Jump to content

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

 

இந்த காளொளியில் பேசப்பட்ட விடயங்கள்  அதவும் பொலிஸ் அதிகாரிகளைத்தவறாகப்  பேசியது இவர்கைதுக்கு முக்கிய காரணம். சவுக்கு சங்கர் மீது பல விமர்சனங்கள் உண்டு பெண் காவலர்களைப்பற்றி விடயத்தை அவர் உறுதிப்படுத்தமால் பேசுவது கண்டிக்கத்தக்கது.. இருந்தாலும் இந்தக்காணெளியில் சவுக்கு  கேட்கும் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு கேட்கும் சில  நியாமான கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

ஓம்.

ஆனால் சீமான் விடயத்தில் உங்களை போன்றோர் - கை பலமுறை சுட்டும் ஒதுக்காமல் இருப்பது நம்பிக்கை அல்ல, மூடநம்பிக்கை.

அல்லது கதாநாயக வணக்கம்.

உங்கள் கருத்து பல இடங்களில் புலிகளுக்கு எதிராக எழுதுபவர்களின் கருத்தோடு ஒத்ததாகவே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

உங்கள் கருத்து பல இடங்களில் புலிகளுக்கு எதிராக எழுதுபவர்களின் கருத்தோடு ஒத்ததாகவே இருக்கின்றது.

ஆனால் நீங்கள் சீமானை நம்புவது போல், நான் புலிகளுக்கு எதிராக எழுதுபவர்களை நான் நம்புவதில்லை. அவர்களை, அவர்களின் அரசியலை முன்னிறுத்துவம் இல்லை. பல இடங்களில் அவர்களின் புலிகள் மீதான விமர்சனம் நியாயமற்றதாக இருப்பதாக எனக்கு படும் போது, எதிராகவும் எழுதியுள்ளேன்.

உதாரணமாக தனி நாடு ஒரு போதும் சாத்தியமான இலக்காக இருக்கவில்லை என்பது எனது நிலைப்பாடு. அதுவே தற்போது முரளிதரனின் நிலைப்பாடும்.

அதற்காக அவரின் ஏனைய பிழைகளை நான் கண்டும் காணாமல் போவதில்லை, விமர்சிக்காமல் போவதும் இல்லை, அவரின் அரசியலை முன்னிறுத்துவதும் இல்லை. குறிப்பாக முட்டு கொடுப்பதில்லை.

ஆனால் இதே போல் அல்ல உங்களின் சீமான் மீதான அணுகுமுறை. அவர் மாவீரரை அவமதித்தாலும், பொட்டம்மானை தூசித்தாலும், புலிகள் போதை வர்த்தகர்கள் என கூறிய பின்பும் சவுக்குக்கு ஆதரவாக பேசினாலும்….உங்கள் கண்களை கதாநாயக அபிமானம் மறைத்து விடுகிறது.

கொஞ்சம் தெளிவானவர்கள் அவர் இப்படி செய்வது தவறு என்றாவது ஒத்து கொள்ளுவார்கள்.

ஆனால் முற்றிலும் மூடநம்பிக்கையால் பீடிக்கப்பட்டவர்கள், அந்த ஆடியோ போலி என்ற ரேஞ்சுக்கு முட்டு கொடுப்பார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

ஆனால் நீங்கள் சீமானை நம்புவது போல், நான் புலிகளுக்கு எதிராக எழுதுபவர்களை நான் நம்புவதில்லை. அவர்களை, அவர்களின் அரசியலை முன்னிறுத்துவம் இல்லை. பல இடங்களில் அவர்களின் புலிகள் மீதான விமர்சனம் நியாயமற்றதாக இருப்பதாக எனக்கு படும் போது, எதிராகவும் எழுதியுள்ளேன்.

உதாரணமாக தனி நாடு ஒரு போதும் சாத்தியமான இலக்காக இருக்கவில்லை என்பது எனது நிலைப்பாடு. அதுவே தற்போது முரளிதரனின் நிலைப்பாடும்.

அதற்காக அவரின் ஏனைய பிழைகளை நான் கண்டும் காணாமல் போவதில்லை, விமர்சிக்காமல் போவதும் இல்லை, அவரின் அரசியலை முன்னிறுத்துவதும் இல்லை. குறிப்பாக முட்டு கொடுப்பதில்லை.

ஆனால் இதே போல் அல்ல உங்களின் சீமான் மீதான அணுகுமுறை. அவர் மாவீரரை அவமதித்தாலும், பொட்டம்மானை தூசித்தாலும், புலிகள் போதை வர்த்தகர்கள் என கூறிய பின்பும் சவுக்குக்கு ஆதரவாக பேசினாலும்….உங்கள் கண்களை கதாநாயக அபிமானம் மறைத்து விடுகிறது.

கொஞ்சம் தெளிவானவர்கள் அவர் இப்படி செய்வது தவறு என்றாவது ஒத்து கொள்ளுவார்கள்.

ஆனால் முற்றிலும் மூடநம்பிக்கையால் பீடிக்கப்பட்டவர்கள், அந்த ஆடியோ போலி என்ற ரேஞ்சுக்கு முட்டு கொடுப்பார்கள்.

விடுதலைப்புலிகள் விடயத்தில் பல விடயங்களை கடந்து செல்கின்றீர்கள்....அதே போல்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு சங்கரைப் போட்டு மிதிக்கிறமிதியில, விடுதலையானால் கூட எவரும் போய்ச் சந்திக்கக்கூடாது! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகள் விடயத்தில் பல விடயங்களை கடந்து செல்கின்றீர்கள்....அதே போல்.......

அவர்களும் இவரும் ஒன்றில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு சங்கரை தொடர்ந்து… டெல்லியில் பெலிக்ஸ் கைது!

christopherMay 11, 2024 08:34AM
Felix arrested in Delhi after savukku sankar

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் டெல்லியில் இன்று (மே 11) கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக அரசியல் விமர்சகரும், யூடியுபருமான சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் கடந்த 4ஆம் தேதி கைது செய்தனர்.

மேலும் அவர் வந்த காரில் கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு மே 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் சென்னை போலீசாரால் மேலும் இரண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நேற்று சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதற்கிடையே தேனி மாவட்ட போலீசார் மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று சோதனை செய்தனர். அப்போது சங்கர் வீட்டில் இருந்து கஞ்சா, செல்போன், லேப்டாப், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கும் போலீசார் சீல் வைத்தனர்.

இந்த நிலையில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூப் சேனல் மீதும் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனை அடுத்து சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

பேட்டி எடுத்தவர் தான் முதல் குற்றவாளி!

அந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் “பேட்டி கொடுத்தவரை விட பேட்டி எடுத்த வரை தான் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும், தற்போது யூட்யூப் சேனல்களை நெறிமுறைப்படுத்தும் நேரம் வந்துவிட்டது” என்று கூறியது.

