தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10254 topics in this forum
-
தமிழக சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 134 தொகுதிகளில் வென்றது. திராவிட முன்னேற்றக் கழகம் - காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா தலைமையிலான கடந்த (2011-2015) ஆட்சியில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான அமைச்சர்கள், இப்போதைய தேர்தலில் தோற்றுப்போயினர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டப்பேரவையில் அறுதிப்பெரும்பான்மையுடன், 6-வது முறையாக தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்க உள்ளார். தவிர, எம்ஜிஆருக்குப் பிறகு, ஆளுங்கட்சியாக இருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து அவர் சாதனை படைத்துள்ளார். தேர்தலில் வெற்றிப…
-
- 1 reply
- 521 views
-
-
சென்னை: நாங்கள் விதைத்த மாற்று அரசியல் விதை ஓர் ஆண்டில் விளையும் பயிர் அல்ல என்பதை தேர்தல் உணர்த்தியிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், மக்கள் நலக் கூட்டணி முன் வைத்த மாற்று அரசியலுக்கு ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சியாகவே உள்ளது. நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல என்பதையும், இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும், இன்னும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதையும் இந்த முடிவுகளிலிருந்து உணர்கிறோம். அதிமுக, திமுக ஆகிய இரு அணிகளும் பணத்தை வாரி இறைத்ததையும் மீறி எனக்கு மக்கள் அளித்துள்ள ஒவ்…
-
- 0 replies
- 338 views
-
-
சென்னை: தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு நாங்கள் தான் மாற்று சக்தி என்று கூறி வந்த விஜயகாந்தின் தே.மு.தி.க.,வுக்கு மாநில கட்சி என்ற அந்தஸ்து பறிபோகவுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் அறிவித்த நாள் முதல் அவர் யாருடன் கூட்டணி சேருவார் என்ற பரவலான பேச்சுக்கு அவர் சினிமா கிளைமாக்ஸ் போல் எந்த பிடியும் கொடுக்காமல் சஸ்பென்ஸ் வைத்து மவுனம் காத்தார். தனித்து போட்டி என்றும் பின்னர் பழமாக திமுக எனும் பாலில் விழும் என்றும் நிலவிய சூழலில் அவர் மதிமுக, இடதுசாரி, விடுதலைசிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி என அறிவித்தார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை. மேலும் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் விஜயகாந்துக்கு பல ஆயிரம் கோடி தருவதாக பேரம் பேசினார்கள் என்ற வைகோவின் பேச்சும் மக்களை …
-
- 0 replies
- 323 views
-
-
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு அரவக்குறிச்சி. | படம்: ஏ.முரளிதரன் தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அரவக்குறிச்சி தொகுதி பாமக வேட்பாளர் எம்.பாஸ்கரன், தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் எம்.எஸ்.ராமலிங்கம், திருச்சியைச் சேர்ந்த விவசாயி அய்யாகண்ணு, சுய ஆட்சி இயக்கத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், பாஜகவைச் சேர்ந்த தனசேகரன் ஆகியோர் தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். …
-
- 0 replies
- 242 views
-
-
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், சி.ஆர்.சரஸ்வதி தோல்வியடைந்து இருக்கிறார்கள். முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட கருணாஸ் வெற்றி பெற்றிருக்கிறார். தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் பதிவான வாக்குகளில் எண்ணும் பணி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி 131 தொகுதிகளிலும் திமுக 100 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக 13 தொகுதிகளிலும் காங்கிரஸ் 1 தொகுதியிலும் திமுக 11 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. விஜயகாந…
-
- 0 replies
- 510 views
-
-
கிருஷ்ணசாமி (பு.த.) தொகுதி : ஓட்டப்பிடாரம் (தனி) தோல்வி கோகுல இந்திரா (அ.தி.மு.க.) தொகுதி : அண்ணா நகர் தோல்வி வைத்திலிங்கம் (அ.தி.மு.க.) தொகுதி : ஒரத்தநாடு தோல்வி சுந்தரராஜ் (அ.தி.மு.க.) தொகுதி : ஓட்டப்பிடாரம் (தனி) தோல்வி கராத்தே தியாகராஜன் (காங்.,) தொகுதி : மயிலாப்பூர் தோல்வி விஜயகாந்த் (தே.மு.தி.க.,) தொகுதி : உளுந்தூர்பேட்டை தோல்வி திருமாவளவன் (விசி) தொகுதி : காட்டுமன்னார் கோயில் (தனி) தோல்வி தமிழிசை சவுந்திரராஜன் (பா.ஜ.,) தொகுதி : விருகம்பாக்கம் தோல்வி வானதி சீனிவாசன் (பா.ஜ.,) தொகுதி : கோயம்புத்தூர் (தெற்கு) தோல்வி …
-
- 0 replies
- 741 views
-
-
சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ம.ந.கூ., ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியதாவது: தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மக்களுக்கு பணம் வழங்கின. ம.ந.கூ., மட்டுமே வாக்காளர்களுக்கு பணம் அளிக்காமல் தேர்தலை சந்தித்தது. ஊழலில் இருந்து தமிழகத்தை மீட்க ம.ந.கூ., தொடர்ந்து போராடும். http://election.dinamalar.com/detail.php?id=11674
-
- 0 replies
- 480 views
-
-
திமுக - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை... புதுவையில்! புதுவை: புதுவை சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. புதுவை சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்த 30 தொகுதிகளில் 344 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள 930 வாக்குச்சாவடிகளில் இறுதி நிலவரத்தின்படி 84.08 சதவீதம் வாக்குகள் பதிவானது. மொத்தம் உள்ள 9 லட்சத்து 41 ஆயிரத்து 395 வாக்காளர்களில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 511 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 68 ஆயிரம் பேரும், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 22 ஆயிரம் பேரும் அடங்கும். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று …
-
- 0 replies
- 366 views
-
-
போயஸ் கார்டனில் பட்டாசு, லட்டு... அறிவாலயத்தில் பட்டாசு...! - காத்திருக்கும் கழகங்கள் ஐந்தாண்டு அமைச்சரவையின் பதவிக்காலம், வருகிற மே 22 ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. ஆளுநர் அழைப்பின் பேரில், புதிய அமைச்சரவை 23 ம் தேதியில் இருந்து அவர்கள் விரும்புகிற ஏதாவதொரு சுபமுகூர்த்த நாளில் பதவியேற்கும். அந்த தேதியைச் சொல்லப் போவது, ஆளும் அதிமுகவா, ஆண்ட திமுகவா அல்லது மூன்றாவது அணியான மக்கள் நலக் கூட்டணியா என்பதும், ஒருவேளை இழுபறி நிலை ஏற்பட்டால் "குதிரை பேர" பேச்சு (?!) வார்த்தைகளின் முடிவுதான் தீர்மானிக்குமா என்பதும் நாளை காலை 12 மணிக்குள்ளாகவே தெரிந்துவிடும். இந்நிலையில், அறிவாலயத்தில் வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறத…
-
- 0 replies
- 763 views
-
-
ஓட்டு எண்ணிக்கைக்கு தடை இல்லை:டிராபிக் ராமசாமி உள்ளிட்டோரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட் சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது எனவும், தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தலையிட முடியாது என்று கூறி டிராபிக் ராமசாமி, செந்தில் ஆறுமுகம், தலித் பாண்டியன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். திருப்பூரில் ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் முடிவு தெரியும் வரை தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவரும், பிரபல சமூக சேவகருமான டிராபிக் ராமசாமி, தலித் பாண்டியன், சட்டப் பஞ்சாயத்து இயக…
-
- 0 replies
- 257 views
-
-
சென்னை: மே 18... இந்த உலகம் எத்தனை பாரபட்சமானது... கண்மூடித்தனமானது என்பதை நிரூபித்த நாள். மீண்டும் இலங்கை ஆகிவிட்ட ஈழத்தில் இந்த ஒரு நாளில் மட்டுமே 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட நாள். 'நான் செத்துக் கொண்டிருக்கிறேன்... என் கண்ணெதிரே ஆயிரமாயிரமாய் பிணங்கள்... அந்தப் பிணங்களின் மீதே ராணுவ வண்டி ஒன்று ஏறிப் போவதைப் பார்த்தபடி என் உயிர் பிரிகிறது,' என ஒரு செய்தியாளர் போர் முனையிலிருந்து அனுப்பிய ஆடியோ இன்னும் கூட காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரம் பேர் கொல்லப்பட்ட சின்னச் சின்ன நாடுகளிலெல்லாம் பெரும் இனப்படுகொலை நடந்துவிட்டதாகக் கூறி, தனி நாடு பெற்றுத் தந்த சர்வதேசம், ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்ட போ…
-
- 0 replies
- 408 views
-
-
' விஜயகாந்த் தலைவர் என்றால், பிரபாகரன்?' -வைகோ கூடாரத்தின் அடுத்த விக்கெட் ம.தி.மு.கவின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், தன்னுடைய விலகல் கடிதத்தை வைகோவிடம் கொடுத்துவிட்டார். விரைவில், ' அவர் தி.மு.கவில் ஐக்கியமாக இருக்கிறார்' என்ற தகவலால் ம.தி.மு.க வட்டாரமே அதிர்ந்து போய்க் கிடக்கிறது. ' சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு, வைகோ இணைந்ததை நாங்கள் விரும்பவில்லை. இந்தக் கூட்டணி வெல்லும் என்று எந்த நம்பிக்கையில் வைகோ சென்றார்? பிரபாகரனை தலைவர் என்று சொல்லிக் கொண்டவர், விஜயகாந்தை தலைவராக ஏற்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன்பிறகும் ம.தி.மு.கவில் நீடிப்பதை விரும்பவில்லை' என்கின்றனர் மணிமாறனின் ஆதரவாளர்கள். ஆனால…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெயலலிதாவுக்கு காத்திருக்கும் சவால்கள்.. வழக்கறிஞர் ரத்னம் - அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தற்போதைய சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு என வருகின்ற நாட்களில் அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கின்றன. இதனை ஜெயலலிதா எவ்வாறு எதிர்கொள்வார் என தமிழகம் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கூட்டணியையும் எதிர்பார்க்காமல் சிறிய கட்சிகளின் துணையுடன் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலே ஜெயலலிதா களமிறங்கினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது இருந்த நிலை மாற…
