தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
26 JUL, 2024 | 10:54 AM இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஐயூஎம்எல் கட்சியின் எம்பி கே.நவாஸ்கனி இந்தியவெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்தார். அப்போது இதுபோன்ற கைதுகள் இல்லாத வகையில் நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்தினார். இது குறித்து ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி வெளியுறத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் வழங்கிய மனுவில் ‘இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று நெடு நாட்களாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நிரந்தர தீர்வு காணப்படாததால் மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களின் ப…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,X/M.K.STALIN படக்குறிப்பு, திருமாவளவன் மற்றும் மு.க. ஸ்டாலின் (கோப்புக்காட்சி) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுவிலக்கு மாநாட்டிற்கு அ.தி.மு.கவுக்கு அழைப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான வீடியோ வெளியீடு என தி.மு.க. - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி குறித்த சலசலப்பு எழுந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். என்ன நடந்தது? முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநாட்டில் தி.மு.க.வின் சார்பில…
-
- 0 replies
- 557 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.8½ கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தினத்தந்தி செய்தி கூறுகிறது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் இன்று (ஜன. 14) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம். எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீடு மற்றும் அலுவலகங்களில் 5 நாட்கள் நடத்திய சோதனையில் ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும், கணக்கில் காட்டப்படாத ரூபாய் 8½ கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான 'என்.ஆர்'. மற்றும் 'ஆர்.ச…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
காவிரி மேலாண்மை ஆணையகத்துக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி ஆரம்பம்! காவிரி மேலாண்மை ஆணையகத்துக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரியின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற காவிரி மேலாண்மை ஆணையகம் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் இடைக்கால தலைவராக மத்திய நீர்வள ஆணையரான மசூத் ஹுசைன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சுதந்திரமாக செயற்படக்கூடிய நிரந்தரத் தலைவரை நியமிக்க வேண்டுமென தமிழக அரசு வழக்குத் தொடர்ந்திருந்தது. மசூத் ஹுசைன் ஓய்வுபெற்ற பின் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட ஏ.கே.சின்ஹா, காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் பதவியை கூடுதலாக கவனித்து வருவார் எனக் கூறப்பட்டது. …
-
- 0 replies
- 322 views
-
-
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, நடிகர் விஜயும், பைனான்சியர் அன்புச்செழியனும் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, வருமான வரி புலனாய்வு பிரிவு உயர் அதிகாரிகள், நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். மதுரையைச் சேர்ந்தவர் பைனான்சியர் அன்புச்செழியன். இவர் மீதான வரி ஏய்ப்பு புகாரில், சென்னை மற்றும் மதுரையில் உள்ள, அவருக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள், நான்கு நாட்கள் சோதனை நடத்தினர். அதில், கணக்கில் காட்டப்படாத, 77 கோடி ரூபாய் ரொக்கம், பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் பிகில் பட வசூல் தொடர்பான ஆவணங்கள் சிக்கின. சோதனை: இதையடுத்து, பிகில் படத்தை தயாரித்த, ஏ.ஜி.எஸ்., நிறுவன உரிமையாளர் கல்பாத்தி அகோரம், தலைமை செய…
-
- 0 replies
- 884 views
-
-
இருபத்தியோறு வயதுக்கு குறைவான பெண்களின் காதலை ஏற்க முடியாது என்றும், அதனால் பாமக திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது என்று பாமக முதலமைச்சர் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். உங்கள் ஊர், உங்கள் அன்புமணி என்ற பெயரில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பொதுமக்கள் மத்தியிலும், அவர்களின் கேள்விக்கும் பதில் அளித்து பேசியது:தமிழகத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றத்தை எங்களால்தான் கொடுக்க முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வருவோம். அரசு மூலம் அளிக்கும் சான்றிதழ்கள் ஒரு குறிப்பிட்ட நாள்களுக்குள் வழங்கப்படும். அரசு மருத்துவமனைகள் மேம்படுத்த …