ஏற்கெனவே அரசியலில் இருக்கும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் ஜாமீனில் வந்த நிலையில், தற்போது மீண்டும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் பெலிக்ஸை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

இதனையடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில்  சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸை டெல்லியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு கீதா என்ற பெண்ணிடம் பேட்டி எடுக்கும் போது ’அரசியலில் இருக்கும் பெண்கள் அனைவரும் அட்ஜஸ்ட் செய்து வந்தவர்களே’ என்று பேசியதற்காக இவர் மீது சைபர் கிரைம் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கிலும் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கி வெளியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://minnambalam.com/political-news/felix-arrested-in-delhi-after-savukku-sankar/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூடியூப் சேனல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவையா? நீதிபதியின் கருத்தைத் தொடர்ந்து கிளம்பும் விவாதம்

யூடியூப் சேனல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவையா? நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES/SAVUKKU SHANKAR

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 11 மே 2024, 05:25 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

"சில யூடியூப் சேனல்கள் தங்கள் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, அவதூறான உள்ளடக்கம் கொண்ட காணொளிகளை வெளியிடுவதன் மூலம் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றன."

"இதுபோன்ற விரும்பத்தகாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது" என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு வியாழக்கிழமை தெரிவித்தார்.

நேர்காண்பவரும் குற்றவாளியா?

சவுக்கு சங்கர் கைதான வழக்கில், முன் ஜாமீன் கேட்டு ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனல் உரிமையாளர் மற்றும் சவுக்கு சங்கருடனான நேர்காணலை நடத்தியவருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனு கொடுத்திருந்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அரசு வழக்கறிஞர் (ஏ.பி.பி) இ.ராஜ் திலக், மனுதாரர் சமீபத்தில் 'சவுக்கு சங்கர்' என்கிற ஏ. சங்கரை நேர்காணல் செய்ததாகவும், இதன்மூலம் பெண் காவலர்களுக்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிட அவருக்கு "வசதி செய்து கொடுத்ததாகவும்" கூறினார்.

மனுதாரரின் வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் கடந்த 25 ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளராக இருக்கிறார் என்று கூறியபோது, நீதிபதி கூறுகையில், மனுதாரர் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும், ஏனென்றால் அவர்தான் நேர்காணல் செய்தவரை பெண்களுக்கு எதிராக அவதூறான கூற்றுகளை வெளியிடத் தூண்டினார் என்றார்.

 
யூடியூப் சேனல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவையா? நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?
படக்குறிப்பு,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு

ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனல், பத்து நாட்கள் முன்பு காவல்துறை தொடர்பாக சவுக்கு சங்கருடன் நடத்திய நேர்காணலை வெளியிட்டிருந்தது.

அந்த நேர்காணலில் ஒரு காவல் அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு, ஆவேசமாகப் பேசிய சவுக்கு சங்கர், பணியில் இருக்கும் பெண் காவலர்கள் மற்றும் அந்தக் காவல் அதிகாரி ஆகியோர் தொடர்பாகச் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

அதே நேர்காணலில், மற்றொரு தருணத்தில், தனது இடது கையால் வலதுபுறம் உள்ள மீசையை முறுக்கிக் கொண்டே, “திமுகவுக்கு இந்தத் தேர்தலில் சில தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது. இதற்குக் காரணம் சவுக்கு மீடியா என முதல்வரிடம் சிலர் கூறியிருந்தனர்," என்று கூறியவர், அதேவேளையில் ஆனால் அதற்குக் காரணம் மு.க.ஸ்டாலினின் அரசுதான் என்பதை கொச்சைப்படுத்தும் வார்த்தைப் பயன்பாட்டுடன் கூறியவாறு சிரித்தார்.

எதிரில் இருந்த நெறியாளர், “நான் உங்கள் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இப்படி ஒரு செய்தி கிடைத்தால், அது எதனால் ஏற்பட்டது என்று ஆராயாமல் ஒரு ஊடகத்தை முடக்கினால் சரியாகிவிடும் என்று அரசு எப்படி நினைக்கிறது?” என்று கேட்கிறார்.

 

குடிசைத் தொழிலாக யூடியூப்!

யூடியூப் சேனல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவையா? நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது தொடர்பாக பி.பி.சி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன், ”யூ டியூப் சேனல்கள் நடத்துவது என்பது தற்போது குடிசைத் தொழில் செய்வது போல் ஆகிவிட்டது. யூடியூப் சேனல்களில் செய்திகளைச் சேகரிப்பதற்கான குழுக்கள் கிடையாது. அதற்கான நிதி ஆதாரம், மனித வள ஆதாரம் இருக்காது.

எனவே அந்த சேனல்கள் செய்திகளை அலசி கருத்து தெரிவிக்கும் தளமாக இருக்கிறது. சில நேரங்களில் அது புரளி பேசுவதாகவும், அதையும் தாண்டி சில நேரங்களில் அவதூறாகப் பேசுவதாகவும் மாறிவிடுகிறது," என்றவர் யூடியூப் சேனல்கள் ஒட்டுமொத்தமாகத் தரம் குறைந்துள்ளதாகவும் அதற்கு பொருளாதார நோக்கங்கள் இல்லையென்று கூற முடியாது எனவும் கூறினார்.

எதையும் திட்டி பேசினால்தான் யூ டியூபில் எடுபடும் என்று கருதப்படுவதாக அவர் தெரிவிக்கிறார். கிட்டத்தட்ட இதே மாதிரியான கருத்தை பெண் ஊடகவியலாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் பேசியபோது, எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் "இன்று சவுக்கு சங்கர் பேசும்போது, கருத்துரிமை பறிபோனதாகக் கூறுவது எப்படி நியாயம்?" என்றும் வினவுகிறார்.

கோபப்படுவது சரியில்லை என்று குறிப்பிடும் நீதிபதி அரி பரந்தாமன், “அம்பேத்கர் கூறிய இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்குத்தான் செல்லும் என்று நீதிமன்றம் கூறும்போது வராத கோபம் ஏன் இப்போது வருகிறது?” எனக் கேட்கிறார்.

 

கட்டுப்பாடுகள் தேவையா?

யூடியூப் சேனல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவையா? நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழகத்தில் ஏராளமான யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சேனல்களில் அரசியல், சினிமா எனப் பல்வேறு விதமான விஷயங்கள் வெளிவருகின்றன. அரசியல் கட்சிகளும் தங்களுக்கான சேனல்களை நடத்தி வருகின்றனர். யூடியூப் சேனல் தொடங்க யாரிடமும் எந்த உரிமையும் பெறவேண்டிய அவசியமில்லை.

