Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 14 Aug, 2024 | 05:33 PM இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஆக.14) ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதியன்று கைது செய்தனர். 35 மீனவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை வரையிலும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில்…

  2. நாடாளுமன்றத்தில் தற்போது நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்திருந்தார். இது பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் செயல், மத சுதந்திரத்தில் தலையிடும் செயல் என எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. அதைத் தொடர்ந்து, இந்த திருத்த மசோதா மீது ஆய்வு மேற்கொள்ள 31 எம்.பி-க்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. மசூதி இந்த நிலையில், வக்பு திருத்த சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்ப…

  3. சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! May 04, 2024 10:35AM IST ஷேர் செய்ய : தேனியில் இன்று (மே 4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், சமீபத்தில் காவல் துறை அதிகாரிகள், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு வேனில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்த நிலையில் கோவை மாநகரக் காவல்துறை சவுக்கு சங்கர…

  4. விஜய் அரசியலுக்கு வருவதை நினைத்து பயப்படக் கூடாது எனவும் புதியவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் போடியிடப் போவதில்லை என அறிவித்த அவர், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் களமிறங்க போவதாக அறிவித்தார். விரைவில் அக்கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: “தமிழகத்தில் இன்று நான்கு முனை போட்டி உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, புதியதாக நடிகர் விஜய் வருகிறார். நடிகர் விஜய்யை நான…

  5. திராவிடப் பேரரசும், திளைத்து வாழும் சிற்றரசர்களும்! -சுப. உதயகுமாரன் திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் -1 அன்றைய வரலாற்றின் தேவையாக உருவான இந்த இயக்கம் காலப் போக்கில் பெயர் மாறி, உருமாறி, திசைமாறி..பயணித்துக் கொண்டிருக்கிறது..! இதன் ஆரம்ப காலம் தொடங்கி இன்று வரை சமூக, அரசியல் தளங்களில் இது ஏற்படுத்திய தாக்கங்களையும், இன்றைய சரிவுகளையும் சமரசமின்றி அலசுகிறார் சுப.உதயகுமாரன்; சமூக-பொருளாதார-அரசியல் தளங்களில் பார்ப்பனரல்லாத தென்னக மக்கள் அதிகமான வாய்ப்புக்களைப் பெறவும், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவுமாக சர். பிட்டி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் போன்றோரால் 1916-ஆம் ஆண்டு தென் இந்திய நல உரிமைச்சங்கம்…

    • 8 replies
    • 1.4k views
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, ஒருவர் தனது கையில் உள்ள செல்போனில் கூகுள் மேப் பார்த்துக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தார். அக்கம் பக்கம் யார் வருகிறார்கள் என்று கவனிக்காமல் மேப் காட்டும் வழியைப் பார்த்துக் கொண்டே சென்றார் அவர். திடீரென அவரருகே ஓடி வந்த இளைஞர் அவரது கையில் இருந்த செல்போனைப் பிடுங்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தார். செல்போனை இழந்தவர் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார். “கூகுள் மேப் பார்த்துக்கொண்டு நடப்பவர்களிடம…

  7. படக்குறிப்பு,நாய்களுக்கு ட்ரோன் மூலம் உணவு கொண்டு செல்லப்படும் காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், சுதாகர் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பை படம் பிடிக்க சேலத்தை சேர்ந்த ஒருவர் பறக்கவிட்ட டிரோன் கேமராவில், வெள்ளத்தின் நடுவே சிக்கி தவித்த கருப்பு நாய் ஒன்றின் படம் பதிவானது. இது பலரின் கவனத்தை மேட்டூரை நோக்கி திருப்பியுள்ளது. சேலம் மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை, விலங்கு நல ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என ஒரு பெரிய பட்டாளமே மேட்டூர் அணையின் 16 ம் கண் மதகு பகுதியை நோக்கி முகாமிட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஜூன் 30ம் தேத…

  8. பட மூலாதாரம்,POOVALUGIN NANBARGAL கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தென் அமெரிக்க சிப்பி இனத்தால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே பறிபோவதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கப்பல்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் இந்த உயிரினம் பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது? சென்னை மாவட்டம், எண்ணூரில் முகத்துவாரக் குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், சிவன்படை குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் பத்தாயிரம் மீனவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சுற்று வட்டாரப் பகுதி மக்க…