-
- 0 replies
- 687 views
-
-
சென்னை: மே 23ம் தேதி, 6வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். இவ்விழாவில் கலந்து கொள்ள தேசிய தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தேசிய மற்றும் மாநில அளவில் காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக ஆட்சியை தக்க வைத்துள்ளது. நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அதிமுக சட்டசபை தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மே 23ம் தேதி அவர் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். கடந்த முறை பதவியேற்பு விழா நடந்த சென்னை பல்கலை., நூற்றாண்டு விழா மண்டபத்தில் இம்முறையும் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்…
-
- 0 replies
- 571 views
-
-
‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை'' என்ற தந்தை பெரியாரின் உயர்கருத்துகளை உள்வாங்கிச் செயல்படுவீர்! சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர்! நம் அனைவர் வாழ்வின் முக்கிய நேரம் - நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைக்கவேண்டிய கடமையின் உச்சம் இது. கட்டுப்பாடு காத்து, கருணை உள்ளத்தோடு ஒத்தறிவு கருதி, பெருந்தன்மையோடு சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு: …
-
- 0 replies
- 463 views
-
-
அடக்கம் செய்யப்பட்ட முதியவருக்கு கரோனா தொற்று இருந்தது கண்டுபிடிப்பு; சிந்தாதிரிபேட்டையில் ஒரு தெரு முழுதும் சீல்: சுகாதாரத்துறையினரின் அலட்சியம்? கரோனா சிகிச்சைக்கான அனைத்து நடைமுறைகளையும் தமிழக அரசும், பொது சுகாதாரத்துறையும் மிக கவனமாகவும், பொறுப்புடனும் நடவடிக்கை எடுத்து வந்தாலும் ஆங்காங்கே காணப்படும் அலட்சியத்தால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அப்படி ஒரு நிலை சென்னையில் நடந்துள்ளது. சென்னை தமிழகத்தில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மாவட்டம். ஹாட்ஸ்பாட்டில் உள்ள மாவட்டம் ஆகும். சென்னையில் 228 பேருக்கு கரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது. சென்னையில் 3 மண்டலங்களில் அதிக தொற்று உள்ளது. இதில் 5 வது மண்டலமான ராயபுரம் மண்டலத்தில் அதிக அளவி…
-
- 0 replies
- 275 views
-
-
ராஜீவ் காந்தி கொலை கைதிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது.அதன்படி, நாளை (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பிரபுல்ல சி.பந்த், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் முருகன், சாந்தன், பேர…
-
- 0 replies
- 306 views
-
-
தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் பாரதீய ஜனதா கட்சியினர் மற்ற பங்கேற்பாளர்களை மிரட்டுவதாக புகார் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், அதே விவாதத்தில் பங்கேற்கும் மற்றவர்களைத் தரக்குறைவாக பேசுகிறார்கள் என புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படும் பெரும்பாலான தனியார் செய்தித் தொலைக்காட்சிகளில் இரவில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றன. அரசியல், சமூகம் தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்படும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ். பிரம…
-
- 0 replies
- 373 views
-
-
சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணி விழாவையொட்டி வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா திடலில் 61 ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி இன்று காலை 9.30 மணிக்கு நடந்தது. இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்க்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டார். முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே. சேகர்பாபு வரவேற்று பேசினார். முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். 61 ஜோடிகளுக்கும் மு.க.ஸ்டாலின் தங்கத் தாலியை எடுத்துக் கொடுத்தார். மணமகன் ஒவ்வொருவராக வந்து தாலியை பெற்றுக் கொண்டனர். பின்னர் கெட்டிமேளம் முழங்க மணமகன்கள் மணமகள்கள் கழுத்தில் தாலி கட்டினார்கள். மணமக்களை மு.க.ஸ்டாலின், துர்க்கா ஸ்டாலின் வாழ்த்தினார்கள். விழாவில் மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின…