பெரிய ஊடகங்களுக்கு இல்லாத கட்டுப்பாடு ஏன் யூடியூப் ஊடகத்திற்கு மட்டும் விதிக்கப்பட வேண்டும் என்று கேட்கிறார், நீதிபதி அரி பரந்தாமன். "எந்த ஊடகத்துக்கும் முறைப்படுத்துதல் இல்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் ஊடகங்கள் முறைப்படுத்துதல் இல்லாமல்தான் இயங்குகின்றன. சாதாரண மக்கள் பயன்படுத்தும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை ஏன் முறைப்படுத்த வேண்டும்?"

சவுக்கு சங்கரின் நேர்காணலை யாராலும் ஆதரிக்க முடியாது, ஆனால் செய்தி என்பது விற்கப்படும் பண்டமாகிவிட்ட நிலையில் யாரும் அதில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள் என்கிறார் அவர்.

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அது அரசியல் ரீதியாகத்தான் பயன்படுத்தப்படும் என்கிறார் ஜீவா டுடே என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் பத்திரிகையாளர் ஜீவ சகாப்தன்.

“யூ டியூப் சேனல்களில் பாஜகவை திட்ட வேண்டும் அல்லது திமுகவை திட்ட வேண்டும். அதில் பேசும் சர்ச்சையான கருத்தை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என்ற போக்குதான் பெரும்பாலும் உள்ளது. பெண்களையோ, ஒரு துறை சார்ந்தவர்களையோ அவதூறாகப் பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.

சில யூடியூப் சேனல்களில் நடிகைகள் குறித்த கிசுகிசு, பிறரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது ஆகியவையே உள்ளடக்கங்களாக இருப்பதால், யூடியூப் சேனல்கள் என்றாலே மோசம் என்ற எண்ணம் இருக்கிறது.

ஆனால் இதை முறைப்படுத்த வேண்டும் என்று அரசு கூறினால், அரசியல் ரீதியாக கருத்து தெரிவிப்பவர்களைத்தான் அரசு கட்டுப்படுத்தும். பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுபவர்களைத் தேடி முதலில் செல்லாது. அது ஆபத்தானது,” என்றார்.

 

சரிவில் ஊடக சுதந்திரம்

யூடியூப் சேனல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவையா? நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஊடக சுதந்திரம் தொடர்பான தரவரிசைப் பட்டியலை எல்லைகள் இல்லாத ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதில் இந்தியாவின் தரவரிசை 159 என்ற பின்தங்கிய இடத்தில் உள்ளது.

இந்திய ஊடகங்கள் அதிகாரபூர்வமற்ற அவசரநிலையை அடைந்திருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவின் அரசமைப்பு சட்டத்தில் பத்திரிக்கை சுதந்திரம் தனியாகக் குறிப்பிடப்படாத போதிலும், கருத்துரிமையின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசாங்கம் காலனி ஆதிக்க கால சட்டங்களைப் பயன்படுத்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளும்கூட சட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களைத் துன்புருத்துவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ஒளிபரப்பு சேவைகள் கட்டுப்பாட்டு சட்டம், 2023 தகவல் தொடர்பு சட்டம், டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் மூலம் ஊடகங்களைக் கட்டுப்படுத்த அதீதமான அதிகாரத்தை அரசாங்கம் குவித்துக் கொண்டிருப்பதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

அரசியல் ரீதியான கருத்துகள் காரணமே இல்லாமல் முடக்கப்படுவதாக போல்தா இந்துஸ்தான் என்ற சேனலின் நிறுவனர், ஹசீன் ரஹ்மானி பிபிசி தமிழிடம் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “கடந்த மாதம் 4ஆம் தேதி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தலின் பெயரில் எங்களது யூடியூப் சேனல் முடக்கப்படுவதாக யூடியூப் நிர்வாகத்திடம் இருந்து மின்னஞ்சல் கிடைத்தது. தகவல் கிடைத்து 12 மணிநேரங்களில் சேனல் முடக்கப்பட்டது. நாங்கள் அதுவரை 4,200 வீடியோக்கள் பதிவிட்டிருந்தோம்.

இரண்டு நாட்கள் முன், நான் கேட்காமலேயே, சேனல் மீண்டும் அனுமதிக்கப்பட்டது. எங்கள் குழு இரண்டாவது முறையாக ஆய்வு செய்தததில் உங்கள் தளத்தில் விதிமீறல்கள் எதுவும் இல்லை,” என்று கூறினர். எந்த விதிமீறலும் இல்லாமல் 34 நாட்கள் முடக்கப்பட்டு இருந்ததாக ஹசீன் ரஹ்மானி கூறினார்.

சமூக ஊடகத்தில் தினமும் உழைத்தால்தான் ஆதரவுத் தளத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று கூறும் அவர், "இன்று நாங்கள் முதல் படியில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டும். அதே போன்று முகநூலில் விளம்பரங்கள் மூலம் வருவாய் பெறுவதற்கான அனுமதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது," என்றும் தெரிவித்தார்.

மேலும், இதே செயலை அரசு ஒவ்வொரு யூடியூப் சேனலின் மீதும் மேற்கொள்ளும், இப்படியே செய்துகொண்டிருந்தால் எழுப்புவதற்குக் குரலே இருக்காது, என்றார் ஹசீன் ரஹ்மானி.

https://www.bbc.com/tamil/articles/cz96mj0mje7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் சவுக்குக்கு மாவு கட்டு போட்டது கொஞ்சம் ஓவர்தான்.

அதே போல் அவராக அவதூறாக பேசினால் அன்றி நேர்காண்பவரை எல்லாம் தூக்கி உள்ளே வைப்பது பேச்சுரிமை மீறல்.

பேட்டி கொடுப்பவர் உளறுவதற்கு அவர் மட்டுமே பொறுப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேச மாட்டேன்.. நீதிபதியிடம் சொன்ன சவுக்கு சங்கர்

சென்னை: இனி யூடியூப்பில் கடுமையான பிரச்சனை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இனிமேல் பேச மாட்டேன் என்று சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 10 நபர்கள் இருட்டு அறையில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். என்னை மோசமாக அடிக்கின்றனர். விசாரணையை என்று அடிக்கிறார்கள். இனி யூடியூப்பில் கடுமையான பிரச்சனை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என்று சவுக்கு சங்கர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
I will not hurt anyone s feelings anymore in YouTube videos says Savukku Shankar to Judges

இதற்கு, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறேன். நான் விசாரணை மேற்கொள்ளும் வரை தைரியமாக இருக்கும்படியும் சவுக்கு சங்கரிடம் நீதிபதி கூறியதாக சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் விஜயராகவன் பேட்டி அளித்துள்ளார்.

