-
-
7 பேர் விடுதலை... வைகோ மெளனம்..! - மதுரை சிறையில் நடந்தது என்ன? முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரின் விடுதலைக்கான வாகனப் பேரணி, நாளை மறுநாள் வேலூரில் இருந்து சென்னையை நோக்கி நடைபெற உள்ளது. 'இந்தப் பேரணியில் பங்கேற்பது குறித்து வைகோ இதுவரை வாய் திறக்கவில்லை. அவரது கோரிக்கைக்கு நாங்கள் செவிசாய்க்க மறுத்ததுதான் காரணம்' என்கின்றனர் பேரணி அமைப்பாளர்கள். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் ஏழு பேரின் விடுதலைக்காக, தமிழக அரசின் அனுமதியோடு, வாகனப் பேரணி ஒன்று வேலூரில் இருந்து கிளம்ப இருக்கிறது. 'பேரறிவாளன் உள்பட சிறையில் இருக்கும் ஏழு பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்' …
-
- 0 replies
- 598 views
-
-
ரூ.570 கோடி விவகாரம்... தி.மு.க. புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன? -சி.பி.ஐ.க்கு உயர் நீதிமன்றம் கேள்வி சென்னை: கன்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்டது தொடர்பாக தி.மு.க. கொடுத்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று சி.பி.ஐ.க்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது, திருப்பூரில் மூன்று கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தபோது, கடந்த மே மாதம் 13-ம்…
-
- 0 replies
- 301 views
-
-
இந்தியாவின் மொத்தகடற்கரையின் நீளம் 7 ஆயிரம் கிலோமீட்டருக்குமேல் என்றால், அதில் 7–ல் ஒருபகுதி 1,076 கி.மீ. நீளகடற்கரை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. ஏறத்தாழ 13 மாவட்டங்களை சேர்ந்த 10 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடித்தொழில்தான் வாழ்க்கை. ஆனால், 2009–ம் ஆண்டுக்குப்பிறகு கடலில் மீன்பிடிக்கச்செல்லும் படகுகள் திரும்பவந்தால்தான் நிச்சயம் என்ற நிலையில் இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள் இருக்கிறது.பாரம்பரிய உரிமையோடு கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, ‘‘எங்கள் எல்லையை தாண்டிவிட்டாய், உன்னை கைது செய்கிறேன்’’ என்று இலங்கை கடற்படை கைது செய்து இலங்கைக்கு கொண்டுசென்று சிறைகளில் அடைக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரமே படகுகள்தான். அதையும் கைப்பற்றி இலங்கை துறைமுகங்களில் சரியான பர…
-
- 0 replies
- 337 views
-
-
கடந்த தேர்தலில் 150 தொகுதிகளை அள்ளியிருந்த அ.தி.மு.கழகம், நடந்து முடிந்த தேர்தலில் 134 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது. மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஆனாலும் கூட, ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில், இந்த முறை தேர்தல் ரிசல்ட் தனக்கு இறங்குமுகம் என்றேதான் கருதுகிறார். இதற்கு காரணமானவர்களைக் கண்டறிய ரகசிய விசாரணை நடத்தினார். கடந்த சில நாட்களாக நடந்த இந்த விசாரணையின் ரிப்போர்ட், ஜெயலலிதாவின் கைகளுக்குப் போனதும், கடுங்கோபமானாராம். அதிரடியாக அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் 15 பேர்களை மாற்றியிருக்கிறார். அவர்களில் சிலரின் வண்டவாளங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்! தென் சென்னை- வடசென்னை சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஆறில் அ.தி.மு.கழகம் ஜெயித்தது. ஆயிரம் விளக்கு தொகுதி…
-
- 0 replies
- 1.5k views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், காவல்துறையால் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும் வருகிற 11-ம் தேதியோடு, 25 ஆண்டு கால சிறைத்தண்டனையை நிறைவு செய்கிறார்கள். இவர்களின் விடுதலையை எதிர்நோக்கும் வாகனப் பேரணி, வேலூரில் இருந்து சென்னைக் கோட்டையை நோக்கி கிளம்ப இருக்கிறது. நடிகர்கள் சத்யராஜ், விஜய் சேதுபதி, கலையரசன், இயக்குநர்கள் ரஞ்சித், நவீன் உள்ளிட்டவர்கள், பேரறிவாளன் விடுதலைக்கான வாகனப் பேரணிக்கு ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ளனர். இந்நிலையில், இதுபற்றி விரிவாகப் பேசிய இயக்குநர் ராம், " நீங்களும் நானும் வாழும் இந்த ஊர் நல்லா இருக்கணும்கிறதுதான் நம்முடைய ஆசை. 'அநீதி தோற்கணும் நீதி ஜெயிக்கணும்' னு நினைக்கின்ற வெகுளியானக் குழந்தைகள்தான் நாம். தினம்தோறும் செய்திக…