-
- 0 replies
- 495 views
-
-
அரசியல் கிசு கிசு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய மறுப்பு? ஆதரவு எம்எல்ஏக்களுடன் ரகசியமாக ஆலோசனை சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலா, சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. அப்படி அவர் சட்டமன்ற கட்சி தலைவராக வேண்டும் என்றால், முன்னதாக தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டும். அந்த ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநனரிடம் ஓ.பன்னீர்செல்வம் வழங்க வேண்டும். ஆனால், இன்று காலை வரை ஓ.பன்னீர்செல்வம் …
-
- 0 replies
- 552 views
-
-
உள்ளாட்சி தேர்தலில் பலத்தை காட்டுவாரா பன்னீர் மதுரை:தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலை, வரும் மே 14க்குள் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சசிகலா அணி மீதான பொதுமக்கள் அதிருப்தியை ஓ.பி.எஸ்., அணி அறுவடை செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின், முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றார். சிறப்பாக செயல்பட்ட அவரை சசிகலா குடும் பத்தினர் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பன்னீர்செல்வம் பதவியை இழந்தாலும், பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவை பெற்றார். அதுவரை அ.தி.மு.க.,வை எதிர்த்து வந்தவர்கள் கூட, பன்னீர்செல்வத்தை ஆதரிக்க துவங்கினர். தற்போது அவருட…
-
- 0 replies
- 307 views
-
-
கீழடி நாகரிகம்: "இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து எழுதப்பட வேண்டும்" - மு.க. ஸ்டாலின் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DEPT OF ARCHEOLOGY, TAMIL NADU. படக்குறிப்பு, அகழாய்வு. இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறி இனி தமிழ்நாட்டிலிருந்துதான் எழுதப்பட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வு முடிவுகளை சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். இதன் விவரங்களை பேரவையில் 110 விதியின் கீழ் அவர் வாசித்தார். "கீழடி என்ற ஒற்றைச் சொல் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்துள்ளது. அதே உணர்வைத் தாங்கி தமிழ்நாடு அரசின்…
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
கோவையில் மருத்துவ மாணவி மாயம்- பொலிஸார் தீவிர விசாரணை மருத்துவம் படிக்கும் கோவை மாணவி ஒருவர், நள்ளிரவில் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் தன்யா என்பவரே காணாமல் போயுள்ளார். இவர் ரஷ்யாவில் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கோவை வந்த தன்யா, நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போயுள்ளார். இதனைத் தொடர்ந்து பல இடங்களிலும் அவரை தேடிய உறவினர்கள், சி.சி.டி.வி காட்சியை பார்த்தபோது, நள்ளிரவு ஒரு மணி அளவில் வெள்ளை நிற காரில் தன்யா ஏறிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக பொலிஸில் பெற்ற…
-
- 0 replies
- 380 views
-
-
பாக்ஸ்கான் தொழிற்சாலை விடுதியில் தரமற்ற உணவு: விடுதி வார்டன் மீது வழக்குப்பதிவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலை தொழிலாளர்கள். பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சொந்தமான விடுதியில் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கியது தொடர்பாக விடுதி வார்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூா்-பூந்தமல்லி சாலையில் ஜமீன் கொரட்டூரில் தனியாா் கப்பல் கட்டும் பொறியாளா் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து, ஸ்ரீபெரும்புதூா் தனியாா் கைப்பேசி உதிரி பாக தொழிற்சாலையில் 2,000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மதியம் உணவு உட்கொண்டபோது, சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பூந்…
-
- 0 replies
- 345 views
-
-
நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து கமல்ஹாசன் விமர்சித்து வருகிறார். தினந்தோறும் நடக்கும் சமூக பிரச்சனைகளுக்கு எதிராக டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வரும் கமல் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திருந்தார். இந்நிலையில் தசரா தினத்தன்று தனது தனிக்கட்சியின் பெயரை கமல் வெளியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. உள்ளாட்சி தேர்தலை கமலின் நற்பணி இயக்கத்தினரை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தசரா அல்லது கமலின் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாக பரவி வருகின்றன. http://www.seith…