  9. 10 AUG, 2024 | 09:20 AM சென்னை: தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேர்,4 நாட்டுப் படகுகளை இலங்கைகடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு போதிய முயற்சிகள் எடுக்கவில்லை. தமிழக மீனவ…

  10. படக்குறிப்பு,மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகளிடம் காவல்துறையினர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெண் மாற்றுத்திறனாளி ஒருவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழையும்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் செயற்கை காலை கழற்றிவிட்டு வரும்படி கூறியதாகவும் கோயிலுக்குள் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்ல 500 ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என்று ஊழியர் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பெண் ஒருவர் காணொளியை பகிருந்திருந்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் …

  11. பட மூலாதாரம்,BSP - TAMIL NADU UNIT/FB படக்குறிப்பு,ஆர்ம்ஸ்ட்ராங் 48 நிமிடங்களுக்கு முன்னர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய நபர்களை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார். இதற்கு அருகிலேயே தனது பழைய வீட்டை இடித்துக் கட்டி வருகிறார். தினமும் மாலையில் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அதேபோல, இன்றும் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுவிட்டு, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே இரு சக…

  12. தமிழ் புதல்வன் திட்டம் இன்று ஆரம்பம். அரசு பாடசாலைகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும், 1000 ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.15 க்கு கோவையில் ஆரம்பித்து வைத்துள்ளார். கோவை அரச கலைக்கல்லூரி மைதானத்தில் இதற்கான பிரமாண்ட விழா இன்று நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் தேர்வான மாணவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.1000 செலுத்தப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதன்மூலம், 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் இத்திட்டத்திற்கு தமிழக அ…

  13. பட மூலாதாரம்,@TTHENARASU படக்குறிப்பு,தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 7 ஆகஸ்ட் 2024 தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வந்தது. …

  14. 08 AUG, 2024 | 12:02 PM தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 10 ம் திகதி தமிநாட்டில் உள்ள சிங்கள வணிகங்களை இழுத்து மூடும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் மே 17 இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த வாரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியது. இதில் மீனவர் திரு மலைச்சாமி கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் திரு இராமச்சந்திரன் என்பவரை காணவில்லை. அவரது உடலும் கிடைக்கவில்லை. மற்ற இருவர் உயிருடன் தப்பி வந்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களின் த…

  15. கடந்த 45 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் கொலையை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகின்றனர். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று மாநிலங்களவையில் மதிமுக எம்பி வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து மதிமுக பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான வைகோ இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி கைது செய்து வருகிறது. இன்றைக்கும் கூட 22 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. த…

  16. பட மூலாதாரம்,FACEBOOK/KNNEHRU படக்குறிப்பு,கோவை மாநகர மேயராக தேர்வு செய்யப்பட்ட ரங்கநாயகி கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை 7 மணி நேரங்களுக்கு முன்னர் திருநெல்வேலி, கோவை ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிக்கு திமுக சார்பில் களம் இறங்கியவர்கள் வெற்றி பெற்றபோதிலும், இதன் பின்னணியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், மேற்கு மண்டலம் உள்பட மாநிலம் முழுவதும் பெருவாரியாக தி.மு.க., வெற்றி பெற்றதால், 'மக்கள் பணிகளில் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் கவுன்சிலர்கள் நடந்து…

  17. கடல் மட்டம் உயர்வு – நீாில் மூழ்கப் போகும் சென்னையின் ஒரு பகுதி! 2040 ஆம் ஆண்டளவில் கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக சென்னை மாநகரின் 7 சதவிகித நிலப்பரப்பு கடல் நீரில் அமிழும் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர நகரங்களுக்கான கடல் மட்ட உயர்வு மற்றும் கடல்நீர் புகுவது பற்றிய வரைபட அறிக்கையை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்விற்காக இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையிலிருந்து 15 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் சென்னை மற்றும் மும்பை நகரங்களே முதன்மை நகரங்களாக பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2040 ஆம் ஆண்டில் சென்னை பெருநகரப் பகுதியின் குறிப்பிட்ட பகுதிகள் 7.29 சதவிகிதம…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,(சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், ஆ.விஜயானந்த் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூக மக்களுக்கு, 3% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை அங்கீகரித்து, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டால் யாருக்கு பயன்? பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக, வியாழன் (ஆகஸ்ட் 1) அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் அருந்ததியின சமூகத்துக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கும் 2009-ஆம் ஆண்டு சட்டத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளத…