-
- 0 replies
- 428 views
-
-
பெங்களூருவில் அவமதிக்கப்பட்ட இளையராஜா..! என்ன காரணம்? பெங்களூரு விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் இசையமைப்பாளர் இளையராஜா, பாதுகாப்பு அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்கள் ஏராளம். இளையராஜா கோயிலுக்கு சென்றுவிட்டு தனது குடும்பத்தினருடன் சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, இளையராஜாவை தடுத்து நிறுத்திய அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரது பையை சோதனை செய்துள்ளனர். அப்போது, பையில் தேங்காய், விபூதி போன்ற பிரசாதப் பொருட்…
-
- 4 replies
- 643 views
- 1 follower
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்காக வேலூரில் இருந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி ஜூன் 11-ல் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் திரையுலகைச் சேர்ந்த சிலரும் கலந்துகொள்ள உள்ளார்கள்.இதுதொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறியதாவது, பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். அதுவும் தனிமைச் சிறையில். அவருடைய அம்மா அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர மிகவும் போராடிவருகிறார். தான் நிரபராதி என பேரறிவாளன் இன்றுவரை சொல்லிவருகிறார். அவரை விசாரணை செய்த போலீஸ் அதிகாரியும், பேரறிவாளன் நிரபராதி எனக் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 575 views
-
-
'விஜயகாந்த், ஜி.கே.வாசனை யார் சேர்த்துக் கொள்வார்கள்?!' -கூட்டத்தில் கொந்தளித்த வைகோ சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தே.மு.தி.கவும், த.மா.காவும் திசைக்கொன்றாகப் பறக்கும் முடிவுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் 'அவர்கள் போவதால் எந்த நஷ்டமும் இல்லை. யாரும் அவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்' எனக் கொந்தளித்திருக்கிறார் வைகோ. ம.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்ற உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம், தாயகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், ' மக்கள் நலக் கூட்டணியோடு தேர்தலை சந்தித்ததால் வந்த விளைவுகள், உள்ளாட்சி தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள், கட்சியை விட்டுப் போன முக்கிய நிர்வாகிகள்' என பலவற்றைப் பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார் வைகோ. கூ…
-
- 1 reply
- 701 views
-
-
அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றம்... -மாஜிக்களின் கட்சி பதவியை பறித்த ஜெயலலிதா! சென்னை: அ.தி.மு.க.வில் இன்று ஒரே நாளில் பல அதிரடி மாற்றங்களை செய்தும், பல மாஜி அமைச்சர்களின் கட்சி பதவிகளை பறித்தும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் முதல்வரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா. இது குறித்து அ.தி.மு.க. கட்சி தலைமை இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதிய செய்தி தொடர்பாளர்கள் நியமனம் ஆகியன இடம்பெற்றுள்ளன. அதன்படி, புதிய நிர்வாகிகள்... அ.தி.மு.க. அவைத்தலைவர் - மதுசூதனன் பொருளாளர் - ஓ.பன்னீர்செல்வம் கொள்கை பரப்புச் செயலாளர் - தம்பிதுரை அமைப்பு செயலாளர்கள் - வைத்திலிங்கம், விசாலாட்சி நெடுஞ்செ…
-
- 0 replies
- 363 views
-
-
சிவப்புக் கம்பளத்தில் ராஜீவ் காந்தியை நிற்க வைத்தது யார்? -குற்றவாளியைக் கைகாட்டும் 'பைபாஸ்' (வீடியோ இணைப்பு) முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்த்தப்பட்டு, கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், சிறையில் நீண்ட ஆயுளைத் தொலைத்துவிட்டார்கள். இந்நிலையில், 'படுகொலையின் சந்தேகங்கள் இன்னமும் தீரவில்லை. தமிழக காவல்துறையை நோக்கியே எங்களது சந்தேகங்கள் நீள்கின்றன' என அதிர வைக்கிறது 'பைபாஸ்' திரைப்படம். இது தொடர்பாக முன்னரே விகடன்.காமில் செய்தி வெளியாகியிருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில், 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, இரவு 10.20 மணிக்கு மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார் ராஜீவ்காந்தி. இந்தப் …
-
- 1 reply
- 780 views