-
- 0 replies
- 410 views
-
-
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2016 - வாக்குப்பதிவு நிலவரம் Comment (5) · print · T+ சென்னை தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் வாக்களித்த முதன் முறை வாக்காளர்கள் | படம்: எல்.சீனிவாசன். காலில் காயம் காரணமாக சக்கர நாற்காலி வசதியைப் பயன்படுத்தி ஈரோடு நகரின் வாக்குச்சாவடியில் தன் ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர். | படம்: எம்.கோவர்தன் போட்டோ கேலரி தேர்தல் 2016: வாக்களித்…
-
- 28 replies
- 4.3k views
-
-
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது: - நீதிமன்றில் வழக்கு தாக்கல் [Wednesday 2016-05-18 09:00] திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்றும், அதுவரை தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவர் டிராபிக் ராமசாமி. சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட சுமார் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாகவும், அதில் 50 சதவீதம் முறையான கணக்கு இல்லாதவை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். திருப்பூரில் ப…
-
- 0 replies
- 548 views
-
-
' கடைசி நிமிடத்தில் கண்டெய்னர் கடத்தல் ஏன்?' -எகிறும் 8 ரகசியங்கள் திருப்பூரில் 570 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட மூன்று கண்டெய்னர்கள் குறித்து அதிர வைக்கும் தகவல்கள் கசிந்துள்ளன. 'பிடிபட்ட அன்றே எஸ்.பி.ஐ வங்கியின் மூத்த அதிகாரிகள் வெளியூருக்கு தப்பிச் சென்றது ஏன்?' என அதிர வைக்கிறார்கள் வங்கி ஊழியர்கள் சிலர். கோவை, ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து மூன்று கண்டெய்னர்களில் எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை, திருப்பூர் வடக்குத் தொகுதி தேர்தல் கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் நிறுத்தி சோதனை செய்தார். அதிகாரிகள் சோதனை செய்ய வந்திருக்கிறார்கள்? என்று தெரிந்ததும் மூன்று லாரிகளும் வேகமாகச் சென்றுள்ளன. அந்த வாகனத்தை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தினர். விசாரணையில், ' ரிசர்வ் வ…
-
- 4 replies
- 1.3k views
-
-
Posted Date : 07:44 (16/05/2016) ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், ரஜினி, கமல் உள்பட பிரபலங்கள் வாக்களிப்பு! முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 234 சட்டசபை தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று, அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரு தொகுதிகளை தவிர ஏனைய 232 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் சாரதா நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவ…
-
- 0 replies
- 574 views
-
-
தஞ்சாவூர் தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைப்பு; தேர்தல் ஆணையம் அதிரடி சென்னை: அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரை அடுத்து தஞ்சாவூர் தொகுதிக்கு தேர்தலை தள்ளிவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர் தொகுதிக்கு மே-23ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி, கேரள மாநிலங்களுடன், தமிழகத்திலும் இன்று (மே 16) தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தஞ…
-
- 0 replies
- 413 views
-
-
சமூகவலைதளங்களில் கருத்துக்களை வெளியிட கருணாநிதிக்கு தடை சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதி சமூகவலைதளங்களில் கருத்துகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி வாக்காளர்களை கவரும் வகையில் சில பதிவுகளை மேற்கொண்டதாகவும் அதற்காக கருணாநிதி சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.ஏற்கனவே அ.தி.மு.க., இது குறித்து புகார் அளித்திருந்தது. திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் விதிமுறைகளை மீறி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிடுவதாக அதிமுக ஐ.டி. பிரிவு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. அதன் புகாரை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து பே…
-
- 0 replies
- 336 views
-
-