சிறைத்துறை தலைவர் வழக்கு: முன்னதாக கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்து என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூ-டியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது வலது கை வேண்டுமென்றே உடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் அவரை சிறைத் துறையினர் துன்புறுத்தியுள்ளதால், அதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
 

காயமடைந்த சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அடங்கிய அமர்வு, சிறையில் ஆய்வு செய்த கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையை (மே 09) தாக்கல் செய்யும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் , சிறையில் சவுக்கு சங்கர் கொடுமை படுத்தப்படவில்லை. சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது ஏன்? என பதிலளித்த அவர், அவருக்கு ஏற்கனவே சிறை கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம் எனவும், அதனால் தாக்கப்பட்டிருந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவித்தார்.

சிறை நிர்வாகம் சார்பில் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆட்கொணர்வு மனுவில் வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடியாது. சிறை மாற்றம் செய்ய சிறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறித்தி உள்ளனர். அதனால், மருத்துவர்கள் அறிக்கை படி சிறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சவுக்கு சங்கருக்கு சிறை நிர்வாகம் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற சவுக்கு சங்கரின் தாயார் அளித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

https://tamil.oneindia.com/news/chennai/i-will-not-hurt-anyones-feelings-anymore-in-youtube-videos-says-savukku-shankar-to-judges-605191.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சவுக்கு சங்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டவை என்ன? பட்டியல் இதோ…,

லேப்டாப், பென் டிரைவ், கஞ்சா; சவுக்கு சங்கர் வீடு, அலுவலகம் மற்றும் கார் ஓட்டுனர் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் இங்கே

WebDesk11 May 2024 23:23 IST
savukku shankar

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகம் மற்றும் கார் ஓட்டுனர் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 

Listen to this article

 

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் இருந்து கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், மொபைல் போன், வெப் கேமரா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

காவல்துறை அதிகாரிகள் குறித்தும், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4 ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர். இதனையடுத்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அவரது இல்லம் மற்றும் தியாகராய நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் தேனி மாவட்ட பழனிச் செட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் நேற்று (மே 10) சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 10 மணி நேர சோதனைக்கு பிறகு லேப்டாப், செல்போன், 2 லட்சம் ரூபாய் ரொக்கம், கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், பென் டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு, தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்தனர்.

இந்தநிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கைப்பற்ற பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி சவுக்கு சங்கர் வீட்டில், குடும்ப அடையாள அட்டை, ஐபாட் டாப், மொபைல் போன், இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் பணம், கம்ப்யூட்டர் மானிட்டர், டி.வி.ஆர், ஐந்து கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், வெப் கேமரா, கார், பேங்க் பாஸ்புக், பழைய பாஸ்போர்ட், சிகரெட் ஆஸ்ட்ரே ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் அலுவலகத்தில் இருந்து, 3 லேப்டாப், 10 ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், செல்போன், நான்கு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சவுக்கு சங்கரின் கார் ஓட்டுனர் வீட்டில் இருந்து, 3 லேப்டாப், ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், சிறிய கஞ்சா பொட்டலம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-police-seizes-ganja-laptop-hard-disk-from-youtuber-savukku-shankar-home-office-4556569

 

யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது- சென்னை காவல்துறை நடவடிக்கை

யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது- சென்னை காவல்துறை நடவடிக்கை
  • யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.
  • குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது.

யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் 7வதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து, சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர்.

சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்ற நிலையில், 7வது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை சிறை அதிகாரிகள் குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது.

காவல்துறையினர் குறித்த அவதூறு பேச்சு, கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் கைதாகியுள்ள சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

https://www.maalaimalar.com/amp/news/state/gangster-law-pounced-on-youtuber-savukku-shankar-717930

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தடுத்து 7 வழக்குகள்: சவுக்கு சங்கர் கைதுக்குப் பிறகு நடந்தது என்ன? அவரது பின்னணி என்ன?

சவுக்கு சங்கர் பின்னணி என்ன?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 13 மே 2024

ஏழு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் யூ டியூபரான சவுக்கு சங்கர், தற்போது குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை பேட்டியெடுத்த ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் நடப்பது என்ன?

தேனியில் சவுக்கு சங்கர் கைது

பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபரான சவுக்கு சங்கர் கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது பேட்டிகளை ஒளிபரப்பிய யூ டியூப் சேனலின் எடிட்டரான ஃபெலிக்ஸ் ஜெரால்ட் என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

'சவுக்கு' என்ற இணையதளத்தை நடத்தி வந்ததன் மூலம் அறியப்பட்ட ஏ. சங்கர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார்.

இந்த அவதூறு கருத்துகள் தொடர்பாக மே மாதம் 3ஆம் தேதியன்று காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் கோயம்புத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து சவுக்கு சங்கர் மீது 294 (B), 353, 509, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4, ஐடி சட்டத்தின் பிரிவு 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில், தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சங்கரை மே 4ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கோவை நகர சைபர் க்ரைம் காவல்துறை கைது செய்தது.

 
சவுக்கு சங்கர் பின்னணி என்ன?

போதைப்பொருள் வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது வழக்கு

தேனியில் சங்கரை கைது செய்ய பழனிச்செட்டிப்பட்டி காவல் துறையினர் வந்த போது, சங்கர் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. அந்தத் தருணத்தில் மேலும் சிலர் அளித்த தகவல்களின் அடிப்படையில் சங்கர் தங்கியிருந்த அறையைச் சோதனையிட்ட போது அங்கிருந்து கஞ்சா, பணம் போன்றவை கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்குப் பிறகு சங்கர், சங்கருடன் தங்கியிருந்த ராம் பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் மீதும் 294(b), 353, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய பிரிவுகள் தவிர போதைப்பொருள் தடுப்பு தொடர்பான சில சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இதற்குப் பிறகு சங்கரும் மற்ற இருவரும் காவல்துறை வாகனத்தில் கோயம்புத்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அந்த வாகனம் திருப்பூர் தாராபுரம் அருகே விபத்திற்குள்ளானதில் வாகனத்தில் இருந்த காவலர்கள் உட்பட அனைவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு, நீதிமன்றக் காவலில் சங்கர் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

போதைப்பொருள் தொடர்பான வழக்கில் மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சங்கரை மே 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கஞ்சா வழக்கு தொடர்பாக சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு, சென்னை தியாகராய நகரில் இருந்த அலுவலகம் ஆகிய இடங்களில் காவல்துறை சோதனை நடத்தியது.