-
- 0 replies
- 637 views
-
-
14 வயதுடைய சினேகன் சாதனை! தேனியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் தனுஸ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரையில் நீந்தி பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியை 19.45 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் நீதிராஜன். அவரது மனைவி அனுசர. இவர்களது மகன் சினேகன் (வயது 14). சிறுவன் சினேகன் 2019 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதே போல் கர்நாடக மாநிலம் தொன்னுரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெங்கல பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் முதல் இலங்கை தல…
-
- 0 replies
- 421 views
-
-
காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து, கார் மற்றும் லாரி மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து சென்றுள்ளது. அந்த பேருந்து திடீரென பிரேக் போட்டதால் அதன் பின்னால் வந்த கார் பேருந்து மீது மோதியிருக்கிறது. அதே நேரத்தில் காரின் பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று காரின் மீது மோதி இருக்கிறது. தனியார் பேருந்து, கார், லாரி அடுத்தடுத்து மோதிக் கொண்ட இந்த விபத்தில், ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள, செஞ்சியில் இருந்து தாம்பரத்துக்கு காரில் வந்த 6 பேரும் இந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர். http://news.vikatan.com/article.php?module…
-
- 0 replies
- 428 views
-
-
சுவாமிமலை சோதனையில் ஆயிரம் ஆண்டு பழமையான சிலைகள் கைப்பற்றப்பட்டது எப்படி? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,IDOL WING தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு நடத்திய சோதனையில் 1,000 ஆண்டுகள் பழமையான ஐந்து சிலைகள் உட்பட 8 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சிலைகள் கிடைத்தது எப்படி? ஏற்கனவே சில சிலை கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள மாசிலாமணி என்பவர் கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் சட்டவிரோதமாக பல பழங்காலச் சிலைகளை வைத்திருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. …
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
Sterlite ஆல் ஏற்படும் தமிழ்நாட்டின் எதிர்காலம்
-
- 0 replies
- 599 views
-
-
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல்-டி-குன்கா வரலாறு போற்றும் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கின்றார். தண்டனை பெற்றவர் மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ளலாம். ஆனால், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் ஆளும்கட்சியான அண்ணா தி.மு.க.வினர் அராஜக வன்முறையில் இறங்கினர், கடைகளை உடைத்து நொறுக்கினர், பேருந்துகள்- வாகனங்களைத் தாக்கித் தீவைத்துக் கொளுத்தினர். வணிக நிறுவனங்கள் கற்களை வீசிப் பொருள் சேதம் ஏற்படுத்தினர். ஒரு பாவமும் அறியாத பொதுமக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகினர். இவை அனைத்தையும் காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்த அநீதியும் நிகழ்ந்தது. குற்றங்களுக்குத் துணைபோனது. முதல் அமைச்சர்தான் …
-
- 0 replies
- 444 views
-
-
அவசர கதியில் நடைபெறுகிறதா சென்னை சங்கமம் நிகழ்ச்சி? கலைஞர்கள் கூறுவது என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHENNAI SANGAMAM/ YOUTUBE "கொரோனா காலத்தில் வருமானத்துக்கு கஷ்டப்பட்டோம். சில தன்னார்வ அமைப்புகள் எங்களுக்கு உதவின. ஒரு சிலர் பொருட்களை விற்று குடும்பம் நடத்தும் சூழல் ஏற்பட்டது. கொரோனா நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு நிச்சயம் இது வரப்பிரசாதம்தான்,” என்று சென்னை சங்கமம் நிகழ்ச்சி குறித்துப் பேசுகிறார் மதுரை அலங்காநல்லூர் வேலு கலைக்குழுவின் ஒருங்கி…
-
- 0 replies
- 592 views
- 1 follower
-
-
துணிக்கடைகளில் உட்காருவதற்கான உரிமையை பெற போராடும் தமிழக பெண்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES துணிக்கடைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்களில் வேலைசெய்யும் பெண்கள் பல மணிநேரம் நின்றுகொண்டே வேலைசெய்வதை எதிர்த்து பெண்ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக, பணிப்பெண்கள் உட்கார அனுமதிக்கவேண்டும், ஓய்வு எடுக்க வசதிகள் செய்த…
-
- 0 replies
- 743 views
-