- 1 follower
-
-
வீரப்பனை சுட்டுக்கொன்றது எப்படி? 1000 பக்கங்களில் புத்தகம் எழுதும் விஜயகுமார்! புதுடெல்லி: தமிழகம்,கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சவாலாக விளங்கிய சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனை அதிரடிப்படை எப்படி சுட்டுக் கொன்றது என்று விளக்கும் வகையில் புதிய புத்தகம் ஒன்றை எழுதவுள்ளதாக முன்னாள் அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடத்தல் சாம்ராஜ்யம் நடத்திய வீரப்பனை அதிரடிப்படை கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி காட்டுக்குள் சுட்டுக் கொன்றது. இந்த அதிரடி நடவடிக்கை காவல் அதிகாரி விஜ…
-
- 0 replies
- 525 views
-
-
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். இவர்களின் விடுதலைக்காக வருகிற 11-ம் தேதி, வேலூரில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி, கோரிக்கைப் பேரணியை நடத்த இருக்கிறார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள்.இந்தப் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது. தற்போது மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் எனப் பலரும் பேரணிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். பேரறிவாளனின் விடுதலைக்காக நடத்தப்படும் பேரணி குறித்துப் பேசும் நடிகர் விஜய் சேதுபதி, " பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் தனிம…
-
- 0 replies
- 381 views
-
-
மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலகுகிறது தேமுதிக: அறிவிப்பு விரைவில் வெளியாகிறது மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக விலகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 104 இடங்களில் போட்டியிட்டது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் உட்பட 104 பேரும் படுதோல்வி அடைந்தனர். தேமுதிகவின் இந்த தோல்விக்கு மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம் என்று நிர்வாகிகள் பலரும் விஜயகாந்திடம் எடுத்துக் கூறினர். சமீபத்தில் நடந்த மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகளின் வலியுறுத்தல் பற்றி பேசிய வைகோ, ‘‘தேமுதிகவும், தமாகாவும் கூட்டணியை விட்டுச் சென்றால் எந்த…
-
- 6 replies
- 687 views
-
-
நான் அப்படி கூறவில்லை..! சீமான் சொல்வது இதுதான் தேர்தலுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணியை விட குறைந்த வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு அவர்களுடன் இணைவதாக கூறவில்லை. கம்யூனிஸ்டு கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று காட்டுவோம் என்றுதான் கூறினேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 4½ லட்சம் வாக்குகளை பெற்றது. இந்த 4½ லட்சம் வாக்குகளும் தமிழகத்தில் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்காக கிடைத்த வாக்குகளாகும். இதை ஒரு தொடக்கமாக வைத்துக்கொண்டு 2021-ல் நல்லாட்சி அமைக்க பாடுபடுவோம். இந்த 5 ஆண்டு காலத்தை எ…
-
- 17 replies
- 1.5k views
-
-
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நடிகர் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வருகின்றனர். உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் உயர் தர சிகிச்சைகள், ஏழை-எளிய மக்களுக்கும் கிடைத்திட முதல்-அமைச்சர் நிதியில் இருந்து இ…
-
- 0 replies
- 412 views
-
-
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்காக, வருகிற 11-ம் தேதி வேலூரில் இருந்து கோரிக்கை பேரணி நடைபெற இருக்கிறது.'முதல்வரின் தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாம் அணி திரள வேண்டும்’ என வேண்டுகோள் வைக்கிறார் நடிகர் சத்யராஜ். வேலூர் சிறையில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி நடைபெற இருக்கும் பேரணி பற்றி, வீடியோப் பதிவு ஒன்றில் பேசிய நடிகர் சத்யராஜ், “ 25 வருடங்களுக்கு முன்னாடி இதே ஜூன் 11 ம் தேதி, பேரறிவாளன் என்ற 19 வயசுப் பையனை, ‘விசாரிச்சுட்டு அனுப்பிவிடுகிறோம்’ என்று சொல்லி போலீஸார் அழைத்துப் போனார்கள். அவருடைய அப்பா குயில்தாசனும் அம்மா அற்புதம் அம்மாளும், ‘ விசாரிக்கத்தானே கூப்பிடுகிறார…
-
- 0 replies
- 311 views
-