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்த நிலையில், மே ஆறாம் தேதியன்று செய்தியாளர்களைச் சந்தித்த சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் எஸ். கோபாலகிருஷ்ணன், கோயம்புத்தூர் சிறையில் சங்கர் தாக்கப்பட்டதாகவும் அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்ததோடு, சங்கர் காயப்படுத்தப்பட்டிருப்பது குறித்து நீதித் துறை விசாரணை நடத்த வேண்டுமென கோரினார். சவுக்கு சங்கரும் இது தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இதற்குப் பிறகு, கோயம்புத்தூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் கோவைச் சிறைக்குச் சென்று இது குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டப் பணிகள் ஆணையத்தின் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி கோவை சிறையில் சட்டப் பணிகள் ஆணையம் அளித்த அறிக்கையில், தனது வலது கையில் வலி இருப்பதாக சங்கர் கூறியதாகவும் அவருக்கு சிகிச்சை தேவைப்படும் என்றும் கூறப்பட்டிருந்ததாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு சங்கர் மேலும் சில வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதற்காக மே ஆறாம் தேதியன்று சேலத்தைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் அளித்த புகார், மே எட்டாம் தேதியன்று முசிறியைச் சேர்ந்த காவல்துறை டிஎஸ்பி அளித்த புகார் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

தமிழக முன்னேற்றப் படை என்ற கட்சியை நடத்தி வரும் வீரலட்சுமி என்பவர் அளித்த புகாரில் மே எட்டாம் தேதி சங்கர் மீதும் சங்கரைப் பேட்டியெடுத்த யூ டியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு, 2018ஆம் ஆண்டில் பெண் பத்திரிகையாளர் ஒருவர், சவுக்கு சங்கர் தன்னைப் பற்றி அவதூறாக எழுதிவருவதாக அளித்த புகாரில் முதல் தகவல் அறிக்கை அதே நாளில் பதிவுசெய்யப்பட்டது.

மே பத்தாம் தேதியன்று, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் புகார் ஒன்றை அளித்தது. அந்தப் புகாரில் போலி ஆவணங்களை வைத்துக்கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து தவறான கருத்துகளை சங்கர் பரப்பிவருவதாக கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாகவும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

சவுக்கு சங்கர் மீது ஏழு வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், அவரைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருக்கிறார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை, கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு மே 12ஆம் தேதி அளிக்கப்பட்டது.

சவுக்கு சங்கர் பின்னணி என்ன?

டெல்லியில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். சங்கர் தொடர்பான வழக்கில் தான் கைதுசெய்யப்படக்கூடும் என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், யூ டியூப்களில் பேட்டி எடுப்பவர்கள், பேட்டி அளிப்பவர்களைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றனர். ஆகவே அவர்களைத்தான் முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்று கூறி, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தது.

இதையடுத்து, ஃபெலிக்ஸ் ஜெரால்டைக் கைது செய்யும் முயற்சிகளில் காவல்துறை இறங்கியது. ஃபெலிக்ஸ் ஜெரால்டு, டெல்லி சென்றிருந்த நிலையில், அவரை அங்கு வைத்து திருச்சி மாவட்ட தனிப்படைக் காவல்துறையினர் மே10ம் தேதி இரவில் கைதுசெய்தனர்.

சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கூறுவது என்ன?

இதற்கிடையில் கைக்கு சிகிச்சை பெறுவதற்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கிருந்த ஊடகங்களைப் பார்த்து, "கோயம்புத்தூர் சிறையின் கண்காணிப்பாளர் செந்தில்குமார்தான் தனது கையை உடைத்ததாகவும் தான் சிறையிலேயே கொல்லப்படலாம்" என்றும் சத்தமிட்டார்.

சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட வழக்குகள் மிக ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், அவரது பாதுகாப்பு குறித்து மட்டுமே கவலைப்படுவதாகச் சொல்கிறார் அவரது வழக்கறிஞரான கோபாலகிருஷ்ணன்.

"எல்லா வழக்குகளும் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றன. அதனால் அதைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. கையில் அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது, மூன்று இடங்களில் எலும்பு முறிவு இருந்தது தெரியவந்தது. அதற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாவுக்கட்டு போடப்பட்டது. இன்று மாவுக்கட்டு மாற்றப்பட்டிருக்கிறது. தற்போது போலீஸ் காவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு அவருடைய பாதுகாப்பை மட்டும் உறுதிப்படுத்த விரும்புகிறோம். வழக்கை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என இருக்கிறோம்" என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

சவுக்கு சங்கர் பின்னணி என்ன?

சவுக்கு சங்கரின் பின்னணி என்ன?

சவுக்கு சங்கர், தமிழ்நாடு அரசின் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றியவர். 2008ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் எஸ். கே. உபாத்தியாய்க்கும் தலைமைச் செயலாளர் எல். கே. திரிபாதிக்கும் இடையே நிகழ்ந்த தொலைப்பேசி உரையாடலின் குரல் பதிவை கசியவிட்டதாக இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதற்குப் பிறகு சவுக்கு என்ற பெயரில் வலைபதிவு பக்கம் ஒன்றைத் துவங்கி, அதில் எழுத ஆரம்பித்தார். 2010ஆம் ஆண்டில் அவர் எழுதிய பதிவு ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு சவுக்கு என்ற பெயரில் இணைய தளம் ஒன்றைத் துவங்கி, அதில் தனது கட்டுரைகளை வெளியிட்டுவந்தார்.

இந்நிலையில், அந்த இணைய தளத்தில் எழுதப்பட்ட கட்டுரை தொடர்பாக கிரிமினல் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சவுக்கு நடத்திவந்த இணையதளத்தை முடக்க உத்தரவிட்டது.

இதற்குப் பிறகு தனது சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து எழுதி வந்த சவுக்கு சங்கர், யூ டியூப் சேனல்களிலும் பேட்டிகளை அளித்துவந்தார்.

இதற்குப் பிறகு, 2022 செப்டம்பரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதற்குச் சில மாதங்களுக்குப் பின், சவுக்கு மீடியா (ஓபிசி) பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் சார்பில் இணையதளம் ஒன்றும் யூடியூப் சேனல் ஒன்றும் நடத்தப்பட்டுவருகிறது.

இந்த நிலையில்தான், வேறு ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார்.

தவறான முன்னுதாரணம் என்று அதிமுக கருத்து

சவுக்கு சங்கர் நீண்ட காலமாகவே தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்துவந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. "சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பதை ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகி விடும்" என இந்தக் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி.

"சவுக்கு சங்கர் தனிப்பட்ட முறையில் காவல்துறையினர் குறித்து பேசியது தவறு. எந்த ஒரு அதிகாரியையோ, பொத்தாம்பொதுவாக காவல்துறையையோ தனிப்பட்ட முறையில் மோசமாகப் பேசுவது ஏற்க முடியாதது. ஆனால், கைது செய்யப்பட்ட பிறகு அவர் சிறையில் தாக்கப்பட்டது, ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் இப்போது முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்வது, குண்டர் சட்டத்தில் கைது செய்வதெல்லாம் உள்நோக்கம் உடையது.