வெல்லப் போவது யார்? – சி. சரவணன் 1967-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு, தமிழகத்தில் வாக்குவங்கி அரசியல் உருவானது. 1977-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, தமிழகத்தில் வாக்குவங்கி உறுதி செய்யப்பட்டது. 1991-ல் திமுகவும், 1996-ல் அஇஅதிமுகவும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்தாலும், தங்களின் வாக்குவங்கியை இழக்கவில்லை. தமிழகத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை கொள்கைகள், கோட்பாடுகள், தேர்தல் அறிக்கைகள், அலைகள் எதுவும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. திமுக மற்றும் அஇஅதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைக்கும் கட்சிகளின் வாக்குவங்கி, இரண்டு கட்சிகளுக்கும் சமநிலையை ஏற்பட…
-
- 0 replies
- 570 views
-
-
அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெறப் போகும் கட்சிகள் எவை...?- JV Breaks வீடியோ தேர்தல் களம் சூடுப்பிடித்து விட்டது. ஒரு அணி தேர்தல் பிரச்சாரத்திற்கே கிளம்பி விட்டது. இன்னொரு அணி, எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்கிறோம் என வெட்கத்தை விட்டு சொல்லியே விட்டது... இந்த தருணத்தில் அ.தி.மு.க வின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தல் போல் தனித்தே தேர்தலை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறதா....? இல்லை வேல்முருகன், செ.கு. தமிழிரசனை மட்டும் அழைத்துக் கொண்டு கப்பலை செலுத்த தயாராகிவிட்டதா...?. பி.ஜே.பியில் ஒரு அணி மற்றும் த.மா.கா, அ.தி.மு.கவுடன் கூட்டு சேர வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் மட்டும் நினைத்தால் போதுமா...?. ஜெ என்ன நினைக்கி…
-
- 17 replies
- 1.2k views
-
-
அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு -------------------------------------------------------------------------- தமிழ்நாட்டில் வரும் 16ஆம் தேதி, திங்கட்கிழமை சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை ஒத்திவைத்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மே 16ஆம் தேதிக்குப் பதிலாக, மே 23ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்குமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளின் துவக்க நாட்களிலிருந்தே, அரவக்குறிச்சி தொகுதியில் பெருமளவில் பணவிநியோகமும் பரிசுப்பொருட்களின் விநியோகமும் நடந்ததாக தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் த…
-
- 0 replies
- 480 views
-
-
அதிமுக ஆதரவு அழகிரி... அதிர்ச்சியில் தி.மு.க. மதுரை: சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வந்த தகவலால் பரபரத்துக்கிடக்கிறது திமுக தலைமை. திமுக - அழகிரி முட்டல் மோதல்கள் முடிவுக்கு வராதநிலையில் சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர அழகிரியின் துாதுவராக நின்று அவரது சகோதரி செல்வி முயன்றார். மீண்டும் அழகிரியை கட்சிக்குள் இணைக்கும் பேச்சு வார்த்தை நீண்டுக்கொண்டே வந்தது. அதற்கேற்றவாறு அழகிரியும் நெடு நாட்களுக்கு பிறகு கடந்த மாதத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பு குறித்து' அப்பாவும் மகனும் சந்தித்து கொண்டார்கள் இதில் அரசியல் எதுவ…
-
- 1 reply
- 669 views
-
-
தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா? - இதோ நடைமுறைக்கு ஏற்ற ஒரு தீர்வு! | A Practical Solution for TN Election 2016 தேர்தல் - 2016 (பகுதி - 4) தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது எனச் சொல்லி நான் தனிப்பதிவு ஏதும் எழுத வேண்டியதில்லை. தலைப்பை மட்டும் கொடுத்துக் கீழே வெறுமையாக விட்டுவிட்டால் போதும்; மக்களே வந்து எழுதிக் குவித்து விடுவார்கள். அந்த அளவுக்கு இந்த இரு கட்சிகள் மீதும் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சாராய ஆறு பெருக்கெடுக்கத் திறப்பு விழா நடத்தியது தி.மு.க என்றால், மாநிலமே அந்தப் பேரலையில் மூழ்க …
-
- 10 replies
- 3k views
-
-
இலவச அறிவிப்புகள் : அயர்லாந்து பத்திரிகை விமர்சனம் டப்ளின்: தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள இலவச திட்டங்களை அயர்லாந்து பத்திரிகை ( தி ஐரிஷ் டைம்ஸ்) கடுமையாக விமர்சித்துள்ளது. குறிப்பாக அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை உலக அனைத்து வாக்குறுதிகளுக்கும் தாயாக திகழ்கிறது என்று விமர்சித்துள்ளது. மேலும் தங்கம், இலவச செல்போன், இருசக்கர வாகனத்திற்கு மானியம், என அதிமுக வாரி இறைத்துள்ளது. இந்த திட்டங்கள் போல் அயர்லாந்தில் யாராவது பார்க்க முடியுமா என்றும் கிண்டலடித்துள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1521500
-
- 0 replies
- 435 views
-