  19. இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர் பாதுகாப்பு அமைப்பு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதி…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழகத்தில் 6 திராவிட மொழிகளே பிரதானமாக பேசப்படுகிறது என்ற தகவலை வழங்கியுள்ளது தமிழ் மொழி அட்லாஸ் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் வெளியான 'தமிழ் மொழி அட்லஸ்' (Language Atlas), தமிழ்நாட்டு மக்கள் 96 மொழிகள் பேசுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் 149 தாய்மொழிகளைக் கொண்ட மக்கள் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 3.9 லட்சம் மக்கள் (3,93,380) நபர்கள் இந்தி பேசுவதாகத் தெரிவிக்கிறது மொழி அட்லஸ் தரவுகள். தமிழகத்தில் அதிகமாகப் பேசப்படும் இரண்டாவது இந்தோ - ஐரோப்பிய மொழியாக …

  21. 02 AUG, 2024 | 10:46 AM இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் மலைச்சாமி கொலை செய்யப்பட்டமைக்கு பாஜக, திமுக அரசாங்கங்களின் கையாலாகத்தனமே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார் . அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி படகினை தாக்கி ராமேசுவரம் மீனவர் மலைச்சாமியை நடுக்கடலில் மூழ்கடித்துப் பச்சைப் படுகொலை செய்த இலங்கை கடற்படையின் இனவெறி அட்டூழியச் செயலானது பொறுக்கவியலா கடும் ஆத்திரத்தையும் பெரும் மனவேதனையும் அளிக்கிறது. தமிழ் மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்களை தடுக்கத் தவறிய இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத…

  22. விருதுநகர்: 'ஜீரோ பிரசவ மரணம்' என்ற சாதனை- தமிழ்நாட்டில் முதல்முறையாக நிகழ்த்தப்பட்டது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விருதுநகர் சுகாதார மாவட்டம் ஓர் ஆண்டு முழுக்க பிரசவ மரணமே இல்லாமல் ‘ஜீரோ பிரசவ மரணம்’ என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் விருதுநகர் சுகாதார மாவட்டம் ஓர் ஆண்டு முழுக்க பிரசவ மரணமே இல்லாமல் ‘ஜீரோ பிரசவ மரணம்’ என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது எப்படி? இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில் விரு…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்செங்கோட்டில் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கொலை செய்ய முயன்ற ஐடி நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியைக் காக்க வந்த இருவருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், பத்து வயது சிறுமி ஏன் கத்தியால் தாக்கப்பட்டார்? சிறுமியை கொலை செய்ய முயற்சி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கட்டட வேலை செய்து தினக்கூலியாக பிழைப்பு நடத்தி வருபவர் ப…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பத்தூரை சேர்ந்த 32 வயது முபினாவின் செல்போனுக்கு கடந்த இரு வாரங்கள் முன் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு செல்போனை பார்த்த அவருக்கு குறுஞ்செய்தியின் தகவல்கள் புரியாததால், தனது கணவரை அழைத்துள்ளார். முபினா ஃபாசிலுர்ஹ்மானின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அந்த குறுஞ்செய்தி கூறியது. அவர் 4.5 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி செலுத்தாததால், கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அதை திருப்பி செலுத்தும் வரை கணக்கை உபயோகப்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. “வங்கிக் கணக…

  25. பட மூலாதாரம்,TAMILNADU FOREST DEPARTMENT படக்குறிப்பு,ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்த 3 வயது மதிக்கத்தக்க ஆண் புலி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் (ஒவ்வொரு வருடமும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள், தனியார் அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.) ‘காடுகளின் காவலன்’ என அழைக்கப்படும் புலிகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது குறித்தும், மனிதர்கள்- புலிகள் மோதல்களைத் தவிர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.