அவர் தொடர்ந்து ஆளுங்கட்சியை விமர்சித்து வந்தார். இப்போது அவரைக் கைது செய்யும் வாய்ப்புக் கிடைத்தவுடன், அவரை முழுமையாக முடக்குவதற்காக இதைச் செய்கிறார்கள். அடுத்த தேர்தல் வரும்வரை அவரை முடக்கி வைக்க நினைக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதைப் போல காட்டிக்கொள்கிறார்கள்" என்கிறார் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார்.

திமுக கூறுவது என்ன?

ஆனால், இந்தக் கைது நடவடிக்கைக்கும் தி.மு.கவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன்.

"சவுக்கு இப்போதுதானா தி.மு.கவை விமர்சித்துப் பேசுகிறார். தி.மு.க. என்றைக்கு ஆட்சியில் அமர்ந்ததோ, அப்போதிலிருந்து படுமோசமாக, தரமற்றவகையில் விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், தி.மு.க. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது காவல் துறையில் உள்ள பெண் அதிகாரிகளைப் பற்றி தரக்குறைவாகப் பேசியதற்காக கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவருடைய பேச்சுகள் வெறுப்புப் பேச்சுக்கு ஒப்பானவை. கைதுசெய்யக்கூடிய வகையிலேயே அவர் பேசியிருக்கிறார். காவல்துறை உயர் அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுகிறார். ஆகவே கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவருடைய கைதை நீதிமன்றமும் ஒப்புக்கொண்டிருக்கிறது

ஆனால், இது தி.மு.கவுக்கு சம்பந்தமில்லாத வழக்கு. சவுக்கு சங்கர் போன்றவர்களை தி.மு.க. ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

"கருத்து சுதந்திரத்தின் எல்லையை காவல்துறை நிர்ணயிப்பதா?"

கருத்து சுதந்திரத்தின் எல்லையை காவல்துறை நிர்ணயிப்பதாக குற்றம்சாட்டுகிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

"இங்கே கருத்து சுதந்திரத்தின் எல்லையை தமிழ்நாடு காவல்துறைதான் நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு மோசடிக்கும் ஒரு சட்டம் இருக்கிறது. அவதூறாகப் பேசினால் சிவில் அவதூறு வழக்குகளோ, கிரிமினல் அவதூறு வழக்குகளோ தொடரலாம். இதற்காகவெல்லாம் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது" என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

ஓய்வுபெற்ற டிஜிபி திலகவதி கருத்து

ஆனால், இது மிகச் சரியான நடவடிக்கை என்கிறார் ஓய்வுபெற்ற டிஜிபியான ஜி. திலகவதி. "ஒருவர் காவல் துறையில் இருக்கும் அனைத்து பெண்களின் கண்ணியத்தையும் கெடுக்கும் வகையில் பேசும்போது வேறு எப்படிச் செயல்படுவது? காவல் துறையில் வேலைக்கு வரும் பெண்கள் பல தடைகளைத் தாண்டி வேலைக்கு வருகிறார்கள். இது ஒரு வழக்கமான பணியில்லை. கணவனுக்குப் பதில் சொல்லிவிட்டு, மாமியாருக்கு பதில் சொல்லிவிட்டு பணிக்கு வர வேண்டும்.

காவல் துறை பணியும் மிகக் கடுமையானது. அப்படியிருக்கும்போது இவர் எல்லோரையும் பொத்தாம்பொதுவாக பாலியல் ரீதியாக குற்றம்சாட்டுகிறார். டிஎஸ்பி பணிக்கு வருபவர்கள், 'க்ரூப் 1' தேர்ச்சி பெற்று பணிக்கு வருகிறார்கள். அவர்களைப் பற்றி மோசமாகப் பேசுகிறார். இதுபோல பேசும் நபர்களை வேறு என்ன செய்வது? யு டியூபில் வேறு சிலரும் இதுபோல பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும்" என்கிறார் ஓய்வுபெற்ற டிஜிபியான திலகவதி.

 
சவுக்கு சங்கர் பின்னணி என்ன?

"சவுக்கு சங்கரை எந்த காலத்திலும் ஆதரிக்க முடியாது"

சவுக்கு சங்கரை எந்தக் காலத்திலும் ஆதரிக்க முடியாது என்றாலும், அரசு வழக்குகள் மூலமே அதனை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.

"சவுக்கு சங்கரைப் பொருத்தவரை அவர் யாருடைய குரலாகவும் ஒலிக்கத் தயங்காதவர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை அவர் ஆதரிக்கும் வகையில் பேசினார். கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி செல்லும் பெண் இறந்துபோனதை கொச்சைப்படுத்திப் பேசினார். அவர் மற்றவர்களைப் பற்றிப் தொனியே மிக மோசமாகவும் மிகுந்த அகங்காரத்துடனும் ஒலிக்கும்.

ஒருவரைப் பற்றி அவதூறாகப் பேசும் போது அதில் முறைப்படி வழக்குப் பதிவுசெய்து, தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அரசு என்பது மிக வலிமையானது. தனி மனிதர்கள் சிறியவர்கள். அவர்களை எதிர்கொள்ளும்போது அரசு அதற்கேற்ற வகையில் செயல்படவேண்டும். ஆனால், அவரை எந்தக் காலத்திலும் ஆதரிக்க முடியாது என்பதில் சந்தேகமில்லை" என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.

சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

தற்போது சவுக்கு சங்கரை போலீஸ் தனது காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. திங்கட்கிழமை மாலை 3 மணி முதல் செவ்வாய் கிழமை மாலை 5 மணிவரை அவருக்கு போலீஸ் காவல் வழங்கப்பட்டிருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/ckdqqxqxgw7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சவுக்கின் முன்னாள் மனைவி/பிள்ளையின் தாயின் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் காவலர்கள் பாதுகாப்பில் திருச்சி அழைத்துச் செல்லப்படும் சவுக்கு சங்கர்

KaviMay 15, 2024 12:01PM
GNmRkKaasAAA6Gx.jpg

பெண் காவலர்கள் பாதுகாப்பில் சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

பெண் காவலர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய விவகாரத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சவுக்கு சங்கர்.

அவர் மீது சென்னை, கோவை, தேனி என பல்வேறு மாவட்டங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே முசிறி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் யாஸ்மின் அளித்த புகாரின் பேரிலும் சவுக்கு சங்கர் மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும்  திருச்சி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில், பாலின சமத்துவமின்மை இல்லாமல் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியான அந்த வீடியோ தன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக டிஎஸ்பி யாஸ்மின் புகார் அளித்தார்.சங்கர்  பேசியதை வேண்டுமென்றே ஃபெலிக்ஸ் ஜெரால்ட் வெளியிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் நேற்று திருச்சி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருச்சி சிறையில் பெலிக்ஸ்… நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

இந்நிலையில் இவ்வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

வாகனம் முழுவதும் பெண் காவலர்கள் மட்டும் அடங்கிய பாதுகாப்பு குழுவோடு சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார்.

பெண் காவலர்களை இழிவாக பேசிய விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த, பெண் காவலர்களால் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்படும் புகைப்படம் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

https://minnambalam.com/tamil-nadu/savukku-shankar-goes-to-trichy-court-under-the-protection-of-women-police/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

பெண் காவலர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய விவகாரத்தில்

செருப்பை சாணியில் முக்கி அடிப்பது என்பது இதுதானா🤣

11 hours ago, கிருபன் said:

பெண் காவலர்கள் பாதுகாப்பில் சவுக்கு சங்கர்

அதுவும் அந்த அட்டணக்கால்😎.

large.IMG_7559.jpeg.526b3a7d2e98cd2dd513b86c742bf6b5.jpeg

#மாதர் தம்மை கேலி பேசும் மூட வாயை மூடுவோம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறெல்லாம் கள்ளானால் அதுக்குள்ளே

நான் விழுந்து நீச்சல் அடிப்பேன்

நாடெல்லாம் பெண்ணானால் நடுவிலே

நான் இருந்து பார்த்து ரசிப்பேன்

  • Like 1
  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே காவலர்களால் உடைத்து முறிக்கப்பட்ட தனது கையை பெண் காவலர்கள் மீண்டும் முறித்து விட்டார்கள் என்று நேற்று நீதிமன்றத்தில் சங்கர் சொல்லியிருக்கின்றார். காவலுக்கு தான் போகிறோம் என்று போயிருப்பார்கள்..... ஆளைப் பார்த்த பின், இன்னும் ஒருக்கால் உடைத்தால் என்ன கெட்டு விடப் போகின்றது என்று பின்னர் உடைத்தார்களோ தெரியாது...

சங்கரை மீண்டும் ஒரு மருத்துவ பரிசோதனைக்கு நீதிபதி இப்போது அனுப்பியுள்ளார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரசோதரன் said:

ஏற்கனவே காவலர்களால் உடைத்து முறிக்கப்பட்ட தனது கையை பெண் காவலர்கள் மீண்டும் முறித்து விட்டார்கள் என்று நேற்று நீதிமன்றத்தில் சங்கர் சொல்லியிருக்கின்றார். காவலுக்கு தான் போகிறோம் என்று போயிருப்பார்கள்..... ஆளைப் பார்த்த பின், இன்னும் ஒருக்கால் உடைத்தால் என்ன கெட்டு விடப் போகின்றது என்று பின்னர் உடைத்தார்களோ தெரியாது...

சங்கரை மீண்டும் ஒரு மருத்துவ பரிசோதனைக்கு நீதிபதி இப்போது அனுப்பியுள்ளார்.  

தனியே பெண்காவலர்களுடன் கொண்டு போகும்போதே தெரிந்திருக்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

செருப்பை சாணியில் முக்கி அடிப்பது என்பது இதுதானா🤣

அதுவும் அந்த அட்டணக்கால்😎.

large.IMG_7559.jpeg.526b3a7d2e98cd2dd513b86c742bf6b5.jpeg

#மாதர் தம்மை கேலி பேசும் மூட வாயை மூடுவோம்.

இதில யார் மறுபடி மாவுக்கட்டு போடவைத்தது?! அல்லது எல்லோருமாகச் சேர்ந்து தவறி அவருக்கு மேல விழுந்திருப்பினமோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

ஆறெல்லாம் கள்ளானால் அதுக்குள்ளே

நான் விழுந்து நீச்சல் அடிப்பேன்

நாடெல்லாம் பெண்ணானால் நடுவிலே

நான் இருந்து பார்த்து ரசிப்பேன்

காடெல்லாம் கஞ்சாவானால்,

அதில்,

கால் கிலோவை நான் இழுப்பேன்🤣

1 hour ago, ரசோதரன் said:

ஏற்கனவே காவலர்களால் உடைத்து முறிக்கப்பட்ட தனது கையை பெண் காவலர்கள் மீண்டும் முறித்து விட்டார்கள் என்று நேற்று நீதிமன்றத்தில் சங்கர் சொல்லியிருக்கின்றார். காவலுக்கு தான் போகிறோம் என்று போயிருப்பார்கள்..... ஆளைப் பார்த்த பின், இன்னும் ஒருக்கால் உடைத்தால் என்ன கெட்டு விடப் போகின்றது என்று பின்னர் உடைத்தார்களோ தெரியாது...

சங்கரை மீண்டும் ஒரு மருத்துவ பரிசோதனைக்கு நீதிபதி இப்போது அனுப்பியுள்ளார்.  

கை உடைந்து இந்த மாரி கட்டுப்போட்டால், கையை தூக்க கூடாது. அதுக்காகத்தான் இப்படி brace போடுவது. 

இப்ப பலர் கேட்க்கும் கேள்வி என்னவென்றால்…இந்தளவு முறிவோடு சவுக்கு எப்படி டி சேர்ட் போட்டார்? வழமையா இந்த காயம் உள்ளோர் பட்டன் சேர்ட் போடுவதுதான் வழக்கம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

இதில யார் மறுபடி மாவுக்கட்டு போடவைத்தது?! அல்லது எல்லோருமாகச் சேர்ந்து தவறி அவருக்கு மேல விழுந்திருப்பினமோ?!

பக்கத்தில ஒரு அன்ரி கையை ஓங்கிறா…சந்தர்ப சாட்சிப்படி அவதான்🤣.

சவுக்கு இதை வைத்து அனுதாபம் தேட முனைந்தாலும்…..பலருக்கு இவர் அந்த அப்பாவி பெண்ணின் மரணத்தில் பெட்டி வாங்கி கொண்டு ஆடிய நியாபகம்தான் மனதில் வந்து போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

செருப்பை சாணியில் முக்கி அடிப்பது என்பது இதுதானா🤣

அதுவும் அந்த அட்டணக்கால்😎.

large.IMG_7559.jpeg.526b3a7d2e98cd2dd513b86c742bf6b5.jpeg

#மாதர் தம்மை கேலி பேசும் மூட வாயை மூடுவோம்.

‛‛உங்க பெயர், செல்போன் எண் என்ன?’’.. பெண் காவலரிடம் கேட்ட சவுக்கு சங்கர்.. பரபரப்பு புகார்

திருச்சி: கோவையில் இருந்து திருச்சி நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றபோது சவுக்கு சங்கர் திருமணமாகாத பெண் காவலரிடம் அவரது பெயர் மற்றும் செல்போன் எண்ணை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெண் காவலர், திருச்சி நீதிபதி முன்பு பரபரப்பான புகாரை முன்வைத்துள்ளார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தான் அளித்த பேட்டியில் பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Woman police allegedly that Savukku Shankar asks her name and cellphone when she escort from Coimbatore to Trichy

வழக்கு தொடர்பாக கடந்த 4ம் தேதி கோவை போலீசார் தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்தனர். அதன்பிறகு அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பான புகாரில் சேலம், சென்னை, திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இதுதவிர கிளாம்பாக்கம் பஸ் நிலையம், பெண் பத்திரிகையாளர் பற்றி அவதூறு உள்ளிட்ட புகார்களிலும் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சவுக்கு சங்கர் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவருக்கு ஓராண்டு வரை ஜாமீன் கிடைக்காது. இத்தகைய சூழலில் தான் திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் புகாரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் சவுக்கு சங்கர் இன்று திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்காக கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் போலீஸ் வாகனத்தில் திருச்சி நீதிமன்றம் அழைத்து வந்து திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்ப்படுத்தினர். இந்த வேளையில் இதனிடையே பெண் காவலர் ஒருவர் சவுக்கு சங்கர் மீது பரபரப்பான புகாரை முன்வைத்தார். அதாவது ‛‛தனக்கு திருமணம் ஆகாத நிலையில் வேனில் வரும்போது எனது பெயரையும், செல்போன் எண்ணையும் சவுக்கு சங்கர் கேட்டார். என் பெயரை கூறியிருந்தால் அவர் அவப்பெயரை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது'' என கூறினார். இது நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக சவுக்கு சங்கரும், பெண் காவலர்கள் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது கோவையில் இருந்து போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட போது பெண் காவலர்கள் தன்னை தாக்கி அதனை வீடியோவாக எடுத்து கொண்டனர். அந்த வீடியோவை வாட்ச்ஆப்பில் பகிர்ந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

ஆனால் காவலர்கள் தரப்பில் அந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ஜெயப்பிரதா, சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கை நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே தான் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருச்சி போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது நாளை மதியம் 1 மணிக்கு நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவு பிறப்பிக்க உள்ளார். அதுவரை நீதிமன்ற காவலில் கோவைக்கு பதில் திருச்சி மத்திய சிறையில் சவுக்கு சங்கரை அடைக்க நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.

https://tamil.oneindia.com/news/trichirappalli/woman-police-allegedly-that-savukku-shankar-asks-her-name-and-cellphone-when-she-escort-from-coimbat-606125.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

 சேர்ந்து தவறி அவருக்கு மேல விழுந்திருப்பினமோ?!

லக்கி மேன்😁

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ங்கிளாதேஸ்சும் சொந்த‌ ம‌ண்ணில் தான் தூக்கி தூக்கி அடிச்சு வான‌ வேடிக்கை காட்டுவின‌ம்  அமெரிக்காவே ஒரு கிழ‌மைக்கு முத‌ல் தொட‌ர‌ 2-1 வென்ற‌து   வ‌ங்கிளாதேஸ் இப்ப‌டி தோக்கும் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம்....................20வ‌ருட‌த்துக்கு முத‌ல் என்றால் க‌ண்ண‌ மூடி கொண்டு சொல்ல‌லாம் இந்த‌ இந்த‌ அணிக‌ள் தான் வெல்லும் என்று    இப்ப‌ கால‌ம் மாறி போச்சு சின்ன‌ அணியா இருந்த‌ அப்கானிஸ்தான் பெரிய‌ அணிக‌ளை மிர‌ட்டும் அள‌வுக்கு வ‌ள‌ந்து விட்ட‌து   ஓமான் இந்த‌ அணியும் இன்னும் சில‌ வ‌ருட‌ங்க‌ளில் ப‌ல‌மான‌ அணியா வ‌ந்து விடும்   ஓமான் ப‌ண‌க்கார‌ நாடு அந்த‌ நாட்டு அர‌சாங்க‌ம் கிரிக்கேட்டை அங்கீகரித்து விட்ட‌து  அது தான் உள்ளூர் கில‌ப் விளையாட்டை ப‌ண‌ம் கொட்டி பெரிசா ந‌ட‌த்தின‌ம் 10 ஓவ‌ர் கிரிக்கேட் 20ஓவ‌ர் கிரிக்கேட் 50 ஓவ‌ர் கிரிக்கேட் 5நாள் விளையாட்டை ஓமான் விளையாடுவ‌தில்லை😂😁🤣................................................  
    • குத்தியருக்கு வடையும் பூந்திலட்டும் கிடைக்கேல்லை எண்ட வெக்கை வேகார் ஜேர்மனி வெள்ளத்திலை வந்து நிக்குது 😎
    • அப்ப  இந்த மணி அடிக்கிற அடியில் சுத்தி வர இருக்கும் சிங்கள கடைகள் தெறித்து ஓடுமோ ? காண்டா மணிகள் இந்தியாவில் இல்லை இங்கிலாந்தில் தான் இன்னமும் செய்து கொண்டு இருக்கிறார்கள் .
    • எனக்கான வெற்றிப்படிகள் இப்போதே கண் முன் தெரிகின்றது....விலகி நின்று வேடிக்கை பார்க்கவும்  😎 
    • "நட்பு என்பது நடிப்பு அல்ல"     "நட்பு என்பது நடிப்பு அல்ல நடனம் ஆடும் மேடை அல்ல நயமாக பேசும் பொய்யும் அல்ல நலம் வாழ என்னும் பாசமே!"   "வடிவு என்பது உடல் அல்ல வட்டம் இடும் கண்ணும் அல்ல வளைந்து பொங்கும் மார்பும் அல்ல வளையாமல் நிமிர்ந்து நிற்கும் உள்ளமே!"   "காதல் என்பது பொழுதுபோக்கு அல்ல காது குளிர பேசுவது அல்ல காமம் கொடுத்து மயக்குவது அல்ல காலம் முழுவதும் உண்மையாக இருப்பதே!"   "அன்பு என்பது கடமை அல்ல அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பது அல்ல அற்பம் சொற்பம் தருவது அல்ல அறிவுடன் உணர்ந்து பாசமாக நேசிப்பதே!"   "முகநூல் நட்பு தேடுவது அல்ல முகர்ந்து பார்க்க அலைவது அல்ல முகத்தை மாற்றி ஏமாற்றுவது அல்ல முழுதாய் சொல்லி அறிவாய் நடப்பதே!"   "பொறுப்பு என்பது வீட்டில் இருப்பது அல்ல பொது நண்பர்களுடன் சுற்றுவது அல்ல பொய்கள் பேசி திரிவது அல்ல பொருள் தேடி குடும்பத்தை காப்பதே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.